பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 20, 2009

செய்திகள் வாசிப்பது இன்பா

இந்த வாரம் இரண்டு சுவாரசியமான செய்திகள் படித்தேன். அவை உங்கள் பார்வைக்கு...

செய்தி எண் # 1
உலகத்தில் வேறு எங்கும் நடக்காத ஒரு 'ஜனநாயக புரட்சி' இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் நடந்துவிட்டது (அ) வருகிறது (அ) நடக்க தொடங்கிவிட்டது. அது, பணம் வாங்கிகொண்டு ஒட்டு போடுவது அல்லது பணம் கொடுத்து ஒட்டு வாங்குவது.

ஒரு வாக்காளனுக்கு எந்த வேட்பாளர் அதிக பணம் கொடுக்கிறாரோ அவரே வெற்றிபெறுவார் என்பது புரட்சிகரமான விஷயம்தானே. விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் இனி பணத்தோடு, ஒரு வாரம் (அ) மாதத்திற்க்கான மளிகைசாமான்கள், காய்கறிகள் வாங்கிதர வாய்ப்புகள் தெரிகின்றன.
வேட்பாளருக்கு 'ஆராத்தி' எடுத்துவிட்டு, தட்டில் 'எதாவது' விழுமா என எங்கும் மக்களை திருத்துவதற்கு விழுப்புரத்தை சேர்ந்த சத்யாகிரக இயக்கத்தினர் நூதன பிரசாரம் செய்யதொடங்கி, உள்ளனர்.

என்ன செய்கிறார்கள் என்றால்,ஒட்டு போட பணம் வாங்கும் வாக்காளர்கள் காலில் விழுந்து, பணம் வாங்காதீர்கள் என்று பிரசாரம் செய்கிறார்கள்.

முதல் கட்டமாக இடைத்தேர்தல் நடைபெறும் பர்கூர் தொகுதியில், ‘பணம் வாங்காமல் ஓட்டு போடுங்கள்’ என்று வாக்காளர்களிடம் பிரசாரம் செய்து இருக்கிறார்கள்.

சத்யாகிரக இயக்கத் தலைவர் ராமகிருஷ்ண சாஸ்திரி தலைமையில் குரானா ராம மூர்த்தி, சந்திரசேகர், சுபாஷ், பிரபு, சண்முகம், பெரியசாமி ஆகியோர் இந்த பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

ராமகிருஷ்ண சாஸ்திரி கூறுகையில், ‘வன்முறை, லஞ்சம், சாதி போன்றவற்றை ஒழித்திட கடந்த 5 ஆண்டுகளாக பல பகுதிகளில் மக்கள் காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்து வருகிறோம். தேர்தலில் வாக்காளர்கள் பணம் வாங்காமல் ஓட்டளிக்க கோரி, வாக்காளர்களின் காலில் விழுந்து வேண்டுகோள் விடுக்கிறோம்’ என்றார்.

பணம் கொடுத்து, காலில் விழுந்து ஒட்டு கேட்கும் அரசியல்வாதிகள், பணம் கொடுத்தவுடன் உணர்ச்சிவசப்பட்டு 'அண்ணன்' காலில் விழும் மக்கள், இந்த இரண்டு தரப்புக்கு நடுவே இவர்கள் பிரசாரம் எந்த அளவுக்கு எடுபடும்?


செய்தி எண் # 2
கிராமங்களில் உள்ள ஏழை தொழிலாளர்களுக்கு வேலையின்மை என்ற நிலை வரக் கூடாது என்பதற்காக ஆண்டுக்கு 100 நாள் வேலை அளிப்பது, அதே சமயம், கிராமங்களில் சாலை, கழிப்பறை, குடிநீர் தொட்டி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது என்று தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த திட்டத்தால், கிராமங்கள் செழிப்படையும், மக்களும் பொருளாதார ரீதியில் மேன்மை அடைவர் என்பதால், பல மாநிலங்களிலும் இந்த திட்டத்துக்கு அதிக ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.தனியார் தன்னார்வத் தொண்டு அமைப்புகள், சாப்ட்வேர் உட்பட தனியார் நிறுவனங்களும் அக்கறை எடுத்து ஒத்துழைக்கின்றன

தாங்கள் பிறந்த ஊராட்சிக்கு பெருமை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக, சிம்லாவில் இருந்து 45 கி.மீ., தொலைவில் உள்ள சோலன் பகுதியில் உள்ள கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத் தின் கீழ் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர் 20 பட்டதாரி இளைஞர்கள் . இவர்கள் எல்லாரும் சோலன் ஊராட்சியை சேர்ந்தவர்கள்; படிப்புக்காக சிம்லாவில் உள்ளனர். ஒய்.எஸ்.பார்மர் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., பட்டம் பெற்ற அன்கிட், இதில் பங்கேற்றார்; அவர் கூறுகையில், "செய்யும் தொழிலே தெய்வம் என்பர்; அதேபோல் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத் தின் நிதி எங்கள் கிராமத்துக்கு பெரிதும் உதவுகிறது' என்கிறார்.

