பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, August 18, 2009

Quick Gun Muruganகுவிக் கன் முருகன்
ரைஸ் ப்ளேட் ரெட்டி
மேங்கோ டோலி

Mission: Vegetarian Cow Boy who is a Saver of Cows and Ladies in particular!.
Inspiration: 50% clint eastwood, 50% Rajini Kanth!

மேலும் தெரிந்துக்கொள்ள...


QUICK GUN MURUGAN - என்ற ஒரு திரைப்படம் இம்மாதம் 28ஆம் தேதி வெளிவர இருக்கிறது. என்னடா தமிழ் படத்துக்கு ஆங்கில தலைப்பா என்று நீங்கள் நினைத்தால் தவறு. முழுக்க, முழுக்க இது ஒரு இந்தி திரைப்படம். தமிழ், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் 'டப்பு' செய்யவிருக்கிறார்கள்.

கதை விவாதத்தில் உட்காரும்போதே தமிழ் மற்றும் தெலுங்கு ஹீரோக்களை முடிந்தவரை 'நக்கல்' செய்யவேண்டும் என்ற முடிவோடு இருந்திருகிறார்கள் போல. ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்தில் சில காட்சிகளில் வரும் நக்கல் இதில் படம் முழுவதும்

படத்தில் ஹீரோ கதாபாத்திரத்தின் பெயர் முருகன்(சட்சாத் தமிழன்தான்). வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் Rice Plate ரெட்டி. நம்ம ஹீரோக்களை மட்டுமல்லாது, உணவு பதார்த்தங்களையும் ஒரு 'கை' பார்த்துஇருக்கிறார்கள். படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பது..நம்ம 'தோசை' தான் (' இட்லிவடை' கால்ஷீட் கிடைக்கலையாம்..ஹி ஹி).

படத்தின் கதை 18-ஆம் நூற்றாண்டில்(?) தொடங்குகிறது. சைவ சாப்பாடு சாப்பிடும் ஒரு தென்னிந்திய பகுதிககுள்(!), Rice Plate ரெட்டி தலைமையில் அசைவம் சாப்பிடும் ரவடிகள் கூட்டம் நுழைந்துவிட, அதை எதிர்த்துபோராடும் நம்ம ஹீரோ முருகன் கொல்லப்பட, பின்பு ரெட்டியும் இறந்துவிடுகிறார். இருவரும் மீண்டும் 21 ஆம் நூற்றாண்டில் மும்பையில் சந்திக்கிறார்கள்( மறுஜென்மம்). வழக்கம்போல ரைஸ் ப்ளேட் ரெட்டி விலங்குகளை கடத்தி 'Mcdosa' என்னும் பெயரில் அசைவ பதார்த்தம் தயாரிக்க, அதை முருகன் முறியடிப்பதாக கதை போகிறது.

ஹீரோ முருகனாக நடிப்பவர் பெயர் ராஜேந்திர பிரசாத். மேங்கோ டோலி நம்ம ரம்பா, நாசர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஹீரோ முருகன் வண்ண, வண்ண உடைகள் அணிந்துஇருக்கிறார். சிறிய மீசை, தலையில் தொப்பி, கையில் துப்பாக்கி சகிதம் அக்மார்க் தென்னிந்திய ஹீரோவின் 'கோமாளி' தோற்றம் போல இருக்கிறார். முக்கியமாக 'பஞ்ச் டயலாக்' மழையே பொழிகிறார். ரஜினி, விஜய் என்று யாரையும் விட்டு வைக்கவில்லை.

இதைபோல, யார் ஹீரோ, யார் ஹிரோயின் என தெரியாமல் இருக்கும் வடஇந்திய நாயகர்களை பற்றி நம்ம இயக்குனர் யாராவது படம் எடுத்தால் நன்றாக இருக்கும்.

எந்திரனுக்கு பிறகு மிகுந்த எதிப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் இது என்று சொல்லலாம். இட்லிவடை ரசிகர்களுக்கு அறிமுக காட்சிகள் சில கீழே.


அதை விடுங்கள். எத்தனை முறை 'அடி' வாங்கினாலும் நமது ஹீரோக்கள் திருந்துவதாக இல்லை தமிழ்நாடே தன் விரல் அசைப்பில் இருப்பதாக நினத்துக்கொண்டு, பஞ்ச் டயலாக் பேசுவதையும், பறந்து பறந்து அடிப்பதையும் விடுவதாக இல்லை.வேட்டைக்காரன் படத்தில் விஜய் தோன்றும் காட்சி என்று எனக்கு ஒரு 'கிளிபிங்க்ஸ்' கிடைத்தது. அதில் விஜய் ஒரு போலீஸ ஸ்டேஷன் போய் இன்ஸ்பெக்டரை அடித்து துவைத்துவிட்டு "இந்த இடம் தமிழ் மக்கள் எனக்கு தந்தது" என்று பஞ்ச் வசனத்தோடு, ஸ்க்ரீனில் நம்மை பார்த்து கண்ணசைக்கிறார்(??).

- இன்பா
பல இடங்களில் இட்லிவடை எடிட்டிங்குடன் :-)


குவிக் கன் முருகன் பட காட்சிக்கும், வேட்டைக்காரன் விஜய் பட காட்சிக்கும் ஒற்றுமை இருந்தல் அதற்கு இட்லிவடை பொறுப்பல்ல


72 Comments:

jaisankar jaganathan said...

//Quick Gun Murugan//

idlyvadai வர வர மாமியார் கழுதை போல ஆனாலாம்

vaasu said...

என்னயிருந்தாலும் குருவி கிட்டே எந்த முருகனும் வரமுடியாது.

M Arunachalam said...

//ஹீரோ முருகனாக நடிப்பவர் பெயர் ராஜேந்திர பிரசாத்.//

I thought Rajendra Prasad is a Telugu actor. Is he acting in a Hindi movie now or is it dubbed in Hindi from a Telugu original.

R.Gopi said...

இ(ன்பா)ட்லிவ‌டை,

ராஜேந்திர‌ பிர‌சாத் தெலுங்கு ஹீரோ.... இது அக்மார்க் தெலுங்கு ப‌ட‌ம்தான்... வேண்டுமானால், த‌மிழ், ஹிந்தியில் ட‌ப்பிங் செய்வார்கள் என்று நினைக்கிறேன்...

இங்க சொன்ன மாதிரி... ஹிந்திய கிண்டல் அடிச்சாங்களே இப்போ.. அமெரிக்காவில..

Anonymous said...

இட்லி-இன்பா சேந்து கலக்கிய வேட்டைக்காரன்-கும் கன் முருகன்.

இந்தப் படத்தில் உள்ளவர் "இட்லிவடை குடு" என்பதைப் பார்த்தால் இவர் "அவரே" என்று மீண்டும் ஒரு முறை அறுதி இட்டு உறுதி செய்கிறேன்.

நன்றி.

shiva said...

this movie going to release in hindi version first..

then simeltaniosuly in telegu too

VETTIKARAN IS THE BEST..

Vijay's dialouges going to rock all over tamilnadu during this diwali

Arul said...

Hello,

that vijay video is from the movie Pandhayam...

R.Gopi said...

//Arul said...
Hello,

that vijay video is from the movie Pandhayam...//

அருள்... க‌ரீட்டுபா... இது வெந்த‌ய‌ம்... இல்ல‌ இல்ல‌ ப‌ந்த‌ய‌ம் தான்... ஓட்ட‌த்துல‌ இதுதான் ஃப‌ர்ஸ்ட்... தியேட்ட‌ரை விட்டு ஓடும் போட்டியில்.....ஹீ...ஹீ....

jaisankar jaganathan said...

//என்னயிருந்தாலும் குருவி கிட்டே எந்த முருகனும் வரமுடியாது.
//

சூப்பர் வாசு.

kggouthaman said...

இ.வ.
இரண்டாவது கிளிப்பிங்கில் - வ வை விட்டுவிட்டு - இ மட்டும் முகம் காட்டுவது நியாயமா?
கூட்டணிக்குள் குழப்பமா?
இங்கும் பிரித்தாளும் வட நாட்டான் சூழ்ச்சியா?

kggouthaman said...

கலக்கப் போவது யாரு?, அசத்தப் போவது யாரு? என்றெல்லாம் - நம்மவர்களே - நம்மவர்களை நையாண்டி செய்யும் பொழுது - வட நாட்டவர் என்ன - தென்னாட்டார் என்ன - யார் வேண்டுமானாலும் நையாண்டி தர்பார் நடத்தலாம். நகைச்சுவையை நாமும் தாராளமாக ரசிக்கலாம்.

M Arunachalam said...

