பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 03, 2009

அசல், வேட்டைக்காரன், மக்கள் இயக்கம்

அசல், வேட்டைக்காரன், மக்கள் இயக்கம் ....

அசல் : - "நான் நிச்சயமாக அரசியலுக்கு வரமாட்டேன். ஏனென்றால் எனக்கு பொய் பேச தெரியாது " என்று தனது அரசியல்பிரேவசம் குறித்து நேரடியான, தெளிவான பதில் தந்தார் அஜித்.

அசல் - இவரது 49 வது படம். சிவாஜி பிலிம்ஸ் சார்பில் நடிகர் பிரபு தயாரிப்பில், சரண் - பரத்வாஜ் கூட்டணியில் அஜித் இணையும் நான்காவது படம். சமிரா ரெட்டி, பாவனா என இரண்டு கதாநாயகிகள், டான் அஜித், மலேசியா ஷூட்டிங், கூலிங்கிளாஸ் போட்ட வில்லன்கள் என அஜித் செண்டிமெண்ட்ஸ் இருந்தாலும், படத்தில் சில சிறப்பு அம்சங்கள்.

YKINZ என்ற மேற்கத்திய இசைகுழு பரத்வாஜுடன் இணைந்து இசை அமைகிறார்கள். டைட்டில் பாடலை சிம்பு பாடுகிறார். வில்லன், ரமணா போன்ற படங்களுக்கு பிறகு யூகிசேது ஸ்கிரிப்ட்டில் பணியாற்றிஇருக்கிறார். பில்லாவில் பணிபுரிந்த ஹாங்காங் ஸ்டண்ட் மாஸ்டர் வில்லியம் ஒங் இதிலும் இணைந்து இருக்கிறார். ஷாருக்கானை ஒரு வேடத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. "கனவா, நினைவா , என் கண்கள் தேடும் தேவா" இதுதான் 'நெட்டில்' வெளியாகி, ஹிட்டாகிகொண்டிருக்கும் படத்தின் ஒரு மெலடி பாடலின் வரிகள்.

"அஜித்துக்கு ஒரு ஹிட் தேவைப்படுகிறது. அவர் சரியான இடத்துக்குதான் வந்திருக்கிறார். படம் பெரிய வெற்றிபெறும்" என்று அசல் தொடக்கவிழாவில் பேசினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினி வாய்ஸ் அரசியலை பொறுத்தவரை 'புஸ்' என்றாலும். சினிமாவை பொறுத்தவரை பாஸ் சொன்னா அது நூறு சதவிதம் 'எஸ்' தான் .

அசல் - பிரபு தலையில் 'குல்லா' போடாமல், அஜித்துக்கு இன்னொரு 'பில்லா' ஆகும் என நம்பலாம்.


வேட்டைக்காரன் : - இது விஜய் நடிக்கும் 49 வது படம். AVM தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பாபுசிவன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையில் உருவாகும் படம். இதில் விஜய்க்கு ஜோடி அருந்ததி அனுஷ்கா. "வேட்டைக்காரன் டோய் " என தொடங்கும் அதிரடியான பாடல் (உபயம் : நெட் ) படம் வழக்கமான விஜய் மசாலா என நிரூபிக்கிறது.

போக்கிரிக்கு பிறகு தனது படங்கள் சரியாகபோகாத நிலையில், வேட்டைகாரனை ரசிகர்களோடு சேர்ந்து, தானும் மிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையோடு எதிர்பர்த்துகொண்டுஇருக்கிறார் இளையதளபதி.


மக்கள் இயக்கம் : - இது தனது ரசிகர் மன்றங்களை திரட்டி, தனி கொடி சகிதம் விஜய் ஆரம்பித்து இருக்கும் அரசியல் கட்சியின் ஜூனியர் வடிவம்.
"சமுக சிந்தனை, அக்கறைகளை வளர்ப்பதற்காக மக்கள் இயக்கத்தை தொடங்கி இருக்கிறேன். எனக்கும் அரசியலில் கலக்க வேண்டும் என்ற ஆசை(!) இருக்கிறது. அதன் அஸ்திவரம்தான் மக்கள் இயக்கம் " என்று விளக்கம் அளித்தார் விஜய்.

மேலும் பேசிய விஜய் " நான் தற்போது பல தலைவர்களின் புத்தகங்களை படித்து வருகிறேன். இந்த இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும், ஒரு லட்சம் உறுப்பினர்களையும், நகர, வட்டங்கள் சார்பில் 50 ஆயிரம் உறுப்பினர்களையும், கிளை மன்றங்களின் சார்பில் 5 ஆயிரம் உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும்.

இந்த இயக்கம் எப்படி வரும். எப்படி நடக்க வேண்டும் என்பது எனக்கு தெரியாது. நீங்கள் மனது வைத்தால் இந்த இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும். அப்போது என் குடும்பம் என் தொழிலை விட இந்த கட்சியை பெரிதாக எண்ணி உழைப்பேன். அது உங்கள் கையில் தான் உள்ளது" என்றார்.

