பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, August 25, 2009

விபுதி மணம்

"கைத்தல நிறைகனி அப்பமொடவல் பொரி" என்ற விநாயகர் துதிப்பாடலை கேட்டாலோ இல்லை எங்காவது படித்தாலோ கிருபானந்த வாரியாரின் தமிழும், குரலும் நம் நினைவுக்கு வந்துவிடுகிறது. 'திருமுக' என்ற அடைமொழிக்கு ஏற்ற ஒரு முகம் அவர் முகம். அதில் எப்போதும் புன்சிரிப்புமாய், நம் நினைவுகளில் கமழ்கிறது. ...அவர் நெற்றியில் பூசிஇருக்கும்... விபுதி மணம்.இன்று சுவாமிகள்(அல்லது) குரு என்று தன்னையே அழைத்துகொள்ளும் யாரையும் நீங்கள் காசு கொடுக்காமல் பார்க்கஇயலாது. சிலவருடங்களுக்கு முன்னால் நான் புனேவில் இருந்த ஒரு ஆஸ்ரமதிற்கு போனபோது, அங்கு உள்ள சுவாமிகள் இறைவனை அடையும் வழி (!) குறித்து பயிற்சிமுகாம் நடத்துவதாகவும், அதில் கலந்துகொள்ள 5000 கொடுங்கள் என்றார்கள்.

வேலூர் பொற்கோவிலை கட்டியதாக(?) கூறப்படும் சக்தி அம்மாவை 'தரிசிக்க' 1000 கட்டணம். ஸ்ரீ அம்மா மற்றும் கல்கி பகவானின் ஆஸ்ரம்கள் சார்லஸ் அரண்மனையின் 'மினியேச்சர்' வடிவங்கள்.

ஆனால், கிருபானந்த வாரியார் எளிமையின் வடிவமாக வாழ்ந்தவர். கூலி தொழிலாளிக்கும், கோடிஸ்வரனுக்கும் சரிசமமாக 'ஆன்மிகத்தை' கொண்டுசென்றவர்.

1906 ஆம் வருடம் வேலூர் அருகே உள்ள காங்கேயநல்லூரில் பிறந்த வாரியார் பள்ளியே சென்றதில்லை. இவருக்கு இசை, தமிழ் இலக்கண, இலக்கியங்களை,அற நூல்களை கற்பித்து, குருவாகவும் விளங்கினர் இவரது தந்தை மல்லையதாசர். நல்ல இல்லறத்தில் சிறந்துவிளங்குவதே துறவரதிர்க்கான முதல்படி என்னும் இந்துமத நெறிப்படி இளம்வயதில் திருமணம் செய்துகொண்டவர்.
(இன்று உள்ள 'சாமியார்கள்' முறைப்படி 'ஒன்று'கூட இல்லாமல், முறையே இல்லாமல் 'ஊருக்கு ஒன்றாய்' வைத்துகொள்கிறார்கள்).

1936 இல் முருகவழிபாட்டை ஆரம்பித்தவர், திருப்புகழமிர்தம் என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்து, திருப்புகழ், கந்தர்அலங்காரம் போன்றவற்றுக்கான உரைகளும்,
சமய கட்டுரைகளையும் எழுதினார். 1956 இல் திருப்புகழ் திருச்சபை என்ற அமைப்பை நிறுவி கோவில்களுக்கான திருப்பணிகள் மற்றும் ஏழைமக்களுக்கான கல்வி,மருத்துவ சேவைகளையும் செய்தார். 57 ஆண்டுகள் அவர் ஒருநாளும் முருகவழிபாட்டை நிறுத்தியதுஇல்லை, 1993 இல் அவர் இறைவனடிசேரும் வரை.

தன் சமய,தமிழ் பணிகளுக்காக அண்ணாமலை மற்றும் தஞ்சை பல்கலைகழகங்களால் முனைவர் பட்டம் பெற்றவர் வாரியார். சிதம்பரத்தில் ஒரு சொற்பொழிவின்போது நான் கேட்ட "என்அப்பன் முருகன்" என்னும் குரல் இன்னும் நினைவில் இருக்கிறது. மக்களை தன் தமிழாலும், நகைச்சுவை உணர்வாலும் கட்டிபோட்டவர் அவர்.

