பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 10, 2009

அரசியல் குரங்குகள் - இன்பா


"நீ என்ன பெரிய 'பருப்பா?' " என்று இனி நீங்கள் தைரியமாக கேட்கலாம். காரணம், பருப்பு முதலிய மளிகை பொருட்களின் விலைவாசி வடிவேலு பாணியில் சொல்வதானால் 'ஐயோ..கண்ணை கட்டுதே'. து.பருப்பு விலை கடந்தவாரம் சிறப்பாக ஏறி, சதமடித்துவிட்டது.


மளிகை பொருட்களின் விலைவாசியில் ஏற்பட்டுஇருக்கும் இந்த 'பொருளாதார வளர்ச்சிக்கு' உணவு பதுக்கலை ஒரு காரணமாக கூறுகிறார்கள்.

"சந்தையில் ஒரு பொருளின் விலை அதிகரித்தால், வணிக தந்திரம் என்ற பெயரில் அதை வணிகர்கள் பதுக்கிவிடுகிறார்கள். இது போன்ற பதுக்கலை முதலில் கண்டுபிடித்து, அழிக்கவேண்டும்" என்கிறார்கள்.

மளிகை போலவே, காய்கறிகளின் விலையும். ஒரு சிறிய பாலிதின்பையில் நான்கைந்து காய்கறிகள் வாங்கினாலே ரூ. 100 - 150 ஆகிவிடுகிறது. இதன் தொடர்ச்சியாக, ஹோட்டல்களும் விலையை கண்டபடி ஏற்றிவிட்டார்கள்(மளிகைசாமான்களை காட்டி ' சைக்கள் கேப்பில்' பூரி, சப்பாத்தியின் விலையும் உயர்த்திவிட்டார்கள்).

இப்படி பன்றிகாய்ச்சலைவிட மக்களை அதிகம் பாதித்துஇருக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வு நாட்டில் ஒரு 'சின்ன எமர்ஜென்சி' நிலையை உண்டாக்கிஇருக்கிறது.

விலைவாசியை கட்டுபடுத்துவது குறித்து அரசு தரப்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்த முறையான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.

எதிக்கட்சிகளை பார்த்தால், அன்றுவந்த ஜெ முதல் இன்றுவந்த விஜய்(!) வரை விலைவாசி உயர்வுக்காக யாரும் பெரியஅளவில் போராடவோ, கண்டன அறிகைவிடவோ ஏன் பேசக்கூட செய்யவில்லை??

மக்களுக்கு எதிராக எல்லா கட்சிகளும் எதாவது 'ரகசிய உடன்படிக்கை' செய்துவிட்டனவா? அல்லது 'இடைதேர்தல் திருவிழா' கொண்டாட்டங்களில் மக்களை மறந்துவிட்டார்களா?

திமுகவை பார்த்தால், இடைதேர்தல்பணிக்கு தொகுதிக்கு இரண்டு அமைச்சர்கள் போட்டு பண மற்றும் பிரியாணி பட்டுவாடாவில் 'பிஸி' ஆகிவிட்டார்கள். போதாகுறைக்கு அதிக வாக்குகளை வாங்கித்தரும் மாவட்ட செயலாளருக்கு 25 பவுன் தங்கசங்கிலி தன் சொந்தசெலவில் தருவதாக அழகிரி அறிவித்துஇருக்கிறார். (அவரது 'கட்டுப்பாட்டில்' வரும் ஸ்ரீவைகுண்டம், கம்பம் மற்றும் இளையான்குடி தொகுதிகளுக்கு மட்டும்!)

கோடநாட்டுக்கு ஓய்வு எடுக்கசென்ற ஜெ, அங்கு தன் வாழ்க்கையே 'ஓய்வு' என்று செட்டில் ஆகிவிட்டார். (ஊட்டியில் காய்கறி எல்லாம் 'பிரெஷ்' ஆக கிடைக்கும்போல).

தேமுதிக, தாங்கள்தான் இரண்டாவது பெரிய கட்சி என நிருபிக்கும் முயற்சியில் இருக்கிறார்கள்.( அண்ணன் எப்போ போவான், திண்ணை எப்போ காலியாகும் பாணியில்).

