பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 13, 2009

துறை முருகன் - துரை முருகனான கதை

அமைச்சர் துரைமுருகன் வகித்து வந்த பொதுப்பணித்துறை முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக கவர்னர் பர்னாலா அறிவித்துள்ளார். இந்த விஷயம் போன வாரமே கொஞ்சம் கசிந்தது, ஆனால் இவ்வளவு சீக்கிரம் இது நடக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

நேற்று காலை பொன்னர் சங்கர் பட துவக்க விழாவில் கலந்து கொள் வதற்காக முதல்வர் சென்ற போது அவருடனேயே துரைமுருகனும் சென்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வெளியே வரும் போதுதான் அவரிடமிருந்த முக்கிய இலாகாவான பொதுப்பணித்துறை அவரிடமிருந்து பறிக்கப்பட்ட செய்தி அவருக்கு தெரிந்தது.துரை முருகன் இலாகா பறிப்பு பற்றி பல தகவல்கள் வந்துக் கொண்டிருக்கிறது..

1. குடும்ப விவகாரங்களில் தலையீடு

முதல்வர் குடும்ப விவகாரங்களில் அவர் தலையிட்டு சிக்கலை ஏற் படுத்த முயன்றதான குற்றச் சாட்டாகும். அண்மையில் டெல்லி சென்ற போது அவர் முதல்வர் குடும்பத்தை சேர்ந்தவரை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு முதல்வர் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிகிறது. கழகம் ஒரு குடும்பம் என்று ஆகிவிட்ட நிலையில் இவர் இப்படி செய்தது எப்படி குற்றமாகும் ?

2. தன்னிச்சையான செயல்பாடு

அண்மையில் 30-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் இடமாற்றம் தொடர்பாக தலைமைச் செயலாளருக்கு துரைமுருகன் பரிந்துரை அனுப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து துணை முதல்வரிடம் தகவல் தெரிவிக்குமாறு தலைமைச் செயலாளர் கூறியதாக தெரிகிறது. ‘இந்த துறைக்கு நான் அமைச்சரா? வேறு யாரும் அமைச்சரா?’ என்று துரைமுருகன் அவருக்கே உரிய நையாண்டியோடு கேட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்ததும் துணை முதல்வர் கோபமடைந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து முதலமைச்சரிடம் அவர் புகார் கூறியதுடன் அவருடைய இலாகாவை மாற்றாவிட்டால் நான் ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கனிமொழி ராஜினாமா கடிதத்தை என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்த முதல்வருக்கு மேலும் ஒரு ராஜினாமா கடிதம் வழங்கி சுமையை அதிகரிக்க விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.

3. துணை முதல்வருக்கு மரியாதை தருவதில்லை

திமுக அமைச்சர்கள் துணை முதல்வருக்கு உரிய மரியாதையை அளித்து வந்தனர். ஆனால் துரைமுருகன், ஸ்டாலினுக்கு உரிய மரியாதையை தரவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக துணை முதல்வர் அவைக்கு வரும் போது மற்ற திமுக உறுப்பினர்கள் மரியாதையாக எழுந்து நிற்பது வழக்கம். ஆனால் மூத்த அமைச்சரான துரைமுருகன் அப்படி எழுந்து நிற்பதில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே துரைமுருகன் மீது காங்கிரசாரும் அடுக்கடுக்காக புகார்கள் கூறியதாக தெரிகிறது. துரைமுருகனை எளிதாக சந்தித்து தங்கள் கோரிக்கைகளை கொடுக்க முடியவில்லை என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலரும் புகார் கூறியதாக தெரிகிறது. ( காந்தி மண்டபத்தை பராமரிக்கும் பொறுப்பு தனியாருக்கு விடப்பட்ட விஷயத்திலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருந்தனர்). எழுந்து நிற்க வேண்டும் என்பது தமிழக அரசியல் மரபு. சங்க இலக்கியம் பற்றி பேசும் துரைமுருகனுக்கு இது கூட தெரியாமல் போனது ஆச்சரியம். இவரை இரண்டு வாரம் ஓ.பன்னீர்செல்வத்திடம் டியூஷன் அனுப்ப பரிந்துரை செய்ய செய்கிறேன்.

4. தமிழ் நடிகைகளுக்கு பஞ்சம்
சட்டசபையில் வெள்ளிக்கிழமை நடந்த விவாதத்தில் உறுப்பினர் விஜயகுமார் மதுரையில் திரைப்பட கல்லூரி தொடங்க வேண்டும். சினிமா இயக்குனர்களும் நடிகர்களும் மதுரை, தென் மாவட்டங்களிலிருந்துதான் வருகிறார்கள். அதனால், மதுரையில் திரைப்பட கல்லூரி தொடங்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு, ‘‘திரைப்படம் தொடர்பான நிறுவனங்கள் உள்ள இடத்தில்தான் திரைப்பட கல்லூரி அமைய வேண்டும்’’ என்று அமைச்சர் பரிதி இளம்வழுதி பதிலளித்தார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், “நடிகர்கள் வேண்டுமானால் இங்கிருந்து வரலாம். ஆனால், பெரும்பாலான நடிகைகள் வட நாட்டிலிருந்துதான் வருகிறார்கள்’’ என்று கூறினார். Public Works Departmentல் இருப்பவர் இப்படி பப்ளிக்கா பேசலாமா என்று சிலர் கேள்வி எழுப்பியதன் விளைவு என்கிறார்கள்.
கொசுறு தகவல்: வழக்கமாக அருகில் உள்ளவர்களிடம் சிரித்து பேசும் துரைமுருகன், இன்று இறுக்கமான முகத்துடன் காணப்பட்டார். அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் முன்பு சாய்பாபாவிடம் வாங்கிய மோதிரம் மட்டும் தான்.


