"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் , வாடினேன்" என்று பாடினார் வள்ளலார். பயிர்கள் வாடுவதையே தாங்கமுடியாத மனம்..உயிர்கள் வாடுவதை தாங்கமுடியுமா ? இப்படிப்பட்ட மனம் நடைமுறையில் சாத்தியமா? இதற்கு விடை தெரிந்துக்கொள்ள கீழே படிக்கவும்....
இந்தகாலத்திலும் வள்ளலார் மனம் கொண்ட ஒருவர் நம்மிடையே இருக்கிறார்.
அவர் மதுரை N.கிருஷ்ணன். CNN-IBN மற்றும் Reliance நிறுவனங்கள் இந்தியா முழுவதும் சமூகத்தில் 'நிஜ கதாநாயகர்களை' அடையாளம் கண்டு வருடந்தோறும் விருது வழங்கிவருகிறது. அந்த விருதை தனது தன்னலமற்ற சமூக சேவைகளுக்காக இந்த வருடம் பெற்று இருக்கிறார் திரு.கிருஷ்ணன்.
அப்படி என்ன செய்கிறார் கிருஷ்ணன்?
”நான் பிச்சைக்காரர்களுக்கு உண்வு கொடுப்பதில்லை. அவர்களை அவர்களே கவனித்துக்குக் கொள்வார்கள்.மனநிலை குன்றியவர்கள் தான் யாரிடமும் உணவோ, காசோ கேட்க தெரியாது. அவர்களுக்கு உதவுகிறேன்” என்கிறார் கிருஷ்ணன்.
யார் இந்த கிருஷ்ணன்?
மதுரை மாநகர தெருக்களில், மனநிலை குன்றிய 400 பேருக்கு வருடம் 365 நாட்களும், நாளுக்கு மூணு வேளையுமாக உணவு வழங்கிக் கொண்டு இருக்கும் இவருக்கு அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லை. வெறும் 28 தான். கடந்த ஏழு வருடங்களாக, அக்ஷ்யா டிரஸ்ட் என்னும் தொண்டு நிறுவனம் மூலமாக இதை செய்து வருகிறார்.
பெங்களூருவின் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில், சமையலை தொழிலாக(செஃபாக) செய்து வந்த அனுபவம் கைகொடுத்து இருக்க வேண்டும். சுத்ததிலும், பாத்திரங்கள் பளபளவென்று அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் நேர்த்தியிலும , அரிசி பருப்பு, காய் கறி, மசாலா சாமான்களின் தரத்திலும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் சமையலறையை ஒத்திருக்கிறது கிருஷ்ணனின் சமையலறை.
”தினமும் மெனுவை மாற்றி விடுவேன்.ஒரெ உணவை சாப்பிட்டால் அவஙகளுக்கு சலித்து போயிடுமில்ல?” உற்சாகமான அவருடைய புன்னகை நம்மை எளிதில் தொற்றிக்கொள்கிறது.
இரண்டு சமையல்காரர்களின் உதவியோடு, தினமும் மூன்று வேளையும் சமைத்து, தன் வளர்ப்பு மக்களை தேடி தெருத்தெருவாக தானே எடுத்து செல்கிறார்.மனநிலை குன்றியவர்கள அடிக்கடி இடம் பெயர்வதில்லையாம், தினமும் அதே இடத்தில் தான் சந்திக்கிறாராம்.
ஒரு பெரிய பாத்திரத்தில் தயிர் சாதமும், சிறியது ஒன்றில் ஊறுகாயுமாக, ஒரு மாருதி வேனில் கிளம்புகிறார். வேன்? மதுரையின் ஒரு தயாளர் தானமாக கொடுத்தது. பத்து நிமிட பயணம். வேன், ஒரு சுவரின் அருகில் படுத்து இருக்கும் மனிதரின் அருகில் நிற்கிறது,கிருஷ்ணன் தயிர்சாதத்தை அவர் அருகில் வைக்க, அவர் அதை சீண்டக்கூட இல்லை. தண்ணீர் பாட்டிலை வாங்கி மட மட என்று குடிக்கிறார்.”பாவம் ரொம்ப தாகம். கொஞ்சம் கழித்து சாப்பிடுவார்” இது கிருஷ்ணன் சொன்னது.
