பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, August 30, 2009

சந்திராயன் என்ன அனுப்பியது ?

இந்தியாவின் முதல் ஆளில்லாத நிலவு விண்கலமான சந்திராயன்-1, அக்டோபர் 22ம் தேதி ஏவப்பட்டதை பலர் டிவியில் பார்த்து பெருமை கொண்டோம். இதற்கு ஆன செலவு ரூ.400 கோடி.

இன்று வந்த செய்தி சந்திராயனுக்கும், இஸ்ரோவுக்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது என்பது தான். அதாவது இரண்டு வருடம் சுற்றி நமக்கு தகவல் அனுப்ப வேண்டிய சந்திராயன் ஒரு வருடம் ஆவதற்கு முன்பே அதன் கதை முடிந்துவிட்டது.

எதற்கு 400 கோடி வீண் செலவு என்று இப்பவே பலர் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இலவச டிவிக்கு ஆகும் செலவை பற்றி யாரும் கணக்கு போட்டு பார்ப்பதில்லை. நிற்க.

கடந்த 9 மாதங்களில் 3 ஆயிரம் முறை நிலவை சுற்றி சுமார் 70 ஆயிரம் புகைப்படங்களை இந்த விண்களம் அனுப்பியிருந்தது. ஆனால் சந்திராயன் மேலே சென்றதிலிருந்து ஏதாவது பிரச்சனை வந்துக்கொண்டே தான் இருந்தது.

17 ஆம் நாள் சந்திராயன் வழிகாட்டும் வசதியில் கடும் இயந்திர கோளாறு ஏற்பட்டது என்று இஸ்ரோ கூறியது. அதற்கு பிறகு சந்திரனுக்கு சுமார் 200 கிலோமீட்டர் அப்பாலுள்ள சுற்றுவட்டப் பாதையில் பறக்கின்றது என்று தெரிவித்தது. ( 100 கிலோமீட்டர் பாதையில் தான் அது பயணிக்க வேண்டும் ). அதற்கு படங்கள் எடுக்க இது ஏதுவாக இருக்கும் என்று காரணம் சொன்னார்கள்.

அப்பறம் 'Raw' தகவல் வந்துக்கொண்டு இருக்கிறது அதை நாங்கள் ஆய்வு செய்கிறோம் என்றார்கள்.

ஜூலை மாதம் ந்திராயனின் இருந்து 2 ஸ்டார் சென்சார்கள் பழுதானது, விண்வெளி கதிர் வீச்சுகளை தாங்க முடியாமல் போனதே பழுதுக்கு காரணம் என்று சொன்னார்கள்.

இன்று தகவல் துண்டிப்பு என்று சொல்லிவிட்டார்கள்.


நான்காம் வகுப்பு ஸ்கூல் பாட புத்தகத்தில் பார்த்த நிலவின் மேடுகளும், குழிகளை தவிர சந்திராயன் நமக்கு அனுப்பிய தகவல் என்ன என்று யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.


40 Comments:

Anonymous said...

மிக நல்ல பதிவு. ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து கொள்ள வேண்டிய பதில்களை எதிர் பார்க்கும் கேள்விகள். well done இட்லிவடை.

//நான்காம் வகுப்பு ஸ்கூல் பாட புத்தகத்தில் பார்த்த நிலவின் மேடுகளும், குழிகளை தவிர சந்திராயன் நமக்கு அனுப்பிய தகவல் என்ன என்று யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.//

இதை விளக்குவது என்பதை விட, உபயோகமாக எந்த ஆராய்ச்சிகளுக்கு இந்த mission உபயோகப்பட்டது என்று crisp ஆக சொன்னால் நன்றாக இருக்கும்.

சில மாதங்கள் முன்பு controversial ஆக ஒரு statement குடுத்தார்கள். இதன் மூலம் தீவிரவாதிகளின் நடமாட்டங்களைக் கண்காணிப்பதாக.

அதை விடுத்து, நம்மைப் போல் பொதுஜனமும் புரிந்து கொள்ளும் படி day-to-day வாழ்க்கைக்கு என்ன உபயோகம் இந்த சந்த்ராயனால் என்று ISRO தலைவர் அறிக்கை விட்டால் நன்றாக இருக்கும். அல்லது, ISRO or VSSC இல் பணி புரியும் இட்லிவடை வாசகர்கள் யாராவது சொன்னால் சந்தோஷம்.

