பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 27, 2009

இட்லிவடை பதில்கள் - 27-08-09

வந்த கேள்விகளில் 10 கேள்விகளுக்கு பதில் ( சிலர் மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார்கள் ). மீதி கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரிந்தவுடன் போடுகிறேன் :-)

1. இடைதேர்தல் ஓட்டுப் பதிவு அன்று மு.க. உடல்நலம் குறித்த வதந்தி பரப்பியது யாராக இருக்கும்?

டோக்கன் பெறமுடியாத கடுப்பில் வெறுங்கையோடு போனவர்களின் வேலையாக இருக்கலாம்.

2. தி.மு.க வின் பலம் / பலவீனம் ?
அதிமுகவின் பலம் - திமுகவின் குடும்பம்
திமுகவின் பலம் - அதிமுவின்(மன்னார்குடி) குடும்பம்

3. உங்களுக்கு எந்த கட்சி பிடிக்கும் ? உண்மையாக பதில் சொல்லவும் ?

என்ன கேள்வி இது ? V உள்ள கட்சி தான் எனக்கு பிடிக்கும்.

வேகத்துக்கு ஜெ
'வி'வேகத்துக்கு கலைஞர்
தைரியத்துக்கு 'வி'ஜயகாந்த்
அசட்டு தைரியத்துக்கு 'வி'ஜய்

பிகு: கண்களில் கோளாறு உள்ளவர்களுகு இரண்டு விரல்களுக்கு நடுவில் 'V' தெரியும் !

4. கலர் டி.வி. வழக்குல இன்னிக்கு வந்த தீர்ப்பு பற்றி உங்க கருத்து என்ன? வழக்க சரியாய் நடத்தலையா? இல்லை உள்குத்துல விட்டுட்டாங்களா? இல்லை, மெய்யாலுமே ஒண்ணுமே இல்லையா?

திமுக - கொள்ளை அடிக்க திட்டம் போடுவார்கள்.
அதிமுக - போட்ட திட்டதில் கொள்ளை அடிப்பார்கள்.

5. கேள்வி கேட்டா அந்தக் கேள்வி எனக்கு சொந்தமா, உங்களுக்கு சொந்தமா?

பதில் சொன்ன பிறகு கேள்வி பதில் சொன்னவருக்கு சொந்தம். பதில் கேள்வி கேட்டவருக்கு சொந்தம். இந்த பதில் யாருக்கு சொந்தம் ?

6. ஏழைகளுக்கு இலவசமாக டி.வி. தரும் அரசு, உயர் நீதிமன்றம் ஆணை இட்ட பின்பும் இலவசமாக "முகமூடி" வழங்காதது ஏன்?
27-10-2007 அன்று முதல் இன்று வரை முகமூடியுடன் வலம் வரும் இட்லிவடையிடம் தமிழக அரசு எதாவது consult செய்தார்களா?

சில வாரம் முன் என்னிடம் வந்தார்கள், 30 பேர் இறந்து போனதற்கு இலவச முகமூடி கொடுக்கிறீர்கள், அதற்கு பதில் எட்ஸுக்கு நிறைய பேர் இறந்து போகிறார்கள், அவர்களுக்கு இலவச காண்டோம் கொடுங்கள் என்று சொன்னேன்.

7. இட்லிவடை ப்லொக் idlyvadai.blogspot.com க்கு என்ன spelling
அதற்கு சரியான ஸ்பெலிங் cookies.blogspot.com என்று சிலர் சொல்லுகிறார்கள். இந்த மாதிரி கேள்வி கேட்டு என்னை இம்சை செய்யாதீர்கள்.

8.எந்திரன், ரஜினியின் ஜோக் படமா, ஷங்கரின் பிரமாண்ட படமா, சன் டிவியின் டப்பா படமா?

ஜோக் படமா என்று தெரியாது ஆனால் சினிமா வரலாற்றில் ஜோக்கர்கள் பார்க்க போகும் பிரமாண்ட சினிமாவாக இருக்கும். ( ஜோக்கர்கள் புத்திசாலிகள். உதாரணம் அபூர்வ சகோதரர்களில் வரும் ஜோக்கர் கமல் )

9. அம்மா பகவான், ஜக்கி வாசுதேவ், நித்யானந்தர் போன்ற சாமியார்கள் ஏன் மக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கோர்ஸ் கொடுக்கிறார்கள்? ஏழைகளுக்கு ஏன் காசில்லாமல் உதவுவதில்லை?

