பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 29, 2009

தடைக்கு தடை - அ.ராசா - ஜூவி மோதல்

இந்த வார ஜூவியில் என்ற தலைப்பில் வீடியோவுடன் கூடிய நியூஸை போட்டிருக்கிறார்கள். முதல் முறையாக ஜூவி இந்த செய்தியை ஆங்கிலத்திலும் வெளியிட்டிருக்கிறது.

இன்று ஆ.ராசா பற்றிய அவதூறான செய்திகளை வெளியிட ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் இடைக்கால தடை விதித்துள்ளது.

நடப்பது நன்மைக்கே என்று நம்புவோம். நிச்சயம் ஜூவி இந்த பிரச்சனையை சும்மா விடாது என்று நினைக்கிறேன்....


டி.எஸ். காயத்ரி ஸ்ரீனிவாஸ்...

ஆளுங்கட்சியான தி.மு.க-வின் மாநில தொண்டரணி இணைச் செயலாளர், தமிழ்நாடு மின்வாரிய உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப் பினர் என்றும் முன்னாள் கதர் வாரிய மகளிர் கூட்டுறவு சங்க தலைவர் என்றும் இவரது கறுப்பு - சிவப்பு பெயரோடு சொல்கிறது விசிட்டிங் கார்டு'! பளிச்சென்று முதல்வர் கருணாநிதியும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் அந்த விசிட்டிங் கார்டில் புன்னகை பூக்கிறார்கள். எம்.ஏ., எம்.ஃபில் முடித் திருப்பதாகவும் சொல்கிறது இவரது கார்டு.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப் பாளையத்தில் தான் இவருக்கு வீடு என்றாலும்,

காயத்ரி ஸ்ரீனிவாஸ் நமக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருந்தது கோவை பீளமேடு அண்ணாநகரில் உள்ளஅவருடைய பங்களாவில்!

''ஆளுங்கட்சியின் பெயரால்... மத்திய - மாநில அமைச்சர்களிடம் சொல்லி காரியத்தை முடித்துக் கொடுப்பதற்கு ஏராளமான புரோக்கர்கள் இருக்கி றார்கள். அவர்களில் டாப் மோஸ்ட் புள்ளிதான் சத்தமில்லாமல் செயல் படும் காயத்ரி ஸ்ரீனிவாஸ்...'' என்று தொடர்ந்து பல மாதங்களாக நமக்கு வந்துகொண்டிருந்த தகவல்களை உறுதிப்படுத்த எல்லா வழிகளிலும் முயன்றுகொண்டிருந்த சமயத்தில்தான், மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் கான்ட்ராக்ட் கள்எடுத்துக் கொடுக்கும் இடைத்தரகர் ஒருவர் நம்மைத் தொடர்பு கொண்டார்.

''அநியாயம் நடக்குதுங்க. முந்தியெல்லாம் காசு கொடுத்தா, அது போக வேண்டிய இடத்துக்கு முழுசா போயிடும். வேலையும் முடிஞ்சிடும். இப்போ நடுவில் உள்ள நந்திகளுக்கு தீனி போட்டே எங்க சொத்து அழிஞ்சுடும் போலிருக்கு. அதிலும் காயத்ரி ஸ்ரீனிவாஸ் மூலமா போனா, ரெட்டிப்பு செலவு ஆகுது. என்ன பண்றது? வேற யார் மூலமா போனாலும் காரியம் நடக்காதுனு கட்சிக்காரங்களே சொல்றாங்களே...'' என்று சலித்துக் கொண்டார் அந்த இடைத்தரகர்

அப்போதும் நாம் நம்பத் தயாராக இல்லை. ஜூ.வி-க்கு மிக நம்பகமான ஒரு நபர், ''ரகசிய வீடியோ பதிவாகவே ஒரு பேரம் நடத்திப் பார்த்துவிட்டால் என்ன?'' என்று முன்வர... அடுத்தடுத்து நடந்தன வேகமான ஏற்பாடுகள். இடைத்தரகர் அளித்த விவரங்களை மிக கவனமாக உள்வாங்கிக் கிரகித்துக்கொண்டபின்.... இரண்டு பேராக இந்த ஆபரேஷனைச் செய்வது என்று முடிவானது. அதாவது, இடைத்தரகர் போல நடிக்க ஒருவர்.... மத்திய அரசின் கான்ட்ராக்டைப் பெற விரும்பும் ஆந்திர மாநிலத்துக் கம்பெனியின் அதிகாரியாக ஜூ.வி. நபர் ஒருவர்...!

ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை சாலைகளில் பதிப்பதற்காகத் தொலைத் தொடர்புத் துறையின் - பி.எஸ்.என்.எல்-லின் டெல்லி தலைமையகம் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டிருந்த டெண்டர் அறிவிப்புதான் இந்த இருவர் டீமின் 'பொறி'!

காயத்ரி ஸ்ரீனிவாஸை தொடர்பு கொள்ளக்கூடியது என்று நம்மிடம் அளிக்கப்பட்ட செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டார் 'இடைத்தரகர்' (அதாவது இடைத்தரகராக நடிக்க முன்வந்தவர்). ஏற்கெனவே இன்னொரு நபர் மூலம் கான்ட்ராக்ட் தொடர்பான விவரங்களை காயத்ரி ஸ்ரீனிவாஸ் காதுக்கு அனுப்பி வைத்துவிட்டு... அதன்பிறகுதான் செல்போனில் விஷயத்துக்கு வந்தார். அந்த ஆடியோ பதிவு இதோ ('இடைத்தரகர் தொடர்புகொண்ட செல் நம்பர் 9442578555. தொடர்பு கொண்ட தேதி ஜூலை 23, வியாழன் மதியம் சுமார் 3 மணி) -

இடைத்தரகர்: ''மேடம்... அவங்க என்ன சொல் றாங்க... இப்ப... அதாவது... டெண்டர் டேட் ஆகஸ்ட் ஏழாம் தேதி தள்ளி வச்சிருக்காங்க.''

