பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 05, 2009

உண்மையான கால்பந்து வீரர்கள்

1956 ஆம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டிகளில் அரையிறுதி வரை முன்னேறி சாதனை படைத்த இந்திய கால்பந்து அணியினரை கௌரவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. 1956 மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர்களில் ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்க மாநில வீரர்கள் அதிகம் எனவே அந்த மாநில முதல்வர்கள் அந்த சாதனை வீரர்களை கௌரவித்து பரிசுகள் வழங்கவேண்டும் என்று எம்.எஸ்.கில் கடிதம் கூட எழுதினார்.

1956 ஒலிம்பிக் போட்டிகளில் நான்காவது இடத்துக்கு சென்ற அணியில் உயிருடன் இருக்கும் ஒன்பது பேருக்கு அகில இந்திய கால்பந்து அமைப்பினர் இவர்களை கௌரவிக்கும் வகையில் தலா 25,000ரூ அனுப்பியுள்ளார்கள். "எங்களை இவ்வாறு கேவலப்படுத்தாதீர்கள்" என்று இந்த 25,000ரூபாய்க்கான காசோலையை இந்த ஒன்பது (நிஜ) வீரர்களும் திருப்பி அனுப்பியுள்ளார்கள். எல்லோருக்கும் வயது 70+


கால்பந்து அணியை மீட்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) உதவவேண்டும் என அகில இந்திய கால்பந்து அமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) கேட்டுள்ளது. இதையடுத்து பி.சி.சி.ஐ., 10 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அப்படியே மந்திரா பேடியையும் வர்ணனை செய்ய அழைத்தால், மக்கள் கோல் போடுவதை ரசிப்பார்கள்.


( Source: IBNLive )

7 Comments:

Rahul said...

why you stopped with manthra???? there are many in the list kathreena, deepika...etc
மக்கள் நல்லா வாயை பிளந்து பார்ப்பார்கள் கால் பந்தாட்டத்தை.......

kggouthaman said...

ஆமாம், அரை நூற்றாண்டுக்கு மேல் ஆன பிறகு, யுகோஸ்லாவியாவிடமும், பல்கேரியாவிடமும், மூன்று கோல் வித்தியாசத்தில் தோற்று,
நான்காம் இடத்திற்குத் தள்ளப் பட்டதை
நினைவுறுத்தினால் - அவர்களுக்குக்
கோபம் வராதா!

ந.லோகநாதன் said...

Cricket should be banned in india. only then other sports and sportsmen will get benefited ... other wise like this happen

sandoz said...

// Cricket should be banned in india. only then other sports and sportsmen will get benefited ... other wise like this happen //

Don blame the game.. Blame the business behind it..

kggouthaman said...

Banning cricket - will not do fanning for foot-ball.

ஸ்ரீராம். said...

வட நாட்டுல ஒரு தியாகிக்கு பென்ஷன் மாதம் 25 ரூபாய் வருகிறதாம். அது கூட, 2007 வரை 15 ரூபாய்தான் வந்து கொண்டு இருந்ததாம். அவரும் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்.

Rajaraman said...

That is why he is called Thyagi