பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 14, 2009

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 14-09-2009

அன்புள்ள முனி,
நலமா. உன் கடிதத்தில் நீ (அ)நியாயத்துக்கு கோபப்பட்டது புரிகிறது. சரி, எது எப்படியோ, இப்போது உன் கோபத்தைத் தணிக்க சின்னதா இந்தக் கடிதம். ஞாநி எழுதிய கந்தசாமிக்கு சசி கணேசன் எழுதிய கடிதம் போல என்று நினைத்துவிடாதே :-)''வாருங்கள் தமிழர்களே.. வாருங்கள்.. உங்கள் ஊழியன் வைகோ அழைக்கிறேன்.. வாருங்கள்'' என்று சன் டிவியில் வைகோ விளம்பரம் வந்துக்கொண்டு இருக்கிறது. யாரை கோபப்படுத்த இந்த விளம்பரம் என்று தெரியவில்லை. எதற்கு இந்த விளம்பரம் தெரியுமா ? அறிஞர் அண்ணாவின் நூற்றூண்டு விழா திருச்சியில் மதிமுக நடத்துது அதற்கு தான். ஆக அண்ணா திமுக கூட்டணியில் இருந்துக்கொண்டு சன் டிவியில் விளம்பரம். வைகோவிற்கு தைரியம் ஜாஸ்தி தான். 'மோதி விளையாடு' படம் சன் டிவி தயாரிப்பு தெரியுமா ? இந்த வைகோ விளம்பரம் இரண்டாம் பாகமாக இருக்கலாம்.

அண்ணா நூற்றாண்டு விழா என்றால் அண்ணா பற்றி கவிதை எழுதுவார்கள். ஆனால் இந்த கவிதையை படிக்க அண்ணா நல்ல வேளை இப்ப மேல்லோகத்தில் இருக்கிறார். உண்மை தமிழன் டைப் கவிதை. ஸ்கிப் செய்வது நல்லது.

அண்ணா என்ற சொல்லால்
அகிலத்தை ஈர்த்தவனே!
தம்பி என்ற சொல்லால்
தமிழரை இணைத்தவனே!
தி.மு.க. என்ற சொல்லால்
திக்கெட்டும் நிறைந்தவனே!
கடமை, கண்ணியம்,
கட்டுப்பாடு என்ற சொல்லால்
கழகம் வளர்த்தவனே!
பேச்சு என்ற சொல்லால்
ஆட்சிக்கு வந்தவனே!
ஆட்சி என்ற சொல்லால்
அரிய சாதனை படைத்தவனே!
தந்தைக்கு ஆட்சியை ஈந்து
தரணி புகழ் பெற்றவனே!
தமிழ்நாடு என்ற சொல்லால்
நாடாண்ட தமிழனுக்கு தமிழ்
‘நாடு’ ஒன்றை தந்தவனே!
உள்ளம் கவர்ந்த தம்பீ........,
உழைப்பால் உயர்ந்த தம்பீ......,
“கருணாநிதி”யென்னும் தங்க
தம்பியிடம் இதயம் அளித்தவனே!
இதனால் இன்றும் இறவாமல்
எங்களோடு இணைந்து வாழ்பவனே!
இன்று......, “உன் பிறப்புக்கு”
நூற்றாண்டு விழா! உன் தம்பி
கலைஞரின் உடன் பிறப்புக்கோ,
இது உயிரினும் மேலான விழா!
அண்ணா.... நீ பெயர்ச் சொல்லா?
அல்ல.., அல்ல! தமிழனின்
ஊனோடும் உயிரோடும் ஒரு
நூற்றாண்டு கலந்த உயிர்ச் சொல்..!