Anonymous said...

//எதற்கு 400 கோடி வீண் செலவு என்று இப்பவே பலர் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இலவச டிவிக்கு ஆகும் செலவை பற்றி யாரும் கணக்கு போட்டு பார்ப்பதில்லை.//

உண்மை. இதை வீண் செலவு என்று வாதிடுவது தவறு. இருந்தாலும், இதுவும் "accountable" என்ற categoryயில் சேர்க்கப்படவேண்டும்.

டகிள் பாட்சா said...

இது போன்ற தோல்விகளைக் கண்டு மனம் வெறுத்தால் முன்னேற்றமே இருக்காது. எடிசன் பல கண்டுபிடிப்புகளை பல தோல்விகளை தழுவிய பிறகே வெற்றிகரமாக முடித்தார். No need to ridicule the effort. இந்தியா இன்னும் பன்மடங்கு உறுதியோடும், வேகத்தோடும் முன்னேறும் என்பதில் ஐயமில்லை.

sandoz said...

ஒரு விஷயம் பத்தி தெரில்லனா, எனக்கு தெரியல யாரச்சும் சொல்லுங்கன்னு சொல்லணும்.. இது மாதிரி குத்தி காட்ட கூடாது.. இன்னும் கொஞ்ச நாள் போச்சினா இந்தியா அனுப்பின எல்லா satellite பத்தியும் இந்த மாதிரி வெட்டி பேச்சு பேசிகிட்டே இருக்க வேண்டியது தான்.. டி கடை பெஞ்ச் மாதிரி ஆயிடுச்சி இட்லி வடை..

Vedantha Desika Dasan said...

எந்த ஒரு சோதனையும் உடனே சாதனை ஆவது இல்லை. சந்திராயன் விண்கலம் நிச்சயம் இந்திய அறிவியல் உலகில் ஒரு சாதனை தான். இன்னமும் முயன்றால் அமெரிக்க சாதனையையும் மிஞ்சி நம்மால் விண்ணில் சாதனை படைக்க முடியும்.

Let us hope India achieve it!

jaisankar jaganathan said...

//"சந்திராயன் என்ன அனுப்பியது //

வெட்டி பந்தா

kggouthaman said...

செலவு அதிகம் - என்பது தெரிகிறது. சந்திராயனால் நாம் அடைந்த பயன்கள் என்ன - அதனுடைய மதிப்பு என்ன என்பது தெரிய வில்லை - ஏற்கெனவே சந்திர ஆராய்ச்சி செய்த நாடுகள் - தகவல் பரிமாற்றம் செய்து கொண்டால் போதாதா? என்றும் தோன்றுகிறது.

kggouthaman said...

சந்திராயன் என்ன அனுப்பியது? - நாம் கூடத்தான் நம்முடைய ச.ம / பா ம உறுப்பினர்களை வோட்டுப் போட்டு அனுப்பி வைக்கிறோம் - அவர்களால் நமக்கு ஏதாவது பலன் உண்டா?

கிருஷ்ணமூர்த்தி said...

/சந்திராயன் என்ன அனுப்பியது?/

நிச்சயமா இட்லிவடை, பொங்கல், பூரி இல்லை!

முயற்சிப்பதே முன்னேறுவதற்கு முதல் படி! நாலாவது வகுப்புப் பாடப் புத்தகத்தில் அதெல்லாம் வராது!

Anonymous said...

பயனென்ன, பயனென்ன என்று கேட்டுக்கொண்டே இருக்கலாம், ஒவ்வொன்றையும், இதில் எதற்கும் எளிதாக விடை காணமுடியாது, விடை காண முடிந்தால், உங்கள் விசாரணை-அதைப் பற்றிய உங்கள் ஆராய்ச்சி- போதுமானதல்ல என்பதே என் எண்ணம், உதாரணத்திற்கு, பயனென்ன...தோற்றுப்போய்விட்டதே... ஏற்கனவே செய்தது தானே... என்று கேட்டால்... தினமும் தான் விடிகிறது... தினமும் யாரோ எங்கோ கலவி கொள்கிறார்கள்... இது எல்லாம் முன்னமே நிகழ்ந்து/செய்யப்பட்டுக் கொண்டிருந்தது தானே... என்று மட்டுமே சொல்லமுடியும்... எந்தக் குழந்தையும், தீயையோ... சூடான பொருளையோ தொடாமல், சூடு என்பதென்ன என்பதை அறிந்துகொள்ளமுடியுமா?