வேனின் அடுத்த நிறுத்தம். தானே இலையில் சாதம் போட்டு, கொஞ்சம் எடுத்து ஒரு மனிதருக்கு ஊட்டியும் விடுகிறார். இரண்டு கவளத்துக்கு பிறகு அவர் தன்னாலேயே சாப்பிட ஆரம்பிக்கவும், கிளம்பி, அடுத்து ஒரு ட்ராஃபிக் சிக்னல். அழுக்கும், கிழிசலும், தாடியுமாக அந்த கூட்டத்தில் தனியாக தெரிந்த நாலு பேர், வேனை நோக்கி வருகிறார்கள். அவர்களிடம் எந்த் பரபரப்பும் இல்லை, “இந்த வேன் வந்தால் சாப்பாடு, கிருஷ்ணன் அவர்களுக்கு காத்திருப்பார்” என்பதை அவர்களுடைய மனது அறிந்தே இருக்கிறது.
”அவர்களுக்கு தனக்கு தானே தண்ணீர் கூட எடுத்துக் கொள்ள தெரியாது” ஒரு மரத்தடியில் அவர்களுக்கு சாப்பாடு பரிமாறி, தண்ணீரும் தந்து கொண்டே சொல்கிறார்.
அக்ஷய பாத்திரம் காலி ஆகும் வரை நகர்வலம் வருகிறது கிருஷ்ணனின் மாருதி வேன். மீண்டும் இரவு உணவுக்கு பாத்திரம் நிறையும். பயணம் துவங்கும்.
இத்தனைக்கும் சாப்பிட்ட ஒருவர் கூட கிருஷ்ணனுக்கு நன்றி சொல்வதில்லை. நன்றி என்ன நன்றி? ஒரு புன்னகை? ஒரு தலையசைப்பு? ஒன்றும் கிடையாது. அவரவர் வேலைகளை செய்வதற்கே நாமெல்லாம் நன்றியை எதிர்பார்க்கும் இந்த காலத்தில்,கிருஷ்ணன் பாட்டுக்கு அவர் பணியை தொடர்கிறார்.
ஒரு நாளைக்கு 12000 ரூபாய் செலவு ஆகிறதாம். “மாதத்தில் 22 நாட்களுக்கு ”Donars” இருக்கிறார்கள். மீதி நாட்களை நானே சமாளிக்கிறேன்” அயராமல் சொல்வதோடு, “மீதி நாட்களுக்கும் கூடிய விரைவில் கிடைத்து விடுவார்கள்” என்னும் குரலில் ஏராளமான நம்பிக்கை.அக்கவுண்டுகளை வெகு சிரத்தையாக கையாள்கிறாராம். அக்ஷயா ஆரம்பித்த பிறகு, முதன்முதலாக,பலசரக்கு வாங்கிய ரசீதை செண்டிமெண்டாக வைத்து இருக்கிறார்.பொருளாதார வீழ்ச்சி இவரையும் விட்டு வைக்க வில்லை, 25 ஆக இருந்த Donars, 22 ஆக குறைந்து போய் இருக்கிறார்க்ள்.
இன்ஃபோஸிஸ், டிவிஎஸ் நிறுவனங்கள் இவருடைய சேவைக்காக 3 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க, அதில் ஒரு காப்பகம் அமைக்க திட்டம் இட்டு, முதலில் 80 பேர் தங்கும் அளவில் ஒரு பெண்கள் பகுதிக்கு அடித்தளம் மாத்திரம் கட்டிய நிலையில், நிதி தட்டுப்பாட்டினால், அப்படியே கிடப்பில் இருக்கிறது.