11 Comments:

Anonymous said...

(1) Perfect photo!

(2)
இட்லியின் கமெண்ட்
////எழுந்து நிற்க வேண்டும் என்பது தமிழக அரசியல் மரபு. சங்க இலக்கியம் பற்றி பேசும் துரைமுருகனுக்கு இது கூட தெரியாமல் போனது ஆச்சரியம்.////

அமைச்சரின் பதில்:
என்னய்யா புண்ணாக்கு மரியாதை? எல்லாம் மனசுல இருந்தாப் போறும். சும்மா வேஷம் போடக் கூடாது!!

(3)
கடைசி செய்தி:
"கலகக்" கண்மணிகள் இந்நாள் சட்ட அமைச்சரை து.மு. (துரை முருகன்) அய்யா என்று அழைத்தது இன்றைய து.மு.வுக்கு (மு.க.இசுடாலின்) எரிச்சலாம். அதன் விளைவுதான் என்கிறார்கள் விவரம் தெரிந்தோர்!

Kameswara Rao said...

இ,வ,

துறை முருகன் துறை இல்ல முருகனானது, மக்ழிச்சி... குடும்பத்தின் ரூல்ஸ் அறியாமல் சிறுபிள்ளைதனமாக அவுட்டாகிவிட்டார். அது என்ன கனிமொழி ராஜினாமா?

துறை முருகன் Vs ஸ்டாலின் போல் விரைவில் அனைவருடன் தொடங்க "பிரார்த்தனை கிளப்"

காங்கிரஸ் கொஞ்சம் குட்டையை குழப்பட்டும் ... 2011 தமிழக மக்கள் திருந்தட்டும்

படம் அருமை .... சாய்பாபா காப்பற்றட்டும் (தமிழக மக்களை)

காமேஷ்

kggouthaman said...

இட்லி வடையை விட வேகமாகச் செயல் பட்டது TN nic website.
click here to see current portfolios of ministers - click செய்தால் (13/07/09 13.00 Hours)
துரை முருகன் பெயருக்கு நேரே சட்டம் மட்டும்தான் காணப் படுகிறது!
சட்டத்தை மட்டும் அவர் கையில் விட்டு - சிலேட்டை பிடுங்கிக் கொண்டு விட்டார்கள்.

IdlyVadai said...

அனானி நன்றி.

mazhai said...

தலைப்பிலேயே பிரமாதப்படுத்திவிட்டீர்கள்.

மேலும் மானஸ்தனின் கடைசி செய்தி, கலக்கல்.

Guru said...

Ellam andha Sooriyanukke Velicham... yaar endha thurai maarinaalum paalrum varapovathillai, Hogenakkalum nadakka povathillai.. apram Thurai Murugan Durai Murugan Aana kathai..

Anonymous said...

ayya
tamilnaddula irukkura arugal ellam vitta sabam intruthan palithirukkuthu
by
kanatamilan

R.Gopi said...

இட்லிவடை


சூப்பர் நியூஸ்.... அதவிட அந்த போட்டோ....ஹ்ம்ம்.... பின்னுது.

//கொசுறு தகவல்: வழக்கமாக அருகில் உள்ளவர்களிடம் சிரித்து பேசும் துரைமுருகன், இன்று இறுக்கமான முகத்துடன் காணப்பட்டார். அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் முன்பு சாய்பாபாவிடம் வாங்கிய மோதிரம் மட்டும் தான்.//

ஏன், சும்மா இருக்க மாட்டீங்களா?? அவரே "தல" ஞாபகம் வந்து கேட்டுட போறாரோன்னு பயந்தபடியே இருக்கார்...... நீங்க வேற நல்லா கெளப்பி விடறீங்களே...
ஏதோ, பதவி போயி, மோதிரமாவது மிஞ்சியதேன்னு குஷியா இருக்கார்னு சொல்றாங்களே...

Erode Nagaraj... said...

துரை முருகன் பாதையில் ஆற்காட்டாரை, ஆர் கேட்டார் என்று குடும்ப உறுப்பினர்கள் வெளியேற்ற முயற்சிப்பதாக செவி வழிச் செய்தி!

வால்பையன் said...

//IdlyVadai said...

அனானி நன்றி.//

அப்படி என்ன தான் பாராட்டினார் அந்த அனானி!

Eswari said...

//இவரை இரண்டு வாரம் ஓ.பன்னீர்செல்வத்திடம் டியூஷன் அனுப்ப பரிந்துரை செய்ய செய்கிறேன்.//

vedamattingaleee......