பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, September 20, 2009

சண்டேனா இரண்டு (20-09-09) செய்திவிமர்சனம், இன்பா


இந்த வார இரண்டு செய்திகள்...


செய்தி # 1

இந்திய எல்லைக்குள், காஷ்மீரில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து கட்டுமானப் பணிகளை மேற் கொண்டு வருவதாக ஒரு செய்தி..

காஷ்மீர், லடாக் பகுதியில், இந்தியா - சீனா எல்லையோரத்தில், கராகோரம் என்ற இடம் உள்ளது. இங்கு சமீபகாலமாக, சீன ராணுவம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், இதற்காக இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து இருப்பதாகவும் தகவல் வெளியானது.இந்திய ராணுவ வீரர்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கும் இந்த பகுதியை சீனா பயன் படுத்தும் என்றும், பரவலாக பேசப்படுகிறது.

இதுகுறித்து காஷ்மீர் மாநில அரசு ,"சில அங்குல பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது உண்மை தான். பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்யவில்லை'" என தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், "கராகோரம் என்ற இடத்தில் சீன ராணுவம் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. இருந்தாலும், சீன எல்லைக்குள் இது தொடர்பாக சில பணிகள் நடந்து வருவது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது'என்றன.
1962-ல் இந்தியா மீது போர் தொடுத்த சீனா 33 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இந்திய நிலப்பகுதியை கைப்பற்றி தனது நாட்டோடு இணைத்து கொண்டது.

சீனா இந்தியா மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக சர்வதேச நிபுணர்கள் கூறி வருகின்றனர். இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எல்லா வகையிலும் சீனா ஊக்கமளித்து வருகிறது. இலங்கையிலும் படை தளத்தை அமைக்க முயற்சித்து வருகிறது.

இப்படி பல்வேறு வகையிலும் இந்தியாவுக்கு சீனா அச்சுறுத்தலாக உள்ளது. இந்த நிலையில் சீனாவில் இருந்து வெளி வந்துள்ள ஒரு கட்டுரை பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.

சீனாவில் உள்ள சர்வதேச யுத்த தந்திர கல்வி ஆய்வு மையம் இணைய தளத்தில் இந்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் எழுதி இருப்பதாவது:-

சீனா இந்தியா மீது சிறிய நடவடிக்கை எடுத்தாலும் இந்தியா சிதறி விடும்.

இந்தியா இந்து மதம் ரீதியாக மட்டுமே ஒரே நாடாக உள்ளது. ஆனால் ஜாதி, இனம் வாரியாக பிரிந்து கிடக்கிறது. அசாமியர்கள், தமிழர்கள், காஷ்மீரிகள் என பல இனமாக உள்ளனர். எனவே இந்த நாட்டை சிதறடிப்பது கஷ்டம் அல்ல.

எனவே இந்தியாவை சீனா 20 அல்லது 30 நாடுகளாக உடைக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகள் பிரிந்து கிடப்பது போல இந்தியாவையும் பிரித்து விடலாம். இதற்காக இந்தியாவின் பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், பூட்டான் ஆகியவற்றை சீனா உதவியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வங்காளதேசத்தையும், மேற்கு வங்காளத்தில் உள்ள வங்க பூர்வ குடிமக்களையும் திரட்டி ஒன்று பட்ட வங்காள தேசத்தை உருவாக்க வேண்டும்.

அசாமை தனி நாடாக உருவாக்க வேண்டும். இதற்கு உல்பா தீவிரவாதிகளுக்கு சீனா உதவியாக இருக்க வேண்டும். அருணாச்சல பிரதேசத்தில் 90 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதியையும் கைப்பற்ற வேண்டும்.இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.சீன அரசு அனுமதியோடுதான் இந்த கட்டுரை வெளியாகி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

சென்ற வாரம் வாகா எல்லை அருகே இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.மேலும், பாகிஸ்தானின் ஏவுகணைகள் அனைத்தும் இந்திய நகரங்களை நோக்கி குறிவைத்து அமைத்து இருப்பதாக அமெரிக்கா எச்சரித்து இருக்கிறது.

பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை பகுதிகளில் வாலாட்டி வருகிறது. பங்களாதேஷ் திவிரவாதிகள் ஊருடுவல், நேபாள மாவோயிஸ்ட்டுகள், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை ராணுவம்.. எல்லாம் தொடர்கதைகள் ஆகிவிட்டன.

உலகின் மூன்றாவது பெரிய ராணுவம், அணுஆயுதம் கொண்ட நாடு என்பதெல்லாம் மும்பை தீவிரவாத தாக்குதல்களை கையாண்ட விதத்தை பார்க்கும்போது வெறும் விஜயகாந்த், அர்ஜுன் படங்களின் வசனம்தானோ என்று தோன்றுகிறது.

மக்கள்(ஒட்டு) எண்ணிக்கை குறைவாக இருப்பதால் என்னவோ, எல்லைபுற மாநிலங்களை மத்திய அரசுகள் கண்டுகொள்வதில்லை என்று நினைக்கிறேன்.

நமது வெளியுறவு கொள்கைகையில் எந்த மாதரியான மாற்றங்கள் தேவை? சீனா மற்றும் பாகிஸ்தான் இரண்டு அச்சுறுத்தல்களையும் சமாளிக்கும் அளவுக்கு நமது ராணுவம் தயாரா? என்ன செய்யபோகிறது மத்திய அரசு?

செய்தி # 2


நாட்டின் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. எனவே, மத்திய மந்திரிகள், அதிகாரிகள் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும்” என்று நிதி மந்திரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து, பிரணாப் முகர்ஜி விமானங்களில் சாதாரண வகுப்பில் பயணம் செய்கிறார். மற்ற மந்திரிகளும் சிக்கனத்தை கடைப்பிடிக்க தொடங்கி உள்ளனர்.

ஆனால் மத்திய ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி ஏற்கனவே எளிமையை கடை பிடித்து சிக்கனத்துக்கு முன் உதாரணமாக இருந்து வருகிறார். இதற்கு அவரது பல் வேறு நடவடிக்கைகளை கூறலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய துறையான ரெயில்வே மந்திரியாக இருந்தாலும் “பந்தா” இவரிடம் கிடையாது. எந்த விழாவாக இருந்தாலும் பட்டுச் சேலை அணிவது இல்லை. எப்போதும் சாதாரண நூல் புடவை தான் கட்டுகிறார்.

காலில் ரப்பர் செருப்பு தான் அணிந்து வருகிறார். அலுவலகத்துக்கு சொந்த காரில் தான் வந்து செல்கிறார். அலுவலகத்தில் அவர் சாப்பிடும் உணவு பண்டங்களுக்கு கூட பணம் கொடுத்து விடுகிறார்.

ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்த போது பளபளப்பான “சூட்கேஸ்” கொண்டு போகவில்லை. சாதாரண துணிப்பையிலே பட்ஜெட்டை தோளில் தொங்க விட்டுக் கொண்டு பாராளுமன்றம் சென்றார்.

மம்தாபானர்ஜிக்கு அரசு சார்பில் பங்களா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிலேயே வசித்து வருகிறார். இது போல அனைத்து விஷயங்களிலும் எளிமையையே கடைபிடித்து வருகிறார்.

ஏற்கனவே ரெயில்வே துறை சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது ரெயில்வே துறை சார்பில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மற்றும் ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் தங்குவது போன்ற செலவு 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சிக்கன நடவடிக்கை குறித்து மம்தா பானர்ஜியிடம் கேட்ட போது, "என்னுடைய வாழ்க்கை முறையை எல்லோரும் அறிவார்கள். சில மத்திய மந்திரிகளுக்கு சிக்கன நடவடிக்கை சிரமமாக இருக்கலாம் எனக்கு சிரமம் இல்லை" என்றார்.

இனி இந்திய அரசியல்வாதிகள் இப்படி முழங்கலாம்.

சிக்கன மேவ ஜெயதே.....

