பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 30, 2009

நீயா? நானா? மல்லுக்கட்டும் சாருநிவேதிதா

இந்த வார விகடனில் வந்த ...

என் சக எழுத்தாளர்களான எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோரைப் போல் எனக்கும் சினிமாவில் நுழைய ஆசை உண்டு. ஆனால், கதை வசனம் எழுதி அல்ல... நடிகனாக. சில இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறேன். வசந்தபாலன் நல்ல முடிவு சொல்வதாகச் சொல்லிஇருக்கிறார். ஆனால், அதற்குள் தொலைக்காட்சியிலும் சற்றேதலை காட்டலாம் என்று 'டாக் ஷோ'க்களில் கலந்துகொள்ள அழைப்பு வந்தால் மட்டும் ஒப்புக்கொள்வது உண்டு.

இப்படியாக விஜய் டி.வி-யின் 'நீயா நானா' நிகழ்ச்சியில் பல முறை விருந்தினராகக் கலந்து கொண்டு இருக்கிறேன். பொதுவாக, நான் டி.வி. நிகழ்ச்சிகள் பார்ப்பது இல்லை என்றாலும், சமூக அக்கறையுடன் கூடிய விஷயங்களை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதால் 'நீயா நானா' நிகழ்ச்சியைப் பிடிக்கும். ஆனாலும், அதில் கலந்து கொள்வதில் எனக்கு ஒரு பிரச்னை இருந்தது. பிரதான விருந்தினராக வரவழைத்துவிட்டு, கடைசியில் காசு எதுவும் கொடுக்க மாட் டார்கள். ஒருவேளை அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கோபிநாத்தும் இலவச சேவையே செய்கிறார் போலிருக்கிறது என்று அதை விட்டுவிட்டேன்.

ஆனால், ஒருமுறை 'நீயா நானா'வில் கலந்துகொள்ள அழைத்தபோது, அதே தேதியில் கேரளாவின் கொச்சியிலும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டு இருந்தேன். (தமிழ்நாட்டைவிட அடியேனை கேரள மக்களுக்கு அதிகம் தெரியும்). அதனால் என் இயலாமையை 'நீயா நானா' குழுவுக்குத் தெரிவித்தபோது, அவர்கள் கொச்சிக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுப்பதாகச் சொன்னார்கள். அப்போதுதான் எனக்கே தெரியும் விமான டிக்கெட் எடுத்துக் கொடுக்கும் அளவுக்கு அவர்களால் செலவு செய்ய முடிகிறது என்று!

இன்னொரு சமயம், விஜய் டி.வி-யின் இன்னொரு நிகழ்ச்சிக்காக நளினி ஜமீலாவுடன் நானும் கலந்துகொண்டேன். அதில் கலந்து கொள்ள நளினி ஜமீலாவுக்கும், அவருடைய உதவியாளருக்கும் திருவனந்தபுரத்திலிருந்து வரவும் திரும்பவும் விமான டிக்கெட், அவர்கள் சென்னையில் இரண்டு நாட்கள் தங்க ஹோட்டல் செலவு, விலை உயர்ந்த பட்டுப் புடவை என்று மொத்தம் 30,000 ரூபாய் செலவு செய்தார்கள். ஆனால் எனக்கு என்ன என்று கேட்டபோது, 'நாளை வீட்டுக்கு அனுப்பிவைக்கிறோம்!' என்றார்கள்.

ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். விஜய் டி.வி-க்கும் எனக்கும் இடையே மீடியேட்டராகச் செயல்பட்டார் ஒரு நபர். அவர் சொன்னபடி அந்த 'நாளை' என்ற நாள் இன்னும் வரவே இல்லை. நானும் ஒரு போன் செய்து பார்த்தேன். 'இதோ ஒன் அவர்ல அனுப்பிவைக்கிறேன் சார்!' என்றார் எந்தப் பதற்றமும் இல்லாமல். ஆனால், அந்த 'ஒன் அவரு'ம் இன்னும் வரவில்லை. சரி, போ என்று நானும் விட்டுவிட்டேன்.