தோமா said...

சந்திராயன் தோல்வியா என்று பலரும் கேட்கிறார்கள். இது தோல்வியே இல்லை.
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் கடந்த பிறகு தான் நாம் ஓரளவிற்கு விஞ்ஞானத்தில் முன்னேறி வருகிறோம்.நாம் சந்தித்த பல தேர்தல்களில் ஆன செலவுகளை கணக்கில் எடுக்கும் போது ரூ 400 கோடி வெறும் சொற்பமான செலவே.
இன்னும் வரும் காலத்தில் மிக திறன் வாய்ந்த பல செயற்ற்கை கோள்களை விண்ணிற்கு அனுப்பி சாதனை புரிவோம்.

சங்கர் தியாகராஜன் said...

இட்லிவடை, என்ன எழுதுகிறோம் என தெரிந்து தான் எழுதுகிறீர்களா?

Anonymous said...

அதெல்லாம் பரவாயில்லை. ஆனால் சந்திராயன் போன அப்புறம் நம்மூரில விக்ன்னானின்னு ஒருத்தர பத்தி பீலா விட்டாங்க பாருங்க. அவரு கடவுள் மறுப்பு கொள்கையாளராம். 'சாமி கும்பிட்டெல்லம் சந்திராயனை அனுப்ப முடியாது'ன்னு ஸ்டேட்மெண்ட் வேற. அதனாலத்தான் சந்திராயன் ஊத்திக்கிச்சோ?

IdlyVadai said...

சந்திராயன் அனுப்பியது தவறு வேஸ்ட் என்று சொல்லவில்லை. அதை அனுப்பி அவர்களுக்கு என்ன கிடைத்தது என்று இதுவரை எனக்கு சரியாக தெரியவில்லை. சந்திராயன் -2 க்கு முழு வெற்றி கிடைக்க பிராத்திக்கிறேன்.

jaisankar jaganathan said...

//எந்த ஒரு சோதனையும் உடனே சாதனை ஆவது இல்லை. சந்திராயன் விண்கலம் நிச்சயம் இந்திய அறிவியல் உலகில் ஒரு சாதனை தான். இன்னமும் முயன்றால் அமெரிக்க சாதனையையும் மிஞ்சி நம்மால் விண்ணில் சாதனை படைக்க முடியும்.
//

தேசிகன் ஏற்கனவே சந்திரன் பற்றி ஆராய்ந்து முடித்த போது அந்த தகவல்களே போதுமானது இல்லையா. ஏன் இந்த தேவை இல்லாத வேலை. வேறு ஆராய்ச்சிக்குப் பயன்படலாம் இல்லையா

Anonymous said...

hi sir
we mustnt discourage our country
u have asked sum i would lik to answer them
they(scientist n common people) have been saying b4 tht it was a mystery abt the temperature of moon but aftr sending this we knew abt tht
thn abt the minerals found there
and the scientist have prepared almost 1/3red of the map of moon
hope u understood

RAD MADHAV said...

////நான்காம் வகுப்பு ஸ்கூல் பாட புத்தகத்தில் பார்த்த நிலவின் மேடுகளும், குழிகளை தவிர சந்திராயன் நமக்கு அனுப்பிய தகவல் என்ன என்று யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.//

Pls read the following:

Chandrayaan beams back 40,000 images in 75 days

Chandrayaan-1 has transmitted more than 40,000 images of different types since its launch on October 22, 2008, which many in ISRO believe is quite a record compared to the lunar flights of other nations. ISRO officials estimated that if more than 40,000 images have been transmitted by Chandrayaan's cameras in 75 days, it worked out to nearly 535 images being sent daily. They are first transmitted to Indian Deep Space Network at Byalalu near Bangalore, from where they are flashed to ISRO's Telemetry Tracking And Command Network (ISTRAC) at Bangalore.