அவர்கள் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறார்கள். அதாவது நம்மை ஏழையாக்கி அந்த சிரிப்பில்!

10. நல்ல இட்லிவடை கிடைக்குமா?
நானும் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். கிடைத்தால் சொல்லுங்க.

கேள்வி கேட்டவர்களுக்கு நன்றி. தொடர்ந்து கேள்விகள் கேட்கலாம்...

24 Comments:

SUBBU said...

:))))))))))))))

சுழியம் said...

//...சில வாரம் முன் என்னிடம் வந்தார்கள், 30 பேர் இறந்து போனதற்கு இலவச முகமூடி கொடுக்கிறீர்கள், அதற்கு பதில் எட்ஸுக்கு நிறைய பேர் இறந்து போகிறார்கள், அவர்களுக்கு இலவச காண்டோம் கொடுங்கள் என்று சொன்னேன்...//

Inba style answers. Superb.

What the dead will do with the condoms?

blogpaandi said...

10 ம் எண் கேள்விக்கு என்னுடைய கருத்து - "நல்ல இட்லி கிடைச்சா நல்ல வடை கிடைக்கிறதில்ல
நல்ல வடை கிடைச்சா நல்ல இட்லி கிடைக்கிறதில்ல
நல்ல இட்லி, வடை கிடைச்சா நல்ல சாம்பார் சட்னி கிடைக்கிறதில்ல"

Anonymous said...

/***எந்திரன், ரஜினியின் ஜோக் படமா, ஷங்கரின் பிரமாண்ட படமா, சன் டிவியின் டப்பா படமா?

ஜோக் படமா என்று தெரியாது ஆனால் சினிமா வரலாற்றில் ஜோக்கர்கள் பார்க்க போகும் பிரமாண்ட சினிமாவாக இருக்கும். ( ஜோக்கர்கள் புத்திசாலிகள். உதாரணம் அபூர்வ சகோதரர்களில் வரும் ஜோக்கர் கமல் )***/சும்மா பிரம்மாண்டம் என்ற பெயரில் ஊரை ஏமாததுகிறார்கள், படத்தின் பட்ஜெட்டில் முக்கால்வாசி சிலர் சம்பளம், அப்புறம் எப்படி படம் குறிப்பிட்ட நாளில் எடுக்க முடியும்??? ஓபீ தான் அடிக்க முடியும்...இல்லை என்றால் படம் வசூல் ரீதியா ஹிட் என்று புருடா விட வேண்டியது தான்!!!பிரமாண்டமும் கிடையாது ஒரு மன்னும் கிடையாது!!!

கிருஷ்ணமூர்த்தி said...

/இட்லிவடை ப்லொக் idlyvadai.blogspot.com க்கு என்ன spelling
அதற்கு சரியான ஸ்பெலிங் cookies.blogspot.com என்று சிலர் சொல்லுகிறார்கள்/

இந்தப்பதில் இந்தலோகத்தில் இருந்து வந்தது தானே? வேறெந்த அந்நிய லோகத்தில் இருந்தும் வரவில்லையே?

:-)))

இம்சைக்கே இம்சையா?
சபாஷ் சரியான போட்டி!!

Anonymous said...

///
blogpaandi said...
10 ம் எண் கேள்விக்கு என்னுடைய கருத்து - "நல்ல இட்லி கிடைச்சா நல்ல வடை கிடைக்கிறதில்ல
நல்ல வடை கிடைச்சா நல்ல இட்லி கிடைக்கிறதில்ல
நல்ல இட்லி, வடை கிடைச்சா நல்ல சாம்பார் சட்னி கிடைக்கிறதில்ல"///

அப்டியே எப்போவாவது நல்லாக் கிடைக்கற அன்னிக்கு எனக்கு வயிறு சரியா இருக்கறது இல்ல...
:-(

ஜெயக்குமார் said...

01)வெளிநாட்டுக்குப் போய் வேலை செய்வதில் முன்னனியில் இருப்பது யார்??


