பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 09, 2009

ரிஷப இராசி பலன்கள்

ரிஷப இராசிக்குள்ள சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்...

ரிஷப இராசிக்குள்ள சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்

உங்களைப் பற்றி:

"எருதொடு மாறேல்" என்ற கூற்றுப்படி - எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் ரிஷப இராசி நேயர்களே! பணப்புழக்கம் தங்களிடம் தட்டுப்பாடின்றி இருக்கும். உங்களது உழைப்பால் மற்றவர்களை வாழவைப்பீர்கள். யார் உங்களிடம் வாக்கு கொடுத்தாலும் அதன்படி அவர்கள் நடந்துகொள்ளாவிட்டால் உங்களுக்கு கோபம் வரும். ஏனென்றால் நீங்கள் தன்மானம் நிறைந்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர் மனம் புண்படாதபடி பேசுவதில் வல்லவர் நீங்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப் பெயர்ச்சி:

இது வரை உங்களது அஷ்டமத்தில் பாதியான அர்த்தாஷ்டம ஸ்தானத்தில் இருந்து மன உளைச்சலை கொடுத்த சனிபகவான் இனி பஞ்சம ஸ்தானத்தில் இருந்து வரும் 21/2 ஆண்டுகளுக்கு என்னென்னெ பலன் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

இதுவரை இருந்து வந்த இழுபறியான நிலை மற்றும் காரியத்தடை விலகும். சொத்துபிரச்சனை மற்றும் தாய் வழி சொந்தத்துடன் இருந்த தகராறு ஆகியவை நீங்கும். திருமணமாகாதவர்களுக்குள்ள தடைகள் விலகி திருமணமாகும். புதிய வீடு, வாகனம், மனை ஆகியவை சேரும். தந்தைவழி சொத்து சேரும். பூர்வீக சொத்துக்களை விற்று புதிய இடத்தில் வீடு, மனை வாங்குவீர்கள். வீண் குழப்பம் கொடுத்த உறவினர்கள் மற்றும் நண்பர்களை விலக்குவீர்கள். தொழிலில் இருந்த சுணக்கம் நீங்கி நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்திருந்த இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு தேடி வரும். இவ்வளவு நாளாக இருந்த வேலைப்பளு நீங்கும். தாயாருடன் இருந்த மனக்கசப்பு நீங்கி, அவர்களது அன்பைப் பெறுவீர்கள். தடைப்பட்டிருந்த கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இதய சம்பந்தமான நோய்கள், வெப்ப சம்பந்தமான நோய்கள், கண் சம்பந்தமான நோய்கள், வாத சம்பந்தமான நோய்கள் ஆகியன நீங்கும். நோய்த்தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். 5ம் இடத்திற்கு சனிபகவான் வருவதால் குழந்தைகளின் மேல் தனிக்கவனம் செலுத்த வேண்டிவரும். பிள்ளைகளின் கோபத்தை தவிர்க்க அவர்களது விருப்பத்தின் பேரில் படிக்க வையுங்கள். வீண் விவாதங்களையும், சர்ச்சைக்குள்ளாகும் கருத்துக்களையும் முற்றிலும் தவிர்க்கப் பாருங்கள். இதுவரை இருந்து வந்த சொல்லமுடியாத மன உளைச்சல் நீங்கி மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். ஆடம்பரமான அழகான பொருட்களை வாங்குவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் மனம் விட்டுப் பேசுங்கள். எனவே வீண் சந்தேகங்கள் நிவர்த்தியாகும். இதே நிலையை நண்பர்கள் மற்றும் பார்ட்னர்களிமும் கடைபிடியுங்கள். உங்களது அந்தரங்கம் சம்பந்தமான விஷயங்களை மூன்றாம் மனிதர்கள் முன்னிலையில் விவாதிக்க கூடாது. உங்களது வாக்குஸ்தானத்தை சனி பார்ப்பதால் கொடுத்தவாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம், எனவே வாக்கு கொடுக்கும் முன் சிந்தித்து செயல்படவும். வம்புசண்டையில் ஈடுபடாமல் ஒதுங்கியிருப்பது நல்லது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களையும், சக ஊழியர்களையும் அனுசரித்துப் போகவும். நண்பர்களோ உறவினர்களோ சகோதர சகோதரிகளோ எவரையும் முழுமையாக நம்பவும்வேண்டாம், விமர்சிக்கவும் வேண்டாம். தலைமையை மதித்து நடப்பது நல்லது தரும். மேலித்திடலிருந்து ஓரங்கட்டப்பட்டு இருந்தீர்களா? உங்களுக்கு பொன்னான காலம் வந்து விட்டது, வரும் வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படும். வரும் வரவுகளை சரியானபடி சேமிக்கவேண்டும். வீண் செலவுகளை தவிருங்கள். நல்ல ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று சரியானபடி முதலீடு செய்யவும். இதுவரை இருந்த வந்த சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு பிறக்கும். பொதுவாக மனக்குழப்பத்தையும், ஏமாற்றத்தையும் தந்த நிலை மாறி வாழ்வில் முன்னேற்றமும், அந்தஸ்தையும் தருவதாக இந்த சனிப்பெயர்ச்சி அமையும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