They said some of these images have a resolution of up to 5-metre providing a sharp and clear picture of the Moon's surface. On the other hand, they said many images sent by some of the other missions had a 100-metre resolution.

On November 26, the indigenous Terrain Mapping Camera, which was first activated on October 29, 2008, took shots of peaks along with craters. This came as a surprise to ISRO officials because the Moon consists mostly of craters.[56]

Detection of X-Ray signals

The X-ray signatures of aluminium, magnesium and silicon were picked up by the C1XS X-ray camera. The signals were picked up during a solar flare that caused an X-ray fluorescence phenomenon. The flare that caused the fluorescence was weaker that the minimum the C1XS was designed to sense but was still picked up, highlighting its sensitivity.[57][58][59]


After the successful completion of all the major mission objectives, the orbit of Chandrayaan-1 spacecraft, which was at a height of 100 km from the lunar surface since November 2008, has now been raised to 200 km. The orbit raising manoeuvres were carried out between 09:00 and 10:00 IST on May 19, 2009. The spacecraft in this higher altitude enabled further studies on orbit perturbations, gravitational field variation of the Moon and also enabled imaging lunar surface with a wider swath.[61]


As per a review by scientists, the mission has completed its primary objectives consisting of

* To realize the complex spacecraft with 11 scientific instruments.
* To place the spacecraft in a circular orbit around the moon by orbit raising manoeuvres from a near Earth orbit.
* To place the Indian Tricolour on the moon.
* To carry out imaging operations and to collect data on the mineral content of the lunar regolith.
* To realize the deep space tracking network and implement the operational procedures for travel into deep space.

The data collected from the mission have been disseminated to the Indian scientists and also the partners from Europe and USA for analysis.[62][63][64]

Bistatic RADAR experiment with LRO

On August 21, 2009 Chandrayaan-1 along with the Lunar Reconnaissance Orbiter was used to perform a Bistatic radar experiment to detect the presence of water ice on the lunar surface.In this experiment, Chandrayaan emanated RADAR pulses which, after reflection from the surface, were picked up by the receivers of Chandrayaan and in a different angle by the LRO. Both receivers, Mini-SAR in Chandrayaan and Mini-RF in LRO, are similar in nature. They were pointed at the Erlanger crater for four minutes during which the observations were made.

இது ஒரு முதல் முயற்சி. தோல்வியும் பின்னடைவும் யதார்த்தம்.
துவளாமல் அடுத்த கட்ட பணிகள் துவங்கும்.

இன்று நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் கூட தேவையான தகவல்களை வலையில் தேடிக் கண்டு பிடிக்கும் திறன் கொண்டிருக்கும் போது, ஒரு வலைப் பதிவருக்கு (அதுவும் அறுநூறுக்கும் மேற்பட்டோர் பின்பற்றும் ஒரு வலைப் பதிவு) தெரியவில்லை எனும்போது, வருத்தமாக இருக்கின்றது. மிஸ்டர் இட்லி வடை.

இதுவும் உங்கள் வழக்கமான நையாண்டி ஸ்டைல் கேள்வியோ. ???? :-)

RAD MADHAV said...

For more details, visit

http://en.wikipedia.org/wiki/Chandrayaan-1

Erode Nagaraj... said...

ரிமோட் ஜாமர்கள் போல, சந்த்ராயனை ஏதேனும் அந்நிய சக்திகள் முடக்கியதா என்பது பற்றி மத்திய உளவுத்துறை ரகசிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்களைப் பர்ரட்டுவதற்கு முன், இது போன்ற சோதனை நிகழ்வுகளின் வெற்றியைக் கொண்டாடுவதில் நிதானம் கடைபிடிக்க ஊடகங்கள் முன்வர வேண்டும்.

பாராட்டுதல் தவறல்ல. ஆனால், அதன் நிஜமான தொழில்நுட்பம் சார்ந்த காரணிகளை விளக்கி மக்களிடத்தில் இந்திய அறிவியலின் மீது நம்பிக்கையின்மை வராமல்எழுதவேண்டும்.

தமிழன் said...

அவனவன் ஒருவேளை சாப்பாடு கஞ்சி இல்லாம பட்டினி கிடக்கிறான். இந்த லட்சணத்துல நானுறு கோடி ரூபாவை வீணாக்கியிருக்கிறாங்கள்.

