பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 13, 2009

சிநேகிதன்களின் மனைவிகள்

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கச் சம்மதித்தும், ஆசிப்புக்கு ஈடான தகுந்த பெண்குரல் தமிழில் இல்லாததால் இட்லிவடை வார்த்தைகளாக மட்டுமே பதிவிட வேண்டிய துரதிர்ஷ்டம்....சிநேகிதன்களின் மனைவிகள்

சிநேகிதன்களின் மனைவிகளுடனான
சிநேகங்களின்
தொடக்கத்திலேயே துவங்கிவிடுகிறது
கண்மூடாத ஒரு கண்ணாமூச்சி ஆட்டம்

ஒரு திறக்கக்கூடாத பாவனையின்
மர்ம முகமூடி

ஒரு மர்மவெளியில்
விரிக்கப்பட்ட மாயவலை
ஒரு சர்க்கஸ் புலியின்
நெருப்பு வளையம் ஊடுறுவும்
அபத்த சாகசம்

சிநேகிதர்களின் மனைவிகளுடனான
சிநேகங்களில்
என் சிநேகிதனுக்கான சிநேகங்களை
முற்றாக மூடிவைத்துவிடுகிறேன்

அவனது அகவுலக ஆர்வங்களை
அவனது அக்கறை கலந்த அடிக்கண் பார்வைகளை
அவனது ரசனைகூடிய ரகசியப் பிரியங்களை
மறுதலித்துவிடுகிறேன்

அவனைப் பற்றிய ஒரு நினைவை
வேறொரு சம்பவத்தோடு இணைத்துவிடுகிறேன்

அவனது மனைவியைப் போலவே
அவனது இருப்பை
ஒரு பொருந்தாப் பொருளாக்குகிறேன்

சிநேகிதன்களின் மனைவிகளுடனான
சிநேகிதங்களில்
நாம் அனுமதிக்கப்படுவது
ஒரு கருணை

அது நம்மிடம் காட்டப்படும்
ஒரு பெருந்தன்மை

சில சமயம் நம் சிநேகிதன்களுக்கு
காட்டப்படும் சலுகை

நாம் சந்தேதிக்கப்படவில்லை
என நம்மை நம்ப வைக்கும்
ஒரு தந்திரமான விளையாட்டு

சிநேகிதன்களின் மனைவிகளுடனான
சிநேகங்களில்
என் சிநேகிதன் எப்போதும்
புள்கூட்டத்தின் புதிர்மொழியொன்றைப்
பேசுகிறான்

உரையாடல்களின்
அபாயகரமான திருப்பங்களையும்
அதிர்வறியா லாகவத்துடன் கடந்து செல்கிறான்

எதைப் பற்றிய பேச்சிலும்
மனைவி பற்றிய
இல்லாத பெருமையை
இலவசமாக இணைத்துவிடுகிறான்

ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும்
மிகவும் ஆயாசமடைந்து
மனைவிகள் மட்டுமே நண்பிகளாக இருப்பது
நல்லது என்று முடிவெடுத்து விடுகிறான்

சிநேகிதன்களின் மனைவிகளுடனான
சிநேகங்களின் இடையே இருப்பது
ஓர் உறவல்ல
இலக்குகள் ஏதுமற்ற
ஒரு பந்தயம்

ஓர் அடுத்தவளுக்குக் காட்டும்
மனதை மறைத்த மரியாதை

ஒரு சட்டபூர்வ உரிமைக்காரிக்கு எதிராக
ஒரு ________யின் ரகசிய கலகம்

பல்லிடுக்கில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட
ஓர் உணவுத் துணுக்கு

சிநேகிதன்களின் மனைவிகளுடனான
சிநேகங்களில்
நான் எனது பழக்கவழக்கங்களை
மாற்றிக் கொள்கிறேன்

அவர்களுக்கே இல்லாத அக்கறைகளையும்
எனது அக்கறைகளாக்கிக் கொள்கிறேன்

சிநேகிதனுடன் பேச
எந்த ஆயத்தங்களும் தேவை இல்லாததாக இருந்தது
அவர்களின் மனைவிகளுடன் பேச
அவிழ்த்துவைத்த மூளையுடன் அமர்கிறேன்.

அவளுடைய ஆடையின் நிறங்களையும்
ஆபரணங்களின் தரங்களையும்
அடுக்களையின் நேர்த்தியையும் கூட
அடகுவைத்த மனசாட்சியுடன் பாராட்டத் தொடங்குகிறேன்.

