பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 08, 2009

தற்கொலை அல்ல கொலை - Followup

பாகவதத்தில் கலி காலம் எப்படி இருக்கும் என்று ஒரு பகுதி வரும். படிக்காதவர்கள் கீழே படிக்கலாம்....
தற்கொலை அல்ல கொலை என்ற பதிவின் Follow-up

* அம்மா, அப்பா மற்றும் அக்கம்பக்கத்தினர் பள்ளிநிர்வாகத்திடம் நியாயம் கேட்கச் சென்றிருந்தனர், ஆனால் விரட்டியடிக்கப்பட்டனர். விலக மறுத்ததால், மைலாப்பூர் காவல்நிலையத்தாரின் உதவியுடன் "பசங்க படிக்கற இடத்துல வந்து ரௌடித்தனமெல்லாம் பண்ணக்கூடாது" என்று அறிவுறுத்தப்பட்டு விலக்கப்பட்டனர்.

* முதல் தகவல் அறிக்கையில் அந்த 15 வயதுப் பெண் திருமணமானவள் என்று இருந்தது. பிறகு துரைப்பாக்கம் காவல் ஆய்வாளரின் தலையீட்டால் சரியாகத் திருத்தப்பட்டது.

* இந்தியன் எக்ஸ்பிரஸ் மீது பள்ளி நிர்வாகம் மானநஷ்ட வழக்கு ஒன்று தொடரவுள்ளது. பள்ளியின் பெயருக்கு அநியாயமாகக் களங்கம் விளைவித்துவிட்டதாம் இந்தியன் எக்ஸ்ப்ரஸ்.( அதாவது பள்ளியின் பெயருடன் செய்தி வெளியிட்டது )

* லோகாம்பாளின் மனநிலை இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை. மறுபடியும் என் பாட்டியைப் பார்த்துக்கொள்ள வந்துவிட்டார். வீட்டில் இருக்கும்போது அழுகையாக வருகிறதாம்.

* மனிதஉரிமைச்சங்கம் ஒன்று, தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மெத்தனம் காட்டிவரும் பட்சத்தில், வழக்குத்தொடர உதவிசெய்ய முன்வந்துள்ளது. இது சம்பந்தமாக வழக்கறிஞர் ஒருவரும் உதவிவருகிறார்.

இனி என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாதா என்ன ?

18 Comments:

Anonymous said...

sad. ஆனால் எதிர்பார்த்துதான்.

கல்வியை "விபச்சாரம்" போல்ஆக்கிய தனியார் பள்ளிகளையும் அதை நடத்தும் "புரோக்கர்களையும்" கண்டுகொள்ளாமல்(கொல்லாமல்) மத்திய - மாநில அரசுகள் இருக்கும் வரை இதே நிலைதான்.

Anonymous said...

Sad state of affairs!
All journalists must support Indian Express.

Anonymous said...

// மனிதஉரிமைச்சங்கம் ஒன்று, தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மெத்தனம் காட்டிவரும் பட்சத்தில், வழக்குத்தொடர உதவிசெய்ய முன்வந்துள்ளது. இது சம்பந்தமாக வழக்கறிஞர் ஒருவரும் உதவிவருகிறார்.//

at least this makes some aaruthal in this news

ந.லோகநாதன் said...

வருந்த தக்க விசயம்... என்று தனியும் இந்த தனியார் பள்ளி மோகம்... ம்ம்ம்.... இதையெல்லாம் சன் டிவியில காட்ட மாட்டாங்களா? நிமிடத்திற்கு ஒரு முறை மாசிலாமணியை காட்டறாங்க

Ravi said...

Its sad to note the way schools function these days - more as business centre and show-pieces for 100% results, 100% first classes et al than necessarily imparting knowledge on students - more importantly on students who are deprieved of it or deemed as less knowledgeable.

