பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 15, 2009

காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு - இன்பா


'அந்த' கோவிலை சுற்றிலும் பான்பராக்/புகையிலை கறைகள். சிதறிகிடக்கும் சிகரெட் துண்டுகள் மற்றும் உடைந்த மதுபான பாட்டில் துண்டுகள். சிறுநீர் கழிக்கும் சிறுவர்கள். கிராமத்துபக்கம் இருக்கும் 'கவர்மெண்டு ஆஸ்பத்திரி' போன்று கேட்பார்அற்று இருக்கும் 'அந்த' இடத்தை பார்க்கும்முன் 'அவரை' பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.'நினைமின் மனமே சிவபெருமானை' என்று பாடிய பட்டினத்தார் கி.பி.10 அல்லது 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த, பதினெண் சித்தர்களில் ஒருவர். பூம்புகாரில் பெரும் செல்வந்தராக பிறந்த இவருக்கு, சிவனே மகனாக பிறந்து, செல்வத்தின் நிலையாமை குறித்த தத்துவத்தை ' காதற்ற ஊசியும் வாராது காண்கடை வழிக்கே' என்ற ஒரு வரி மூலம் உணர்த்தி யோகி ஆக்கியதாக இவர் வரலாறு கூறுகிறது, (அந்த ஒரு வரியின் அர்த்தம் : கையில் என்ன கொண்டு வந்தோம்.. கொண்டு செல்ல .. நன்றி : படையப்பா ).

அப்படிப்பட்ட பெருமைகளை உடைய பட்டினத்தார் முக்தி அடைந்த சமாதியின் இன்றைய நிலையை அறிய முதல் 'பாரா' வை மீண்டும் படிக்கவும். சென்னை திருவொற்றியூரில் இருக்கிறது. இதன் பராமரிப்பு குறித்து பல்வேறு தரப்பில், பல்வேறு தடவை எழுப்ப்பட்ட கோரிக்கைகளுக்கு, கருணாநிதி மத்திய அரசுக்கு எழுதும் கடிதங்களுக்கு கிடைத்த மதிப்பே (?) கிடைத்தன. பிறகு தங்களின் அன்றாட பிரச்சினைகளில் இந்த சமாதி குறித்து மறந்துவிட்டனர் மக்கள்.

இதை போன்று, தமிழும், கிறிஸ்தவமும் வளர்த்த வீரமாமுனிவர் வாழ்ந்த வீடு காரைக்கால் அருகே பொறையாரில் இருக்கிறது. இவர்தான் சதுரகராதி கொண்டு நிகண்டுக்கு ஒரு மாற்றைக் கொண்டு வந்தவர். தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.(ஒ! அப்படியா என்று என்னிடம் கேட்டார் தற்சமயம் அதற்கு பக்கத்துக்கு வீட்டில் குடியிருப்பவர்).

சர்வதேச கவனம் பெறக்கூடிய மான்குரொவ் சதுப்புநில காடுகளை கொண்ட சிதம்பரம் பிச்சாவரம் பகுதி, அடிப்படை வசதிகள் இல்லாததால் உள்ளூர் கவனமே பெறாமல் இருக்கிறது. கும்பகோணம் அருகே உள்ள கிராமங்களில் புராதன கோவில்கள் பல சிதிலமடைந்து உள்ளன (உ.தா : ஆதனூர்).

"இந்தியாவுக்கு நெடிய வரலாறு உள்ளது. ஆனால், இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வு அறவே இல்லை" என்று சொன்னார் ஒரு மேற்கத்திய அறிஞர்.

சமிபத்தில் வேலூர் அருகே சிறுகரும்பூர் சிவன் கோவிலில் உள்ள 300 வருட பழைமையான மரகத சிலை திருடுபோய்விட்டது. பூட்டிகிடந்த இந்த புராதன கோவிலின் பெருமைகள் சிலைதிருடபட்டதற்கு பின்புதான் 'சன் டிவியால்(?)' உள்ளூர் மக்களுக்கே தெரியவந்திருக்கிறது.

