பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 13, 2009

அபூர்வ சகோதரர்கள்

திருவள்ளுவர், சர்வக்ஞர் சிலைகள் பற்றி இன்பா & இட்லிவடை...

ஒரு வழியாக அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்புவிழா பெங்களூருவில் இனிதே நடந்துவிட்டது.

"நான் 18 ஆண்டுகளுக்கு முன் ஒரு சபதம் செய்திருந்தேன். கடந்த 18 ஆண்டுகளாக பெங்களூரில் நடக்கும் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் யார் என்னை அழைத்தாலும், "பெங்களூரில் திருவள்ளுவர் சிலை மூடப்பட்டு கிடக்கிறது. அது என்றைக்கு திறந்து வைக்கப்படுகிறதோ அன்று தான் பெங்களூரு வருவேன்' என, சொல்லியிருந்தேன்.அந்த சபதத்தை நான் நிறைவேற்றவில்லை. முதல்வர் எடியூரப்பா நிறைவேற்றி கொடுத்திருக்கிறார்."


என்று சொன்னார் நம் முதல்வர்.

"இதைபோன்று தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலம் ஆக்குவேன் என்று எதாவது சபதம் போட்டு இருக்காரா. அதை வேறு 'யாராவது' வந்து நிறைவேற்றுவார்களா" என்று 'டெலிபதி'யில் என்னிடம் கேட்டார் நண்பர் மானஸ்தன். தெரியவில்லை. அப்படி எதாவது 'போட்டுஇருந்தால்' , மகன்...பேரன்.. கொள்ளு பேரன்.. எள்ளு பேரன் என அவரது வரும் தலைமுறையில் யாராவது நிறைவேற்றலாம்.

"காவேரி நடுவர்மன்ற தீர்ப்பை நிறைவேற்றினால்தான் பெங்களூரு வருவேன் என அவர் ஏன் சபதம் போடவில்லை" - இப்படி 'மப்'பில் கேட்டவர் நம்ம முனி. போதாகுறைக்கு "கடந்த 18 ஆண்டுகளாக பெங்களூருவில் நடக்கும் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் அவர் வரவில்லையா. 'சன்' பிரச்சினைகளை தீர்க்கும் நிகழ்ச்சி அங்க இருக்கிற அவரோட பண்ணை வீட்டுலதான நடந்துச்சு" என்று வேறு ஏடாகூடமாக கேள்வி கேட்டார்.

இதெற்கெல்லாம் பதில் நீங்கள்தான் சொல்லவேண்டும்.

வள்ளுவர்க்கு மாற்றாய்(?), சர்வக்ஞர் சிலையை சென்னையில் வைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் நடந்திருக்கிறது (இல்லை என்றால் சும்மா விடுவார்களா வா(மு)ட்டாள் நாகராஜ் வகையறாக்கள்)

சிலை திறந்து, மனம் திறந்து அவர் பேசியதாவது.

"பக்கத்து மாநில முதல்வர் என்ற முறையில், நீண்ட நாட்களாக கர்நாடகாவுடன் தொடர்புடையவன் என்ற முறையில் எனது நன்றி. இன்னும் சில நாட்களுக்கு பின் சென்னையில் நடக்க இருக்கிறது சர்வக்ஞர் சிலை திறப்பு விழா. இந்த இரண்டும், இரண்டு சிலை திறப்பு விழாக்களை குறிப்பது அல்ல. இரு மாநில மக்களது இதயங்களை திறந்திருக்கிற சிறப்பு விழாக்கள்.சர்வக்ஞர், கன்னடத்தில் படைத்துள்ள உரைப்பாக்களை எல்லாம் இறையடியார் என்ற தமிழறிஞரைக் கொண்டு தமிழில் மொழி பெயர்த்து, அவர் கவிதை நடையில் தந்துள்ள உரைப் பா என்ற நூலை வெளியிட்டு மகிழ்ந்தது தான் தமிழக அரசு.நண்பர்கள்: இப்படி முடியாத காரணத்தால், கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள், கன்னடர்களோடு சேர்ந்து இருவரும் ஒருவராக யார் வந்தால், இந்த காரியம் நிறைவேறும் என்று எதிர்பார்த்து, அங்கே என்னையும், இங்கே இவரையும் (எடியூரப்பா) முதல்வர்களாக தேர்ந்தெடுத்திருக்கின்றனர்"

என்று பேசினார்.

முத்தாய்ப்பாக ஒரு பாசமலர் கட்சியை அரங்கேற்றினார்.

"அவரை விட நான் மூத்தவன் என்பதால், எனக்கு 86 வயது, அவருக்கு 67 வயது என்பதால், எல்லாரையும் அழைப்பது போல "தம்பி' என்று அழைக்கலாம். இந்த இரண்டு சகோதரர்களும், இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டத்தக்க ஒரு நிலையை உருவாக்கியிருக்கிறோம். இதை மற்ற மாநிலங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதில் எந்த அரசியலும் கிடையாது. இது அறவியல் தான்"

என்றார்.