//என்னயிருந்தாலும் குருவி கிட்டே எந்த முருகனும் வரமுடியாது.//

முருகனுக்கு தேவை மயில் தானே. அவர் எதற்கு குருவி, காக்கா, மூட்டபூச்சி, கரப்பான்பூச்சி, கொசு, கொரங்கு, கழுதை கிட்ட எல்லாம் தேடி போக போறாரு?

ந.லோகநாதன் said...

வேற எதாவது இன்ட்ர்ஸ்ட்டா போடுங்கப்பா... சினிமா வேஸ்ட் ....something interesting with useful...

Anonymous said...

"குருவி"ன்னா நிறையப் பேருக்கு இளக்காரமா இருக்கு போல. பாத்துங்கன்னா! 2016-ல நாங்கதான் அப்டின்னு ரெண்டு சின்னக் குருவிங்க பேசிண்டு போனத நான் காதால கேட்டேன்.

சந்தேகம் : இந்த அளவுக்கு "குருவிய" அடிக்கறவங்க, குசேலனப் பத்தி ஏதாவது சொன்னா சும்மா இருப்பாங்களா? (சும்மாக் கொளுத்திப் போட்டுதான் பாப்போமே). :-D

ஸ்ரீராம். said...

அண்ணே...அது வேட்டைக்காரன் இல்லைண்ணே... பழைய "பந்தயம்" ங்கற படங்கண்ணா...!

zgorthbar said...

hi THIS QUICKGUN MURUGAN is distributed by FOX Pictures worldwide.
This film was first screened at London film festival 2008

zgorthbar said...

hi THIS QUICKGUN MURUGAN is distributed by FOX Pictures worldwide.
This film was first screened at London film festival 2008

Shankar said...

ஏங்க இது வேட்டைக்காரன் படம் இல்ல. விஜயோட அப்பா , நிதின் சத்யாவ வைச்சு எடுத்த பந்தயம் என்கிற படம். அதுவும் மொக்கை தான்

Baski said...

//ஏங்க இது வேட்டைக்காரன் படம் இல்ல. விஜயோட அப்பா , நிதின் சத்யாவ வைச்சு எடுத்த பந்தயம் என்கிற படம். //

Is it true IV?


//Quick Gun Murugan //

டிரஸ் என்.டி.ஆர் (எம்.ஜி.ஆர்) ஸ்டைல்.
பேச்சு ரஜினி ஸ்டைல் (சில இடங்களில்).

- கண்டிப்பா துட்டு கொடுத்து பார்க்கணும். வடநாட்டவருடன் சேர்ந்து நாமும் சிரித்து மகிழ்வோம். (இதில என்ன பழிக்கு பழி வேண்டிருக்கு.)


வேட்டைக்காரன் படத்தில் இருந்து சுட்ட இந்த ஒரு சீன் வைச்சு சொல்லறேன், படம் ரொம்ப நல்லா ஓடும் (தேட்டரை விட்டு) ... திருந்தாத ஜென்மங்கள்...
திருட்டு வி.சி.டி கிடைத்தாலும் தயவுசெய்து பார்க்க வேண்டாம்.

---------------

If you see Rush Hour(I,II,III) Chris Tucker makes fun of Chinese Accent of Jackie and other Chinkus..
Why to take such things personally?
Laugh and pass on...
-----

Anonymous said...

Kicking out Vijays and Rajnis of Kollywood will bring a Golden period for Tamil Cinema.

R.Gopi said...

//Anonymous said...
Kicking out Vijays and Rajnis of Kollywood will bring a Golden period for Tamil Cinema.//

இவ‌ரு யாரு ப‌ர‌ம‌க்குடி ப‌ல்டி நாய‌க‌ம் க்ரூப்பா? ந‌ட‌த்துங்க‌ள் அய்யா... ந‌ட‌த்துங்க‌ள்...

Anonymous said...

/****//Anonymous said...
Kicking out Vijays and Rajnis of Kollywood will bring a Golden period for Tamil Cinema.//

இவ‌ரு யாரு ப‌ர‌ம‌க்குடி ப‌ல்டி நாய‌க‌ம் க்ரூப்பா? ந‌ட‌த்துங்க‌ள் அய்யா... ந‌ட‌த்துங்க‌ள்...****/

ரஜினிக்கு நடிப்பும் வராது, ஆடவும் தெரியாது, ஒழுங்கா டயலாக் பேசவும் தெரியாது... அவரிடம் எதுவுமே இல்லாமல் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்லும் படித்த பகுத்தரிவாளிகளை என்ன சொல்ல????

இது கூட பரவாயில்லை...பணத்திற்காக மண்டியிட்டு கர்நாடகத்திடம் மன்னிப்பு கேட்கும் ஒருவரை தமிழகத்தின் நலன் கருதி அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறுவது முட்டாள் தனத்தின் உச்ச கட்டம்....

Anonymous said...

/***Anonymous said...
Kicking out Vijays and Rajnis of Kollywood will bring a Golden period for Tamil Cinema.**/

there are some more persons to kick them out!!!

jaisankar jaganathan said...

//ரஜினிக்கு நடிப்பும் வராது, ஆடவும் தெரியாது, ஒழுங்கா டயலாக் பேசவும் தெரியாது...
//

எல்லாம் சரி சார். இதை கண்டுபிடிக்க ஏன் 30 வருஷம்

ppage said...

/// ரஜினிக்கு நடிப்பும் வராது, ஆடவும் தெரியாது, ஒழுங்கா டயலாக் பேசவும் தெரியாது... ////

கோபி மட்டும் அல்ல, மிக அதிகம் ரசிகர், ரசிகைகளால் விரும்பி பார்க்கப்படும் நடிகனுக்கு எதுவுமே தெரியாது என்று நீங்கள் சொன்னால்........

தாங்க‌ள் முத‌லில் சொன்ன‌து, கோலிவுட்டை விட்டு தூக்கி எரிவ‌துதானே, கோட்டையை விட்டு அல்ல‌வே.

நண்பர் கோபி தெளிவாக சொல்லியிருக்கிறார் பல்டி என்று, அதில் உள்ள உவமை முதலில் நெருடினாலும், இப்போ சரியாயிருச்சி. பகுத்தறிவாளர் மீண்டும் படிக்கவும்.

R.Gopi said...

//ரஜினிக்கு நடிப்பும் வராது, ஆடவும் தெரியாது, ஒழுங்கா டயலாக் பேசவும் தெரியாது... அவரிடம் எதுவுமே இல்லாமல் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்லும் படித்த பகுத்தரிவாளிகளை என்ன சொல்ல????//

வெரிகுட்... நல்லா பேசறீங்க சார்... மொதல்ல நீங்க தைரியமா வெளில வந்து உங்க கருத்துக்களை சொல்லுங்க... நீங்க சொல்ற‌ எதுவும் இல்லாமல் இருக்கும் போதே ரஜினியிடம், கமலின் பருப்பு வேகவில்லையே அய்யா... அதற்கு என்ன செய்வது...

தசாவதாரம் படம் மெகா ஹிட்டுனு ஆண்டவர் க்ரூப் சொல்லுதீகளே... அப்டினா, ஆடியோ ரிலீசுக்கே "சாக்கி சான" வர வச்சீகளே... பிலிம் காட்டுனீகளே... வெட்டி / வெற்றி விழா ஏன் நடத்தல... ஆஸ்கர் ரவி எங்க போனாரு அதுக்கப்புறம்? ஹிந்தில ரிலீஸ் பண்ணலாம்னு சொல்லி அவுககிட்ட திரும்பியும் 6 கோடி ஆட்டைய போட்டாச்சு.... ரிலீஸ் ஆன மொத நாளு தியேட்டர்ல இருந்தது மொத்தமே 50 பேர்தானாம்... ரெண்டாவது நாளு படம் "குருவி" "வில்லு" மாதிரி பறந்துடுச்சாம்...

இப்போ, கர்நாடக மக்கள் கிட்ட மன்னிப்பு கேட்டது... அந்த மேட்டரோட உண்மையான விவரம் எல்லாருக்கும் தெரியும்.... கேட்டு தெரிஞ்சுக்கோங்க...

தமிழக அரசுக்கு ஆதரவாகதான் அந்த உண்ணாவிரதம் நடைபெற்றது... அங்கு ரஜினியும் வந்தார்... பேசினார்...ஆனால், கர்நாடகா தேர்தலுக்கு பிறகு அந்த மெட்டர பத்தி பேச வேண்டிய தமிழ்நாடு அரசு மவுனியா இருக்கே... அதப்பத்தியும், "தல" கிட்ட கொஞ்சம் கேப்பீகளா?? தைரியம் இருக்கா?

ஆனா, ரஜினிய மட்டும் நூறு கேள்விகள் கேப்பீக... ஏன்னா, அவர்தான் எதுவுமே சொல்லாம மவுனமா இருப்பாரு... இன்னாய்யா உங்க நியாயம்??

