பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 17, 2009

என்று தணியும் இந்த மணற்கொள்ளை??


மணற்கொள்ளை!! இன்று பரவலாக எதிர்க்கட்சி மீடியாக்களில் அடிபடும் வார்த்தை. ஆனால் எதிர்க்கட்சி ஆளுங்கட்சியானால் தாங்கள் முன்பு விமர்சித்தவற்றை மறந்துவிட்டு முன்னவர்கள் என்ன செய்தார்களோ அதையே தொடர்ந்து செய்கிறார்கள், செய்வார்கள்.

மற்ற ஊர் ஆறுகளில் இக்கொள்ளை எந்த அளவிற்கு நடைபெறுகிறது என்று தெரியவில்லை. ஆனால் எனது சொந்த மாவட்டமாகிய திருச்சிராப்பள்ளியில் , காவிரியிலும், கொள்ளிடத்திலும் நீர் ஓடுகிறதோ இல்லையோ, மணற்கொள்ளை கரைபுரண்டு ஓடுகிறது. இப்பொழுது தங்கத்தையும் பிளாட்டினத்தையும் விட அதிக மதிப்பு மிகுந்த மந்திரச் சொல் இந்த மணல். காவிரியிலும், கொள்ளிடத்திலும் இப்பொழுது ஓடும் நீர் என் பார்வைக்கு நீராகத் தெரியவில்லை, தன்னிடமிருக்கின்ற செல்வம் அள்ளப்படுவதால் காவிரித்தாய் வடிக்கும் கண்ணீராகவே தெரிகிறது. அந்த அளவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் அனுமதித்த கொள்ளளவை விட அதிகமான மணல் உள்ளூர்களிலும், வெளியூர்களுக்கும் தொடர்ந்து சப்ளை ஆகிறது. அதுவும் காவிரியில் நீர்வரத்து அதிகமாகிவிட்டால் சொல்லவே வேண்டாம். மணல் அள்ளுவது குறைந்து, மணலின் விலை மலையை முட்டுமளவிற்கு அதிகரித்துவிடும். அதனால்தானோ என்னவோ காவிரிக்கு நீர் வேண்டும் என அரசுகள் கர்நாடகாவை அதிகம் வற்புறுத்துவதில்லை போலும்?? ஒரு இடத்தில் மணலை 10 முதல் 20 அடிகள் வரை தோண்டி பொக்லைன் மூலம் லாரிகளில் லோட் செய்வதற்கு வசதியாக வேறு இடத்தில் குமிப்பதால் ஒரு இடத்தில் பள்ளமாகி அது நீர் வரும் காலங்களில் மிகவும் ஆபத்து மிகுந்த பகுதியாகி பல உயிர்களைப் பறிக்குமளவிற்கு ஆபத்தில் முடிகிறது.


திருச்சிராப்பள்ளியிலிருந்து முசிறி செல்லும் 40 மைல் தொலைவிலான சேலம் நெடுஞ்சாலையில் ஐந்திற்கும் மேற்பட்ட ஊர்களில் காவிரியிலிருந்து மணல் அள்ளப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவது, நீர்பாசன வசதி குன்றி தென்னை போன்ற மரங்கள் பட்டுப் போவது மட்டுமின்றி இந்த மணல் லாரிகளால் ஏற்படும் விபத்துக்கள் சொல்லி மாளாது. காலை எட்டு மணி துவங்கி மாலை ஆறு மணி வரையில் ஏக காலத்தில் இரு வாகனங்கள் மட்டுமே செல்லக்கூடிய சாலையின் ஒரு மருங்கு முழுவதையும் மணல் லாரிகளே ஆக்ரமித்துள்ளன. இதையெல்லாம் காரணம் காட்டி எங்களது ஊரில் ஒரு சாரார் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு வலுக்கவும், குவாரி காரர்கள் ஊரில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஆயிரம் ரூபாய் தருவதாகச் சொல்லி தற்காலிகமாக மக்களின் வாயை அடைத்துள்ளனர். பணத்தைக் கண்டால் வாயைப் பிளக்கும் இந்த ஆட்டு மந்தைக் கூட்டமும் தினமும் ரேஷன் கார்டை எடுத்துக் கொண்டு ஆயிரத்தைப் பிச்சையெடுக்க குவாரிக்குப் படையெடுத்து வருகிறது. இந்த ஆயிரம் எத்தனை நாட்களுக்கு வரும்?? நமக்கு எதற்காக ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள்?? இதனால் அவர்கள் அடையப்போகும் ஆதாயம் என்ன என்பன போன்றவற்றையெல்லாம் சிந்திக்கும் நிலையில் மக்கள் இல்லை. நம்முடைய இயற்கை செல்வத்தை கொள்ளையடிப்பதற்கு நமக்கே லஞ்சம்!! எங்கு போய் முட்டிக் கொள்வது??


சுதந்திரமடைந்து சுமார் 63 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நாம் கண்ட பலன், நம்மைச் சுற்றி நடக்கும் அட்டூழியங்களையும், லஞ்ச லாவண்யங்களையும் வேடிக்கை பார்க்கும் துர்ப்பாக்ய நிலையிலிருப்பது மட்டுமே! வேறென்ன செய்ய??

- - யதிராஜ சம்பத் குமார்

14 Comments:

மானஸ்தன் said...

///"என்று தணியும் இந்த மணற்கொள்ளை??"///

அள்ளும் கூட்டத்த இந்த மண்ணு அள்ளிக்கொள்ளும் வரை.

R.Gopi said...