சிலைதிருட்டு மற்றும் உண்டியல் உடைப்பு என்பது ஒரு சாதாரண, அன்றாட செய்தியாகிவிட்டது (மாதாகோவில்களும் விதிவிலக்கல்ல).

வெற்றி பெற்ற வேட்பாளரை நம்பும் வாக்காளர் போல, பாவங்களை தீர்ப்பதற்கு திருப்பதி கோவிலை மட்டுமே நம்புகிறார்கள் நம் 'பெரிய' மனிதர்கள்.

தமிழக சுற்றுலாதுறை இது போன்ற இடங்களை பட்டியல் போட்டு பராமரித்தால். வரலாற்று தடங்கள் பாதுகாக்கபடுவதோடு, புதிய சுற்றுலா மையங்களை உருவாக்கலாம். செய்வார்களா?

சீரமைக்கவேண்டிய விஷயங்கள் இப்படி நிறைய இருக்கையில், தமிழ்நாட்டில் அங்கங்கே 'ஹைடெக்' கோவில்கள் பல முளைத்து வருகின்றன.

திண்டுக்கல் அருகே ஒரு கோடிசெலவில் கண்ணகி கோவில் அமைக்கப்பட என்ன அவசியம்?

மூன்று வருடங்களுக்கு முன்பு 600 கோடி செலவில் வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவில் உருவாக்கப்பட்ட 'மர்மம்' என்ன? கேட்டால் கனவு, புதையல் என்று 'விடாதுகருப்பு' பாணியில் கதை சொல்கிறார்கள். கணக்கு,வழக்கு இல்லாமல் சொத்துவைத்திருக்கும் பல 'பெரும்' புள்ளிகளின் 'மாஸ்டர்ப்ளான்' இந்த பொற்கோவில். வேலூரில் ஒரு 'தொழில்' புரட்சி ஏற்படும்அளவுக்கு இந்த கோவிலை பக்காவாக மார்கெட்டிங் செய்துவிட்டார்கள்.

இதன் டிரஸ்ட் மதிப்பு இன்று இரண்டு ஆயிரம்கோடி ரூபாய் என்கிறார்கள். இதற்கெல்லாம் பணம், யாருக்கு, எங்கிருந்து, எப்படி வந்தது?? இத்தனை நிலம் எப்படி ஒதுக்கப்பட்டது? ( 'அம்மன்' விவகாரம் நமக்கு எதற்கு!).

இன்றைக்கு கள்ளபணத்தை போட்டுவைக்க சுவிஸ்வங்கியைவிட பாதுகாப்பான இடம் இதுபோன்ற கோவில் அல்லது ஆஸ்ரம டிரஸ்ட்தான்.

தாதாக்களை மட்டும்அல்ல, தங்கள் 'தேவைக்கு' ஏற்ப, சாமியார்களையும், கோவில்களையும் ஏன் 'கடவுளையும்' உருவாக்கிகொள்கிறார்கள் அரசியல்வாதிகள்

-இன்பா

26 Comments:

kggouthaman said...

சுனாமிக்குப் பிறகு திருவொற்றியூர் பட்டணத்தார் கோவில் (சமாதி?)
கடல் தண்ணீர் புகுந்து விட்டது என்று ஞாபகம். அந்த வழியாக
அசோக் லேலண்டுக்கு அடிக்கடி போய் வந்து கொண்டிருந்த
நாட்களில் பார்த்ததுண்டு. அந்தப் பகுதி மக்கள் யாராவது இந்தப்
பதிவிற்கு விவரம் அனுப்பினால் நல்லது.

Swami said...

I know vellore and Ariyoor Malikaodi swamigal ( Now Sakthi Amma ) . He was class mate of one of my friend.. How suddenly so much crores of rupees he accumulated , no body knows. Lots of rumuours starting from Deva gowda, Nakamukka, Venkaiah naidu and so many other peoples money in tht.. God only knows the truth. But vechicle movement , Govt bus collection , hotel collection has increased like anything .. thts the only benefit i'll say. Heard they are distributing lot of money for education , health , hospital facility, etc, etc .. but big mystery how he got crores of rs and what the so called incometax depts are doing ..