ஒரு போனஸ் செய்தி :

தைவான் முன்னாள் அதிபருக்கு ஊழல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தைவான் முன்னாள் அதிபரான சென் ஷூயி- பியான் மீது லஞ்சம், ஊழல், பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இது தொடர்பான வழக்குகளை விசாரித்த தைபே மாவட்ட நீதிமன்றம் , சென்னுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.மேலும் அவரது மனைவிக்கும்(?) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுபோல கடுமையான சட்டங்கள் மூலம் நம்ம ஊரிலும் ஊழலை ஒழிக்க முடியுமா??


(நன்றி, இனி அடுத்த வாரம்....)
-இன்பா

16 Comments:

யதிராஜ சம்பத் குமார் said...

இன்பா மம்தாவைப் பற்றி இன்னொரு விஷயம் சொல்ல விட்டுவிட்டார். முன்னேற்றத்திலும் மேற்கு வங்கம் சிக்கனமாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆதலால்தான் டாடா நானோ கார் தொழிற்சாலை வருவதை தன்னால் முடிந்த அளவு ப்ரயத்தனம் செய்து தடுத்தார். ஏற்கனவே இடதுசாரிகள் இதுபோன்ற முதலீடுகளில் அக்கறை கொண்டவர்கள் அல்லர். ஆயினும் புத்ததேவ் இடதுசாரிகளிலும் கொஞ்சம் வித்யாசமானவர். ஆக ஒரு முன்னேற்றதிற்குண்டான வழியை முற்றிலுமாக குழி தோண்டி புதைத்த பெருமையும் மம்தாவைச் சாரும். அதேபோல் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் ஆட்சிக்கு நற்பெயர் ஏற்பட்டு விடக் கூடாது என்பதிலும் மம்தா முனைப்பாக உள்ளார். மேற்கு வங்க அரசு எந்த நலத்திட்டம் கொண்டு வந்தாலும் அதில் ஏதாவது ஒரு முட்டுக் கட்டையைப் போடுவது.


அடுத்து சீனாவில் வெளியாகியுள்ள கட்டுரை ஒரு தனிப்பட்ட நபர் எழுதியது. மற்றபடி இந்திய அரசு இவ்விஷயத்தில் மெத்தனமாக இருப்பது எதிர்காலத்தில் பெரும் ஆபத்துகளை விளைவிக்கும். நாட்டின் அனைத்து முக்கியமான விஷயங்களிலும் மெத்தனம் காட்டும் ஒரு அரசை மீண்டும் தேர்ந்தெடுத்திருப்பது நமது துரதிருஷ்டமே. ஒரு பக்கம் பாகிஸ்தான் தீவிரவாதிகள், ஒரு பக்கம் இடதுசாரி தீவிரவாதம் புற்று நோய் போல பரவுதல், இதுதவிர பங்களாதேசத்திலிருந்து ஊடுருவும் தீவிரவாதிகள் மும்முனையிலிருந்தும் பாரதத்தை சீர்குலைக்கும் சக்திகள் பெருகிவரும் நிலையில், கண்டனம் மட்டுமே தெரிவித்தால் போதுமானது என்ற நிலையில் இயங்கி வரும் கையாலாகத அரசை, கேவலம் ஒரு குவார்ட்டர் பிராந்திக்கும், 300 ரூபாய் பணத்திற்காகவும் தேர்ந்தெடுத்த மக்களைத்தான் குற்றம் சாட்ட வேண்டும்.

யதிராஜ சம்பத் குமார் said...

இதுபோல கடுமையான சட்டங்கள் மூலம் நம்ம ஊரிலும் ஊழலை ஒழிக்க முடியுமா??////


ஊழல் செய்பவர்களே திருந்தினால் கூட ஒழிக்க முடியாத அளவிற்கு இந்தியாவில் ஊழல் சர்வ மட்டங்களிலும் வ்யாபித்துள்ளது. நாற்காலி லாபங்களுக்காக கூட்டணிக் கட்சியினர் செய்யும் ஊழலை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் விடுகிறது; தாம் செய்யும் ஊழலைக் கண்டு கொள்ளாமல் விடுவதற்காக அதிகாரிகள் செய்யும் ஊழலை மாநில அரசு அனுமதிக்கிறது; கீழ்மட்டப் பணியாளர்கள் தாங்கள் செய்யும் ஊழலைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக அதிகாரிகளுக்கும் பங்கு கொடுக்கிறார்கள்; இவ்வாறு அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஊழல் பரவியுள்ளது.


