பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 17, 2009

ஹலோ டாக்டர்(ரேட்)

சில மாதங்களுக்கு முன், வறுமையான குடும்பத்தில் பிறந்து, 'கரஸ்'ஸில் எம்சிஏ படித்துவிட்டு, ஒரு தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்க்கும் என் நண்பன் "நைட் பத்துமணி வரைக்கும் கிளாஸ் எடுக்கிறேன். எப்படியாவது கரஸ்ஸில் சேர்ந்து எம்.பில் படிச்சா காலேஜில லெக்சரா போலாம். கொஞ்சம் கஷ்டம் தீரும்" என்று என்னிடம் பேசினான். ஆனால், அவன் கஷ்டங்கள் தீரவே, தீராது. காரணம், இனி எம்.பில்., படிப்பு 'ரெகுலரில்' தான் சேரமுடியும் என்று யு.ஜி.சி அறிவித்துவிட்டது.

பல்கலைக்கழகங்களில், பிஎச்.டி., மற்றும் எம்.பில்., ஆகியவற்றின் கல்வித்தரம் மிகவும் குறைந்து வருவதைத் தொடர்ந்து, இதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்க யு.ஜிசி., தீர்மானித்தது.

பேராசிரியர் பி.முன்ஜேகர் தலைமையிலான குழு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இதுகுறித்து யு.ஜி.சி., வகுத்துள்ள விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது: எந்த ஒரு பல்கலைக்கழகமோ, நிகர்நிலைப் பல்கலைக்கழகமோ, பிஎச்.டி., மற்றும் எம்.பில்., ஆகிய படிப்புக்களை தொலைதூரக் கல்வி முறையில் வழங்கக் கூடாது. இக்கல்விகளின் தரத்தை உறுதி செய்ய, நுழைவுத்தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலமே மாணவர்களை சேர்க்க வேண்டும்.

பிஎச்.டி., படிப்பில் சேரும் மாணவர்கள் தங்கள் ஆய்வு பகுதி குறித்து விவாதிக்க வேண்டும். சேர்க்கை முடிந்த பின், மாணவர்கள், ஒரு பருவம் வரை தயார் நிலை படிப்பு பயில வேண்டும். ஆராய்ச்சி மாணவர்கள், அடுத்த கட்ட நிலையான ஆய்வறிக்கை எழுத அனுமதி வழங்குவதற்கு, குறைந்த பட்ச தகுதி நிர்ணயம் செய்ய வேண்டும். அந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யும் மாணவர்களையே ஆய்வறிக்கை எழுத அனுமதிக்க வேண்டும்.

மாணவர்களின் ஆய்வறிக்கை இரண்டு நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும். இதில் ஒருவர் வெளிமாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகம் விருப்பப்பட்டால், வெளிநாட்டில் இருந்தும் வரவழைக்கலாம். இவ்வாறு அந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் அனைத்து பல்கலைக்கழகங்களிலும், ஒரே மாதிரியாக அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, யு.ஜி.சி., வட்டாரங்கள் தெரிவித்துஉள்ளன.

இந்த விதிமுறைகள், ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபடும் மாணவர்களுக்கு வேண்டுமானால் பயன்தரலாம். ஆனால் மற்ற மாணவர்கள், குறிப்பாக நடுத்தரகுடும்பத்தை சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கபடுவர்கள்.

எம்.பில்., எனப்படும் Master of Philosophy, படிப்பை எடுத்துக்கொண்டால், அதை 'ரெகுலரில்' படிப்பவர்களைவிட, 'கரஸ்'ஸில் படிப்பவர்களே மிக அதிகம். பொதுவாக, இதை சம்பள மற்றும் வேலை உயர்வு போன்றவற்றுக்காக படிப்பவர்களே அதிகம்.

ஒரு குறிப்பிட்ட வயதை கடந்தோர், திருமணமானவர்கள், வேலையில் இருப்போர் மற்றும் குறிப்பாக நடுத்தர, கீழ் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் எப்படிப்போய் ரெகுலர் வகுப்புகளில் சேர்ந்து படிக்கமுடியும்???