Valaignan said...

very good post,Inba;but nothing can be done.Money is ruling us now.Education,Health,Religion have fallen prey to money.Future is going to be much more difficult,painful and unsafe.God only can save us.

Erode Nagaraj... said...

அந்த நாட்களிலேயே, மஹா பெரியவாளிடம் புது கோயில் என்று போய் நின்றால், இருக்கும் கோவில்களில் ஒழுங்காக விளக்கெரிவதற்கு வழி பண்ணாலே போதுமென்பார்...

இந்திய வரலாறு என்பது, வெட்கப்பட வேண்டிய விஷயம் என்ற கருத்து மக்கள் மனதில் பதிந்தது தான், இவற்றைப் பற்றியெல்லாம் ஒருவரும் கவலைப் படாதிருக்கக் காரணம்.

கோவில்களில் திருப்பணிக் கல்வெட்டுகள் வைத்ததைப் போலவே, பலவற்றிற்கும் Documentation முறையாகச் செய்யாதிருந்ததால் வந்த வினை. செவி வழி வந்த செய்திகள் கதைகளானதும், கதைகள் செவி வழிச் செய்திகளானதும்இதனால்தான்.

Ravi said...

நல்ல போஸ்ட். இந்த மாதிரி வேலூரில் ஒரு கோவில் இருப்பதே எனக்கு இப்பொழுதுதான் தெரியும்!! மக்களுக்கு God-ஐ விட God-man தான் அதிகம் தேவை படுகிறார்கள். அது மாறும் வரை இது போல் புதிய கோவில்களும் புதிய God-man (conman) களும் வந்துக்கொண்டு தான் இருப்பார்கள். அதை தடுக்க முடியாது. புராதன கோவில்களின் அருமை உணர்ந்து அரசும் மக்களும் அதை ஒழுங்காக பராமரிக்க முன் வர வேண்டும்.

Anonymous said...

"அந்தக் கடவுள்"தான் கண் திறக்கவேண்டும்!

engal said...

மானஸ்தர் அவர்களே!
நான் கண் திறப்பதாக இல்லை!
நான் கடவுள்.

S. Krishnamoorthy said...

நான்கு நாட்களுக்கு முன்னர், புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் இருக்கும் பெருங்களூர் வம்சோத்தாரர்-மங்களாம்பிகா அம்மன் கோவிலுக்குப் போக வாய்ப்பு வந்தது. கோயில் குருக்கள் சொன்னது: “இக் கோயில் புதுக்கோட்டை மன்னரால் பராமரிக்கப்பட்டு அரசின் இந்து சமய போர்டு அதிகாரத்துக்கு மாற்றப்பட்டபின்னர், கோயிலுக்கு தினமும் தரப்படும் நிவேதனப் பொருள்: 200 மி. எண்ணெய், 200 மி. அரிசி.
அறந்தாங்கிக்கு அருகில் இருக்கும் சிங்கவனம் எனப்படும் ஜமீன் கிராமத்துக்கும் போயிருந்தேன். அங்கு மிகவும் பழமையான் (500 ஆண்டுகளுக்கு முன் மராத்திய மன்னரால் கட்டப்பட்டு) பட்டாபி ராமன் கோயிலில் வழிபடலாம் என்று. கோயில் சிதிலமடைந்து, இன்றோ நாளையோ சாகக்கிடக்கும் கிழவனார் போல் காட்சியளித்தது.
இதுதான் அறநிலையத்துறையின் சாதனை!
சொல்லக்ககொதிக்குது நெஞ்சம்
ஆனால் கையாலாகதவர்கள் என்ன செய்யமுடியும்?

R.Gopi said...

அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படுபவன், பதவி பித்து பிடித்து அலைபவன்..... பிறந்த நாள் நிதி வசூலிக்க, உருட்டல் மிரட்டல் செய்யும் கயவர்கள்.... இவர்கள் எல்லாம் இருக்கும் வரை, "இந்த கடவுள்களை" எந்த "கடவுள்கள்" வந்தாலும் காப்பாத்த முடியாது....