இந்த மாபெரும்(?) இயக்கம் பற்றி விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ். ஏ. சந்திரசேகரன் தந்த தகவல்கள் இதோ..
விஜய்க்கு பெண் ரசிகைகள் அதிகம். எனவே அவரை கட்சி தொடங்குமாறு அவரது ரசிகர்கள் வற்புறுத்துகிறார்கள். இந்த வயதில் இவ்வளவு கூட்டம் சேருகிறது. இதுதான் கட்சி ஆரம்பிக்க சரியான நேரம்.

விஜய் கட்சி தொடங்குவதை பார்த்து விஜயகாந்த் பயந்துவிட்டார்(!).

நான் பல புரட்சி படங்களை தயாரித்துள்ளேன். அதில் அநியாயங்களை தட்டி கேட்கும் கதை அதிகமாக இருக்கும். இதனால் நாடு மாறவில்லை. இதற்காக யாரும் என்னை பாராட்டியதும் இல்லை. இது என் மனதில் எழுச்சியாக இருந்தது.இதனால் என் மகனை நடிக்க வைத்து அதன் மூலம் எழுச்சியை கொண்டு வந்தேன். இதற்காக ஒரு அமைப்பை ஆரம்பித்தேன். அது மக்கள் இயக்கமாக மாறி உள்ளது.

நான் பரம்பரை திமுககாரன். தனி கட்சி என்றாலும் திமுகவுக்கு இணக்கமாக இருப்போம் என்று கூட்டணி(?) வேறு அமைத்துவிட்டார் விஜய்யின் அரசியல் ராஜகுரு.

விஜய்யின் அரசியல்பிரேவசம் குறித்து போட்டிபோட்டுகொண்டு 'கவர்ஸ்டோரி' போட்டார்கள் பெரிய பத்திரிகைகளான குமுதமும், விகடனும். அதிலும், சினிமா தயாரிப்பில் இறங்கியதுமுதல் ஆனந்தவிகடன், சினிமாவிகடன் என்று மாறிவிட்டது. புத்தகத்தில் எழுபதுசதம் சினிமா செய்திகள்தான். (மீதமுள்ள பக்கங்களில் 'பொக்கிஷம்' என்ற பெயரில் அரைத்தமாவையே அரைத்து 'மொக்கை' போடுகிறார்கள்).

"மக்களுக்காக படம் செய்யாமல், மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசாமல், அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்யபோறேன்னு ஒரு நடிகன் சொன்னா அது எவளோ பெரிய ஏமாற்று வேலை " என்று சமிபத்தில் ஒரு பேட்டியில் சொன்னார் இயக்குனர் தங்கர்பச்சான். தங்கர் சொல்வதுபோல மக்களுக்கு என்ன செய்தார் அல்லது செய்யபோகிறார் 'தலைவர்' விஜய்??

எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதால்,எஸ். ஏ. சந்திரசேகரன் தயாரிப்பு கம் இயக்கத்தில், நடிகர் விஜய் 'வருங்கால முதல்வர்' கெட்டப்பில் முயற்சிக்கும் 'மக்கள் இயக்கம்' வெற்றியடைந்து, வசூலை(??) குவிக்க வாழ்த்துவோம். வாழ்க ஜனநாயகம்.


- இன்பா

39 Comments:

Anonymous said...

"செம பஞ்ச்" finish இன்பா.

கடைசி பாராவை மஞ்சளில் போடுங்க இட்லி.

Anonymous said...

The Election Commission on Saturday invited political parties and others who have raised doubts about the credibility of Electronic Voting Machines EVMs to come for a demonstration that would set their misgivings at rest "once and for all".

Anonymous said...

Why Jaya,Vaiko,Ramadass and others against EVM are not responding?
The Election Commission on Saturday invited political parties and others who have raised doubts about the credibility of Electronic Voting Machines EVMs to come for a demonstration that would set their misgivings at rest "once and for all".

Anonymous said...

வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும்

புவனேசுவரம், ஆக. 2: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்பதை தன்னார்வ அமைப்புகள் நிரூபித்துள்ளன.
ஒரிசா தலைநகர் புவனேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நேரடி விளக்க நிகழ்ச்சியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படியெல்லாம் தில்லுமுல்லு செய்ய முடியும் என்பதை அவர்கள் விளக்கிக் காட்டினர்.
முன்னாள் நீதிபதிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இந்த நேரடி விளக்கம் நடைபெற்றது.
ஒரு குறிப்பிட்ட கட்சி அதிக வாக்குகள் கிடைக்கும் வகையில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் புரோஹிராம் செய்து தவறு செய்ய முடியும் என்பதை நேரடியாக ஜன சைத்திரிய வேதிகா அமைப்பின் துணைத் தலைவர் வி.வி. ராவ் விளக்கினார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று மின்னணு தொழில்நுட்ப நிபுணர்கள் பலரும் தேர்தல் பார்வையாளர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர் என்று "நெட்இண்டியா' அமைப்பைச் சேர்ந்த ஹரி பிரசாத் தெரிவித்தார்.
தில்லுமுல்லு செய்ய முடியாத அளவில் தற்போதைய இயந்திரங்களை மேம்படுத்தும்வரை இவற்றை எந்தத் தேர்தலிலும் பயன்படுத்தக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர்.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்பதை ஹைதராபாத், தில்லி, நாக்பூர், மும்பை மற்றும் புணே ஆகிய நகரங்களில் ஏற்கெனவே நேரடியாக விளக்கி உள்ளோம் என்றார் அவர்.
தில்லுமுல்லு செய்ய முடியும் என்பதை தில்லியில் தங்கள் முன்னிலையில் நேரடியாக நிரூபிக்குமாறு தேர்தல் ஆணையம் எங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்திலும் இதை நிரூபிப்போம் என்று அவர்கள் கூறினர்.

source:தினமணி

கிரி said...

Advance wishes to Thala :-)

Anonymous said...

I guess yuvan is the music director of vettaikkaran!

R.Gopi said...

//ரஜினி வாய்ஸ் அரசியலை பொறுத்தவரை 'புஸ்' என்றாலும். சினிமாவை பொறுத்தவரை பாஸ் சொன்னா அது நூறு சதவிதம் 'எஸ்' தான் .//

ஆ.....ஹா..... தொடங்கியாச்சா......

//அசல் - பிரபு தலையில் 'குல்லா' போடாமல், அஜித்துக்கு இன்னொரு 'பில்லா' ஆகும் என நம்பலாம்.//

இந்த டயலாக் நம்ம "தமிழ் கரடி"யோட பாசறையில் யாரேனும் எழுதி கொடுத்ததா??

//வாழ்க ஜனநாயகம்.//

ஐயோ....அய்யய்யோ......... ஏண்டா சுனாமி வராது........எல்லாரையும் தூக்கறதுக்கு.....

Kasu Sobhana said...

தேர்தல் கமிசனுக்கு என் தாழ்மையான யோசனை:
இனி கட்சி பெயர், சின்னம் என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருக்காதீர்கள்.
கட்சி பெயர் : இந்தியாவில் உதயமாகும் எத்தனையாவது கட்சியோ அந்த எண்.
உதாரணம் : கட்சி 437859212
கொடி: வெள்ளை நிற பின்னணியில் கட்சி எண்.(437859212)
கொள்கை : ஏமாறாதே; ஏமாற்று!
கோஷம் : உங்கள் வோட்டு 437859212 க்கே!

Baski said...

முதற்கண் வாழ்த்துக்கள். தெளிவா அரசியல் ஆசை இருக்கு என சொல்லிருக்கார்.

எல்லோரும் அரசியலுக்கு வரவேண்டும். விஜய் வந்துருக்கார். வாழ்த்தாம எப்படி.!

முதலில் மக்கள் சேவை செய்யும் இயக்கம். பின்னாடி கட்சி. நல்லாதான் இருக்கு.
நடிச்சுட்டு அப்படியே அரசியலுக்கு வராம., கொஞ்சநாள் மக்கள் சேவை (?) செஞ்சுட்டு அப்புறமா கட்சி என சொல்லிருக்கார். பாராட்டுகள்.

நேரிய பணம் பாத்துட்டார்! கூட்டமும் இருக்கு ! அப்பாவோட ஆசை வேற !
கண்டிப்பா பெரிய சக்சஸ் தான்.

SOME ADVICES

1. பொருக்கி, மொள்ளாமாறி, முடிச்சவிக்கி மாறி நடிக்காம நேர்மையான வேடங்களில் எம்.ஜீ.ஆர். மாறி நடித்தால் தான் நாட்டை நல்ல கொள்ளை அடிக்க முடியும்.

2. கலைஞர் மாறி "இலவச ஜட்டி" திட்டங்களும், "உடன்பிறப்பே" கடிதமும் அவசியம். நிறைய ஜாதி கட்சிகளையும் ஊக்குவிக்கனும் .

3. ஜெ மாறி எல்லாத்தையும் கை கட்டி வாய் பொத்தி வைக்க தெரியனும்.

M Arunachalam said...

//அசல் - பிரபு தலையில் 'குல்லா' போடாமல், அஜித்துக்கு இன்னொரு 'பில்லா' ஆகும் என நம்பலாம்.//

'பில்லா' போல எல்லோரும் ஒரு கூலிங் கிலாஸ்ஸை மாட்டிக்கொண்டு "நடை பிணம்" போல "நடிக்காமல்" இருந்தால் சரி.

//போக்கிரிக்கு பிறகு தனது படங்கள் சரியாகபோகாத நிலையில்,//

ஹி! ஹி!! அப்போ போக்கிரிக்கு முன்னால அவரு படங்கள் எல்லாம் சரியா ஓடிச்சாமா?