ஹொகேனகல் பற்றிய உங்கள் மெயில் சென்றடைய வேண்டியது "தல"யிடம்... தைரியம் இருந்தா அனுப்புங்க‌.... இந்த மாதிரி அனானியாவாவது....

thillai said...

Hi Gopi,

We never had any hard feeling against Rajni sir,we were hurt because evryone here were supporting Rajni sir for his stand on hokenakal but the sorry has hurted us a lot.Also there is nothing asking sorry,Rajni had enuf time to ask sorry,he once again proved selfish by asking sorry at the time of kuselan release

M Arunachalam said...

அய்யா அநாமதேயமே,

ரஜினிக்கு (உங்கள் பார்வையில்) நடிக்கவும் தெரியாமல், (உங்கள் பார்வையில்) ஆடவும் தெரியாமல், (உங்கள் பார்வையில்) ஒழுங்கா டயலாக் பேசவும் தெரியாமலேயே உலகம் முழுக்க வயது வித்தியாசம் இல்லாமல் ரசிகர்கள் இருப்பதுதானே உங்களுடைய இவ்வளோ வயத்தெரிச்சலுக்கு காரணம்? இதெல்லாம் (உங்கள் பார்வையில்) இருந்தும்கூட, உங்கள் கோமாளி வேஷ தாரியினால் அவ்வளவு ரசிகர்களை கவர முடியவில்லையே என்பதுதானே உங்களின் ஏமாற்றத்துக்கு காரணம்?

அதனால்தானே, ரஜினியே "தான் வருத்தம்தான் கேட்டேன்" என்று தெளிவுபடுத்தியும்கூட இன்னும் "ஹொகேனக்கல் மன்னிப்பிலேயே" காலத்தை ஒட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்? எப்படியாவது, ஏதேனும் பொய் சொல்லியாவது, ரஜினியை பிரச்சினை எதிலாவது சிக்க வைத்து "ஒரு தமிழ் துரோகி" முத்திரை குத்தி விட்டு அவரை திரை உலகிலிருந்தே அனுப்பி விடலாம் என்று உம்மைபோல் பல குள்ள நரிகள் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு அலைந்து கொண்டு இருக்கின்றன. எந்த பனங்காட்டு நரியின் சலசலப்புக்கும் அஞ்சாமல், ரஜினி உங்களை போன்ற அனைவருக்கும் மக்கள் மூலமே "ஆப்பு" வைக்கும் நாள் வெகு விரைவில் வரும்.

அந்த "ஹொகேனக்கல்" பிரச்சினையை கிளப்பிய மனிதருடன் தான் கருணாநிதி "சிலை திறப்பு" விழாக்களை இப்போது நடத்திக்கொண்டு இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? தெரிந்தும் அவரிடம் "ஏனய்யா ஹொகேனக்கல் பிரச்சினைக்கு தீர்வு காணாமல், சிலை திறந்து கொண்டு இருக்கிறீர்கள்" என்று கேள்வி கேட்கும் திராணி உங்களுக்கு ஏன் இல்லை? அது சரி, பொய் எதற்கும் பதில் சொல்லாமல் வாய் மூடி மௌனமாய் கேட்டுக்கொள்ளும் ரஜினி மற்றும் அவர் ரசிகர்களிடமே பயந்துகொண்டு "அநாமதேயமாய்" கேள்வி கேட்கும் உம்மிடம் போய், கருணாநிதியிடம் கேள்வி கேள் என்று சொன்னால், "துண்ட காணோம், துணிய காணோம்" என்று ஓடி விட போகிறீர்.

Balu said...

/***jaisankar jaganathan said...
//ரஜினிக்கு நடிப்பும் வராது, ஆடவும் தெரியாது, ஒழுங்கா டயலாக் பேசவும் தெரியாது...
//

எல்லாம் சரி சார். இதை கண்டுபிடிக்க ஏன் 30 வருஷம்
***/

இந்த கேள்வி எனக்கல்ல?? ஆரம்பத்தில் நன்றாக நடித்தார், இப்போது சரியில்லை என்று கூறுகிறவர்களை பார்த்து கேட்க வேண்டியது இது.


/***/// ரஜினிக்கு நடிப்பும் வராது, ஆடவும் தெரியாது, ஒழுங்கா டயலாக் பேசவும் தெரியாது... ////

கோபி மட்டும் அல்ல, மிக அதிகம் ரசிகர், ரசிகைகளால் விரும்பி பார்க்கப்படும் நடிகனுக்கு எதுவுமே தெரியாது என்று நீங்கள் சொன்னால்........ ***/எல்லோரும் விரும்பி பார்ப்பதால் அவர் நல்ல நடிகராக ஆகி விட முடியாது, இது தெரியாத உங்களுக்கு? எல்லோரும் விசம் குடித்தால் அதை உடனே அமிர்தம் என்று சொல்லி விட முடியாது. ஒருவரை எல்லோருக்கும் பிடித்தால் அது அவருக்கு கிடைத்த பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும் கண்டிப்பாக திறமை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.... நமிதாவையும் தான் மிக பலருக்கு பிடிக்கிறது, அதற்கு என்ன சொல்ல??? அப்படித்தான் ரஜினியும்......

/***வெரிகுட்... நல்லா பேசறீங்க சார்... மொதல்ல நீங்க தைரியமா வெளில வந்து உங்க கருத்துக்களை சொல்லுங்க... நீங்க சொல்ற‌ எதுவும் இல்லாமல் இருக்கும் போதே ரஜினியிடம், கமலின் பருப்பு வேகவில்லையே அய்யா... அதற்கு என்ன செய்வது...**/

ரஜினியை பற்றி யாராவது சொன்னால் அது கமல் ரசிகனாகத்தான் இருக்கும், என்ன ஒரு குருட்டுத்தனமான கணிப்பு!!, நீங்கள் கமலை பற்றி சொன்னால் எனக்கு ஒன்றும் கிடையாது, உங்களை விட அதிகம் கமலின் குறைகளை ( குறைகளாக எனக்கு தென் படுவதை) பட்டியல் இடுவேன் யாராக இருந்தாலும் சரி, மீண்டும் சொல்வேன் ரஜினி நடித்த படம் வெற்றி அடைவதால் ரஜினி ஒரு சிறந்த நடிகர் ஆகி விட முடியாது, சிறந்த டான்சர் ஆகி விட முடியாது, ஒரு நல்ல கலைஞன் ஆகி விட முடியாது, நல்ல பாடகன் ஆகி விட முடியாது, நல்ல பேச்சாளனாகவும் ஆகி விட முடியாது....


நான் இமயமலையில் பாபாவுடன் ஏசு நாதரையும் பார்த்தேன் என்று சொல்லுவார் போய் இரண்டு கண்களையும் காதுகளையும் மூடி கொண்டு முதுகுக்கு பின் கை வைத்து விசில் அடியுங்கள்!!!! யாராலும் உங்களை திருத்த முடியாது! உளருவதற்கு பன்ச் என்று பெயர் வையுங்கள், கிறுக்குதனமான செயல்களை செய்வதற்கு ஸ்டைல் என்று பெயர் வைத்து கொள்ளுங்கள்....

/***இப்போ, கர்நாடக மக்கள் கிட்ட மன்னிப்பு கேட்டது... அந்த மேட்டரோட உண்மையான விவரம் எல்லாருக்கும் தெரியும்.... கேட்டு தெரிஞ்சுக்கோங்க...***/

உத்தம புருசன் என்று பெயர் வைத்து கொள்ளுங்கள், தமிழ் மக்களின் நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லாத தமிழ் மக்களின் பணத்தை எதிர்பார்க்கும் ஒரு ஆள் தான் ரஜினிகாந்த், அவரை ஏன் பிடித்திருக்கிறது என்பதற்கு காரணம் தேவை இல்லை என்று வைத்து கொள்ளலாம், ஆனால் என்ன தகுதி உள்ளது அவருக்கு, அவரை ஆள சொல்ல? முட்டாள் தனமாக மு.க உடன் ஒப்பீடாதீர்கள்.

Balu said...

/***அதனால்தானே, ரஜினியே "தான் வருத்தம்தான் கேட்டேன்" என்று தெளிவுபடுத்தியும்கூட இன்னும் "ஹொகேனக்கல் மன்னிப்பிலேயே" காலத்தை ஒட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்? எப்படியாவது, ஏதேனும் பொய் சொல்லியாவது, ரஜினியை பிரச்சினை எதிலாவது சிக்க வைத்து "ஒரு தமிழ் துரோகி" முத்திரை குத்தி விட்டு அவரை திரை உலகிலிருந்தே அனுப்பி விடலாம் என்று உம்மைபோல் பல குள்ள நரிகள் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு அலைந்து கொண்டு இருக்கின்றன. எந்த பனங்காட்டு நரியின் சலசலப்புக்கும் அஞ்சாமல், ரஜினி உங்களை போன்ற அனைவருக்கும் மக்கள் மூலமே "ஆப்பு" வைக்கும் நாள் வெகு விரைவில் வரும்.