பாமகவினர், தங்களது பாராளுமன்ற தோல்விக்கு காரணம் மின்னணு இயந்திரங்களே என்பதான மிகப்பெரிய 'அறிவியல் ஆராய்ச்சியில்' முழ்கிவிட்டார்கள்.

காங்கிரசை பற்றி சொல்வதற்கு இல்லை. அவர்களுக்கு ராகுலின் பிறந்தநாள், அன்னை சோனியா நடத்தும்(?) இளைஞர் காங்கிரஸ் தேர்தல் போன்ற 'தேசிய' பிரச்சினைகளே அவர்களுக்கு முக்கியம்.

எந்த கூட்டணியில் இருக்கிறோம் என்று தெரியாத கம்யூனிஸ்ட் தோழர்கள், இடைதேர்தலில் தங்களுக்கு 'டெபாசிட்' தேறுமா என்று குழம்பிபோய்உள்ளார்கள்.

மதிமுக மற்றும் தமிழர் அமைப்புகள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், மீண்டும் வாருவார், தனி தமிழ்ஈழம் அமையும் என திரும்ப, திரும்ப கூறிவருகிறார்கள் (நக்கிரன் காட்டிய வழி??).

விலைவாசி உயர்வு போன்ற சாதாரண(!) மேட்டர்களுக்கு போராட யாருக்கும் இங்கே நேரம் இல்லை.

மக்கள் பிரச்சினைகளை கேட்காத,பார்க்காத,பேசாத இந்த அரசியல் குரங்குகளை எப்படி பிடித்து, எந்த zooவில் அடைக்கலாம்??

வழக்கம் போல் 'பாடி கார்டு முனியிடம்' முறையிட்டதற்கு... "இதற்குத்தான் எங்கள் தலைவர் முத்தமிழ் அறிஞர் 'தொலைநோக்கு' பார்வையோடு திட்டங்கள் தந்து இருக்காரு. அவற்றை முறையாக கடைபிடித்தாலே போதும் " என்றார்

"என்ன அவை? " என்றேன்.


"டாஸ்மாக் போய் மலிவா ஒரு சரக்கு அடிச்சிட்டு, ஒரு ரூவா அரிசியில் கஞ்சிபோட்டு குடிச்சிட்டு, இலவச டிவியில் சன் மியூசிக் கேட்டுகிட்டே சுகமா தூங்கறதுதான்"


இது எப்படி இருக்கு?


- இன்பா


32 Comments:

SUBBU said...

மஞ்ச கலரு நச்சின்னு இருக்கு :))))))))))

Anonymous said...

விலைவாசி ஏற்றம் உங்களுக்கு நகைச்சுவையா போய்ட்டுதா ?

Rahul said...

/****
மளிகை பொருட்களின் விலைவாசியில் ஏற்பட்டுஇருக்கும் இந்த 'பொருளாதார வளர்ச்சிக்கு' உணவு பதுக்கலை ஒரு காரணமாக கூறுகிறார்கள்.

"சந்தையில் ஒரு பொருளின் விலை அதிகரித்தால், வணிக தந்திரம் என்ற பெயரில் அதை வணிகர்கள் பதுக்கிவிடுகிறார்கள். இது போன்ற பதுக்கலை முதலில் கண்டுபிடித்து, அழிக்கவேண்டும்" என்கிறார்கள்.
***/
இந்த வருடம் துவரை விளைச்சல் ஒண்ணும் அவ்வளவு மோசம் இல்லை, ஆனாலும் இந்த விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணம் பதுக்கல் தான் காரணம்.... விலை ஏற்றததால் விவசாயிகள் காசு பெற்றால் பரவாயில்லை, அவர்களும் சொற்ப லாபம் மட்டுமே பெறுகிறார்கள்... இதை மனதில் வைத்து கலைஞர் செய்த மிக உருப்படியான காரியம் "உழவர் சந்தை", (எப்படி அவர் மனத்தில் இது எப்படி உதயம் ஆனது என்பது ஆச்சரியமே!!)அவரே அது போல வேறு ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் தான் உண்டு.... ஜெ அதை மூடியவர் அதனால் அவர் எதிர் காலத்தில் முதல்வாரானால் செய்ய வாய்ப்பில்லை...எல்லோருக்கும் சம்பள உயர்வு வேண்டும், உர விலை, சிமெண்ட் விலை, பைப் விலை, மோட்டார் விலை, பெட்ரோல் மற்றும் பெட்ரோலீய பொருள்கள் விலை உயர வேண்டும், அனைவரும் இலகுவாக உட்கார்ந்த இடத்தில் சம்பாதிக்க வேண்டும், ஆனால் விவசாய விலை பொருள்கள் மட்டும் குறைந்த விலையில் விற்க வேண்டும் என்பது ரொம்ப சிக்கலான பிரச்சினை.....

