பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, August 30, 2009

சண்டேனா இரண்டு (30-08-09)- செய்தி விமர்சனம் - இன்பா

இந்த வார இரண்டு செய்திகளை அலசுகிறார் இன்பா!

இந்த வார செய்திகள் இரண்டு..

செய்தி # 1

இந்த முறை எந்த பெண்மணி(!?) என்ன சொன்னாரோ தெரியவில்லை...இடைதேர்தல் முடிவுகள் குறித்து அண்ணன் இட்லிவடை பதிவு எதுவும் போடவில்லை. நானும் அதை பற்றி இங்கே எதுவும் எழுத போவதுஇல்லை.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் அவர்களின் ஒரு அறிக்கை குறித்துதான் பேசபோகிறோம்.

நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஹிந்தி கற்பிக்கப்பட வேண்டுமென்று அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். தேசிய மொழியை அனைவரும் அறிந்திருக்கும் போது நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எளிதில் ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தில்லியில் நடைபெற்ற உயர்கல்வி வாரியக் குழு கூட்டத்தில் பேசிய அவர் மேலும் கூறியது:

அனைத்து மாநிலங்களிலும் பிராந்திய மொழியுடன் தேசிய மொழியான ஹிந்தியும் கற்பிக்கப்பட வேண்டும். பல மாணவர்கள் தங்கள் தாய் மொழியில் புலமை வாய்ந்தவர்களாக உள்ளார்கள். ஆனால் பிற மாநில மொழிகளையும் கற்றுக் கொள்வதன் மூலம்தான் அவர்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்று வெற்றிகரமாகப் பணியாற்ற முடியும். முக்கியமாக தேசிய மொழியான ஹிந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சிந்திக்கும் திறனை வளர்க்கும் வகையில் நமது கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். தற்போது நாம் அறிவைத் தேடிப் பெறுபவர்களாக இருக்கிறோம். எதிர்காலத்தில் அறிவின் உற்பத்தித் தளமாக இந்தியா மாற வேண்டும். நம்மிடம் இருந்து வெளிநாட்டவர் கற்றுக் கொள்ளும் நிலை வர வேண்டும்.

வட மாநிலங்களுக்கு வரும் பிற மாநில மாணவர்களால் சரளமாக ஹிந்தி பேச முடிவதில்லை. ஆனால் அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறார்கள். எனவே நமது நாட்டுக்குள் முக்கியத் தொடர்பு மொழியாக இருக்கும் ஹிந்தியை அனைத்து மாணவர்களும் அறிந்திருப்பது அவசியம். ஹிந்தியை அனைவருக்கும் கற்பிக்க நடவடிக்கை எடுக்க இதுதான் சரியான தருணம் என்று கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

இதை படித்துவிட்டு உடனே பஸ்ஸை உடைக்காமல், நம் அரசியல்தலைவர்கள்/தமிழ் இன உணர்வாளர்கள் வழக்கம்போல எதையாவது உணர்ச்சிகரமாக பேசி, அப்பாவி தொண்டர்களை தீக்குளிக்க வைக்காமல்... சற்று நிதானமாக சிந்திக்க வேண்டும்.

வடமாநிலம் ஒன்றில் ஒரு கம்ப்யூட்டர் பயிற்சிக்கு சென்ற நான், ஹிந்தி தெரியாத காரணத்தால் எந்த அளவுக்கு மண்டை காய்ந்தேன் என்று எனக்குதான் தெரியும்.

இந்தியா போன்ற மிக பெரிய நாட்டில், ஆங்கிலம் தவிர, பொதுவான ஒரு மொழி அவசியம் என்று கருதுகிறேன். அதே சமயம், கட்டாயத்தால், பிற மொழிதிணிப்பாக இல்லாமல் விருப்பத்தின் பெயரில், ஹிந்தியை எல்லா பள்ளிகளிலும் கற்பிக்கலாம்.

அனைத்து பள்ளிகளிலும், தமிழ் கட்டாயபாடமாகவும், ஹிந்தி போன்ற பிற மொழிகள் விருப்பபாடமாகவும் இருத்தல் நல்லது. 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடுவதற்கு மாற்று மொழிகள் தெரிந்துஇருக்க வேண்டும்தானே?