அண்ணா.... நீ அறிவாயா?
உன் மனதிலும், பெரியார் நெஞ்சிலும்
நெருடலாய் பொதிந்த முள்ளை
கலைஞர் அகற்றிய விந்தையை
“ரூபாய்க்கு மூன்றுபடி லட்சியம்,
ஒரு படி நிச்சயம்..” என்றாய்!
இயற்கை உன்னைப் பிரித்தது
உன் சொல்லோ கலைஞர் நெஞ்சில்
கனலாய் நின்றது! இன்று...
நாடெல்லாம், தமிழர் வீடெல்லாம்
“ஒருகிலோ அரிசி ஒரு ரூபாய்”
உன் தம்பி கலைஞர் வழங்குகிறார்!
உவகைதானே அண்ணா?அனைத்து சாதியரும் அர்ச்சகர்
ஆவதற்கும், ஆகமங்கள் அவர்கள்
படிப்பதற்கும் சட்டமே கலைஞர்
போட்டார்! சன்னிதானத்தில் சமநீதி
கண்டார்! மகிழ்ச்சிதானே அண்ணா?


அண்ணா.., தெரியுமா சேதி?
அன்று.., “வடக்கு வாழ்கிறது தெற்கு
தேய்கிறது ஏனிந்த பாரபட்சம்”
என்றே எதிரொலித்தாய்! இன்று..
“தெற்கு இல்லாமல் டெல்லியே
இல்லை, கலைஞர் காட்சி இல்லாமல்
ஆட்சியே இல்லை” என்ற நிலை!‘நா’ நயமும், நாணயமும் மிக்கவனே!
உனக்கு நாணயம் வெளியிடும் விழா!
ஆரூர் தோன்றல், அஞ்சுகப் புதல்வர்
ஆருயிர் தம்பி கலைஞர் நடத்துகிறார்!
அனைவர் நெஞ்சிலும் அறிவிலும்
ஆழமாய்ப் பதிந்தவனே! அனைவர்
கையிலும் பையிலும், மகிழ்வோடும்
மதிப்போடும் இனி தவழப் போகும்
காஞ்சி மன்னனே! நீ தொட்டு விடும்
தூரத்தில் விழா..,பொடி போட்டு
மெல்ல நடைபோட்டு வா......!
உன் தூயதம்பி கலைஞரை,
இன்னும் நூறாண்டு நலமோடு வாழ
வாழ்த்துச் சொல்ல வா.... அண்ணா!கடைசி வரி என்னை ரொம்பச் சிந்திக்க வைத்தது. நம்மைப் போன்ற பாமரன்கள்தான் இறந்தவர்கள் மேலேயிருந்து வாழ்த்துவார்கள் என்று நம்பியுள்ளோம். ஆனால் பகுத்தறிவாளர்களுக்கும் அந்த நம்பிக்கை இருப்பது பெரிய வியப்பு!! என்ன நான் சொல்லுவது ?


தமிழ் மக்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள். "தமிழக மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் எந்த ஒரு ஆபத்து வந்தாலும், வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன். மக்களுக்ககாக களத்தில் இறங்கி போராடுவேன்" என்று நேற்று பத்திரிக்கையாளர் சந்தித்த விஜய் அடித்து சொல்லியுள்ளார். தற்போது தமிழக மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சர்டிபிகேட் கொடுத்த விஜய்க்கு கோடான 'கோடி' நன்றியை உலக தமிழர் சார்பில் திமுக சொல்ல வேண்டும். இல்லை அமைச்சர்கள் பிரதிநிதிகள் விஜய் வீட்டுக்கு சென்று விஜய்க்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும். அப்படி சென்றால், விஜய் வீட்டுக்கு சென்று விட்டு வெளியே வரும் அமைச்சர்கள் "விஜய்யுடன் நடந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது - வேட்டைக்காரன் படம் குறித்து அறிந்து கொள்ளச் சென்றோம்" என்று சொல்லி தப்பித்துக்கொள்ளலாம். தமிழக மக்களுக்கு ஈஸியாக புரியும். விஜய் அரசியல், ரஜினிக்கு அழைப்பு என்று போன வாரம் வடிவேலு ஸ்டைலில் சொல்லணும் என்றால் "நல்லாக் கெளப்புராங்கடா பீதிய...."