அமுதப்ரியன் said...

ஒரு படத்தில் P.S.Veerappa சொல்வதுதான் ஞாபகம் வருகிறது.
"இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்."
----------------------------------
அமுதப்ரியன்.

ஐஸ் புரூட் அய்யர் said...

அதனாலே என்ன சொல்ல வர்றீங்க? போடுங்கம்மா ஒட்டு !! எச்சை (மன்னிக்கவும்., ரெட்டை) எலையை பார்த்து??

பிரியாணிக்கு பருப்பு அவசியமில்லை !! எனவே..எங்களுக்கு பருப்பு வேண்டாம்..

kumar said...

இப்பிடி உன்மைய புட்டு புட்டு வைக்கப்படாது...

R.Gopi said...

//"டாஸ்மாக் போய் மலிவா ஒரு சரக்கு அடிச்சிட்டு, ஒரு ரூவா அரிசியில் கஞ்சிபோட்டு குடிச்சிட்டு, இலவச டிவியில் சன் மியூசிக் கேட்டுகிட்டே சுகமா தூங்கறதுதான்"//

இட்லிவடை....சும்மா நச் ந்ச் ந்ச்னு இருக்கு.....

கொஞ்ச்ம் மாத்தி பார்த்தா, இன்னும் சூப்பரா இருக்கு.... அது இன்னான்னா :

"டாஸ்மாக் போய் மலிவா ஒரு சரக்கு அடிச்சிட்டு, ஒரு ரூவா அரிசியில் கஞ்சிபோட்டு குடிச்சிட்டு, இலவச டிவியில் மானாட மயிலாட பாத்துகினே கண்ணு மூடினா கனவுல அட...... நம்ம "நமீதா"...

ஆ.ஞானசேகரன் said...

//"டாஸ்மாக் போய் மலிவா ஒரு சரக்கு அடிச்சிட்டு, ஒரு ரூவா அரிசியில் கஞ்சிபோட்டு குடிச்சிட்டு, இலவச டிவியில் சன் மியூசிக் கேட்டுகிட்டே சுகமா தூங்கறதுதான்"


இது எப்படி இருக்கு?//

ரொம்ப கலக்கலா இருக்கு... அப்படியே பக்கத்துள படுக்க ஆலும் கொடுத்தா நல்லாதா இருக்கும்...

Anonymous said...

சாட்டையடி போஸ்ட். ஒவ்வொரு வரியும் அருமை.
மிகவும் அனுபவிச்சு எழுதிஉள்ளார் திரு இன்பா! பாராட்டுகள்.

இந்த போஸ்ட் படித்த பின் எழும் சில கேள்விகள்.
(1) கொரங்கு படத்தைப் போடுவதற்கு ஏன் இட்லிவடை மானஸ்தனிடம் permission வாங்கவில்லை,?

(2) எப்போதும் இட்லிவடை தவிர வேறு யாராவது எழுதினால், "விருந்தினர்" என்று இருக்கும். இந்தப் போஸ்டில் அது இல்லை! ஏன்? ஏன்? ஏன்?

(3)இட்லிவடைக்கே உண்டான அக்மார்க் நக்கல் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது. இட்லி வடையின் பங்கு எடிட்டிங்கில் உள்ளதா?

(4) இட்லிவடைக்கும் பாடிகார்ட் முனிக்கும் தொடர்பு உண்டு. இன்பா எப்போது அவர் கூட்டத்தில் official-ஆக சேர்ந்தார்?

(5)எல்லாரும் "முருகா-முருகா" என்று "இன்"-"பா" பாடினால் பதில் கிடைக்குமா?????

