பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 12, 2009

கிழக்கு பதிப்பகம் வழங்கும் “ஓட்டு போடு”
பர்கூர், தொண்டாமுத்தூர், கம்பம், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது.

இதனை முன்னிட்டு கிழக்கு பதிப்பகம் வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்க செல்ல வேண்டிய வாக்குச்சாவடியை அறிந்து கொள்ளும் வகையில் “ஓட்டு போடு” என்ற இணைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், http://nhm.in/india-votes என்ற இணையதளத்திற்கு சென்று வாக்காளர் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணை தெரிவித்து வாக்குச்சாவடியை அறிந்து கொள்ளலாம்.

இதன் மூலம் தனது வாக்காளர் அடையாள அட்டை எண்ணுக்கு வாக்களிக்க வாய்ப்பு உள்ளதா, இல்லையா என எளிதில் அறிந்து கொள்ளலாம்.

ஒரு வேளை உங்களது எண் பட்டியலில் இல்லையென பதில் வந்தால், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியை உடனே தொடர்பு கொண்டு விசாரிக்கவும்.

நீங்கள் அதிமுக கூட்டணியில் உள்ள மானஸ்தன் என்றால் அப்படி செய்ய தேவையில்லை


7 Comments:

Anonymous said...

யோவ், இட்லி!
"மானஸ்தனா" இருந்தா எப்டியா அ.தி.மு.க. கூட்டணில இருப்பான்?

தப்பான வரிக்கு மஞ்சள் அடிக்காதீர் அய்யா!

kggouthaman said...

அய்! இந்த விளையாட்டுக்கு நான் வரலை!
என்னுடைய வாக்காளர் அடையாள எண்ணுக்கு
வோட்டு இல்லை என்று தெரிந்தால் - எனக்கு
வரவேண்டிய நோட்டு கைக்கு வராதே!
அடையாள அட்டையைக் காட்டியே
நான் வாங்க வேண்டியதை வாங்கிவிடுவேனே!

யதிராஜ சம்பத் குமார் said...

இதெல்லாம் சரி....போடுகின்ற ஓட்டு நாம் போட்ட கட்சிக்குத்தான் விழுந்ததா என்று அறிய ஏதாவது இணையதளம் இருந்தால் தெரிவிக்குமாறு இட்லிவடையைக் கேட்டுக் கொள்கிறேன்.


மற்றொரு சுவாரஸ்யமான தகவல்...ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த கேப்டன் விஜயகாந்த், தமது வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால், ஸ்ரீவைகுண்டத்தை வைகுண்டமாக மாற்றுவேன் என்று ஒரு பெரிய அதிர்வெடியை வீசியுள்ளார் ( கடந்த ஞாயிறு தினத்தந்தி செய்தி ). இதை எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று தெரியவில்லை. இப்படித்தான் மயிலாடுதுறையில் போட்டியிட்ட மணி ஷங்கர ஐயர், மயிலாடுதுறையை சிங்கப்பூராகவோ, ஜப்பானாகவோ மாற்றுவதாகச் சொன்னார்.


விஜயகாந்த் ஜெயித்த விருத்தாசலத்தை என்னவாகச் செய்திருக்கிறார் இதுவரை?? வாக்காளர்கள் இவரிடம் சற்றே ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும். கலைஞரை விட ஒருபடி மேலே போய்விட்டார் வாக்குறுதி அளிப்பதில்.

R.Gopi said...

தே.மு.தி.க.விற்கு வாக்களித்தால் ஸ்ரீவைகுண்டத்தை வைகுண்டமாக மாற்றுவேன்....

இப்படி சொன்ன விஜயகாந்திற்கு "கருட புராணம்" படி என்ன தண்டனை என்று இட்லிவடை, மானஸ்தன், ஈரோட் நாகராஜ், கவுதமன், யதிராஜ சம்பத் குமார் என்று யாராவது பதில் சொன்னால் நல்லா இருக்கும்....

அது என்ன புதுசா, மானஸ்தன் அ.தி.மு.க.கூட்டணி (எப்போதிலிருந்து??) சொல்லவே இல்ல..

kggouthaman said...

//விஜயகாந்திற்கு "கருட புராணம்" படி என்ன தண்டனை என்று இட்லிவடை, மானஸ்தன், ஈரோட் நாகராஜ், கவுதமன், யதிராஜ சம்பத் குமார் என்று யாராவது பதில் சொன்னால் நல்லா இருக்கும்....//
கோபி தம்பி,
ஸ்ரீ வைகுண்டம் - ஸ்ரீ = வைகுண்டம்.
ஸ்ரீ என்றால் செல்வம்.
யாருக்கு வோட்டுப் போட்டாலும், அவர்கள் கொள்ளையடித்த பின் --
செல்வம் இழந்த ஸ்ரீ வைகுண்டம் =
வைகுண்டம் தானே!

லவ்டேல் மேடி said...

நல்ல பதிவு....!!

// நீங்கள் அதிமுக கூட்டணியில் உள்ள மானஸ்தன் என்றால் அப்படி செய்ய தேவையில்லை //


தி.மு.க கிட்ட எவ்வளோ அமவுண்ட் வாங்குநீரு....? இட்லி வடைக்கு மாவாட்ட உளுந்தம் பருப்பு வாங்கக்கூட பத்தாது அந்த காசு.....!! அந்த அளவுக்கு இருக்கு விலைவாசி......

kumar said...

நல்ல பதிவு....!!