பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, August 16, 2009

அம்மாவுக்கு ஒரு பகிரங்க கடிதம்

அன்புள்ள அம்மாவுக்கு,
வணக்கம். நலமா? நலமறிய ஆவல். கடைசியாக போன வருடம் பிப்ரவரி மாதம் தலைமைக் கழகத்தில் உங்களிடம் சில வார்த்தைகள் பேசியதாக நினைவு. பின்னர் ஓரிருமுறை திருமணங்களில் விரல்களை உயர்த்தி நலம் விசாரித்து புன்னகை பூத்தீர்கள். அப்புறம் கட்சிக்கு நேற்றைக்கு வந்தவர்களின் உத்தரவிற்குத்தானே என்னைப் போன்ற சீனியர்கள் கட்டுப்பட வேண்டிய காலக்கிரஹம்! எங்கே உங்களிடம் மனம் விட்டுப் பேசுவது?நேராக விஷயத்திற்கு வருகிறேன் அம்மா. அமரர் எம்.ஜி.ஆர். வளர்த்த இந்தக் கழகம், இன்று மாலுமி இல்லாத கப்பல்போல் எங்கெங்கோ போய் சீரழிவதைப் பார்க்கும் போது இரவு படுத்தால் எங்கே தூக்கம் வருகிறது? எஃகு கோட்டையாக, எம்.ஜி.ஆரையும் இரட்டை இலையையும் தவிர வேறு தெரியாத லட்சோபலட்சம் வெறிபிடித்த தொண்டர்கள் இயங்கிய இந்த இயக்கம் ஏன் இப்படி படுத்துவிட்டது?

ஜெ.-ஜா. பிளவுக்குப் பிறகு, ஆர்.எம்.வீ, நாவலர், பண்ருட்டி, மாதவன், கே.ஏ.கே., அரங்கநாயகம் உள்பட எம்.ஜி.ஆர். காலத்துத் தளபதிகளும், கே.கே.எஸ்.எஸ்.ஆர், திருநாவுக்கரசு, கருப்பசாமி பாண்டியன், செங்கோட்டையன், முத்துசாமி போன்ற இளைய தளபதிகளும் உங்கள் தலைமைக்குக் கீழேதானே வந்தார்கள்? அனுபவமும், இளமையும் சேர்ந்த எவ்வளவு அற்புதமான கூட்டணி அது! எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பின்னர், மதுரை கிழக்கிலும், மருங்காபுரியிலும் இடைத்தேர்தலை சந்தித்தீர்கள். தி.மு.க.

ஆட்சியில் வெற்றி பெறுவோமா என்று உங்களுக்கே சற்று தோல்வி பயம். அப்போது மதுரை கிழக்கிற்கு கே.கே.எஸ்.எஸ்.ஆரும், மருங்காபுரிக்கு திருநாவுக்கரசும் பொறுப்பாளர்களாக களத்தில் இறங்கினார்கள். ஆட்சியைப் பறிகொடுத்த ஆதங்கத்தில் தொண்டர்கள் சூறாவளியாகச் சுழன்றார்கள். இரண்டிலும் அ.தி.மு.க. அமோகமாக வென்றது - நீங்கள் பிரசாரத்திற்குப் போகாமலேயே. இன்றைக்கு இடைத்தேர்தல் என்றாலே ஒப்பாரி வைக்கிறீர்கள்!

அந்தப் படைத் தளபதிகளும், தொண்டர்களும் எங்கே போனார்கள் அம்மா? தளபதிகளை வெளியே அனுப்பியது யார்? எதற்காக அனுப்பப்பட்டார்கள்? ஒவ்வொருவரையும் உங்களுக்கு எதிரானவர்களாக சித்திரித்து, இந்தக் கட்சியை தங்கள் குடும்ப ஆதிக்கத்தில் கொண்டு வர வேண்டும் என்ற சூழ்ச்சி வலை பின்னியது யார் என ஊருக்கே தெரியும். ஆனால் உங்களுக்கு மட்டும் எப்படித் தெரியவில்லை?! இன்று அ.தி.மு.க. தொண்டன் எதிர்காலம் புரியாமல் கிராமங்களில் பரிதாபமாக சுற்றிக் கொண்டிருக்கிறான்.

