பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 10, 2009

மிதுன இராசி பலன்கள்

மிதுன இராசிக்குள்ள சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்

உங்களைப் பற்றி:

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், மரியாதை கொடுக்கும் மிதுன இராசி வாசகர்களே!நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர். வெளிவட்டாரப் பழக்கங்களை விரும்பும் தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர்.

எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப் பெயர்ச்சி:

இது வரை உங்களது மூன்றாம் வீட்டில் அமர்ந்து நல்ல பல முன்னேற்றங்களையும், அதிரடி மாற்றங்களையும் தந்த சனீஸ்வரன் இனி அஷ்டமத்தில் பாதியான அர்த்தாஷ்டம ஸ்தானமான நான்காம் ஸ்தானத்தில் இருந்து வரும் 21/2 ஆண்டுகளுக்கு என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

நான்காம் வீடாச்சே, அர்த்தாஷ்டமச் சனியாச்சே, அஷ்டமத்தில் பாதியாச்சே அல்லல்படுத்துமோ? அழைக்கழிக்குமோ? என்றெல்லாம் பயந்திருக்கிறீர்களா? அதை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு சற்று வாருங்கள். உங்களுக்கு ஆயுளையும், அதிர்ஷ்டதையும் சேர்த்துக் கொடுப்பவரே அவர்தான். எனவே நீங்கள் பயப்படவே வேண்டாம். டிசம்பர் 2009 வரை அவர் குரு பார்வை பெறுவதால் நற்பயன்களைக் கொடுப்பார் என நம்பலாம். மேலும் அடுத்த மாதம் வரும் இராகு - கேது பெயர்ச்சிக்கும் உங்களுக்கும் நிரம்ப சம்பந்தம் உண்டு. ஏனென்றால் உங்கள் இராசிக்கு வரும் கேதுவை வைத்தும் [சனி பார்வையுள்ள கேது] உங்களுக்கு நல்ல பலன் உண்டு. நியாயமான ஆசைகள் நிறைவேறும். உங்களுடைய முயற்சிகளில் தனிக்கவனம் செலுத்தினால் வெற்றி பெறலாம். யாரிடம் பேசினாலும் எச்சரிக்கையாகவும், பணிவாகவும் பேசினால் எதிலும் எங்கும் வெற்றிதான். முக்கியமாக தாயாரிடமும், தாய்வழி உறவுகளிடம் சுமுகமாகப் போனால் உங்களது அந்தஸ்து உயரும். இதுவரையில் இருந்த கடன் பிரச்சனை தீரும். எதிரிகளை வீழ்த்த வழி தெரிய வரும். வழக்கு வியாஜ்ஜிங்களில் உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் வெற்றி கிடைக்கும். திடீர் பிரயாணங்களால் அனுகூல்யம் கிடைக்கும். வெளிநாட்டு வாய்ப்புகளுக்கு காத்திருந்தவர்கள் தயாராகுங்கள், வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. பிரபலங்களது நட்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். தன உதவி கிடைக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மேலும் நீர்நிலைகளில் செல்லும் போதும் மிகுந்த கவனம் தேவை [நீர்நிலை என்றால் கடல், ஆறு, குளம் போன்றவை மட்டுமல்ல நமது வீட்டு கினற்றடியும், பாத்ரூம் கூட நீர்நிலைதான்]. இரவு நேர பயணங்களை முடிந்தவரை தவிர்க்கப் பாருங்கள். வீடு, வாகனம் போன்றவற்றைப் பராமரிப்பீர்கள். பழைய வீட்டை விற்று புதிய வீட்டிற்கு குடிபோகும் இராசி உங்களுக்கு வந்துவிட்டது, பயன்படுத்திக்கொள்ளுங்கள். சொத்துக்கள் வாங்கும்போது உங்களது வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற்றால் சொத்து முத்துதான். முதலீடுகள் செய்யும்போது ஒரு முறைக்கு இருமுறை யோசனை செய்யவும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துப் போங்கள், நல்ல பலன் கிடைக்கும். அக்கம்பக்கத்து வீட்டார், சகவேலை பார்ப்போர், சக ஊழியர்கள் ஆகியோரிடம் அனுசரனையாக நடந்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் தாங்களாக எந்த வேலையையும் எடுக்கும் முன் யோசனை செய்யவேண்டும். உறவினர், நண்பர்களுக்கு தாங்கள் உதவி செய்ய வேண்டி வரும், முடிந்தால் செய்யுங்கள். தங்களைப் பற்றிய கிசுகிசுக்கள் வரலாம், எனவே ஜாக்கிரதையாக நடந்துகொள்ளுங்கள். பிள்ளைகளின் போக்கு நல்ல விதமாக மாறும். உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கும். அசைவம் உணவுகளை முடிந்தவரை தவிருங்கள். எண்ணெய்ப் பலகாரம், கார உணவுகள், வாயு சம்பந்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை குறைத்து உண்ணவும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீர்கள். வியாபாரத்தில் கறாராக இருந்தால் நல்ல லாபம் பார்க்கலாம். பங்குதாரர்களிடம் வாக்குவாதம் வந்தாலும் முடிந்தவரை உங்கள் கருத்தைத் திணிக்காதீர்கள். யாரையும் நம்பி முன் ஜாமீன் போட வேண்டாம். கல்வியைப் பொறுத்தவரை அக்கவுண்ட்ஸ், கணிதம் துறையில் உள்ளவர்கள் இன்னும் முயற்சி எடுத்தால் மதிப்பெண்களை அள்ளலாம். மற்ற துறையில் உள்ளவர்கள் ஆழ்ந்து, ஆராய்ந்து படிக்கவும். எழுதிப் பார்த்து படியுங்கள் மாணவமணிகளே. மொத்தத்தில் புதிய அனுபவங்களை புதிய பாதையில் புதிய முறையில் சந்திக்கத் தயாராகுங்கள்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