(at least எனக்கு மட்டுமாவது?)
:-D :-)

Anonymous said...

//Anonymous said...
விலைவாசி ஏற்றம் உங்களுக்கு நகைச்சுவையா போய்ட்டுதா //

but anyway
realy superb superb post

Anonymous said...

வயிற்றுக்கு உணவில்லாதபோது சிறிது செவிக்கும் ஈயப்படும்.
வள்ளுவர் சிலை திறந்தாச்சு!
வாய்ப்பந்தல் போட்டாச்சு!
டாஸ்மாக் கடை திறந்தாச்சு!
கதைவசனம் எழுத பேனா எடுத்தாச்சு!
அடுத்த சங்கமம் வந்தாச்சு!
அவாள், இவாள், மேட்டுக்குடி,
பூணூல், அக்ரஹாரம் எல்லாம் இனி
தூள், தூள், தூள்.
அ. நாமதேயக்கவிராயர்

shiva said...

once again
excellent post from Mr.Inba


// இட்லிவடைக்கும் பாடிகார்ட் முனிக்கும் தொடர்பு உண்டு. இன்பா எப்போது அவர் கூட்டத்தில் official-ஆக சேர்ந்தார்? //

Idlyvadai,

pls answer manasthan's questions.

i also would like to know the same

IdlyVadai said...

//(1) கொரங்கு படத்தைப் போடுவதற்கு ஏன் இட்லிவடை மானஸ்தனிடம் permission வாங்கவில்லை,?

மூன்றில் எது நீங்க என்று சொல்லுங்க எடுத்திவிடுகிறேன்.

(2) எப்போதும் இட்லிவடை தவிர வேறு யாராவது எழுதினால், "விருந்தினர்" என்று இருக்கும். இந்தப் போஸ்டில் அது இல்லை! ஏன்? ஏன்? ஏன்?

ஒரு முறை வந்தால் விருந்தினர், தினமும் வந்தால் ?

(3)இட்லிவடைக்கே உண்டான அக்மார்க் நக்கல் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது. இட்லி வடையின் பங்கு எடிட்டிங்கில் உள்ளதா?

இல்லை. நம்புங்க!

(4) இட்லிவடைக்கும் பாடிகார்ட் முனிக்கும் தொடர்பு உண்டு. இன்பா எப்போது அவர் கூட்டத்தில் official-ஆக சேர்ந்தார்?

இன்பாவே இதற்கு பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.

(5)எல்லாரும் "முருகா-முருகா" என்று "இன்"-"பா" பாடினால் பதில் கிடைக்குமா?????

இ வ மீது (இ)ன்ஸ்பிரேஷன் (வ)ந்து இன்பமாக பாடினால் நிச்சயம் பதில் கிடைக்கும்.

Baski said...

அருமையான கட்டுரை.
மக்களின் அன்றாட பொலம்பலை அருமையாக பிரதிபலிக்கும் பதிவு.

எல்லாரும் வீடு வாங்கும் திட்டம் என்று கதை சொல்லி, இப்போ பருப்பு வாங்க கூட 'பருப்பு லோன்' வாங்க வேண்டிருக்கும் போலிருக்கு.

எல்லா இடத்திலும் சம்பளம், இன்சென்டிவ் குறைத்துள்ளார்கள் (மத்திய/மாநில அரசு ஊழியர்கள் தவிர).
என்னைக்கு வேலை போகும் என தெரியாமல் நாட்களை ஓட்டிகொண்டிருக்கும் மக்களின் மனதை தொடும் பதிவு.

விலைவாசி விஷத்தைவிட வேகமாக ஏறிக்கொண்டே போகுது.

பேசாம எல்லாரும் போய் நம்ம அண்ணன் அழகிரியோட படையில் சேர்ந்துட்டா "சேப்" ஆக இறக்கலாம் (இருக்கலாம்).

ஈ ரா said...

அது சரி,

டாஸ்மாக் ல எங்க மலிவா சரக்கு கிடைக்குது? அங்கயும்தான் வெலை ஏறிப்போய்க் கிடைக்காம்ல......

Inba said...