//விஜய்க்கு பெண் ரசிகைகள் அதிகம். எனவே அவரை கட்சி தொடங்குமாறு அவரது ரசிகர்கள் வற்புறுத்துகிறார்கள். இந்த வயதில் இவ்வளவு கூட்டம் சேருகிறது. இதுதான் கட்சி ஆரம்பிக்க சரியான நேரம்.//

மொதல்ல உங்களுக்கு இருக்கும் "பெண்" ரசிகைகளின் ஆதரவை வைத்துக்கொண்டு விஜய் படத்தை நஷ்டம் இல்லாமல் "ஓட்ட" முடியுமா என்று பாருங்கள். அப்புறம் பாக்கலாம் உங்கள் அரசியல் வியாபாரத்தை.

velan said...

செம மாஸ் பதிவு idly vadai .....

Kameswara Rao said...

இ,வ,

அஜித் தெளிவாக இருக்கிறார். ஆனால் திருவாளர் விஜய் அவர்கள்,

இது தான் 49 வது படம் இதுல பாதி வந்த உடனே காணமல் போனவை...சமீபத்திய வெற்றி படங்கள் என்றால் கில்லி, போக்கிரி... அதற்கு பிறகு எல்லாமே தமாஷ் தான்.. இவரால் காணமல் போனவர்கள் பட்டியல் நீடுகொண்டே இருக்கிறது .. இந்த லட்சணத்தில் மக்கள் இயக்கம் அரசியல் கட்சி என்றெல்லாம் பேசி அடுத்த படத்தை தூக்கி நிறுத்தும் முயற்சிகள்..
இவரது வெற்றி படங்கள் என்றால் எல்லாமே சுட்ட பழம் தான்... தெலுங்கில் ஒரு படம் வெற்றி பெற்றதென்றால் அதை பேரம் பேசும் கும்பலில் இவரும் இருப்பார்.

மனிதருக்கு ஆசை இருக்கலாம், பேராசை இருக்க கூடாது, பொழப்பை பார்க்சொல்லுங்கள்..
இதைஎல்லாம் பதிவில் போட்டு ... தமாஷ் தான் போங்க

காமேஷ்

R.Gopi said...

இளைய தொளபதி.... இப்போ அறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பற்றிய புத்தகங்களை படிப்பதில் பிசியாமே??? மெய்யாலுமா??

படிச்சு என்ன பண்ண போறாரு? எப்படியும் சினிமால இதுதான்...

"என் வீட்டு செங்கல் நீ"
என் சாப்பாட்டுல உப்பு கல்லு நீ"

அப்புறம் அறிஞர் என்ன... புத்தகம் என்ன......

God said...

How can he wish to be a leader straightaway without any experience in politics? he should first be a "thondar" only then manage the "gundar".... He will definitely be a damp squib!

Anonymous said...

இந்த ரேட்ல அடுத்து கொஞ்சம் கூட்டம் சேர்ந்த Blog காரங்கல்லாம் கூடக் கட்சி தொடங்கிடலாம் போல....வருங்காலத்தில் அதுவும் நடக்கலாம்...."காசு சோபனா" சொல்வது போல எல்லோருக்கும் நம்பர் கொடுத்துட வேண்டியதுதான்...

ஸ்ரீராம்.

டன்மானடமிழன் said...

காமராஜருக்கு பின்பு
நல்ல மனம் கொண்ட அரசியல்வாதிகளே
நமக்கு கிடைக்கவில்லை

நமக்கு கிடைத்தது (தேர்ந்தேடுத்தது)
எல்லாம்
அரசியல்விபச்சாரிகளைதான்

அதனால்தான்
இந்த சாக்கடையேல்லாம்
புனித நீர் என்று சொல்லிகிட்டு
திரிகிறதுங்க

முதலில் ஜோசப் விஜய்ங்கற
தன்னுடைய முழுபெயரை
தைரியமா சொல்ல சொல்லுங்க
அதுக்கே அதுக்கு தைரியமில்லை

இவனுங்களுக்கேல்லாம்
திராவிட திருடர்கள் உட்பட
அனைவருக்கும்
ரீவிட் அடிக்க ஒரு மிருகம் வரும்
(சத்தியமாக ரஜினி இல்லை) அதுக்கு அப்பபுறம்
இதுங்க எந்த ஜென்மத்துலையும்
அரசியல் ஆசையே வராது

மிருகம் வெளியே வரும் வரை
காத்திருக்கவும்

Anonymous said...

WTF

if some actor gives some continuous hits few years back, then he is eligible to contest election and wants to become CM..WTF ???

so Qualities to become a CM,

1) Good in Dancing
2) Good in Acting
3) Good in selecting Directors/Stories
4) or Good in copying Telugu Hit movies

WTF?????

Usually i feel thangarbachan speaks too much, but Right now, his point is VERY VERY VALID at
this situation.


I don't know this fellow already has lots n lots of money, still wants to earn by coming into politics.