அந்த "ஹொகேனக்கல்" பிரச்சினையை கிளப்பிய மனிதருடன் தான் கருணாநிதி "சிலை திறப்பு" விழாக்களை இப்போது நடத்திக்கொண்டு இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? தெரிந்தும் அவரிடம் "ஏனய்யா ஹொகேனக்கல் பிரச்சினைக்கு தீர்வு காணாமல், சிலை திறந்து கொண்டு இருக்கிறீர்கள்" என்று கேள்வி கேட்கும் திராணி உங்களுக்கு ஏன் இல்லை? **/

உங்கள் பலம் பொருந்திய, செல்வாக்கு உள்ள, ஹீரோயீஸம் செய்யும் (நடிகையிடம் மட்டும்) திருவாளர் ரஜினி எங்கே போனார்? கேட்க வேண்டியது தானே மு.க விடம், கேட்டால் சினிமாவில் நடிக்க முடியாது, பணம் வராது...த்தூ.. இது தான் தமிழ் மக்களுக்கு உயிர் தரும் விதமா?? அவர் அவரது தலை மயிரைக் கூட தர மாட்டார்.... இன்னொரு விசயம் இருந்தால் தானே தருவதற்கு?

there is no doubt in that to call him as "ஒரு தமிழ் துரோகி"

Baskar said...

வர வர படிச்ச (So called) முட்டாளுங்க அதிகமாயிகிட்டே வருகிறார்கள். இவை கவலையையும் சிரிப்பையும் தான் தருகின்றன.

jaisankar jaganathan said...

// ரஜினி உங்களை போன்ற அனைவருக்கும் மக்கள் மூலமே "ஆப்பு" வைக்கும் நாள் வெகு விரைவில் வரும்.
//

அண்ணா அந்த நாள் என்னைக்கு.

வர வேண்டிய நேரத்தில் உன் ஆள் வரவில்லையே.

ராஜ்யமா இல்லை இமயமா (இரண்டும் இல்லை பெங்களூரு பார்)

R.Gopi said...

கமல் கோஷ்டியோட வயித்தெரிச்சல் ரொம்ப அதிகமாகி விட்டது.... உண்மையிலேயே நீங்கள் கோப்படுவது என்றால், தாணு மீது கோபப்படுங்கள்..

ஏனென்றால் அவர்தான் "கந்தசாமி"க்காக எல்லா திரையரங்குகளையும் புக்கிங் செய்து வைத்துள்ளார்....

"மண்ணை போல் இருவன்" என்ற பட ரிலீசுக்கு தியேட்டர் கிடைக்காத கோபத்தில் என் மீது பாய்வது என்ன நியாயம்....

R.Gopi said...

//Balu said...

எல்லோரும் விரும்பி பார்ப்பதால் அவர் நல்ல நடிகராக ஆகி விட முடியாது//

அவ‌ர் ஒரு நல்ல என்ட‌ர்டெய்ன‌ர் என்ற‌ முறையில் தான் ர‌சிக‌ர்க‌ள் பார்க்கிறார்க‌ள்... கொலைஞானியை போல் எல்லா ப‌ட‌த்திலும், முத‌லில் மேக்க‌ப்பிற்காக‌ "மைதா மாவை" ப‌துக்கி வைத்துவிட்டு வ‌ருவ‌தில்லை... மேக்கப் போட்டு யாரை எந்த‌ ப‌ட‌த்தில் அசிங்க‌மாக‌ காட்ட‌லாம் என்று காத்திருப்ப‌தில்லை.


//நமிதாவையும் தான் மிக பலருக்கு பிடிக்கிறது, அதற்கு என்ன சொல்ல??? //

ஏன் நமீதாவை பிடித்தால் என்ன? அவரும் ஒரு நடிகை தானே.... அவரை பலருக்கு பிடித்தால் பிடித்து விட்டு போகிறது... உங்களுக்கு என்ன சார்?

உங்களுக்கு கமலை பிடிக்கிறது.... கொண்டாடுங்கள்... ஆனால், தயாரிப்பாளர் தாணு எல்லா திரையரங்குகளையும் கந்தசாமிக்காக புக் செய்து விட்டார்... கமல் எவ்ளோ பெரிய நடிகர், அவருக்கு ஒரு 2/3 தியேட்டராவது கிடைத்தால் அவர் படத்தையும் ரிலீஸ் செய்வாரே என்று இங்கு புலம்ப தேவையில்லை...அந்த கோவத்தை இங்கிருப்பவர்கள் மேல் காட்ட வேண்டாம்...

ரஜினி செய்யும் ரசிகர்கள் என்கிற முறையில் அவர்களுக்கு பிடிக்கிறது, அவர்கள் பணத்தை கொடுத்து பார்க்கிறார்கள்... உங்களுக்கு எங்கே சார் வலிக்கிறது... உங்களின் சர்டிஃபிகேட் கொடுத்து ரஜினிக்கு என்ன ஆகப்போகிறது... அவர் இது போன்ற பல ஜுஜூபிக்களை தாண்டியவர்தானே சார்....

//தமிழ் மக்களின் நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லாத தமிழ் மக்களின் பணத்தை எதிர்பார்க்கும் ஒரு ஆள் தான் ரஜினிகாந்த்//

பணம் வாங்காம யார் என்ன வேலை எந்த‌ ஊரில் செய்வார்கள்... நீங்கள் வேலை செய்வது என்ன தர்மத்திற்கா? இல்லை ஓசியிலா? கமல் ஒன்றும் தர்மத்திற்கு நடிப்பதில்லை, நடித்தாலும் "மகராசன்" போல் படம்தான் நடிப்பார்.... ரஜினி மட்டும் அல்ல, எல்லோரும் அவர்களின் ஊதியத்தை வாங்கிக்கொண்டுதான் அவர்களின் வேலையை செய்கிறார்கள்...ஓசியில் இந்த உலகத்தில் யாருக்கும் எதுவும் கிடைக்காது, காற்றை தவிர....

//ஆனால் என்ன தகுதி உள்ளது அவருக்கு, அவரை ஆள சொல்ல? //

இப்போது ஆள்பவர்களுக்கு என்ன தகுதிகள் உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதைவிட அதிகமாகவே இருக்கிறது.... இப்போது ஆள்பவர்கள், தேர்தல் நேரத்தில், ஏதேதோ சொல்லி ஓட்டு கேட்கிறார்கள்... அதை எல்லாம், நிறைவேற்றுகிறார்களா?? ஒரு நாளாவது நீங்களோ, உங்களை சார்ந்தவர்களோ, இப்போது ரஜினியை பற்றி கேட்பது போன்றதொரு கேள்வியை, ஆட்சியில் இருப்பவர்களை பார்த்து கேட்டு இருப்பீர்களா?

//
வர வேண்டிய நேரத்தில் உன் ஆள் வரவில்லையே.//

அவர் வருவதும், வராததும் அவர் இஷ்டம்... இன்று இருப்பவர்களில் நல்லவரை தேர்ந்தெடுக்க முடியுமா உங்களால், முடியாது, ஏனென்றால், இருப்பவர் ஒருவர் கூட நல்லவர் இல்லை என்று நம் அனைவருக்கும் தெரியும்.... யாரும், யார் வருவதையும், எப்போதும் தடுக்க முடியாது.... அதற்கு வயது ஒரு தடையே அல்ல... இன்றும் கூட அவரின் மக்கள் செல்வாக்கு, மற்ற அனைவரையும் விட அதிகம்தான்....

Balu said...

/**R.Gopi said...
//Balu said...

எல்லோரும் விரும்பி பார்ப்பதால் அவர் நல்ல நடிகராக ஆகி விட முடியாது//

அவ‌ர் ஒரு நல்ல என்ட‌ர்டெய்ன‌ர் என்ற‌ முறையில் தான் ர‌சிக‌ர்க‌ள் பார்க்கிறார்க‌ள்... **/

So you confirmed that he is only entrainer not a good actor but in real life he is a good actor, thats what i precisiouly argue with you.
Thanks for your acceptance!!/**அவர் வருவதும், வராததும் அவர் இஷ்டம்... இன்று இருப்பவர்களில் நல்லவரை தேர்ந்தெடுக்க முடியுமா உங்களால், முடியாது, ஏனென்றால், இருப்பவர் ஒருவர் கூட நல்லவர் இல்லை என்று நம் அனைவருக்கும் தெரியும்.... **/

ரஜினி வருவார் விடியல் கிடைக்கும் என்று வாயை திறந்து காத்திருக்காதீர்கள், வாயில் ஏதாவது பறவையின் எச்சம் வேண்டுமானால் கிடைக்கும், சத்தியமாக உறுப்படியாக எதுவும் நடக்காது... அவர் தற்போது அரசியல் வியாதிகள் நடத்தும் கூத்துகளுக்கு மிக பொருத்தமானவர், ஏதாவது உளறி விட்டு பாபா சொன்னது என்பார், பிறகு மண்டியிட்டு மன்னிப்பு கேட்பார், அதில் அவர் மு.க வையே மிஞ்சி விட்டார்....சும்மா நீங்களும் அவர் போல உளறிக்கொண்டிருக்கிறீர்கள்.