But in this case, the girl's suicide cannot be attributed to the school. Suicide is a crime by any means and so lets not legitimize or attribute reasons to committing suicide. The school's case should be taken up separately not necessarily because a girl committed suicide owing to denial of a seat.

Krish said...

ஒரு "அந்நியன்" தேவை ....

R.Gopi said...

//மானஸ்தன் said...
sad. ஆனால் எதிர்பார்த்துதான்.

கல்வியை "விபச்சாரம்" போல்ஆக்கிய தனியார் பள்ளிகளையும் அதை நடத்தும் "புரோக்கர்களையும்" கண்டுகொள்ளாமல்(கொல்லாமல்) மத்திய - மாநில அரசுகள் இருக்கும் வரை இதே நிலைதான்.//

********

"Thala"

As usual a "NETHI ADI" comment from you......

What you said is absolutely true.

மணிகண்டன் said...
This comment has been removed by the author.
Anonymous said...

ந.லோகநாதன் said...

////இதையெல்லாம் சன் டிவியில காட்ட மாட்டாங்களா? நிமிடத்திற்கு ஒரு முறை மாசிலாமணியை காட்டறாங்க.////

சன் டி.வி.ல மாசிலாமணி காட்டறான்னா காரணம் இருக்குய்யா!

நம்ம ஊரு எட்டுப்பட்டி சனமும் காலைல முழிச்ச உடனே மொத வேலையா சன் டி.வி.ல விளம்பரத்தப் பாத்துட்டு "சுத்தமா" போயி படம் பாக்கறதால அதுல வர காசு "மாசு இல்லா money", அவங்களுக்கு.

இன்னும் நாட்டு நெலவரம் புரியாம இருக்கீகளே!! முழிச்சுக்கங்க.

Anonymous said...

@இட்லி-வடை

///பாகவதத்தில் கலி காலம் எப்படி இருக்கும் என்று ஒரு பகுதி வரும். படிக்காதவர்கள் கீழே படிக்கலாம்....////


கலி காலத்தில் என்ன வேணும்னாலும் நடக்கும். நீங்க போட்ட போஸ்ட் content-ஐ இப்டி silent-ஆ modify பண்ணது உள்பட!!!!
:-D

********

மணிகண்டன் said...
என்னது பாகவம் ?? பாகவதமா ?

"பாகவதம்" "பாக"-"வதம்" செய்யப்பட்டால் "பாகவம்"தான் வரும். தெரியாதா நோக்கு?
அபிஷ்டு அபிஷ்டு.

Anonymous said...

முதல் பதிவில் செய்தித்தாள்கள் இந்த சம்பவம் குறித்து எழுதவில்லை என்று இருக்கிறது. ஃபாலோஅப்பில் இந்தியன் எகஸ்பிரஸ் மீது மானநஷட வழக்கு என்று இருக்கிறது. எழுதாத விஷயத்திற்கு கூட மானநஷ்ட வழக்குப் போட முடியுமா?

Kameswara Rao said...

IV,

What we need is change of Current Scenario until then every year we are going to come across like this case.... we can by sympathetic with the girl but not with her motive which is wrong by all means...

How many cases are there still pending in our courts.... there is a proverb but that does not suit this case "Justice Delayed is Justice Denied" but this is happening in our country for a long long time now...and will only stop with the change in basic setup.

Kamesh

R.Gopi said...

//நம்ம ஊரு எட்டுப்பட்டி சனமும் காலைல முழிச்ச உடனே மொத வேலையா சன் டி.வி.ல விளம்பரத்தப் பாத்துட்டு "சுத்தமா" போயி படம் பாக்கறதால அதுல வர காசு "மாசு இல்லா money", அவங்களுக்கு.

இன்னும் நாட்டு நெலவரம் புரியாம இருக்கீகளே!! முழிச்சுக்கங்க.//

********

ஆ ஹா....... மானஸ்தன் எப்போவும் போலவே, இப்போவும் அடிச்சு தூள் கெளப்புராரு.... நீங்கள் சொன்னது போல, கல்விய வியாபார மயமாக்கியதால் (கொஞ்சம் maaththi solli இருக்கேன் "தல")வினை இது.....