அதான் எடியூரப்பா 'தம்பி' ஆகிவிட்டாரே. தமிழர்நலன் கருதி காவேரி,ஒகெனக்கல் பற்றி எதாவது 'பிட்டு' போடுவார் என்று எதிர்பார்த்தால், தன் பண்ணைவீட்டின் நலன் கருதி கவனமாக 'சென்சார்' செய்துவிட்டார்.

பொதுவாக சிலை திறப்பினால் காக்கா,குருவிகளுக்கு பலன் உண்டு. மக்களுக்கு?

பொதுவாகவே இரண்டு மாநில மக்களிடையே பகமைஉணர்வு நிலவுகிறது. "தமிழக - கர்நாடகா அணிகள் ரஞ்சி ஆடினாலே அது இந்தியா - பாகிஸ்தான் போலிருக்கும்" என்று ஒரு கிரிக்கெட் விமர்சகர் சொல்லிஇருந்தார். இந்த சிலை பரிமாற்றம், லாகூருக்கு பஸ் விட்டதைபோல அமையலாம்(!).

யாருக்காவது எதன் மீதாவது கோவமா? உடனே 'உள்ளூர் தமிழனை அடித்து உதை' என்பதான மனோவியாதி இலங்கை, மலேசியா மட்டுமில்லாது நம் பக்கத்துக்கு மாநிலமான கர்நாடகாவிலும் பரவிஇருக்கிறது. இந்த முயற்சி அந்த வியாதியை குணப்படுத்தவேண்டும் என அந்த முனிஸ்வரனை வேண்டிக்கொண்டு, வரவேற்போம்.

ஒன்று கொடுத்தால்தான், இன்னொன்று என்று முடிவாகிவிட்டது. நம்ம ஈரோடு நாகராஜ் ஸார் சொன்ன kaveri for full tassmak production என்ற முறையில், 'வாழும் வள்ளுவர்க்கு' அடியேனின் சில யோசனைகள்.

கூவம் நதி நீரை காவேரிக்கு மாற்றாய் பகிரலாம்.

எப்படி தன் வீட்டை மக்களுக்காக 'தாரை' வார்த்துபோல, சன் - கலைஞர் டிவி குழுமங்களை கர்நாடகா அரசிடம் கொடுத்துவிட்டு, ஒகெனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றலாம்.

முதலில் கேட்ட கேள்விகளுக்கான பதில்களோடு , இது போன்ற யோசனைகளையும் பின்னூட்டத்தில் சொல்பவருக்கு, என்னோடு சேர்த்து 'பரிசு' தருவதாக இட்லிவடை சத்தியம் செய்திருக்கிறார்.


பிகு: ஹ்ம்ம்..முதலில் இதற்கு 'மஞ்ச பெயிண்ட்' அடிக்கறாரான்னு பாக்கலாம்.


- இன்பா

என் கமெண்ட் இந்த முறை பச்சையாக -
திருவள்ளுவர், சர்வக்ஞரின் சிலைகளை வெறும் சிலைகளாக நாம் பார்க்கக்கூடாது. இரு மாநில அமைதி உறவுக்கு ஏற்பட்டுள்ள முதல் அடியாக இதை நாம் பார்க்க வேண்டும். பழைய காலத்தில் அரசர்களுக்குள் சமாதானம் ஏற்படுத்த பெண் கொடுத்து பெண் எடுப்பார்கள், அது போல தான் இதுவும்.

இது எடியூரப்பாவின் ஐடியாவா அல்லது, கலைஞரின் ஐடியாவா என்று தெரியாது ஆனால் யாருடைய ஐடியாவாக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு சபாஷ். நிச்சயம் இரண்டு முதல்வர்களும் பாராட்டுக்குரியவர்கள். திருவள்ளுவர் சிலை திறப்பு அன்று பெங்களூரில் ஆங்கில திருக்குறள் புத்தகம் பல வியாபாரம் ஆகியது என்று செய்தி. சர்வக்ஞர் என்றால் அனைத்தும் அறிந்தவர் என்று பொருள். அவரை பற்றி முழுவதும் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, கொஞ்சமாவது தமிழ் மக்கள் தெரிந்துக்கொள்ளட்டுமே!

சர்வன்ஞர் எழுதிய ஒரு திரிபதி இப்படி போகிறது...

நாம் அனைவரும் ஒரே மண்ணை மிதிக்கிறோம்
ஒரே நீரை குடிக்கிறோம், அடுப்புத்தீயும் பிரிப்பதில்லை;
எங்கிருந்து சாதி வந்தது கடவுளே.


இதை தமிழ் மக்களுக்கும், கன்னட மக்களுக்கும் புரியும் மாதிரி மொழிபெயர்க்க சிபாரிசு செய்கிறேன். இந்த சிலை திறப்பு, இரு மாநில பகைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க அகர முதல எழுத்தாக உதித்தாக வேண்டும்
- இட்லிவடைபடம் - உட்கார்ந்து கொண்டு இருப்பவர் - திருவள்ளுவர், நின்று கொண்டு இருப்பார் சர்வக்ஞர்

35 Comments:

யதிராஜ சம்பத் குமார் said...