02) இந்தியாவின் இன்றையதேதியில் கடன் தொகை எவ்வளவு??

03) மாநிலங்கள் உலக வங்கியிடமோ அல்லது வேறு எந்த நாட்டிடமோ கடன் வாங்கி கட்ட முடியாமல் போனால் என்ன நடக்கும்??

04) ஃபிக்சட் டெபாசிட்டுக்கு அதிகபட்ச வட்டி வழங்கும் வங்கி எது? எவ்வளவு??

05) வீடுகட்ட லோன் வாங்குவதில் கழுத்தில் துண்டு போஒட்டு வசூலிக்காத வங்கிகள் எவை?? குறைந்த வட்டிக்கு கடன் தருபவை எந்தெந்த வங்கிகள்??

06) அழகிரி அமைச்சர் போஸ்ட்டில் என்ன செய்திருக்கிறார் இதுவரை??

07) மதுரையில் சைக்கிளோ அல்லது ஸ்கூட்டரோ பஞ்சர் ஒட்டியிருக்கிறீர்களா??

08) தமிழ்ஹிந்து வலைத்தளம் கலக்குகிறதே எப்படி???

Anonymous said...

sorry to digress.

தான் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம் !!!

++++++++
வளர்ப்புப் பறவைகள் விற்கும் கடையில்...

அட..இந்தக் கிளி அழகா இருக்கே.. என்ன விலை..?

அது வேணாம்மா.. அதுக்கு வாய் ஜாஸ்தி..

நீ ஏம்பா கவலைப் படறே.. நான் சமாளிச்சுக்கறேன்..

இல்லம்மா.. அது வளர்ப்பு சரியில்லே.. குடும்பத்திலே குழப்பம் ஏற்படுத்திடும்..! டிவோர்ஸ் வரைக்கும் கூட கொண்டு போய் விட்டுடும்..!

பாவம்பா அது.. எல்லாரும் அதை வெறுத்தா அது என்ன பண்ணும்.? சரி .. விலையைச் சொல்லு..!

சொன்ன கேளுங்க்.. இதுக்கு முந்தி நிறைய வீட்டுக்கு போயிட்டு உடனே திருப்பி கொண்டாந்து விட்டுட்டாங்க..ரிஸ்க் எடுக்கறீங்க.. சரி.. இந்த சனியனைக் கொண்டு போங்க..விலையப் பத்தி பிற்பாடு பேசிக்கலாம்..!

வீட்டுக்கு வந்த பிறகு.. வீட்டைப் பார்த்த கிளி..

புது வீடு.. புது எஜமானியம்மா.. ப்ரமாதம்..!

எஜமானிக்கு ஆச்சர்யம்..! பள்ளி விட்டுப் பிள்ளைகள் வந்தனர்..

கிளி.." புது வீடு.. புது எஜமானியம்மா.. புது குழந்தைங்க.. ப்ரமாதம்..

கார் வரும் ஓசை கேட்கவே, எட்டிப்பார்த்த கிளி சொன்னது...

புது வீடு..புது எஜமானியம்மா..புது குழந்தைங்க..புது காரு...
அடடே.. வாங்க கிருஷ்ணமூர்த்தி..... நீங்கதான் இங்கேயும் புருஷனா..???
++++++++++++

Anonymous said...

/// கிருஷ்ணமூர்த்தி said...
/இட்லிவடை ப்லொக் idlyvadai.blogspot.com க்கு என்ன spelling
அதற்கு சரியான ஸ்பெலிங் cookies.blogspot.com என்று சிலர் சொல்லுகிறார்கள்/

இந்தப்பதில் இந்தலோகத்தில் இருந்து வந்தது தானே? வேறெந்த அந்நிய லோகத்தில் இருந்தும் வரவில்லையே?

:-)))

இம்சைக்கே இம்சையா?
சபாஷ் சரியான போட்டி!!
///


இனா.வனா/கீனா மூனா, பின்னிட்டீங்க! இதுக்கு மேல ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை.
:-D

God said...

1. நடிகர் விஜய் காங்கிரசில் சேருவது நல்லதா அல்லது தனி கட்சி ஆரம்பிப்பது நல்லதா? (அவருக்கு அல்ல தமிழ்நாட்டுக்கு)..?