IdlyVadai said...
//இட்லிவடைக்கும் பாடிகார்ட் முனிக்கும் தொடர்பு உண்டு. இன்பா எப்போது அவர் கூட்டத்தில் official-ஆக சேர்ந்தார்?

இன்பாவே இதற்கு பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.
//

மானஸ்தன் அவர்களின்
பாராட்டுகளுக்கும், கேள்விகளுக்கும்
நன்றி.

விருந்தினராக வந்தவனை
வீட்டோடு(!?) தங்கவைத்த
இட்லிவடைக்கும் நன்றி.

பாடிகார்ட் முனி தலைமையிலான
'கூட்டணியில்(!!) '
நான்
'கொள்கை(?)' அடிப்படையில்
இணைந்துஇருக்கிறேன்.

இது
வெற்றிகரமாக
தொடரும் என்று நம்புகிறேன்
(இ.வ விரும்பும்வரை).

பேராதரவு தரும்
'வாசககண்மணிகள்'
அனைவருக்கும் என் நன்றிகள்.

Baski said...

//மூன்றில் எது நீங்க என்று சொல்லுங்க எடுத்திவிடுகிறேன்.//

அட இதென்னங்க குழந்தை தனமான கேள்வி.

நீங்க, இன்பா தவிர மூன்றாமவர் தான் மானஸ்தன். :-)

Anonymous said...

(1) இட்லிவடை யாரு என்ன சொன்னாலும், கேட்டாலும் "காதுல வாங்க மாட்டாரு".

(2) திரு இன்பா "கண்ணை மூடிக்கிட்டு" சும்மா சூப்பரா போட்டுத் தாக்கறாரு.

(3) மானஸ்தன் யார் என்ன சொன்னாலும் பதில் சொல்லத் தெரியாம, பயத்தோட "வாய மூடிண்டு" ஒக்காந்திண்டு இருக்கான்.

இதுக்கு மேல நச்சுனு சொல்ல திரு பாஸ்கியத் தவிர வேறு யாரு சொல்ல முடியும்?????

:-D

Anonymous said...

வணக்கம் திரு மஞ்சள் ஜட்டி! நல்லா இருக்கீங்களா?

எப்போலேந்து இந்த ஐஸ் ப்ருட் ஐயர் என்று பேர் மாற்றம்?

என்னதான் பேரு மாறினாலும் அந்த "மஞ்சள்" மாறலை. சட்டைக் காலரைச் சொன்னேன்!

Anonymous said...

இந்த வார காமெடி : "இனிமேல் யாரும் எனக்கு ’ஐ லவ் யூ’ அஞ்சல்கள் அனுப்ப வேண்டாம்".

Anonymous said...

Swine flu :

Symptoms and treatment

The basic symptoms for swine flu are similar to the seasonal flu - fever, sore throat, cough, stuffy nose, headache, body aches and fatigue.

H1N1 strain is a mutated form of the swine virus. It is communicable only through human-to-human contact.

Swine flu is not a food-borne disease and does not spread through pork.

Tamiflu, Relenza are prescription drugs effective against these strains of Swine Flu.

There is no vaccine for swine flu as yet.

The incubation period is one to seven days.
If an antiviral agent is warranted, it should ideally be initiated with 48 hours from the onset of symptoms.

Precautions

Here are a few simple dos and don'ts that will help prevent spreading the infection.

Maintain hygiene, wash hands frequently.
Avoid contact with those who cough and sneeze.
Avoid crowded places and social gatherings.
If there are any symptoms, contact the doctor immediately as the treatment drugs are not available in the open market.
If infected, stay home and avoid travelling.
Always cover mouth while coughing or sneezing, to avoid the disease from spreading.

Narayanan M said...

சுருக்கமான நல்ல கட்டுரை!
படித்தவுடன் நகைச்சுவையை உணருவதருக்கு முன்பாகவே வருத்தத்தை உணருகிறேன் . ..
"என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்?" என்னும் பாரதியாரின் கேள்விக்கு நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரம் பதிலாகாது என்றே உணருகிறேன்.

ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது . .நாங்கள் சுதந்திரம் அடைந்தே திருவோம் என்று உறுதிபூண்ட நம் தேச தந்தை திரு காந்தி அவர்கள் தான், என் மக்களுக்கு சுதந்திரம் என்றல் என்னவென்று குட தெரியாத நிலை இருக்கிறதே என்று வருத்தப்பட்டார் . . . .நம் தேச பிதா என்று இருந்திருந்தால்???