வலைஞன் said...

இப்படி சிந்திப்போமா?

எந்த காலத்திலும் இந்தியாவுக்கோ,இந்தியர்களுக்கோ பயன் அல்லது பெருமை தராத பல திட்டங்களில் ஆயிரம் கோடி வீணாக்குவதை பற்றி கவலை படாத நாம்,என்றோ ஒரு நாள் இந்தியாவுக்கோ,இந்தியர்களுக்கோ பயன் அல்லது பெருமை அளிக்கும் சாத்தியகூறுள்ள ஒரு 400 கோடி ருபாய் திட்டத்தை பற்றி ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும் ?

kggouthaman said...

எனக்குத் தோன்றுவது இது:
சர்க்கஸ் பார்க்கப் போகிறோம் - பார்த்துவிட்டு வருகிறோம் - சர்க்கஸில் பார்த்த சில வித்தைகளை - நமக்கு எளிது என்று தோன்றுபவைகளை - நாமும் செய்து பார்த்தால் என்ன என்று தோன்றும் - செய்தும் பார்ப்போம். அமெரிக்கா ஆரம்பித்து வைத்தது இந்த சர்க்கஸ் - இந்தியா செய்து பார்க்கிறது. அமெரிக்காவுக்கு ஏராளமானோர் கை தட்டினார்கள் - இந்தியாவுக்கு?

Prasanna said...

Every scientists made mistakes when they created this satellite. But everybody should blame only Chandrayan. Our scientists have disappointed Dr. Abdul Kalam. Dr.Abdul Kalam thought that we should progress within 2020, when our scientist launched this satellite. but now?.....

Anonymous said...

சந்திராயன் மேட்டர் எல்லாம் தேவ ரகசியம் போன்றது. வெளியே சொல்ல மாட்டார்கள். எல்லாவற்றையும், எல்லோரிடமும் சொல்லிவிட்டால் அப்புறம் அரசாங்க ரகசியங்களை (தோல்விகளையும் கூட) எப்படிக் காப்பாற்றுவது? நாசா செய்ய்யும் ஆய்வுகளை எல்லாம் பொதுமக்களிடம் சொல்லிவிட்டா செய்கிறது.

மாங்காய் புளித்ததோ மண்ணாங்கட்டி இனித்ததோ என்று பேசக் கூடாது.

சுப்புராஜ்
கொத்தமங்கலம்

Anonymous said...

மேற்கொண்டு இதுபோன்றவற்றின் உள் விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், தொடர்பு கொள்க....

http://bhuvan.nrsc.gov.in/

சுப்புராஜ்
கொத்தமங்கலம்

ravi said...

IV's sarcastic yellow comment shows disrespect to this commendable feat. The mission may not have lasted for the entire expected duration and may even be called only a partial success but it still has achieved many things. It has put India along with very few countries to have achieved same feat and this has far more implication than being called as "vetti bandha". Within India it has raised scientific curiosity among common people, and is going to inspire newer generation in science and technology. People talk about cost of this mission and bring poverty in India into context. A country can never progress if you can't spend for scientific research and education.

Anonymous said...

a) We have a tendency to boast about "low cost" sometimes low cost is also low yield. This is an example.
b) Mission to moon is commendable but with the way things are progressing we may have commercial crafts to moon.
There are other examples:
c) Jet engine indigenisation has sunk thousands of crores of tax payers money so far but has limited success still in prototype after nearly three decades.
d) Our CSIR's and the likes guzzle money and produce papers with very little commercial success.
e) The guys are the best the country can produce but the system that governs them is archaic. Once these institutions are out of government control in management moon or mars or even beyond will not be a big deal for the Indian Engineer.

blogpaandi said...

இட்லி வடை சொன்னது போல் சந்திராயன் 2 வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Anonymous said...