சில நாட்கள் முன் வந்த நியூஸ் "பெரிய தலைவர்களுக்கு எதிராக தேர்தலில் என்னை நிறுத்தி சந்திரபாபு நாயுடு பலிகடா ஆக்கிவிட்டார்". இது நடிகை ரோஜாவோட ஸ்டேட்மெண்ட். இவர் என்ன சொல்ல வருகிறார் ? இவர் அவ்வளவு பெரிய ஆள் இல்லை என்றா அல்லது சின்ன தலைவர்கள் எதிர்த்து தான் இவர் போட்டி போடுவாரா. அப்படி என்றால் அம்மணி தமிழர்களுக்கு ஏதாவது ஆபத்து வரும் வரை காத்திருக்க வேண்டும். அப்ப தான் விஜய் அரசியலில் குதிப்பார் அவரை எதிர்த்து நிற்கலாம். ரோஜாவுக்கு இந்த அற்புதமான யோசனை சொன்ன எனக்கு 'இட்லிவடை' விருது வழங்க வேண்டும் என்று இட்லிவடையை கேட்டுக்கொள்கிறேன்.

மக்களே விருது பற்றி குழம்ப வேண்டாம். அது ஜோக் இல்லை. கலைஞர் தனக்கு தானே அண்ணா விருதை கொடுத்துக்கொள்ளும் போது எனக்கு நானே இட்லிவடை விருது கொடுத்துக்கொள்ளுவதில் என்ன தவறு? பெரியார் விருதை வீரமணிக்கு வழங்கியுள்ளார் கலைஞர். உடனே வீரமணி அய்யா கலைஞரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். வீரமணி அய்யா கலைஞருக்கு அண்ணா விருதுக்கு பாராட்டுத்தெரிவித்துள்ளார். அதாவது கலைஞரே கலைஞருக்கு அண்ணா விருது தந்ததற்காகத்தான் இந்தப் பாராட்டு. மேற்கொண்டு சில விருதுகளை சிபாரிசு செய்கிறேன். ஸ்டாலுனுக்கு கலைஞர் விருது 0.5, அழகிரிக்கு கலைஞர் விருது 0.5 (crack-jack மாதிரி). தயாநிதி மாறனுக்கு முரசொலி மாறன் விருது. அன்பழகனுக்கு பேராசிரியர் விருது இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

"ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாடினார் பாரதியார். சில நாட்கள் முன் பாரதியார் பற்றி எல்லோரும் நினைத்துக்கொண்டு பதிவு எழுதி அடுத்த நாள் தங்கள் மாமுல் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இனி அடுத்த செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டும். வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் காடுவெட்டி குரு நிகழ்ச்சி ஒன்றில் ""வடதமிழகத்தில் 60 சதவீதத்திற்கு மேல் வன்னியர்கள் உள்ளனர். ஆரம்பத்தில் "வன்னியர் ஓட்டு அந்நியருக்கு இல்லை" என்று சொன்னோம். ஆனால் தற்போது, "வன்னியர் ஓட்டு வன்னியருக்கே இல்லை; அந்நியர் ஓட்டும் வன்னியருக்கு இல்லை" என்ற நிலைமை உள்ளது என்ற உண்மை நிலவரத்தைப்பற்றிப் பேசியுள்ளார். இதிலிருந்து என்ன தெரிகிறது. ஜாதி அரசியல் தமிழ் நாட்டில் இல்லவே இல்லை. பாரதியார் கனவு பலித்துவிட்டது.

தமிழகம் வந்த ராகுல் காந்தி தேசிய தலைவர் ஆகிவிட்டார். பின்ன தேசிய நதி நீர் பற்றி பேசியுள்ளார், அப்படி என்றால் அவர் தேசிய தலைவர் தானே ? ராகுல் காந்தி தேசிய அளவில் நதிகளை இணைப்பது நல்லதில்லை என்ற கருத்தை நேராக எதிர்க்காமல் "தேசிய அளவில் நதிகளை இணைக்க வேண்டும் என்ற கருத்தை ஆதரித்தவர் இந்திரா காந்தி சொன்னர்" என்று கலைஞர் அறிக்கை விட்டுள்ளார். இந்திரா காந்தி கலைஞர் ஆட்சி பற்றி கூட தான் ஏதேதோ சொன்னார் ? அதனால் அவர் சொன்னது எல்லாம் சரியாகிவிடுமா ? கலைஞர் சிந்திக்க வேண்டும்.