எம்.ஜி.ஆர். ஊர் ஊராய் சுற்றி, லட்சக்கணக்கான தொண்டர்கள் ரத்தம், வியர்வை சிந்தி வளர்த்த இந்த இயக்கத்தின் பொறுப்பாளர்களை, தேர்தல் வேட்பாளர்களை இன்று தேர்ந்தெடுப்பது டாக்டர் வெங்கடேஷ் என்ற யாரோ ஒரு இளைஞராம்! இவருக்கும் கட்சிக்கும் என்ன தாயே சம்பந்தம்? ஒரே சம்பந்தம், உங்கள் உயிர்த்தோழி சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் செல்ல மகன். இவர் சகோதரி அனுராதா உங்கள் ஆசி பெற்ற, அருகிலேயே இருக்கும் பெண்மணி. இவர் கணவர் டி.டி.வி. தினகரன் நேற்றுவரை கட்சியில் அதிகாரத்தில் இருந்தவர். சின்னம்மா பிரஷர் தந்தால் மீண்டும் வருவார். வெங்கடேஷின் மாமனார் பாஸ்கரன் எந்த நேரத்திலும் போயஸ் தோட்டத்தின் ஆளுயர இரும்புக் கதவுகளைத் திறந்து கொண்டு சுவாதீனமாக நுழையக் கூடிய அளவிற்கு செல்வாக்குப் பெற்றவர். இவர்களைத் தவிர மகாதேவன், திவாகரன், இளவரசி என்று ஒரு டஜன் உருப்படிகள் அதிகார மிடுக்குடன் தோட்டத்தைச் சுற்றி வருகின்றனர்.

எங்களைப் போன்று கட்சியில் நீண்ட காலம் பணியாற்றியவர்களே நேரிடையாக தோட்டத்தில் உங்களை சந்தித்துவிட முடியாது. தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி, கோவை ராவணன், திருச்சி கலியமூர்த்தி, சென்னை மோகன், எம்.என் (நடராஜன்) தம்பிகள் பழனிவேல் மற்றும் எம்.ஆர். என்கிற ராமச்சந்திரன் போன்ற சின்னம்மா குடும்ப விசுவாசிகளைத்தான் முதலில் அணுக வேண்டும்.

இப்போது சமீபத்தில் நடந்த ஒரு வேதனையை உங்கள் காதில் போட்டு வைக்கிறேன். தமிழகம் முழுவதுமுள்ள கிளைக் கழகத்திலிருந்து மேல்மட்டம்வரை கட்சிப் பொறுப்பாளர்களை நியமனம் செய்வதற்கு, ஒவ்வொரு பதவிக்கும் இவ்வளவு ரேட் தரவேண்டுமாம். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிளைச் செயலாளர் பதவிக்கு இருபதாயிரம் ரூபாய் என்றும், ஒன்றியச் செயலாளர் பதவிக்கு ஐம்பதாயிரம் வரை பேரம் பேசப்பட்டிருக்கிறது. `கையில் காசு இல்லாதவன் கடவுளே ஆனாலும் கதவைச் சாத்தடி' என்று பழைய படத்தில் சிதம்பரம் ஜெயராமன் பாடுவார். அதை `கட்சிக்காரனேயா னாலும்' என்று மாற்றிப்பாடும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டதே என்று மத்திய சென்னையிலிருந்து மானா மதுரைவரை புலம்புவது கொடநாட்டில் குடிகொண்டிருக்கும் உங்கள் காதில் விழவில்லையா? நமது கட்சியில் நிஜமான உழைப்பிற்கும், தியாகத்திற்கும், தகுதிக்கும் மரியாதை இல்லையா?