கர்நாடகத்தில் திருவள்ளுவர் சிலை என்ன சாதிக்கப் போகிறதோ தெரியவில்லை. எதிர்காலத்தில் ஏதாவது நீர் பங்கீடு அல்லது இன மொழி சார் பிரச்சனைகள் தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் இடையே உருவெடுத்தால் வள்ளுவர் சிலை நிச்சயம் சமூகவிரோதிகளின் காழ்ப்புணர்ச்சிக்கு இலக்காகும். நம்மவர்களிடம் சொல்லவே வேண்டாம்!! இருக்கவே இருக்கிறார்கள் சினிமாக்காரர்கள் மற்றும் அக்மார்க் இனமான உணர்வாளர்கள். அவர்கள் சர்வக்ஞரை துவைத்தெடுத்து விடுவார்கள். ஆக இந்த இரண்டு மாபெரும் சரித்திர புருஷர்களுக்கு எதிர்காலத்தில் ஒரு பெரிய இழுக்கு காத்திருக்கிறது.


ஆண்டுகள் உருண்டோடுகின்றன, அரசுகளும் இரு மாநிலங்களில் மாறி மாறி வருகின்றன. ஆனால் காவிரி மற்றும் வாழ்வியல் சார் பிரச்சனைகளுக்கு இன்னும் ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை. ஆனால் சிலை திறப்பு வைபவங்கள் மட்டும் காலந்தவறாமல் நடந்துவிடுகின்றன.


நெடுங்காலமாக திறக்கப்படாமலிருந்த அந்த அய்யன் வள்ளுவன் சிலையைத் திறந்து வைத்திட்டவனே நான்தான் என இன்னும் சில காலம் கழித்து பெருமையாக மார்தட்டிக் கொள்ளவும், பத்திரிக்கையில் கடிதம் எழுதுவதற்கும் இவ்வள்ளுவர் சிலை உதவுமே தவிர வேறெதற்கும் பயன் தரா.

Erode Nagaraj... said...

என்னைப் பொறுத்தவரையில் இது லாகூருக்கு பஸ் விட்டதைப் போல அல்ல. மனங்கள் நெருங்கி வருவதற்கான முதலடி என்று தான் எண்ணுகிறேன். கலைஞருக்கோ எடியூரப்பாவிற்கோ அந்த எண்ணம் இல்லாமல் கூட போகட்டும், பரவாயில்லை.

கற்றாரைக் காமுறுதல், பெருமைகளை அங்கீகரிக்கும்.

அந்த அங்கீகாரம் செவி மடுக்கும் பொறுமையைக் கொடுக்கும்.

அப்பொறுமை தீவிரவாதங்களைத் தயங்கச் செயும்.

அந்தத் தயக்கக்கங்களின் மௌனத்தில், கற்றோர் பேச்சு காதில் விழும்...

இந்த வட்டம் பூர்த்தியாகும் பொது நல்லுறவு மலரும், ஆம் அப்போதுதான் மலரும்.

வெகு சமீபத்தில் ஜெயமோகன் எடுத்தாண்ட, தேவதேவனின் கவிதை போல..

அந்திவரை வாழப்போகும்
பூவின் மடியில்
அந்த காலைப்பொழுதிலேயே
மடிந்துவிடப்போகும்
பனித்துளிதான்
எத்தனை அழகு!

-தேவதேவன்

மானஸ்தன் said...

இட்லிவடையின் போட்டி-பரிசுகளில் வர வர நம்பிக்கை கொறஞ்சு போச்சு.
அதனால போட்டில நான் கலந்துகல.

இருந்தாலும் என் மனதில் ப்ளாஷில் வரும் கேள்வி.

(1) ஏன் திரு இன்பா மீண்டும் "விருந்தினர்" ஆக்கப்பட்டுள்ளார்?
:-D

IdlyVadai said...

//ஏன் திரு இன்பா மீண்டும் "விருந்தினர்" ஆக்கப்பட்டுள்ளார்?//

இன்பா பதிவில் இந்த முறை இட்லிவடை விருந்தினராக வந்து கருத்து சொன்னதால். இப்படி பச்சையாக எழுதினால் தான் புரியும் போல :-)

மானஸ்தன் said...

அடங் கொய்யால...நீர் அடங்கவே மாட்டீர் இட்லி!!
நான் "total surrender"

M Arunachalam said...

//பெங்களூரில் திருவள்ளுவர் சிலை மூடப்பட்டு கிடக்கிறது. அது என்றைக்கு திறந்து வைக்கப்படுகிறதோ அன்று தான் பெங்களூரு வருவேன்' என, சொல்லியிருந்தேன்.//

எனக்கு தெரிந்த வரையில், கருணாநிதி "எப்பொழுது திருவள்ளுவர் சிலை பெங்களூருவில் திறந்து வைக்க படுகிறதோ, அப்பொழுது முதல்தான், நான் அந்த மாநிலத்தில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன்" என்று கூறியதாகத்தான் படித்திருக்கிறேன்.