எதிர்முனை பெண் குரல்: ''சரி!''

இடைத்தரகர்: ''இப்ப டெண்டர் ஃபைல் எல்லாம் வந்துடுச்சு. நாளைக்கு நைட் கிளம்பி சனிக்கிழமை காலையிலே உங்களை பார்க்கட்டுமா?''

எ.மு.பெ.கு: ''எங்கே வந்து பார்க்கறீங்க?''

இடைத்தரகர்: ''கோயமுத்தூர்ல?''

எ.மு.பெ.கு: ''ரைட்டு! அவங்க (டெண்டர் எடுக்க விரும்பும்) கம்பெனியோட ஜி.எம்-மையும் ஒருதடவை அனுப்பி வைக்கிறேன்னு சொன்னாங்க. அவரு வந்து கன்ஃபார்ம் பண்ணுவாரு...''

இடைத்தரகர்: ''அவரு வந்து கன்ஃபார்ம் பண்ணு வாரு... இன்பிட்வீன் உங்களுக்கு என்ன சேரவேண்டியதோ அதை பேசிட்டு ஒரு டோக்கன் அட்வான்ஸ் மாதிரி த்ரீ டேஸ்ல குடுக்கச் சொல்லிடறேன். ஏன்னா... நாள் நெருங்கிதான் இருக்கு!''

எ.மு.பெ.கு: ''ஆகஸ்ட் ஏழுன்னா ஃபுல் டீடெயில் ஸையும் கொண்டாந்துடுங்க.. அவரு(?) சி.எம்.டி-யை (பி.எஸ்.என்.எல். அதிகாரி?) வச்சுப் பேசுவாரு. சனி, ஞாயிறு மெட்_ராஸ்ல இருப்பாருனு நினைக்கிறேன்... இல்லேன்னா ஊட்டி வந்திடுவாரு. அப்படி ஊட்டி வந்தார்னா, நீங்க கோயமுத்தூர் வரும்போது ஊட்டிக்குப் போய் பார்த்துடலாம்.''

இடைத்தரகர்: ''ஓ.கே... ஓ.கே. உங்களை முதல்ல பார்த்துட்டோம்னா அவங்களுக்கு சேட்டிஸ்ஃபை ஆயிடும்!''

எ.மு.பெ.கு: ''ரைட்டு!'

இடைத்தரகர்: ''ஏன்னா... மேடம்னாலேதான் எல்லாம் முடியும்னு நான் சொல்லி வச்சிருக்கேன்!....''

இவ்வாறாக நீளும் அந்த தொலைபேசி உரையாடலின் பதிவை முதலில் பத்திரப்படுத்திக் கொண்டோம். ''மீடி யேட்டரே இதுல கிடையாது... டைரக்டா அவரே(?)தான் பேசுவாருங்க'' என்பது போன்ற டெல்லி தொடர்புகள் தவிர, வேறு பல விஷயங்களும் அந்த உரையாடலில் பேசப்படுகின்றன. இப்போதைக்கு அவை இந்தக் கட்டுரைக்குத் தொடர்பில்லாததால் வாசகர்களின் பார்வைக்கு அளிக்கவில்லை!

ஜூலை 25-ம் தேதி, சனிக்கிழமை காலை 10.40 மணிக்கு கோவையில் பீளமேடு அண்ணாநகர் வீட்டில் காயத்ரி ஸ்ரீனிவாஸ் எதிரில் இடைத்தரகராக ஒரு நபரும் ஜூ.வி. நபரும் ஆஜராகிவிட்டார்கள். நேராக அந்த வீட்டுக்குப் போய்விட முடியவில்லை. பக்கத்துத் தெருவிலேயே நம்மை நிற்கும்படி செல்போனில் உத்தர விட்டார்கள்!

நாமும் அங்கே இனோவா காரை நிறுத்திவிட்டுக் காத்திருக்க... 'ராஜேஷ்' என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்ட ஒரு நபர் அங்கே வந்து காரில் ஏறிக்கொண்டு காயத்ரி ஸ்ரீனிவாஸ் வீட்டுக்கு வழி காட்டினார் (நமது வீடியோ கேமரா பதிவு முழுவதும் இவரும் வருகிறார். விவரமறிந்த தி.மு.க. வட்டாரத்தில் இவர் உருவத்தைக் காட்டி விசாரித்தபோது, ''ராஜேஷ்னா சொன்னாரு? இவர் பேரு சந்திரமோகனாச்சே... அருப்புக்கோட்டை பக்கத்துல பாளையம்பட்டிதான் இவரோட சொந்த ஊரு. அருப்புக்கோட்டையில் கேபிள் ஆபரேட்டரா கஷ்டப்பட்டு ஜீவனம் பண்ணிக் கிட்டிருந்தார் சந்திரமோகன்... செஞ்சியார் மத்திய அமைச்சரா இருக்கும்போது சி.பி.ஐ. வழக்கில் அவரோட உதவியாளர் பாபு மாட்டுனாரே ஞாபகம் இருக்கா..? பாபுவுக்கு ரொம்ப வேண்டப்பட்டவரா சந்திரமோகன் ஆயிட்டாருன்னு பிறகு சொன்னாங்க. இப்ப கோவை ஏரியாவில் காரு, பங்களானு ஜம்முனு இருக்கிற சந்திரமோகன், தன்னை காயத்ரி ஸ்ரீனிவாஸோட உதவி யாளர்னு சொல்லிக்கிறாரு'' என்று நமக்கு வேறுவிதமான விளக்கம் 'ராஜேஷ்' பற்றி கிடைத்தது!).