WTF???You know some Tamil movies came about serial killers who kill people who gets bribes (Indian, Ramana) , and Bad people.


If somebody directs a movie where Hero kills all Cinema heroes who wants to come to politics to earn more money, i am sure it will become a SUPER DUPER HIT.

Krish said...

தமிழ் நாட்டுல இவனுக தொல்லை தாங்க முடியல.... இப்படியே போன நூறு பேருக்கு ஒரு கட்சி வந்துடும்.

Nagaraj Venkatesan said...

Hi idlyvadai,

The kanava ninaiva song is a song composed by prassanna,praveen(ad jingle compsoers) and shyam long time back. Its not from asal. Please check this out.

http://blog.tsjstudio.com/

Anonymous said...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கலைஞரின் அடுத்த நாடகம் எப்போது?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அப்போலோ அல்லது ராமச்சந்திர மருத்துவமனையில் படுத்துக்கொண்டு, ஸ்டாலின் முதல்வர் என்று உருக்கமாக உடன்பிறப்புக்கு கடிதம் எப்போது ...

காங்கிரெஸ் வாயை அடைக்க இரண்டு மந்திரி போதும்.

புலியூரான் "ராஜா" said...

எவ்வளவோ பண்ணிடோம் இதையும் பண்ணமாட்டமா?
"தமிழகத்தின் ஒபாமா" அண்ணன் "இளைய தலைவலி" ச்ச்சீ "இளைய தளபதி" விஜய் கண்டிப்பா அமெரிக்க ஜனாதிபதியா வருவாருங்க....

Anonymous said...

திமுக அழைப்பு விடுத்தால் ஐந்து தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தயாராக இருப்பதாக மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்யுமாறு திமுக சார்பிலிருந்து அழைப்பு வந்தால் அதனை ஏற்றுக்கொண்டு பிரச்சாரம் செய்வதற்கு தயாராக இருக்கிறேன். என்னுடைய தேர்தல் பிரச்சாரம், அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பை மையமாக கொண்டிருக்கும். தேர்தலை புறக்கணிப்பது என்பது ஜனநாயக விரோதமானது என்பதை மக்களிடம் எடுத்துரைப்பேன்.மக்கள் சேவையாற்றுவதே முக்கியம். தேர்தலை புறக்கணிப்பது தவறு. மேலும் வாக்குப்பெட்டிகளை பயன்படுத்த வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு கூடாது என்று சொல்லப்படுவதையும் எதிர்த்து பிரச்சாரம் செய்வேன். தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன என்று ஆராய வேண்டுமே தவிர, கருவி மீது பழிபோடக்கூடாது.


தேர்தலில் ஓட்டு அளித்து நமது கடமையை நிறைவேற்றாவிட்டால் அரசிடம் நமது உரிமையை கேட்க முடியாது.

2001 தேர்தலில் வெற்றிபெறும்போது மட்டும் மின்னணு வாக்குப்பதிவை ஏற்றுக்கொள்ளலாமா? இதுதொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்வேன்.விலகுபவர்கள் வெற்றி பெற முடியாது. வெற்றி பெறுபவர்கள் விலக முடியாது என்று பழமொழி உண்டு. அதிமுக தனது நிலையை மாற்றாவிட்டால் வெற்றி என்பது கானல் நீராகிவிடும் என்றார்.

Source: Nakkherean

Krishna said...

The way of approach towards his politics doesn't seems to be rough as that of Mr.Karuppu MGR or TR... It is very clear that his each and every step in politics needs to be victorious.. So, despite those discourages and some false rumours by some of the anti-vijay groups, his march is really indicating the prowls of lion nearing the politics den.. No matter he succeeds in that, but for sure he s gonna spread an alarm to the current politic 'mallu vaeti minors' in the mere future.. The trend setting movies have changed the taste of our tamilans but we ourselves know how far we have enjoyed the commercials from both AJITH & VIJAY... So, really as a fan of commercial movies i hope vijay would prove himself again in the box-office.. Wishing him to become the "BAADSHAH OF POLITICS" too..

Padmanaban said...

His confirmations in politics has been a flawless for many.. But for sure, he s spreading waves through this announcement.. Hope these are true, but are not volatile as the words of superstar.. Now-a-days, many trend setting movies have changed our tastes entirely.. But never forget that how far we have whistled for our yesteryear superstars for their masala movies.. But soon VIJAY would let himself out of his commercial tracks.. He is undergoing a facial make over for his 51st film, yetto be directed by Raja of Jayam fame..(Least that should be an original from Raja!!!!) His entry to the politics as not as rough as Vijayakanth and TR did.. But he is very well focussed about his plans than his films... So, the probability level is high such that he is gonna hit the bulls-eye for sure... Hope he would succeed, without lot of critics in this attempt..

Padmanaban said...

