பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 14, 2009

கேப்டன் லெட்சுமி - ஒரு பார்வை

"பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்" என்றான் பாரதி. தங்களால் போரினையும் நடத்தமுடியும் என நிரூபித்தவர் கேப்டன் லெட்சுமி.

அக்டோபர் 24, 1914 ஆம் வருடம், அப்போது மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட நம் சென்னையில் பிறந்தார். அவரது தந்தை S.சுவாமிநாதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியவர், தாய் அம்மு அவர்கள் கேரளாவை சேர்ந்த சமுகசேவகர் மற்றும் சுதந்திரபோராட்ட வீரர்.

ஏழை மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கோடு, 1938 ஆம் வருடம் சென்னை மருத்துவகல்லூரியில் பட்டம் பெற்றார். அதன்பின் சிங்கப்பூர் சென்று, அங்கு வாழும் ஏழை இந்திய தொழிலாளிகளுக்கு மருத்துவமையம் அமைத்தார். 1942 ஆம் வருடம் சிங்கப்பூர், ஜப்பான்வசம் வந்ததும், போரினால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சைகள் செய்தார்.

அப்போதுதான் அவர் வாழ்கையின் முக்கியமான திருப்பமான சம்பவம் நடந்தது. ஜூலை 2, 1943 ஆம் வருடம் சிங்கப்பூர் வந்த நேதாஜி அவர்கள் பெண்களுக்கான படைபிரிவை ஜான்சி ராணியின் பெயரால் தொடங்கவிருப்பதாக அறிவிக்க, கணமும் தாமதிக்காமல் அதில் இணைந்தார் லெட்சுமி. ராணுவ சேவைகளோடு, மருத்துவ சேவைகளையும் கவனித்தார். தனது சிறப்பான பணிகளால் விரைவில் ஜான்சிராணி படைபிரிவின் தலைமை பொறுப்பை ஏற்று கேப்டன் லெட்சுமி ஆனார்

1946, மார்ச் 4 ஆம் தேதி, பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு, சென்னைக்கு கொண்டுவரப்பட்டவர், நீண்ட சிறைவாசத்திற்கு பின் விடுதலை செய்யப்பட்டார்.

1970 களில் நேதாஜியின் வழிகாட்டுதலின்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிபணிகளிலும், வங்கதேச போர்காலங்களில் அகதிகளுக்கான மருத்துவ சேவைகளில் ஈடுபட்டார். 2002 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதிக்கான தேர்தலில் நமது அப்துல்கலாம் அவர்களை எதிர்த்து, கம்யூனிஸ்டுகள் ஆதரவோடு போட்டியிட்டு, தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. தனது கணவர் பிரேம்குமரோடு கான்பூரில் செட்டில் ஆகி, ஏழை எளியவர்களுக்கான மருத்துவ சேவைகளை தொடருகிறார்.

அடுப்புஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று இருந்த அந்த காலகட்டத்தில் கேப்டன் லெட்சுமி சாதித்துக்காட்டிஇருக்கிறார். இவரைபோன்று 'வெளிச்சத்திற்கு' வராமல் 'இருட்டில்' இருக்கும் பாரதி கண்ட புதுமைபெண்கள் எத்தனயோ?

அடுத்த சுதந்திர தினம் கொண்டாடுவதற்கு முன்பாவது, பெண்களுக்கான 33% சதவித இட ஒதுக்கிடு நிறைவேறுமா?? எதோ ஒரு மொழி தெரியாத நடிகை தனது பட 'அனுபவங்களை' சொல்லிகொண்டுஇருக்கும் டிவியை சிறிது நேரமாவது நிறுத்திவிட்டு, பாரதமாதாவை பிராத்தனை செய்வோம்.

ஜெய்ஹிந்த்

-இன்பா
இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக நாளை டிவியை அணைத்துவிட்டு, காந்தியடிகள் எழுதிய சத்திய சோதனையை 15 பக்கமாவது படிக்க முடிவு செய்துள்ளேன். நீங்கள் ?

முதல் சுதந்திர தின படங்கள் கீழே போனஸாக..( படங்களை அனுப்பிய கார்த்திக்கு நன்றி )

27 Comments:

மானஸ்தன் said...

nice one, again. informative.
நன்றி.

மானஸ்தன் said...

Good resolution!
thanks for the picture collection, திரு இட்லிவடை.

shiva said...

thanks for
rocking post Mr.Inba and Idlyvadai

JAI HIND

ஜெயக்குமார் said...