'உலக தமிழர்களின் தலைவரே', தனது பேரனை ஹிந்தி படிக்கவைதுதானே மத்திய அமைச்சர் ஆக்கிஇருக்கிறார்.

தமிழ் நமது உயிராக இருக்கட்டும். ஹிந்தி போன்ற மொழிகள் அவ்வப்போது
நாம் அணியும் ஆடைகளாக இருக்கட்டும்

செய்தி # 2

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சொத்துக்கணக்கை காட்டவேண்டும் என்ற சட்டத்தின்படி எதோ கணக்கு காட்டுகிறார்கள். ஆனால், இந்த சட்டம் ஏன், எதற்கு என்று எனக்கு தெரியவில்லை. அந்த விவரங்களை வைத்து என்ன செய்வது? ஒரு குறிப்பட்ட தொகைக்குமேலே சொத்து இருந்தால் 'மக்கள் சேவை செய்ய லாயக்கு இல்லை' என்று எதாவது சட்டம் வந்தால் நல்லது.

அரசியல்வாதிகளையும், சினிமாகாரர்களையும் பற்றி பதிவுகள் போட்டு எனக்கே 'போர்' அடித்த நிலையில், சிப்பிக்குள் முத்தாக அவர் தெரிந்தார். 'தமிழன்' என்று சொல்லி தலை நிமிர வைத்திருக்கும் அவர் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் நீதிபதி கே.கண்ணன்.

அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடும் போது, தங்களின் சொத்து விவரங்களை வெளியிடுகின்றனர். அதேபோல், நீதிபதிகளும் தங்களின் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை சமீபகாலமாக வலுத்து வருகிறது.பிரபல சட்ட நிபுணரான பிரசாந்தி பூஷன், பல்வேறு மாநில ஐகோர்ட்டுகளில் பணியாற்றும் 600க்கும் மேற்பட்ட நீதிபதிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், "நீதிபதிகள் அனைவரும் தானாக முன்வந்து சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.சமீபத்தில், பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதிய கர்நாடக ஐகோர்ட் நீதிபதி சைலேந்திர குமார், "ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பதவி வகிப்போர் தங்களின் சொத்து விவரங்களை அறிவிக்க தயாராக இல்லை. அதேபோல், நீதிபதிகளின் சார்பாக பேச தலைமை நீதிபதிக்கு எந்த அதிகாரமும் இல்லை' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், பிரசாந்தி பூஷனின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில், பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் நீதிபதி கே.கண்ணன், தன் சொத்து விவரங்களை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.தன் பெயரில் வங்கியில் 1.03 லட்சம் ரூபாய் டிபாசிட், 3.87 லட்சம் ரூபாய்க்கு முதலீட்டுப் பத்திரங்கள், மனைவி பெயரில் 10.59 லட்சம் ரூபாய் டிபாசிட் உள்ளது என கூறியுள்ளார்.

