பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 07, 2009

கலைஞரும் தினமணியும்.

தினமணி பற்றி வந்த இருவேறு செய்திகள்...


முரசொலி 7.7.09 அன்று வந்த செய்தி...
தினமணி நாளிதழில் அதன் ஆசிரியர் வைத்தியநாதன், `கலாரசிகன்’ என்ற புனை பெயரில் வாரந்தோறும் ஞாயிறு அன்று தமிழ்மணி என்ற பகுதியில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை எழுதி வருகிறார். நேற்றைய (19.7.2009) இதழில் தமிழ்மணி `இந்த வாரம்’ பகுதியில் இலக்கிய விமர்சனக் கட்டுரையில் முதல்வர் கலைஞர் அவர் களைப் பற்றி , பரபரப்பான பொது வாழ்க்கைக்கு நடுவில் முதல்வருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கிய வாதி என்றும், தமிழ்மீது கொண்ட காதலால்தான் கலைஞர் எப்போதும் சுறுசுறுப்பாகவும், பரபரப்பாகவும் தன்னை வைத்துக்கொண்டிருக்க முடிகிறது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் கலாரசிகன்!

இதுகுறித்து தினமணி - தமிழ்மணி `இந்த வாரம்’ பகுதியில் கலாரசிகன் எழுதி யுள்ளது வருமாறு :-

``திங்கள்கிழமை காலையில் ஓர் இன்ப அதிர்ச்சி. கைபேசி ஒலித்தது. எதிர்முனையில் முதல்வர் அலுவலகத்திலிருந்து பேசுவதாகச் சொன்ன போது, என்னை நானே கிள்ளி விட்டுக் கொண்டேன். முதல்வர் அலுவலகத்தி லிருந்து எனக்குக் கைபேசி அழைப்பு வருவானேன்?

அழைத்தவர் தனது பெயர் பாலசுப்பிர மணியம் என்றும், அவர் முதல்வரின் செயலரின் செயலர் என்றும் தெரிவித்தார். முந்தைய நாள் ‘தமிழ்மணி’ பகுதியில் வந்த, ‘இந்த வாரம்’ எழுதியவர் நான்தான் என்பதை உறுதி செய்துகொண்டபின், அவர் விடுத்த வேண்டு கோளைக் கேட்டு நான் அதிர்ந்தேன்.

"கிரேக்கக் கவிஞர் டகீஸ் மென்டி ரேகஸ் கவிதைகளை மொழி பெயர்த்துப் போட்டிருந் தீர்களே, அதைப் படித்த முதல்வர், அந்த மொழி பெயர்ப்பு, புத்தகமாக வந்திருக்கிறதா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார். அப்படி இல்லை யென்றால், ஆங்கில மொழி பெயர்ப்பாவது கிடைக்குமா, அது எங்கே கிடைக்கும் என்கிற விவரங்களைத் தந்துதவுமாறு கேட்கச் சொன்னார்!" என்று அவர் சொன்னபோது எனக்கு வியர்த்துவிட்டது.

இந்த மனிதர், இந்த வயதில் தனது நிர்வாகப் பொறுப்புகளுக்கும், அரசியல் வேலைகளுக்கும் நடுவில் பத்திரிகைகளைப் படிப்பதே கஷ்டம். இவரானால் பத்திரிகைகள் படிப்பதுடன் நிற்காமல் இலக்கியம் சார்ந்த கட்டுரைகளையும் படிக்கிறார் என்றால் அது எப்படி முடிகிறது?

கிரேக்க கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்த ராஜ்ஜாவின் கைபேசி எண்ணைக் கொடுத்துத் தொடர்பு கொள்ளச் செய்துவிட்டு சில வினாடிகள் கற்சிலையாகச் சமைந்துபோய் இருந்தேன். இவரால் எப்படி முடிகிறது? பரபரப்பான பொது வாழ்க்கைக்கு நடுவில், முதல்வருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியவாதி தன்னை சுறுசுறுப்பாகவும், பரபரப்பாகவும் வைத்துக் கொண்டிருக்க முடிகிறதே, அது எதனால்? தமிழ் மீது இவர் கொண்ட காதல்தான் காரணமாக இருக்க முடியும். இது இவரால் மட்டும்தான் முடியும்!

அந்த பிரமிப்பிலிருந்து நான் மீளவே இல்லை!’’

முரசொலி 2.8.09 வந்த செய்தி
"மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் - வாசுகி கோயில் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப் படாததால் பொலிவை இழந்து வருகிறது" என்று தினமணி நாளேடு கவலையுடன் ஒரு செய்தி விமர்சனக் கட்டுரையை இரண்டாம் பக்கத்தில் புகைப்படங்களுடன் வெளியிட்டிருக்கிறது.