அதற்குப் பிறகும் 'நீயா நானா'வுக்காக போன் வரும். நானும் போவேன்... வருவேன். ஆனால், பைசா மட்டும் கிடையாது. 'எங்கே என் பணம்' என்று நான் கேட்பதும், 'நாளை அனுப்பிவைக்கிறேன் சார்' என்று அந்த நபர் சொல்வதும், அந்த 'நாளை' என்பது வராமலே போவதும் ஒரு சடங்காகவே நடந்துகொண்டு இருந்தது. சரி, போகாமல் இருந்துவிடலாம் என்று பார்த்தாலோ டி.வி-யில் மூஞ்சியைக் காண்பிக்கும் ஆசை அந்த எண்ணத் தைத் தடுக்கிறது. இதற்கிடையில் 'நீயா நானா' நிகழ்ச்சியின் மூளை யாகச் செயல்படும் ஆண்டனியும் எனக்கு நண்பராகிவிட்டார். அவர்தான் அந்த நிகழ்ச்சியின் பொறுப்பாளர்.

இந்த நிலையில் ஜூலை 17-ம் தேதி 'நீயா நானா' சூட்டிங்கில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார் அந்த மீடியேட்டர். இரண்டு காரணங்களைச் சொல்லி, அழைப்பை மறுத்தேன். ஒன்று, இலவச சேவை. அதையும் பகலில் செய்தால் பரவாயில்லை. இரவு 12 மணிக்கு மேல்தான் படப்பிடிப்பை ஆரம்பித்து இரண்டு மணிக்குத்தான் முடிப்பார்கள். அது வேறு பெரும் தொல்லையாக இருந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களில் பலர் இளம் பெண்கள். கல்லூரி மாணவி கள். அவர்களை எல்லாம் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு, கடைசியாக என் வீடு வந்து சேர மூன்று மணிக்கு மேல் ஆகி விடும்.

'இந்த முறை அப்படி நடக்காது. 10 மணிக்கே சூட்டிங் ஆரம்பம். 12 மணிக்கு அனுப்பிவிடுவேன்!' மீடியேட்டரின் வாக்குறுதி. 'பணம்?'

'எப்போதும் கொடுப்பது போல் நிகழ்ச்சி முடிந்ததும் கை மேல் பணம்!'

'என்னது... எப்போதும் கொடுப்பது போலா? எப்போதய்யா அப்படிக் கொடுத்தீர்கள்?'

'ஐயோ சார்! நீங்கள் கேட்டு வாங்கிக்கொள்ளவில்லையா? இந்த முறை அப்படி நடக்காது. நிகழ்ச்சி முடிந்ததும் கொடுத்துவிடுவார்கள்! எட்டு மணிக்கே வண்டி வந்து விடும். கூடவே, மேடத்தையும் அழைத்து வாருங்கள்' என்றார். காரணம், நிகழ்ச்சி அப்படி. திருமணம், மறுமணம் என்பது தலைப்பு. நானும் அவந்திகாவும் மறுமணம் செய்துகொண்டவர்கள்.

சொன்ன நேரத்துக்கு வண்டி வரவில்லை. அவந்திகாவுக்கு டி.வி. என்றாலே அலர்ஜி. 'அடப் போய்யா, நீயும் உன் டி.வி-யும்!' என்று சொல்லிவிட்டு அவள் படுத்துத் தூங்கிவிட்டாள். ஒருவழியாக வண்டி வந்து சேர்ந்தது. ''12 மணிக்கு மேலதான் சார் சூட்டிங். அதனாலதான் மெதுவா கிளம்பி வந்தேன்!'' என்றார் டிரைவர்.