Anonymous said...

/***பணம் வாங்காம யார் என்ன வேலை எந்த‌ ஊரில் செய்வார்கள்... நீங்கள் வேலை செய்வது என்ன தர்மத்திற்கா? இல்லை ஓசியிலா? **/

என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு தந்தது நீ, என்று டயலாக் விட்டு பின் அத்தனை பணத்தையும் கர்நாடகாவில் முதலீடு செய்வார், உடல் தமிழுக்கு பணம் கண்னடத்துக்கு என்று சொல்வார், உண்மையில் அவர் மு.க வை விட பெரிய தில்லாலாங்கடி..... வாழ்க ரஜினி புராணம்...

M Arunachalam said...

//நமிதாவையும் தான் மிக பலருக்கு பிடிக்கிறது//

ஐயோ பாவம், பாபாவ தேடி ரஜினி எதுக்கு இமயமலைக்கு போகணும்? இங்கயே ஒரு பாலு சாமியார் இருக்காரே.

//ரஜினியை பற்றி யாராவது சொன்னால் அது கமல் ரசிகனாகத்தான் இருக்கும், என்ன ஒரு குருட்டுத்தனமான கணிப்பு!!//

ஒ! அப்படீன்னா கமல் ரசிகரையும் விடகேவலமா நினைக்கறவங்க கூட இருக்கீங்களா? இப்போ எல்லாமே விளங்குது.

//ரஜினி நடித்த படம் வெற்றி அடைவதால் ரஜினி ஒரு சிறந்த நடிகர் ஆகி விட முடியாது, சிறந்த டான்சர் ஆகி விட முடியாது, ஒரு நல்ல கலைஞன் ஆகி விட முடியாது, நல்ல பாடகன் ஆகி விட முடியாது, நல்ல பேச்சாளனாகவும் ஆகி விட முடியாது....//

ஆனால், ஆட்சியிலே எவ்வளோ கொள்ளை அடிச்சாலும் கருணாநிதி மட்டும் சிறந்த தமிழர், சிறந்த அரசியல் "தலைவர்" ஆகிவிடலாம் ஆக்கும். அவர் கூட யாரையும் compare செய்ய கூடாதாக்கும். இதுதானா "தமிழர் நியாயம்" என்பது. பேஷ் பேஷ். ரொம்ப நன்னாருக்கு.

//நான் இமயமலையில் பாபாவுடன் ஏசு நாதரையும் பார்த்தேன் என்று சொல்லுவார் போய் இரண்டு கண்களையும் காதுகளையும் மூடி கொண்டு முதுகுக்கு பின் கை வைத்து விசில் அடியுங்கள்!//

ஆமாம் சில பேர் கனவுல "பெரியார்" "அண்ணா" "தம்பி" "சித்தப்பா பையன்" எல்லாம் வந்ததா சொல்லும்போது அத நம்புற புத்திசாலிங்களுக்கு, இது முட்டாள்தனமாத்தான் தெரியும்.

//உளருவதற்கு பன்ச் என்று பெயர் வையுங்கள், கிறுக்குதனமான செயல்களை செய்வதற்கு ஸ்டைல் என்று பெயர் வைத்து கொள்ளுங்கள்....//

பேசி பேசியே மக்களை ஏமாத்தரவனை, நீங்க "தமிழர் தலைவன்" னு சொல்லலியா? அது மாறிதான் இதுவும்னு வெச்சுக்குங்களேன்.

//ஆனால் என்ன தகுதி உள்ளது அவருக்கு, அவரை ஆள சொல்ல? முட்டாள் தனமாக மு.க உடன் ஒப்பீடாதீர்கள்//

அதானே? நல்லா கேட்டீங்க பாலு.

ரஜினி என்ன தெருவுக்கு ஒரு மனைவியோ இல்ல துணைவியோ "வைத்து" கொண்டு இருக்காரா, அவரை தமிழன் என்று சொல்ல அல்லது அவரிடம் ஆட்ச்யை கொடுக்க?

ரஜினி என்ன எதுகை, மோனையில் பேசி, பேசியே ஏமாத்தினாரா அவரிடம் மதிமயங்கி ஆட்சியை கொடுக்க?

ரஜினி என்ன அவரை தனிப்பட்ட காரணங்களினால் எதிர்ப்பவர்களிடம் தன் ரசிகர்களை ஏவி விட்டு தான் மட்டும் அதில் அரசியல் குளிர் காய்ந்தாரா, அவரிடம் போய் ஆட்சியை கொடுக்க?

ரஜினி என்ன "குடும்ப நலத்துக்காக" இலங்கை தமிழர் பிரச்னையை "ஒரே அமுக்கு அமுக்கினாரா", அவரிடம் போய் ஏமாந்து ஆட்சியை தூக்கி கொடுக்க?

இதனால எல்லாருக்கும் தெரிவிசிகறது என்னான்னா, நம்ம பாலு அண்ணாச்சி, புத்திசாலித்தனமா அமிர்தம் என்று நினைத்துக்கொண்டு விஷத்த குடிப்பாரு. ஏன்னா, அவருக்கு பார்வை அப்படி.

//கேட்க வேண்டியது தானே மு.க விடம்,//

என்னான்னு? அய்யா, தமிழ் மக்களை "தமிழ், தமிழ்" நு சொல்லியே ஏமாத்தற வித்தயெ எனக்கும் சொல்லி குடுங்களேன்னா?

இல்ல, "இருப்பது ஒரு உயிர், போவது ஒரு முறை" னு ஆயிரம் தடவை சொல்லிக்கொண்டே என்பது வயதுக்கும் மேல் மக்களை ஏமாத்தறது எப்படீன்னா?

//உங்கள் பலம் பொருந்திய, செல்வாக்கு உள்ள, ஹீரோயீஸம் செய்யும் (நடிகையிடம் மட்டும்) திருவாளர் ரஜினி எங்கே போனார்? //

"ஐயோ கொல்றாங்களே!" என்று கதறிய "வீரர்" இப்போ எங்க இருக்காரோ, அங்கதான் திருவாளர் ரஜினியும் சென்று சேருவார். உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்.

//இன்னொரு விசயம் இருந்தால் தானே தருவதற்கு? //

அப்போ "தலையில மயிர் இல்லாதது "தமிழர் தலைவர்" ஆவதற்கு ஒரு தகுதி இல்லையா? ஐயோ இயற்கையே, என் செய்வேன்?

//அண்ணா அந்த நாள் என்னைக்கு//

அய்யா ஜெய் சங்கரு, அந்த நாள் வரும்போது, நீங்களும் அனாமதேயமாத்தான் கமெண்டு போடுவீங்க.

//இரண்டும் இல்லை பெங்களூரு பார்//

அப்போ, டாஸ்மாக் தண்டமா?

//வர வர படிச்ச (So called) முட்டாளுங்க அதிகமாயிகிட்டே வருகிறார்கள்.//

வந்துட்டாருய்யா படிக்காத மேதை. ரொம்பத்தான் கவலை - நாட்ட பத்தி. அது ஒட்டு போடச்ச இருந்திருந்தா நாடு எப்பவோ முன்னேறி இருக்குமே.

Guru said...

Aarambichitaangayya... Rajnikkum Kamalukkum irukkum natpuravu avangaloda rasigargalukku yen irupadhillayo...

Balu said...

/***//நமிதாவையும் தான் மிக பலருக்கு பிடிக்கிறது//

ஐயோ பாவம், பாபாவ தேடி ரஜினி எதுக்கு இமயமலைக்கு போகணும்? இங்கயே ஒரு பாலு சாமியார் இருக்காரே.**/

இதுக்கு மேல குடிச்சா நீங்க செத்துடுவீங்க என்று சொன்னவுடன் ஏதோ பெரிய தெய்வ பக்தி உள்ளவர் போல இமயமலை போகிறேன் என்று சொல்லி விட்டு சும்மா ஓ பி அடிப்பவர் அவர், பாபாஜி சொல்படி நடக்கிறேன் என்று சொல்லி விட்டு ஸ்ரேயா, நயன்தாரா போன்றவர்களின் நெஞ்சில் முட்டுவார், போலி சாமியாருக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறு ஏதும் இல்லை.... நீங்கள் ரஜினி மயக்கத்தில் இருக்கிறீர்கள் அவ்வளவு தான் எப்படி மு.க விசுவாசிகள் உள்ளார்களோ அது போல..... ஆனால் நீங்க எதற்கு எடுத்தாலும் மு.கவுடனே கம்பேர் செய்கிறீர்கள், அப்படி செய்வதுதான் சரி, அவரிடம் இருக்கும் எல்லா குணங்களும் ரஜினியிடம் உள்ளது, எல்லாம் சரி அருணாச்சலம் உங்க பெயரில் படம் எடுத்ததற்கான நன்றிக்கடன் உங்களை இவ்வளவு தூரம் சொம்பு தூக்க வைக்கிரததை பார்த்தால் தமிழன் நன்றியுள்லவன் என்பது புரிகிறது, என்ன செய்ய ரஜினிக்கு தான் அது (நன்றிக்கடன்) இல்லையே!!!