யாருய்யா இன்பா.. நல்லா எழுதுறாரு.. வாழ்த்துக்கள். இட்லிவடியும் அப்பப்ப நல்ல கட்டுரைகளும் போடுது.. பரவாயில்லை.. படங்களும், செய்தியும் அருமை. படங்கள் இதுவரை நான் பாராதது.. செய்தியும் கேள்விப்படாதது.
நன்றி

யதிராஜ சம்பத் குமார் said...

சுதந்திர தினத்தையும், சுதந்திர தினப் போரட்ட தியாகிகளையும் நினைவு கூறும் வகையில் ஒரு பதிவிட்டமைக்கு பதிவர் இன்பாவிற்கும், பதிப்பித்த இட்லிவடைக்கும் மனமார்ந்த நன்றிகள்.


சுதந்திர தினத்திற்கும், அத்தினத்தன்று தனியார் தொலைக்காட்சிகளில் நடிகையர் மனம் திறப்பதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என விஷயம் தெரிந்தவர்கள் விளக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

யதிராஜ சம்பத் குமார் said...

இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக நாளை டிவியை அணைத்துவிட்டு, காந்தியடிகள் எழுதிய சத்திய சோதனையை 15 பக்கமாவது படிக்க முடிவு செய்துள்ளேன். நீங்கள் ? >>>>>>>>நாங்கள்>>>> 15 பக்கத்தோடு நிறுத்திவிடாமல், 16 பக்கத்திலிருந்தும் தொடர்ந்து படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Erode Nagaraj... said...

நல்ல பதிவு. விசேஷ நாட்களில் சினிமாவைக் கட்டிக்கொண்டு அழாதிருக்கும் அளவிற்கு, நம்மைச் சார்ந்தவர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துதளோடு, வேறு நல்ல விஷயங்களில் அவர்களை ஈடுபடுத்தி ரசனையை ஏற்படுத்துவது முக்கியம்.

(ஹ்ம்ம்.. இதை awareness range-க்கு சொல்லவேண்டியிருக்கிறதே என்று வெட்கமாக உள்ளது.)

kggouthaman said...

அட போங்கப்பா !
இந்த வருடம் சுதந்திர தினம் விடுமுறை நாளில் வந்திருச்சேன்னு
நான் வருத்தப் பட்டுகிட்டு இருக்கும் பொழுது ....
நீங்க வேற..
என்று வருத்தமாய்க் கூறுகிறார் ஒரு
மானாட மயிலாட ரசிகர்.

ந.லோகநாதன் said...

எல்லாரும் நாளைக்கு சன் டிவி, கலைஞர் டி.வியில் கொத்து படம் பார்ப்பார்கள்.... மற்ற படி வழ்க்கம் போல தேசப்பிதா காந்தியடிகளை திட்டுவார்கள்...

Pushkarani said...

வீராங்கனை லக்ஷ்மிக்கு வீர வணக்கங்கள்
உரிய நேரத்தில் சிந்தனைக்கு கொணர்ந்த தோழர்க்கு நன்றி

Pushkarani said...

வீராங்கனை லக்ஷ்மிக்கு வீர வணக்கங்கள்
உரிய நேரத்தில் சிந்தனைக்கு கொணர்ந்த தோழர்க்கு நன்றி

நல்லூரான் said...

இந்தியாவுக்கு சுதந்திரமா ???!! இந்திய மக்களை நினைக்கும் போது எனக்குப் பரிதாபம் மேலிடுகிறது. இந்தியாவை யாரிடம் ஒப்படைக்கப் போகின்றீர்கள்? கயவர்கள், தன்னலத்தைத் தவிர வேறு அறியாத அயோக்கியர்கள், நாக்கில் இனிமையும், உள்ளத்தில் கபடும் நிறைந்த ஏமாற்றுவித்தைக் காரர்கள், துதிபாடிகள்,முதுகெலும்பு இல்லாதவர்கள், அதிகாரத் தரகர்கள், இவர்கள்தானே இந்தியாவின் எதிர்கால அரசியல்வாதிகளாக இருக்கப் போகிறார்கள்? இந்தியாவின் எதிர்காலத்தை நினைத்து இப்பொழுதே நான் அச்சம் கொள்கின்றேன்..’ தீர்க்கதரிசி-Winston Churchill,1946


டாஸ்மாக் வாடிக்கையாளர்களுக்கும், கலர் டிவி கையேந்திகளுக்கும் "ADVANCE HAPPY INDEPENDENCE DAY" :-)..

மெனக்கெட்டு said...

//
நாளை டிவியை அணைத்துவிட்டு, காந்தியடிகள் எழுதிய சத்திய சோதனையை 15 பக்கமாவது படிக்க முடிவு செய்துள்ளேன்.
//

சத்ய சோதனை : இண்டெர்நெட் ல் இலவசமாக படிக்க இங்கே சுட்டி கொடுக்கப் படுகிறது.

http://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai0.html

படித்துவிட்டு கதையைச் சொல்லவும்.

