பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 06, 2009

மருமகளை மாமியார் உதைப்பது கொடுமையான குற்றமல்ல

நேற்று வந்த இந்த தீர்ப்பை பற்றி சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை.

மருமகளை மாமியார் காலால் உதைப்பது கொடுமையான குற்றமல்ல" என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறி இருக்கிறது.

"மாமியார் என்னை காலால் எட்டி உதைத்தார். தன் மகனிடம் கூறி என்னை விவாகரத்து செய்து விடுவதாக மிரட்டினார். கணவரும் நாத்தனார்களும் கொடுமைப்படுத்தினர். அவர்களை தண்டிக்க வேண்டும்" என்று கீழ் நீதிமன்றத்தில் மருமகள் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், மாமியாருக்கும் கணவருக்கும் தண்டனை விதித்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கணவர் மேல் முறையீடு செய்தார்.

அதை 'பெஞ்ச்' விசாரித்து வழங்கிய தீர்ப்பு:

மருமகளை மாமியாரோ நாத்தனாரோ உதைப்பது, விவாகரத்து செய்து விடுவேன் என்று மிரட்டுவது, மனைவிக்கு எதிராக மகனிடம் குற்றம்சாட்டுவது, போன்ற செயல்களை வன்கொடுமையாக கருதி இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498-ஏ யின் கீழ் தண்டனை வழங்க முடியாது. அதே நேரம், திருமணத்தின் போது மணமக்களுக்கு பரிசாக அளிக்கப்பட்ட பொருட்களை மாமியார் எடுத்துக் கொண்டால் அது நம்பிக்கை மோசடியாக கருதப்பட்டு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 406 படி தண்டிக்கலாம்


என்ன கொடுமை இது ? தினமும் கணவன் மனைவியிடன் அடி வாங்கிறான் ஏதாவது சொல்றானா ??வால்பையன் பதிவிலிருந்து ஒரு ஜோக்

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல
எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த
மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே
தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..
அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. " மாமியாரின் அன்புப்
பரிசு.."

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார்
வென்றார்.." மாமியாரின் அன்புப் பரிசாக..".

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே
இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' உட்டப்ப சொன்னான்.. "போய்த் தொலை..
எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து
வச்சிருக்க..?" மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.."
மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...!


17 Comments:

SUBBU said...

வால்பையனோட ஜோக் :))))))))))))))))))

இளவட்டம் said...

me the first...நியூஸ்க்கு ஏத்த joke பாஸு.

Kasu Sobhana said...

அன்புள்ள இ.வ.
என் மாமியாரை நான் உதைத்தால்,
அது சட்டப்படி குற்றமா - அல்லது இல்லையா ?
(உங்கள் பதிலை, எனக்கு ஒரு
மாமியார் வருவதற்கு முன் தெரியப்
படுத்துங்கள் !)
ஆவலுடன்
(அதையும் விட பலமான காலுடன்)
காசு சோபனா.

வால்பையன் said...

இட்லிவடையின் அன்பிற்காக அப்போது வெளியிட்ட அனைத்து ஜோக்குகளும் மீண்டும் மீள்பதிவாக கிளிக்கி செல்லவும் நன்றி இட்லிவடை

நல்லூரான் said...

மாதர் தம்மை இழிவு செய்யும் மடையர்களைக் கொளுத்து வோம்!! :)

ந.லோகநாதன் said...

Good Joke. Media making nonsense news

Anonymous said...

இதெல்லாம் ஒரு நியூஸ்-ன்னு போட்ட இட்லிவடை அடுத்த ஜன்மத்துல பொண்ணாப் பொறந்து மரடோனா மாதிரி ஒரு skillful மாமியாரால் புட்-பால் விளையாடப் படவேண்டும் என்று இட்லி வடை வாசகர்கள் சார்பாக சாபம் கொடுக்கிறேன்.

Eswari said...

//மருமகளை மாமியார் காலால் உதைப்பது கொடுமையான குற்றமல்ல" //

நெற்றி கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.

jaisankar jaganathan said...

kasu shobhana,
enga ammava uthakka mudiyathu. puriyutha

Baski said...

//மருமகளை மாமியார் காலால் உதைப்பது கொடுமையான குற்றமல்ல//

It is still a "குற்றம", but cannot be a "கொடுமையான குற்றம".

I/We neither know the sections in Indian Penal Code, nor kind of punishments under that section for which they have appealed high court.

In the context of this case, Judge may be correct..

Is he not IV?

Vaal,

LOL. Wonderful.

Gane said...

Sir thapu illa nu avanga sollala .Antha article kizha varathunutha avanga solranga.

ஆ.ஞானசேகரன் said...

//மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.."
மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...!///


ஆகா

ஸ்ரீராம். said...

மாமனார் picture லயே வரலையே...ஏன்?

Erode Nagaraj... said...

காசு சோபனா.விற்கு காசு நாகராஜன் எழுதுவது,

காமடியான கேள்வி... அப்படியே, மருமகன் மாமனாரை உதைத்தால், மாமனார் மருமகனின் நாடு முதுகில் ரெண்டு போட்டால், மனைவியின் தோழிக்கும் கணவனின் நண்பனுக்கும் சண்டை வந்துவிட்டால் (வாஸ்தவத்தில் இது ஒரு பெரிய ஈகோ பிரச்சினை) போன்ற சகல விஷயங்களுக்கும் traffic ramaswamy போல யாரேனுமொரு graphics kandhaswamy மூலம் கேஸ் போட்டு தெரிந்துகொள்ளலாம்!

நல்லூரான்,

மாமியார் - மருமகள் பிரச்சினை என்பதே, "மாதர், தம்மை (தம்மைத் தாமே) இழிவு செய்து கொளல் தான்.

மானஸ்,

மரடோனா ஒரு sKILL-"full" மாமியார்தான்... நல்ல தேர்வு...

Erode Nagaraj... said...

மாமியாரோ - மாமனாரோ பரலோகம் பொய், அவர்களே குழந்தையாக வநது, மருமகளை உள்ளேயிருந்து உதைப்பதிலோ, மிகச் சரியாக அம்மா சாப்பிட உட்கார்ந்ததும், வெளியே "இருந்து" வதைப்பதிலேயோகுற்றமில்லை.

வலைஞன் said...

ஷோபனா,
உங்கள் வருங்கால மாமியாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!
முடிந்தால் அப்பாவிடம் சொல்லி அம்மா இல்லாத வரனாக பார்க்கசொல்லுங்கள்
ஒருக்கால் நீங்கள் உதைக்க நேரிட்டாலும் அது வலது காலாக இருக்கட்டும்.இடதுகாலால் உதைப்பது மரியாதை அன்று!

Vilvarani said...

Vilvarani said
Anakkum mamiyar Erunthargal. Eppothu Illai. Anal So cute mamiyar.