இ.வ., சந்திரயான் எந்த தகவலும் அனுப்பாவிட்டாலும், அது ஒரு மிக அவசியமான முயற்சியே. யோசித்துப்பாருங்கள், இவ்வளவு பெரிய ப்ரோஜெச்டினால் எவ்வளவு வெவ்வேறு அறிவியல் பிரிவுகளில் முன்னேற்றம் காணலாம் என்று... aerospace, imaging, communications, solar power, material sciences, computing, satellite control, etc. etc., முயற்சி செய்தால் தானே நம்மால் எவ்வளவு முடியும் என்று நமக்கே அறிய உதவும்?

உங்கள் கேள்விக்கு பதில் (நான் வெறும் ஆர்வம் கொண்டவன் மட்டுமே, பதில் அளிக்க தகுதியானவன் இல்லை): நிலவில் மண்ணுக்குள் ஏதேனும் அறிய உலோகம் கிடைக்குமேயானால், இன்பிரா ரெட் இமகிங் மூலம் கண்டு கொள்ளலாம். ஒரு வேளை uranium, plutonium போன்ற உலோகங்கள் இருந்தால், மற்ற நாடுகளை நம்ப அவசியம் இல்லை. மேலும் என்ன பயன் என்று, போய் பார்த்தல்தானே தெரியும்? குண்டு சட்டியில் குதிரை ஓட்டினால் என்றென்றும் மற்ற நாடுகளை பின்தங்கியே இருக்க வேண்டும்

Anony8 said...

Chandraayan-1 is a Huge success by any means. The amount we spent on this was worth every Paisa of it. Those losers suggesting it's waste of money, just stfu and get out of your ignorance.

When it comes to accountability, yep they could've done more. I really don't want to compare, but none of the first timers could achieve even 1/4th of what we've done.

- Someone indirectly involved in this project.

Kameswara Rao said...

இ,வ,

சந்திரயான் ஒரு சாதனை என்று தான் இன்னும் சொல்லிகொண்டிருக்கிறார்கள் "தகவல் அறியும்" சட்டத்தின் கிழ் யாரவது உண்மை தெரிந்துகொண்டு பேசினால் தான் உண்டு
திருவாளர் ராத் மாதவ் கூறியதைப் பார்த்தல் பல உபயோகமான தகவல்கள் கிடைத்ததுபோல் உள்ளது... இங்கு நான் சிண்டுமுடியும் வேளையில் இறங்கவில்லை ஆனால் சந்திரமண்டலத்தில் முதல் முதலில் கால் பதித்த திரு armstrong பேட்டியே கொடுத்ததில்லை, ரஷ்ய கேட்ட கேள்விகள் (நிலவில் கால் பதித்த மிஷன் குறித்து) நாசா பதில் கூறவில்லை என்பது உண்மை.

Kamesh

ஜபருள்லாஹ் குத்புதீன் said...

சந்திராயன் 1 – சாதித்தது என்ன ! சிறிய அலசல் !


மனிதனின் நீண்ட கால நிவி பற்றிய ஆராய்ச்சியில்,

இன்னமும் விடை காண முடியாத பல கேள்விகள் புதைந்து இருக்கின்றது ,

1. நிலவில் என்ன தாது பொருட்கள் இருக்கின்றது?

2. பூமிக்கு இவளவு பெரிய -இயற்கையான ஒரு SATELITE எப்படி இயங்குகிறது என்ற கேவிக்கு விடை?

3. நிலவின் துருவ பகுதியில் உறைபனி இருக்க கூடுமா ?.....விடை கிடைத்ததா ?????????அமாம் !!!!!!!!!!!

இங்கே தெரிந்துகொள்ளுங்கள் ...


http://seidhigal.wordpress.com/2009/08/31/mission-chandraayan/

Baski said...

I wish ISRO to develop better satellite(s) for weather forecasts.

Good question IV !

What is the purpose/benifit of moon mission..?

R M S said...

இ.வ. சிறிதளவேனும் சந்திராயன் அல்லது He3 குறித்து விளக்கமாக படித்திருந்தால் இவ்வளவு மேலோட்டமான பதிவை போட்டிருக்க மாட்டார். அதுவும் மஞ்சள் வரிகள் இ.வ. இன் அறியாமையை மட்டுமே காட்டுகிறது.

sreeja said...