சொத்து விவரங்களை இணையதளம் மூலமாக வெளியிட்ட அவர் கூறியுள்ளதாவது: நீதித்துறையில் ஊழலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள செயல்பாட்டு முறை சரியில்லை எனில், புதிய அமைப்பு முறை ஒன்றை உருவாக்க வேண்டும். நீதிபதிகள் தேர்வு மற்றும் நீக்கம் தொடர்பாகவும் விதிமுறைகளை இயற்ற வேண்டும்."நீதிபதிகள் தங்களின் சொத்து விவரங்களை தானாக முன்வந்து வெளியிட வேண்டும்' என்ற, நிர்பந்தம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதனால், "சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்' என்பது போல, நீதிபதிகளும் தங்களின் சொத்து விவரங்களை வெளியிட்டு நேர்மையை வெளிப்படுத்த வேண்டும்.பொதுவாக தகவல் உரிமைச் சட்டப்படி விவரம் கேட்கலாம் என்றாலும், அதை தேசியப்பிரச்னைகள் மற்றும் நிர்வாகம் சம்பந்தமானவற்றிற்கு பயன்படுத்தலாம். இந்த விஷயத்தையும் சேர்த்து அதிக சுமையாக்க வேண்டாம்.நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைக்கு, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதிகள் இருவர் உட்பட பல முன்னாள் நீதிபதிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தலைமை நீதிபதி தகவல்: இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியதாவது:நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்பதை நான் எதிர்க்கவில்லை. அதை அவர்கள் தானாக முன்வந்து செய்ய வேண்டும். "அனைத்து நீதிபதிகளின் சார்பாக பேச எனக்கு உரிமையில்லை' என, கர்நாடக ஐகோர்ட் நீதிபதி சைலேந்திர குமார் கூறியுள்ளார். அது சரியல்ல. அனைத்து நீதிபதிகள் சார்பாக பேச எனக்கு உரிமையுண்டு. பல நாடுகளின் நீதித்துறையில் இந்த நடைமுறை உள்ளது.நீதித்துறையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு உண்டு. அதனால், நீதிபதிகள் சொத்து விவரங்கள் வெளியிடுவது தொடர்பாக நான் ஏற்கனவே தெரிவித்த கருத்துக்களில் உறுதியாக இருக்கிறேன். நீதிபதிகள் தானாக முன்வந்து சொத்து விவரங்களை அறிவித்தால், அதை யாரும் தடுக்க முடியாது. நானும் தடுக்க முடியாது.அதே நேரத்தில் சட்டம் ஒன்று இயற்றப்பட்டால், அனைவரும் சொத்து விவரங்களை வெளியிடுவர். சட்டம் இல்லாததால், இந்த விவகாரத்தில் நீதிபதிகள் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. ஒருமித்தக் கருத்தை உருவாக்க வேண்டியது அவசியம்.இவ்வாறு தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.


அண்டை நாடான இலங்கையில் நிறைவேற்றப்பட்ட, "சொத்துக்கள் மற்றும் கடன் விவரங்களை அறிவித்தல் சட்டம் 1975'ன்படி, நீதிபதிகள் தங்களின் நியமனத்தின்போது சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும். நீதித்துறையில் ஊழல் நிலவுவதாக தொடர்ச்சியாக வந்த புகாரை அடுத்து, ஆப்ரிக்க நாடுகள் பலவற்றிலும், நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிடுவதை கட்டாயமாக்கும் சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது.இவ்வாறு நீதிபதி கண்ணன் கூறியுள்ளார்.

பாரதியின் பாணியில் சொல்வதானால், கண்ணன் ஒரு முன்னுதாரணம்.

30 Comments:

யதிராஜ சம்பத் குமார் said...

கபில் சிபல் "சிலசமயம்" யதார்த்தமான விஷயங்கள் கூட பேசுகிறார்.

யதிராஜ சம்பத் குமார் said...

\\\ஒரு குறிப்பட்ட தொகைக்குமேலே சொத்து இருந்தால் 'மக்கள் சேவை செய்ய லாயக்கு இல்லை' என்று எதாவது சட்டம் வந்தால் நல்லது.///


இதெல்லாம் நடக்கிற கதையா?? அப்படியே வந்தாலும் அடுத்து வருகின்ற ஆட்சி அதில் சட்டத் திருத்தம் கொண்டு வருவார்கள். தவிர, இப்பொழுது நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிடுவதால் என்ன நேர்ந்து விடப் போகிறது??

கிருஷ்ணமூர்த்தி said...

கீதை சொன்ன கண்ணன் முதல் பல கண்ணன்கள் நிறைய விஷயங்களில் முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு முனைவர் நா.கண்ணன்! கொரியாவில் இருந்துகொண்டு நம்மாழ்வாருடைய திருவாய்மொழியையும் அனுபவித்துப் பதிவுகள் எழுதுகிறார். புவியன்புமடல் என்ற பெயரில் சுற்றுச் சூழல்மாசுபடுவதைக் குறித்த தனது கவலைகளை மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்திலும் தொடர்ந்து விழிப்புணர்வூட்டும் வகையில் எழுதுகிறார். தமிழ் மரபு அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம், ஓலைச் சுவடிகள், பழைய நூல்களை கணினிமயமாக்கிக் காப்பாற்றும் முயற்சியிலும் செயல்படுகிறார்.

இன்றைக்கு, மயிலை கற்பகாம்பாள் நகரில், கே என் ஷண்முகசுந்தரம் அரங்கில் மதியம் இரண்டு மணிக்கு, தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒன்பதாவது பிறந்த நாள், மரபுப் பெருநாளாக நடக்கிறது.