நான் முன்பே கூறியபடி, இரு மாநிலங்களிலும் சிலை திறந்து வைப்பது என்பது நல்லிணக்கத்திற்கு ஒரு ஆரம்பமே.

இதனால் பாலும் தேனும் ஓடுமா என்று கேட்பவர்களுக்கு, இதுநாள் வரை இந்த வேலையை கூட யாராலும் செய்யமுடியவில்லையே அது ஏன் என்று யோசிக்குமாறு கேட்டு கொள்ளுகிறேன்.


ஏதோ, இந்த மட்டுமாவது (உபயோகமோ இல்லையோ) ஒரு potential mental barrier ஆக இருந்து வந்த திறக்க படாமலேயே இருந்து வந்த சிலைகளை திறந்து, ஒரு பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும் நிலைக்கு வந்திருப்பதே வரவேற்க படவேண்டியது.

ஏனெனில், என்னதான் சுப்ரீம் கோர்ட் ஆர்டர் போட்டாலும், காவிரி தண்ணீரை ground level இல திறந்து விடுவதற்கு மனத்தளவில் திராணி வேண்டும். அது பேச்சு வார்த்தை மூலமே, ஒரு broad consensus கொண்டு வர முடியும். சிலை திறப்புக்கு செய்தது போல். பெரும்பாலான கருத்து பேச்சு வார்த்தை மூலம் தண்ணீர் திறப்புக்கு (சிலை திறப்பை போல்) சாதகமாக இருக்கும் நிலையில், ஆட்சியாளர்களுக்கும் "முட்டாள்" போன்ற ரவுடிகளை சமாளிப்பது எளிது என்பது சிலை திறப்பின்போது நிரூபணமாகியது.

M Arunachalam said...

இரண்டு மாநிலங்களுக்கும் நடுவில் ஏதாவது தகராறு என்றால் இனிமேல் இவ்விரண்டு சிலைகளும் பலிகடா ஆக்கப்படும் என்று கூறுபவர்களுக்கு:

மக்களே ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு சாவதற்கு பதில், சிலைகளை உடைப்பதனால் அவர்களின் மிருக வெறி தணியும் என்றால், சிலைகளினால் பயன் என்றுதான் அர்த்தம்.

Anonymous said...

முதல்வர் கருணாநிதி அறிக்கை : கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்பர். அப்படியானால் கங்கை நீருக்குள் எப்போதும் வசித்து வரும் தவளை, தேரை, மீன் போன்றவற்றின் பாவம் அழிந்து சொர்க்கத்துக்குச் செல்கின்றனவா என்பது போன்ற கருத்துக்களைக் கன்னட அறிஞர் சர்வக்ஞர் பாடல்களில் பார்க்கலாம்.
http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=13152http://www.tamilhindu.com/2009/08/thiruvalluvar-and-sarvajna/

சர்வக்ஞர் என்ற சொல்லுக்கு அனைத்தும் அறிந்தவர் என்று பொருள். ஒருவன் எப்படி அனைத்தும் அறிந்தவனாக முடியும்?

ஸ்ர்வக்ஞனெம்பவனு கர்வதிந்தாதவனே?
ஸர்வரொளு ஒந்தொந்து நுடி கலிது வித்யெயெ
பர்வதவே ஆத ஸ்ர்வக்ஞ.

(க = ka, க = ga; ட = ta. ட = da; த = tha, த = dha; ப = pa, ப = ba; ……)

சர்வக்ஞன் என்பவன் கர்வத்தினாலா அப்படி ஆனான்?
எல்லாரிடமும் ஒவ்வொரு சொல் கற்று, வித்தையின்
பர்வதமாகவே ஆனவல்லவோ சர்வக்ஞன்!

கெலவம் பல்லவரிந்த கலிது
கெலவம் மாள்பவரிந்த கண்டு - மத்தே
ஹலவம் தானே ஸ்வத: மாடி திளியெந்த ஸர்வக்ஞ.

சிலவற்றை அறிந்தவரிடமிருந்து கற்க.
சிலவற்றை செய்பவர்களைக் கண்டு கற்க.
மற்ற பலவற்றையும் தானே சுயமாக எண்ணித் தெளிந்திடு சர்வக்ஞா.

“எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற வள்ளுவர் வாய்மொழியைத் தன் வாழ்வில் ஒழுகி, அதனைத் தன் தாய்மொழியில் தந்திருக்கிறார் இந்தக் கவிஞர் !

அன்னவனு இக்குவது நன்னியனே நுடிவுது
தன்னந்தே பரர பகெதொடே கைலாஸ
பின்னானவக்கு ஸ்ர்வக்ஞ.