அது மட்டுமா?

"மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் குறித்து இளைய தலைமுறையினருக்கு எவ்விதத் தகவலும் கிடைக்க இயலாத நிலை உள்ளது. அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ள இக்கோயிலுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு எதுவும் இதுவரை இல்லை. அறநிலையத் துறை மற்றும் சுற்றுலாத் துறையின் வரைபடங்கள், விளக்கக் கையேடுகள், மற்றும் இணையதளங்களில்கூட வள்ளுவர் திருக்கோயில் பற்றிய விவரங்கள், படங்கள் எதிலும் இடம் பெறவில்லை" என்று அக்கறை பொங்கிட குறைகள் என்று ஒரு பட்டியலையும் வெளியிட்டு

புறக்கணிக்கப்படுகிறதா?

- என்று ஒரு கேள்வியையும் எழுப்பியிருக்கிறது தினமணி.

***

சாலை வசதி இல்லை - குடிதண்ணீர் வழங்கப்படவில்லை - என்றெல்லாம் பத்திரிகைகளில் வாசகர்கள் கடிதம் எழுதுவது - பத்திரிகைகளே இதுபோன்ற குறைகளைக் களையும் வகையில் சிறப்புக் கட்டுரைகள் எழுதுவது என்பதெல்லாம் புதிதல்ல - பத்திரிகைகள் சுட்டிக்காட்டும் குறைகளை - உடனுக்குடன் அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதும் வழக்கமான ஒன்றே!

‘தினமணி’க்கு திடீரென்று திருவள்ளுவர் கோயில் பற்றி இவ்வளவு கவலையும் - அக்கறையும் ஏற்பட்டிருக்கிறதே; என்ன காரணம்?

குறைகளை சுட்டிக்காட்டி - உரிய பரிகாரம் காணவேண்டும் என்ற நல்லெண்ணமா?

பெங்களூருவில் 18 ஆண்டுகளாய் திறக்கப்பட முடியாமல் கோணிப்பைகளால் மூடிவைக்கப்பட்டிருந்த அய்யன் திருவள்ளுவர் சிலையை - ஆகஸ்ட் 9ந் தேதி குறளுக்கு உரையும் - குறளோவியமும் எழுதி - வள்ளுவர் கோட்டம் அமைத்து - கன்னியாகுமரி கடலில் அய்யன் திருவள்ளுவருக்கு திருவுருவச் சிலை அமைத்த முதல்வர் கலைஞர் திறந்து வைக்கவிருக்கிறார்.

இது - கலைஞரைப் பிடிக்காதவர்கள்- தி.மு.க. எதிர்ப்பாளர்கள் சிலருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதிலே -

‘தினமணி’க்கு ஒரு பங்களிப்பு வேண்டாமா? அதனால்தான்,

திடீரென்று தினமணி - மயிலாப்பூர் திருவள்ளுவர் ஆலயம் பராமரிப்பில்லாமல் பொலிவு இழந்து வருவதாகவும் - அது புறக்கணிப்போ என்ற சந்தேகம் எழுவதாகவும் - புழுதி கிளப்பி கலைஞர் எதிர்ப்பாளர் - தி.மு.க. துவேஷிகளுக்குத் தீனி போடும் வகையில் செய்தி வெளியிட்டு வழக்கமான தனது சொந்த வயிற்றெரிச்சலையும் அதன்மூலம் கொட்டித் தீர்த்திருக்கிறது! அவாளுக்கே உரிய சாமர்த்தியத்தையும் நிலைநாட்டி இருக்கிறது.

தினமணியா, கொக்கா?

வர்றியா ஒண்டிக்கு ஒண்டி...வா கொளுத்திக்கலாம் நீயும் நானும்...நான் அடிச்சா நீ தாங்க மாட்டே...மாதிரி எதையும் பேசாமல் இருந்ததற்கு நன்றி.

14 Comments:

Kasu Sobhana said...

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

Anonymous said...

Itho Karunanidhi Progidhar kilambi vittar..avani avittam andru Thriuvalluvarukkum poonul poduvadharkku...

ந.லோகநாதன் said...

என்னைப் பொருத்தவரை தினமணி is doing correct job!!! It is a very good daily in tamil.

நெல்லை எக்ஸ்பிரஸ் said...

அது போன மாசம்....
இது இந்த மாசம்...

இதெல்லாம் சகஜமப்பா...

Anonymous said...

இடைத்தேர்தல்களை புறக்கணிக்க ஜெயலலிதா பல்வேறு காரணங்களைத் தெரிவித்திருந்த போதிலும், அதிலே ஒன்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்றும், அவற்றில் மோசடிகளை நிகழ்த்த முடியும் என 2000-ம் ஆண்டிலிருந்து திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். அவரது இந்தக் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்க வேண்டிய கடமை தேர்தலை நடத்துகின்ற தேர்தல் ஆணையத்திற்குத் தான் உண்டு.