தோமா said...

மிக அருமையான பதிவு......

முன்கூடியே சுதந்திரதின செய்தியை வெளியிட்டு முந்திகொன்டீர்.

/இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக நாளை டிவியை அணைத்துவிட்டு, காந்தியடிகள் எழுதிய சத்திய சோதனையை 15 பக்கமாவது படிக்க முடிவு செய்துள்ளேன். நீங்கள் ?/ அருமை .....

இந்த டிவி ல் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளில் சுதந்திர போராட்ட வேரர்களின் பேட்டிகளை பார்க்கும் பொது டிவி யை உடைக்கலாம்னு தோனுது, என்ன பண்றது காசு போட்டு டிவி வாங்கிட்டேன்

ஈ ரா said...

மிக நல்ல பதிவு.....

கம்யூனிஸ்டுக்களை திருப்தி படுத்த கலாமை எதிர்த்து நின்றார் என்ற ஒரு வருத்தத்தைத் தவிர, எல்லா வகையிலும் வியக்க வைக்கும் புரட்சி பெண்மணி..

இ. வ., இன்பா மற்றும் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்

Inba said...

இட்லிவடை, வாசகநண்பர்கள்
அனைவருக்கும்
என்
சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்

ஜெய்ஹிந்த்.

அன்புடன்
இன்பா

Baski said...

Wish all readers a happy Independence Day!!!

"Good countries are not born.. they are made." - I am optimistic in this regard.

திரவிய நடராஜன் said...

அன்பு தம்பி,
பலருக்கும் ப்லனளிக்கும் வகையில், நுகர்வோர் சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய புதிய வலைப்பூ ஒன்றை " சட்டம் நம் கையில் " என்ற பெயரில் புது முயற்சியாக துவக்கியிள்ளேன். அதன் url http://lawforus.blogspot.com/ ஆகும். வலைப்பூவிற்கு சென்று பார்த்து தங்கள் கருத்தை சொல்லவும்
நன்றி
பி. திரவிய நடராஜன்

லவ்டேல் மேடி said...

ஜெய்ஹிந்த்.......

ஆ.ஞானசேகரன் said...

//இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக நாளை டிவியை அணைத்துவிட்டு, காந்தியடிகள் எழுதிய சத்திய சோதனையை 15 பக்கமாவது படிக்க முடிவு செய்துள்ளேன். நீங்கள் ?//

நல்ல முடிவு பாராட்டுகள்..
சுதந்திர தினவாழ்த்துகளும்

R.Gopi said...

//இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக நாளை டிவியை அணைத்துவிட்டு, காந்தியடிகள் எழுதிய சத்திய சோதனையை 15 பக்கமாவது படிக்க முடிவு செய்துள்ளேன். நீங்கள் ?//

படிக்கணும்னு முடிவு பண்ணிட்டா முழுசா படிங்க......

அனைவருக்கும் சுதந்திர தினவாழ்த்துகள்.....

Anonymous said...

what a superbbbb post

salute the nation

லெனின் said...

இந்த பண்டிட் கேப்டன் லட்சுமியை தான் நம் இன்றைய தலைவர்கள் ஜனாதிபதி தேர்விலிருந்து புறக்கணித்து நன்றிக்கடன் செலுத்ததினார்கள் வாழ்க சனநாயகம்.

சுழியம் said...

//....1970 களில் நேதாஜியின் வழிகாட்டுதலின்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிபணிகளிலும், வங்கதேச போர்காலங்களில் அகதிகளுக்கான மருத்துவ சேவைகளில் ஈடுபட்டார். ....//

1970களில் நேதாஜி வந்து வழிகாட்டினாராம்மா? நல்ல ஜோக்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாம்மா? அதைவிட பெரிய ஜோக்.

நமக்குக் கிடைத்ததெல்லாம் வெறும் ப்ரொமோஷன்.

எவாஞ்சலிக்க ஆங்கிலேயர்கள் செய்ய விரும்பியதைச் செய்ய நமக்குக் கிடைத்த பதவி உயர்வை சுதந்திரம் என்று தப்பாகப் புரிந்துகொண்டு விடக்கூடாது.

என்ன ஆதாரம் என நீங்கள் கேட்கலாம்?

நீங்கள் சொன்ன ஐ.என்.ஏ விஷயத்திலேயே இந்திய சுதந்திரம் பல் இளித்துவிட்டது.

”சுதந்திரம் பெற்றபின்” இந்திய ராணுவத்தில் ஐ.என்.ஏயில் பணிபுரிந்த யாரையும் சேர்க்கக்கூடாது என்று அரசு சொல்லிவிட்டது.