போய்ப் பார்த்தால் கோபிநாத் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார். பாவம், காலையிலிருந்து இரண்டு சூட்டிங்கில் கலந்துகொண்ட களைப்பு. 'நீயா நானா' சூட்டிங் ஆரம்பித்தபோது மணி நடுநிசி ஒன்றரை. பாவம், அத்தனை பார்வையாளர்களும் 10 மணியில்இருந்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள். சூட்டிங் முடியும்போது சரியாக அதிகாலை 3.45 மணி. வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது சுமார் நான்கரை மணி. தூக்கக் கலக்கத்தில் பணம் பற்றிக் கேட்கவில்லை. மறுநாள் கேட்டபோது அதே ஸ்டீரியோ டைப் பதில். 'நாளை கொடுத்து அனுப்புகிறேன்!' ஆனால், இந்த முறை நான் முன்பு போல் சும்மா இல்லை. மறுநாளும் மறுநாளும் போன் செய்தேன். இப்போது மீடியேட்டர் என் போனை எடுப்பதில்லை. வேறு போனிலிருந்து பேசினால் வைத்துவிடுகிறார். அவந்திகாவை விட்டுப் பேசச் சொன்னால் 'அவரோட மச்சான் பேசுகிறேன், மாமா பேசுகிறேன்' என்கிறார்.

இத்தனை அனுபவங்களுக்குப் பிறகு என் மனதில் எழும் கேள்விகள்:

பிரதான கெஸ்டாக ஒருவரை வரவழைத்துவிட்டு இப்படித்தான் நடத்துவீர்களா?

காலை நான்கு மணி வரை ஒருவரிடம் வேலை வாங்கிவிட்டு, அதற்கான சம்பளத்தைக் கொடுக்க வேண்டாமா? இதுதான் சமுதாய மறுமலர்ச்சியைப்பற்றி விவாதிக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு அடையாளமா?

இப்படி நடுநிசி வரை இளம் பெண்களையும் கல்லூரி மாணவிகளையும் சூட்டிங்கை முன்வைத்து காக்கச் செய்வது சித்ரவதை இல்லையா?

அன்புடன்,
சாருநிவேதிதாசாரு ஏவுகணைக்கு பதில் என்ன சாரு..? என்று நீயா? நானா? ஆண்டனிடம் கேட்டால்...

நீயா? நானா? வருத்தமும் திருத்தமும்!

சாருநிவேதிதாவின் கடிதம் கிடைக்கப் பெற்றதும் 'நீயா? நானா?' நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆண்டனியிடம் கடித விவரம் குறித்துக் கேட்டோம்...

''பணம் கொடுத்துப் பேச வைத்தால் செட் செய்த நாடகம் போன்றாகிவிடும் என்பதால், எங்களுடைய டாக் ஷோக்களில் கலந்துகொள்பவர்கள் யாருக்கும் நாங்கள் பணம் தருவது இல்லை. என்.டி.டி.வி. உள்ளிட்ட சேனல்களில்கூட அந்த மரபு இல்லை. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களை அழைத்துவரும் பொறுப்பை சுந்தர்ராஜன் என்ற நபரிடம் ஒப்படைத்து இருந்தோம். அவர் எங்கள் ஊழியர் கிடையாது. பணப் பட்டுவாடா அவர் மூலமாகவே நடந்தது. இந்த விவகாரத்தில் நான் சாருவையே சப்போர்ட் செய்வேன். அவருடைய எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும். ஆனால், அவரைப் போன்ற சிறு பத்திரிகையாளர்கள், நல்ல எழுத்தாளர்களின் கருத்துக்கள் மக்களிடையே சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் எங்கள் நிகழ்ச்சியில் அவர்களைப் போன்றவர்களுக்குத் தொடர்ந்து ஒரு தளம் அமைத்துக் கொடுக்கிறோம்.

நளினி ஜமீலா கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கான மொத்த பட்ஜெட் 35 ஆயிரம் ரூபாய்தான். ஆனால், சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட நல்ல உள்ளம்கொண்ட நளினிக்கு என் சொந்தப் பணத்தில் இருந்துதான் அந்தச் செலவுகளைச் செய்தேன். படப்பிடிப்பு நடக்கும் நேரம், காலம் குறித்து சாருவிடம் சரிவரத் தெரிவிக்காததும் அந்த மீடியேட்டரின் தவறே. இனி, எங்கள் நிகழ்ச்சிக்குப் பிரபலங்களை அழைத்து வரும் பொறுப்பில் இருந்து அவரை விடுவிக்க முடிவு செய்துள்ளேன். எது எப்படியோ நடந்த சம்பவங்கள் வருத்தத்தையே தருகின்றன!'' என்கிறார் ஆண்டனி வருத்தம் தோய்ந்த குரலில்.