ஒருமுறை கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவனை பார்த்து முருகபெருமானின் தந்தை பெயரை கேட்க, சினிமா பார்த்த ஞாபகத்தில் அந்த சிறுவனும் உடனே "சிவாஜி" எனப் பதிலுரைத்தான். சுற்றியிருந்த மற்றவர்கள் அச்சிறுவனை கடிந்தனர். உடனே வாரியார், "அவன் சரியாகத்தானே கூறியுள்ளான், அவனை ஏன் கடிந்து கொள்கிறீர்கள்? பெரியவர்களை மரியாதையாக விளிக்கும் போது ஹிந்தியில் ஜீ என்று இறுதியில் சேர்த்து சொல்வது வழக்கம். அவ்வாறே இவனும் முருகனின் அப்பனை மரியாதையுடன் விளித்துள்ளான். அவன் சொன்னது சரியே" என்று சிவாஜிக்கு புது அர்த்தம் சொன்னவர் வாரியார்.

இன்று உள்ள ஆன்மிகவாதிகளுக்கு போஸ்டர்கள், பேனர்கள், டிவி/பத்திரிகை விளம்பரம் தொடங்கி சொந்தமாக டிவி சேனல்வரை தேவைப்படுகிறது. இது எதுவும் இல்லாமலே கிராமம் தொடங்கி உலகம்வரை புகழும், பெயரும் அவருக்கு தேடிவந்தது. எளிமையின் இலக்கணமாக வாழ்ந்த வாரியார் ஒரு நிஜமான ஆன்மிகவாதி.

அவரது சமாதியும் அவர் பிறந்த காங்கேயநல்லூரில் உள்ளது. அவர் விட்டு சென்ற பணிகளை கிருபானந்த வாரியார் அறக்கட்டளை செய்துவருகிறது.

ஆகஸ்ட் 25 , திருமுக வாரியார் சுவாமிகள் அவர்களின் பிறந்த நாள். அவரின் சில பொன்மொழிகளோடு, அவரின் இறைபணிகளை நாம் நினைவில் கொள்வோம்.

"பிறர் குற்றங்களை மன்னிப்பதுதான் பெருமையும் பொறுமையுமாகும்".

"நேற்று" என்பது உடைந்த மண் பானை; "நாளை" என்பது மதில் மேல் பூனை; "இன்று" என்பது அழகிய ஒர் வீணை"

"ஆசையின்றிப் பயன் கருதாமல் மக்களுக்குச் சேவை செய்தால் புகழ் தானே வந்து சேரும். புகழுக்கு ஆசைப்படக் கூடாது, மலரை நாடி வண்டுகள் வருவதுபோல பற்றற்ற சேவையால் புகழ் தானே வரும்"

- வேலும்,மயிலும் துணை -

-இன்பா


58 Comments:

Sivakumar said...

Nice post

Sivakumar said...

nice post

Unknown said...

வாரியாரின் புகழை சொல்லிக்கொண்டே போகலாம். அவரின் புத்தகங்கள் அருமை

பித்தனின் வாக்கு said...

he is a great saint from god.
this artickle is so good, we expecting more news like this what we dno't about 1980's

kumar said...

really nice

Unknown said...

முருகப் புகழோன் வாரியார் பிறந்த இந்த நன்நாளில்...... அவரது அழகிய வரலாற்றை அருமையாக விளக்கிக் கூறிய உங்களுக்கு என் நன்றி...!!

அந்த விபூதி நிறைந்த தேஜஸான முகம் என்றென்றும் மறக்க முடியாது...!!


வாரியார் நாமம் வாழ்க....!! முருகன் அருள் பெருக....!!


வாழ்க வளமுடன்....!!

Sri Srinivasan V said...