அன்னம் இடுவது உண்மை மொழிவது
தன்னிலும் பிறரை மதிப்பது
இதுவே கைலாசத்திற்கு
இனிய வழியாகும் சர்வக்ஞா.

”ஈதல் இசைபடவாழ்தல்” என்ற பொய்யாமொழியுடன் இயைகின்றன இந்த வரிகள்.

”ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும் ஓர் நோய்”

என்று வள்ளுவர் நொந்து கொள்வதைப் போலவே இவரும் பாடுகிறார் -

மூர்க்கனிகே புத்தி நூற்கால ஹேளிதரு
கோர்க்கல்ல மேலே மளே ஹுயிதரே
நீர்க்கொம்புதுந்தே ஸர்வக்ஞ.

மூர்க்கனுக்கு புத்தி நூறுமுறை சொல்வது
பெருங்கல் மேலே மழை விழுவது போல.
நீர் தங்குமா அதில் சர்வக்ஞா?

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்ற முதுமொழியின் எதிரொலியாக உள்ளது அவரது இந்த வசனம் -

எல்ல பல்லவரில்ல பல்லவரு பஹளில்ல
பலவில்ல பல்லவரித்து ஸாஹித்ய
எல்லரிகில்ல ஸர்வக்ஞ.

எல்லாம் அறிந்தவர் இல்லை. அறிந்தவரும் வெகுவாக இல்லை.
அறிவு இல்லாமலிருக்கலாம் அறிந்தவரிடத்தும். (எனவே) இலக்கியம்
எல்லாருக்குமானது அல்ல சர்வக்ஞா.

படுக்காளி said...

இடி மின்னலுக்கு தப்பித்தாலும் தப்பிக்கலாம், இட்லி வடையின் நக்கலுக்கு தப்ப முடியாது.


'எப்படி பஞ்ச் டையலாக்'

நிற்க இதே மேட்டர நானும் வலை பதிஞ்சேன். ஆனா உங்கது சூப்பரு. ....

http://padukali.blogspot.com/2009/08/12-2009.html

லவ்டேல் மேடி said...

// இதைபோன்று தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலம் ஆக்குவேன் என்று எதாவது சபதம் போட்டு இருக்காரா //


அந்த மாதிரியெல்லாம் சபதம் போட்டு நெரைவேத்தாம இருந்தா.... எதிர் கட்சி காரனுங்க துண்ட விருச்சுபோட்டு உக்காந்து உண்ணாவிரதம் இருக்க ஆரம்பிச்சுருவாங்க....!! அதுனால நோ சீரியஸ் சபதம் ..!!!

ஆனா குடும்பத்துல எல்லாருக்கும் கட்டாயம் ஒரு மினிஸ்டர் பதவி கண்பார்மின்னு சபதம் வேணுமின்னா போடுவாரு....!!!

லவ்டேல் மேடி said...

// அதை வேறு 'யாராவது' வந்து நிறைவேற்றுவார்களா" என்று 'டெலிபதி'யில் என்னிடம் கேட்டார் நண்பர் மானஸ்தன் //

சந்தடி சாக்குல அடுத்தவிங்கள சிக்க உடுரதுல ..... நம்மளைய அடுச்சுக்க ஊருல ஆளே இல்லீன்னு நெனைக்குறேன்....!!!

லவ்டேல் மேடி said...

// வா(மு)ட்டாள் நாகராஜ் வகையறாக்கள் //
ஆமா... ஆமா.... !! அந்த ஜார்ஜர் மண்டையனுக்கு இந்த மாதிரி விசியம் ஏதாச்சி கெடச்சுதுன்னா அல்வா திங்கர மாதிரி...... !!! ரூவாய்க்கு மூணு 'ன்னு ஓட்ட கண்ணாடிய வாங்கி மா(ஆ)ட்டிக்கிட்டு வந்துருவான் ..... !!

லவ்டேல் மேடி said...

// எனக்கு 86 வயது, அவருக்கு 67 வயது என்பதால் ///
அடங்கொன்னியா... நமிதா...நயன்தாரா... ரேஞ்சுக்கு ரெண்டு பளுப்புங்களும் வயச கொரச்சுகிதுங்க.....!!

லவ்டேல் மேடி said...

// பொதுவாக சிலை திறப்பினால் காக்கா,குருவிகளுக்கு பலன் உண்டு. மக்களுக்கு? //
தயவு செஞ்சு கார்டனிங் 'ங்குற பேருல சிலைய சுத்தி பொதர உருவாக்கீராதீங்க....!! அப்பறம் ... ரெண்டு ஐய்யனுங்களுக்கும் 24*7 ப்ரீ ஷோதான்....!!

லவ்டேல் மேடி said...

// கூவம் நதி நீரை காவேரிக்கு மாற்றாய் பகிரலாம். //
எதையும் உருப்படியா இருக்க உடமாட்டீங்களா....???

லவ்டேல் மேடி said...