கிருஷ்ணனின் எல்லை உணவு கொடுப்பதோடு முடிந்து விடவில்லை.இன்னும் பரந்து இருக்கிறது. கேட்பாரற்று இருக்கும் அனாதை பிணங்களுக்கு இறுதி சடங்கு செய்யும் பணியையும் செய்து வருகிறார் கிருஷ்ணன்.பிணத்தை claim செய்து, குளிப்பாட்டி, உரிய முறையில் நல்லடக்கம் தருவதுமாக இருக்கும் இவரை, மதுரை முனிசிபாலிடியில் இருந்தும், பொது மருத்துவமனையில் இருந்தும், இறுதி சடங்கு செய்ய சொல்லி அழைக்கிறார்கள்.
நம் தேசபிதா காந்தியை கதராடை கட்டவைத்து 'மகாத்மா' ஆக காரணமாக இருந்த மதுரையே இவரது மாற்றத்திற்கும் காரணம். இப்படி இப்பட்செய்ய தூண்டியது ? என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு நினைவு கூர்கிறார் "பெங்களூருவில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிந்த நான், வெளிநாடு செல்வதற்கு முன் சொந்த ஊர் மதுரைக்கு வந்தேன். டாக்ஸியில் ஏர்போர்ட் செல்லும் போது மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு முதியவர் தன் மலத்தை தானே உண்ணும் அவலத்தை பார்த்து பதறி அடித்து அருகில் இருந்த ஹோட்டலுக்கு ஓடி, அவருக்கு பத்து இட்லி வாங்கி கொடுத்தேன். அரக்க பரக்க சாப்பிட்டு முடித்த அவர் என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார். அந்த சிரிப்பு தான் என்னை மீண்டும் மீண்டும் செய்ய தூண்டியது, அதன்பின், இத்தகையவர்களுக்கு உணவிடுவதே தன் தொழில் என முடிவு செய்துவிட்டேன்".
இவ்ருக்கு இன்னும் திருமணமாக வில்லை. "நாள் முழுக்க மற்றவர்களுக்கு சமைத்து கொண்டு இருக்கும் என்னை யார் கல்யாணம் செய்து கொள்வார்கள்?" என்று கேட்கிறார்.தன்னை திருமணம் செய்து கொள்பவர்,அவருடைய இந்த வாழ்க்கை முறைக்கு ஒத்து வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.ஆரம்பத்தில் அதிர்ச்சியான இவருடைய பெற்றோர்கள் கூட இப்போது இவருக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள்.
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பார்த்துக்கொண்டு இருந்த வேலையை விட்டு விட்டு, மனனலம் குன்றியவர்களுக்கு சமையலும், அனாதை பிணங்களுக்கு காரியமும் செய்கிறீர்க்ளே? என்று ஆதங்கப்படுபவர்களுக்கு இவரது பதில், “எனக்கு இது பிடித்து இருக்கிறது”.
இவர் மதுரையில் நடத்திவரும் அக்க்ஷயா ட்ரஸ்ட் சேவைமையத்திற்கு ஏழு வயதாகிறது.
தன் வயிறுபசித்தால் பாலுக்குகூட அழதெரியாத மனநலம் குன்றிய
குழந்தைகளுக்கு தேடிபோய், தானே சமைத்து உணவிடும்
'தாயுமான' கிருஷ்ணனுக்கு, உதவி செய்துவரும் பல கரங்களோடு,
இந்த நன்னாளில் நம் கரங்களையும் இணைப்போம்.
எல்லோருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
ஜெய்ஹிந்த்.
நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஓருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை - ஔவையார்
தகவல்/படங்கள் உதவி:
http://news.rediff.com/slide-show/2009/aug/12/slide-show-1-he-gave-up-a-5-star-job-to-feed-the-mentally-ill.htm
http://www.akshayatrust.org/
பிகு: இந்த கட்டுரையை எழுத தூண்டிய குரு பிரசாத்துக்கும், இதை தமிழில் எழுத உதவிய இரண்டு நண்பர்களுக்கும் என் நன்றி.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, August 15, 2009
'தாயுமான' கிருஷ்ணன்
Posted by IdlyVadai at 8/15/2009 12:01:00 AM
Labels: இட்லிவடை ஸ்பெஷல், சமுதாயம்
Subscribe to:
Post Comments (Atom)











29 Comments:
very moving post. really special.
இந்த மாறி ஒரு மனிதரா? அவரை பாராட்ட வார்த்தை இல்லை.
ஆஹா... இப்படியும் ஒரு மனிதரா....?? வாழ்க வளமுடன்....!!!
இப்படியும் கூட மனிதர்கள் இருக்கிறார்கள்...கண்ணில் நீர் வந்தது என்ற வார்த்தை மிகை அல்ல. இவர்களைப் பற்றி நம் செய்தித் தாள்கள் செய்தி வெளியிடுவதில்லை. பெரிய பெரிய எழுத்துக்களில் கொலை கொள்ளை, கற்பழிப்பு என்று Negative தகவல்கள்தான் முதலிடம் பிடிக்கும். Long Live shree Krishnan.
நாட்டில் இதுபோன்ற மக்கள் உள்ளதால்தான் மழையே பெய்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது....
அவரின் சுயநலமற்ற சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
மீண்டும் நல்லதொரு பதிவை இட்ட இட்லிவடைக்கு என் பாராட்டுக்கள்...
A great person filling the heart of any reader who goes through the post.
From my view, Krishnan is a jewel adoring BharatMata.
(perumbaalour pirarai)Aeiththu pizhaikkum ikkaalaththil ippadi oru maanikkamaa!
Paaraattukkal to iv for introducing the jewel to those who were uninitiated.
தேடிச் சோறு தினம் கொடுத்து
பல அரும்பெரும் செயல்கள் செய்து
நரை கூடும் முன் இளமையில்
ஞானம் பெற்று தொண்டு செய்யும் - நீ
கொடும் பசிக்கிரையாகும் பல
விந்தை மனிதரை வாழ்ந்திட வைக்கிறாய் !
என்றைக்கும் நீ வீழ்ந்திட மாட்டாய் !
வாழ்க நீ பல்லாண்டு...
நன்றி இட்லிவடை...
நூற்றில் ஒருவர், ஆயிரத்தில் ஒருவர் என்றெல்லாம் பெருமையோடு சொல்லிக் கொள்பவர்கள் கூட இந்த
110 கோடியில் ஒருவரின் - கிருஷ்ணனின் -
காலில் விழுந்து தொழ வேண்டும்.
கிருஷ்ணன் அவர்களே - வாழ்க நும் தொண்டு!
வாடிய பொழுதைக் காணும் பொழுதெலாம் வாடுகின்ற வாழும் வல்லளார். அன்பின் - கிருஷ்ணா, உம் மனம் பிழன்ற மக்களுக்குக்கான தொண்டு செழிக்க எல்லாம் வல்ல இறைவன் துணை செய்ய வேண்டியவனாயும் மனிதம் செழிக்க எம் போன்றோர்கள் இன்னுமதிகம் உதவிகள் செய்திட உம் போன்ற மனவுறுதி எமக்குள்ளும் வரவேண்டும்... இட்லி வடைக்கு தலையில் ஒரு ஷொட்டு... வாழ்த்துக்களுடன்,
இனியஹாஜி
வாடிய பொழுதைக் காணும் பொழுதெலாம் வாடுகின்ற வாழும் வல்லளார். அன்பின் - கிருஷ்ணா, உம் மனம் பிழன்ற மக்களுக்குக்கான தொண்டு செழிக்க எல்லாம் வல்ல இறைவன் துணை செய்ய வேண்டியவனாயும் மனிதம் செழிக்க எம் போன்றோர்கள் இன்னுமதிகம் உதவிகள் செய்திட உம் போன்ற மனவுறுதி எமக்குள்ளும் வரவேண்டும்... இட்லி வடைக்கு தலையில் ஒரு ஷொட்டு... வாழ்த்துக்களுடன்,
இனியஹாஜி
Cant express our words. Great Great Great. Thanks to Idlyvadai.