நிற்க....

'ராஜேஷ்' என்கிற சந்திரமோகன் இனோவா காரில் ஏறிக்கொண்டதோடு இடைத்தரகரிடமும் ஜூ.வி. நபரிடமும் பல்வேறு விதமான கேள்விகளைக் கேட்டு திருப்தி ஆனவுடன்தான், காயத்ரி ஸ்ரீனிவாஸின் பங்களா வுக்கு அழைத்துச் சென்றார். மேற்கொண்டு நடந்ததை ஜூ.வி. நபர் இங்கே விவரிக்கத் துவங்குகிறார் -

வீட்டுக்குள் போன 'ராஜேஷ்', அங்கிருந்த வேலைக் காரரிடம், ''பீமா எக்கட?'' (பீமா எங்கே) என்றார். கொஞ்ச நேரத்தில் கொழுகொழுவென்று ஒரு கறுப்பு நாய் ஒன்று எங்களை நோக்கி ஓடி வந்தது.

''அது எதுவும் செய்யாதுங்க. எங்க மேடமுக்கு எல்லாமே இந்த பீமாதான்'' என்றபடி எங்களை சோபாவில் அமரச் செய்த 'ராஜேஷ்' கலை நயம்மிக்க ஊஞ்சலில் அமர்ந்துகொண்டார். அந்த வீட்டு ஹாலின் ஷோகேஸில் ஸ்டாலின், ஆற்காட்டார், அன்பழகன் என தி.மு.க-வின் மூத்த தலைவர்களுடன் காயத்திரி ஸ்ரீனிவாஸ் சேர்ந்து நிற்கும் புகைப்படங்கள் அழகாக, வரிசையாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தன் மகனோடு தானும் சேர்ந்து தமிழக முதல்வர் கருணாநிதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனியாக தொங்க விட்டிருந்தார் காயத்ரி.

பீமா, ஹாலைச் சுற்றி ஒரு ரவுண்ட் அடித்து பெட் ரூமுக்குள் போனபிறகு காயத்ரி பெட்ரூமிலிருந்து ஹாலுக்கு பிரசன்னமாகி, எங்கள் எதிரில் சோபாவில் அமர்ந்துகொண்டார்.

காயத்ரி ஸ்ரீனிவாஸ்: ''என்ன மேட்டர்? செப்பண்டி!''

இடைத்தரகர் : ''ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் டெண்டர்தான், மேடம்... தமிழ்நாட்டுல இருநூறு கிலோ மீட்டருக்கு கேபிள் பதிக்க (என்னைக் காட்டி) இவங்க கம்பெனி பிளான் பண்ணுது!''

காயத்ரி: ''என்ன பர்ப்பஸ்?''

காரில் அந்த வீட்டை அடையும்போதே 'ராஜேஷ்' வசம் இடைத்தரகர் முழு விவரம் சொல்லி, டெண்டர் காப்பியும் கொடுத்திருந்ததால்... அவரே காயத்ரியிடம் எல்லாம் விளக்குகிறார், தெலுங்கில்!

இடைத்தரகரைப் பார்த்து காயத்ரி: ''ராஜா(?) சேஸ்தாரு... ராஜாதான் செய்வாரு!''

இடைத்தரகர்: ''மேடம் பத்தி சொன்னாங்க. கேள்விப்பட்டுதான் உங்களைப் பிடிச்சு இந்த வேலையைச் செய்யலாமுன்னு....''

காயத்ரி: ''பை எலெக்ஷன் வருது... எப்படியும் (கட்சியில் எனக்கு) புரோக்ராம் கொடுத்துடுவாங்க. தொகுதிக்குப் போகணும். அதில்லாம பீமாவை விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன். டெல்லிக்கு, சென்னைக்குப் போனாலும்கூட பீமாவையும் கூட் டிட்டுப் போயிடுவேன். போன வாரம் மினிஸ்டர்(?) இங்கதான் தங்கியிருந்தாரு!''

இடைத்தரகர்: ''இந்த வீட்டுலயா?''

காயத்ரி: ''குன்னூருக்குப் போனவர், போன வேகத்துலயே இறங்கிட்டாரு. அவருக்கு குளிர் ஒத்துக் காது. கோயம்புத்தூர் வந்து ரெஸிடன்ஸியில அவரு தங்கிட்டாரு. அமைச்சரை ஹோட்டல்ல ரெஸ்ட் எடுக்க விட்டுட்டு அவங்க ஒய்ஃப் எங்க வீட்டுல தங்குனாங்க. உங்க மேட்டரை அமைச்சர்கிட்ட சொல்லிடறேன். உங்களை இந்த வேலைக்காக யார் முன்னால உட்கார வைக்கிறேங்கறதுதான் இங்க முக்கியம்! இதைப் போலத்தான் பி.எஸ்.என்.எல். கான்ட்ராக்ட் ஒண்ணை முடிச்சுக் கொடுத்தேன். இதோ இவரோட ('ராஜேஷ்' பக்கம் கைகாட்டி) ஃபிரெண்டுக்குதான் முடிச்சுக் கொடுத்தோம். அது பி.எஸ்.என்.எல். விளம்பர கான்ட்ராக்ட்...''

இடைத்தரகர்: (ஏற்கெனவே விவரம் தெரிந்தவராக) ''செஞ்சியார் பி.ஏ-வா இருந்த பாபுவுக்கா?''

காயத்ரி: ''ஆமா...!''

இடைத்தரகர்: ''ராஜாவுக்கு வேணுங்கறதை நாங்களே தரணுமா?''

காயத்ரி: ''அவர் வாங்க மாட்டார். என்ன பண்ணணுங்கறதை அவரே சொல்லுவார்!''