இந்தியார்களுக்கு ஒரு நற்செய்தி " இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டை சேர்ந்தவர்களுடைய கறுப்பு பணம் பற்றிய புள்ளிவிவரங்கள் எதுவும் தங்களிடம் இல்லை" என்று சுவிஸ் வங்கிகள் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அப்பாடா! இனி அரசியல்வாதிகள் எல்லாம் நிம்மதியாக தூங்கலாம். மக்கள் தான் விழித்துக்கொள்ள வேண்டும். இந்த சனிபெயர்ச்சியிலாவது இந்திய மக்களூக்கு ஏதாவது நல்லது நடக்குமா? சனிப்பெயர்ச்சி விழாவிற்கு எல்லோரும் திருநள்ளாறுக்கு படை எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சனி பகவானை கூல் செய்வதற்கு போகிறார்கள் என்றால் இவர்களுக்கே கூலிங் தேவையாக இருக்கு. சாமியை தரிசனம் செய்வதற்காக திருநள்ளாறுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு "குளிர்சாதன வசதி'' செய்யப்பட்டு உள்ளதாம். "Cool!".

அடுத்த முறை நாய் கண்காட்சி நடக்கும் போது நாய்களுக்கும் ஏசி வசதி செய்து தர வேண்டும். சென்னையில் நேற்று நடைபெற்ற நாய் கண்காட்சியில் பங்கேற்ற பெங்களூரை சேர்ந்த 4 நாய்கள், வெயில் கொடுமை தாங்காமல் சுருண்டு விழுந்து பரிதாபமாக செத்தன. நாய்படாத பாடு என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்?

திடீர் என்று இப்ப ஜெயலலிதாவின் சில்லரை வழக்கு பற்றி நிறைய செய்திகள் வர ஆரம்பித்திருக்கிறது. அம்மா கொடா நாட்டில் ஓய்வு எடுப்பது பிடிக்கவில்லை போல இருக்கு.

செங்கோட்டையன் என்ன செய்கிறார் ?
1. விழுந்து வணங்குகிறார்
2. பாக்கெட்டில் இருந்த சில்லரை கொட்டிவிட்டது அதை எடுக்கிறார்.
3. காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.

மூன்றாவது ஆப்ஷன் புரியாதவர்களுக்கு இந்த செய்தி - வெளி நாட்டில் இருந்து பரிசாக அனுப்பப்பட்ட மூன்று லட்சம் டாலர் தொடர்பான விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஜெயலலிதா மீதும், செங் கோட்டையன் மீதும் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி இருவரும் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ஜெயலலிதாவின் பெயருக்கு முன்னால் 'திருமதி' என்கிற அடைமொழியுடன் மனுத்தாக்கல் செய்திருந்தாராம் செங்கோட்டையன்.

போன கடிதத்தில் நீ நாடாளுமன்றத்தில் ஆங்கிலம், ஹிந்தியில் பேசுவதில் கஷ்டப்படுகிறார் என்று எழுதியிருந்ததை படித்து ரொம்ப வேதனைப்பட்டேன். அதே போல அம்மையாரும் வேதனை பட்டுள்ளார். ஆமாம், அழகிரிக்கு அம்மையார் ஆதரவு தந்துள்ளார். சுருக்கமாக சொல்றேன் "தமிழ்மொழி தன்னால் தான் செம்மொழி என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கருணாநிதி, ஓர் அமைச்சர் நாடாளுமன்றத்தில் தமிழ்ல் பேச முடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பது உண்மை யிலேயே மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. தமிழில் பேச உரிமை இல்லை என்பதை பார்த்துக் கொண்டு வாய்மூடி மவுனியாக இருக்கிறாரே? ஏன் என்று கேட்டுள்ளார்" அம்மாவும் முனி கடிதம் படிக்கிறாரா ?

