பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 24, 2009

சினிமாவுக்கு கலைஞர் தந்த இனிமா - வாலி

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கலைஞரின் `பொன்னர் சங்கர்’ திரைப்பட தொடக்க விழாவில் காவியக் கவிஞர் வாலி வாழ்த்திப் பாடிய கவிதை..

சக்கர நாற்காலியில் உலாவரும்
சர்க்கரைத் தமிழே!
உன்னைத் - தனக்கான
உலகத் தலைவன் என -
ஆராதிக்கிறது
அக்கரைத் தமிழே!
எங்கள் மண்
என்னும் பெண்
மங்கலம் காக்கும்
குங்குமச் சிமிழே!
நீ மட்டும் இல்லையெனில் - புகழ்
நீண்ட இனத்தாரின் -
நிலையும் கலையும்
நீர்க்குமிழே!
***

உனது பேனா - ஓர்
உறை வாள்; அதன்
உள்ளே தமிழ்த்தாய்
உறைவாள்!
முடை நாற்றமெடுக்கும்
மூடத் தனங்களின்
முனைகள்
முறியுமா தானா? - அவற்றை
முறித்திருக்கிறது -
மூனா கானா பேனா!
***
உலகத் தமிழினம்
உன்னைத் தான் தொழுகிறது;
அதிசயமில்லை; உன் பேனாதானே
அவர்க்காக அழுகிறது!
உலக
உருண்டையில் -
ஒரு மூலையில் உள்ள
ஒரு தமிழனுக்கு -
ஜலதோஷம் என்றால் - உனக்குத்
தும்மல் வருகிறது; அவனுக்கு
சந்தோஷம் என்றால் - உனக்குத்
துள்ளல் வருகிறது!

***
தாழ்ந்திருந்தது
தமிழன் தகத்து; அதை
உயர்த்தியது
உந்தன் எழுத்து!
உன் தமிழெனும் சம்மட்டியால்
தகர்த்திருக்கிறாய்,
எத்துணையோ தடவை
எம்தமிழரின் கால்களில்
இலங்கை - மாட்டிய
விலங்கை!
ஒருநாள் - நீ
உண்ணா நோன்பிருந்து
நீக்கினாய் சோறை;
நிறுத்தினாய் போரை;
உண்மையில் நீதான்
உலகத் தலைவர்;
அடுத்தவரெல்லாம்
அப்படிச் சொல்லி அலைவர்!

***உன்
வருகைக்கு முன் ...
மடமையெனும்
மலச்சிக்கலில் -
தவித்துக் கிடந்தது
தமிழ் சினிமா: அதன்
குடல் சுத்தமாக - நீதான்
கொடுத்தாய் இனிமா!

***
தமிழின்
தகத்தகாயமான
உயரங்களை
உனது -
வசனம் தொட்டது; தமிழுக்கு
விசனம் விட்டது!
***
தித்திக்கத்
தித்திக்க - நீ
தீட்டிய
தீந்தமிழ் -
உரையாடல்களை
உச்சரித்த
உதடுகளுக்கு வந்தது
சர்க்கரை வியாதி; தமிழ்
உலகுக்கு வந்தது
சமூக நீதி!

***
நீ
தமிழுக்கும்;
தமிழ் மண்ணுக்கும்
பண்ணிய தொண்டுகளை
எண்ணினால்...
எம்மநோக்கு வருகிறது
நன்றிக் காய்ச்சல்;
நன்றி இல்லார்க்கு வருகிறது
பன்றிக் காய்ச்சல்!

***
திரும்பவும் கலைஞரின் பேனா
திறக்கிறது மூடி; அது
புதுரத்தம்
பாய்ச்ச -
கும்மென்றிருக்கும்
கோடம்பாக்கத்தின் நாடி!
கலைஞரின்
கைவண்ணத்தில் வரும்
‘பொன்னர் சங்கர்’ - ஒரு
வின்னர் சங்கர்!

கலைஞர் எழுப்பியது
உளியின் ஓசை;
வாலி எழுப்புவது
ஜால்ரா ஓசை;
விருது பெரும் ஆசை?
வேண்டாம் பேராசை! ( நன்றி: Kasu Sobhana)


21 Comments:

Kasu Sobhana said...

கலைஞர் எழுப்பியது
உளியின் ஓசை;
வாலி எழுப்புவது
ஜால்ரா ஓசை;
விருது பெரும் ஆசை?
வேண்டாம் பேராசை!

Anonymous said...