ராஜேஷ்: ''அதையெல்லாம் ஸ்பிளிட் பண்ணி பிரிச்சுடுவாங்க...''

காயத்ரி: ''நீங்க உங்க மேட்டரை மினிஸ்டரை வெச் சிட்டு எக்ஸ்ப்ளெய்ன் பண்ணணும். சி.எம்.டி-யெல்லாம் பழம் தின்னு கொட்டை போட்ட ஆளு. என்ன பண்ணணுமோ அதை அவர் பார்த்துக்குவாரு. (டெல்லி?) சஞ்சார் நிகம் ரிசப்ஷன்ல உங்களை உட்கார வெச்சு, மேலே அனுப்பிடுவேன். என் பேர்கூட (விசிட்டர் புக்கில்?) வராது. மினிஸ்டரே கூப்பிட்டாதான் உங்களால அந்த கட்டடத்துக்குள்ள போகமுடியும். அவரோட பி.ஏ. செந்திலியாவும் அங்கே இருப்பார். உங்களுக்கு மினிஸ்டர் பர்ஸனல் சிட்டிங் கொடுப்பார். அதுக்கெல்லாம் நான் கியாரண்டி! ஆனா ஒண்ணு.. நாங்க ஃபிளைட் சார்ஜ் போட்டு டெல்லிக்கு வர மாட்டோம். என்கூட ஒருத்தர் வருவாரு. பெரிய புராஜெக்ட்னாத்தான் மினிஸ்டர் வருவாரு...''

ராஜேஷ்: ''இந்த மாதிரி விஷயமெல்லாம் ஒரே சேனல்லதான் நீங்க மூவ் செய்யணும்!''

காயத்ரி: ''நான் ரொம்பவும் வெளியில வரமாட்டேன். தமிழ்நாட்டுல இ.பி. விவகாரங்களையெல்லாம் இவருதான் (ராஜேஷ்) பார்த்துக்குவாரு. மேட்டூர் தெர்மல் பிளான்ட்ல ஆஷ் எடுக்கறதுக்கெல்லாம் இவர்தான் போவாரு. ஸ்டேட்ல இ.பி., ஹெல்த், டிரான்ஸ்போர்ட், ஹைவேஸ் எதுனாலும் நம்ம வேலையை முடிச்சுக்கிடலாம்.''

ராஜேஷ்: ''ஆமா... நாலும் நைன்ட்டி நைன் பர்சன்ட் முடிச்சிடலாம்!'''

காயத்ரி: சாமிநாதன் (நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்?) நம்ம பையன் தான். என் சொந்த முயற்சியிலதான் மினிஸ்டர் ஆனான். இ.பி-யிலும் பெரிய லெவல்னா சொல்லுங்க. நீட்டா முடிச்சுடலாம். எங்க இருந்தாலும் என்னோட பாலிஸி என்ன தெரியுமா? சம்பந்தப்பட்ட அமைச்சரோடவே டைரக்ட் சிட்டிங் ஏற்பாடு செஞ்சிடுவேன். சக்சஸ்தான் எனக்கு முக்கியம்!''

இடைத்தரகர் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிப்பது பற்றி சொல்லச் சொல்ல... காயத்ரி சிறு நோட்டில் குறிப்பெடுத்துக் கொண்டார்.

தமிழ்நாட்டில் மொத்தம் 244 கிலோமீட்டருக்கு வை-மேக்ஸ் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பத்துக்காக ஆப்டிகல் ஃபைபர் கேபிளை பதிப்பதற்கான கான்ட் ராக்ட் என்றும், இந்த மாநிலத்தில் மட்டும் 60 கோடி ரூபாய்க்கான விவகாரம் என்றும் ராஜேஷ§டன் உரை யாடல் நடக்கிறது. 3-ஜி மற்றும் வை-மேக்ஸ் பற்றி விளக்கமாகவே கேட்டுக் கொள்கிறார் காயத்ரி.

''தமிழ்நாட்டுல மட்டும்தான் கான்ட்ராக்ட் எடுப் பீங்களா? ஆந்திரா, கர்நாடகாவுலகூட எடுக்கலாமே..?'' என்றும் என்னிடம் (ஜூ.வி. நபர்) கேட்டபடியே கையடக்க நோட்டில் விவரங்களைக் குறிப்பெடுத்துக் கொள்கிறார்.

என்னை (ஜூ.வி. நபர்) கான்ட்ராக்ட் பெற விரும்பும் கம்பெனியின் ஜி.எம். என்று அறிமுகப்படுத்தியிருந்ததால் இடையிடையே சில விவரங்களை 'ராஜேஷ்' கேட்டு செக் பண்ணிக்கொண்டே இருந்தார். உரையாடல் நடந்துகொண்டிருந்தபோதே, 'ராஜேஷ்' வைத்திருந்த செல்போனை வாங்கி யாருக்கோ டயல் செய்தார் காயத்ரி. படுஅந்நியோந்நியமாக அவர் பேசியதன் விவரம் இதுதான் -

''நான்தான் காயத்ரி ஸ்ரீனிவாஸ்! நேத்து நைட் வந்துட் டீங்களா? (இடைவெளி) ஊட்டிக்கு வர்றீங்களா? (இடை வெளி) எப்ப டெல்லிக்குப் போறீங்க? (இடைவெளி) அப்படியா, சரி நான் நேர்ல வந்து உங்களைப் பார்க் கறேன்!''

போனை கட் செய்தவர் எங்கள் பக்கம் திரும்பி, ''இந்த வீக் அவர் ஊட்டிக்கு வரலையாம். திங்கள்கிழமை டெல்லிக்குக் கிளம்புறாராம். அவர் ஊட்டிக்கு வந்தார்னா இப்பவே உங்களை இவருகூட ('ராஜேஷ்' என்கிற சந்திரமோகன்) அனுப்பி வச்சிருப்பேன்!''