அடுத்தது உங்களிடம் கேட்க வேண்டிய ஒரு முக்கியமான கேள்வி இருக்கிறது. சாதாரண தொண்டன் ஒரு திருமணத்தில் தி.மு.க.காரரை எதேச்சையாக சந்தித்தால் கூட அவன் கதை முடிந்தது. மறுநாள், `நமது எம்.ஜி.ஆரில்,' கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கட்டம் கட்டி சுலபமாக அந்த ஏழைத் தொண்டனை வீட்டுக்கு அனுப்பி விடுகிறீர்கள். அதே சமயம், சசிகலா பங்குதாரராக உள்ள `மிடாஸ்' மதுபான ஆலையிலிருந்து தி.மு.க. அரசின் டாஸ்மாக்கிற்கு எப்படி தங்கு தடையில்லாமல் சரக்கு போகிறது? அதுவும் இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முப்பது சதவிகிதத்திலிருந்து சுமார் ஐம்பது சதவிகிதம் வரை மிடாஸ் சரக்கை வாங்குவதை அரசு அதிகப்படுத்தி விட்டதாக செய்திகள் வருகின்றனவே... அது எப்படி? அனிதா ராதாகிருஷ்ணன் தி.மு.கவோடு வணிகத் தொடர்பு வைத்திருக்கிறார் என்று குற்றஞ்சாட்டி அண்மையில் வெளியே அனுப்பினீர்கள். எஸ்.வி.சேகரை தேவையில்லாமல் வெறுப்பேற்றினீர்கள். இதற்கு முன்பு கருப்பசாமி பாண்டியன், சேலம் செல்வகணபதி என்று அருமையான தளபதிகளையெல்லாம் ஓரங்கட்டி அவமானப்படுத்தினீர்கள். இன்று நீங்கள் யாரையெல்லாம் பயன்படுத்தாமல் வெளியே அனுப்பினீர்களோ அவர்களெல்லாம் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் தி.மு.க.வில் கௌரவப்படுத்தப்படுகிறார்கள். என்ன செய்யப் போகிறீர்கள் அம்மா? ஒன்றரைக் கோடி தொண்டர்களின் உழைப்பும், தியாகமும் ஒரு குடும்பத்துடைய பொருளாதார வளர்ச்சிக்கும், சுகத்திற்கும் பயன்படுகிறது என்பதை எப்போது உணரப் போகிறீர்கள்?

கண் கெட்டதற்குப் பிறகு சூரிய நமஸ்காரம் செய்து பயனில்லை அம்மா!

இப்படிக்கு,

-இப்போதும் இந்த இயக்கத்திற்காக கவலைப்படும் தொண்டன்..
( நன்றி: குமுதம் )

14 Comments:

Anonymous said...

ரொம்ப அவசியம்.

"அண்ணா - தம்பி" திராவிட "கலக" செய்திகளைப் போடுவதற்கு பதில் ஏதாவது constructive செய்திகளைப் போடவும்.

Arun Kumar said...

please read this article....u can very well see where tamil nadu is gng....http://www.dinamalar.com/pothunewsdetail.asp?News_id=16126...atleast someone must put an end to this....

Kameswara Rao said...

IV,

Very good letter, something which jj should defenitely look into else someone like VK will be creeping in... this is the time for self interrogation and coming out with facts toface 2011.

Kamesh

Anonymous said...

கழகங்கள் இரண்டுமே ஏகாதிபத்திய குட்டையில் ஊறிய மட்டைகள். அதிமுக அமைச்சர்கள் தாங்கள் ஜீரோக்கள் - எம்.ஜி.ஆர். பக்கத்தில் இருந்தால்தான் மதிப்பு என்று ஒத்துக் கொண்டிருந்தவர்கள். அவர்கள் தகுதிக்கேற்றவாறுதான் ஜெ தரும் மரியாதை. காங்கிரஸ் சோனியாவுக்கு போடும் சலாம், அதிமுகவினர் ஜெ'வுக்கு போடும் சலாம் எல்லாம் ஒன்றுதான். ஓட்டு வாங்க அந்த முகம்தான் தேவைப்படுகிறது.

ஜெ-ஜா பிளவிற்குப் பிறகு பண்ருட்டி ஜெவின் தலைமையில் கீழ் இருந்தமாதிரி எனக்கு நினைவில்லை. அவர் ஒருவர்தான் மானத்தை காப்பாற்றிக் கொண்டிருந்தார் என்றிருந்தேன் விஜயகாந்துக்கு குடை பிடிக்கும் வரை.


கட்சியில் எவ்வளவு காலம் பணியாற்றினாலும் இரண்டு கழகங்களிலும் எல்லோரும் சைபர்தான். அதனால்தான் என்ன கேவலப்படுத்தினாலும் ஏதாவது ஒரு குடும்பத்திற்கு ஜால்ரா போடுகிறார்கள். தமிழன் நிலையை வேறு என்ன சொல்வது. Between the devil and the deep sea!