பஸ்ஸை எரிக்கிற தியாகிகளைப் பற்றியோ, கப்பில்சிப்பில் மாதிரி வாய்ச் சொல் வீரர்களைப் பற்றியோ பேசிக் கொண்டிருக்காமல்,இது அரசு ஓட்டுக்காக நடத்துகிற நமக்கு நாமே என்றில்லாமல், தனிநபர்களாலும் ஆர்வமிருந்தால் சாதிக்க முடியும் என்று எட்டு ஆண்டுப் பணியை முடித்து ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நல்ல சேதியையும் இன்பா, கொஞ்சம் இன்பமாகவே சொல்லலாமே!

சென்னையில் இருப்பவர்கள் கொஞ்சம் எட்டியும் பார்த்து, என்ன தான் செய்கிறார்கள் என்று பார்க்கலாமே!

jaisankar jaganathan said...

//வடமாநிலம் ஒன்றில் ஒரு கம்ப்யூட்டர் பயிற்சிக்கு சென்ற நான், ஹிந்தி தெரியாத காரணத்தால் எந்த அளவுக்கு மண்டை காய்ந்தேன் என்று எனக்குதான் தெரியும்.
//
எல்லோரும் என்னை கலாய்க்க நான் ஜோக்னு நினைச்சு சிரிச்சுக்கிட்டே இருந்தேன். இப்ப நினைச்சாலும் அவனுங்களை உதைக்கலாம்னு தோனுது

kggouthaman said...

இரண்டு செய்திகளுமே - சிந்தனைக்கு உரிய விஷயங்கள்.
#1 - Cheap popularity யை கருத்தில் கொண்டு அரசியல் வியாதிகள் - மொழிப் பிரச்சினைகளை பெரிது படுத்தி குளிர் காயாமல் - 'நீக்குப் போக்கு' டன் நடந்து கொள்ளுதல் நலம்.
#2 - சொத்து விவரங்கள் - இரண்டு முறைகள் வெளியிட்டால் - நன்றாக இருக்கும் - ப.மு & ப.பி
பதவி ஏற்பதற்கு முன் & பதவி ஓய்வுக்குப் பின்.

RAD MADHAV said...

Pls remove yr comment moderation.
In your prev. post 2 of my comments are on hold. Is anything wrong??? :-))

Ravi said...

hats off to Mr.Kannan


vibuthi manam - variyar swamigal post is superb
im reading again and agian that post

like this
aanmigam ezhuthunga Inba

சூத்திரன் said...

இன்பாவின் பூணூல் ஆடுகிறது.

கண்ணன் ஒரு பார்ப்பானர்.

ஆனால், பாலகிருஷ்ணன் ஒரு சூத்திரர். திராவிடர் முன்னேற்ற கழகத்தின் ஆட்சியின்போது நீதிபதி பதவி பெற்றவர்.

அதனால்தான் கண்ணனைப் பாராட்டும் இன்பா, சூத்திரரான கோபால கிருஷ்ணனின் படத்தையும் பக்கத்தில்போட்டு “அவாள்” வேலையைக் காட்டியிருக்கிறார்.

டன்மானடமிழன் said...

திராவிட திருடர்களை
பகுத்தறிவு பரதேசிகளை
ஆதரிக்கும் வரை
தமிழன் தலைநிமிரவே முடியாது

சீனு said...

From my advocate friend I came t know that K.G.B has registered around Crores in tens for a building on Mylapore. I do not know whether it is a hoax or not.

Anonymous said...

***சூத்திரன் said...
இன்பாவின் பூணூல் ஆடுகிறது.***

மூணா ஆறான்னு கண்டு பிடிச்சு சொல்லுங்க சூத்திரன்.

மூணு எனும் பட்சத்தில் என்னோட மூணாவது பொண்ண கல்யாணம் பண்ணிக் கொள்வாரா என்று கேட்கணும்.

ரொம்ப நல்லா எழுதறார்.

ஸ்ரீராம். said...

இந்த சொத்துக் கணக்கு காட்டும் வேலை வேலை இல்லாத வேலை. அவர்கள் சொன்ன பிறகு கூட யார் போய் இதை எல்லாம் ஆராயப் போகிறார்கள்? தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து கூட அவர்களுக்கு விலக்கு கேட்டார்கள் என்று நினைவு.