இடைத்தரகர்: ''நீங்க எப்ப அரசியலுக்கு வந்தீங்க, மேடம்?''

காயத்ரி: சிரித்துக் கொண்டே.. ''ஆச்சு, இருபது வருசமாச்சு..! நான் அரசியலுக்கு வந்ததே பிஸினசுக்காகத்தான்... வேற எதுக்கும் இல்ல!''

மீண்டும், பி.எஸ்.என்.எல். ஆப்டிகல் கேபிள் பற்றி விலாவாரியாகப் பேசினார். திரும்பவும் சந்திரமோகன் டெண்டர் குறித்த விஷயங்களை காயத்ரிக்கு தெலுங்கிலும் தமிழிலுமாக விளக்கினார்.

''மொத்த கான்ட்ராக்டையும் உங்க ஒருத்தருக்கே தரமாட்டாங்க புரிஞ்சுதா?'' என்றும், ''உங்க கான்ட்ராக்டுக்குள்ளே இன்னொருத்தர் யாராச்சும் ஒரு பார்ட் எடுத்து செய்யறதா இருந்தா, அதுக்கும் நீங்க தயாரா இருக்கணும், புரிஞ்சுதா?'' என்றும் காயத்ரி எங்களிடம் கேட்டு உறுதி வாங்கிக்கொண்டார்.

இடையிடையே தி.மு.க-வின் பெருந்தலைகள், குடும்பங்கள் பற்றி சில 'புள்ளி'விவரங்கள் வந்து விழுந்தன. அவையெல்லாம் இந்த விவகாரத் தோடு தொடர்பில்லாதவை என்பதாலும், தேவையில்லாமல் யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்பதாலும் இங்கே வெளியிடாமல் தவிர்க்கிறோம்.

ராஜேஷ்: ''கேபிள் பதிக்கிற கான்ட்ராக்ட் மட்டும்தான் நீங்க எடுக்கப் போறீங்களா..? இல்லாட்டி அதுக்கான கேபிளும் சப்ளை பண்ண விரும்பறீங்களா?''

இடைத்தரகர்: ''கேபிள் பதிக்கறதுக்கு மட்டும்தான் நாங்க டெண்டர் கேட்கலாமுன்னு இருக்கோம். மொத்த புராஜெக்ட் காஸ்ட் எப்படியும் இருநூறு கோடிக்கு மேல வரும்னு சொன்னாங்க...''

காயத்ரி: ''கோடின்னா அந்த வீடு(?) கண்டிப்பா உள்ளே வந்துடும், புரியுதுங்களா, அதான்... சம்பந்தப்பட்ட குடும்பம் உள்ளே வரும். (அடுத்தடுத்து ஆளுங்கட்சியில் சில பெரிய பெயர்களாகச் சொல்லி) .......... பிரஷ்ஷர் வரும். இப்படித்தான் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு சம்பந்தமா பி.எஸ்.என்.எல் விளம்பர கான்ட்ராக்டை பாபு கேட்டப்ப, அமைச்சர் தரலை. 'நீ பாகிஸ்தான் மேட்ச் வரும்போது விளம்பரம் கேளு, தர்றேன்'னாரு. சொன்னபடியே தந்தாரு. ஏன்னா எல்லாரையும் அட்ஜஸ்ட் பண்ணி அவர் போயாகணும். அவர் உட்கார்ந்திருக்கற இடம் அந்த மாதிரி. தனக்கு சிம்மாசனம் கொடுத்த(?) இடத்துக்கு ஏதாவது கொடுத்தாகணும்ங்கறது அவரோட பாலிஸி. சென்ட்ரல் கவர்ன்மென்ட்ல ஒரு இணை அமைச்சரை தனியா போட்டு இதையெல்லாம் வாட்ச் செய்வாங்க. அதிகாரிங்க ஒரு லாபி பண்ணுவாங்க. நம்ம அமைச்சர் அவங்களை மறுத்துப் பேச மாட்டார். ஏன்னு உங்களுக்குப் புரியுதா? நாமளா இருந்தா... 'நான்தான் மந்திரி! மூடிட்டு கையெழுத்துப் போடு'னு (அதிகாரிகளிடம்) சொல்லுவோம். அவர் அப்படியெல்லாம் இல்லை!''

இடைத்தரகர்: ''இவ்வளவு யதார்த்தமா பேசறீங்க... இவ்ளோ தூரம் இன்ட்ரடியூஸ் பண்றீங்க. உங்களுக்கு ஒரு ட்வென்ட்டி லேக்ஸ் (இருபது லட்சம்) வரைக்கும் கொடுக்கலாம்னு இவங்ககிட்டே (என்னைக் காட்டி) சொன்னேன், மேடம்!''

காயத்ரி: ''பணத்தை முதல்ல வாங்க மாட்டோம். முதல்ல டெல்லிக்குப் போவோம். நானும் உங்களைப் புரிஞ்சுக்கணும் இல்லையா... நீங்க டெல்லிக்கு வாங்க. அங்கே ரிசப்ஷன் எப்படி இருக்குனு பாருங்க. அப்புறமா பார்த்துக்கலாம். நீங்க இவ்வளவு தூரம் சொல்றீங்க. இந்த புராஜெக்டை சக்ஸஸ் பண்ணிக் காட்டுறேன். அப்புறம் நீங்களே பார்த்துக் கொடுங்க! அந்தக் குடும்பமே(?) தலையிட்டாலும் பரவாயில்லை. ஆற்காட்டாரை வெச்சு முடிச்சுத் தரேன்!''

ராஜேஷ்: ''இங்கதான் பெரிய குடும்பம்... பிரஷ்ஷர்னு இருக்கும். வேற ஸ்டேட்லயெல்லாம் இப்படியெல்லாம் இல்ல!''