முடிக்கும் முன்பு ஒரு கேள்வி
பாய்ஸ் லவ்வுக்கும் கோர்ள்ஸ் லவ்வுக்கும் என்ன வித்தியாசம் ?
பாய்ஸ் - பிரண்டுன்னு சொல்லிட்டு லவ் பண்ணுவாங்க
கேர்ள்ஸ் - லவ் பண்ணிவிட்டு ஃபிரண்டுன்னு சொல்லிவிடுவாங்க

இப்படிக்கு,
இட்லிவடை

முனி கடிதத்தில் பெண்கள் பற்றி ஓவராக நக்கல் அடிக்கிறீர்கள் என்று ஒருவர் சண்டைக்கு வந்ததால் பெண்கள் பற்றி இந்த கடிதத்தில் ஒன்றும் எழுதவில்லை. ஆனால் ஆண்கள் கோவித்துக்கொள்வார்களே என்று இந்த படம்.

18 Comments:

யதிராஜ சம்பத் குமார் said...

வைகோ அழைக்கிறார் விளம்பரம் சன் டிவியில் வருவது அண்ணா திமுக தரப்பிற்கு எந்த அளவிற்கு எரிச்சலை ஏற்படுத்தும் என்று திண்ணமில்லை, ஆனால் திமுக தரப்பிற்கு நிச்சயமாக அடி வயிற்றில் கொழுந்து விட்டு எரியச் செய்யும். குடும்ப சமாதானம் ஏற்பட்ட பின்னரும் வைகோ விற்கும், விஜயகாந்திற்கும் சன் டிவியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவ்வப்போது பொது ஜனங்களின் பிரச்சனைகளை வேறு முழு நீள செய்தித் தொகுப்பாக சன் டிவியில் காண்பிப்பது புகைச்சல் இன்னமும் இருக்குமோ என்று சம்சயிக்க வைக்கிறது.


நாய் கண்காட்சியில் நாய்கள் இறந்ததை இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைப்புச் செய்தியாக்கியிருந்தது. இறந்த ஒவ்வொரு நாயின் விலையும் சுமார் இரண்டரை லட்சமாம். எல்லாம் ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட அறையில் இருக்கும் நாய்களாம். எங்கு போய் முட்டிக் கொள்வது??

யதிராஜ சம்பத் குமார் said...

முனியிடம் ஒரு கேள்வி ::


சிவராமன் (சிந்திக்கும் சிவராமன்) ஏன் எப்பொழுதும் நமீதா சிந்தனையாகவே இருக்கிறார்??

ChamathuSiva said...

Nalla foto..

டகிள் பாட்சா said...

எதுக்கு பக்கம் பக்கமா எழுதிகிட்டு? இந்த ஒரு போட்டோ ஒண்ணே போதுமய்யா! சும்மா ஜில்லுன்னு இருந்துச்சு. இனி போட்டோவா போட்டு நாலு வரி எழுது தல.

யதிராஜ சம்பத் குமார் said...

சந்நிதானத்தில் சமநீதி கண்டவருக்கு சட்டசபையில் மாத்திரம் சமநீதி காண்பதில் என்ன தயக்கமோ?? மந்திரி சபையில் தனக்கு மட்டுமே உரிமை, காங்கிரஸார் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ரீதியிலான பார்ப்பனீயத்தை கழகம் காண்பிக்கிறதே?? பார்ப்பனீயத்தை எதிர்த்த அண்ணா வளர்த்த கழகமே பார்ப்பனீயத்திற்கு உரமிடுகிறதே???

யதிராஜ சம்பத் குமார் said...

“தெற்கு இல்லாமல் டெல்லியே
இல்லை, கலைஞர் காட்சி இல்லாமல்
ஆட்சியே இல்லை” என்ற நிலை!


இந்த நிலை எப்பொழுதிலிருந்து??

Rahul said...

\**தமிழ் மக்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள். "தமிழக மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் எந்த ஒரு ஆபத்து வந்தாலும், வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன். மக்களுக்ககாக களத்தில் இறங்கி போராடுவேன்" என்று நேற்று பத்திரிக்கையாளர் சந்தித்த விஜய் அடித்து சொல்லியுள்ளார்.**\


Please ask him not to act in films, then people will be very happy!!!

Rahul said...