ஆண்டனியிடம் நாம் பேசிய சிறிது நேரத்துக்குப் பிறகு நம்மைத் தொடர்புகொண்டார் சாரு நிவேதிதா. ''இப்போதான் ஆண்டனி என்கிட்ட பேசினார். நிகழ்ந்த தவறுகளுக்கும் சிரமங்களுக்கும் வருத்தம் தெரிவித்துக்கொண்டார். இதுவரை வழங்கப்பட்டதாகச் சொல்லப்பட்டு, வழங்கப்படாமல் இருந்த தொகையையும் இரண்டொரு நாட்களில் சேர்ப்பிக்கப்படும்னு சொன்னார். அந்த மீடியேட்டருடன் இனி தொடர்புகொள்ள வேண்டாம்னும் சொன்னார்!'' என்று தெரிவித்தார்.
( நன்றி: விகடன் )

நல்ல வேளை ஆண்டனி சாருவிடம் பேசினார், இல்லை "ஆண்டனிக்கு கருடபுராணத்தின்படி என்ன தண்டனை?" என்று சாரு ஒரு பதிவு போட்டிருப்பார்.

53 Comments:

Kasu Sobhana said...

நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவது
முகத்தைக் காட்ட, கருத்தைச் சொல்ல
என்று எவ்வளவு சப்பைக் கட்டு
கட்டினாலும், சில பிரபலங்கள்
பைசா தான் பிரதானம் என்று
அலைவது வேதனையாக
உள்ளது.

Rahul said...

இந்த பதிவை வெட்டி என்ற Lable ல் போட்டிருக்கலாம், சத்தியமா எனக்கும் ஒண்ணும் புரியவில்லை, நீங்க என்ன சொல்ல வர்ரீங்கனு???? ஒரு வேளை சாரு நல்லவரா?????? இழிச்சவாயரா???? இது தான் அடுத்த நீயா நானா தலைப்பு என்று சொல்ல வர்ரீங்களா???? என்னால் இவரை ஒரு சமுதாய சிந்தனை உள்ள எழுத்தாளனாக பார்க்க முடியவில்லை, காரணம் இது ஒன்றே போதும்!!!!!!
/****'எங்கே என் பணம்' என்று நான் கேட்பதும், 'நாளை அனுப்பிவைக்கிறேன் சார்' என்று அந்த நபர் சொல்வதும், அந்த 'நாளை' என்பது வராமலே போவதும் ஒரு சடங்காகவே நடந்துகொண்டு இருந்தது. சரி, போகாமல் இருந்துவிடலாம் என்று பார்த்தாலோ டி.வி-யில் மூஞ்சியைக் காண்பிக்கும் ஆசை அந்த எண்ணத் தைத் தடுக்கிறது.*****/

Baski said...

ஐயையோ இதைப் பற்றி ஒரு பத்து தடவையாவது அவர் வாசகர் எழுதுவது போல கடிதம் அவரே எழுதி, அதற்கு பதிலையும் அவரே எழுதி நச்சு பண்ணுவாறே!!!!! வேண்டுமானால் நீங்களே இதை படித்து விட்டு சொல்லுங்கள்!!!

http://www.charuonline.com/July2009/EnnidamSolliyirukalame.html
சுய விளம்பரம் தேடும் ஒரு அற்ப பிறவி இவர், இவரை பற்றி எல்லாம் எதுக்கு பதிவு??????

Anonymous said...

Again yellow comment is nethiadi and superb!!!!
Once again idlyvadai hence proved it through this comments!!!!

Anonymous said...

தற்பொழுது நீயா நானா கொஞ்சம் அல்ல நிறையவே சறுக்கி உள்ளது, அதை தூக்கி நிறுத்த இப்படி எல்லாம் பிட்டு போட்டு பார்க்கிறார்கள்!!!! அது நடக்காது கண்ணா.....

Anonymous said...

