பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 01, 2009

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 1-10-2009

இட்லிவடைக்கு முனி எழுதும் சரக்கு உள்ள கடிதம்....

அன்புள்ள இட்லிவடை,

நாளையிலிருந்து கொஞ்சநாள் லீவில் போகிறேன், திரும்ப monday தான் வருவேன். அது வரை ஒழுங்காக பதிவுகளைப் போடு. செம்மொழியாம்!!! தமிழ் வளர்ந்தால் என்ன? 'வலராவிட்டால்' உனக்கு என்ன ? வம்பு பிடுச்ச பதிவெல்லாம் போடாதே என்று சொன்னால் நீ கேட்கவாபோற? தமிழ் தமிழ் என்கிறோம். ஆனால் வடக்கிலிருந்து தமிழுக்கு நடிகைகள் வருகிறார்கள். (அவர்கள் தான் நல்லாவும் இருக்கிறார்கள் ) வந்த நடிகைகளை பார்த்துவிட்டு உன் வேலையை பார் அது தான் தமிழனுக்கு அழகு. மேல்தட்டு மாமிகளும், மாமாக்களும் தமிழை சரியாக படித்தாலும் படிக்காவிட்டாலும் அமெரிக்கா சென்று விட்டார்கள்/விடுகிறார்கள். ஆனால் தமிழக அரசு தமிழ் தமிழ் என்று எவ்வளவு கூவினாலும் அடிதட்டு மக்களுக்கு தமிழை கொண்டு செல்லவில்லை என்பதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கு.

நாளையிலிருந்து, அதாவது காந்தி ஜெயந்தியை, முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் குவார்ட்டர் பாட்டில் மது வகைகளின் விலை ராக்கெட் அளவிற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. அடித்தட்டு மக்களுக்கு எவ்வளவு கோபம் வரும்? இப்ப இந்த பெயரையே பாரேன். 'டாஸ்மாக்' ( Tamil Nadu State Marketing Corporation Limited). இப்படி ஆங்கில பெயரையை தமிழ்ப்படுத்தினால் எங்கே/எப்படி தமிழ் வளரும் ? முன்பு பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு எல்லோருக்கும் நோட்டீஸ் அனுப்பியது உடனே எல்லோரும், ஆங்கில பெயர்களை தமிழ்லிஷ் ஆக்கிவிட்டார்கள். ஆனால் அரசு நிறுவனமான 'டாஸ்மாக்' இன்னும் அதைத் தூய தமிழில் மாற்றவில்லை. அட்லீஸ்ட் அடுத்த வருடம் நடக்கவிற்கும் உலக தமிழ்மாநாட்டில் இந்த பெயரை தமிழ்ப்படுத்துவார்கள் என்று நம்புவோம். நல்ல தமிழ்ப் புலமை உள்ள இந்தியாவிலும் - மற்ற உலக நாடுகளிலும் உள்ள இட்லி வடை வாசகர்களும் முடிந்தால் டாஸ்மாக் பற்றி ஏதாவது ஆராய்ச்சிக் கட்டுரை சமர்பிக்கலாம். அடுத்த ஜூன் வரை அதற்காகத்தான் டைம் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்ப எல்லாம் உலகம், தமிழ் என்ற வார்த்தைகளை கேட்டாலே உலக நாயகன் தான் நினைவுக்கு வருகிறார். நானும் உன்னை போல் ஒருவன் தானே!. சரி விஷயத்துக்கு வருகிறேன். விஜய் டிவியில் கமல் நிகழ்ச்சியில் திடீர் என்று மனுஷ்யபுத்திரன் போன் போட்டு கமலிடம் பேசினார்( செட்டப் பாக்ஸ் வைத்திருந்தால் செட்டப் கால் தான் வரும் என்று நீ சொல்லுவது என் காதில் விழுகிறது.). அதில் அவர் கமலிடம் கேட்ட கேள்வி "உலக தரம் உலக தரம் என்று அடிக்கடி சொல்லுகிறார்களே அப்படி என்றால் என்ன ?" என்ற கேள்வி தான் அதற்கு கமல் சொன்ன பதில் இந்த லெட்டருக்கு முக்கியமில்லை தேவையானவர்கள் இந்த விடியோவை பார்த்துக்கொள்ளுங்கள். எனக்கு வந்த சந்தேகம் "உலக தரம் உலக தரம் என்றால் என்ன என்று கேட்கும் மானுஷ்ய புத்திரன் தினமணிக்கு அளித்த பேட்டியில் அவரிடம் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் இப்படி இருக்கிறது.