மு.க said...

அது சரி, வேலைக்காக வட மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வருபவர்களுக்காக அங்கே தமிழ் கற்பிப்பார்களா?

This is a slippery slope. இன்றைக்கு optional என்பீர்கள், நாளை ”எல்லோரும் விரும்புவதால்”, கட்டாயம் என்பீர்கள், மறுநாள் ஹிந்தி மீடியம் என்பீர்கள். மைனாரிட்டி மொழிகளுக்கு சட்டப்பாதுகாப்பு இல்லாவிட்டால், இலங்கை நிலைதான்.

PITTHAN said...

வடையை, மசாலா தொசை ஆக மாற்றவேண்டும். அது எப்பிடி எல்லாரும் ஹிந்தி,ஃப்ரென்ச்,ஆங்கிலம் படிச்ச எங்க கட்சிக்கு இளிச்ச வாயங்கள் வேண்டாமா.
நாலும் கத்துகொண்டு அறிவு வந்துருச்சுனா அப்புறம் பொதுக்கூட்டம்,போரனிக்கு யார் வருவா, படிக்காத முட்டாள் பையங்கள் இருக்க வரைக்கும், நாங்க தமிழ் வளர்ப்பம்(அதாது என் பையன் பொயர்), ஹிந்தி வேண்டாம் அனால் அங்க பதவி மட்டும் வேண்டும்.

அமுதப்ரியன் said...

நீண்ண்ண்ண்ண்டடடட நாட்கள் கழித்து அமுதப்ரியன்.

-----------------------------------
[1]
செய்தி: இதை படித்துவிட்டு உடனே பஸ்ஸை உடைக்காமல், நம் அரசியல்தலைவர்கள்/தமிழ் இன உணர்வாளர்கள் வழக்கம்போல எதையாவது உணர்ச்சிகரமாக பேசி, அப்பாவி தொண்டர்களை தீக்குளிக்க வைக்காமல்... சற்று நிதானமாக சிந்திக்க வேண்டும்.
பதில்: நல்லா சொன்னேள் போங்கோ. நம்ம தலைவர்களுக்கு பிழைப்பு நடக்க வேண்டாமா? ஒரு தலைவரின் மகனின்[LOVE சம்பந்தப்பட்ட] வாரிசுகள் இரு குழந்தைகளுமே தமிழை மூன்றாம் மொழியாகத்தான் கற்கின்றனராம்.

[2]
செய்தி:பாரதியின் பாணியில் சொல்வதானால், கண்ணன் ஒரு முன்னுதாரணம்.
பதில்:தமிழனாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன்.

-----------------------------------

லவ்டேல் மேடி said...

அய்யய்யோ.....! வட போச்சே....!!

jaisankar jaganathan said...

//இன்பாவின் பூணூல் ஆடுகிறது.
//

தல ஒரு செய்தில ஏன் ஜாதிய பாக்குறீங்க

naan kadavul said...

acha bakuth acha

naan kadavul said...

acha bakuth acha

Anonymous said...

HI Every one,
Hindi is very Important,
be logic & pratical,all politician & family knows hindi very well,not only in North india,every part of world hindi can speak,so ignore the dirty politicians and try to learn,.
thanks
KK

Anonymous said...

Dear சூத்திரன்,
when ever ignoring bramins,you can not come up,thus why proudly say bhramins getting job private & overses,
and very clear example how our govt Dept??? every where bribe,because of not much bramins,,,so please think before write.
true Bramins.

Anonymous said...

Why don't you publish an article on எண் கணித பிதாமகன் எஸ்.எஸ். பிள்ளையின் நினைவு நாள்.

Some useful pointers:
1. http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0830-ss-pillai-man-of-numbers.html

2. http://www.geocities.com/thangadurai_kr/PILLAI.html

3. http://www.springerlink.com/content/x44k2n75553702h5/

Even, hindu had published an article.

Anonymous said...

கண்ணன்,கே.ஜி. பாலகிருஷ்ணன் ஒரு முன்னுதாரணம்.வாழ்க நீதி.

@@@@@@ எங்கே நீதி @@@@@@

I am very much ashamed of Law and Order in TamilNadu.for Example.