/******'எங்கே என் பணம்' என்று நான் கேட்பதும், 'நாளை அனுப்பிவைக்கிறேன் சார்' என்று அந்த நபர் சொல்வதும், அந்த 'நாளை' என்பது வராமலே போவதும் ஒரு சடங்காகவே நடந்துகொண்டு இருந்தது. சரி, போகாமல் இருந்துவிடலாம் என்று பார்த்தாலோ டி.வி-யில் மூஞ்சியைக் காண்பிக்கும் ஆசை அந்த எண்ணத் தைத் தடுக்கிறது.******/

கூப்பிட்டால் வெட்கமே இல்லாமல் தலை யின் மானாட... மயிலாட... கருமத்துக்கு (நிகழ்ச்சிக்கு) கூட இவர் போக தயாராக இருப்பாரோ????

Anonymous said...

இவருக்கு இவரே கொடுத்துகிட்ட பட்டம் தான் எழுத்தாளன், இவர் மற்றவரை சராசரி என்கிறார் முதலில் இவரே சராசரி கிடையாது அதற்கும் கீழ் தான், இதை பாருங்கள்.....


http://www.charuonline.com/July2009/EzhuthanumSarasarikalum3.html

Anonymous said...

/**** அதற்குப் பிறகும் 'நீயா நானா'வுக்காக போன் வரும். நானும் போவேன்... வருவேன். ஆனால், பைசா மட்டும் கிடையாது. 'எங்கே என் பணம்' என்று நான் கேட்பதும், 'நாளை அனுப்பிவைக்கிறேன் சார்' என்று அந்த நபர் சொல்வதும், அந்த 'நாளை' என்பது வராமலே போவதும் ஒரு சடங்காகவே நடந்துகொண்டு இருந்தது. சரி, போகாமல் இருந்துவிடலாம் என்று பார்த்தாலோ டி.வி-யில் மூஞ்சியைக் காண்பிக்கும் ஆசை அந்த எண்ணத் தைத் தடுக்கிறது.*****/

கூலுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை!!!!! இவரெல்லாம் பேனாவை தூக்கிட்டு வந்துட்டார், நானும் எழுதுகிறேன் என்று!

Sriram said...

/******இந்த வார விகடனில் வந்த ...

என் சக எழுத்தாளர்களான எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோரைப் போல் எனக்கும் சினிமாவில் நுழைய ஆசை உண்டு. ஆனால், கதை வசனம் எழுதி அல்ல... நடிகனாக. சில இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறேன். வசந்தபாலன் நல்ல முடிவு சொல்வதாகச் சொல்லிஇருக்கிறார்.*****/

தயவுசெய்து வேண்டாம், உங்கள் கலை சேவை நாட்டுக்குத் தேவை இல்லை!!!! சாமி ஏற்கனவே T.R, Vijay,Ajith போன்றவர்களின் அட்டகாசங்காளே போதும், உங்கள் Bladeகளை எல்லாம் தாங்க முடியாது.....அப்படியே வந்தாலும் நீங்கள் எதை கிழிக்க போகிறீர்கள் (ஒரு பைசா பிரயோசனம் கிடையாது, வந்தால் உங்கள் சக எழுத்தாளர்களான எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் மற்றும் சிலரை திட்டுவீர்கள் வேறு என்ன உங்களால் செய்ய முடியும் ), தியேட்டர் திரை தான் கிழியும் மக்களால் அதுவும் உங்களால்!!!....

Anonymous said...

I dont want to waste my time after seeing the title of this post!!!!

வால்பையன் said...

காசு வாங்கியவுடன் ஆண்டனி மாதிரி ஒரு ஆள் உலகத்துலயே இல்லைன்னு பேட்டி கொடுப்பார்!

ரமேஷ் ராமசாமி said...

”உழைத்தவன் வியர்வை காயுமுன் அதற்கான கூலியை கொடு” என்று அடிக்கடி சொல்பவன் நான்.

இந்த இடத்தில் தவறு இடைத்தரகர் மேல் உள்ளது.