உங்கள் பார்வையில் தமிழ் சினிமா?

கொஞ்சம் காலமாகவே தமிழ் சினிமாவில் மாற்றம் நடந்து வருகிறது. எதார்த்தமான வாழ்க்கையை அதன் பக்கத்தில் சென்று நம் படைப்பாளிகள் பார்த்து வருகிறார்கள். எதார்த்தத்தை அதன் அருகில் நின்று பதிவு செய்ய துணிந்துவிட்டார்கள். அத்திப்பூத்தது போல பாலு மகேந்திராவும், மகேந்திரனும் செய்ததை நெருஞ்சிப் பூ பூப்பதைப்போல செய்து விட்டார்கள். "பருத்தி வீரன்' அதில் முதல் நெருஞ்சிப் பூ என எடுத்துக் கொண்டாலும் சரி, இரண்டு வருடங்களாக இது தொடர்கிறது. கலாசாரங்களைப் பதிவு செய்ய முற்படுவது சினிமாவில் தைரியமான விஷயம். ரசிகர்களும் எதார்த்தத்தை ஆதரிக்கிறார்கள். இடையில் வியாபார ரீதியாகவும் சில இயக்குநர்கள் சினிமா செய்கிறார்கள் அவர்களுக்கு அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. மாற்றம் தொடர்ந்தால் உலக அரங்கில் தமிழ் சினிமாவின் உயரம் தெரிய வரும்.

ஆக கடைசி லைனில் சொன்னது, உலக அரங்கில் தமிழ் சினிமா உயர மாற்றம் தேவை என்பது. அப்படி சொன்னவர் ஏன் கமலிடம் உலக தரம் என்றால் என்ன என்று கேட்டார் ? அல்லா ஜானே! அல்லா ஜானே!.

சரி திரும்பவும் டாஸ்மாக்கு வருவோம். முன்பு எல்லாம் ஹோட்டலில் காபி என்றால் அது காபி தான். ஆனால் விலைவாசி ஏற ஏற சாஷேக்கள் வந்தது. அப்போது வந்ததுதான் "மினி" காபி கெட்னிக். மக்கள் கொடுத்த காசுக்கு காபி அளவு கம்மியாக இருந்தாலும் பரவாயில்லை என்று வாங்கி குடித்தார்கள். இப்ப இதற்கும் டாஸ்மாக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறாயா? இருக்கே!! மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்த `மினி குவார்ட்டர்' பாட்டில் தற்போது விற்பனை செய்யப்படவில்லை தெரியுமா? மக்கள் மீது அரசுக்கு இருக்கும் அலட்சியத்தை நினைத்தால் சரக்கு அடித்து விட்டு வூடு கட்ட வேண்டும் போல இருக்கு. இந்த சரக்கு விலை எற்றத்தால் எனக்கு படைக்கும் சரக்கு அளவு இனிமே கம்மியாகிவிடும் என்ற பயம் கூட எனக்கு வந்துவிட்டது. பெருமாளிடம் பருப்பு விலை ஏறிவிட்டது இனிமே பொங்கல் கிடையாது என்று கிண்டல் அடித்தேன். இப்ப பருப்பு விலை மாதிரி சரக்கு விலையும் ஏறி எனக்கு ஆப்பு வைத்திவிட்டார்கள்.

புது விலைப்பட்டியலை பார். பார்த்தால் பார் போகவே பயமா இருக்கு. இதக் கேப்பார் யாருமே இல்லையா?