இப்படிபட்ட மாணவர்களின் பிரச்சினைகளை ஆராயாமல் ஏன் புதிய விதிமுறைகளை அறிவிக்கிறார்கள்?

பிஎச்.டி., எனப்படும் (Doctor of philosophy) , படிப்புக்கு ஒவ்வொரு பல்கலைகழகங்களும் ஆராய்ச்சி படிக்கவிரும்பும் மாணவர்களை வழிநடத்துவதற்கு 'குறிப்பிட்ட நபர்களை' (Recoganized Guide) வைத்து இருக்கிறார்கள். இவர்களிடம் மாணவ,மாணவிகள் படும் அவஸ்தைகளை சொல்ல இயலாது.

எனக்கு தெரிந்த ஒரு ஆராய்ச்சி மாணவனை அவனது கைடு, தான் வளர்க்கும் நாயை வாக்கிங் கூட்டிக்கொண்டு போகச்சொன்னார். மாணவர்கள் நிலை இப்படி என்றால் மாணவிகளின் நிலை?

ஒரு மாணவியிடம் " மெட்ராசில வெயில் ஜாஸ்தி ஆய்டிச்சு இல்ல " என்று அவர் கைடு கேட்க, அதற்கு அந்த மாணவியும் 'ஆமாம்' என்று தலையாட்ட, அதற்கு அவர் சொன்னது " டோன்ட் வொர்ரி. நாம(?) ஊட்டி போய்டலாம் ".

தன் எதிர்காலம் கருதி மாணவிகள் இத்தகைய கொடுமைகளை மறைத்துவிடுகிறார்கள் அல்லது அட்ஜஸ்ட் செய்துவிடுகிறார்கள். ஆசிரிய 'பெருமக்களின்' காமவிளையாட்டுக்கள் பள்ளி மாணவிகளையும், குழந்தைகளையும் விட்டுவைப்பதில்லை என்பதான செய்திகள் அன்றாடம் வருகின்றன.

மாதா,பிதா,குரு,தெய்வம் - என வேதம் ஓதும் இந்த சாத்தான்களை, க(ல)ல்வி மிருகங்களை பற்றி தனியே ஒரு பதிவு போடுவதை விட, அவர்களையே 'போடலாம்' என்று தோன்றுகிறது.

ஆராய்ச்சி படிக்கும் மாணவ, மாணவியரின் இத்தகைய அவஸ்தைகளை பற்றி யாராவது சிந்தித்து பார்த்தார்களா என்று தெரியவில்லை.

அமலுக்கு வந்துவிட்ட இந்த விதிமுறைகளால் பலன்கள் என்ன? இதனால் பாதிக்கப்பட்ட/ படப்போகும் மாணவர்கள் நிலை என்ன? கல்வியின் தரம் உயர்ந்து நல்ல மாணவர்கள் உருவார்களா? அப்படியே உருவானாலும் இந்தியாவில் பணிபுரிவர்களா? இதற்க்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

வாழ்கவே மாணவ சமுதாயம் வாழ்கவே.

-இன்பா

12 Comments:

Anonymous said...

// பிஎச்.டி., எனப்படும் (Doctor of philosophy) , படிப்புக்கு ஒவ்வொரு பல்கலைகழகங்களும் ஆராய்ச்சி படிக்கவிரும்பும் மாணவர்களை வழிநடத்துவதற்கு 'குறிப்பிட்ட நபர்களை' (Recoganized Guide) வைத்து இருக்கிறார்கள். இவர்களிடம் மாணவ,மாணவிகள் படும் அவஸ்தைகளை சொல்ல இயலாது//