// எப்படி தன் வீட்டை மக்களுக்காக 'தாரை' வார்த்துபோல, சன் - கலைஞர் டிவி குழுமங்களை கர்நாடகா அரசிடம் கொடுத்துவிட்டு, ஒகெனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றலாம். //
அப்பறம் ... அங்கயும் கருத்து கணிப்பு எடுத்து... நாலு பத்திரிக்கை ஆபீசு எரியும்.....!! எதுக்கு இந்த வேண்டாத வேல....!!!

லவ்டேல் மேடி said...

// முதலில் கேட்ட கேள்விகளுக்கான பதில்களோடு , இது போன்ற யோசனைகளையும் பின்னூட்டத்தில் சொல்பவருக்கு, என்னோடு சேர்த்து 'பரிசு' தருவதாக இட்லிவடை சத்தியம் செய்திருக்கிறார். //

நாசமா போச்சு.....!!!

லவ்டேல் மேடி said...

// படம் - உட்கார்ந்து கொண்டு இருப்பவர் - திருவள்ளுவர், நின்று கொண்டு இருப்பார் சர்வக்ஞர் //
ரொம்ப முக்கியம்.....!!!

R.Gopi said...

//"நான் 18 ஆண்டுகளுக்கு முன் ஒரு சபதம் செய்திருந்தேன். கடந்த 18 ஆண்டுகளாக பெங்களூரில் நடக்கும் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் யார் என்னை அழைத்தாலும், "பெங்களூரில் திருவள்ளுவர் சிலை மூடப்பட்டு கிடக்கிறது. அது என்றைக்கு திறந்து வைக்கப்படுகிறதோ அன்று தான் பெங்களூரு வருவேன்' என, சொல்லியிருந்தேன்.அந்த சபதத்தை நான் நிறைவேற்றவில்லை. முதல்வர் எடியூரப்பா நிறைவேற்றி கொடுத்திருக்கிறார்." //

ஹலோ....பழைய ஆளுங்க யாருக்காவது "தல" இந்த மாதிரி சொன்னார்னு தெரியுமா?? இல்ல, இதுவும் வழக்கம் போல, "தல"யின் டகால்டியா??

//"இதைபோன்று தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலம் ஆக்குவேன் என்று எதாவது சபதம் போட்டு இருக்காரா. அதை வேறு 'யாராவது' வந்து நிறைவேற்றுவார்களா" என்று 'டெலிபதி'யில் என்னிடம் கேட்டார் நண்பர் மானஸ்தன். தெரியவில்லை. அப்படி எதாவது 'போட்டு இருந்தால்' , மகன்...பேரன்.. கொள்ளு பேரன்.. எள்ளு பேரன் என அவரது வரும் தலைமுறையில் யாராவது நிறைவேற்றலாம்.//

ஹொகேனக்கல்???? காவிரி!!!??? இத பத்தி கூட "டகால்டிபதி"ல கலைஞர் ஏதாவது சொல்லி இருக்காரான்னு பார்க்கணும்.....

//'சன்' பிரச்சினைகளை தீர்க்கும் நிகழ்ச்சி அங்க இருக்கிற அவரோட பண்ணை வீட்டுலதான நடந்துச்சு.//

அது "பண்ணை, இது "வெண்ணை".....

//"அவரை விட நான் மூத்தவன் என்பதால், எனக்கு 86 வயது, அவருக்கு 67 வயது என்பதால், எல்லாரையும் அழைப்பது போல "தம்பி' என்று அழைக்கலாம்.//

பாசமலரே... என் உளியின் ஓசையே...என் அடுத்த படம் "புலியின் மீசை"யே...

இந்த டகால்டி டயலாக் எல்லாம் கேட்டு, "தம்பி எடியூரப்பா", அண்ணனுக்கு "அண்ணா நாமம்" போட முயற்சி செய்து விட போகிறார்.....

//எப்படி தன் வீட்டை மக்களுக்காக 'தாரை' வார்த்துபோல, சன் - கலைஞர் டிவி குழுமங்களை கர்நாடகா அரசிடம் கொடுத்துவிட்டு, ஒகெனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றலாம்.//

தெரியாத்த‌ன‌மா அப்துல் க‌லாம் க‌ன‌வு காணுங்க‌ள்னு சொல்லிட்டார்... அதுக்குன்னு இப்ப‌டி எல்லாமா?? இது அந்த‌ க‌ன‌வுக்கே அடுக்காது.....

//முதலில் கேட்ட கேள்விகளுக்கான பதில்களோடு , இது போன்ற யோசனைகளையும் பின்னூட்டத்தில் சொல்பவருக்கு, என்னோடு சேர்த்து 'பரிசு' தருவதாக இட்லிவடை சத்தியம் செய்திருக்கிறார்.//

"ப‌ரிசா".....அய்யோ.... மீ தி எஸ்கேப்பு.... மேல சொன்னதெல்லாம் கூட‌ "த‌ல‌" நிறைவேற்றினாலும் நிறைவேற்றி விடுவார்.... இங்க‌ இருந்து ப‌ரிசா??!! இன்னிக்கு என்ன‌ ஏப்ர‌ல் 1ம் தேதியா?