காஸ்மோபாலிடன் விஸ்கி ரூ.68-லிருந்து ரூ.70
சிக்னேச்சர் விஸ்கி ரூ.129-லிருந்து ரூ.130
மெக்டவல்ஸ் கிளப் ரம் ரூ.71-லிருந்து ரூ.75
மெக்டவல் பிராந்தி 67-லிருந்து 70
மெக்லீன் பிராந்தி ரூ.58-லிருந்து ரூ.60
கோல்டன் ஈகிள் டாக்டர் பிராந்தி ரூ.59-லிருந்து ரூ.60
கார்டினல் பிராந்தி ரூ.68-லிருந்து ரூ.70 டிரிபிள்
கிரவுன் பிராந்தி ரூ.68-லிருந்து ரூ.70
மானிட்டர் பிராந்தி ரூ.59-லிருந்து ரூ.60
ஹனிபீ பிராந்தி ரூ.67-லிருந்து ரூ.70
ஷாட்லூப் பிராந்தி ரூ.58-லிருந்து ரூ.60
ராயல் வி.எஸ்.ஓ.பி ரூ.77 லிருந்து ரூ.80
டைமண்டு டிரிபிள் எக்ஸ் ரம் ரூ.59-லிருந்து ரூ.60
மானிட்டர் 3டி ரம் ரூ.59-லிருந்து ரூ.60 எம்.ஜி.எம்.
ஓட்கா, ஒயிட் ரம் வகைகள் ரூ.68-லிருந்து ரூ.70 எம்.ஜி.எம்.
ஆரஞ்ச் வோட்கா, ஆப்பிள் வகைகள் ரூ.69-லிருந்து ரூ.70
கிங் பிஷர் ஸ்ட்ராங் பீர் ரூ.66-லிருந்து ரூ.70
ஓரியன் 6000 ரூ.62-லிருந்து ரூ.65
கல்யாணி பீர் ரூ.67-லிருந்து ரூ.70
ஜிங்காரோ பீர் ரூ.66-லிருந்து ரூ.70
கோல்டன் ஈகிள் பீர் ரூ.59-லிருந்து ரூ.60 ஆகவும் விலை உயருகிறது.

என்ன அக்கிரமம் பார்த்தாயா? அக்ரகாரத்தில் தமிழ் சரியாக பேசுவதில்லை என்றால் துள்ளி குதிக்கிறார்கள். ஆனால் இந்த விலைப்படியலை பார்த்தால் டாக்டர் ஐயாவிற்கு ரத்த கொதிப்பு ஏற்படும். பின்ன என்ன?? எல்லா பெயர்களும் எவ்வளவு ஆங்கிலம் கலந்து இருக்கு? முதலில் பூரண மது ஒழிப்பு போராட்டத்துக்கு பதிலாக இவர் முதலில் பூரண தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று போராடலாம். போராட்டம் என்றால் சாலை மறியல் கிடையாது சும்மா அறிக்கை விடணும். இப்ப டாக்டர் ஐயா திருந்திவிட்டார். சில நாட்கள் முன் அவர் பேசியது "பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. ஏனெனில் சாலை மறியலால் போக்குவரத்து நெரிசல் எற்படும் போது மக்கள் எரிச்சல்படுகின்றார்கள். சாலை மறியல் என்ன என்பதை இந்த உலகத்திற்கு எடுத்து காட்டியவாகள் நாம்தான்". நல்லா நினைவு வைத்துக்கொள். சாலை மறியலை கண்டுபிடித்தது டாக்டர் ஐயாதான்.

இப்படி ஆங்கிலம் கலந்த பெயர் வைத்து சரக்கு கொடுத்தால் அடித்தட்டு மக்களுக்கு எப்படி தமிழ் போய் சேரும் ? அடித்தட்டு மக்களூக்கு இன்னும் நாம் முழுமையாக தமிழை கொண்டு செல்லவில்லை என்ற கடிதம் ஆரம்பிக்கும் போது நான் சொன்னது சரிதானே ?

கிழக்கு பதிப்பகம் தங்கள் புத்தகங்களை பட்டி தொட்டிக்கு எல்லாம் கொண்டு போய் சேர்த்துவிட்டார்கள். ஒரு இடம்தான் பாக்கி- அது டாஸ்மாக். அங்கேயும் கொண்டு சேர்த்தார்கள் என்றால், "தண்ணி தொட்டி தேடி" வரும் கன்று குட்டிகள் "இட்லியாக இருங்கள்" புத்தகம் வாங்க மாட்டார்களா என்ன ?. இன்னும் சொல்லப் போனால் இந்தப் புஸ்தகத்த எழுதினவர் கூட "சோம" வள்ளியப்பன், அதுக்கு மேல புஸ்தகம் விலை ரூ 60/- மட்டுமே. சரக்கு விலையை விடக் குறைவு. இது நடந்தா பட்டி தொட்டியிலும் தமிழ் வளர்த்த பெருமை கிழக்கு மக்களுக்குப் போய் சேரும்.