Anonymous said...

"எஃகு கோட்டையாக, எம்.ஜி.ஆரையும் இரட்டை இலையையும் தவிர வேறு தெரியாத லட்சோபலட்சம் வெறிபிடித்த தொண்டர்கள் இயங்கிய இந்த இயக்கம் ஏன் இப்படி படுத்துவிட்டது?" - கேள்விலயே பதில் இருக்கில்ல? சிந்திக்கத் தெரியாத வெறியர்களைக் கொண்டு இயங்கும் இயக்கத்தின் எதிர்காலம் வேறு எப்படி இருக்குமாம்?,

”மத்திய சென்னையிலிருந்து மானாமதுரைவரை புலம்புவது...” - ஆதங்கக் கடிதத்தில் கூட `ம`னாவுக்கு `ம`னா போட்டு - மத்திய சென்னையையும் மானாமதுரையயும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் அளந்து - கடிதமெழுதும் `திராவிட`ப் பண்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.

”நமது கட்சியில் நிஜமான உழைப்பிற்கும், தியாகத்திற்கும், தகுதிக்கும் மரியாதை இல்லையா?” - தெரிஞ்சும் கட்சிலேயே இருக்கிறதும், கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய அடுத்த கணமே அடுத்த (எதிர்) கட்சியின் கட்சிப்பணிக்களுக்கு, இவ்வளவு பட்டபிறகும், தன்னை அர்பணித்துக் கொள்ளும் தமிழர் பண்பாடும் ஒரு காரணமாயிருக்கலாம்.

” சசிகலா பங்குதாரராக உள்ள `மிடாஸ்' மதுபான ஆலையிலிருந்து தி.மு.க. அரசின் டாஸ்மாக்கிற்கு எப்படி தங்கு தடையில்லாமல் சரக்கு போகிறது?..........” - பொளைக்கத் தெரிஞ்சவிங்ய. உங்கள் கடன் கட்சிப் பணி (மட்டும்) செய்து கிடப்பதே. திராவிட இயக்கங்களின் தந்தையே தனது தொண்டர்களுக்கு விதித்த கட்டளை என்ன? - ”சிந்தித்துக் கேள்வி கேட்பவன் இயக்கத்துக்குத் தேவை இல்லை; சொன்னதைக் கேள்வி இல்லாமல் ஏற்றுக் கொள்பவனே இயக்கத்துக்கு வேண்டும்”. ஏன் ஆதங்கப் படுகிறீர்கள்? இது `பெரியார்` காட்டிய வழி.

”யாரையெல்லாம் பயன்படுத்தாமல் வெளியே அனுப்பினீர்களோ அவர்களெல்லாம் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் தி.மு.க.வில் கௌரவப்படுத்தப்படுகிறார்கள்” - ஏன் புலம்புகிறீர்கள்? உங்களுக்கும் கௌரவம் வேண்டுமென்றால் நீங்களும் திமுகவுக்குப் போகலாமே? ’ஜ ன நா ய க’ நாட்டில் யார் தடுக்கிறார்கள்?

Krish said...

ஆறு மாதத்திற்கு ஒருமுறை விகடனும், குமுதமும் இப்படி ஒரு "பகிரங்க" கடிதத்தை எழுதிவிடுவார்கள்.
திராவிட கட்சிகள் எல்லாம் "Private Ltd" ஆகி ரொம்ப நாள் ஆகிவிட்டது.

PITTHAN said...

intha pathivu devai illathathu enna ninakiren, arasiyal enabathu, muraikedaka panam sambathikkum, manakedana tholil enru marivittathu. ithukku pathila oru nalla develop orient pathivai pottal, padikkiravarkalkku payan irrukkum or nalla commedy pottal poluthu pogum. athaivittu arasiyal pottu blog asingapaduththerkal

R.Gopi said...

இதென்ன ஆ.வி."தல"க்கு கடிதம் எழுதின உடனே, குமுதம் "அம்மா"வுக்கு ஒரு கடிதம்....

இந்த நுண்ணரசியலே எனக்கு புரியல....

R.Gopi said...