வாலிபக் கவிஞர் வாலி
மு.கவைப் புகழ்வதென்றால் ஜாலி
தமிழுடன் விளையாடுவார் கோலி
நமக்குக் காய்ந்து விடும் மண்டை காலி
ஜால்ரா அடிப்பதே அவருக்கு ஜோலி
காய்ந்து கிடக்குது எங்கள் வீட்டு வாளி
- அநங்கன்

கலைக்கோவன் said...

நாடோடிகள் பட வசனம் நினைவுக்கு வருகிறது...,
சசி:- ஆமா இந்த வாசகமெல்லாம் உங்களுக்கு யார் எழுதி தர்றா.
அல்லக்கை:- அதுக்கு 11 பேர் கொண்ட குழு இருக்கு.

Baski said...

இட்லிவடை இசையமைப்பாளர் யார்???? (Please provide here if you know it) இம்முறையும் இளையராஜா தான் பலி கிடாவா???? அவர் பாவம்.....உளியின் ஓசையில் உண்மையில் அவர் இசையில் ராஜா என்று நிரூபித்திருப்பார்!!!!! அகந்தையில் ஆடுவதா ஆடற்கலை பாடலில் பண்டைய தமிழ் இசையின் இலக்கணங்களை விவரிதது இருப்பார், சத்தியமாக அது யாருக்கும்(மிக சிலரைத் தவிர!!!) பிடிக்கவில்லை என்பதில் ஆச்சரியம் இல்லை!!!முதலில் அதை யாரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை, அந்த வாய்ப்புக்கு ஒரே காரணம் நமது மு.க தான், சிற்பத்தை Reinforced Concrete ல் செதுக்கினால் உளியின் ஓசை எப்படி கேட்கும்????
/****உன்
வருகைக்கு முன் ...
மடமையெனும்
மலச்சிக்கலில் -
தவித்துக் கிடந்தது
தமிழ் சினிமா: அதன்
குடல் சுத்தமாக - நீதான்
கொடுத்தாய் இனிமா!****/
ஆம் அதற்காகத்தான் (மல சிக்கலை சரி செய்ய) எடுத்தார் உளியின் ஓசை, தமிழின் பெருமையை சொல்லும் ராஜராஜ சோழனின் பெயரை கெடுக்கும் படி, உண்மையில் கலை தாகத்திலா அவர் அந்த படத்தை எடுத்தார்? என்ற கேள்விக்கான பதிலை உலகு அறியும்!!! வாலிக்கு ஏதோ அம்னீசியா போல அதனால் தான் வயது ஆனதால் மறந்து விட்டார் போல!!!

யதிராஜ சம்பத் குமார் said...

சங்கீதகலாநிதி விருது போன்று ஜால்ராசிஹாமணி என விருது ஒன்றை ஏற்படுத்தி வாலி போன்றோர்களுக்கு வருடா வருடம் வழங்கலாம்.

ஹரன்பிரசன்னா said...

வாலிக்கு
மசாலா காலி
வாயில் வந்ததையெல்லாம்
கவிதையென வாந்தியெடுக்கும் நீலி
இதில் அறுகிறது நம் தாலி

வாலியின் நினைப்பு:
’எனக்கு எழுத வரும் கவிதை;
அதற்குள் இருக்கிறது ஒரு விதை’
ஆனால் இதுவரை இவர் எழுதியதெல்லாம்
வெறும் சதை
இதனை நன்கறியும் இம்மண்பதை
இனியும் இவ்வுல்கு நம்பாது
இவர்தம் கதை
இவர் எழுதுவதெல்லாம்
நமக்குத்தான் பெரும் வதை

Anonymous said...

last time in Jegathratchagan's program, Vaali gave a great jalra that Kalaignar got confined to chakkara naarkali! Ippo enna nadakka povutho?

IdlyVadai said...

வாலிக்கு போட்டியாக வலையுலகில் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று நினைக்க பெருமையாக இருக்கு.

Kameswara Rao said...

இ,வ,
"கலைஞர் எழுப்பியது
உளியின் ஓசை;
வாலி எழுப்புவது
ஜால்ரா ஓசை;
விருது பெரும் ஆசை?
வேண்டாம் பேராசை"

அஹா கவிதை கவிதை.

கோஷ்டி கானத்தில் வாலிக்கு தான் முதல் பரிசு
என்ன முடையோ இத மாதிரி எல்லாம் கவிதை சொல்லி ?

என்னத்த சொல்ல

காமேஷ்

கவிஞர் வாளி said...