Before 10 years a school girl loved one boy(He is her relational boy). As Girls parents opposed her love, they went out and married in a temple with her lovers relations support.

@@@@@@@
She was not major at the time of marriage.
@@@@@@@

When the Girls family came to know this, they approached police station and gave complaint against this marriage. Police threatened the Girl that they will impression her as she is minor. So after long brainwash she was separated from her lover and lastly they make a complaint with wrong FIR on Boys Relations.
FIR - (CRIMINAL MATTERS - MATTERS RELATING TO SEXUAL HARASSMENT, KIDNAPPING & ABDUCTION )

In each court(Local court, Up to Madras High Court) honorable Judges gave Honorable Judgment "imprisonment of 10 years" to all 6 people for the above love matter.

Now 6 people where in Central Jail for this love matter for last one and half years above !!!
What a Nice Judgment.

@@@@@@@@@@@@@@@@@@@@@@
After separation from her lover, She was compelled to married a Militarily Man. Now they were blessed with lovable 2 sons.
@@@@@@@@@@@@@@@@@@@@@@

After the High Court Judgment(Feb 2008) the girl gave a petition letter, that she was compelled to give FIR like that at that time. Now she request by letter to release her lover and their relations.

##########
இதுவே கிராம பன்சாயத்த இருந்தா

சரி இரண்டு பேரும் மனசாரக் காதல் பண்றாங்க... விடுங்க நல்லா வாழட்டும் என்று ஒரு நாளில் முடித்து வைத்து இருபார்.
#################

இந்தியாவின் இப்போதய நீதி படி

# 10 years of trial ...
More that 10 police to deal this case ...

# Few judges to give judgment ...

# 6 members who loved to make the Love Success, were in mental tension for more than 10 years, spending more than 1000 hours in moving to Court and Police station ...

# 6 members were in Jail for more that 1.5 years leaving their school going child/Wife/Husband in trouble. Family income loss makes their families now in poverty.

# spend more than 10 lacks for lawyers and other expense reg this case, yet not received proper judgment.

நூரு குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்று காந்தி அடிகள் கூறியதை கடைபிடிப்பதாக கூறிகொள்ளும் நமது மக்கள் ஜனனாயக அரசு(நீதி மன்றங்கள்) பின்வரும் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா

Q1: காதல் செய்தவனுக்கும் பத்து வருடம் கடுங்காவல் தண்டனை,
சொந்த பந்தத்தின் நிர்பந்தத்தால் கல்யாணத்தில் கலந்து கொண்டு.. ஒரு வேலை உணவு உண்டாவணுகும் பாத்து வருடம் கடுங்காவல் தண்டனையா ? இது என்ன நீதி ?

ஒரு நிரபராதின் பாவம் உங்களை சும்மா விடுமா நீதி அரசர்களே ...

Q2: இப்படி பட்ட காதல் விவகாரத்தை தாங்கள் பொருள் வளர்க்க, முதலில் பதிவு செய்த காவலர்களே...
உங்களின் Minor மகனோ/மகளோ காதல் செய்தல், பத்து வருடம் கடுங்காவல் தண்டனை உங்களுக்கும் உங்கள் சார்ந்தவருக்கும் கொடுக்கலாமா ...

Q3: இப்பொது இந்த அநீதி வழங்கப்பட்ட ஆறு நபர்களின் குடும்பங்களை சார்ந்தவர்களை யார் காப்பாற்றுவார். அவர்களின் குழந்தைகளின் யார் படிக்கவைப்பார் ? அவர்களின் குழந்தைகளுக்கு எவர் திருமணம் செய்து வைப்பார்/ யார் திருமணம் செய்துகொள்வார் ?

@@@@@@@@@@@@@@
இரண்டு பேரும் மனசாரக் காதல் பண்றாங்க... விடுங்க நல்லா வாழட்டும் என்று முடிக்க வேண்டியதை.
.
.

காவல் நிலையம்/ காவலர்கள்,
வழக்கறிஞர்கள்,
நீதிபதிகள்/ நீதி மன்றம்,
கடும் காவல் தண்டனை, சிறைச்சாலை/ சிறைக்காவலர்..