மிருகசீரிஷம் 3, 4: புதிய பாதைகளில் செல்லும்போது சோதனைகள் வந்தாலும் முயற்சி செய்தால் சாதனைகளாக மாற்றலாம். மருத்துவச் செலவுகள் பயமுறுத்தலாம், எனவே சின்னப் பிரச்சினையானாலும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. தாங்களாக மருந்து உட்கொள்வதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துப் போங்கள். புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸுக்தம் படித்தால் நீங்கள் செல்லும் பாதையில் ஒளி கிடைக்கும்.

திருவாதிரை: எந்த டாக்குமெண்ட் என்றாலும் கையெழுத்து போடும் முன் யோசனை செய்யவும். சோம்பலைத் தவிர்க்கப் பாருங்கள். தொழில், வியாபாரம், உத்தியோதத்தில் போட்டிகள் இருந்தாலும் அதை சமாளிக்கும் மனதைரியமும், வலிமையும் தங்களுக்கு உண்டு என்பதனை உணருங்கள். சிவபுராணம் மற்றும் கோளறு பதிகம் படிப்பதனால் நன்மை நாடி வரும்.

புனர்பூசம் 1, 2, 3 : உத்தியோகம் பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துப் போவது நல்லது. வேலைப்பளு கூடினாலும் தங்களுக்கு இது நல்ல அனுபவமாக அமையும். எதிர் பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கவில்லையே என ஆதங்கப்படவேண்டாம், அது நல்லதற்கே என நினையுங்கள். எதிலும் எங்கும் முன்கோபம் கூடவே கூடாது. இராம நாம ஜெபம் மற்றும் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் மிதுனம் 55/100 கந்த ஷஷ்டி கவசம் சொல்வது, ஷண்முக கவசம் சொல்வது
ரிஷபம் மிதுனம் 65/100 ஸ்ரீ மன் நாராயணீயம் சொல்வது.
மிதுனம் மிதுனம் 50/100 கணபதி பூஜை மற்றும் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
கடகம் மிதுனம் 60/100 புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸுக்தம் சொல்வது.
ஸிம்ஹம் மிதுனம் 55/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, ஹனுமத் காயத்ரி சொல்வது
கன்னி மிதுனம் 50/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம் மிதுனம் 60/100 கணபதி காயத்ரி, நவக்ரஹ மூலமந்த்ரம் சொல்வது
விருச்சிகம் மிதுனம் 65/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.
தனுர் மிதுனம் 60/100 துர்க்கா மூலமந்த்ரம் மற்றும் சியாமளா தண்டகம் சொல்வது
மகரம் மிதுனம் 65/100 கணபதி வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு செய்வது.
கும்பம் மிதுனம் 55/100 லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது.
மீனம் மிதுனம் 55/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் துர்க்கா காயத்ரி சொல்வது.
லக்னமே தெரியாது மிதுனம் 55/100 குலதெய்வ வழிபாடு மற்றும் கணபதியைப் பூஜிப்பது நல்லது, மகான்களை வழிபடவும்