மேல் தட்டு மக்களுக்கு அதாவது பார்பன பெண்களுக்கு எப்படியோ அரைகுறை தமிழாவது வந்துவிட்டது. அட தமிழை விடு.அவங்க கருவாடு கூட வீட்டிலேயே எப்படி செய்வது என்று கற்றுக்கொண்டுவிட்டார்கள்.
சாரு குமுதத்தில் சொன்னதை படித்து பார்த்தாயா ?
"கருவாடு என்றதும் ஞாபகம் வருகிறது எனக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதால், உப்பு அதிகம் கூடாது. கருவாட்டிலோ உப்பு கண்ணாபின்னா என்று இருக்கும். அதனால் அவளே நொச்சிக்கப்பம் போய் மீன் வாங்கிக் கொண்டு வந்து, அவளே அறுத்து கழுவி, மிதமான உப்புப் போட்டு காய வைத்து கருவாடு செய்வாள். சரி, மார்க்கெட்டிலேயே அறுத்து வாங்கிக் கொண்டு வரலாமே என்று கேட்டால், நாமே செய்தால் இன்னும் சுத்தமாக செய்யலாமே என்று பதில் வரும். இவ்வளவுக்கும் அவந்திகாவுக்கு யாரும் அசைவம் சாப்பிடுவது பிடிக்காது. உயிரைக் கொலை செய்வது பாவம் என்று சொல்லுவாள். தென்கலை ஸ்ரீவைஷ்ணவ இனத்தைச் சேர்ந்த பெண்!"


தென்கலைகாரர்களுக்கு கிச்சன் வேலை நன்றாக வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கிச்சனில் சிக்கன் கூட செய்வார்கள் போல. சித்திரமும் கைப் பழக்கமும் மாதிரி சிக்கனும் பழகப் பழக நல்ல வரும் போல.

மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைப்போல இந்தியாவில் பல இடங்களில் மீண்டும் தாக்குதல் நடத்த லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது என்று படிக்க பயமாக இருக்கிறது. இந்த நியூஸ் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் `தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை சொல்லியுள்ளது. இந்த நியூஸை உள்துறை அமைச்சர் படித்தாரா என்று தெரியாது. உடனே நம்ம மக்கள் என்ன செய்வார்கள், ஓபாமாவிற்கு ஒரு ஃபோனை போட்டு

"Hello ! Who is this ?"
"Hello Mr.Obma, I am Manmohan Singh, Indian Prime Minister"
"Oh, Manmogan Singh ? How are you ? When are you coming to the US ? We have Christmas vacation coming soon"
"You see, right now we are under cost cutting program, so I need to travel in Economy Class , and there are no tickets available in the Economy class"
"You have done your Phd in Economy and you are not getting tickets in Economy Class ?"
"Good Joke. I will come to the point. I read in today's New York Times about fresh attacks like 26/11. Is it true ?"
"I did not read today's paper you see it is late in the night here. I will read tomorrow morning. But you have to crush terrorist like anything, there should be absolute Zero tolerance!
"Yes Yes. I will also do the same thing"
"Wait No. No. you need to resume talks Pakistan see they are your neighbors"
"But you said...."
"I will talk to Mrs.Sonia Gandhi.."
"Ok.Ok. Nice talking to you, bye"

அதை விட நல்ல தமாஷ் இருக்கு. "பெரியார்" கோளரங்கத்தில் இருக்கும் எல்லா கருவிகளுக்கும், இயந்திரங்களுக்கும் சந்தன போட்டும், குங்குமமும், பூவையும் வைத்தார்கள் இந்த ஆயுத பூஜைக்கு. ஃபோட்டோ எடுக்க ஆள் அனுப்பியிருக்கேன். வந்தவுடன் உனக்கு அனுப்புகிறேன். ( பிர்லா கோளரங்கத்தின் லேடஸ் பெயர் பெரியார் கோளரங்கம் ). பகுத்தறிவு கேள்வி கேட்கலாம் ஆனால் செயல்படுத்துவது தான் கடினம். அதற்கு தான் நாஸ்திகமோ நாத்திகமோ பழக வேண்டும், இல்லை நாஸ்தியாகிவிடும்.