PITTHAN said...

AYYA MANJA COLORULA SONNATHU NALLA IRUKAIYA, NAMMALIKKU OK. ANNA PONTATTI PULLAIKALUKU ENNAIYA PANRAHTU ATHAIYUM SOLLITINAGA SEITHURALAM. EFFAVUM VILAI VASI VELAI ILLA THINDATTAM NA COMMNUIST THAN PORADUVANGA IFA AVANKALUM ATHAYAM PAKKA ARAMBICHUTANGA ENNA PANRATHU. KEPPAK KALIYUM KUMMANGA KOOLUM THAN NAMMAKKU SONTHAM.

R.Gopi said...

ஐஸ் ஃப்ரூட் அய்யர் என்ற பெயர் மாற்றத்துடன் இங்கு வருகை தந்துள்ள அண்ணன் மஞ்சள் ஜட்டி அவர்களை எங்கள் சங்கத்தின் (பெயர் மாற்றம் செய்து மீண்டும் என்ட்ரி கொடுப்போரை கண்டுபிடிப்போர் சங்கம்) சார்பாக‌ வருக வருக என்று வரவேற்கிறேன்.....

ஐஸ் புரூட் அய்யர் said...

//வணக்கம் திரு மஞ்சள் ஜட்டி! நல்லா இருக்கீங்களா?

எப்போலேந்து இந்த ஐஸ் ப்ருட் ஐயர் என்று பேர் மாற்றம்?

என்னதான் பேரு மாறினாலும் அந்த "மஞ்சள்" மாறலை. சட்டைக் காலரைச் சொன்னேன்!//

///ஐஸ் ஃப்ரூட் அய்யர் என்ற பெயர் மாற்றத்துடன் இங்கு வருகை தந்துள்ள அண்ணன் மஞ்சள் ஜட்டி அவர்களை எங்கள் சங்கத்தின் (பெயர் மாற்றம் செய்து மீண்டும் என்ட்ரி கொடுப்போரை கண்டுபிடிப்போர் சங்கம்) சார்பாக‌ வருக வருக என்று வரவேற்கிறேன்...///

மானஸ்தன், கோபி...வரவேற்றமைக்கு நன்றி.. மஞ்சள் ஜட்டி பழைய்தாகிவிட்ட காரணத்தினால் "ஐஸ் புருட்" டை கையில் ஏந்தியுள்ளேன். அப்பப்ப ஏதாவது வித்தியாசம் காட்டனுமில்லியா?? அதான் இந்த புது "கெட்-அப்"....ஆனாலும்., நம்ம படத்த பாருங்க...மஞ்சள் ஜட்டிக்கு உரிமையாளரான "கேப்டன்" இருக்காரே?? அது ஒரு பெரிய்ய கதை..."கேப்டன்" மஞ்சள் ஜட்டியை போட்டுக்கினு ஷூட்டிங் ஸ்போட் ல "நீலாம்பரிய" துரத்தின விவகாரம்...அப்பால பேசுவோம்...

இட்லி வடை !! நல்லாயிருக்கீகளா அப்பு??

R.Gopi said...

..."கேப்டன்" மஞ்சள் ஜட்டியை போட்டுக்கினு ஷூட்டிங் ஸ்போட் ல "நீலாம்பரிய" துரத்தின விவகாரம்...அப்பால பேசுவோம்...//


மஞ்சள் ஜட்டி.....இந்த‌ மேட்ட‌ர‌ சீக்கிர‌ம் அவுத்து வுடுங்க.....

Sriram said...

சூப்பர் ஸ்டார் கூட ஒருவரை துரத்தினார்..ஆனால் ஒருவரின் மிரட்டலால் பயந்து ஒதுங்கி விட்டார் சூப்பர் ஸ்டார் ....அந்த சேதி தெரியுமா உங்களுக்கு???மிரட்டியவர் முன்னால் முதலமைசசராக இருந்தவர்!!!!

Anonymous said...