" வேலை தேடுவதோடு வேலையும் தேடு " என்று அவர் எனக்கு autograph எழுதி தர என் அப்பா திருவருரிலே புதுத்தேருவிலே ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். திரு வாரியாரின் ஞானம், காவிய ஆழம், சமயோஜிதம், வியாபகம் மற்றும் கனிவு அபாரமானது.
வணங்கித் தொழுது மகிழ்கிறேன்.
எழுதி பதிவு செய்தமைக்கு நன்றி.
அன்புடன்,
ஸ்ரீனிவாசன்.

R.Gopi said...

வாழ்க‌ வாரியாரின் புக‌ழ்....

ந‌ம்மூரில் இருக்கும் அத்த‌னை மிமிக்ரி க‌லைஞ‌ர்க‌ளுக்கும் இவ‌ர் குர‌ல் வ‌ர‌பிர‌சாத‌ம்....

மஞ்சள் ஜட்டி said...
This comment has been removed by the author.
Anonymous said...

அவர் வாழ்ந்த ஸம காலத்திலாவது வாழ்ந்தோமே....

கௌதமன் said...

இன்பா!
நான் எதிர் பார்க்கவே இல்லை - இதை, இட்லி வடையில்!
பிரமாதம்.
வாரியார் என்னுடைய அபிமானப் பேச்சாளர்களில் ஒருவர்.
முருகன் புகழ் பரப்பிய, முறுவலான முகம் கொண்ட, முத்தமிழ் வித்தகர்.
அவருடைய பிறந்த நாளை இந்தப் பதிவின் மூலம் தெரிந்துகொண்டதில்
பெரு மகிழ்ச்சி. நன்றி.

வலைஞன் said...

நன்றி இன்பா இந்த அருமையான கட்டுரைக்கு!
ஒரு குறிப்பு.அவர் திருமுருக கிருபானந்த வாரியார்.திருமுக அல்ல
நகைச்சுவை உணர்வில் அவரை மிஞ்ச யாரும் கிடையாது.ஒரு சொற்பொழிவின் நடுவே அங்குள்ள சிறுவர்களை பார்த்து கேட்கிறார் "இங்கு உங்களில் கடைகுட்டிகள் யார் யார்?"என்று.
சிலர் எழுந்தவுடன்,கண்ணில் குறும்பு கொப்பளிக்க கேட்கிறார் "அதை நீங்களே எப்படி முடிவு செய்யலாம்?"என்று !!
பக்தர்,ரசிகர்.கோடை வள்ளல் தமிழ் நாடு செய்த தவம் அவர்.

Anonymous said...

As a young boy, in the late 60s and early 70s, I had opportunities to listen to Variyar Swamigal in our street temple every year. He was a storyteller par excellence. Although after studying physics and engineering, I am skeptical about religion. But, I would any day would love to listen to Variyar preaching. At present, we do not have any one of his caliber, intention, depth and above of simplicity.

globalphpjobs said...

நல்ல பதிவு.
வேலுண்டு வினையில்லை.

Anonymous said...

MOST OF US FORGOT HIM. THANKS FOR BRINGING HIM TO OUR MEMORIES.

Please do the same in the forth coming years too

Thanks. NICE POST...

sugi SIVAM said, BECAUSE...WARRIOR IS NOT A BRAHMIN,SO HE WAS NOT PRAISED AS SANKARACHYA..

I AM WONDERING ABOUT YOUR SELECTIVE AMENISA...YOU ARE NAMING SAKTHI AMMA..WHY NOT SANKARCHARYA'S

When you praise someone please don't comment others or compare with others next time.

Comparing WARRIOR with others is seen by me as a BLACK DOTs in a pretty face.

Murali

ரிஷபன்Meena said...

ஒரு முறை பேசும் போது,
”அ” விவிருந்து கொண்டே “ஆ” ஜெயிக்கலாம், என்ன அது என்றார். ஒரு சிறுவன் அமெரிக்கா டூ ஆண்டிபட்டி என பதில் அளிக்க, பசங்களுக்கு தான் எல்லாம் தெரிகிறது என்றாவாறு புத்தகம் பரிசளித்தார்.