காயத்ரி: ''மேட்டர்னு பெத்தாயின முந்தட்டுல பெட்டுத்தோம். (விஷ யத்தை பெரியவர் முன்னாடி வெப்போம்) சக்சஸ் சேஸ்தாம். நீங்க மினிஸ்டரைப் பார்க்கும்போது நல்லா விளக்கமா புரியுறமாதிரி பேசிடணும். இல்லைன்னா அவர் தன்னோட பி.ஏ-வைப் பார்க்கச் சொல்லிட்டுப் போயிடுவாரு. எப்ப டெண்டர் முடியுது? டெண்டர் போட்டுத்தான் இதைப் பண்ணணுமா? மினிஸ்டரே பண்ணிடக் கூடாதா?''

உடனே, இடைத்தரகர் முதலி லிருந்து அந்த டெண்டர் பற்றி விவரிக்கும் காட்சிகளும், அதை காயத்ரி குறிப்பெடுத்துக் கொள்வதும் நாங்கள் கொண்டு போன ரகசிய வீடியோ கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது.

காயத்ரி: ''மினிஸ்டர் தொகுதிக்கு வந்தா இதைப் பத்திப் பேச முடியாது. இந்தப் பொம்பளை இங்க ஏன் வந்தாங்கன்னு தொகுதியில பார்ப்பாங்க. அவரும் நம்மளை பார்க்க மாட்டாரு. நாம் டெல்லிக்கு போய்த்தான் இந்த மேட்டரை முடிக்கணும். புதன்கிழமை டெல்லிக்குப் போயிடணும். வியாழக்கிழமை காலையில மினிஸ்டர் வீட்டுக்குப் போய் நேர்ல உங்க விஷயத்தைப் பத்திப் பேசிடுவேன். அப்புறம் நிகம் (தொலைத் தொடர்பு டெல்லி அலுவலகம்) வந்து பார்த்திடுவாரு...''

இடைத்தரகர்: (என்னைக் காட்டி) ''நான்தான் இந்த கம்பெனிக்காரங்களை உங்களுக்கு அறிமுகம் செஞ்சு வெச்சிருக்கேன். ரொம்ப நாளா உங்க அப்பாயின்ட் மென்ட் கிடைக்காம கஷ்டப்பட்டு உங்களைப் பார்க்க வெச்சிட்டேன். எனக்கு இதுல என்ன பங்குங்கறதையும் நீங்களே சொல்லிடுங்க, மேடம்...''

காயத்ரி சிரித்துக் கொண்டே தலையாட்டுகிறார்.

ராஜேஷ்: ''அம்மா யாரையும் விட்டுர மாட்டாங்க. நீங்க கேக்கவே வேண்டியதில்லை. அவங்களை

நம்புங்க...''

மீட்டிங் முடியும் தருணத்தில் திரும்பவும் அறைக்குள் இருந்து பீமா வருகிறது. நாம் கொண்டு போயிருந்த ஸ்வீட் பாக்ஸை வாயால் கவ்வி காயத்ரியிடம் கொடுக்கிறது.

காயத்ரி: ''எதுன்னாலும் இது என்கிட்டதான் கொடுக்கும். எனக்குப் பிடிச்சதை கொடுக்கும். என் மனசு இதுக்குப் புரியும்!'' என்று சொல்லிக் கொண்டிருக் கும்போதே இடைத்தரகர் தயார் செய்து எடுத்துப் போயிருந்த பி.எஸ்.என்.எல். தொடர்பான டெண்டர் கோப்புகளை பீமா சட்டென்று கவ்விக்கொண்டு ஓடவும்....

காயத்ரி: ''பார்த்தீங்களா... பீமா கவ்வியாச்சு. இந்த வேலையை பீமா செய்யச் சொல்லுது!'' என்றபடியே வாசல் வரை வந்து எங்கள் இருவருக்கும் விடை கொடுத் தார்.

அடுத்தநாள், ஜூலை 26-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை 'இடைத்தரகராக' நடித்தவருக்கு போன் செய்தார் 'பிரகாஷ்' என்று அறிமுகப்படுத்திக்கொண்ட நபர். அழைப்பு வந்த செல் நம்பர் 9842299722.

''மினிஸ்டர்கிட்டே பேசியாச்சு... நாங்க அந்த கம்பெனி ஜி.எம்-கிட்டே அர்ஜென்ட்டா பேசணும். முக்கியமா மேடம்தான் பேசணும்னு சொன்னாங்க. அவரைப் பேசச் சொல்லுங்க'' என்கிற ரீதியில் அடுத்தடுத்து போன் வந்துகொண்டே இருந்தது.

'ராஜா' என்றும் 'மினிஸ்டர்' என்றும் காயத்ரி ஸ்ரீனிவாஸ் கூறுவது மத்திய அமைச்சரும், சம்பந்தப்பட்ட துறைக்கு பொறுப்பானவருமான ஆ.ராசாவை குறிப்பிட்டுத்தான் என்றே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அமைச்சரின் பெயரால் நடக்கும் இந்த பேரத்தின் மூலம் நிஜமாகவே கான்ட்ராக்ட்டுகளை முடிக்க முடியுமா... அப்படி இதற்குமுன் முடிக்கப்பட்டிருக்கிறதா என்பதையெல்லாம் கண்டு பிடிக்கும் பொறுப்பை மத்திய - மாநில அரசுகளிடமே ஒப்படைக்கிறோம். இந்த ஆபரேஷனுக்குப் பிறகு நமது இருவர் டீம் பதிவு செய்து கொண்ட விவரங்களையும், எந்த இடத்திலும் அளிக்கத் தயாராகஇருக்கிறோம்.