ஆனாலும் பணத்திற்காக கர்நாடகத்திடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டாரே ... அதுக்காகவது நீங்கள் நன்றிக்கடன் தீர்க்க வேண்டும்......

M Arunachalam said...

//என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு தந்தது நீ, என்று டயலாக் விட்டு பின் அத்தனை பணத்தையும் கர்நாடகாவில் முதலீடு செய்வார், உடல் தமிழுக்கு பணம் கண்னடத்துக்கு என்று சொல்வார், உண்மையில் அவர் மு.க வை விட பெரிய தில்லாலாங்கடி..... வாழ்க ரஜினி புராணம்//


ஏம்பா அனாமதேயம்,

ரஜினி கர்நாடகத்துல முதலீடு செஞ்சாருன்னு ரொம்ப தெரிஞ்சமாறி சொல்றியே, நீ என்ன அவரோட கணக்கரா, இல்ல, ஆடிட்டரா, இல்ல டிரைவரா? இல்ல அவரோட investment advisor ஆ? இல்ல வருமான வரி துறைல அவருடைய கோப்பை பாக்கும் அதிகாரியா? ரொம்ப தெரிஞ்சமாறி சொல்றியே, அப்படியே எங்க, எவ்வளோ மதிப்புல அவர் கர்நாடகத்துல முதலீடு செஞ்சிருக்காருன்னு சொல்லு பாப்போம், இப்படி வெறும் உதார் உடாம புள்ளி விவரத்தோட பேசுப்பா. ச்சும்மா கும்பலோட கோவிந்தா போடாதே.

Ok. அப்படியே ஒரு பேச்சுக்கே கர்நாடகத்துல அவர் முதலீடு செஞ்சாருன்னு வைத்துக்கொண்டாலும், அதுல என்னையா தப்பு? கர்நாடகமும் இந்தியால தானே இருக்கு? ஏன் கருணாநிதி இப்போதான் தன் பெண் வீட்டுக்கு பெங்களூர் போய் அவங்க farm house லே ரெண்டு வாரம் ஒய்வு எடுத்துகிட்டு வந்தாரே, அப்போ எங்கே போய் ஒளிஞ்சு கிட்டு இருந்தே? கேக்க வேண்டியதுதானே அந்த "தமிழர் தலைவர்" கிட்ட போயி, "ஏன்யா, உங்க பொண்ண கர்நாடகத்துல போயி முதலீடு செய்ய வெச்சிருக்கீங்க? நீங்க தமிழர் தலைவரே இல்ல" அப்படீன்னு? கேட்டுருவே நீ? கேட்டிருந்தா இந்நேரம், எம லோக ப்லாக் எதிலாவதுதான் கமெண்ட் எழுதி இருப்பே. நீயாவது கேக்கறதாவது? முன்னமே சொன்ன மாதிரி, எல்லாம் திருப்பி பதிலோ அடியோ குடுக்க மாட்டான்னு தெரிஞ்சவங்க கிட்ட தானே உங்கள மாதிரி ஆளுங்க ச்சும்மா உதார் உட்டு பாப்பீங்க.

ஏம்பா ஆம்பளைகளா, அவனவன் இந்தியால சம்பாதிச்சிட்டு ஸ்விஸ்ஸ் பாங்க்லே தான் கொள்ளை அடிச்ச பணத்த போட்டு அமுக்கி இருக்கான், அத கேக்க எவனுக்கும் நாதியோ, திராணியோ இல்ல, வந்துட்டானுங்க, ரஜினி கர்நாடகத்துல போயி முதலீடு பண்ணிட்டாருன்னு சொல்லிக்கிட்டு, போக்கத்தவனுங்க.

M Arunachalam said...

//ரஜினி வருவார் விடியல் கிடைக்கும் என்று வாயை திறந்து காத்திருக்காதீர்கள், வாயில் ஏதாவது பறவையின் எச்சம் வேண்டுமானால் கிடைக்கும்,//

பறவையின் எச்சம் எவ்வளோவோ பரவாயில்லை, உங்க மு. க. குடுக்கும் "வாக்காளர் லஞ்சம்" என்ற எச்சத்துக்கு.

வீரப்பனயும், பூலான்தேவியையும் ஆதரித்து ஒட்டு போட்டவர்களுக்கு மற்றும் அவர்களுக்காக சப்பை கட்டும், வக்காலத்தும் வாங்குபவர்களுக்கு ரஜினியை போன்ற தன்னலமற்ற மனிதர்களை பற்றி பேச தார்மீக தகுதியோ, அருகதையோ கிடையாது.

Anonymous said...

/***//வர வர படிச்ச (So called) முட்டாளுங்க அதிகமாயிகிட்டே வருகிறார்கள்.//

வந்துட்டாருய்யா படிக்காத மேதை. ரொம்பத்தான் கவலை - நாட்ட பத்தி. அது ஒட்டு போடச்ச இருந்திருந்தா நாடு எப்பவோ முன்னேறி இருக்குமே.**/


நான் யாருக்கு ஒட்டு போட்டேன் என்பதை நேரில் பார்த்தவர் போல அளக்கக்கூடாது, 1500 ரூபாய் செலவு செய்து 49-ஓ விற்கு ஒட்டு போட்டவன் நான், நான் நாட்டின் மேல் கவலை உள்ளதால் தான் சொல்கிறேன். சும்மா ரஜினி வெறி பிடித்து அலையாதீர்கள்!! ஆம் எனக்கு ரஜினியை பிடிக்கும் ஆனால் அவரிடம் இது தான் குறை சொல்வதை விட்டு விட்டு, சும்மா அவர் செய்வதை எல்லாம் முட்டாள் தனமாக சரி என்று சொல்லாதீர்கள், உங்களை போல இருக்கும் படித்த முட்டாள்காலால் தான் இன்று மு.க, அம்மா, அய்யா, திருமா, கருப்பு M.G.R... என பல வியாதிகள் அரசியல் நடத்துகிறார்கள்... தயவு செய்து அவரை அந்த வரிசையில் சேர்த்து விடாதீர்கள், சுமை நாட்டுக்கு இன்னும் அதிகமாகும்......
நான் என் கடமையை செய்கிறேன்... கண்ணை மூடிக்கொண்டு சில பேருக்கு நான் எக்காலும் நான் உங்களை போல முட்டாள்தனமாக சொம்பு தூக்க மாட்டேன்...

Anonymous said...

/***//இன்னொரு விசயம் இருந்தால் தானே தருவதற்கு? //

அப்போ "தலையில மயிர் இல்லாதது "தமிழர் தலைவர்" ஆவதற்கு ஒரு தகுதி இல்லையா? ஐயோ இயற்கையே, என் செய்வேன்? **/

பதில் சொல்ல தெரியவில்லை அதனால் காமெடி செய்வதாக நினைப்பு வேறு.... அவர் தமிழகத்திற்காக தன் தலை மயிரை கூட தர மாட்டார் என்பது கொஞ்சம் நாகரிகமான வார்த்தைகள் அல்ல என்றாலும் அவை உண்மையே....
நல்லா சமாளிக்கிறீர்கள் அருணாச்சலம்!!!!


/**//இரண்டும் இல்லை பெங்களூரு பார்//

அப்போ, டாஸ்மாக் தண்டமா?**/

Is it Rajini? or are you meaning sombody else?


/** R.Gopi said...
//Balu said...

எல்லோரும் விரும்பி பார்ப்பதால் அவர் நல்ல நடிகராக ஆகி விட முடியாது//

அவ‌ர் ஒரு நல்ல என்ட‌ர்டெய்ன‌ர் என்ற‌ முறையில் தான் ர‌சிக‌ர்க‌ள் பார்க்கிறார்க‌ள்... **/

கோபி என்ன புஷ்வானம் போல டபக்னு ஒத்துகிட்டீங்க....

Baski said...

ரஜினி ரசிகன்: ரஜினியை பத்தி யாராவது தப்பா பேசினா நான் கொலைகாரனகிடுவேன்.அவர் அரசியலுக்கு வருவார். அவர் வழி தனி வழி.