சரியாகச் சொன்னீர்கள்.ஆய்வேட்டில் கையெழுத்து வாங்குவதற்குள் நாங்கள் பட்ட பாடுகள், அவமானங்கள் சொல்லவே முடியாது. அவர்கள் சொல்லும் வேலையைச் செய்ய வேண்டும். இங்கே காத்திரு என்று சொன்னால் காதலிக்காக சிலர் தவம் இருப்பதைப் போன்று அங்கே தவம் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அங்கே வரலாம், வராமலும் போகலாம். பலசமயம் அவர்களுடைய நண்பர்களுக்கும் சேர்த்து செலவழிக்க வேண்டி வரும். செய்துதான் தீர வேண்டும். இல்லாவிட்டால்.... உங்கள் பி.எச்.டி எக்ஸ்டெண்ட் ஆகிவிடும் இன்னும் சில மாதங்களுக்கு/வருடங்களுக்கு.

மினிஸ்டரிம் கூட கையெழுத்து வாங்கி விடலாம், இந்த ப்ரொஃபசர்களிடம் கையெழுத்து வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விடும்.

முக்கியமான விஷயம் பல ப்ரொஃபசர்கள் அப்பட்டமான ஜாதிவெறியுடன் இருக்கிறார்கள் என்பதுதான். ஆனால் பெண் கைடுகள் பரவாயில்லை. ஏதும் கேட்பதால இருந்தால் கூட டீசண்டாகக் கேட்பார்கள். அதிகமாகத் திட்டார்கள். ஆண் கைடுகள் ஆணவத்தில் செய்யும் செயல்களை இங்கு வார்த்தையில் வடிக்க இயலாது.

அதே சமயம் மாணவர்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட, எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாத நல்ல பல கைடுகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆராய்ச்சித் துறை ஏதோ கொஞ்சம் உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் அதற்கு இவர்கள் தான் காரணம்.

S.S
------ univerity

blogpaandi said...

அப்பிடி போடு அருவாள!

Anonymous said...

இதப் பத்தி நெறைய பேசலாம். பேசணும்.
திரும்பி வருகிறேன், சாவகாசமாய்.

shiva said...

// பிஎச்.டி., எனப்படும் (Doctor of philosophy) , படிப்புக்கு ஒவ்வொரு பல்கலைகழகங்களும் ஆராய்ச்சி படிக்கவிரும்பும் மாணவர்களை வழிநடத்துவதற்கு 'குறிப்பிட்ட நபர்களை' (Recoganized Guide) வைத்து இருக்கிறார்கள். இவர்களிடம் மாணவ,மாணவிகள் படும் அவஸ்தைகளை சொல்ல இயலாது//

well said Mr.Inba

but there is no soultion for this kind of issues

Anonymous said...

Latest 'alambal' I learn university wants the student who had submitted his thesis - (submiting thesis is another long story which is not detailed here--) he/she is required to get consent from three foreign evlauators to evaluate their thesis. They this is only a suggestion to help the student to get this degree soon! A girl/boy in Kattankolathur has to find a professor in Harvard and get his consent. OK. The university will pay for his servcies but how much?....-Dilli Palli

Kasu Sobhana said...

Very pathetic.
If affected parties give details of such erring guides - (phone number / cell number / name / Institution ..etc) - even under the disguise "Anonymous" - IV readers could do something to help.

Anonymous said...

Chandigarh: The recent notification by the University Grants Commission (UGC) for banning MPhil and PhD programmes through distance education mode has created havoc in the universities of Haryana. The ban has been raised for universities, deemed to be a university, college, institutions of national importance. The ban has come as a blow to Chaudhary Devi Lal University (CDLU), Sirsa, in particular, as it will lose nearly half of its students in the distance education programme due to the notification issued by the UGC.

The ban came into effect on June 1, 2009, the same day it was notified in the gazette. Although, CDLU was not conducting PhD programme through distance education mode its MPhil programme was a rage amongst students from different parts of the nation. Even PhD programmes were conducted by some private universities in the state through distance education. CDLU introduced the concept of MPhil through distance education mode in 2006-07, and admitted more than 8000 students in the same category with more than 16 subjects that year

Anonymous said...