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் மிதுன இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் மிதுன இராசியில் பிறந்து தனுர் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 60% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: துர்க்கா மூலமந்த்ரம் மற்றும் சியாமளா தண்டகம் சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் மிதுன இராசி என்பவர்கள் குலதெய்வ வழிபாடு மற்றும் கணபதியைப் பூஜிப்பது நல்லது. மேலும் மகான்களை வழிபடவும்.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் மிருகசீரிஷம் - 3,4 ம் பாதங்கள் திருவாதிரை புனர்பூசம் - 1,2,3ம் பாதங்கள்
இராசி மிதுனம் மிதுனம் மிதுனம்
இராசியாதிபதி புதன் புதன் புதன்
நக்ஷத்திர அதிபதி செவ்வாய் இராகு குரு
அதிதேவதைகள் சந்த்ரன் பரமசிவன் அதிதி
கணம் தேவகணம் மனுஷ்யகணம் தேவகணம்
நாடி மத்ய பார்ஸுவ - இடது பார்ஸுவ - இடது
மிருகம் சாரைப் பாம்பு பெண் நாய் பெண் பூனை
பக்ஷி கோழி அண்டில் அன்னம்
விருக்ஷம் கருங்காலி செங்கருங் மூங்கில்
இரஜ்ஜு சிரோ ரஜ்ஜு கண்ட உதர ரஜ்ஜு
வேதை நக்ஷத்ரம் சித்திரை, அவிட்டம் திருவோணம் உத்திராடம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 2, 3, 4, 5, 9 2, 3, 4, 5, 9 2, 3, 4, 5, 6, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு, வடக்கு மேற்கு, வடக்கு வடக்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

இன்றைய ஜோதிடக் குறிப்பு:

நாம் இன்று அலசப் போவது மிக முக்கியமானதும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியதுமான சில நக்ஷதிரங்கள் பற்றிய தவறான குறிப்புகள்:

கீழ்க்கண்ட சில நக்ஷத்திரங்கள் ஆகாதவை அந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களை மணமுடிக்கக் கூடாது என்றும் முடித்தால் சில துர்பலன்கள் ஏற்படும் என்றும் நமது வழக்கில் உள்ளது. சில உதாரணங்களைக் கீழே தந்துள்ளேன்:

நக்ஷதிரங்கள்: உரோகினி, ஆயில்யம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், பூராடம்

உரோஹினி - தாய்மாமனுக்கு ஆகாது.

ஆயில்யம் - மாமனாருக்கு ஆகாது

சித்திரை - சித்திரை அப்பன் தெருவிலே

விசாகம் - குழந்தை பிறந்தால் கோவிலில் கொடுத்து வாங்க வேண்டும்

கேட்டை - கேட்டை ஜேஷ்டனுக்கு ஆகாது

மூலம் - மூலத்து மாமியார் மூலையிலே

பூராடம் - பூராடம் பெண் படபடப்பாள்

இதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால் யாரிடமும் சரியான பதில் இல்லை.

உதாரணமாக,

ஒருவரது ஆண் ஜாதகத்தில் வாழ்க்கைத்துணையை பார்க்கும் இடம் - 7ம் இடம்.

ஒருவரது பெண் ஜாதகத்தில் வாழ்க்கைத்துணையை பார்க்கும் இடம் - 7ம் இடம் மற்றும் 8ம் இடம்.