பின்னே, ஏங்க, சுனாமி வரது ஊருக்குள்ள??

மணிகண்டன் said...

***
கலி காலத்தில் என்ன வேணும்னாலும் நடக்கும். நீங்க போட்ட போஸ்ட் content-ஐ இப்டி silent-ஆ modify பண்ணது உள்பட!!!!
***

டைப்பிங் மிஸ்டேக் கரெக்ட் பண்ணினவுடன பகிரங்க மன்னிப்பு கேட்டு பதிவு போடனுமா ?

Anonymous said...

@மணிகண்டன்
அண்ணே அந்தக் "கலிகாலக்" கமெண்ட் இட்லிவடைக்கு போட்டது.

அவர் நீங்க சொன்ன mistake-ஐ (பாகவதம்) சரி செய்ததை நான் சொல்லவில்லை!

இந்தப் போஸ்ட் ஒரிஜினல் version-ல ஆரம்பம் வேற மாதிரி இருந்தது. அதத்தான் நான் சொன்னேன்.

மணிகண்டன் said...

ஓஹோ !

Anonymous said...

கருணாநிதிக்கு பகிரங்க கடிதம்
[வியாழக்கிழமை, 09 யூலை 2009, 01:59 பி.ப ஈழம்] [க.நித்தியா]
30 ஆண்டுகளுக்கு முன்னால் உங்களின் யோசனை துளிர்த்து இருந்தால், 80 ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களவர்கள் கொன்று இருக்க மாட்டார்கள். புலிப் படையில் 30 ஆயிரம் பேர் உயிர் பலியாக வேண்டிய அவசியம் வந்து இருக்காதே! கொழும்பில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அன்றைய ஜெயவர்த்தனாவுக்குத் தந்தி அனுப்பி கோரிக்கை மட்டும் வைத்து இருந்தால், பௌத்தர்கள் கோபம் அதிகமாகி இருக்காது.

இவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'விகடன்' குழுமத்தின் 'ஆனந்த விகடன்' வார இதழில் கருணாநிதிக்கு பகிரங்க கடிதம் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பகிரங்க கடிதத்தின் முழு விபரம் வருமாறு:

தி.மு.க. தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிழல் தலைவர், முத்தமிழ் அறிஞர், முதல்வர் கலைஞர் அவர்களுக்கு வணக்கம்!

மூத்த தமிழ்க்குடியின் நலனுக்காக ஐந்து முறை 'முள் கிரீடம்' தாங்கி, முத்து விழா தாண்டிய பிறகும் உழைத்து வரும் உங்களுக்குத் தொடக்கத்திலேயே ஒரு தகவலைச் சொல்ல வேண்டும். கடைசியாக ஒரு கேள்வியை வைத்து இருக்கிறேன்.

'நீ இன்றி நான் இல்லை' படத்துக்குக் கதை வசனம் எழுதுவதில் மும்முரமாகிவிட்டீர்கள். அது, ஜெயலலிதா பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி வெளியிட்ட நெடுங்கதையின் தலைப்பு. ''கருணாநிதி என் புத்தகத் தலைப்பை திருடிவிட்டார்'' என்று அந்தம்மா அறிக்கை விடுவதற்கு முன்னால் உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியது என் கடமை. அதிருக்கட்டும்...

''போரிலே கலந்து வாகை மாலை சூட வாரீர் தோழர்களே! பாண்டியன் பரம்பரையினரே! சேரன் சந்ததியினரே! சோழனின் சொந்தக்காரரே! வாரீர்! கறுத்த கழுதையே, அங்கே ஏன் கனைக்கிறாய் என்று கேட்டிட வாரீர்! பிரிவினை வேண்டாமெனும் பெரும் உபதேசம் செய்யும் நரிகளின் ஊளையை, கிலி பிடித்த மனிதர்களைக் கீறி எறியுங்கள்!'' என்று கோவில்பட்டியிலும்...