2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் ஜெயலலிதா இதே குற்றச் சாட்டைக் கூறி, அதற்கு தலைமைத் தேர்தல் ஆணையம் - ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில் டெல்லிக்கு தேர்தல் ஆணையத்திற்கு வருமாறும், அங்கே உள்ள எந்தவொரு இயந்திரத்தை வேண்டுமானாலும், எடுத்து அதிலே தில்லுமுல்லு செய்ய முடியும் என்பதை நிரூபிக்கத் தயாரா என்றும் கேட்டது. அப்போது ஜெயலலிதா அதற்கு பதிலும் சொல்லவில்லை, டெல்லிக்குச் செல்லவும் இல்லை.

ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்பது தான் உண்மை. சுமார் 25 வருட கடின உழைப்புக்கு பிறகு, ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. அதன் செயல்பாடுகளில் தேர்தல் கமிஷனுக்கு முழு திருப்தி உள்ளது. இந்த இயந்திரங்கள் 100 சதவீதம் முறைகேடு செய்ய முடியாதவை.

நமது ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் ஓட்டுப் பதிவு இயந்திரங்களை விடச்சிறந்தவை. இவற்றை உடைக்கலாமே தவிர, முறைகேடுகளை நிகழ்த்த முடியாது.

ஆனால், இதற்குப் பிறகும் ஜெயலலிதா இந்தக் குற்றச்சாட்டைச் சொன்னதும், அவருடைய முக்கிய தோழமைக் கட்சித் தலைவர்களான டாக்டர் ராமதாசும், வைகோவும், ஆமாம், ஆமாம் தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரத்திலே கோளாறு, நாங்களும் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று பஜனை பாடியிருக்கிறார்கள்.

இந்தக் குற்றச்சாட்டிற்கு உடனடியாக தேர்தல் ஆணையம் பா.ம.க. தலைவருக்கு எழுதிய கடிதத்தில், "மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு என்று நீங்கள் கூறிவரும் குற்றச்சாட்டு மிகவும் கடுமையானது. எனவே, தாங்கள் டெல்லி வந்து தேர்தல் ஆணையம் பயன்படுத்துகிற இயந்திரங்களை பரிசோதிக்கலாம், தில்லுமுல்லு செய்ய முடியும் என்று நேரில் கண்டு நிரூபித்துக் காட்டலாம்'' என்று தெரிவித்திருந்தது.

தமிழகத்திலே உள்ள செய்தியாளர்களை அழைத்து தேர்தல் இயந்திரத்தில் தில்லுமுல்லு என்று பேட்டி கொடுக்கும், பா.ம.க. நிறுவனர் தேர்தல் ஆணையத்தின் அழைப்பினையேற்று டெல்லி சென்று நிரூபித்துக் காட்டியிருக்க வேண்டியதுதானே? ஏன் அவர் டெல்லி செல்லவில்லை? ஏன் வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு என்பதை நிரூபித்துக் காட்டவில்லை?

தேர்தல் ஆணையம் பா.ம.க. தலைவருக்கு மட்டும் அழைப்பு அனுப்பவில்லை. தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு என்று கூறிய எல்லாக் கட்சியினரையும் டெல்லிக்கு அழைத்து, நிரூபித்துக் காட்டச் சொல்லியிருந்ததே, அந்தச் செய்தி 4-8-2009 தேதிய ஏடுகளில் எல்லாம் வந்ததே? ஏன் எந்தத் தலைவர்களும் செல்லவில்லை. தங்கள் குற்றச்சாட்டை நிரூபித்துக் காட்டவில்லை?

வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து சந்தேகம் எழுப்பும் அனைவரையும் அழைக்க தேர்தல் கமிஷன் தீர்மானித்திருக்கிறது. அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு இந்த வாரம் வந்து, முறைகேடு குறித்து செயல் முறை விளக்கம் அளிக்கலாம். இயந்திரம் குறித்த அவர்களுடைய குற்றச்சாட்டுகளை சுட்டிக் காட்டலாம்.

அதற்காக தொழில் ௮ட்ப வல்லுநர் குழுவும், வாக்குப் பதிவு இயந்திரங்களை தயார்செய்து அளிக்கும் நிறுவனங்களின் பொறியாளர்களும் தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு வருகின்றனர். அவர்கள் முன்னிலையில் குறைபாடுகளை எடுத்துக் கூற வாய்ப்பு வழங்கப்படுகிறது. அப்போது வல்லுநர் குழுவினர் விளக்கம் அளிப்பார்கள். இதன்மூலமாக நாட்டின் தேர்தல் ஜனநாயகத்தின் மீது எழுந்துள்ள தவறான அபிப்பிராயங்கள் மாறக் கூடும் என்று நம்புகிறோம்.'' என்று கூறி, இது அனைத்து ஏடுகளிலும் வெளிவந்துள்ளது.