தமிழை வைத்து பிழைக்கும் அரசியல்வாதிகளைவிட இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அதிகம்.
இவர் தான் நிஜமான முத்தமிழ் அறிஞர்.

மெல்லிய நகைச்சுவை இழையோடும் இவரின் பேச்சு இருபதையும் அறுபதையும் ஒரே நேரத்தில் கவர்ந்துவிடும்.

புலவர் கீரன், நகைச்சுவையே இல்லாமல் பேசினாலும் அற்புதமாக பேசக் கூடியவர்.

இவர்களால் தமிழுக்குத் தான் பெரும் இழப்பு.

SUBBU said...

//"நேற்று" என்பது உடைந்த மண் பானை; "நாளை" என்பது மதில் மேல் பூனை; "இன்று" என்பது அழகிய ஒர் வீணை"//

நீங்க எப்ப ல.தி.மு.க-வுல சேர்ந்தீங்க :)))))

இட்லிவடை ரசிகன் said...

இந்த இன்பா என்பவர் யார்? இட்லிவடையின் ஸ்டாஃப் ரிப்போர்ட்டரா? உங்கள் குழுவின் மற்ற ஆசாமிகளின் பெயர்களை வெளியிடாமல் (அவ்வப்போது பிரசன்னாவின் பெயரை மட்டும் போட்டுவிடுவது விலக்கு) இன்பாவை மட்டும் எப்போதும் பெயருடன் வெளியிடுவதற்குக் காரணம் யாது?

IdlyVadai said...

//இந்த இன்பா என்பவர் யார்? இட்லிவடையின் ஸ்டாஃப் ரிப்போர்ட்டரா? உங்கள் குழுவின் மற்ற ஆசாமிகளின் பெயர்களை வெளியிடாமல் (அவ்வப்போது பிரசன்னாவின் பெயரை மட்டும் போட்டுவிடுவது விலக்கு) இன்பாவை மட்டும் எப்போதும் பெயருடன் வெளியிடுவதற்குக் காரணம் யாது?//

இன்பமாக எழுதினால் இட்லிவடையில் இடம் உண்டு!

ஹோட்டலில் எப்பவாவது தான் சரக்கு மாஸ்டர் வெளியே வருவார் அது போல தான் பிரச்சன்னா.

ப்ரியா கதிரவன் said...

நாங்கல்லாம் இட்லிவடை யாருன்னு கேட்டு கேட்டே அலுத்து போய்ட்டோம்.
இதுல நீங்க இன்பா யாருன்னு கேட்டா மாத்திரம் சொல்லிடவா போறாங்க?
போங்க போயி புள்ள குட்டிய படிக்க வெய்யுங்க.

By the way, Very nice post.

M Arunachalam said...

சிறு வயதில் திருமுருக. கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவுகள் சிலவற்றை நேரில் கேட்டிருக்கிறேன். அனைவருக்கும் மிக எளிதில் புரியும்படி சிக்கலான தத்துவங்களையும் அவர் தனக்கே உரித்தான பாணியில் காலட்சேபம் செய்வதை எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காது. ஒரு காலத்தில், அவர் குரல்தான் மிமிக்ரி கலைஞர்களின் முதல் சாய்ஸ் ஆக இருந்தது. ஒரு மாறுபட்ட பதிவினை கொடுத்த இன்பாவுக்கும், இட்லி வடைக்கும் நன்றிகள் பல.

Unknown said...

//போங்க போயி புள்ள குட்டிய படிக்க வெய்யுங்க.
//
எனக்கு இப்பதான் கல்யாணம் ஆச்சு. எப்படி புள்ள குட்டிய படிக்க வைக்கிறது

Anonymous said...

திருமுக என்று எழுதியது வேறு ஒருவரை (திரு மு க ) நினைவுபடுத்துகிறது! திருமுருக என்றே குறிப்பிடவும்!!

Anonymous said...