RTO அலுவலகத்தில் Learning License பெறுவதற்கான கட்டணம் ரூபாய் 30 தான். ஆனால் நம்மவர்களில் எத்தனை பேர் ரூபாய் 30 மட்டுமே செலுத்தி வாங்கியுள்ளோம்?? நமக்கு காரியம் ஆனால் போதும் என்ற நோக்கில் ப்ரோக்கர்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்து வாங்கி விடுகிறோம். எல்லா மட்டங்களிலும் இதேபோல்தான். இதனை ஒழிப்பதற்கு யார் வந்தாலும் முடியாது.

Anonymous said...

//பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை பகுதிகளில் வாலாட்டி வருகிறது. பங்களாதேஷ் திவிரவாதிகள் ஊருடுவல், நேபாள மாவோயிஸ்ட்டுகள், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை ராணுவம்.. எல்லாம் தொடர்கதைகள் ஆகிவிட்டன.//

தமிழக மீனவர்கள் துப்பாக்கி ஏந்தி
தங்களை தானே காத்துக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை

kggouthaman said...

Dear IV,
There is a website :-www.cvc.nic.in (which many of the IV readers may already be aware). In this website, the govt of India has provided many details like list of corrupt officials etc. In a recent Dinamalar article - they indicated that a list of 123 officials is available. However, I was able to find a list of 101 officials only. This site has also a vigilance manual - published in the year 2005 as sixth edition.

ஸ்ரீராம். said...

செய்தி 1...

மன்மோகன்சிங் : " எல்லை மீறிய பயங்கரவாதத்தை இனிமேலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது."
சிதம்பரம் : "நடப்பதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம்."
கம்யூனிஸ்ட் : "................................."

ஸ்ரீராம். said...

இந்தியர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்...அவர்கள் அறிக்கை விட்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போதே ஆக்ரமிப்பும் செய்யலாம்...சட்டங்களை கடுமையாக்கவே பயப்படும் மத்திய அரசு...உள்ள சட்டங்களை ஒழுங்காக பயன்படுத்தவும் தயக்கம்... இந்தியன் என்று சொல்லடா..பயந்து பயந்து செல்லடா...

ஸ்ரீராம். said...

செய்தி 2

மற்ற விஷயங்களில் எப்படியோ...மம்தாவை இந்த விஷயத்தில் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

Rahul said...

/****இந்திய எல்லைக்குள், காஷ்மீரில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து கட்டுமானப் பணிகளை மேற் கொண்டு வருவதாக ஒரு செய்தி..***/

இந்தியா இரும்புக் கரம் கொண்டு அடக்கும் என பிரதமர் அறிக்கை விடுவார், கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என உள்துறையும் வெளித்துறையும் மாறி மாறி அறிக்கை விடுவார்கள் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்
நம்மால்???


/**எனவே இந்தியாவை சீனா 20 அல்லது 30 நாடுகளாக உடைக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகள் பிரிந்து கிடப்பது போல இந்தியாவையும் பிரித்து விடலாம்***/


நாடு பிரிந்துதான் கிடக்கிறது சாரி பிரித்தாளப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது!!!


/***ஊழல் செய்பவர்களே திருந்தினால் கூட ஒழிக்க முடியாத அளவிற்கு இந்தியாவில் ஊழல் சர்வ மட்டங்களிலும் வ்யாபித்துள்ளது***/

Superb!! i agree this.

/***RTO அலுவலகத்தில் Learning License பெறுவதற்கான கட்டணம் ரூபாய் 30 தான். ஆனால் நம்மவர்களில் எத்தனை பேர் ரூபாய் 30 மட்டுமே செலுத்தி வாங்கியுள்ளோம்??***/

நீங்க இப்பதான் லைசென்ஸ் வாங்குகிறீர்களா???? இது எங்க தாத்தா L.L.R apply பண்ணும் போதிலிருந்து இப்படித்தானம்!!! என்ன செய்ய???

Rahul said...

/***Posted by IdlyVadai at 9/20/2009 05:00:00 AM 2 comments Links to this post***/

Hi Idlyvadai,
what time do you wake up from the bed? i am wondering when seeing your posted time of your last post!!!!