இந்த பதிவை படிக்கும்பொழுது இ.வ. மற்றும் பலரது ஆதங்கத்தையே வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

நாசா வின் வெப்சைட்டை பார்த்து பழகிய நமக்கு அதிகம் வெளிப்படுத்தாத இஸ்ரோவின் சைட்டை பார்க்கும்போது ஏற்படும் இயலாமையின் வெளிப்பாடே இந்த பதிவாக கருதுகிறேன்.

என்ன நடக்கிறதோ அதை எந்த அளவுக்கு பொது மக்களுக்கு தெரிய படுத்தவேண்டுமோ, அந்த அளவிற்காவது இஸ்ரோ தெரிய படுத்தலாம்.

கிருஷ்ணமூர்த்தி said...

ஸ்ரீஜா புரிஞ்சுதான் சொன்னாங்களோ, புரியாமச்சொன்னாங்களோ:

/என்ன நடக்கிறதோ அதை எந்த அளவுக்கு பொது மக்களுக்கு தெரிய படுத்தவேண்டுமோ, அந்த அளவிற்காவது இஸ்ரோ தெரிய படுத்தலாம்./

சந்திராயன் என்ன அனுப்பியதுன்னு, இட்லி வடையோட, சட்னி சாம்பார்களும் தெரிந்து கொள்ள இந்தப் பதிவு கொஞ்சம் உதவும்:
http://jayabarathan.wordpress.com/2009/08/27/chandrayaan-1-and-nasa-lro-find-ice/

Anonymous said...

@ திரு கிருஷ்ணமூர்த்தி அண்ணா!

The following are stated to be the MAJOR objectives of this mission.

சந்திரயான்-1 அனுப்பியதின் குறிக்கோள் :

1. சந்திரனின் தெரியும் முகத்தளம், மறைந்த பின்புறம் ஆகிய இரு தளப் பரப்புகளின் முப்புறப் படங்களைப் பதிவு செய்து (Three Dimensional Atlas) அனுப்புதல்.

2. சந்திர தளத்தின் இரசாயனத் தாதுக்கள் இருப்பு வரைப் படங்களைத் தயாரித்தல். (மெக்னீஸியம், அலுமினியம், சிலிகான், கால்சியம், இரும்பு, டிடானியம், ரேடான் வாயு, யுரேனியம், தோரியம்)


The question is that does anyone know what have we (இந்தியா (as a country)/ISRO (as an organisation) /we (the common public) learnt exactly until this date. In one of the interviews an ISRO senior official has stated that the 95% of ChandrAyan mission was achieved in 10 months (much before the planned tenure of 2 years!!!!!! If so, is it NOT possible to share the essence of the findings? (NOT necessarily the intricate details)..

An IMPORTANT point to ponder!

If ChandrAyan 1 was so-successful as claimed by the senior official that it could get 95% of the info in a record time (!), then what is the need to make the public statement "சந்திராயன் திட்டம் கைவிடப்பட்டது! (திரு மாதவன் நாயர்)"

Instead he could have said
"We accomplished what we wanted".


இதற்கு யாருக்காவது அர்த்தம் புரிஞ்சா சொல்லுங்க.

Prabhu Swaminathan said...

Someone should go ahead and file a Public litigation and ask ISRO to reveal the pics and mission details about Chandrayan, same way NASA shares to public details/pics from various satellites. I guess I have right to ask this because it my money. I totally agree that ISRO should continue their venture but it doesn't mean that they can go around spending money with out any result.

Anonymous said...

Hi,
No country will not reveal their usage of satellites and space strategy to the world.400cr in space research is nothing.We should not think that the money is waste.In near future, the country who leads in space race will be the super powers.this point are proved in past by USA and Russia.
Space science is not circus and other country are not clowns,most of the country having more wealth than India still they cant succeed in space science.
Gulf countries have amazing wealth, but they are still rely on other countries for launching thier satellites.Second point, think about ISRO scientist's capbility knowing about moon's orbit.These scientific capability leads India to bright future.Think about NASA's budget and thier talent pool, but also Failures counts. NASA is an indepedent organization free from budget comparing to other agency like FBI,NRO,CIA.President of US reserves the right to grant the bill for NASA.ISRO budget has to approved from unknown government servant to corrupted politician.NEVER EVER UNDER ESTIMATE ISRO CAPABILITY.

sandoz said...

http://beta.thehindu.com/sci-tech/article24322.ece?homepage=true