கருணாநிதிக்கு எழுதினார் கவிதை
அதை படித்தால் வருது மமதை
வாலியை விட என் கவிதை பெட்டெர்
வாந்தி எடுத்தா மாதிரி எழுதறார் குங்கும பொட்டர்

பேர மாத்திக்கலாம் இவர் ஆஸ் கிஸ்ஸெர்
கவிதையை படிச்சு சிரிச்சதுல கிளிஞ்சது என் டவுஸர்
கிழம் கிழத்தை பாராட்டி எதிர் பார்க்குது விருது
ஆனா பட்ட நாமத்த தான் அது தருது

Erode Nagaraj... said...

வந்தாலும் வந்தானொரு
வாலாட்டி வாலி
வாங்கிவாங்கி நிறைத்துவிட்டும்
போதவில்லை கூலி.

வயதான அம்மனதோ
நிறையவில்லை, காலி.
வஞ்சகரை வருடிடுவான்
கவிஞனல்ல, போலி.

ஆசைகட்கு இட மறந்த
ஆண்மையெனும் வேலி
ஆதலினால் பாடிடுவான்
இடமறிந்து லாலி.

காது கூசும் கருத்துரைத்தே
கதையடிக்கும் ஜோலி
வகை தொகைகள் மீறி மீறி
வாய் புளுகும் வாலி.

Erode Nagaraj... said...

மிஸ்டர் வாலி, அது மூனா கானா பேனா இல்லை, மூனா "காணா" பேனா... என்ன செய்வது, இப்படியெல்லாம் அடிவருடவில்லை எனில், வானா (வாலி) காணா "kaanaa" ஆகிவிடுமே!

வின்னர் சங்கர்-ஆ? பிரஷாந்துக்கு, மீண்டும் ஒரு வின்னரும் சங்கும் தேவையா?

தோமா said...

நம்ம வாலியைவிட பெரும் கவிகள் இருகிறார்கள் என்பதை இந்த பதிவின் இடுகைகளில் இருந்து தெரிகிறது.

யப்பா எல்லாருமே போட்டி கவிதை எழுதி கலகிடீங்க சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணா போயிடுச்சி.........

ம்ம்ம்ம் நடக்கட்டும் நாச வேலை.........

வாழ்ழ்த்துக்கள் அனைவருக்கும்.....

R.Gopi said...

I)

தலைவா உன் வருகை,
கண்டதும் கூப்புவேன் என் இருகைதலைவா நீ பாப்புலர் பிகர்
கண்டதும் ஏறுது என் ஷுகர்நீ உண்பாய் ஒரு கவளம்
அதனால் சுத்துது இவ்வுலகம்


தங்கத்தமிழே, தமிழ் நீரின் குமிழே
குமிழின் சிமிழே, நீ பேசுவது செந்தமிழே

நடமாடும் தொல்காப்பியமே,
நாங்கள் சொல்லும் நல்வாக்கியமேஅதிகாலை முன்பனியே
இன்று கிழமை சனியே


நீ வந்தாய் தனியே
கூட்டம் கூடும் இனியே
உன் மயக்கும் சிரிப்பு
அதற்கு உண்டு தனி சிறப்புநடமாடும் ஓவியமே
நற்றமிழின் காவியமேநீ முன்னே வந்து நில்
உன்னை வணங்கும் பார்த்திபனின் வில்உன் ஒரு சொல்லே
தருமே பல பொருளேதமிழ் அருவி,
இன்று மருவி
ஆனது உன் புரவிவில்லெடுத்து போர் தொடுத்து வெல்லாமல்
உன் ஒரு சொல்லெடுத்து அகிலத்தை வென்றிடு


ஆணையிடு காத்திருக்கிறோம் ஆட்சியை தர
வாழ்த்துகிறோம் இந்த தேர்தலில் நீ வெற்றி பெற

II)


"தல" "தல"யாம் முந்திரிக்கா!!
முத்துப்பல் சிரிப்பழகா

முன்கோப சொல்லழகா


பார்போற்றும் பாவலனே

பாவேந்தன் வழிவந்தவனே

என்றும் போற்றுவோம் உன்னையே

முத்தமிழின் மூத்தவனே

தமிழ்நாட்டின் முதல்வனே


நீ பல வளமும் பெறுக.

பல்லாண்டு வாழ்க


(வேர் ஈஸ் த பார்ட்டி டுநைட்?)