இதை வைத்துதான் பலன் சொல்ல வேண்டும். ஆனால் சந்திரன் நின்ற நக்ஷத்திரத்தை இப்படி சொல்லக்கூடாது. மற்றும் லாஜிக்காக நினைத்துப் பார்த்தால் சந்திரன் மனம் சம்பந்தப்பட்டவன். சுக்கிரன் தான் களத்திரகாரகன் என அழைக்கப்படுபவன், Atleast சுக்ரன் நின்ற நக்ஷத்திரத்தை எடுத்து கொண்டாலும் பரவாயில்லை, ஆனால் சந்திரனை சொல்லியிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து எத்தனயோ பேர் மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு மிக சிறப்பாக வாழ்கிறார்கள். அதில் ஒருவரது மாமனார் 70 வயதுக்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனியாக ஜாதகம் உள்ளது, அவர்களது பலனை மற்றவரது ஜாதகம் சொல்லாது[குறிப்பு: தந்தைதாய் ஜாதக பலனை பிள்ளைகள் ஜாதகம் மூலமும், கணவனது ஜாதக பலனை மனைவி ஜாதகம் மூலமும், சகோதரனின் ஜாதக பலனை சகோதர சகோதரிகளின் ஜாதகம் மூலமும் ஓரளவு சொல்லமுடியுமே தவிர 100% பலன் சொல்ல இயலாது]. இந்தப் மூடப்பழக்கம் இப்போது ஆண்கள் ஜாதகத்திலும் நுழைந்து கொண்டுள்ளது. இது சரியானதல்ல. இதற்குண்டான ஆதாரங்களை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

அடுத்ததாக கடக இராசி பலன்களில் சந்திப்போம். நன்றி.


நன்றி: பெருங்குளம் இராமகிருஷ்ணன்,
ஜோதிடர். [ முகவரி: rameshramky06.venkat@gmail.com ]

12 Comments:

Anonymous said...

Naan kindal panratha nenaika vendam....intha natchathrathula piranthavangala kalyanam panna koodathu sollrangalae...appram avanga ellam enna panrathu..? kadaisi varaikum kalyanam pannama irukkanuma...?

kggouthaman said...

அனானி - தயவு செய்து கடைசி வரை படியுங்கள் - ஜோஸ்யர் அய்யா - இந்த வகை நம்பிக்கைகள் தவறானவை என்று, உதாரணங்களோடு சொல்லியிருக்கிறார்!

வால்பையன் said...

இது இன்னும் முடியலையா!?

cho visiri said...

The Author's approach to the subject is excellent. He thinks positively and tells in a positive and advisory manner.

One should understand that the predicitions/Advice do come free of cost and it is pity that such things that come free of cost are always looked down upon.

My respects and thanks to the author of the original post. I pray to Lord Rajagopalaswamy, the presiding Deity of my Native place Temple (at Mannargudi) for long and peaceful life of the Author.

Swami said...

My friend doesnt know about the time of birth .. not even morn or evn or night . Only date is there .. Will she able to find her sign..?

ராமகிருஷ்ணன் said...

Thanks Cho Visiri.
உங்களைப் போன்று பெரியவாளின் ஆசிர்வாதத்துடந்தான் என்னால் வாழ முடியும்.

--- ஜோதிடர் பெருங்குளம் இராமகிருஷ்ணன்.

ராமகிருஷ்ணன் said...

QUESTION: My friend doesnt know about the time of birth .. not even morn or evn or night . Only date is there .. Will she able to find her sign..?

ANSWER: i can tell.

ramakrishnan.

-----------------------------

Erode Nagaraj... said...

Thank you Shri Ramakrishnan... So nice to read mine :)

Can you mail your email id to kalyaani@gmail.com?

Namaskaram.

Swami said...

@ Sri. Ramakrishnan : Dear sir , thanks for the response. Can you send me your contact details ? My emai address : swaminathan.thiruvadi@gmail.com

Swami said...

@ Sri. Ramakrishnan : Dear sir , thanks for the response. Can you send me your contact details ? My emai address : swaminathan.thiruvadi@gmail.com

ராமகிருஷ்ணன் said...

I pray to Lord Rajagopalaswamy, the presiding Deity of my Native place Temple (at Mannargudi) for long and peaceful life of the Author.
-----------------
சோவிசிறி மிக சமீபத்தில்தான் நான் மன்னார்குடி செல்ல நேர்ந்தது. அழகு என்றால் முருகன் என்று நினைத்திருந்தேன், மன்னார்குடி இராஜகோபாலசுவாமியும் அழகுதான் என்பதைப் புரிந்துகொண்டேன்.
ராமகிருஷ்ணன்.

Perumal said...
This comment has been removed by the author.