ஐயோ.... இந்த ஊரு இன்னுமா இவிய்ங்கள நம்பிட்டு இருக்கு....??!!!

Kasu Sobhana said...

இட்லி வடை அண்ணன்களே!
என் எதிரியின் எதிரி எனக்கு நண்பன் (சொலவடை)
எ(டியூரப்பாவி)ன் எதிரியின், நண்பியின், எதிரி - எடியூரப்பாவுக்கு நண்பன் -
இப்பொழுது புரிகிறதா - ஏன் இந்த நண்பர்கள் தினக் கொண்டாட்டம் என்று?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
பாட்டாளி said...

திருவள்ளுவர், சர்வக்ஞர் சிலைகள் திறப்புவிழா!


என்ன இருந்தாலும் இவங்க டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சருக்கு.

Anonymous said...

Sorry for the spelling mistakes!! Idlyvadai please remove the old one.
/***/***இருக்கவே இருக்கிறார்கள் சினிமாக்காரர்கள் மற்றும் அக்மார்க் இனமான உணர்வாளர்கள்***/

இதுக்கு ரஜினி ஏன் சவுண்ட் ஸாரீ வாய்ஸ் குடுக்கவில்லை (குடுக்க சொல்லவில்லை)? ஓ குடுத்தால் மீண்டும் அந்தர் பல்டி அடித்து அசிங்க படவேண்டும் என்று யாராவது தெளிவு படுத்தி விட்டார்களோ? இல்லை அவர் என்ன சொன்னாலும் எப்போதும் வேகாது என்று தெரிந்து விட்டதோ?

Anonymous said...

இரண்டு மாநிலங்களுக்கும் நடுவில் ஏதாவது தகராறு என்றால் இனிமேல் இவ்விரண்டு சிலைகளும் பலிகடா ஆக்கப்படும் என்று கூறுபவர்களுக்கு:

மக்களே ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு சாவதற்கு பதில், சிலைகளை உடைப்பதனால் அவர்களின் மிருக வெறி தணியும் என்றால், சிலைகளினால் பயன் என்றுதான் அர்த்தம்.

VERY GOOD COMMENT

maha said...

sillai thirapu verum kan thudaipu

யதிராஜ சம்பத் குமார் said...

\\\\இதுக்கு ரஜினி ஏன் சவுண்ட் ஸாரீ வாய்ஸ் குடுக்கவில்லை (குடுக்க சொல்லவில்லை)? ஓ குடுத்தால் மீண்டும் அந்தர் பல்டி அடித்து அசிங்க படவேண்டும் என்று யாராவது தெளிவு படுத்தி விட்டார்களோ? இல்லை அவர் என்ன சொன்னாலும் எப்போதும் வேகாது என்று தெரிந்து விட்டதோ?////


முதுகெலும்பை உடைத்தாலும் விடோம்...கடலில் தூக்கிப் போட்டாலும் தோணியாய் மிதப்போம் போன்ற வசனங்களுக்கு ரஜினி பேசியது ஒன்றும் மோசமில்லை.

Anonymous said...

/***முதுகெலும்பை உடைத்தாலும் விடோம்...கடலில் தூக்கிப் போட்டாலும் தோணியாய் மிதப்போம் போன்ற வசனங்களுக்கு ரஜினி பேசியது ஒன்றும் மோசமில்லை.***/

பனை மரத்தை பன்னியோட ஒப்பிட கூடாது, ரஜினி பனை மரம்!!!

ஹரன்பிரசன்னா said...

இரண்டு முதல்வர்களுமே பாராட்டுக்குரியவர்கள். இந்த சிலைகளால் பிற்காலத்தால் பிரச்சினைகள் வரலாம், பெரிய பயனில்லாமல் போகலாம். இங்கே சர்வக்ஞர், திருவள்ளுவர் சிலைகள் என்பன இரண்டு மாநில மக்களின் உணர்வுகள். இரு முதல்வர்களிலும் கருணாநிதி அதிகம் பாராட்டப்படவேண்டியவர். எடியூரப்பா இப்படி ஒரு தேசியத்தோடு வளர்ந்தவர். ஆனால் கருணாநிதி இந்திய தேசியத்தை உயர்த்திப் பிடிக்கும் ஒன்றை செய்யப்போகிறார் என்பதே ஆச்சரியமாக இருந்தது. அதை முடித்துவிட்டார் என்பதும் முக்கியமானது.

நல்லவேளை இது கருணாநிதி காலத்தில் நடந்தது, ஜெயலலிதா அமைதியாக இருந்தார். இது ஜெயலலிதா காலத்தில் நடந்திருந்தால், கருணாநிதி, வீரமணி, திருமாவளவன் உள்ளிட்டவர்கள் என்னவெல்லாம் பேசியிருப்பார்கள் என்பதை யோசிக்கவே அச்சமாக இருக்கிறது. :-)

மானஸ்தன் said...