As his entry is not that of Vijayakanth and TR, it is sure that he is well focussed with his entry to the politics.. His steps towards this den, has been a lot cared, and the fan strength would likely tighten his grip towards this... Moreover, films are nowhere linked to politics.. Rather than fan following none holds him as a support.. So, if every thing goes right, surely he s gonna hit bulls eye.. But, some anti-vijay personalities, who are either uninterested or jealous of his entry are creating unwanted rumours.. No matter, he succeeds or fails in this attempt but for sure, he s the young commander for many of the youths still now..

Anonymous said...

To vijay supporters...
You people think he is entering into politics to serve people....I really pity you...No doubt that Vijay and his father know all about Cine field and how to hold their market.... These people saw what Rajni Kanth did...Rajni created hype and holding his fan base up until now...So they want to do the same... They want to show a mass behind them and want to extract more money from the film producers…that's all they do...
"Ivaru paiyana nadikka vachu ezhuchi undakinarama?"...Ivarellam oru allu...paiyana vachu edutha padatha ellam mothalla kudumbathoda ukkanthu pakka mudiyuma...Kedu ketta janmanga...

thanmanathamizhan sonna maathiri..mothalla thanoda muzhu pera Padathula poda sollunga appram katchi arambichu natta pudikalam...

Anonymous said...

Joseph Vijay ah oru padathulayavathu Jesus Christ ku munnadi oru kuthu pattu ku dance ada sollunga pa...

Baski said...

தானும் நல்லது செய்ய மாட்டான். மத்தவன் முயற்சி செய்தாலும் குறை சொல்லுவான்.

ரஜினி மாறி "ஆளை விடு சாமி" என்பவரை இம்சை பண்ணி கட்சி ஆரம்பிக்க கேட்ப்பான்.

இது நம்ம ஊரு குணம். ஒன்னும் பண்ண முடியாது.

எடுத்த எடுப்பிலேயே விஜய்க்கு எதிர்ப்பு ஏன்?
இது பேராசையா? என்னையா இது?

எல்லாரும் சொறி பிடிச்ச நாய் மாறி, சொங்கியாக ஓரம் உட்காந்தால் உங்களுக்கு சந்தோசமோ ?

போக்கிரிக்கு அப்புறம் படம் ஓடலைனா கட்சி ஆரம்பிக்க கூடாதா?

"ஜோசப் விஜய்" தான் அவர் பெயர், இத சொலதுக்கு என்ன தில் மயிறு வேண்டிருக்கு? அவர் ஒன்னும் பேரு மாத்திகலேயே?

கண்டிப்பாக எல்லோரும் அரசியலுக்கு வரணும். அதற்க்கு பிரபலங்கள் முன்னோடிகளாக இருக்க வேண்டும்.

அது
கலாம் அவர்கள் என்றாலும்,
நாராயண முர்த்தி என்றாலும்,
விஜயகாந்த் ஆனாலும்,
விஜய் ஆனாலும் ,
வடிவேலுனாலும்
ராமரஜனாலும்,
இட்லிவடை, மானஸ்தன், வால், காமேஷ், யாரா இருந்தாலும் சரியே!

விஜய் இந்திய குடிமகன், கட்சி ஆரம்பிக்க போறார். என்ன பண்ணுகிறார் என தான் பார்ப்போமே?

அவர் கட்சி ஆரம்பிச்சது தப்புனா, எந்த கட்சியில் சேர்ந்தால் உங்களுக்கு சந்தோசம்.?

இப்போ கட்சி என்பது தனியார் நிறுவனம் ஆகிவிட்டது. புள்ளை, பேரங்கள் மட்டும் தான் கட்சியின் முடிவு செய்ய முடியும். இது எங்க அப்பன் சொத்து என வழக்கு போட்டாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

அதாற்பட்ட அன்பழகன், ஆற்காட்டார் என பலர் அடி பட்டு விட்டார்கள். ஓரம் ஒதுங்கி விட்டார்கள். இனி அவர்கள் தனி கட்சி அரம்பிப்பதெல்லாம் முடியாத காரியம்.

இந்த மாறி இருக்கும் ஒரு சூழ்நிலையில் பிரபலங்கள் கட்சி ஆரம்பிப்பது தப்பே கிடையாது. அவர்களுடைய கொள்கைகளை பாப்போம். பிடித்திருந்தால் வோட்டு. அவ்ளோ தான் மேட்டர்.

மட்டமான அரசியல்வாதிகளை அப்படியே ஓரம்கட்டி., புதியவர்களுக்கு (நல்ல மக்கள் சேவை செய்யும்) வாய்ப்பு கொடுத்தால் ஓரளவுக்கு போட்டி இருக்கும். நாடு உருப்பட ஒரு வாய்ப்பு இருக்கும்.

இல்லாட்டி ஜெ ஜெ விற்கும் , மு.க விற்கும் போட்டி வைத்து "யாரு நல்ல பிரியாணி போடுகிறார்கள்" என வேண்டுமானால் பார்க்கலாம். நடுவில் மருத்துவர், குருமா என சில கழிசடைகள் வந்து இவர்களுக்கு தூபம் இட்டு வாழ்வார்கள். நாடு உருப்படுமா? கஷ்டம் தான்.