''உணர்ச்சியுடன் எழுதுபவர்களின் கட்டை விரலை வெட்டு என்று முழக்கமிடுகிறது ஒரு வாய். ஆட்சி பலத்தினால் கட்டை விரல்களைப் போக்கினால் போக்கட்டுமே! விரல் போனால் வாய் இருக்கிறது. அண்ணா சொன்னது போல் இயக்கப் பேச்சாளர் அத்தனை பேர் நாக்குகளையும் துண்டித்துக்கொள்ளட்டும். கரங்களை நறுக்கி, நாவினைத் துண்டித்து நிர்க்கதியாக விட்டாலும் எமது தன்மானம், இன முழக்கம் ஓயாது, ஒழியாது. இதைக் காமராஜர்கள் உணர வேண்டும்'' என்று கோவையிலும் ஒரு காலத்தில் கொந்தளித்த உங்களது நாக்கு கடந்த வாரம் சட்டசபையில் பேசியதைப் படித்ததும்தான் பதறிப் போனேன். உங்களுக்கு பகிரங்க மடல் எழுதத் தூண்டியது நீங்கள் பேசிய அந்த வரிகள்தான்.

சம்பத்தும் நெடுஞ்செழியனும் அன்பழகனும் கழக மேடைகளில் (உங்கள் மொழியில்) தத்துவத் தாலாட்டுப் பாடிக்கொண்டு இருந்தபோது... எரிமலையாக, இடி ஒலியாக, கரகர தொண்டையில் நீங்கள் கனல் கக்கியதால் ஆயிரக்கணக்கான தொண்டர்களின் கவனிப்பைப் பெற்றீர்கள், சரியா? இப்போது ஈழத் தமிழர் தொடர்பான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசியதை திரும்பத் திரும்பப் படித்தேன். ''எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும் என்பார்கள். அங்கு இருக்கும் தமிழருக்கு நன்மை செய்ய வேண்டுமானால், இங்கே நாம் ஆத்திரத்தோடு அல்லது வெறுப்பு உணர்வோடு, அங்குள்ள சிங்கள இனத்தின் மீது ஒன்றைச் சொல்லி அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கினால்... அது நல்லதல்ல! பேசும்போது சுவையாக இருக்கும். வீரமாகப் பேசலாம். சூறாவளிப் பேச்சு, புயல் பேச்சு, கடல் அலைப் பேச்சு, எரிமலைப் பேச்சு என்று புகழாரம் சூட்டலாம். ஆனால், சிங்களவர்களுடைய கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் நீக்குப்போக்கு என்று சொன்னேன்'' என்று பேசி இருக்கிறீர்கள். என்னவொரு வளைவு, குழைவு, நெளிவு!

Anonymous said...

30 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உங்களது யோசனை துளிர்த்து இருந்தால், 80 ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களவர்கள் கொன்று இருக்க மாட்டார்கள். புலிப் படையில் 30 ஆயிரம் பேர் உயிர் பலியாக வேண்டிய அவசியம் வந்து இருக்காதே! கொழும்பில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அன்றைய ஜெயவர்த்தனாவுக்குத் தந்தி அனுப்பி கோரிக்கை மட்டும்வைத்து இருந்தால், பௌத்தர்கள் கோபம் அதிகமாகி இருக்காது. ஆனால், நீங்கள்தான் 'தமிழனுக்கு ஒரு நாடு, தனித் தமிழீழ நாடு' என்று கரகரக் குரலால் நித்தமும் கர்ஜித்தீர்கள். இரத்தக் கறை படிந்த ஜெயவர்த்தனாவின் கொடூரத்தைத் தமிழ்நாட்டுத் தெருவெல்லாம் சொல்லி, மக்கள் கொடுத்த எம்.எல்.ஏ., பதவியை இராஜினாமா செய்து... பிறந்த நாளுக்குக் கிடைத்த பணத்தைப் போராளிகளுக்குத் தூக்கிக் கொடுத்து, விடிய விடிய டெசோ ஊர்வலங்கள் நடத்தி, மனிதச் சங்கிலி நடத்தி, கறுப்புச் சட்டை போட்டு, டெல்லிக்கு காவடி தூக்கி, ஆட்சியைப் பறிகொடுத்து... என பாழாய்ப் போன ஈழத் தமிழனுக்காகக் காலத்தை வீணாக்கிவிட்டீர்களே, தலைவரே!