கேள்வி என்றவுடன் போன வாரம் படித்த இந்த கேள்வி ஞாபகத்துக்கு வருது.

"நாணயத்துடன் விளங்கியவர்அறிஞர் அண்ணா என்றும், அவருக்கு நாணயம் வெளியிடுவது மிகவும் பொருத்தமானதே என்றும் கருணாநிதி பேசியது...?"
"சரியாகத்தான் பேசியுள்ளார் - நாணயம் அண்ணா காலத்துடன் முடிந்துபோயிற்று என்பதை உணர்த்த நாணயம் வெளியிடுவது பொறுத்தமானதே"

நாணயத்துக்கு இரண்டு பக்கம் இருக்கு இல்ல அது போல, முரசொலி சும்மா இருந்துவிடுமா ? அதையும் படி. அப்ப தான் நடுநிலமை இருக்கும் நமக்கு.

காஞ்சிப் பெரியவர் உயிரோடிருந்த காலத்தில் அவரது சீடர் ஜெயேந்திரர் - அவருக்கு சொர்ணாபிஷேகம் என்ற பெயரில் தங்க நாணயங்கள் மூலம் அபிஷேகம் செய்தார். அப்போது கல்கி மகாப் பெரியவாளுக்கு நாணயமே இல்லை; நாணயமில்லாதவர் அவர் - என்பதற்காக அவரது சீடர் அவருக்கு தங்க நாணயங்களால் சொர்ணாபிஷேகம் செய்தார் - என்று எழுதிடவில்லையே! இப்போது அதற்கு கேலியும் கிண்டலும் பொத்துக் கொண்டு வருகிறதே; ஏன்?

பி.ஜே.பியில் யாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்று ஒரு போட்டி வைத்தால் முதல் இடத்தில் இருப்பவர் வாஜ்பாய். வினோத் மேத்தா தன் கட்டுரையில் "’80s when I (Vinod Metha) was editing Debonair, he told me with a wink: “Your magazine is very good but I have to keep it under my pillow". ஆனால் இப்ப பி.ஜே.பியில் பலர் செய்யும் நகைச்சுவையில் பி.ஜே.பியே பார்த்து மக்கள் சிரிப்பாக சிரிக்கிறார்கள்.

இந்த வார அரசியல் ஜோக்:
பி.ஜே.பி ஜோக் - அத்வானி அரசியலிலிருந்து ஓய்வு!!!

இந்த வார தமிழ்நாட்டு ஜோக்
தமிழக சினிமா (அரசியல்) விருதுகள் அறிவிக்கப்படுள்ளது .

இந்த வார வடநாட்டு ஜோக்:
விஜயகாந்தை தொடர்ந்து டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி புதிய தமிழகம் நாளை பேரணி.


“Any fool can write a tragedy, it takes real genius to write a comedy" இவர்கள் எல்லாம் இந்த மாதிரி காமெடி செய்துவிட்டு Genius ஆகிவிடுகிறார்கள்.அதை பார்க்கும் நமக்கு தான் Tragedy.


இப்படிக்கு,
சரக்கு விலை ஏற்றத்தால் வருத்தப்படும்
முனி

பிகு: சரக்கு விலை ஏற்றத்தால் கவலைப்படும் மக்களுக்கு ஒரு நற்செய்தி. உங்களுக்கு சரக்கு அடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் கொன்கன் ரயில்வேஸ்(Janshatabadi Exp) பயணம் செய்தால் டாய்லட் தண்ணீரில் பாத்ரூம் வாட்டர் ஹீட்டர் கொண்டு சூடான கலக்கல் டீ உங்களுக்கு கிடைக்கும். இதைவிட வேற என்ன சரக்கு உங்களுக்கு வேண்டும்.

அட நான் டாய்லட் போலப்பா, 'அந்த' போஸில் டீ தான் போடறேன். என்ன செய்ய இந்த இடத்தில் இப்படி தான் உட்கார முடியும்.