வாரியார் புகழ் வாழ்க வளமுடன்

BY
TRUE HUMAN

Anonymous said...

சமீபகாலத்தில் மறந்து போன ஒரு நல்ல ஆன்மீகவாதியை நினைவுபடுத்திய இட்லி வடைக்கு மிக்க நன்றி... தொடரட்டும் உங்கள் சேவை...

Vadielan R said...

நல்ல தகவல்கள் தொடர்ந்து வெளியிடுங்கள் இன்பா அவர்களே

Anonymous said...

brilliant post shri inbA!
என்னத்த சொல்றது இதுக்கு மேல? keep rocking!

Anonymous said...

சும்மா கொளுத்தி போட இந்தப் பின்னோட்டம்.

இட்லி வடை வாசிப்பவர்களுக்கு curiosity ரொம்பவே ஜாஸ்தி. அதனால் சொல்கிறேன், "அந்தப்" போஸ்ட் "போடாதது" குறித்து எனக்கு ரொம்ப சந்தோஷம்.

நன்றி இட்லிவடை அண்ணா!
:-D

(இதுவும் ஒரு விளம்பரம்தான், hits ஜாஸ்தி பண்ண). :-D

sreeja said...

அருமையான பதிவு.

அடிகளாரை நேரில் பார்த்த பாக்கியசாலி என்பதில் பெருமை கொள்கிறேன்.

Anonymous said...

// எனக்கு இப்பதான் கல்யாணம் ஆச்சு. எப்படி புள்ள குட்டிய படிக்க வைக்கிறது //


Puthu mappillai sir, every year unga marriage day celebrationla, oru orphange poi pasanga padippu selavukku kaasu kudukkalaam..

ithan moolama, pulla kuttiya padikka vaikklaam..

கௌதமன் said...

மானஸ் !

புஸ ஸ் ஸ் ஸ் .........

ஹா ஹா ஹா !

கௌதமன் said...

எல்லாம் வல்ல வயலூர் எம்பெருமான் அருளாலே,
இந்த பதிவு இட்ட இன்பா இன்பமாய் வாழவும்,
அதை வலை இட்ட இட்லி வடை பல்லாண்டு வாழவும்,
என் அப்பன் முருகனை பிரார்த்திக்கின்றேன்!
அன்பன்
கிருபாநந்தவாரி தாசன்.

shiva said...

No words to praise Inba and Idlyvadai for this master piece post

nandri

Anonymous said...

My father was telling " Don't think of monkey, when taking medicine" ( But I dont know the meaning or purppose of this proverb.) But unfortunately whenever Variar"s name come across it unnecessarily drag the name of notorious "RAJAGOPAL ANNACHI" also, why I dont know.
SUPPAMANI

Anonymous said...

கிருபானந்த வாரியார், காங்கேயநல்லூரில் உள்ள கோவிலுக்கு 40-களில் ஒரு லட்ச ரூபய் நன்கொடை கொடுத்துள்ளார்.கோவில் பலகையில் நன்கொடையாளர் பட்டியலில் அவர் பெயர் உள்ளது. இன்றைய மதிப்பில் ஒரு கோடி! அங்குள்ள வாரியார் சிலையை நமஸ்கரித்தால் புண்ணியம் கிடைக்கும்.

-- டில்லி பல்லி

T.Duraivel said...

நாத்திக புயல் வீசிய காலத்தில் ஒரு ஆன்மீகத் தென்றலாய் தமிழகம் எங்கும் கமழ்ந்தவர். அச்சமயத்தில் தனி ஒருவராய் ஆன்மீகத்தை தமிழகத்தில் நிலை நிறுத்தியவர். பெரும் மடத்தலைவர்கள் எல்லாம் அச்சமயம் எவ்வித முயற்சியும்மற்று இருந்தனர். அவரின் புகழ் என்றும் மறையாது.

த.துரைவேல்

Dinadruvan said...

கிருபானந்த வாரியாரின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் அவரது குரலுகாகவும் நகைசுவைக்காகவும்

தினா

சுழியம் said...

