பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 10, 2009

பதிவர்கள் சந்திப்புக்கு - டாப் 10+1 ஆலோசனைகள்

சாமி படத்தின் பஞ்ச் டயலாக் "நான் போலீஸ் இல்லை பொறுக்கி". தமிழ் வலைப்பதிவர்கள் இந்த மாதிரி பன்ச் டயலாக் அடிக்கிறார்களோ இல்லையோ ஆனால் மூக்கைப் பார்த்தால் பஞ்ச் அடித்து 'நான் பொறுக்கி' என்கிறார்கள்.இதை படித்தவுடன் உங்களுக்கு கோபம் வரலாம், எப்படி நீங்க எல்லா எல்லா தமிழ் வலைப்பதிவர்களும் இந்த மாதிரி என்று பொதுப்படுத்துவீர்கள் என்று. "நீ நேர்ல மூக்குடன் வராமலா போய்விடுவ?" அன்னிக்கு இருக்கிடி உனக்கு ஆப்பு என்று நீங்கள் சொல்லுவது என் காதில் கேட்கிறது. ( நல்ல வேளை காது பிழைத்தது). இருந்தாலும் நீங்களும் ஒரு வலைப்பதிவர் என்றால் உங்களுக்கு சில ஆலோசனைகள். இலவசமாக தான்.

1. அடுத்த முறை யாராவது உங்களை போன் செய்து கூப்பிட்டால், போலீஸ் கமிஷ்னர் ஆபிஸுக்கு வர சொல்லுங்க. உங்களுக்கும் பாதுகாப்பு, அதே சமயம் உங்க மூக்கு போனால், போலிஸுக்கும் ஒரு கேஸ் ஆச்சு.

2. வெளிநாட்டிலிருந்து வரும் பிளாக் தமிழர்கள், இந்தியா வரும் முன், குறிப்பாக சென்னை வரும் முன் ZZ+ செக்யூரிட்டியை விசாவுடன் சேர்த்து அப்ளை செய்யவும்.

3. கிரிக்கெட் விளையாட்டுக்கு பாதுகாப்பு அவசியம் போல, இனி கவசங்களுடன் சக பதிவர்களை மீட் பண்ணச் செல்லலாம். அப்டமன் கார்ட் & ஹெல்மட் அவசியம். நமக்கு இருப்பதோ ஒன்றே ஒன்று. அது முடியவில்லை என்றால் அட்லீஸ்ட் ஒரு பாட்டில் ரத்டம் + ஒரு பாட்டில் க்ளூக்கோசுடன் சந்திப்புக்குச் செல்லவும். கூடவே மூக்கு ஈன்ஷூரன்ஸ் செய்துக்கொள்ளுங்கள்.

.4. அப்படியும் நீங்க நான் தமிழன், எனக்கு பயம் இல்லை. நான் மீட்டிங்கிற்கு போவேன் என்ற தைரியம் இருந்தால். மீட்டிங்கில் தோளைத் தொட்டு ஒருவர் அழைத்தால், உடனே திரும்பிப் பார்க்காமல், ஒரு பத்தடி குடுகுடுவென்று ஓடி, பிறகு "எதற்கு கூப்பிட்டீர்கள்?" என்று ஜாக்கிரதையாக வினவலாம்! இதைத் தான் ஆங்கிலத்தில் "Maintaining proper Distance" என்பார்கள்.

5. '(உண்மையான) எதிரிகளை நான் கவனித்துக் கொள்கிறேன். (போலியான) நண்பர்களை நீ கவனித்துக் கொள்' என்று கடவுளிடம் வேண்டிக் கொள்ளவும். பகுத்தறிவுப் பகலவர்கள் பெரியாருக்கு மாலை போட்டு வேண்டிக் கொள்ளலாம்.

6. உங்க மகன், மகளுடன் கராத்தே, குங்பூ, தேக்கோவா போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். அது முடியவில்லை என்றால் உங்கள் மனைவியை அழைத்துகொண்டு போங்கள்.

7 ஒரு பதிவருடன் எப்போதும் சண்டை என்றால் இருக்கவே இருக்கு கடைசி வழி. ஓபாமாவிடம் முறையிடுங்கள், இப்ப தான் சமாதானத்துக்கு நோபல் பரிசு வாங்கியிருக்கிறார். நிச்சயம் ஏதாவது செய்வார்.