//இதை மனதில் வைத்து கலைஞர் செய்த மிக உருப்படியான காரியம் "உழவர் சந்தை", (எப்படி அவர் மனத்தில் இது எப்படி உதயம் ஆனது என்பது ஆச்சரியமே!!)அவரே அது போல வேறு ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் தான் உண்டு....//

Uzhavar sandai was the introduced by Gill (former chief election commissioner) in Punjab (or Haryana) when he was an IAS officer there. I believe that was also inspired by the practice followed by some countries in Europe. I have seen that occasionally happening even in the US.

Rahul said...

/***Anonymous said...
//இதை மனதில் வைத்து கலைஞர் செய்த மிக உருப்படியான காரியம் "உழவர் சந்தை", (எப்படி அவர் மனத்தில் இது எப்படி உதயம் ஆனது என்பது ஆச்சரியமே!!)அவரே அது போல வேறு ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் தான் உண்டு....//

Uzhavar sandai was the introduced by Gill (former chief election commissioner) in Punjab (or Haryana) when he was an IAS officer there. I believe that was also inspired by the practice followed by some countries in Europe. I have seen that occasionally happening even in the US.

*****/

அப்படி காப்பி அடித்தாலும் பரவாயில்லை... மக்களுக்கு நல்லது செய்தால் போதும்....எந்த அரசியல் (பரதேசிககளும்) வாதிகளும் நல்ல I.A.S Officerகள் சொல்வதை கேட்பதே இல்லை, ஒரு சிலரை தவிர... அப்படி கேட்டால் இன்னும் பல நல்ல திட்டங்கள் உருவாகும்...எவன் கேட்கிறான் நல்லவைகளை!!! ஆட்சிக்கு வந்தவுடன் எல்லா பக்கிகளும் தனக்கு கூஜா தூக்குபவர்களை Transfer or Promotion மூலம் வைத்து கொள்கிறார்கள், நல்ல திறமையானவர்களை பொம்மையாக்குகிறார்கள், உதாரணம் சைலேந்திர பாபு ஐ. பி.ஸ் ........

Anonymous said...

//மக்கள் பிரச்சினைகளை கேட்காத,பார்க்காத,பேசாத
இந்த அரசியல் குரங்குகளை
எப்படி பிடித்து, எந்த zooவில் அடைக்கலாம்??
//

zoo எதற்கு?
இந்த அரசியல் குரங்குகளை
கண்டதும் சுட வேண்டும்.

வாழவந்தான் said...

பதிவிற்கான கமன்ட்... வரவு எட்டணா செலவு பத்தணா

//
சூப்பர் ஸ்டார் கூட ஒருவரை துரத்தினார்..ஆனால் ஒருவரின் மிரட்டலால் பயந்து ஒதுங்கி விட்டார் சூப்பர் ஸ்டார் ....அந்த சேதி தெரியுமா உங்களுக்கு???மிரட்டியவர் முன்னால் முதலமைசசராக இருந்தவர்!!!!
//

துரத்தியவருக்கும் துணைக்கும் உள்ள ஒற்றுமை தெரியுமா?
ஆயரத்தில் ஒருவருக்குத்தான்(ஒருத்தரால்தான்) இந்த மாதிரி நடக்கும் இல்லையா ஸ்ரீராம்

//
..."கேப்டன்" மஞ்சள் ஜட்டியை போட்டுக்கினு ஷூட்டிங் ஸ்போட் ல "நீலாம்பரிய" துரத்தின விவகாரம்...
//
சும்மாவா துறத்தினாறு 'full'ஆ இல்ல துறத்தினாறு


மஞ்சள் ஜட்டி (a) ஐஸ் ப்ரூட்,
அப்படியே அம்மாவின் கான்வென்ட் காலங்கள் பத்தியும் தெரிஞ்சா சொல்லுங்க

Sriram said...

/***துரத்தியவருக்கும் துணைக்கும் உள்ள ஒற்றுமை தெரியுமா?
ஆயரத்தில் ஒருவருக்குத்தான்(ஒருத்தரால்தான்) இந்த மாதிரி நடக்கும் இல்லையா ஸ்ரீராம்***/

என்ன சொல்றீங்க??? ஓ அப்படி வார்ரீங்களா (எழுத்து பிழை அல்ல)!!! ok..ok.. understood.