குடிநீர் தொட்டி அமைப்பது, கழிப்பறை கட்டுவதற்கு இந்த பட்டதாரிகள் மண் சுமந்து, கற்களை அடுக்க உதவி செய்தனர். தேசிய ஊரக வேலை உறுதி திட்டக்கூலியையும் பெற்று, அதை கிராம நலனுக்கு செலவிட முடிவு செய்துள்ளனர்.

இதை படித்தாவது, ரசிகர் மன்றங்கள் வைத்து நடிகன் 'கட் அவுட்டுக்கு' பால்அபிஷேகம் செய்யும், அரசியல்வாதிகள் நடத்தும் பொதுக்கூட்டம்/மாநாடு போன்றவற்றுக்கு 'வாழ்க' கோஷம் போடும், டாஸ்மாக கடையில் விழுந்துகிடக்கும் நம் தமிழக இளைஞர்கள், தனது படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை என புலம்பும் பட்டதாரிகள் திருந்துவார்களா?
வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம் - கவிஞர் தாராபாரதி.


-இன்பா

12 Comments:

"ராஜா" from புலியூரான் said...

நல்ல விஷயம்.... தொடரட்டும் கிடைக்கும் ஒரு நாள் அதற்கான பலன்

Anonymous said...

//......சத்யாகிரக இயக்கத் தலைவர் ராமகிருஷ்ண சாஸ்திரி தலைமையில் குரானா ராம மூர்த்தி, சந்திரசேகர், சுபாஷ், பிரபு, சண்முகம், பெரியசாமி ஆகியோர் இந்த பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.....//

Very clear that it is the brahminical strategy to throw away the dravidian movement.

:)

ஸ்ரீராம். said...

செய்தி 1 :
இதெல்லாம் By election இல்லீங்க.......Buy Election.

R.Gopi said...

//இதை படித்தாவது, ரசிகர் மன்றங்கள் வைத்து நடிகன் 'கட் அவுட்டுக்கு' பால்அபிஷேகம் செய்யும், அரசியல்வாதிகள் நடத்தும் பொதுக்கூட்டம்/மாநாடு போன்றவற்றுக்கு 'வாழ்க' கோஷம் போடும், டாஸ்மாக கடையில் விழுந்துகிடக்கும் நம் தமிழக இளைஞர்கள், தனது படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை என புலம்பும் பட்டதாரிகள் திருந்துவார்களா?//

இத‌ ப‌டிக்க‌ற‌ நேர‌த்துல‌ ஒரு குவாட்ட‌ரு வுட‌லாம்... (போதையில் பொதுஜ‌ன‌ம்...)

Anonymous said...

For a moment let us assume that it is a Brahminnical Strategy, but does that mean the original issue is to be ignored.

When will people of Tamilnadu start giving importance than issues. It is hard to find a tamilian who does not want to know the caste of the other person sooner.

BTW, Mr Sastry must have dropped his caste name, if he is serious about his ideals. Nevertheless, it is a commendable effort. Perhaps, what we need more is educating the people on the importance and benefits of selecting candidates based on real merits.

shiva said...

//வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம் - கவிஞர் தாராபாரதி.//

as usual excellent finish Inba

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

///வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம் - கவிஞர் தாராபாரதி.///

மதுரப் பக்கம் போய்க் கேட்டுப் பாருங்க. பத்து விரல் எல்லாம் தேவையே இல்லையாம். "ஒரு விரல்" இருந்தாலே போறுமாம்.

kggouthaman said...

News #1: Good effort - Let us welcome this move. Most important is "What is being told - than who is telling."

@512kbps said...

Please Remove the Hindi Comment, it's not Good

Baski said...

இப்படி ஆறு கோடி ஜனங்க காலில் விழுவதிர்க்கு எவ்ளோ நாள் ஆகும்...
நல்ல முயற்சி.. என்றாலும் இது பிச்சையெடுப்பது போல் உள்ளது.

//Very clear that it is the brahminical strategy to throw away the dravidian movement.//

இதற்கும் ஜாதி முலாம் பூசும் பின்னூட்டகாரர்களின் காலில் விழுந்தால் தான் அவர்கள் திருந்துவார்கள் போல.

லவ்டேல் மேடி said...

// இதை படித்தாவது, ரசிகர் மன்றங்கள் வைத்து நடிகன் 'கட் அவுட்டுக்கு' பால்அபிஷேகம் செய்யும், அரசியல்வாதிகள் நடத்தும் பொதுக்கூட்டம்/மாநாடு போன்றவற்றுக்கு 'வாழ்க' கோஷம் போடும், டாஸ்மாக கடையில் விழுந்துகிடக்கும் நம் தமிழக இளைஞர்கள், தனது படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை என புலம்பும் பட்டதாரிகள் திருந்துவார்களா? ///
சில பேரு .... நடிகர்கள பத்தியும்.... அரசியல் வியாதிகளைப் பத்தியும் பதிவ போட்டே பெரியாளாகப் பாக்குறாங்க.... அந்த பிட்டையும் சேத்துக்குங்க........