கமல் ரசிகன்: கமல் தான் உலக நாயகன். கோலிவுட் Tom Hanks. அவருக்கு ஆஸ்கார் அவார்ட் கிடைக்காது பாகிஸ்தான் சதி. கமலை பற்றி யாரவாது பேசினா என்னோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டிருக்கும்.

விஜய் ரசிகன்: விஜய் தான் இப்ப தமிழ் குல தெய்வம். வேட்டைக்காரன் படம் பத்தி எல்லோரும் புகழ்ந்து பேசணும். எதவாது அசிங்கமா பேசினால் கை/கால் உடைக்க படும்.

கமல்-ரஜினி-விஜய்: இந்த மாறி கேணப்பசங்க இருக்கிறவரைக்கும் நமக்கு பிரச்னை இல்லை.

சிம்பு: நானும் என்னேன்னலாமோ ட்ரை பண்ணுறேன். கமல் மாறி. ரஜினி மாறி. இந்த மாறி ஒரு பக்தர் கூட்டம் நம்மக்கு ஏன் கிடைக்க மாட்டிக்குது. ஹ்ம்ம்...

IV: I know such stupid topics will attract more comments from audience. That's my secret of success. ;-)

It is not my stuff.. so dont shout at me... எனக்கு இந்த விஷயம் Chat-ல் கிடைத்தது..... ;-)

Actual Anony said...

No need to Talk about the Actors' personal, political view points, their Allegiance or even where they invest. It's their talent in the Field which should be discussed.

RajniS of kollywood are like Drug/alcohol peddlers or Pimps, who would NATURALLY invite and attract a majority of people with so much fanfare for long selling their 4th class cheap products.

Only Kicking them out will attract the people to the nearby Fresh-fruit juice shops of KamalS of the Industry.

Actual Anony said...

Entertainer??? my foot. Even a roadside Pot seller and pimps can entertain you.

The problem is about bringing home the message on WHAT IS REAL ENTERTAINEMENT and which is not.

Actual Anony said...

Entertainer??? my foot. Even a roadside Pot seller and pimps can entertain you.

The problem is about bringing home the message on WHAT IS REAL ENTERTAINEMENT and which is not.

jaisankar jaganathan said...

ரஜினி என்ன பண்ணீனாருன்னு கேட்டா கருனானிதி பத்தி பேசறீங்களே அருணாசலம்.

ரஜினி என்ன பண்ணீனார். பேச முடுயுமா?

அவர் அரசியலுக்கு வரேனு சொன்னது ஏமாத்தல் இல்லையா.

jaisankar jaganathan said...

//ரஜினி ரசிகன்: ரஜினியை பத்தி யாராவது தப்பா பேசினா நான் கொலைகாரனகிடுவேன்.அவர் அரசியலுக்கு வருவார். அவர் வழி தனி வழி.
//

அது என்ன வழின்னு சொன்னா சந்தோஷம் தலைவா. சுத்தமா புரியலை

Anonymous said...

/***jaisankar jaganathan said...
//ரஜினி ரசிகன்: ரஜினியை பத்தி யாராவது தப்பா பேசினா நான் கொலைகாரனகிடுவேன்.அவர் அரசியலுக்கு வருவார். அவர் வழி தனி வழி.
//

அது என்ன வழின்னு சொன்னா சந்தோஷம் தலைவா. சுத்தமா புரியலை**/


அது ஏதோ புது வெளிநாட்டு சரக்கால வரும் வயிற்று வலி....

M Arunachalam said...

//அவர் அரசியலுக்கு வரேனு சொன்னது ஏமாத்தல் இல்லையா//

ரஜினி எப்ப அரசியலுக்கு வரேன்னு சொன்னார்? அவர் சொல்லாதத நீங்களாவே சொன்ன மாதிரி திரிச்சி எழுதினீங்கன்னா அதுக்கெல்லாம் யாரும் பதில் சொல்ல மாட்டாங்க.

//ரஜினி என்ன பண்ணீனார். பேச முடுயுமா?//

இப்ப அரசியல்ல இருக்கற யார்தான் மக்களுக்கு ஏதாவது உருப்படியா பண்ணியிருக்காங்க? அவங்கள முதல்ல தைரியமா கேள்வி கேட்டுட்டு அப்பறமா நீங்க அரசியலுக்கு வராத ரஜினிய கேள்வி கேக்கலாம்.

//ரஜினி என்ன பண்ணீனாருன்னு கேட்டா கருனானிதி பத்தி பேசறீங்களே அருணாசலம்//

//கேட்க வேண்டியது தானே மு.க விடம், // இப்பிடி எல்லாம் கமெண்ட் போட்டால் மு.க. வை பற்றியும் அவரிடம் கேள்வி கேட்க "பம்மி' கொண்டு இருக்கும் "வீரத்தையும்" பற்றி சொல்லத்தான் வேண்டி இருக்கும்.

//அது என்ன வழின்னு சொன்னா சந்தோஷம் தலைவா. சுத்தமா புரியலை//

அது அவர் வரும்போது தானாக தெரியும்.

Anonymous said...

/*** M Arunachalam said...
//ரஜினி வருவார் விடியல் கிடைக்கும் என்று வாயை திறந்து காத்திருக்காதீர்கள், வாயில் ஏதாவது பறவையின் எச்சம் வேண்டுமானால் கிடைக்கும்,//

பறவையின் எச்சம் எவ்வளோவோ பரவாயில்லை, உங்க மு. க. குடுக்கும் "வாக்காளர் லஞ்சம்" என்ற எச்சத்துக்கு.

வீரப்பனயும், பூலான்தேவியையும் ஆதரித்து ஒட்டு போட்டவர்களுக்கு மற்றும் அவர்களுக்காக சப்பை கட்டும், வக்காலத்தும் வாங்குபவர்களுக்கு ரஜினியை போன்ற தன்னலமற்ற மனிதர்களை பற்றி பேச தார்மீக தகுதியோ, அருகதையோ கிடையாது.**/


யோவ்.. எதாவது உளறாதீங்க... நான் ரஜினி சமூகத்துக்கு என்ன செஞ்சார்னு கேட்டா அதுக்கு பதில் சொல்ல வேண்டும், சும்மா ஓட்டை ரேடியோ மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்ல கூடாது.../***ரஜினியை போன்ற தன்னலமற்ற மனிதர்களை**/
ஒரு உதாரணம் கிடைக்குமா, என்ன பேசுகிறோம் என்று தெரிந்து கொள்ளுங்கள் முதலில், கால கொடுமைடா சாமி!!! சரியான நாய் வாலு.... ரஜினியை யாராவது ஏதாவது சொன்னால், கண்டிப்பாக அவன் ஒரு கமல் ரசிகன், அப்புறம் ரஜினி மு.க வைவிட நல்லவர் இதை தவிர வெது எதுவும் தெரியாதா உங்களுக்கு? யாருடைய படம் நன்றாக இருந்தாலும் பார்க்க வேண்டும் சும்மா ஒருவருக்காக எதுவும் பரிந்து பேச கூடாது, அது யாராக இருந்தாலும் சரி அவ்வளவுதான், சும்மா அவரை தலையில் வைத்து ஆடக்கூடாது, ஒருவரின் கலைத்திறனுக்கு தான் ரசிகனாக இருக்க வேண்டும், அந்த மனிதனுக்காக இருப்பதை என்ன வென்று சொல்ல??? பைத்தியம் தான் என்று சொல்ல வேண்டும்.

M Arunachalam said...

//Only Kicking them out will attract the people to the nearby Fresh-fruit juice shops of KamalS of the Industry.//

ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சொன்னாருய்யா இந்த கோமாளி ரசிகர். ரஜினி திரை உலகத்தை விட்டு ஒய்வு பெரும் வரை, அவர்கள் இதே ஒப்பாரியைதான் பாடவேண்டி இருக்கும் என்பது காலத்தின் மற்றும் மக்களின் கட்டளை.

// Even a roadside Pot seller and pimps can entertain you.//

Correct. But, your Komali can't even compete with those raodside Pot sellers & pimps. Cha cha cha. What a pit - Uloga Naayagame.

jaisankar jaganathan said...

//அது அவர் வரும்போது தானாக தெரியும்.
//

எந்த நூற்றாண்டுல

M Arunachalam said...

//சும்மா ஓட்டை ரேடியோ மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்ல கூடாது...//

நீங்களும் அதையேதான் செய்யறீங்க அனாமதேயம். முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க. அப்பறம் என்கிட்டே கேள்வி கேக்கலாம்.

ச்சும்மா ரஜினிய குறை சொல்லுவதையும், அவர் தமிழனா இல்லையான்னு ஆராய்ச்சி பண்றதையும் விட்டுட்டு முதல்ல "இந்தியனா" இருக்க பாருங்க.