2. விஜயகாந்த் காங்கிரசுடன் கூட்டணி வைப்பாரா மாட்டாரா?

3. உண்மையில் போக்ரான் அணு குண்டு சோதனை வெற்றியா இல்லை தோல்வியா?

Anonymous said...

//பரிசு அறிவிப்பு
இரண்டு பேர் வந்து விட்டது என்று சொல்லிவிட்டார்கள். ஒருவர் தான் பாக்கி. வந்திவிட்டது என்றால் தண்டோரா அடித்து சொல்லவும் :-)//

அவர் வரவில்லை என்றால்தான் "மட்டும்தான்" தண்டோரா அடிப்பாராம்.

அதுக்கு முன்னாடி, அது என்ன "வந்தி"??? நீங்க மொதல்ல சரியாய் டைப் "அடிங்க".

:-D

லவ்டேல் மேடி said...

// 1. இடைதேர்தல் ஓட்டுப் பதிவு அன்று மு.க. உடல்நலம் குறித்த வதந்தி பரப்பியது யாராக இருக்கும்? //


அவுருக்கு வைத்தியம் பாத்த டாக்டரத்தான் இருக்கும்....!!!
// 2. தி.மு.க வின் பலம் / பலவீனம் ? //


பலம் = கலைஞர் டி.வி

பலவீனம் = சன் டி.வி
// 3. உங்களுக்கு எந்த கட்சி பிடிக்கும் ? உண்மையாக பதில் சொல்லவும் ? //


பிரியாணி பொட்டலம் மாதிரி ... எந்த கட்சிக்கு இட்லி .. வட.. அதிகம் சேல்ஸ் ஆகுதோ.. அந்த கட்சி.....// 5. கேள்வி கேட்டா அந்தக் கேள்வி எனக்கு சொந்தமா, உங்களுக்கு சொந்தமா? //


இத வெட்டியா படிக்கிரவங்களுக்குத்தேன் சொந்தம்...


// 6. ஏழைகளுக்கு இலவசமாக டி.வி. தரும் அரசு, உயர் நீதிமன்றம் ஆணை இட்ட பின்பும் இலவசமாக "முகமூடி" வழங்காதது ஏன்? //


ஊருக்கே முகமூடி குடுத்தா ... அப்பறம் இவுங்க முகமூடி கிளுஞ்சுரும்.... அப்பறம் யாரு திருட்டு பயண்ணே கண்டுபுடிக்க முடியாது...!!


// இட்லிவடை ப்லொக் idlyvadai.blogspot.com க்கு என்ன ஸ்பெல்லிங் //


shakila.idly.kilmaa.vada.blogspot.com


// எந்திரன், ரஜினியின் ஜோக் படமா, ஷங்கரின் பிரமாண்ட படமா, சன் டிவியின் டப்பா படமா? //


ஐஸ்வர்யா ராயின் டூ பீஸ் படம்....!! ( அட... தமிழ்ல இப்போ அம்முனிக்கு ரெண்டு படமின்னு சொல்ல வந்தேனுங்க....)


// 9. அம்மா பகவான், ஜக்கி வாசுதேவ், நித்யானந்தர் போன்ற சாமியார்கள் ஏன் மக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கோர்ஸ் கொடுக்கிறார்கள்? ஏழைகளுக்கு ஏன் காசில்லாமல் உதவுவதில்லை? //


கல்லா நிரம்பாது...!!

// 10. நல்ல இட்லிவடை கிடைக்குமா? //


கிடைக்கும்.... ஆனால் சிறு திருத்தத்துடன்..... சில்லி இட்லி மற்றும் பீர் வடையாக
( பீரில் ஊறவைத்த வடை....) .
// தொடர்ந்து கேள்விகள் கேட்கலாம்... //


நீங்க எப்போ திருந்துவீங்க......?

Krish said...

இது ரொம்ப வித்தியாசமான படம்!
ஹீரோக்கும் , ஹீரோயினுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி!
யாருமே போகாத இடத்துல இந்த பாட்டுக்கு ஷூட்டிங் போனோம்!
- இப்படி குமுதத்துக்கும், விகடனக்கும் பேட்டி கொடுக்காத எப்ப நிறுத்துவாங்க இந்த இயக்குனர்கள்?