இதற்குப் பிறகு ஜெயலலிதாவின் கம்பெனி டெல்லிக்குச் சென்றிருக்க வேண்டுமே தவிர, தேர்தல் ஆணையத்தின் இந்த அறிக்கைக்குப் பிறகும், வாக்குப் பதிவு இயந்திரத்திலே கோளாறு, எனவேதான் புறக்கணித்தோம் என்று இன்று அறிக்கை விட்டிருக்கிறார் என்றால், அது ஊரை ஏமாற்றுகின்ற செயல்தானே? தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை ஜெயலலிதா படித்தாரா? இல்லையா? பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தேர்தல் ஆணையத்தின் அழைப்பையேற்று டெல்லிக்கு உடனடியாகச் செல்லாமல், தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதைப் போல அறிக்கை என்ற பெயரால் என்ன எழுதியிருக்கிறார் என்று யாருக்குமே புரியாத வகையில் ஓர் அறிக்கை விடுத்துள்ளார்.

Erode Nagaraj... said...

வள்ளுவர் அல்லது யாருடைய சிலையானாலும், அவைகளை வைத்து, இடம் விட்டு பூங்கா கட்டி அழகு பார்க்கும் அளவிற்கு நம் நாட்டில் இடமில்லை. ஒரே இடத்தில் சகலருக்கும் காட்சியகம் வைத்து, அங்கே கூட, அவர் படத்தைத் தொட்டால் பெரிதாகும், விவரங்கள் பல மொழிகளில் ஒலிபெருக்கியிலும் திரையிலும் தோன்றும் என்று ஏற்பாடு செய்தால் நலம். மீதமாகும் இடங்களை, கடலோரம் மற்றும் பிற பகுதிகளில் நல்ல வசிப்பிடங்கள்-கழிப்பிடங்கள் கட்டித் தர உபயோகப்படுத்தட்டும்.

R.Gopi said...

யக்கக்க ஜக்க ஜகக்க
மக்கக்க டக்கா நண்டு.....

இதற்கு அர்த்தம் தெரிந்தவர்கள் "கீபாலபுரம்" வந்து அண்ணன் "போர்காட்டாரை" சந்தித்து தெளிவான விளக்கம் அளித்து, "தல" "வலைஞர்" அறிவித்துள்ள பொற்கிழியை பெற்று செல்லலாம் என்று அரசின் அதிகாரபூர்வ ஏடு "குரசொலி" அறிவித்துள்ளது.....

மனதில் தைரியமும், ஸ்டீல் பாடியும் உள்ளவர்கள் "பாடிகாட்" முனீஸ்வரனை மனதில் வேண்டி, இந்த போட்டியில் பங்கேற்கலாம்..... கேற்கலாம்...... கலாம்..... லாம்... ம்ம்ம்ம்....

jaisankar jaganathan said...

//கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.//

ethukku enna artham(meaning)

யதிராஜ சம்பத் குமார் said...

இந்த பகுத்தறிவு ஜீவிகளுக்கு "அவாள்" பெயரில் என்னதான் வயித்தெரிச்சலோ தெரியவில்லை!!

Anonymous said...

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து
அதாவது......

Anonymous said...

கூர்மையான மூக்கை உடைய கொக்கு, அந்தந்த பருவத்துக்கு ஏற்றவாறு மற்ற கொக்குகளை இடம் பார்த்து சீராக தன் மூக்கால் குத்த வல்லமை உடையது .....

R.Gopi said...

// jaisankar jaganathan said...
//கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.//

ethukku enna artham(meaning)//

மதியிலி அறிவிலி
என்றினி அழைப்பவர்
அவர்தம் பிறியிலி
என்போர் பிணக்கு

இது வாழும் வள்ளுவன் வாக்கு .....

Anonymous said...

திருவண்ணாமலை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை தனது கணவர் சபரீசனுடன் திருவண்ணாமலை வந்து அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பய பக்தியுடன் சாமி கும்பிட்டார்.செந்தாமரை, கணவர் சபரீசன் மற்றும் குடும்பத்தினருடன் இன்று காலை திருவண்ணாமலை கோயிலுக்கு வந்தார். அங்கு நண்பகல் 12 மணியளவில் சிறப்பு பூஜையில், குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சாமி கும்பிட்டார்.

http://thatstamil.oneindia.in/news/2009/08/09/tn-stalin-daughter-visits-thiruvannamalai-temple.html

Kasu Sobhana said...

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
(பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.)