Dear Inpa,

//... நல்ல இல்லறத்தில் சிறந்துவிளங்குவதே துறவரதிர்க்கான முதல்படி என்னும் இந்துமத நெறிப்படி இளம்வயதில் திருமணம் செய்துகொண்டவர்.
(இன்று உள்ள 'சாமியார்கள்' முறைப்படி 'ஒன்று'கூட இல்லாமல், முறையே இல்லாமல் 'ஊருக்கு ஒன்றாய்' வைத்துகொள்கிறார்கள்)...//

You are praising vaariyaar, but degrading what he preached and lived and died for.

Respected Variyaar has lived his entire life in praise of these saamiyaars only.

How many sanniyasis you know directly? Among those sannyiyasis that you know how many have been behaving the way you have mentioned?

please answer.

snkm said...

அருமை. சரியான நேரத்தில் அவரை நினைவு படுத்தியதற்கு நன்றி! ஆன்மிகம் எல்லோருக்காகவும் தானே!

Anonymous said...

நல்லவர்கள் நம்மை விட்டு போய்யே விட்டார்கள் ... We never understood their importance when they were here.. Everybody might have some flip side.. If we discuss about that what are we going to gain.. Especially from Variar we have lot to gain ...

Ravi said...

very very very very good post
Inba and IV

thanks a lot

ஸ்ரீராம். said...

நல்லவரைப் பற்றி நல்ல பதிவு. நானும் அவரை நேரில் தரிசிதவன் மட்டுமல்ல், எங்கள் இல்லத்திற்கும் அவர் வருகை தந்துள்ளார் என்பதே பெருமை தரும் ஒன்று.
அவர் சொற்பொழிவு ஆற்றும் இடங்களில் நடு நடுவே அவர் சொன்னதிலிருந்து சிறு சிறு கேள்விகள் கேட்டு, கூட்டத்தில் அமர்ந்திருக்கும் சிறுவர் சிறுமியரை பதில் சொல்ல விட்டு அவர்களுக்கு பழங்கள் புத்தகங்கள் அங்கேயே பரிசளிப்பார். அது அவர்களை இன்னும் உற்சாகப் படுத்தும்.

Anonymous said...

Excellent, one of the legends and symbol of simplicity.

சுழியம் said...

Dear Inba sir,

I am repeating my questions for an answer from you.

How many sanniyasis you know directly? Among those sannyiyasis that you know how many have been behaving the way you have mentioned?

please answer.


I will be asking this question frequently until you answer.

Satyameva Jeyathe !

Kannan said...

Such an useful one Inba, Really thanks for sharing such things.

Thanks

Kannan

Prasanna said...

Krubhanandha variyarai patri nam thamathamaga therindhu kondullom.. melum ithil naveena samiyargalai pattri koori ullatham nanru

Anonymous said...

//How many sanniyasis you know directly? Among those sannyiyasis that you know how many have been behaving the way you have mentioned?

please answer.

@@@@@@@@@@@@@@@
Q1:Why you are so curious about sanniyasis. Are you going to become a sanniyasi... ?
@@@@@@@@@@@@@@@

//How many sanniyasis you know directly?

A1:If we have to speak about one whom we know personally, then we can't talk about anyone(Mahatma Gandhi, Jesus, Guru Nanak, Allah, Mahavira, Siddhattha Gotama Budha ,Baba etc).

//how many have been behaving the way you have mentioned?
A2: Most of them behaved good.

Note: We should be very careful in accepting GURU in this modern world. Because lot of duplicates at present time.Have to be very careful.

@@@@@@@@@@@@
கடவுள் = கடந்து உள்ளே செல் (Meditation)
@@@@@@@@@@@@

Erode Nagaraj... said...

"எனக்கு இப்பதான் கல்யாணம் ஆச்சு. எப்படி புள்ள குட்டிய படிக்க வைக்கிறது"

வயிற்றுக்கு அருகில் பேசித்தான்...

Erode Nagaraj... said...