\***மக்களே விருது பற்றி குழம்ப வேண்டாம். அது ஜோக் இல்லை. கலைஞர் தனக்கு தானே அண்ணா விருதை கொடுத்துக்கொள்ளும் போது எனக்கு நானே இட்லிவடை விருது கொடுத்துக்கொள்ளுவதில் என்ன தவறு?**\

Awards are not the correct way to praise the talent, it is a dumb of politics, so no body should not bother about the awards...

SUBBU said...

அய்யோ ராமா இவனுங்க திருந்தவே மாட்டானுங்களா??????????

ஸ்ரீராம். said...

அம்மா: "உங்களை எல்லாம் ஊக்குவிக்கலாம் என்று பார்த்தால்... என்ன தேடுகிறீர்கள் செங்கோட்டையன்...?"
செங்கோ: "அம்மா.. அந்த ஊக்கைதான் கீழ விழுந்து கிடக்கான்னு தேடறேன் தாயே..."

ஸ்ரீராம். said...

அண்ணா: "அஞ்சு ரூவாக் காசுல என்னைப் போட்டதுக்கு உன் செல்வாக்குல ஐந்நூறு ரூவாத் தாள்ல என் படம் போட்டுருக்கலாமே தம்பி..."

ஸ்ரீராம். said...

/அதாவது கலைஞரே கலைஞருக்கு அண்ணா விருது தந்ததற்காகத்தான் இந்தப் பாராட்டு. மேற்கொண்டு சில விருதுகளை சிபாரிசு செய்கிறேன். ஸ்டாலுனுக்கு கலைஞர் விருது 0.5, அழகிரிக்கு கலைஞர் விருது 0.5 (crack-jack மாதிரி). தயாநிதி மாறனுக்கு முரசொலி மாறன் விருது. அன்பழகனுக்கு பேராசிரியர் விருது இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்//

கனிமொழிக்கு... மன்னிக்கவும் கவிஞர் கனிமொழிக்கு பதவிதான் கிடையாது... விருது கூடத் தர மாட்டீங்களா...

ஆரூரன் விசுவநாதன் said...

அதான....கவிஞர் கனிமொழியை மறந்துட்டீங்க.....

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

Anonymous said...

www.eramurukan.in


இரண்டு முக்கிய வெண்பாக்கள்

நான்

காபி குடித்தபடி காலையில் ஹிந்துவிலென்
ஆபிச் சுவரியை ஆங்காங்கே - பாதி
விழிவருடி பாத்ரூம்போய் வீரியமாய் முக்கக்
க்ழிவில் கலக்கும் இறப்பு
.

மோகன்

இன்னார் இறப்பென்று இந்துவில் கண்டநான்
அன்னாரைக் காண அகம்சென்றேன் -சொன்னார்கள்
முக்கனி சாப்பிட்டால் முக்கநீ வேண்டாமாம்
முக்காமல் ஆயாச்சு மூச்சு....

மானஸ்தன் said...

//இரண்டு முக்கிய வெண்பாக்கள்//

"ஆய்" "பாய்"ஸ்.

ராஜா | KVR said...

//முனி கடிதத்தில் பெண்கள் பற்றி ஓவராக நக்கல் அடிக்கிறீர்கள் என்று ஒருவர் சண்டைக்கு வந்ததால் பெண்கள் பற்றி இந்த கடிதத்தில் ஒன்றும் எழுதவில்லை. ஆனால் ஆண்கள் கோவித்துக்கொள்வார்களே என்று இந்த படம்.
//

u too?

Kameswara Rao said...

iv,

படம் அருமை, நிற்க அன்பழகன் , ஓட்ட பந்தயம் ஓடினால் கூட இரண்டாவதாக தான் வருவேன் என்று அடம்பிடிப்பவர் இவர்தான், குரு உண்மையை புரிந்துகொண்டுள்ளார், எல்லாவற்றிற்கும் மேல்

irandu முக்கிய வெண்பாக்கள் அருமை...(with manasthan punch)

Muni short letter sweet

காமேஷ்

Erode Nagaraj... said...

முடிக்கும் முன்பு ஒரு கேள்வி அல்ல, ஒரு கேள்வி-பதில்