8. சிம்பு போல் முகஜாடை இருப்பவர்கள், மீட்டிங்கை தவிர்ப்பது நலம். இல்லை உங்களுக்கு இலவச குடும்பக் கட்டுபாடு ஆபரேசன் செய்யப்பட்டு விடும் அபாயம் இருக்கிறது. மூக்கு உடைந்தால் பரவாயில்லை, .... போய்விட்டால் வாழ்க்கையே அம்பேல்!

9. இனி பாடிகாட் முனிக்கு கடிதம் எழுதுவதை விட, இந்த நிஜ பாடிகாட்'க்கு எழுதலாம். ஆட்சேபனை உள்ளவர்கள் ஒரு கையைத் தூக்கவும். ( அடுத்த கையை வைத்து மூக்கைப் பொத்திக்கொள்ளுங்கள்).

10. தீபாவளி இலவச ஆலோசனை, விஜய் டிவிக்கு.: நடந்தது என்ன ? டீம் ரஜினி குகைக்கு சென்று கஷ்டப்படாமல் பதிவர்கள் சந்திக்கும் பார்க்குக்கு சென்றால் போதும். தீவாவளி ஸ்பெஷல் நிகழ்ச்சி ரெடி.

11. பெண் பதிவர்களுக்கு ஸ்பெஷல் குத்து: மூக்கு குத்திக்கொள்ளாத பெண் பதிவர்கள் இவர்களுக்கு போன் செய்தால் இலவசமாக மூக்குக் குத்திவிடுவார்கள்.


மூக்கு முட்டக் குடித்துவிட்டு பதிவர் சந்திப்பு வேண்டாம் மூக்கு முட்டினால் பிரச்னை, அதனால்....நாக்க மூக்க என்று பாடிக்கொண்டு வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு இருங்கள்.

19 Comments:

மானஸ்தன் said...

அனைத்து வலைஉலக நண்பர்களுக்கும் இன்றைய தேதியில் ரொம்பத் தேவையான ஆலோசனைகள். நன்றி திரு இட்லிவடை. தொடரட்டும் உங்கள் நற்பணி.

Nilofer Anbarasu said...

ஒன்னும் புரியலையே!

Guru said...

idlyvadai sir, enna matter? yaravathu pathivar santhupula adi vangintaangala?? illa idhula edho ulkuthu irukka?? enakku edho kuthumathippa eluthina madhiri irukku.. udane kuthukku mathippu kekkatheenga..

SAN said...

IV,
Enna Solla vareega?

Guru said...

அன்புள்ள இட்லிவடை, சமயத்திற்கேற்ப யோசனை வழங்குவதில் நம்பர் ஒன் இட்லிவடை தான். உன்னை போல் ஒருவன் எப்.ஐ. ஆர் ஆக இருக்கட்டும். வலைப்பதிவர் பாதுகாப்பாக (யோசனை) இருக்கட்டும் உங்கள் வேகம் சூப்பர். அய்யா, வலைப்பதிவர்களே பார்த்து சூதானமா இருந்தக்கங்கப்பு !

SAN said...

Ayya IV,
kandu pidithu vitten!
Thro Dondu's blog i came to know about Jyovramsundar punched by Rosa vasanth.
Idhai parthu azhuvatha siripatha endru theriyavillaye.
But your advise should be taken with a pinch of salt like cho's?

Anonymous said...

ஏன்யா ஒருத்தன் அடிவாங்கி படுத்துகெடக்கான்; உனக்கு இங்க கிளூகிளூப்பு கேட்க்குது. உண்மையா சொல்லு நீ எந்த கட்சி

Bala

seetha said...

பதிவுலகர்களுக்கு பரப்ரப்பு ரொம்ப தேவை. யாரவது சண்டை போட்டால் ஊருக்கு கொண்டாட்டம்.அவ்வ்ளொ தான்.

seetha said...

ஒருவருடய பிம்பத்தை உடைக்கபோய் இன்னொருவருட்அய பிம்பமும் உடைந்தது!!!!!!!!!!!!

Anonymous said...