அவங்க அவங்கள அவங்க அவங்க தான் பாத்துக்கணும்......

ஈரோட் நாகராஜ் சுட்டி காட்டியது போல், பழைய கோவில்களை சிதிலமடையாமல் பாதுகாத்தாலே போதுமே.....

sreeja said...

ஒரு ஐடியா, பேசாம எல்லா கோவில் வருமானத்திலயும் ஒரு பங்கு அரசியல்வாதிகளுக்கு-னு சொன்னா ஒழுங்கா பராமரிப்பாங்களோ, இல்ல இருக்குறதயும் கிளப்பிட்டு போயிடுவாங்களோ ?

Anonymous said...

மனிதனே நடமாடும் கோயிலாக இருக்கிறான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் {3rd Eye -Agana Chakra} கோபுர வாசல்
தெள்ளத் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம்...
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

என்றும் சொல்கிறார் திருமூலர்

அன்புதான் அனைத்திற்கும் அடிப்படை ஆதாரம்.அன்பே சிவம் என்று
விளக்கமுறச் செய்தவர் திருமூலர்(பல நூற்றாண்டுகளுக்கு முன் !!!)

--------------------------------
"காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு - இன்பா" - Everything is there inside us. Find it if possible :)

கடவுள் = கடந்து உள்ளே செல்
--------------------------------
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Vedantha Desika Dasan said...

//Sreeja said : ஒரு ஐடியா, பேசாம எல்லா கோவில் வருமானத்திலயும் ஒரு பங்கு அரசியல்வாதிகளுக்கு-னு சொன்னா ஒழுங்கா பராமரிப்பாங்களோ, இல்ல இருக்குறதயும் கிளப்பிட்டு போயிடுவாங்களோ//

எந்த ஊரில் இருக்கீங்க நீங்க? கோயில் சொத்து மொத்தம் எங்களுக்குன்னு நினைசிருக்கிற அரசியல்வாதிங்க கிட்ட ஒரு பங்கு மட்டும்தான்னு சொல்லுற உங்களைப் பாத்தா ..... ஐயோ ஐயோ!

Anonymous said...

கோவில்கள் என்பது கடவுள்களை (சிலரின் கருத்துப்படி கல்!!! இருக்கட்டும்) தரிசனம் செய்ய மட்டும் அல்ல, அது ஒரு மாபெரும் கலைகளின் வெளிப்பாடு (கட்டட கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை) மற்றும் அக்கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் சிறப்பான வாழ்க்கையை பறைசாற்றும் ஒரு ஊடகம். கோவில்கள் என்பது ஆத்திகர்களுக்கு உரியது என்று கருதுபவர்கள் அடி முட்டாள்கள் மற்றும் ஊரை ஏமாற்றும் புத்திசாலிகள்..... இந்த அடி முட்டாள்களும், சுரண்டல்வாதிகளும் ஆட்சி புரிந்தால் கோவிலை சுற்றிலும் பான்பராக்/புகையிலை கறைகள். சிதறிகிடக்கும் சிகரெட் துண்டுகள் மற்றும் உடைந்த மதுபான பாட்டில் துண்டுகள் என சகலமும் கிடக்கும்.

kggouthaman said...

// sreeja said...
ஒரு ஐடியா, பேசாம எல்லா கோவில் வருமானத்திலயும் ஒரு பங்கு அரசியல்வாதிகளுக்கு-னு சொன்னா //

ஒரு பங்கா!
ஹா ஹா ஹா --
ஏற்கெனவே எல்லா பங்கும் அவர்களுக்குப்
போய்க் கொண்டிருக்கிறது; அதில் ஒரு பங்கு
என்று சொன்னால் எந்த அரசியல்வாதி ஒப்புக் கொள்வார்?

Eswari said...

//"இந்தியாவுக்கு நெடிய வரலாறு உள்ளது. ஆனால், இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வு அறவே இல்லை" என்று சொன்னார் ஒரு மேற்கத்திய அறிஞர்.//
சரியாக தான் சொன்னார். வருத்த படவேண்டிய விஷயம்.