இருக்கும் எத்தனையோ கொள்ளைகளில் இதுவும் ஒன்ணுன்னு எடுத்துக்க முடியாது...

இந்த மணற்கொள்ளை... பின்னாளில், கடும் குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்தும்..... இவை அனைத்தும் தெரிந்த அதிகாரிகளும் (லஞ்சம் வாங்கி மவுனி), பொதுமக்களும் (எலும்பு துண்டு வாங்கி வாய் மூடி மவுனி), பாழாய்போன அரசியல்வாதிகளும், திருந்தும் நன்னாள் என்னாளோ??

இதுக்கு எல்லாம் ஒரு முடிவும், நமக்கு ஒரு விடிவும் வராதா?

Anand said...

யதிராஜ்,

நானும் முசிறியை சேர்ந்தவன் தான். ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
மவுன சாட்சியாய் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.(கண்ணீருடன்)

யதிராஜ சம்பத் குமார் said...

ஆனந்த்,


அவர்களே போதுமென்று நிறுத்தினாலொழிய யாராலும் அவர்களை எதுவும் செய்துவிட முடியாது. பணம் பத்தும் செய்யும்!! எதிர்க்க வேண்டிய/துணிந்த மக்களும் பணத்தைப் பார்த்ததும் ஆலாய்ப் பறக்கின்றனர். இதில் யாரை நொந்து கொள்வது??

Anonymous said...

ஆற்று மணலில், இரண்டடி ஆழத்தில், H1N1 கிருமிகள் உள்ளதாமே! அப்படியா?
மணல் அள்ளுபவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் வருமா?
Dr Thomas Harrison.

Krish said...

கொடுமை! காசுக்காக இயற்கை வளங்களை அழிக்கிறார்கள். அரசியல் வாதிகள் முதல் அரசு அதிகாரிகளின் வரை யாருக்கும் அக்கறை இல்லை. பின் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும்

Syed said...

I think you should express your grievance(i.e. lodge your dissatifaction/complaint) through http://dpg.bharatsarkar.nic.in/ rather than doing nothing. At least you will get the satisfaction that you have taken the first step towards redemption.

R.Gopi said...

//மானஸ்தன் said...
///"என்று தணியும் இந்த மணற்கொள்ளை??"///

அள்ளும் கூட்டத்த இந்த மண்ணு அள்ளிக்கொள்ளும் வரை.//

நெத்தி அடி க‌மெண்ட் மான‌ஸ்த‌ன்....

Erode Nagaraj... said...

யுக தர்மம் நினைவிற்கு வருகிறது. மணல் கொள்ளை யார் ஆட்சிக்கு வந்தாலும் நடக்கும் என்றுமழியா கொடுமை.

நேற்று என் அண்ணாவுடன் (நிறுவனச் செயலர் கா.சு.இரவிச்சந்திரன்) பேசுகையில், சில குற்றச்சாட்டுகள் இருக்கும் ஒருவர் கம்பனி லா போர்டில் நீதிபதியாக இருப்பதைச் சொன்னான். அதே சமயம் நீதி வழுவாத ஒருவருக்கு பதவி நீட்டிப்பிற்கான வாய்ப்பிருந்தும் கிடைக்காததையும் சொன்னபோது வருத்தமாக இருந்தது.

உண்மையில், நீதித் துறையில் ஒருவர் மேல் குற்றச் சாட்டுகள் இருந்தால் அது, ஆளும் தரப்பிற்கு அவர்கள் விடுக்கும் செய்தி. என்னை அணுகலாம், நான் வளைந்து கொடுப்பவன்என்று.

blogpaandi said...

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது

ந.லோகநாதன் said...

இது பற்றி மருத்துவர் ராமதாஸ் பலமுறை சொல்லியிருக்கிறார்

Muruganantham Durairaj said...

Google Earth மூலமாக காணலாம் இந்த நிகழ்வை. Yes, recently Google Earth updated. உதாரணமாக திருச்சி அருகே உள்ள குளித்தலை-ன்
Link: http://tinyurl.com/lr5zm6
மணல் அள்ளிய இடம், செயற்கை பள்ளமாக Map-ல் காணலாம் :-(

ஆ.ஞானசேகரன் said...

//சுதந்திரமடைந்து சுமார் 63 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நாம் கண்ட பலன், நம்மைச் சுற்றி நடக்கும் அட்டூழியங்களையும், லஞ்ச லாவண்யங்களையும் வேடிக்கை பார்க்கும் துர்ப்பாக்ய நிலையிலிருப்பது மட்டுமே! வேறென்ன செய்ய?//

உண்மை

லவ்டேல் மேடி said...

நெம்ப கரக்க்டா சொன்னீங்க ....!! இந்த மணல் கொல்லைன்கிறது .... பாரபட்சமில்லாம தமிழ்நாட்டுல எல்லா ஆறுகள்லையும் நடக்குது.....!! சொறி புடுச்ச மொன்ன பரதேசி நாயுவ .... ஆத்தையே நோண்டி நொங்கெடுக்குரானுங்க.....!! இதுக்கு அரசியல் சப்போட்டு வேற....... கேட்டா நா ஆளுங்கட்சிக்கு தெருஞ்சவன்.... எதிர்கட்சிக்கு தெருஞ்சவன் .... மந்திரியோட தம்பி.... மந்திரியோட கீப்போட தம்பி 'ன்னு மொன்ன டையலாக் உடுவானுங்க.....!! நாட்டுல கட்சிகளோட அராஜகம் ஒழுஞ்சாத்தான் இந்த மாதிரி அட்டூழியமும் ஒழியும் ..