இப்படி தான் நல்ல கலக்கணும் அப்ப தான் உங்க வயிறு நல்ல கலக்கும்


சூடான கலக்கல் டீ ரெடி

( டீ மாதிரியே சுட சுட படங்களை அனுப்பி (கதி) கலக்கிய நண்பருக்கு நன்றி )

17 Comments:

jaisankar jaganathan said...

//விஜயகாந்தை தொடர்ந்து டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி புதிய தமிழகம் நாளை பேரணி.//

பேரணி தமிழ்நாட்டிலிருந்தா. 3000 கிலோமீட்டர் நடந்து போகபோகிறாரா தல

மானஸ்தன் said...

நெறைய நல்ல சரக்குள்ள லெட்டர். முனிக்கு நன்றி.
டீ மேட்டர் நெஜமாவே வயத்த கலக்குது.

jaisankar jaganathan said...

இரண்டு நிமிஷத்தில் மானஸ்தனை மிஞ்சிய தல(நான் தான்) வாழ்க

மாயவரத்தான்.... said...

அது என்ன சாரு வீட்டுல கருவாடு சமைக்கிறதை மட்டும் எடுத்துப் போட்டிருக்கீங்க? நம்ம துணை முதல்வரோட மருமகள் கூடத் தான் நல்லா மட்டன் பிரியாணி சமைப்பாங்கன்னு ஆ.வி.யில வந்திச்சு பேட்டி. அது கண்ணுக்கு தெரியலையோ?

Anonymous said...

தமிழ்நாட்டில்தான் மது விலை மலிவு என்று அறிக்கை-விளம்பரம் நாளை வரும் :).
முனியிடம் சரக்கு இல்லை, இ.வவிடமும் இல்லை.உங்கள்
வலைப்பதிவை அவுட்சோர்ஸ் செய்து
விடுங்கள்.
இட்லி வடையாக இருங்கள் என்று அடுத்து ஹரன் பிரசன்னா புத்தகம்
எழுதுவாரோ?

யதிராஜ சம்பத் குமார் said...

இட்லி....எப்போது பிர்லா கோளரங்கம் பெரியார் கோளரங்கமாக மாறியது??


இன்னும் இவர்கள் கோவில்களுக்கு மட்டும்தான் பெரியார் பெயர் வைக்கவில்லை. ஆனால் இதே வேகத்தில் போனால் கூடிய சீக்கிரம் எதிர்பார்க்கலாம்.

யதிராஜ சம்பத் குமார் said...

முனி கடிதத்தில் இன்னொரு விஷயம் கூட சேர்த்திருக்கலாம். சிவகாசி படத்தில் விஜய் வக்கீல்களைக் கேலி செய்ததாகக் கூறி சென்னை உயர்நீதி மன்றத்தில் விஜய், மற்றும் ஏம்.ரத்னம் மற்றுமிருவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வளவு நாளாக இழுபட்ட வழக்கு, இன்று விஜய் மற்றும் மூவர் வக்கீல்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டதையடுத்து தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.


அரசியல் கட்சி ஆரம்பித்தால் வக்கீல் அணி என்பது மிக அவசியம் என்று விஜய் உணர்ந்து விட்டார் போலும். மன்னிப்பு கேட்டாரோ பிழைத்தார்.

M Arunachalam said...

// பகுத்தறிவு கேள்வி கேட்கலாம் ஆனால் செயல்படுத்துவது தான் கடினம் //

நாத்திகவாதி - கடவுள் இல்லை என்று சொல்பவன்;
ஆத்திகவாதி - கடவுள் உண்டு என்று நம்புபவன்;
பகுத்தறிவுவாதி - கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டே, தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மூலம் (இல்லாத) கடவுளை வேண்டுபவன். In short, a Hypocrite.

////எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. நாத்திகன் என்று கூறுகிறார்கள். அந்த வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை. பகுத்தறிவாளன் என்று கூற வேண்டும். என் மகள் எனக்காக தினமும் கடவுளிடம் வேண்டுகிறார். அந்த அன்பு எனக்குப் பிடித்திருக்கிறது…” - As told by an "actor" who was recently felicitated by a TV channell.

Shiva Kumar Mouli said...

There are also some interesting things going on !! . Idlyvadai.
Thirukural is now coming on twitter. Its available as tweetkural.

http://twitter.com/tweetkural.