Kameswara Rao said...

இன்பா

ஊழல் நம் நாட்டில் இல்லவே இல்லை இது ஊழல் இது லஞ்சம் என்று பிரிவினை செய்ய முடியாதபடி இரண்டறக் கலந்து அதை ஒரு வழக்கை வழியாகவே நாம் ஏற்று காலம் கடந்துவிட்டது, ஊழல் எய்திர்ப்பு, சினிமாவில்ப பார்த்தல் மட்டும் கை தட்டி விட்டு அதோடு மறந்துவிடும் நம் பழக்கமும் தொடர்கிறது.

The Central Govt we have now, they talk too much and do little, we have a PM who cannot do anything on his own but need to wait for getting the permission... the dangers which you were telling is being reported for a long time now
If I remember right a Indian Officer in Arunachalapradaesh was told that he need not require a visa for china since he is citizen of china ? how many of our politicians followed this and try to look seriously into this. The dangers that we are facing now or we are going to face in future needs attention on warfooting basis but with this Govt I doubt their actions.

Kamesh

Guruprasad said...

////இதுபோல கடுமையான சட்டங்கள் மூலம் நம்ம ஊரிலும் ஊழலை ஒழிக்க முடியுமா??////

இதுபோல கடுமையான சட்டங்களை நம்ம ஊரில் ஒழிக்க முடியும்...first pillar and second pillar of democrazy will join hands in this!

God said...

http://beta.thehindu.com/opinion/op-ed/article3980.ece

Kindly read this article in THE HINDU from Aug 16, 2009. This is an old news. Why is it being given prominence now? no other interesting matter to post? The article pooh-poohs the assumption that china is planning to break up India. This "so called" research paper is an anonymous post by an insignificant Chinese blogger....

Anonymous said...

சென்னை : சீனப் படைகள், இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதைக் கண்டுகொள்ளாத மத்திய அரசை, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கண்டித்துள்ளார்.

அவரது அறிக்கை: சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது, எவ்வித தூண்டுதலும், காரணமுமின்றி பாகிஸ்தானிய ராணுவம், இந்திய எல்லைக்குள் ஊடுருவி துப்பாக்கிச் சூடு நடத்துவது, ஆபத்து விளைவிக்கக் கூடிய கழிவுகளை இந்திய எல்லைக்குள், அயல் நாடுகள் குவித்து வைத்திருப்பது போன்ற அச்சம் விளைவிக்கக் கூடிய செய்திகளுக்கு, சில நாட்களாக நாம் ஆளாகிக் கொண்டிருக்கிறோம். இத்தகைய செய்திகள் வரும்போது, இதுபோன்ற முறைகேடான, சினத்தைத் தூண்டும் செயல்களில் ஈடுபடும் நாடுகள், அவற்றை மறுப்பது வழக்கம்.தற்போது வந்து கொண்டிருக்கும், அயல்நாட்டு அத்துமீறல்கள் குறித்த தகவல்களை, சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நாடுகள் மறுத்து அறிக்கை வெளியிடும் முன், தானாகவே முன்வந்து, அண்டை நாடுகளுக்கு நன்னடத்தை சான்றிதழ் அளிக்கும் சூழ்நிலைக்கு மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆளாகி இருப்பது மிகவும் பரிதாபகரமான விஷயம். எல்லை தாண்டிய பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, எல்லை தாண்டிய ஆக்கிரமிப்பாக இருந்தாலும் சரி, பாதிப்புக்கு ஆளாகும் நாடாகத்தான் இந்தியா விளங்குகிறது என்றாலும், ஐ.மு., கூட்டணி அரசின் நூறு நாட்களுக்கு மேற்பட்ட ஆட்சியில், இந்த பாதிப்பு இன்னமும் மோசமாகிக் கொண்டே தான் செல்கிறது.நாட்டின் இறையாண்மையும், பாதுகாப்பும், சட்டவிரோதமாக பறிபோவதை இந்திய மக்கள் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த அடிப்படை உண்மையை மன்மோகன் சிங் அரசு உணர்ந்து, தேச பாதுகாப்பு குறித்த பிரச்னைகளில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழகத்தில், தி.மு.க., அரசால் வழக்கமாக நடத்தப்படும் கபட நாடகங்களைப் போல், தற்போது மத்திய அரசால் நடத்தப்படவுள்ள கூட்டமும் கபட நாடகம் தான். இக்கூட்டத்தின் முடிவு அனைவருக்கும் தெரிந்தது தான். இந்தியாவின் பாதுகாப்பு விஷயத்தில், இது மிகவும் ஆபத்தான போக்காகும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Baski said...