இதுதான் நீங்கள் சொல்லுகிற சுதந்திரத்தின் லட்சணம்.

சுழியம் said...

//......இந்த பண்டிட் கேப்டன் லட்சுமியை தான் நம் இன்றைய தலைவர்கள் ஜனாதிபதி தேர்விலிருந்து புறக்கணித்து நன்றிக்கடன் செலுத்ததினார்கள் வாழ்க சனநாயகம்.......///

நன்றிக்கடன் செலுத்தவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், ஜனாதிபதி தேர்வு ஒன்றுதான் வழியா?

அடுத்து வந்த எலக்சன்களில் ஒரு வார்ட் கவுன்சிலர் பதவிக்குக்கூட போட்டிபோட வைக்காத கம்யூனிஸ்ட் கட்சியின் “நன்றிக்கடன்” புல்லரிக்கவைக்கிறது.

சுழியம் said...

சுதந்திரம் கிடைத்துவிட்டால், சுதந்திரம் கிடைத்ததுபோல நடந்துகொள்ள வேண்டும்.

நாட்டின் வளர்ச்சிக்கு, மக்களின் நல்வாழ்விற்குச் செயல்படாமல் உலக நாடுகளிடையே நல்ல பெயரைப் பெறுவதுதான் லட்சியம் என்று இருக்கும் அரசாங்கம் திருத்தப்படவில்லை.

நாட்டின் நில, நீர், கனிம, ஆற்றல் மூலாதாரங்கள் சரியாகக் கையாளப்படவில்லை.

கிறுத்துவ, இசுலாமிய, கம்யூனிச இழிமதங்களின் மதவெறிக் கொலைகளைப் பற்றியும், தவறான செயல்பாடுகளைப் பற்றியும் வெளியே பேச சுதந்திரம் இல்லை.

அவர்களிடம் காசுவாங்கிக்கொண்டு ஆட்சி நடத்துபவர்களின் அக்கிரமங்கள் தடுக்கப்படவில்லை.

அதற்குப் பதிலாக வெட்டித்தனமான சாதி, மத, பொருளாதார, மொழி பிரிவுகளின் அடிப்படையில் வேலை செய்யும் அரசியல்கள் அழிக்கப்படவில்லை.

ஒற்றுமையையும், வளர்ச்சியையும் பிரச்சினையாக முன்வைக்காமல், வேற்றுமையையும், போலிசெக்யூலரிசத்தையும் முன்வைத்து இயங்குகின்ற அரசியல்-சமூகப் போக்கு திருத்தப்படவில்லை.

நாகலாந்து ஏசுவிற்கே என்ற கோஷங்களோடு தனிநாகலாந்து நாடு கேட்கிற தீவிரவாதக் குழுக்கள் அழிக்கப்படவில்லை.

போனவாரம் கேரளாவில் இசுலாமியர்களுக்குத் தனிநாடு கேட்டு போராட்டம் ஆரம்பித்திருப்பவர்களைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.

தனித்தமிழ்நாடு கேட்பவர்களை ஊக்குவிக்கும் தமிழ்நாட்டு சர்ச்சுகளை யாரும் கவனிப்பதில்லை.

இந்தியாவிலேயே அகதிகளாக வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பற்றி யாரும் பேசுவதில்லை. காஷ்மீரப் பண்டிதர்களும், ரியாங்குகளும் இதுவரை நடந்த வரலாற்று விளைவுகள். ஹிந்துக்களாக இருந்ததைத் தவிர வேறு எந்தத் தவறையும் அவர்கள் செய்யவில்லை.

ஆனால், இந்த நிலை நமக்கு ஏற்படாது என்ற கற்பனை உலகில் இருந்து மற்ற இந்தியர்கள் வெளிவரவில்லை.

இந்த நாடு இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகளில் பலதுண்டுகளாகச் சிதறப்போகிறது என்ற உண்மையை சொல்லாமல், 62 ஆண்டுகால சீரழிவின் ஆரம்பத்தைக் கொண்டாடுவது, இந்தியா-பாக்கிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது தேசபக்தி என்று புரிந்துகொள்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

Ravi said...

highly valuable post

few years back captain lakshmi has informed to the media that Nethaji is still alive

//இந்த நாடு இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகளில் பலதுண்டுகளாகச் சிதறப்போகிறது என்ற உண்மையை சொல்லாமல், 62 ஆண்டுகால சீரழிவின் ஆரம்பத்தைக் கொண்டாடுவது, இந்தியா-பாக்கிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது தேசபக்தி என்று புரிந்துகொள்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
//

mr.suzhiyam alias zero,

mind it.

you have freedom to write such a bullshit comments