Anonymous said...

Why does god allow these to happen?

R.Gopi said...

//sreeja said...
ஒரு ஐடியா, பேசாம எல்லா கோவில் வருமானத்திலயும் ஒரு பங்கு அரசியல்வாதிகளுக்கு-னு சொன்னா ஒழுங்கா பராமரிப்பாங்களோ, இல்ல இருக்குறதயும் கிளப்பிட்டு போயிடுவாங்களோ ?//

ஆ............ஹா............. நீங்க சொன்ன மாதிரி பண்ணினா, "அத்திப்பட்டி" கதைதான்.....

R.Gopi said...

//sreeja said...
ஒரு ஐடியா, பேசாம எல்லா கோவில் வருமானத்திலயும் ஒரு பங்கு அரசியல்வாதிகளுக்கு-னு சொன்னா ஒழுங்கா பராமரிப்பாங்களோ, இல்ல இருக்குறதயும் கிளப்பிட்டு போயிடுவாங்களோ ?//

இப்போவே எல்லா எடத்துலேயும், அவங்க எடுத்தது போக, மிச்சம் / மீதிதான் கடவுளுக்கே கெடைக்கறது.....

இந்த ஐடியாவ சொன்னா, அவ்ளோதான், "கடவுளுக்கு" இப்போ கெடைக்கறது கூட கிடைக்காது....

Anonymous said...

S. Krishnamoorthy said//அறந்தாங்கிக்கு அருகில் இருக்கும் சிங்கவனம் எனப்படும் ஜமீன் கிராமத்துக்கும் போயிருந்தேன். அங்கு மிகவும் பழமையான் (500 ஆண்டுகளுக்கு முன் மராத்திய மன்னரால் கட்டப்பட்டு) பட்டாபி ராமன் கோயிலில் வழிபடலாம் என்று. கோயில் சிதிலமடைந்து, இன்றோ நாளையோ சாகக்கிடக்கும் கிழவனார் போல் காட்சியளித்தது//

Singavanam Jamin is our close family friend. I just spoke to the Jamin about the present condition of the (Pattabi Raman)temple. He said that since the temple is so old it cannot be renovated. But they built an another temple near to the old temple and had the Kumbabisekam 7 years back.

P.S. The old temple is still in their control and not with the govt. Please let me know if you need further details about the temple.

Kameswara Rao said...

இ,வ,

"அந்த நாட்களிலேயே, மஹா பெரியவாளிடம் புது கோயில் என்று போய் நின்றால், இருக்கும் கோவில்களில் ஒழுங்காக விளக்கெரிவதற்கு வழி பண்ணாலே போதுமென்பார்..."

தெய்வ வாக்கு

காமேஷ்

Anonymous said...

yet another excellent post from Mr.Inba and excellent comment from Mr.Erode Nagaraj

shiva said...

பக்தி இன்று ஆடம்பரமயமாகிவிட்டது.

வேலூர் பொற்கோவில் குறித்து
வருமானவரி துறை கண்டுகொள்ளாதது ஏன்?

sakshi said...

This article is very fine. Actually the information i had received about this temple was entirely different.

sakshi said...

Its a very worthful article. Need to be considered seriously. There are many more temples around kumbakonam which are not properly maintained or need to be renovated. There is one more Pattinathar temple (where he worshiped in his early days nearby kumbakonam in a village called sivapuram) its also in a damaged condition.
You might remember the story of Pattinathar's sister's house burned by the 'poisened appam'. That incident happened at that place and the house is opposite to the temple.

Anonymous said...

IV,

worthy to read
and very good post too

what is your own opinion and comments for this post and temple issues?

Anonymous said...

Politicians and black money holders are dumping crores of rupees in mutts. Look at the KANCHI SANKARACHARYA MUTT.

Where the got crores of rupees, they are running colleges, hospitals and they bought ex TAMILNADU HOSPITAL.

where the money came from....

CBI SHOULD PRONE THIS MUTTS...KACNHI...VELLORE...

MURALI