கிருத்திகா 2, 3, 4: உடல்நலம் சிறப்பாக இருந்துவரும். புதிய மனை, வீடு, வாகனம் அமையும். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிடைக்கும். உறவினர், நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். சோம்பலைத் தவிர்த்து முயற்சி மேற்கொண்டால் கல்வியில் சாதனை பெற முடியும். ஸ்ரீ மஹாலக்ஷிமி அஷ்டகம் சொல்லி தினப்பொழுதை ஆரம்பித்தால் எதிலும் வெற்றிதான்.

உரோஹினி: தொழில், கூட்டுவியாபாரம், உத்தியோகம் ஆகியவைகளில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும். எந்த ஒரு செயலையும் மனமகிழ்ச்சியோடும் சிறு புன்முறுவலோடும் முயற்சியோடு ஆரம்பியுங்கள். அதற்கான பலன் உங்கள் கைகளில் வரும். புதிய் தொழில், வீடு, வாகனம், மனை ஆகியவை உங்களுகு அமையும் பொன்னான காலமிது. ஸ்ரீ துர்க்கா, லக்ஷிமி, ஸ்ரஸ்வதி ஆகியோரின் காயத்ரி மந்த்ரங்களை பாராயணம் செய்யுங்கள், அனைத்தும் உங்களைத்தேடி வரும்.

மிருகசீரிஷம் 1,2 : புதிய உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் சனிப்பெயர்ச்சியை சந்திக்கப் போகிறீர்கள். நீங்கள் சற்று இறங்கி வந்து வாழ்க்கைத்துணையுடனும், நண்பர்களிடமும், உறவினர்களிடமும் அனுசரித்துப் போனீர்களானால் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் கவனம் தேவை. ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் சொல்ல சொல்ல சொல்லொன்னாத் துயரமும் அகன்று விடும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் ரிஷபம் 60/100 கந்த ஷஷ்டி கவசம் சொல்வது
ரிஷபம் ரிஷபம் 80/100 ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம் சொல்வது
மிதுனம் ரிஷபம் 55/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம் ரிஷபம் 85/100 ந்ருஸிம்ம ஸ்தோத்திரம் சொல்வது.
ஸிம்ஹம் ரிஷபம் 60/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி சொல்வது
கன்னி ரிஷபம் 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது
துலாம் ரிஷபம் 65/100 நவக்ரஹ மூலமந்த்ரம் சொல்வது.
விருச்சிகம் ரிஷபம் 75/100 துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.
தனுர் ரிஷபம் 65/100 ஹனுமத் கவசம் சொல்வது, ஐயப்பன் வழிபாடு.
மகரம் ரிஷபம் 80/100 கணபதி வழிபாடு.
கும்பம் ரிஷபம் 60/100 லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்
மீனம் ரிஷபம் 55/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது
லக்னமே தெரியாது ரிஷபம் 80/100 ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம் சொல்வது, விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் ரிஷப இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் ரிஷப இராசியில் பிறந்து கன்னி லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 60% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் ரிஷப இராசி என்பவர்கள் ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம் சொல்லலாம், விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்லலாம்.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில பாய்ண்ட்ஸ்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் கிருத்திகா - 2,3,4ம் பாதங்கள் உரோகினி மிருகசீரிஷம் - 1,2 ம் பாதங்கள்
இராசி ரிஷபம் ரிஷபம் ரிஷபம்
இராசியாதிபதி சுக்ரன் சுக்ரன் சுக்ரன்
நக்ஷத்திர அதிபதி சூரியன் சந்த்ரன் செவ்வாய்
அதிதேவதைகள் அக்னி ப்ரம்ஹா சந்த்ரன்
கணம் இராக்ஷஸகணம் மனுஷ்யகணம் தேவகணம்
நாடி பார்ஸுவ - வலது பார்ஸுவ - வலது மத்ய
மிருகம் பெண் ஆடு நல்ல பாம்பு சாரைப் பாம்பு
பக்ஷி மயில் ஆந்தை கோழி
விருக்ஷம் அத்தி நவ்வல் கருங்காலி
இரஜ்ஜு உதர இரஜ்ஜு கண்ட சிரோ ரஜ்ஜு
வேதை நக்ஷத்ரம் விசாகம் ஸ்வாதி சித்திரை, அவிட்டம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 6 1, 2, 5, 6 1, 3, 6, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு மேற்கு கிழக்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

இன்றைய ஜோதிடக் குறிப்பு:

நிறைய பேர் பயப்படும் கேள்வி: செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குப் பரிகாரம் இருக்கிறதா?