இலக்கிய எழுத்தாளர்கள் முன்பு பிறாண்டிக் கொண்டிருந்தார்கள். ’இலக்கிய இதழ்’ அச்சடித்து காசை இழப்பதை விட, பதிவாராக இருப்பது அதிக செலவில்லாதது என்பதால், குடத்தைத் தூக்கிகொண்டு குழாயடிக்கு வந்து விட்டார்கள். பெரும்பாலான தமிழ்ப் பதிவுகள் கூவத்தையே மணக்க செய்கின்றன...டி வி சீரியல்கள் போல், இந்தப் பதிவுகள் நமக்குச் சாபம்.---டில்லி பல்லி

R.Gopi said...

மிக நல்ல ஆலோசனைகள் இட்லிவடை...

நானும் சென்னை வரும்போது சிலரை சந்திக்கலாம் என்று இருந்தேன்...

வழிகாட்டியாய் 11 பாயிண்டுகள் கொடுத்து என்னை உஷார் படுத்தி விட்டீர்கள்...

உங்களுக்கு என் நன்றி...

R.Gopi said...

//seetha said...
ஒருவருடய பிம்பத்தை உடைக்கபோய் இன்னொருவருட்அய பிம்பமும் உடைந்தது!!!!!!!!!!!!//

சீதா அவ‌ர்க‌ளே

பிம்ப‌த்தோடு சேர்ந்து மூக்கும் உடைந்த‌தால் தான் இப்போது பிர‌ச்ச‌னை...

kggouthaman said...

இதோ பன்னிரெண்டாவது யோசனை - பதிவர்கள் பத்தமடைப் பாய் ஒன்று வாங்கி பக்கத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள் - இட்லி வடை படித்துப் பைத்தியம் பிடித்தால் - பிறாண்டுவதற்கு!

ராஜா | KVR said...

//2. வெளிநாட்டிலிருந்து வரும் பிளாக் தமிழர்கள், இந்தியா வரும் முன், குறிப்பாக சென்னை வரும் முன் ZZ+ செக்யூரிட்டியை விசாவுடன் சேர்த்து அப்ளை செய்யவும்.//

//11. பெண் பதிவர்களுக்கு ஸ்பெஷல் குத்து: மூக்கு குத்திக்கொள்ளாத பெண் பதிவர்கள் இவர்களுக்கு போன் செய்தால் இலவசமாக மூக்குக் குத்திவிடுவார்கள்.//

இட்லிவடையார்(கள்) பிறருடைய பதிவுகளை படிக்கிறார்(கள்) என்பது தெரியுது ;-)

[”ரெண்டு தபா கள்ளு வர்தே, மப்பு பலமா கீதா?” - கொஸப்பேட்ட குப்ஸாமி]

M Arunachalam said...

தமிழ் பதிவுலகில் எழுதப்படும் கருத்துக்களை பார்த்து தான் மூக்கை பொத்திக்கொள்ள வேண்டும் என்று இதுவரை எண்ணி இருந்தேன். இப்போது தெரிகிறது, அத்தகைய கருத்துக்களை எழுதுபவர்களை பார்த்தாலும் மூக்கை பொத்திக்கொள்ள வேண்டும் என்று. திராவிட கழக கலாச்சாரம் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் மூக்கு பொத்திக்கொள்ள படவேண்டியது அவசியம் என்று பதிவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது.

மயிலை ராஜன் said...

சண்டையில் ஈடுபட்ட இருவரின் ப்ளாக்கையும் முதன் முறையாக எட்டிப்பார்த்தேன். சரோஜாதேவி புத்தகத்தை படித்தமாதிரி இருந்தது. சரியான கச்சடா பார்ட்டிகள். இவர்கள் மூக்குடைத்துக்கொண்டால் என்ன! மண்டையை உடைத்துக் கொண்டால் நமக்கென்ன! சரியான காட்டு மிராண்டிகள்.

கிறுக்கன் said...

என்ன? எப்படி? எங்கு?

R.Gopi said...

//kggouthaman said...
இதோ பன்னிரெண்டாவது யோசனை - பதிவர்கள் பத்தமடைப் பாய் ஒன்று வாங்கி பக்கத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள் - இட்லி வடை படித்துப் பைத்தியம் பிடித்தால் - பிறாண்டுவதற்கு!//

கௌதமன் சார்...

பாய் ஏற்கனவே ஆர்டர் பண்ணியாச்சு...

அமுதா கிருஷ்ணா said...

ஐயோ பயமா இருக்கே....இப்படி கூடவா செய்வார்கள்...