திரு. மு.க.பற்றி நல்லவிதமா நாலு வரி சொல்லிட்டு, கடைசில மொத்தமா திராவிடக்குஞ்சுகளுக்கு ஆப்பு வெச்சுடீரே, திரு ஹரன்பிரசன்னா!!
:-D

Baski said...

நல்ல முயற்சி. பாராட்டுகள்.

நம்ம "அண்ணன்" அப்படியே தம்பி ஊரு ஆபிசெல்லாம் எப்படி வேலை பார்கிறார்கள் என பார்த்துட்டு வந்தால் நல்லது.

நம்ம தமிழக அரசு அங்கே இருந்து கத்துக்க வேண்டியது நிறையவே இருக்கு.

நான் ஒரு முன்னாள் பெங்களூர் வாசி. நான் கன்னடம் பேசியது கிடையாது. எங்கே போனாலும் தமிழ் தான். ஒரு பிரச்னையும் வந்ததில்லை. ஒரு சில சமயங்களில் (ராம்குமார்/வீரப்பன் காமேடி) பிரச்சனை பெரிசா இருக்கும். மற்றபடி சென்னையை விட இரு மடங்கு தேவலை.

1. அங்கே ஆட்டோவில் மீட்டர் போடுவார்கள்.
2. போலீஸ் நிர்வாகமும் தேவலாம்.
3. 'லோக் ஆயுக்தா' என்ற மக்கள் இயக்கம்.
4. 'பெங்களூர் ஒன்'
5. கட்டண கழிப்பிடங்கள்.

நிறைய சொல்லலாம்.

"மானாட மயிலாட" மாறி ஒரு போட்டி நிகழ்ச்சி (அண்ணனாட தம்பியாட) வைத்து இவர்கள் நிர்வாகம் வேலை செய்யும் லட்சணத்தை மக்களை வாக்கு கொடுக்க சொல்லலாம். (நம்ம ஈரோடு நாகராஜ் ஆர்.டி.ஒ ஆபீஸில் பார்த்த கூத்தை போல.)

"இந்த அண்ணன் கொஞ்சம் தம்பியை (அண்டை மாநிலத்தை) பார்த்து சேவை செய்யும் அரசாங்கமாய் மாற முயற்சிக்கலாமே ?".

அஹோரி said...

கடைசி காலத்திலையும் எவன்டா திறப்பு விழா, பாராட்டு விழாவுக்கு கூபிடுவான் அலைகிற ஒரே முதல்வர் கருணாநிதியாகத்தான் இருக்க முடியும்.

கேட்டா நல்லுறவு பேணுகிறோம் ன்னு சாக்கு , சரி , நம்பறதுக்கு தான் நாட்டுல கோயில் மாடுகள் ரொம்ப இருக்கே.

அஹோரி said...

கடைசி காலத்திலையும் எவன்டா திறப்பு விழா, பாராட்டு விழாவுக்கு கூபிடுவான் அலைகிற ஒரே முதல்வர் கருணாநிதியாகத்தான் இருக்க முடியும்.

கேட்டா நல்லுறவு பேணுகிறோம் ன்னு சாக்கு , சரி , நம்பறதுக்கு தான் நாட்டுல கோயில் மாடுகள் ரொம்ப இருக்கே.

R.Gopi said...

அதெல்லாம் ச‌ரி.... இப்போ வ‌ரைக்கும், சிலைக்கு ஒண்ணும் ஆப‌த்தில்லையே...

இந்த‌ காட்டாள் க‌ன‌க‌ராஜ் கோஷ்டி கையில் "க‌ட‌ப்பாரை"யுட‌ன் அலைவ‌தாக கேள்வி...

அங்கொரு சிலையும், இங்கொரு சிலையும்
வைத்தேனே, என் ஐய‌னே.....

R.Gopi said...

//மானஸ்தன் said...
திரு. மு.க.பற்றி நல்லவிதமா நாலு வரி சொல்லிட்டு, கடைசில மொத்தமா திராவிடக்குஞ்சுகளுக்கு ஆப்பு வெச்சுடீரே, திரு ஹரன்பிரசன்னா!!
:-ட்//

ஏன் மான‌ஸ்த‌ன்.... "த‌ல"யும், அவரின் திராவிடக்குஞ்சுகளும்தான் எப்போவும் எல்லாருக்கும் ஆப்பு வைக்க‌ணுமா என்ன‌!!! அதான், ஒரு சேஞ்சுக்கு இப்போ ந‌ம்ம‌ ஹ‌ர‌ன்பிர‌ச‌ன்னா அவிய்ங்களுக்கு ஆப்பு வ‌ச்சார்...

jeeva said...

pala varudama THENGAPATTINATHIL harbour vachu tharumanu sabatham eduthuthan vote kedkiran pullanmargal(politician)enge intha jenmathila nadakathu...