III)

தமிழே - தமிழின்
குமிழே - குமிழின்
சிமிழே

புவியின் பூகோளமே
அழிவின் ஆரவாரமே
அராஜகத்தின் அச்சாரமே

முரண்பாட்டின் மூட்டையே
நீ நாட்டை போட்டது ஆட்டையே

நீ உண்ணாமல் இருந்தால்
சட்டியில் சாப்பாடு குறையாது

நீ உண்டு கொழுத்தால்
எங்களுக்கு போட்டு மாளாது

நீ திறந்து விட்டது டாஸ்மாக்
பசங்க வாங்காம விட்டது பாஸ்மார்க்

கள்வர்கள் கவிதை எழுதுவார்கள்
டகால்டிகள் டாஸ்மாக் அடிப்பார்கள்

தேன்தமிழ் நாட்டின் தீந்தமிழே - நீ
தமிழ்நாட்டுக்கு ஊதுவது சங்கே

அகில உலக டகால்டியே - நீ
அடிப்பது அந்தர் பல்டியே

தொல்காப்பிய பூங்காவில் கல்லா கட்டியவரே
மக்கள் அனைவருக்கும் குல்லா போட்டவரே

மஞ்சள் துண்டணிந்த மாபெரும் விரசகவியே
உன் ஆட்டத்திற்கு தாங்காதப்பா இந்த புவியே

எங்கள் சங்கத்தின் முதல்முகமே
நீங்கள் அனைவருக்கும் அறிமுகமே

முதுமையின் இளமையே
இன்று புதன்கிழமையே

முத்தமிழ் வித்தகரே - எங்கள்
தமிழ்நாட்டை வித்தவரே

பொறாமையின் பிறப்பிடமே
வஞ்சகத்தின் இருப்பிடமே

தலைவா கொஞ்சம் அடக்கி வாசி
பேசுவதற்கு முன் சிறிது யோசி

ராஜ்ஜியத்தின் மெத்தகையே
பூஜ்ஜியத்தின் குத்தகையே

நீ டகால்டிகெல்லாம் டகால்டி - உன்னை
வணங்கி வரவேற்போம் துதிபாடி

Anonymous said...

super gopi..superu..

ந.லோகநாதன் said...

Vaali is over Jaalra

Anonymous said...

vali
nee oru kakkai
sadha kakkai alla
andangkakkai

Vedantha Desika Dasan said...

/எம்தமிழரின் கால்களில்
இலங்கை - மாட்டிய
விலங்கை!
ஒருநாள் - நீ
உண்ணா நோன்பிருந்து
நீக்கினாய் சோறை;
நிறுத்தினாய் போரை;//

இந்த வரிகள் போதும், மொத்த கவிதையுமே சுத்த உளறல் என்று நிரூபிப்பதற்கு

Kasu Sobhana said...

ஆஹா - இ வ ருசிகர்களே!
எல்லாரும் கொன்னுட்டீங்க!
வாலி வதம் பண்ணிட்டீங்க;
மறைந்து நின்று அம்பெய்திட்டீங்க!
வாலைச் சுருட்டிக்கொண்டு அவர்
ஓடும்படிச் செய்திட்டீங்க -
மொத்தத்தில் அசத்திட்டீங்க!

RaavanaPrabu said...

"கலைஞர் எழுப்பியது
உளியின் ஓசை;
வாலி எழுப்புவது
ஜால்ரா ஓசை;
விருது பெரும் ஆசை?
வேண்டாம் பேராசை!"

மிகவும் அருமை.
மாண்புமிகு. ராஜபக்சே
எழுப்பியது சுடுகாட்டு ஓசை.
அதற்கு பதில் நீங்கள் எழுப்பியது
காலையில் தின்ற பருப்பு
வடையால் வந்த
குசுவின் ஓசை.
அதை காற்றில் கரைத்தது
மரினாவின் அலை ஓசை.
--

Cheers
Raavanaprabu

RaavanaPrabu said...

"கலைஞர் எழுப்பியது
உளியின் ஓசை;
வாலி எழுப்புவது
ஜால்ரா ஓசை;
விருது பெரும் ஆசை?
வேண்டாம் பேராசை!"

மிகவும் அருமை.
மாண்புமிகு. ராஜபக்சே
எழுப்பியது சுடுகாட்டு ஓசை.
அதற்கு பதில் நீங்கள் எழுப்பியது
காலையில் தின்ற பருப்பு
வடையால் வந்த
குசுவின் ஓசை.
அதை காற்றில் கரைத்தது
மரினாவின் அலை ஓசை.
--

Cheers
Raavanaprabu