Krish said...

கருணாநிதி - ஜெயலலிதா முதல் சாருபாலா- ஜெயமோகன், சிம்பு- தனுஷ் வரை பரவியுள்ள தனி மனித தாக்குதல்கள் எப்போது நிற்கும்?

PITTHAN said...

imm pdaichan sollarapula onnum illai.

Anonymous said...

/***எந்திரன், ரஜினியின் ஜோக் படமா, ஷங்கரின் பிரமாண்ட படமா, சன் டிவியின் டப்பா படமா?

ஜோக் படமா என்று தெரியாது ஆனால் சினிமா வரலாற்றில் ஜோக்கர்கள் பார்க்க போகும் பிரமாண்ட சினிமாவாக இருக்கும். ( ஜோக்கர்கள் புத்திசாலிகள். உதாரணம் அபூர்வ சகோதரர்களில் வரும் ஜோக்கர் கமல் )***/

Last one week, the crew of this movie is filming the mega building structure built by TCS from outside in Sirueri SIPCOT IT park in Chennai, causing lots of hardship to the road users. There are lots of dummy properties such as Helicopter, huge crane and burnt down police cars and 100s road signs with "X" marks, and " Take Diversion" sign pointing sky. From what we can see here, it does look like a any serious movie. It may be a good comedy. BTW, a Robo like object was seen, but not Rajni.

கிருஷ்ணமூர்த்தி said...

மானஸ்தன்! உங்களுடைய நக்கல், நையாண்டியை மிகவும் ரசித்தேன்.

இட்லிவடை சாம்பார்னு எப்பப் பாத்தாலும் ஒரே காம்பினேஷன் தானான்னு அலுப்புத் தட்டுகிற தருணங்களில், இந்த மாதிரி நக்கல், நையாண்டி எல்லாம் ஆறிப்போன இட்லிக்குக் கூடக் கொஞ்சம் சுவையூட்டுகிறது!

கலக்குங்க:-))

கரடி said...

கொச்சின் கேரளாவிலே பொறந்தவன் மூன்று எழுத்து நடிகன் இங்க தமிழ் நாட்டுல வந்து நடிச்சு பணம் திண்ணான் இப்போ அரசியல் ஆசை வந்துடிச்சி அவனுக்கு

தவளை மூஞ்சு விஜயை தான் சொல்றேன்

kggouthaman said...

அட - அப்போ மெய்யாலுமே பதில் சொல்லுவீகளா! - நான் ஏதோ ஒல ஒலாட்டி பதிவுன்னு நெனச்சேன்!

செந்தழல் ரவி said...

ஏழாவது ரேங்காவது கிடைச்சதே ? அந்த மட்டில் மகிழ்ச்சி.

கடைசி கேள்விக்கு.

பத்துரூபாய்க்கு ஆறு இட்லி, ரங்கநாதன் தெருவுக்கு பேரல்லல் ஆக இருக்கும் தெருவில் பதினோரு மணிக்கு மேல், போலீஸ் கெடுபிடியோடு அவசரமாக, கோழி கால் க்ரேவியுடன், கிடைக்கும்.ட்ரை பண்ணவும்.

Anonymous said...

///செந்தழல் ரவி said...
ஏழாவது ரேங்காவது கிடைச்சதே ? அந்த மட்டில் மகிழ்ச்சி.///


ஏழு என்பதால் நீங்க கண்டிப்பா சந்தோஷப்படலாம் ரவி. "ஆறே முக்காலும் அரையும் காலும்" என்றால்தான் வருத்தப்படணும்/ பயப்படணும்.

:-D

SUBBU said...
This comment has been removed by the author.
IdlyVadai said...

//Mr. இட்லிவடை Gmail chat invite பன்னிருக்கேன் accept பன்னுங்க :)))))))))))))//

idlyvadai2007 என்ற ஐடிக்கு எதுவும் வரவில்லை. வந்தால் accept செய்கிறேன் :-)

Kameswara Rao said...

How will be the TN Assembly Elections during 2011 ... do you expect a turning point this time ...

Kamesh