If interested you can write about this also !!

காழியன் said...

சரக்கு விலை உயர்தப்பட்டிருந்தாலும் விலை ரவுண்ட் செய்யப்பட்டிருக்கிறது. இது ஒருவிதத்தில் வசதியே. மேலும் எப்போதுமே அறிவிக்கப்படாத விலை உயர்வி உண்டு, அதாவது எந்த சரக்கு வாங்கினாலும் ஐந்து ரூபாய் கூடுதலாக கொடுத்தாகவேண்டும்.

காழியன் said...

//நாத்திகவாதி - கடவுள் இல்லை என்று சொல்பவன்;
ஆத்திகவாதி - கடவுள் உண்டு என்று நம்புபவன்;
பகுத்தறிவுவாதி - கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டே, தன் குடும்பத்தை.
//
நாத்திகவாதி - கடவுள் இல்லை என்று சொல்பவன்;
ஆத்திகவாதி - கடவுள் உண்டு என்று நம்புபவன்;
பகுத்தறிவுவாதி - இந்துக் கடவுள் மட்டும் இல்லை என்று சொல்பவன்.

வெண்பூ said...

இ.வ.,
சாரு தன் மனைவியைப் பற்றி உயர்வாக சொல்லியிருக்கும் வரிகளை நீங்கள் கிண்டல் அடித்திருப்பது ரசிக்கும்படி இல்லை. சாரு மனைவி கருவாடு செய்யக்கூடாது என்று சொல்ல வருகிறீர்களா? :(

RkSN said...

Your comment on Avantika is an overreaction.
Why do you give so much importance to Charu's wife cooking NV? Don't think this as a attack on Brahmins but think it as way of the writer's acknowledgement on the kind of adjustments and sacrifice from his wife.
There are so many meat eaters who had stopped eating food because their spouses don't like it. This lady had chosen the difficult way out.

Anonymous said...

நம் தமிழர்களுக்கே உரிய குணம் கட்டின வீட்டுக்கு பழுது சொல்வது.

நானும் பச்சைத்தமிழன் என்பதால் இது:
அபூர்வமாக 12 வருடங்களுக்கொரு முறை பூப்பது நெருஞ்சி மலர் அல்ல, குறிஞ்சி மலர். நெருஞ்சி முள் தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

Anonymous said...

ஜாதியை ஒழிக்க பிராமணர்கள் செய்யும் முயற்சி. கலப்பு மணம் அதிகம் செய்பவர்கள் இவர்களே. ஆனாலும் இன்றும் இவர்களை வைத்துதான் சாதி அரசியல் செய்கிறார்கள்.

வன்னியக் கட்சி, கொங்குக் கட்சி, நாடர் கட்சி என்று ஜாதி வெறிப் பிடித்து அலையும் யாரையும் இந்த சமூகம் தட்டிக் கேட்காது. பொது நிகழ்ச்சியில் ஒருவர் சொல்கிறார் "வேறு ஜாதியை சேர்ந்தவர்களை திருமணம் செய்தால், தங்கள் பிள்ளைகளை வெட்டிக் கொள்ளுவோம் என்று". யார் சாதி வெறிப் பிடித்து அலைகிறார்கள்? பார்ப்பனியத்தை ஒழிப்போம் என்று கூவும் குரல் மற்றவர்களை கண்டு பயப்படுகிறது!

Kameswara Rao said...

பார்ப்பனியத்தை ஒழிப்போம் என்று கூவும் குரல் மற்றவர்களை கண்டு பயப்படுகிறது! == Well Said

Mr.Arun a good defnition about aathigam,naathigam and pagutharivuvathi

Useful muni letter for bar attenders (with price list) and other usual stuff for us

kamesh

Erode Nagaraj... said...

அது மட்டுமல்ல, கழுத்தில் ட்ரேவைக் கட்டிக்கொண்டு, கட்லேத்ச்ச்ச்ச்ஸ்.... கட்லேத்ச்ச்ச்ச்ஸ்... கட்லேத்ச்ச்ச்ச்ஸ்.... என்று, அதன் மேலேயே ஸ்பிரே செய்து தருபவர்களிடம், அதைப்பொருட்படுத்தாமல் வாங்கி சாப்பிட எத்தனை பேர் தெரியுமா...