சிநேகிதன்களின் மனைவிகளுடனான
சிநேகங்களில்
சிநேகிதனுக்குப் பதில்
சிநேகிதனின் குழந்தைகளை
கொஞ்சக் கற்றுக் கொண்டேன்

வரவேற்பறையில் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும்
கூடவே அடுக்களைக்குள் எப்போது நுழைந்துவிட வேண்டும்
நாற்காலிகள் எவ்வளவு தூரத்தில் அமையவேண்டும்

எந்தக் கணத்தில் வெளியேற வேண்டும்
என எல்லாவற்றையும் பழகிக் கொண்டேன்

நான் குழப்பமடைவதெல்லாம்
சிநேகிதனை பெயர் சொல்லாமல்
எப்படி அழைப்பது என்று

அல்லது செல்லப் பெயர்களை
வெறும் பெயர்களாக மட்டும்
எப்படி உச்சரிப்பது என்று

ஒரு சிநேகிதனை ‘அண்ணா‘ என்று அழைக்கும்
ஓர் ஆபாசக் கலாசாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்றுகவிதை குறித்த மனுஷ்ய புத்ரிகளின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.


13 Comments:

Krish said...

ஒரு paragraph a துண்டு துண்டா கட் பண்ணி கவிதை ஆக்கிடீங்களே

Anonymous said...

இட்லி வடை வாசகர்கள் அனைவருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துகள்.

R.Gopi said...

//Krish said...
ஒரு paragraph a துண்டு துண்டா கட் பண்ணி கவிதை ஆக்கிடீங்களே//

ஃபுல்லா ப‌டிச்சுட்டு
ந‌ல்லா சொல்றான்யா டீடைலுலுலு....

அண்ணன் அவிய்ங்களுக்காக வெயிட்டிங்

Anonymous said...

எனக்கு தெரிஞ்சவரைக்கும் கோவில்ல, வீட்டுலதான் கோகுலாஷ்டமி.
இட்லிவடையில் மட்டும் சைடு-"பார்"ல.

:-D

R.Gopi said...

//மானஸ்தன் said...
எனக்கு தெரிஞ்சவரைக்கும் கோவில்ல, வீட்டுலதான் கோகுலாஷ்டமி.
இட்லிவடையில் மட்டும் சைடு-"பார்"ல.//

அதான் இட்லிவ‌டை ஸ்பெஷ‌ல்.... சைட்ல போட்டா கூட "பார்"ல தான் போடுவார்.

சித்த பாத்துக்கோடா....மேலே இருந்து அவா உருட்டற சீடை எல்லாம் கீழ கொட்டிட போறது.... இன்னொண்ணு, ஒன்ன யாரும் பாக்கலேன்னு நெனச்சு சீடைய எடுத்து வாயில போட்டுண்டுடாத....உம்மாச்சி கண்ண குத்திடுவார்....

Anonymous said...

///யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கச் சம்மதித்தும், ஆசிப்புக்கு ஈடான தகுந்த பெண்குரல் தமிழில் இல்லாததால் இட்லிவடை வார்த்தைகளாக மட்டுமே பதிவிட வேண்டிய துரதிர்ஷ்டம்..///

வழக்கம் போல நல்ல தூக்கலா மசாலா போட்ட "இட்லி" பிராண்ட் "நக்கல்".

நடக்கட்டும். நடக்கட்டும்.

வால்பையன் said...

இட்லிவடையும் எதிர்கவுஜ எழுத ஆரம்பிச்சாச்சா!

மெனக்கெட்டு said...

'இட்லி வடை மெஸ்' ல கோகுலாஷ்டமி ஸ்பெஷல் பலகாரம் உண்டா?

சீடை, முறுக்கு முதலியவை?

Unknown said...

why is there a pic of friends on this post..

Unknown said...

நாராயணா கொசு தொல்ல தாங்க முடியலடா...... !!

இந்த பொழப்புக்கு.......................................................................................... லெக் பீசோட ஓசி பிரியாணி திங்கலாம்....!!!

Anonymous said...

ஒரு சிநேகிதனை ‘அண்ணா‘ என்று அழைக்கும்
ஓர் ஆபாசக் கலாசாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்று

ha ha ha....

pichaikaaran said...

அந்த so called கவிஞர் எழுதிய வாய்ப்பாடு கவிதையை விட, இது சூப்பர்

pavithra said...

the original verse describes the thoughts of a man who had lost his girlfriend on account of her having got married. In that partiactlar situation, the husband himself or the wedlock is like an iron curtain beyond which both the friends cant move ahead.
But, for a girl who had lost her boyfriend on his marriage yet got permitted by his wife to continue to be in friendship is an entirely different situation.
So, simply replacing words and making a ULTA VERSE could be easy. But it never reflects the thought process of a girl, whose is detailed therein.