இதற்கு அரசு செலவிடும் பணம்,
குற்றம் சாற்றபட்டவர்கள் நேர்மையாக உழைத்து சேர்த்த பணம், பத்தாதற்கு கடனாக வாங்கிய நிரபராதி என்று நிருபீக்க அழுத பணம், அவர்களின் பொன்னான நேரம், பொன்னான வாழ்கை, அவர்களின் குடும்பம் ...

வாழ்க நீதி
வாழ்க நீதி
வாழ்க நீதி
@@@@@@@@@@@@@@@@@

இப்படிப்பட்ட வழக்கு பதிவு செய்தால் நீதி மன்றங்களில் வழக்கு தேங்காமல் மணக்குமா ?

Anonymous said...

I hope Tamil Nadu Politicians will not oppose teaching Hindi in our schools..When I was in my primary school I was taught Hindi(for 3 years), but when i switched school I couldn't continue learning Hindi. Even now I can understand Hindi 50% but can't speak. I'm working in US. There are half a dozen Indians(Gujarati, Punjabi, Telugu) working with me...Everybody except me speaks Hindi. One of my colleague(American) seeing me not speaking hindi, asked me how can you say you are an Indian not knowing Hindi.. Even though it is not fair to ask such a question and painful it was, I felt it was right at some point. We agreed "Hindi" is our national language,then why don't we learn it. There is nothing wrong in learning another(our National) language. I really hate being alienated because of the language we (do not) speak.

டகிள் பாட்சா said...

ஏம்பா அனானி

நானும் USதான். சும்மா கத விடாத நைனா! இங்க இந்திய மொழிங்கறது குஜராத்தியும், தெலுங்கும்தானே! இன்னும் கொஞ்ச நாளில் தெலுங்கு 'அமெரிக்க தேசீய மொழியானாலும் மாறலாம். நம்ம ஆட்கள் இன்னொரு தமிழனோட இங்க பேசும்போது கூட ஆங்கிலம்தான். ஆனா நாலு தெலுங்கனுங்க ஒரு ப்ராஜக்ட்ல இருந்தாங்கன்னா, சில சமயம் நாம இருக்கறது USஆ, ஹைதராபாத்தான்னு சந்தேகம் வந்துடுது. சுத்தி இவ்வளவு அமெரிக்கர்கள் இருக்கிறார்களே என்று பார்க்காமல் Cubeல் இருந்தபடியே சத்தமாக தெலுங்கில் பேசுவார்கள்.

இதே மாதிரி American ஒருத்தன் என் கிட்டயும் கேட்டான்.'ஹிந்தியெல்லாம் வடக்கதான். தமிழ்தான் South Indiaவின் மொழின்னு சொல்லிட்டேன்.'
EU இத்தனை மொழிய வச்சுகிட்டு வாழறப்ப நம்மால முடியாதா என்ன!

BTW, Who agreed Hindi is our National Language. May be it one of our.. but not the Only

அடுத்த அனானி said...

சூத்திரன் சார்!
சீக்கிரம் கண்டு பிடிச்சு சொல்லுங்க, மூன்றா, ஆறா என்று. என்னோட பொண்ணுக்கும் கேட்கலாம் என்று இருக்கேன்.

தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும் "அடுத்த அனானி", வாயில் அவலுடன்.

Anonymous said...

Ivanga ellam thirunthavae maatanga..

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15555

Erode Nagaraj... said...

நீதிபதிகள், துணைவேந்தர்கள்... முடியல..

Anonymous said...

To டகிள் பாட்சா,
ithula katha vidarathukku enna irukku.? 4 telugu people iruntha telugula pesuravanga, north indians oda pesumbothu hindi pesuvaanga...that is my point...Telugula pesa kodathu nu sollala...Hindi yum pesa therinjukanumnu sollren...summa kutharkama pesa koodathu..

நாகை சிவா said...

//நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஹிந்தி கற்பிக்கப்பட வேண்டுமென்று அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். தேசிய மொழியை அனைவரும் அறிந்திருக்கும் போது நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எளிதில் ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.//

தேசிய மொழியா இது எப்போல இருந்து? மத்திய அமைச்சர் தான் தவறாக ஒரு செய்தியை குறிப்பிடுகிறார் என்றால் அதை இ.வ. கவனிக்காமல் அனுமதித்தது சரியோ?