சுதந்திர தினத்தில் காந்தியின் வரலாறை படிக்கச்சொல்லி ஒரு பதிவைப் பார்த்தேன். இங்கே அதை படித்துவிட்டேன்.
த. துரைவேல்
ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை இந்த தனி மனிதர் செய்கிறார். வாழ்க இவரது சேவை.
நெகிழ வைக்கும் சேவை. தொடரட்டும்.
நம் சுதந்திர தினத்தன்று ஒரு மகாத்மாவை அறிமுகம் செய்த இட்லிவடைக்கு என் நன்றி.
முதல பத்திக்கு பிறகு கூப்பிய என் கரங்கள் விலகவே இல்லை.
மூன்றாம் பத்திக்கு பிறகு படிக்கவே முடியாமல் கண்ணீர் திரையிட்டது.
இவரின் முகவரி ப்ளீஸ் !
A similar project is run by Tirupattur Ramesh. Besides feeding, they also do phycho-social rehabilitation of the mentally ill. More details at: http://udavumullangal.org/
ஒரு சமயம் திருவல்லிக்கேணி ஹ்யூமர் கிளப் நிகழ்ச்சிக்கு கிருஷ்னனை அழைத்து இருந்தார்கள். அவர் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போதே முதல் வரிசையில் உட்கார்ந்து கொண்டு இருந்த ஒரு முதிய பெண்மணி கையை ஆட்டி செயலாளரை அழைத்தார். 25000 ரூபாய்க்கு செக் கொடுத்தார். மீட்டிங்க் முடிந்ததும் மேடையில் வசூல் ஆன cash தொகை 2.25 லட்சம். ஒருத்தர் தன் குடும்ப டிரஸ்டிலிருந்து மறு நாள் 1 லட்சம் தருவதாகச் சொன்னார். -----என் பர்ஸிலிருந்த பணம் மொத்ததையும் கொடுக்க முடிவெடுத்தேன். 1014 இருந்தது. கொடுத்துவிட்டேன்.-- இப்படிக்கு ???????
////கிருஷ்ணனின் எல்லை உணவு கொடுப்பதோடு முடிந்து விடவில்லை.இன்னும் பரந்து இருக்கிறது. கேட்பாரற்று இருக்கும் அனாதை பிணங்களுக்கு இறுதி சடங்கு செய்யும் பணியையும் செய்து வருகிறார் கிருஷ்ணன்.பிணத்தை claim செய்து, குளிப்பாட்டி, உரிய முறையில் நல்லடக்கம் தருவதுமாக இருக்கும் இவரை, மதுரை முனிசிபாலிடியில் இருந்தும், பொது மருத்துவமனையில் இருந்தும், இறுதி சடங்கு செய்ய சொல்லி அழைக்கிறார்கள்.//////// திரு கிருஷ்ணனின் இது போன்ற முயற்சிகள் மற்றும் சேவைகள் பற்றிய பெருமிதம் மனதில் மேலெழுந்து நின்றாலும், சிறு நெருடலாக ஒரு விஷயம் கேள்விப்பட்டது உருத்துவதால் இந்த பின்னோட்டம்.... சமீபத்தில் இறந்த ஒரு உறவினரின் ஆத்மா சாந்தியடைய என்று சொல்லி இறந்தவரின் நெருங்கியவர்களிடம் மாதம் நான்கு பிணங்கள் வீதம் பதினோரு மாசத்துக்கு நாப்பதினாலு பிணங்கங்களை எரித்து பரிகாரம் செய்வதாக கூறி பிணத்துக்கு 1500 ரூபாய் வீதம் 66000/- ரூபாய் வசூலித்துவிட்டு எல்லாம் சரியாகி விட்டதாக சொல்லி அனுப்பிய ஒரு மாதத்துக்குள் இன்னொருவர் இந்த குடும்பத்தில் இறந்து போக இப்பொழுது கூடுதல் பிணங்களை எரித்து நல்ல வகையில் மீண்டும் சாந்தி செய்து தருவதாக சொல்லி 90,000 ரூபாய் demand செய்து வருவதாய் கேள்வி. இது சம்பந்தமாக, விவரமறிந்தவர்கள் திரு கிருஷ்ணன் அவர்கள் இது போன்ற நடவடிக்கைகளையும் தனது அக்ஷயா டிரஸ்ட் மூலம் செய்து வருகிறாரா என்பதை பின்னோட்டமாக எழுதினால் நன்று.