போதும் இந்த திராவிட/ ஜாதி கட்சிகள், புதியவர்களுக்கு வாய்ப்பு தரலாமே.

Rahul said...

/****போதும் இந்த திராவிட/ ஜாதி கட்சிகள், புதியவர்களுக்கு வாய்ப்பு தரலாமே.****

இப்படி தான் கர்ம வீரரிடம் இருந்து ஆட்சியை கல(ழ)கத்திடம் ஏமாந்தனர்(கொடுத்தனர்) முட்டாள் மக்கள். கர்ம வீரர் என்றால் யார் என்று தெரியுமா உங்களுக்கு??? நாமெல்லாம் இன்று இதை எழுத அவரும் ஒரு காரணம்..... வரப்போகும் பேயை (விஜய், விஜயகாந்த், சரத்) விட இருக்கும் மிருகங்களே பரவாயில்லை, இருக்கும் மிருகங்களை விட வரப்போகும் பேயே பரவாயில்லை... என்று பிதற்ற வேண்டியதுதான் நம் மக்கள்..... விதி வலியது........

Rahul said...

/****தானும் நல்லது செய்ய மாட்டான். மத்தவன் முயற்சி செய்தாலும் குறை சொல்லுவான்.

மட்டமான அரசியல்வாதிகளை அப்படியே ஓரம்கட்டி., புதியவர்களுக்கு (நல்ல மக்கள் சேவை செய்யும்) வாய்ப்பு கொடுத்தால் ஓரளவுக்கு போட்டி இருக்கும். நாடு உருப்பட ஒரு வாய்ப்பு இருக்கும்.
****/


Are you talking about actor vijay????If yes then my humble request please consult a psychiatrist!!!!!!

ந.லோகநாதன் said...

ஒண்ணும் பணண முடியாது..

kggouthaman said...

எது எப்படியோ -
இட்லி வடை ஒரு கட்சி
ஆரம்பித்தால் - அறுநூற்றுக்கும்
மேற்பட்ட உறுப்பினர்கள் தயார். நான் நிச்சயம் ஒரு 'வட்ட' செயலாளர்!

Baski said...

//வரப்போகும் பேயை (விஜய், விஜயகாந்த், சரத்) விட இருக்கும் மிருகங்களே பரவாயில்லை, இருக்கும் மிருகங்களை விட வரப்போகும் பேயே பரவாயில்லை//

வரபோகிறவர்கள் எல்லாம் பேய்கள் என்பது உங்கள் மட்டமான கற்ப்பனை. எனக்கு அப்படி தோன்றவில்லை. Baseless assumption.

//
Are you talking about actor vijay????If yes then my humble request please consult a psychiatrist!!!!!!
//

என்னோட பின்னூட்டத்தை முழுசா படிச்சிருந்தா இந்த கேள்வி வந்துருக்காது. எனக்கு அட்வைஸ் பண்ணறது இருக்கட்டும் முதலில் உங்களை முழுசா குணபடுதிட்டு பின்னாடி மத்தவங்களுக்கு சொல்லவும்.

//
Rajni created hype and holding his fan base up until now...So they want to do the same...
//
ரஜினி ஒருபோதும் கட்சி ஆரபிப்பேன் எனவோ , அரசியலில் இறங்குவேன் என்றோ சொன்னதில்லை (என்னக்கு தெரிந்த வரை). விஜய் என்ன சொல்லிருக்கிறார் என்பது தான் இந்த பதிவு.

அரசியல்வாதிகளை உங்கள் வீட்டு வேலைக்காரன் மாறி பார்க்கவும். ஒழுங்கா இருந்தால் வேலை. இல்லாட்டி துரத்தி அடியுங்கள். அது தான் நல்ல ஆரோகியமான அரசியலுக்கு உதவும். நாம் ஏன் இரண்டு வேலைக்காரர்களை மட்டும் நம்பி இருக்க வேண்டும் என்பது என் வாதம்.

நல்லா துணி துவைகிராரா?
நல்லா வீடு கழுவுகிறாரா?
ஒழுங்காக நேரத்திற்கு வருகிறாரா?
வேலைகளை வேகமாக செய்து முடிககிறாரா?

இது போல், அரசியல்வாதிகளிடம் உள்ள நமக்கு உபாயோகமான ஒரு வேலைக்காரனை தேர்ந்தெடுக்கணும் என்பது என் கருத்து.

சினிமா அவருடைய தொழில். அந்த தொழிலில் அவர் செய்தது என்னவாக இருந்தால் என்ன?
மக்கள் சேவை (!) என அவர் என்ன செய்கிறார் என பார்க்கலாம்.

கலைஞரையும் , ஜெ ஜெ வையும் இப்படி தேர்ந்தெடுத்து நாம் தானே?
"எவளவு அடித்தாலும் தாங்குறான், இவன் ரொம்ப நல்லவன்டா" என இந்த 'தலை'கள் நம்மை பார்த்து சொல்லற அளவுக்கு நிலைமையை கொண்டுவந்தது நாம் தானே?