HI,
I am the one affected when I submit the thesis in allagappa university,the great examiner,treat me like ...so still am not complete my Mphil....really people who has power really really badly treated.
and let me know guys,who has compleated M.phil before this order is it valid???.

Anonymous said...

Hi,
you know, guide person still they are not good in english????? but they treat the student very badly,and during viva,,,can not explain,the behaveier of examinaers??? please unersity need to consider,I have compleated 2005 but viva still not yet,because of the university??? dare to say allagappa university,but only examiner,,,,please do some thing for this type people,but they will never change,,,

soon be a member here,,,
Regards.
3898

Erode Nagaraj... said...

இது விரிவான விவாதத்திற்கு உரிய விஷயம்.

எங்கிருந்தாலும், மேலே இருப்பவரை "திருப்தி" செய்யவேண்டியிருப்பதும் கீழிருப்பவரை ஆளுகைக்குட்படுத்தலும் உளவியல் ரீதியான சிக்கல்கள். பெரும்பான்மையானோர் மன நோயாளிகளாக மாறி வருவது ஒரு காரணம்.

krish3898 said...

Hi,
this blog really good,and hats off for good post.
I did my M.phil from allagappa university,but viva not yet compleated,because of the controller of examiner,just they call me for date conformation for viva,but when I went there, I have been waited almost 4h,finally they said they will inform,so I was not statisfy and ask him,same answer why not inform from phone,then I think to meet Vice VC,I told him every thing,he really helping mind,then he told me to go and meet once again Controller,but great controller knew that I met the VC,so called security to pull out me from his office,
I PAID MONEY FOR THE course,but I have treated like shit.
I have confident this type of people will regret for their action,I can say like that,what to do am just ordinary people.
...
krishna3898

Baski said...

I feel its good move from UGC.

நான் பாரதிதாசன் பல்கலைகழகத்தில் தொலைகல்வியில் எம்.சி.ஏ கற்றவன். அது சுத்த தெண்டம். பாடமும் சரி, பாடம் நடத்துபவனும் எதற்க்கும் ப்ரியோஜனமில்லாதவர்கள்.

நான் அமெரிக்கா வர எனக்கு ஒரு மேற்ப்படிப்பு தேவை பட்டது. அதற்க்கு இந்த காகிதங்கள் ரொம்ப உதவியது.

எல்லா பல்கலைகழகமும் தொலைகல்வி வழங்க அனுமதிக்க கூடாதென்பதே என் கருத்து.
இந்திரா காந்தி ஓபன் யுனிவெர்சிட்டி - பற்றி என் நண்பர் ரொம்ப நல்ல சொல்லுவார். எனக்கும அவர்கள் பாடத்திட்டம் தரமானதாகவே தோன்றியது. அவர்களுக்கு இத்தகைய அனுமதிகளை வழங்கலாம்.

ஒரு கையெழுத்துக்காக 'கைம்மாறு' கேட்கும் நாதாரிகளை செருப்பால் அடித்திருக்கவேண்டும். உங்கள் வேலை முடிந்தவுடன் உங்கள் இந்த வேலையை காமிக்கலாம்.
அல்லது அவரைபற்றிய குறைகளை நேர்மையான மேலிடகளுக்கு கடிதம் முலம் தெரிவிக்கலாம். dont forget to cc media.

"தான் தப்பித்துக்கொள்ள ஜாதியை சொல்லும் வழக்கம் (ச்வைன் பளு)" கலைஞர் இடத்தில இருந்து பலருக்கு பரவிவிட்டது. எனக்கு தெரிந்த வகையில் எந்த ஆசிரியரும் என்னிடம் ஜாதி கேட்டதில்லை. எப்பவோ அப்ப்ளிகேஷுன் போர்மில் எழுதிய நியாபஹம். எனக்கு தெரிந்து ஜாதி பார்த்து 'கவனிக்கும்' யாரும் எனக்கு தெரியாது. இது சும்மா அவுத்துவிட்ட கதை மாறி இருக்கு.