IV,
Really moving post, hats off to Mr.Krishnan sitting here and commenting about somebody's good job alone does not seems to be good from my side (repeat my side) to do something helpful to him and to be a part of such a wonderful dharma alone will be hearfilling one.. noted the site of mr.krishanan and would love to do something which is helpful to him.... this alone makes me human (from my point of view and not others and does not mean that others does not have heart and all and for god sake don't make this an issue)
Kamesh
ஊரைககொல்லலையடித்து உலைகொதிக்கும் பல மனித மிருகங்கள் மத்தியில் இதுபோல் ஒரு மகான்... தொடரட்டும் இவரது தொண்டு
Hi,
It is a wonderful article. Thanks for posting! It would be great if you could provide the contact information of Krishnan so that anybody willing to donate him could reach him.
Thanks
Senthil
very nice person.....really great
"Service to humanity is service to God"
may God help him in so many ways..
Thank u for sharing because knowing about the Good people through ur blog
To earn a good name is very difficult than to earn a bad name
manathirku ithamai irukinrathu, ivarin sevai todarattum, ivarin mugavi then accounts details kodukkavum.
Thanks Mr.Idlyvadai...
Really Krishnan is Great..
I have donated Rs.2500 already. I Hope other Idlyvadi Readers also Donate for this as much they can...
நண்பர்களுக்கு வணக்கம்,
திரு.கிருஷ்ணன் அவர்களின் மொபைல் நம்பர், மற்றும் முகவரி:
Contact
Akshaya's Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India
Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in
www.akshayatrust.org
http://www.akshayatrust.org/contact.php
Contributions: http://www.akshayatrust.org/contributions.php
அவர் செல்பேசியின் காலர் டியூன் "குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா"
அன்புடன்,
இட்லிவடை
நல்லார் ஓருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
N.கிருஷ்ணன் அவர்கள்
{
உடல் நலம்
நீளாயுள்
நிறை செல்வம்
உயர்புகழ்
மெஞ்ஞானம் ஓங்கி வாழ்க
}
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
இன்று தான் இந்த பதிவை பார்த்தேன். நன்றி இட்லிவடை மற்றும் உங்கள் நண்பர்களுக்கு.
நல்ல முயற்சி. நாமெல்லாம் நினைப்பதிலேயே மகிழுந்துகொள்ளும் ஒரு விஷயத்தை ஒரு மனிதர் நிஜமாகவே செய்வது நன்று.
இவ்விஷயங்களில் ஈடுபட்டவாறே, இது தீர்வின் எல்லையா என்பதை யோசிக்கவேண்டும்.
இவர் பணி மேன்மையடையவும் இவருக்கு ஏற்ற நல்லதொரு வாழ்க்கை துணை அண்மைய இறைவனை வேண்டிகொள்கிறேன்.
Post a Comment