எப்படி, பிரிட்டிஷாருக்கு முன்னால் இருந்த இந்தியா வரும் என சொல்லறீங்களா?

ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்ற தருணத்தில் அமெரிக்கா ஐந்து நாடுகளாக உடைக்கப்படும் என ரஷ்ய திட்டமிட்டுள்ளதாக செய்தி வந்தது. (cnn)

தளவாடங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு அதை விற்பனை செய்யும் சந்தைகள் மிக அவசியம். இந்தியாவும், சினாவும், பாகிஸ்தானும் ஒன்று பட்டுவிட்டால் அவர்கள் கடையை மூடி வேறு வேலை பார்க்க நேரிடும். ஆகவே இது மாறி சில "ராஜதந்திரங்களை" அப்பப்போ முயற்சி செய்வார்கள். அதற்க்கு ஜால்ரா அடிக்க மீடியா, அரசியல் வாதிகள் என பலர் உள்ளனர்.

'டெமாக்ரசி' க்கு ஒரு தவறான உதாரணம் நாம் தான். இப்படி ஒரு ஜனநாயக நாடு தேவைதானா? தனது ஓட்டின் மதிப்பு தெரியாத வாக்காளர்கள். சுயநல அரசியல் வாதிகள். கல்லுரிகளில் நடத்தப்படும் பாடங்கள் மட்டும் படித்து ஒழுக்கமும், நேர்மையும் மறந்துவிட்ட வருங்காலம். சர்ச்சில் சொன்னது உண்மை என நிருபித்து கொண்டிருக்கிறோம்.

இந்தியாவை உடைக்க சீனா ஒன்னும் கஷ்ட பட வேண்டாம்.
நம்ம மு.க, ராமதாஸ், வைகோ மாறி நிகழ் கால எட்டப்பன்களை ஏத்தி விட்டால் போதும்.
இந்த மூணு பேரை மட்டும் ஏன் சொல்லறேன். மூணு நாதாரிகளும் ஒருமுறை கூட நாட்டுபற்று பற்றி பேசியது இல்லை (என்னே நமது தலைவர்களின் நாட்டுப்பற்று!). அப்படி ஒரு உணர்வே கிடையாது. எப்போ பார்த்தாலும் தமிழ். இந்தியா உடைக்கப்படுமானால் காரணம் நமது முட்டாள் தலைகளே (and their followers).

Rahul said...

/***இந்தியாவை உடைக்க சீனா ஒன்னும் கஷ்ட பட வேண்டாம்.
நம்ம மு.க, ராமதாஸ், வைகோ மாறி நிகழ் கால எட்டப்பன்களை ஏத்தி விட்டால் போதும்.
இந்த மூணு பேரை மட்டும் ஏன் சொல்லறேன். மூணு நாதாரிகளும் ஒருமுறை கூட நாட்டுபற்று பற்றி பேசியது இல்லை (என்னே நமது தலைவர்களின் நாட்டுப்பற்று!). அப்படி ஒரு உணர்வே கிடையாது. எப்போ பார்த்தாலும் தமிழ். இந்தியா உடைக்கப்படுமானால் காரணம் நமது முட்டாள் தலைகளே (and their followers).***/


Hello Baski,
You are perfectly correct!
You missed a very imporatant நாதாரி!!! குருமா ஸாரீ திருமா

Varadaradjalou .P said...

//இதுபோல கடுமையான சட்டங்கள் மூலம் நம்ம ஊரிலும் ஊழலை ஒழிக்க முடியுமா??//

முடியாது.

வேண்டாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஒழித்துக் கட்ட மட்டுமே முடியும்.