//பைத்தியம் தான் என்று சொல்ல வேண்டும்//

பைத்தியங்களினால் சமூகத்துக்கு ஒன்றும் கெடுதல் இல்லை. ஆனால், பைத்தியம் என்று மற்றவர்களை கூறும் "மொழி வெறி பிடித்த" விலங்குகளால்தான் நாட்டுக்கும், சமூகத்துக்கும் கேடு.

//இதை தவிர வெது எதுவும் தெரியாதா உங்களுக்கு?//

தெரியுமே. நம் அரசியல் மற்றும் கலை உலகில் உள்ளவர்களின் "தனி வாழ்க்கையை" பார்க்க கூடாது என்னும் "பைத்தியக்கார" எண்ணம் கொண்டவர்களினால்தான் "தமிழ் நாடு" இன்று குட்டி சுவராக கிடக்கிறது.

நாம் அனைவருமே, அவரவர் குடும்பங்களில் ஒழுக்கத்திற்கு எவ்வளவோ முக்கியத்துவம் குடுக்கிறோம்? அதுவே, பொது வாழ்க்கை என்று வரும்போது, ஒரு அரசியல் தலைவரோ அல்லது புகழ்க் பெற்ற கலைஞரோ
எவ்வளவுதான் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் கேடு கெட்டவராக இருந்தாலும் அதை பற்றி நாம் கவலை படுவதில்லை. இதிலிருந்தே தெரிகிறதே, நாம் நம் நாட்டை பற்றி எவ்வளவு அக்கறை படுகிறோம் என்று.

Over and above this crime, மொழி வெறி வேறு நம்மை பிடித்து பேயாட்டம் ஆட வைக்கிறது. எந்த பிரச்னையாக இருந்தாலும் அதில் சம்பந்த பட்டவரின் மொழி, இனம், ஜாதி, என்று பார்த்துதானே நம்முடைய நிலைப்பாட்டையே வகுத்துகொள்கிறோம்?

எனவேதான், அப்பேற்பட்ட "தலைவர்களும்", "கொலைஞானிகளும்" நமது கலாச்சாரத்தையே கெடுத்து சமூகத்தையும் கெடுத்து விடுகிறார்கள். இத்தகைய கலாசார தீவிரவாதத்தின் விளைவுதான், இன்று நமக்கு எது நல்லது, எது கெட்டது, எவன் நல்லவன், எவன் கேட்டவன் என்று பகுத்தறியும் அறிவைக்கூட மழுங்க செய்து விட்டிருக்கிறது.

M Arunachalam said...

//எந்த நூற்றாண்டுல//

அது அவர் வரும்போது தானாக தெரியும்.

Anonymous said...

/*** M Arunachalam said... ***/

நன்றாக உளறுகிறீர்.... என்ன பேசுகிறோம் யாரைப் பற்றி பேசுகிறோம் என்று தெரியாமலே உளராதீங்க....

Anonymous said...

/***ச்சும்மா ரஜினிய குறை சொல்லுவதையும், அவர் தமிழனா இல்லையான்னு ஆராய்ச்சி பண்றதையும் விட்டுட்டு முதல்ல "இந்தியனா" இருக்க பாருங்க. **/

இன்னும் கொஞ்ச நேரம் கழித்து ஏன் அமெரிக்கன், இந்தியன் என்று பார்க்கிறீர்கள், நாம் எல்லோரும் ஒரே உலகத்தில் வசிக்கிரோம் என்று பிதற்றுவீர்கள் என்று நினைக்கிறேன்.... அந்தர் பல்டீ அடிக்கிறீர்கள் ரஜினி கர்நாடகத்திடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டரே அது போல!!!!

jaisankar jaganathan said...

//அது அவர் வரும்போது தானாக தெரியும்.
//

எப்போ தல. எல்லாம் 2040 லயா

அனியாயத்துக்கு அப்பாவியா இருக்கீங்களே

M Arunachalam said...

//அனியாயத்துக்கு அப்பாவியா இருக்கீங்களே//

உங்கள மாதிரி "சூரர்கள்" இருக்கற தைரியத்துலதான், என் போன்ற அப்பாவிகள் வாழ்க்கைய ஓட்டுறோம்.

jaisankar jaganathan said...

//உங்கள மாதிரி "சூரர்கள்" இருக்கற தைரியத்துலதான், என் போன்ற அப்பாவிகள் வாழ்க்கைய ஓட்டுறோம்.
//

அண்ணன் அடுத்த படத்துல பிசி. பால் காவடி பன்னீர் காவடி எடுத்து கலக்குங்க தல

Baski said...

//அது என்ன வழின்னு சொன்னா சந்தோஷம் தலைவா. சுத்தமா புரியலை//

Read this as a conversation.

ரசிகர்களுடைய பேச்சாகவும்., அதற்க்கு சில நடிகர்களின் பதிலாகவும் படித்தால் ஒருவேளை புரியலாம்.

//அது ஏதோ புது வெளிநாட்டு சரக்கால வரும் வயிற்று வலி....//

:-)

shiva said...

im expecting a lot from idlyvadai with Inba alaiance

but thi post is mokkai my dear friends

pls disclose the rajini vs kamal topic

Anonymous said...

shiva said...
///pls "disclose" the rajini vs kamal topic///

அதத்தானய்யா செஞ்சுகிட்டு இருக்காங்க!
சொல்ல வந்தத சரியாச்

சொல்லலைன்னா ...... ஹி.ஹி..ஹி....

jaisankar jaganathan said...

//im expecting a lot from idlyvadai with Inba alaiance
//

இந்த alaiance அப்படியே இந்தியாவ தூக்கி நிறுத்தப்போவுது. கொடுமை

என்க்கு வேற வெலை இல்லை அதனால இந்த பின்னூட்டம் இடுகிறேன்

Balu said...

/*** மானஸ்தன் said...
shiva said...
///pls "disclose" the rajini vs kamal topic///

அதத்தானய்யா செஞ்சுகிட்டு இருக்காங்க!
சொல்ல வந்தத சரியாச்

சொல்லலைன்னா ...... ஹி.ஹி..ஹி....**/


நீங்க தானே பத்த வச்சது? ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிறீங்களே, அதான் அருணாச்சலம் பதில் சொல்ல முடியாம ஓடிட்டாரே? சத்தியமா நான் கமலுக்கு சப்போர்ட் செய்யவில்லை, ரஜினியின் குறையை மட்டும் தான் சொன்னேன், அவர் அதற்கு நான் கமல் ரசிகன் அதனால் ரஜினியை பற்றி குறை கூறுகிறேன் என்று தவறாக நினைத்து ஏதேதோ உளறுகிறார்....ரஜினியை பற்றி கேட்டால் கமலை பற்றி திட்டுகிறார், என்னை அவர் கமலிடம் குறை இருப்பதாக உங்களுக்கு தோன்றவில்லையா என்று கேட்டிருந்தால் ஒரு பெரிய பட்டியலே போட்டிருப்பேன். என்ன செய்ய தேவை இல்லாமல் என்னென்னவோ நடந்து விட்டது.கூட பலர் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பது எனக்கு இன்னும் ஆச்சரியமாகவே உள்ளது!!!

jaisankar jaganathan said...

எனக்கு ஒரு டவுட். ரஜினிதான் அருணாசலம்ங்க பேர்ல பின்னூட்டம் இடுரதா?

Anonymous said...

யோவ் மானஸ்தன், இப்போ சந்தொஷமாயா? நீ கிள்ளி போட்ட திரி இப்போ ஜகஜோதியா கொழுந்து விட்டு எரிஞ்சிடுசு. நீ ஜகஜால கில்லாடியா...:-)

Anonymous said...

///jaisankar jaganathan said...
எனக்கு ஒரு டவுட். ரஜினிதான் அருணாசலம்ங்க பேர்ல பின்னூட்டம் இடுரதா?///

rajinee is from maharashtra- karnataka. i don't think he can write good tamil, even though he has ample time to read IV and put comments.

Anonymous said...

/***jaisankar jaganathan said...
எனக்கு ஒரு டவுட். ரஜினிதான் அருணாசலம்ங்க பேர்ல பின்னூட்டம் இடுரதா?***/

Good doubt!!!!
அப்ப லூசுத்தனமா உளறுபவர்கள் எல்லாம் ரஜினி தான் என்று சொல்ல வருகிறீர்கள்.... மிகச்சரியே நீங்கள் சொல்ல வருவது!!

jaisankar jaganathan said...

//அப்ப லூசுத்தனமா உளறுபவர்கள் எல்லாம் ரஜினி தான் என்று சொல்ல வருகிறீர்கள்.... மிகச்சரியே நீங்கள் சொல்ல வருவது!!
//

இதை அருணாசலம் ஏற்றுக்கொள்வார் என்று நம்பிக்கை இருக்கிறது

Anonymous said...

".".

:-D