ஆமாம்.... "தல" இப்போ எல்லாம் எங்க ஜெ.ஜெ.பத்தி பேசினாலும், திருமதி ஜெயலலிதா அப்படின்னு சொல்ராராமே.... இதனால "தல" மேல ஜெ.ஜெ.படா கோவமா இருக்காங்களாமே....

முனி கிட்ட கேட்டு இதபத்தி சொல்றது......

valaignan said...

பின்னோட்டத்தில் நண்பர்கள் பின்னி பெடல் எடுத்துட்டாங்க புதுசா நான் சொல்ல ஒன்னும் இல்ல!

தமிழர்களுக்கு தி மு க வலது பக்க தலைவலி, அ தி மு க இடது பக்க தலைவலி

Kasu Sobhana said...

ஓடிபோனவனுக்கு ஒரு மன வலி;
துரத்தியவர்களுக்கு கொஞ்சம் கால் வலி.
உறக்கத்தில், ஓய்வில் இருக்கும்
தலைவிக்கு இல்லை தலைவலி!
பிரித்தாளும் சூழ்ச்சி - பிரிட்டனிடம்
தல முன்பு கற்ற பாடம்;
பிரித்து விடும் உ.பி. சொந்தங்கள்
Coterie - (A)ll (D)isintegrated (M)utilating (K)ayavargal.

Erode Nagaraj... said...

அதீதமான சில வக்கிர நம்பிக்கைகள் அ.தி.மு.க.வில் இருக்கலாம். வயதாகிவிட்ட கலைஞருக்குப் பின் கட்சி பிளவுபடும். நாம் இலவசமாகப் பாயசம் குடிக்கலாம் என்ற கனவிலிருந்து இன்னும் மீளவில்லைஇவர்கள்.

Anonymous said...

that is a good article. many i am sure in TN and outside could not understand why did amma boycott the byelections.

Baski said...

நம்ம இன்னும் எம்.ஜி.ஆர். இருந்த பொது என்னமோ பொற்காலம் போல மெய் சிலிர்த்துகொள்கிறோம்.

அந்த காலத்தில் இருந்து இப்போ வரை எல்லார் மனதிலும் "தான் எப்படி அந்த நாற்காலியை தக்க வைத்துக்கொள்ளலாம்." என்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது.

"நாம் எப்படி இந்த நாற்காலியை வைத்து நாட்டிற்கு நல்லது செய்யலாம்" என ஒரு அரசியல்வாதியும் ஆசைப்படாது நமது துரதிர்ஷ்டம்.

என்னமோ எம்.ஜி.ஆர் பெரிசா சாதிசிட்ட மாறி புனையப்பட்டுள்ளது.

சினிமா பைத்தியம் பிடித்த நம்மிடையே கொஞ்சம் யோசிக்கும் திறனையும் அந்த ஆண்டவன் கொடுத்திருக்க கூடாதா? சினமாவில் மட்டும் உண்மையாகவும், உழைப்பாளியாகவும் இருந்துவிட்டால் போதுமா?

வேகமாக வளர்ந்த கட்சி. வேகமாக அழியுது போல. நல்ல அடிப்படை/கொள்கை உள்ள கட்சிகாரர்கள் இருந்தால் கட்சி ஏன் இப்படி நாற போகுது. அந்த காலத்து ஆட்கள் தான் சினிமா போதையில் இவரை இப்படி தூக்கி வைக்கிறார்கள் என்றால்... இப்பவுமா?

எவனோ கேட்டான்னு கலைஞர் தனது சாதனைகளை பட்டியலிட்டுள்ளார்.

எல்லா (தறு)தலைகளையும் கேட்கிறேன்.

1. எதற்காக அரசியலுக்கு வந்தீர்கள்? (கொள்ளை அடிக்க போயிருக்கலாமே?)
2. நான் கறையற்ற தலைவனாய் இருந்தேன் என சொல்ல முடியுமா? (பொய் சொன்னால் சவின் பளு வந்துவிடும்)
3. திறமையான மாநில அரசு நிர்வாகம் இருக்க எதாவது யோசித்ததுண்டா? (ஒரு தனியார் நிறுவனதிருக்கு இணையான மக்கள் சேவை)

I keep saying my friends and known people.. "Please vote for Independents"