காயத்ரி ஸ்ரீனிவாஸ் என்கிற இந்தப் பெண்மணி ஆளுங்கட்சியான தி.மு.க-வைச் சேர்ந்தவர்! அவரிடம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸாரே விசாரணை நடத்தினால் எதிர்க்கட்சிகளாலும் மற்றவர்களாலும் அது ஒருதலைபட்சமாக பார்க்கப்படும் என்று முதல்வர் கருதினால்... பேசாமல் இதை சி.பி.ஐ. விசாரணைக்கேகூட விட்டுவிடலாம்.

இதுவரை காயத்ரி பேசிய தொலைபேசி எண்கள்... இதுவரை அவர்மூலம் முடிக்கப்பட்ட(?) கான்ட்ராக்ட் தொடர்பான தகவல்கள்.... அதில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள்.... இப்படி எல்லா விவரங்களையும் சி.பி.ஐ. மூலமாக வெளி உலகத்துக்குக் கொண்டு வந்து 'அக்னிப் பிரவேசம்' செய்ய தி.மு.க. அரசு தயங்காது என்றே நம்புவோம்!
( நன்றி: ஜூவி, விடியோ துண்டுகள் ஜூவி சைட்டில் இருக்கிறது)
மத்திய அமைச்சர் ஆ.ராசா பற்றிய அவதூறான செய்திகளை வெளியிட ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய அமைச்சர் ஆ.ராசா பற்றி ஜூனியர் விகடன் செய்தி வெளி யிட்டிருந்தது. அதில் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு செய்திகளை பிரசுரித்தது.
.
இதனை எதிர்த்து ராசாவும், அவருடைய மனைவி பரமேஸ்வரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு முதலில் விசாரித்த நீதிபதி ஜெயபால், ஜூனியர் விகடனுக்கு இடைக்கால தடை விதித்திருந்தார்.
பின்னர் விசாரித்த நீதிபதி கே.சந்துரு அந்த தடையை நீக்கியதுடன் ராசாவின் அவதூறு வழக்கு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் வழக்கு செலவுக்காக ஜூனியர் விகடனுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராசாவும், அவரது மனைவி பரமேஸ்வரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது: பத்திரிகை சுதந்திரம் என்பது முழுமையான சுதந்திரம் கிடையாது. மோசடி செய்து புகைப்படத்தை வெளியிடுவது, குடும்ப உறுப்பினர்களை பற்றி தனிப்பட்ட விவரங்களை எழுதுவது என்பது, குறிப்பாக அவர்களது குழந்தைகளது உரிமையை பாதிக்கும் செயலாகும். இந்த வழக்கின் தன்மையை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்பு இரண்டு தரப்பிலும் விசாரித்து செய்தியை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றமே ஒரு வழக்கில் குறிப்பிட்டுள்ளது. ஜூனியர் விகடனுக்கு அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீசுக்கு அந்த பத்திரிகை சார்பில் பதிலளிக்கப்பட்டபோது செய்தி நூறு சதவீதம் உண்மையானதல்ல என்று பதிலளித்துள்ளது.

எனவே ஆ.ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி செய்தி வெளியிட ஜூனியர் விகடனுக்கு தடை விதிப்பதுடன் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் ரவிராஜபாண்டியன், ஜனார்த்தன ராஜா ஆகியோரை கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

ராசா மற்றும் அவரது மனைவி சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.டி.கோபாலன், பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
இவர்களது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அவதூறு செய்தி வெளியிடுவதற்கு ஜூனியர் விகடனுக்கு இடைக்கால தடை விதித்தும்அவர்கள் உத்தரவிட்டனர். இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
( நன்றி: மலைசுடர் )மஞ்சள்1: வீடியோ ஆரம்பத்தில் "பழைய பாத்திரம் இரும்பு பேப்பார்..." என்று வெளியே ஒருவர் விற்றுக்கொண்டு போகும் சத்தம் கேட்கிறது!

மஞ்சள்2:
நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டன் கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான்

20 Comments:

ந.லோகநாதன் said...

ஜூ.வி... க்ரேட்... இந்த மாதிரி செயல்களை தொடர்ந்து அம்பலபடுத்தவும்...

Anonymous said...

மீண்டும் ஒரு மர்ம நாவலா?
நடத்துங்கள் நாச வேலையை
இங்கு நீங்கள் ஊதுவது
சங்கு - கேட்காது அங்கு.
ஏனென்றால் அவர்கள்
காதைப் பொத்திக் கொண்டு
கண்களை திறந்து கொண்டு,
கைகளை நீட்டிக் கொண்டு!

Baski said...

Bravo..!

ராஜா மற்றும் காயத்ரிக்கு ஆப்பு உறுதி.

clayhorse said...

நிஜமான ப்ரோக்கர் ஒரே சிட்டிங்கல இவ்வளோ விஷயமா சொல்லுவாங்க? எதைத்தான் நம்புறது?

R.Gopi said...

ஆ.....ஹா........... மறுபடியுமா ராசா??? திரும்பவும் ராசாவேவா?? என்னங்க இது, எப்போதும் ராசாவேதானா?

எப்படி சொன்னாலும், ராசா ராசாதான்.....
அவருக்கு ஆப்பு ....ஆப்புதான்...

ஆனால், "தல" என்ன ப்ளான் பண்ணி இருக்காருன்னு தெரியலியேப்பா!!!

மஞ்சள் கமென்ட் "நச்" ரகம்......

Anonymous said...