எம்.ஜி.ஆர். நாலு கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுத்துப் பிரபாகரனைத் தட்டிக் கொடுத்தார். ''இந்தச் சண்டையை நடத்துவதே எம்.ஜி.ஆர்-தான்'' என்று ஜெயவர்த்தனா பேட்டி அளிக்கும் அளவுக்கு ஆர்வம் காட்டினார். கை நிறைய கரன்சியை அவரும் வாய் நிறைய வார்த்தைகளை நீங்களும் அள்ளி எறிந்ததால்தான் போராளி இயக்கங்கள் 'நம் பின்னால் தமிழ்நாடே இருக்கிறது' என்று திரிந்தன.

''கனக விசயர் தலையில் கல்லேந்திக் கொண்டு வந்தான் செங்குட்டுவன். காவிரிக்குக் கரை கட்ட பன்னீராயிரம் சிங்களவர்களைக் கைதிகளாகக் கொண்டுவந்தான் கரிகாலன். இதெல்லாம் சரித்திரம். ஆனால், அந்த சரித்திரத்தின் விழுதுகளாக நாம் இருக்கிறோமா? இனிப் பழங்கதை பேசிப் பயனில்லை. செயலில் இறங்க வேண்டும். ஆளுக்கு ஓர் ஆயுதத்தைத் தூக்குவதா என்று கேட்பீர்கள்? அப்படி ஒரு நிலை வந்தால் தட்டிக்கழிக்க முடியாது. ஆனால், அந்தக் காலம் இன்று வந்துவிடும் என்றும் என்னால் சொல்ல முடியவில்லை'' என்று நீக்குப்போக்கு தெரியாமல் எரிமலைப் பேச்சை நீங்கள் பேசியதால் கோபமான பௌத்தர்கள் கொழும்புத் தமிழர்களை வடக்குப் பக்கமாக விரட்டியதாகச் சொல்லலாமா?

''இலங்கையில் எங்கள் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, எங்களைப் பெற்றெடுக்காத தாய்-தந்தையர் எல்லாம் சிங்கள வெறியர்களால் கொல்லப்படுகிறார்கள். இதை எல்லாம் நாங்கள் சகித்துக்கொண்டு எத்தனை நாளைக்கு இருப்பது? நாங்கள் ஒட்டிக்கொண்டு இருக்க, இந்தியாவோடு இணைந்து இருக்க, இந்தியா வேறு... தமிழ்நாடு வேறு என்று இல்லாமல், இந்தியாதான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் இந்தியா என்று கருதிக்கொண்டு இருக்க நீங்கள் தமிழருக்குச் செய்தது என்ன? உங்களுடைய தேசியம் தமிழ்நாட்டுக்கு வேகமாக வரத் தயக்கம் காட்டுவது ஏன்? உங்களுடைய தேசியம் தமிழக எல்லைக்கு அப்பால் நின்றுவிடுகிறதே, என்ன காரணம்? இவற்றைக் கேட்கக் கூடாதா? கேட்டால் பிரிவினையா?'' என்று அன்றைய பிரதமர் ராஜீவைக் கோபப்படுத்தாமல், புயல் பேச்சு பேசாமல் இருந்தால், அவராவது கோபப்படாமல் நல்லது ஏதாவது செய்திருப்பாரே?