அப்பப்ப ஆப்பு அடித்திருந்தால் ஒழுங்காக இருந்திருப்பார்களோ ?

புலியூரான் "ராஜா" said...

//அப்பப்ப ஆப்பு அடித்திருந்தால் ஒழுங்காக இருந்திருப்பார்களோ ?//
விஜய் வந்து ஆப்பு அடிபாருன்னு சொல்லுறீங்களா!!௧
ஆப்பு வாங்காம இருந்தா சரி...
யார் யார் அரசியலுக்கு வரணும்னு ஒரு விவஸ்தை வேண்டாம்?
நடிக்கவே தெரியாம நாலு நாள் கக்கூசு போகாத மாதிரி கடுப்ப மூஞ்ச வட்சிகிட்டு காதல யூஸ் பண்ணிக்கிட்டு வெட்டி வசனம் பேசி சின்ன பசங்கள ஏமாத்தி காசு சம்பாதிசவநேல்லாம் அரசியலுக்கு வந்தா என்ன பண்ணுவானுக?

Anonymous said...

/****ரஜினி ஒருபோதும் கட்சி ஆரபிப்பேன் எனவோ , அரசியலில் இறங்குவேன் என்றோ சொன்னதில்லை (என்னக்கு தெரிந்த வரை). விஜய் என்ன சொல்லிருக்கிறார் என்பது தான் இந்த பதிவு.****/

If you take Rajini as a refrence then there is no meaning to argue with you. Some times (not some very few times) vijay is better than rajini in social activities ...

Baski said...

//யார் யார் அரசியலுக்கு வரணும்னு ஒரு விவஸ்தை வேண்டாம்?//

அப்படி ஒன்னும் விவஸ்தை தேவை இல்லை. கிரிமினல் கேஸ் ஒன்னும் விஜய் பெயரில் இல்லை.


// நடிக்கவே தெரியாம நாலு நாள் கக்கூசு போகாத மாதிரி கடுப்ப மூஞ்ச வட்சிகிட்டு காதல யூஸ் பண்ணிக்கிட்டு வெட்டி வசனம் பேசி சின்ன பசங்கள ஏமாத்தி காசு சம்பாதிசவநேல்லாம் அரசியலுக்கு வந்தா என்ன பண்ணுவானுக?//

இது உங்கள் கருத்து. நீங்கள் அவரை இந்த காரணத்தினால் நிராகரிக்கலாம். நான் என்ன சொல்ல இருக்கு.

. அந்த ஆளு முஞ்சி எப்படி இருந்தால் என்ன. சினிமா ஒரு பொழுது போக்கு விஷயம். அது அவர் தொழில். நீங்க அடிப்படை இல்லாமல் சொல்ல்ரீங்கனு தான் எனக்கு தோணுது.


என்னுடைய கருத்து படி,
. நம்ம ஊரில் எளிதாக அரசியலில் சாதிக்க முடிந்தவர்கள் சினிமா மக்கள் மட்டுமே.
இது ரொம்ப வருத்த பட வேண்டிய விசயம் தான். ஆனால் நம்ம மக்களுக்கு நம்பிக்கை ரொம்ப கம்மி. கொஞ்சம் முன்னாடி படம் போட்டிருக்கணும். அப்ப தான் டெபொசிட் தேறும்.

சேவை செய்ய மனம்(?) இருந்தால் நீங்கள்/நான் கூட கட்சி ஆரம்பிக்கலாம். மக்களை உங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைக்கணும். This is easy for cine-star's.


அப்புறம் உங்களுக்கு ஓட்டு போட அவர்களுக்கு நம்பிக்கை வர வைக்கணும். Not that easy.

But, இப்ப இருக்கிற மட்டமான ஆட்சி/கட்சிகளுகிடையே இது ரொம்ப நல்ல சந்தர்பம்.

Anonymous said...

//"நான் நிச்சயமாக அரசியலுக்கு வரமாட்டேன். ஏனென்றால் எனக்கு பொய் பேச தெரியாது " என்று தனது அரசியல்பிரேவசம் குறித்து நேரடியான, தெளிவான பதில் தந்தார் அஜித்//

Thala pol varuma????


// நடிக்கவே தெரியாம நாலு நாள் கக்கூசு போகாத மாதிரி கடுப்ப மூஞ்ச வட்சிகிட்டு காதல யூஸ் பண்ணிக்கிட்டு வெட்டி வசனம் பேசி சின்ன பசங்கள ஏமாத்தி காசு சம்பாதிசவநேல்லாம் அரசியலுக்கு வந்தா என்ன பண்ணுவானுக //

ahh.. WELL SAID MR.RAJA

shiva said...

// velan said...
செம மாஸ் பதிவு idly vadai .....//

you are absoultly corret
and Inba becomes star writer for IV

Srinivas said...

Inba, Your writing is nice. Keep write about different topic.

Srinivas