இதைப் பற்றியே தனியாக ஒரு பதிவு போட வேண்டி வரும். சரி, உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் "ல" என்றோ அல்லது "லக்னம்" என்றோ அல்லது "Asc" என்றோ[ஆங்கில ஜாதகங்கள் மட்டும்] போட்டுருக்கும், அதுதான் உங்களது லக்னம். அதிலிருந்து Clockwise ஆக எண்ணுங்கள், செவ்வாய் அமர்ந்திருக்கும் இடத்தை எண்ணுங்கள். எண்ணிவிட்டீர்களா? கிடைத்திருக்கும் விடை: 2, 4, 7, 8, 10, 12 ஆகிய விடை உங்களுக்கு கிடைத்தால் உங்களுக்கு செவ்வாய்தோஷம் இருக்கிறது என்று பொருள். ஆனால் கீழ்க்கண்ட நிலையில் ஏதாவது ஒரு Exception இருந்தால் உங்களுக்கு செவ்வாய் தோஷம் நிவர்த்தி உண்டு, நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்பதில்லை. [ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்]

[1] நீங்கள் மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களிலோ இராசியிலோ பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.

[2] நீங்கள் மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.

[3] உங்கள் ஜாதகத்தில் லக்னத்தையோ, 7ம் இடத்தையோ, 8ம் இடத்தையோ[பெண்களுக்கு மட்டும்] குரு பார்த்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது.

[4] 7ம் இடம்,, 8ம் இடம்[பெண்களுக்கு மட்டும்] மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களாக வந்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது.

[5] செவ்வாய் அமர்ந்த நக்ஷத்திரக்கால் : மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.

இதே போல் 100க்கும் மேற்ப்பட்ட Exceptions உள்ளன. எனவே செவ்வாய் தோஷம் என்றால் பயப்பட வேண்டியதில்லை.

பரிகாரம்: தினமும் கந்தஷஷ்டி கவசம் பாராயணம் செய்தல்s

அடுத்ததாக மிதுன இராசி பலன்களில் சந்திப்போம். நன்றி.



நன்றி: பெருங்குளம் இராமகிருஷ்ணன்,
ஜோதிடர். [ முகவரி: rameshramky06.venkat@gmail.com ]

6 Comments:

Rahul said...

நன்றி!!!!

மானஸ்தன் said...

கொஞ்சம் வித்தியாசமா பலன்களை ராசி வாரியாக வரிசையாகச் சொல்லாமல், random-ஆக எழுதினால், இட்லிவடையும் "இன்று என்ன ராசிக்கு" என்று ஒரு போட்டி அறிவித்து விடலாம்.
போட்டி வைத்து ரொம்ப நாள் ஆச்சு!!!!
(பரிசு எப்போ வரும் என்று யாரும் இப்போது தண்டரோ அடித்துக் கேட்பது இல்லை).

kggouthaman said...

ஆமாம் ஆமாம் - மானஸ்தன் சொல்வதை நான் வழி மொழிகிறேன் - அடுத்தது தனுசு ராசிக்கு - சொல்லுங்க ஜோஸ்யர் அய்யா!

kggouthaman said...

ஜோஸ்யர் அய்யா - நான் கேட்பது விரல் சூப்பித்தனமான கேள்வி என்றால் மன்னியுங்கள் ...
1) ராசிக் கட்டத்தில் எத்தனாமிடம் என்று எண்ணுவதற்கு - எண்ண ஆரம்பிக்கின்ற இடத்தை பூஜ்யம் என்று வைத்துக் கொண்டு எண்ண வேண்டுமா - அல்லது ஒன்று என்றா ?
2) இந்த இடத்தை - இந்த கிரகம் 'பார்க்கிறது' என்றால் என்ன? - தயவு செய்து விளக்கவும்.

cho visiri said...

ஆமாம் ஆமாம் - மானஸ்தன் சொல்வதை நான் வழி மொழிகிறேன் - அடுத்தது தனுசு ராசிக்கு - சொல்லுங்க ஜோஸ்யர் அய்யா

I second the proposal....(Dhunur Rasi -mine too)
Also please tell the status for Mithunam........heeheeheehee...9my wife's)!

Kiruthiga said...

josiyar aiiyaa...vanakamunga :)
nalla velaya aaramichirukkinga :)
vaazhthukkalanga