இந்த ராஜாவை எப்படியாவது நீக்க வேண்டும் அந்த இடத்தில் தான் நுழைந்து கொள்ள வேண்டும் என்று தயாநிதி மாறன் ஒரு புறமும், எப்படியாவது ராசாவை அப்புறப் படுத்தி விட்டு தன் துணைவியின் மகளை அந்த இடத்தில் அமர வைக்க வேண்டும் என்று கருணாநிதியும் பல்வேறு சதித்திட்டம் போட்டு வருகிறார்கள். மந்திரியாக இருக்கும் வரை ஃப்ரூட் லாங்க்வேஜின் கமிஷன் ஏஜெண்டாக இருந்தால் தலை தப்பும் என்று எண்ணிய ராஜாவின் எண்ணத்தில் தயாநிதிமாறன் மண்ணைப் போட்ட்டு வருகிறார். தயாவின் பினாமி பத்திரிகைகளில் ஒன்றான விகடனை ஏவி விட்டு ராஜாவை மாட்ட வைக்கிறார். இதில் பல விஷயங்கள் உள்ளன.

அது சரி நீலகிரி தொகுதி எம் பி க்கு குளிர் ஆகாதாமா?

என்னமோ நாங்கள்தான் உடல் உழைப்பின் சின்னம் என்றார்கள் அப்படி உடல் உழைத்திருந்தால் ஏன் இப்படி நீலகிரி குளிரும் கோவை வெயிலும் ஒத்துக் கொள்ளாமல் சொகுசு கேட்க்கிறது. இப்படி இவருக்கு குளிரும் வெயிலும் ஆகாது என்றால் எப்படி வெளியில் போய் மக்களைச் சந்திப்பார்.

விகடன்காரர்கள் இவ்வளவு தூரம் துப்பறிந்தவர்கள் ஏன் டெல்லி வரை போய் ராசாவையும் நேரில் பார்த்து கமிஷன் கொடுத்தது வரை விடீயோ எடுக்கவில்லை. இவர்களுக்கு யார் குறி காயத்ரியா ராஜாவா? என்ன அஜெண்டா?

இதில் நிறைய வெளியே தெரியாத கேள்விகள் இருக்கின்றன. [ edited ]

SUBBU said...

என்னங்கடா நடக்குது தமிழ்நாட்டுல, ப(பொ)ணம் தின்னும் அரசியல் வாதிங்க எல்லாரையும் நாடு கடத்தனும்.

Anonymous said...

ராஜாவின் மேலும் பல ஊழல்கள் படிக்க இங்கே வாருங்கள் நன்றி http://lightink.wordpress.com/2009/03/09/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d/

sreeja said...

ராசாவை மட்டும் குறிவைத்து செயல்படாமல், மற்றவர்களின் சுய ரூபத்தையும் வெளிச்சம்போட்டு காட்டினால் தான் ஜூவியின் நடுநிலைமை எல்லோருக்கும் புரியும்.

Kameswara Rao said...

இ வ,

மறுபடியும் ஒரு மோதல் ..ஜு.வி.க்கு என்ன ஆச்சு ? எல்லாம் செய்து என்ன பயன் ?
செவிடன் காதில் சங்கு ஊதுவது போலத்தான். இதில் ஏதாவது உள்குத்து இருக்குமோ ?
ஒரே ஆள் எப்படி மறுபடியும் மாட்டுவார். சிங் சக் என்ன சொல்வார் ? இத்தாலி என்ன சொல்லும் ? பொறித்திருந்து பார்கவேண்டும்

காமேஷ்

வலைஞன் said...

அட விடுங்கப்பா!
ராசா போனாலும் ,(முதல்)மந்திரிங்க நிரந்தரம் பா!

Anonymous said...

தலித் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் அ.ராசாவிற்கு எதிராக செய்யப்படும் அக்கிரகாரத்து சதி இது என்று அறிக்கை இன்னும் வரவில்லையா?.

Anonymous said...

இவுங்களுக்கா வேணும்னா நக்கீரன், ஜுவி உண்மைய பேசுற பத்திரிக்கைங்க , வேணாம்னா பொய் பித்தலாட்டம் னு சொல்வாங்க !!! நக்கீரன் பொய்ய வச்சு காஞ்சி மடத்தை எப்படியெல்லாம் காய்ச்சினாங்க , இதே இட்லிவடை எப்படிஎல்லாம் பதிவு போட்டன்ங்கன்னு தெரியாதா.. இப்ப புதுசா மஞ்ச பெயிண்ட் அடிக்க வன்டாங்க

Anonymous said...

naanga appadithaan eppothumey!!! yaarukkahavum maaathik kolla maattom, athanal neenga ungal velaiai paarkalaam enbathu than avarkalthu default answer. naal velai uma endru oruvar ippothu pinnottam poda varuvathillai!!!!

Anonymous said...

it looks like personal agenda for vikatan with Raja. every contract are done this way only.. is it the only case all over india?
just ignore it.
-

Anonymous said...

எனது இடுக்கையை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி

Baski said...

Dinakaran can have a polling like this.

###################################
Who is behind such actions against Raja?

1. Maran Brothers
2. Kanimozhi (or other Tamil First-family(!) members)
3. Congress
4. Other DMK leader
5. ADMK

#################################

தமிழ் மதியன் said...

//Dinakaran can have a polling like this.

###################################
Who is behind such actions against Raja?

1. Maran Brothers
2. Kanimozhi (or other Tamil First-family(!) members)
3. Congress
4. Other DMK leader
5. ADMK

#################################
//

There is No Doubt about that

Maran brothers

Anonymous said...

மஞ்சள் 1 : இதுல என்ன உள்குத்து இருக்கு அண்ணே?

Baski said...

விஷயம் அம்புட்டு தானா ?? ஒரு விசாரணையும் நடக்குற மாறி தெரியலையே ??

புஸ்வானம் மாறி போச்சே !

ராஜா வாழ்க !!! இட்லி நான் முன்னாடி சொன்னதெல்லாம் அழிச்சிடுங்க :-D