வாரியாரின் பிரசங்கங்கள் ஏற்படுத்திய எழுச்சி மிக பெரியது. முந்து தமிழ் மாலை என அருணகிரிநாதர் எழுதியதற்கு அவர் அளித்த விளக்கம் மிக அருமை.

கடினமான தத்துவங்கள் கூட அவர் வார்த்தைகளில் எளிமையாய் விளங்கும்.

Unknown said...

I want to know more about Vaariyaar.... Inba pls send me articles (any soft copy)... related to vaariyaar...

Anonymous said...

Who is the first president of "Hindu Munnani" ?

Kirupaananda Vaariyaar.

shiva said...

//இன்று உள்ள 'சாமியார்கள்' முறைப்படி 'ஒன்று'கூட இல்லாமல், முறையே இல்லாமல் 'ஊருக்கு ஒன்றாய்' வைத்துகொள்கிறார்கள்)...//

the so called leader of all samiyargal sankara madam jeyandrar is the best example for the above

from kanchi to srirangam his network keep going

சுழியம் said...

Dear Inba,

By showing a positive response to my comments you have proved your dignity.

I am glad to communicate with you.

IdlyVadai said...

வாரியார் சுவாமிகள் குறித்த
பதிவில்
நான் எழுதிய சில வாசகங்கள்
தேவையற்றவை என்பதை இப்போது உணருகிறேன்.

சுட்டிகாட்டிய திரு.சுழியம் மற்றும்
அனானி அவர்களுக்கு நன்றி.

இட்லிவடை மற்றும்
வாசக நண்பர்களுக்கும் நன்றிகள்.

அன்புடன்
இன்பா

By mistake this comment was deleted. Re posting it again.

பெசொவி said...

நான் எங்கோ படித்த ஒரு செய்தியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

ஒரு முறை, வாரியார் சுவாமிகள் பெரியவரை (ஜகத்குரு சுவாமிகள்) தரிசிக்க சென்ற பொழுது, அவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்க முயன்றாராம். ஆனால் சுவாமிகள் அவரை தடுத்து விட்டாராம். ஏனென்றால் வாரியார் சுவாமிகள் கழுத்தில் ஒரு செயினில் தங்க லிங்கம் அணிந்திருந்தாராம். அந்த லிங்கம் தரையில் படுவது தகாது என்றும் விளக்கம் சொன்னாராம். அந்த அளவுக்கு வாரியார் சுவாமிகளிடம் அன்பு வைத்து இருந்தார் பெரியவர்.

"ஆன்மிகத்தின் அருமை, வாரியார் சுவாமிகளின் பெருமை"

supraja said...

Inba, its really good

kirubakaran B said...

KIRUBAKARAN B
சிறு வயதில் திருமுருக. கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவுகள் சிலவற்றை நேரில் கேட்டிருக்கிறேன்.அவர் சொற்பொழிவு ஆற்றும் இடங்களில் நடு நடுவே அவர் சொன்னதிலிருந்து சிறு சிறு கேள்விகள் கேட்டு, கூட்டத்தில் அமர்ந்திருக்கும் சிறுவர் சிறுமியரை பதில் சொல்ல விட்டு அவர்களுக்கு பழங்கள் புத்தகங்கள் அங்கேயே பரிசளிப்பார். அது அவர்களை இன்னும் உற்சாகப் படுத்தும்.

kiruba said...

KIRUBAKARAN B
சிறு வயதில் திருமுருக. கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவுகள் சிலவற்றை நேரில் கேட்டிருக்கிறேன்.அவர் சொற்பொழிவு ஆற்றும் இடங்களில் நடு நடுவே அவர் சொன்னதிலிருந்து சிறு சிறு கேள்விகள் கேட்டு, கூட்டத்தில் அமர்ந்திருக்கும் சிறுவர் சிறுமியரை பதில் சொல்ல விட்டு அவர்களுக்கு பழங்கள் புத்தகங்கள் அங்கேயே பரிசளிப்பார். அது அவர்களை இன்னும் உற்சாகப் படுத்தும்.