எப்பேர் பட்டாவது நிகழ்ச்சிக்கு ஒரு வி.ஐ.பி யைக் கூட்டிக் கொண்டுவர ”மனச் சாட்சிக்கு விரோதமாக என்ன செய்தாலும் தகும்” என்று இது போன்ற இடைத்தரகர்கள் எண்ணும் வரை சாரு போன்றவர்களுக்கு தொந்தரவே!

ரமேஷ் ராமசாமி said...
This comment has been removed by a blog administrator.
Rajaraman said...

ஆண்டனி தப்பு பண்ணிட்டார். நிகழ்ச்சி முடிந்தவுடன் ஒரு புல் நெப்போலியன் கொடுத்திருந்தால் Every thing OK. Miss பண்ணிட்டு இப்போது தேவை இல்லாமல் பிரச்னை தானே..

அது சரி IV உருப்படியா பதிவு போடா இன்னைக்கி விஷயம் எதுவும் அகப்படவில்லையா. இந்த கருமம் பிடித்தா குடிகார **யை பற்றியெல்லாம் எழுதிக்கொண்டு.. என்னத்த சொல்ல..

ரமேஷ் ராமசாமி said...

இட்லி வடை என்பதற்கு
கண்றாவி வடை என்று பெயரிட்டு இருக்கலாம்!

எத்த போட்டாலும் சாப்பிடும் ஜந்து போல, சில ஜென்மங்கள் ஊர் பேர் தெரியாத / சொல்ல விரும்பாத மாக்கள், சாருவைப் பத்திக் கேட்பதும்,

அதற்கு ஏற்ப ஒரு சப்ப பதிவைப் போடுவதுமாக, அதுக்கு சப்பு கொட்டிக்கொண்டு ஆளாளுக்கு சாருவைப் போட்டு துவம்சம் பண்ணுவது.. என்ன, என்ன இதெல்லாம்??

இதுதான் ஒரு சிறந்த பிளாக் எழுத்தாளருக்கு அழகா??

You Should think Before doing some Cheap publicity, just for hits and Rankings...

If you want do publish something interesting and about some ones privacy & private life, Why not you write about your family, and family members???

அந்த மனுசன போட்டு சும்மா சேர்ந்து தாக்கி, கூடி கும்மியடிக்க, இதுலாம் ஒரு பொழப்பா??

இதுக்கு பின்னூட்டம் போடவும் வந்திட்டாய்ங்க ஒரு நாலு பேரு... த்த்த்தூ :x

அருள் said...

//இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறேன். வசந்தபாலன் நல்ல முடிவு சொல்வதாகச் சொல்லிஇருக்கிறார். ஆனால், அதற்குள் தொலைக்காட்சியிலும் சற்றேதலை காட்டலாம் என்று 'டாக் ஷோ'க்களில் கலந்துகொள்ள அழைப்பு வந்தால் மட்டும் ஒப்புக்கொள்வது உண்டு.//

நாராயணா...இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலையப்பா .
கொசு மருந்தோட கொஞ்சம் TASMAC அயிட்டத்த கலந்து,தெளிச்சு விரட்டுங்கப்பா...

Rahul said...
This comment has been removed by a blog administrator.
Rahul said...

/****எத்த போட்டாலும் சாப்பிடும் ஜந்து போல, சில ஜென்மங்கள் ஊர் பேர் தெரியாத / சொல்ல விரும்பாத மாக்கள், சாருவைப் பத்திக் கேட்பதும்,

அதற்கு ஏற்ப ஒரு சப்ப பதிவைப் போடுவதுமாக, அதுக்கு சப்பு கொட்டிக்கொண்டு ஆளாளுக்கு சாருவைப் போட்டு துவம்சம் பண்ணுவது.. என்ன, என்ன இதெல்லாம்??

இதுதான் ஒரு சிறந்த பிளாக் எழுத்தாளருக்கு அழகா??***/


இது மட்டும் அழகா?????

http://www.charuonline.com/April09/ulaganayagan.html

தனக்கு தெரியாது என்றாலும் விமர்சனம் செய்வார், இவர் எல்லாம் கரைத்து குடித்தவர் போல...
பார்க்க

http://www.charuonline.com/March09/illayarajanew3.html

இது எந்த ரகம்?????
http://www.charuonline.com/March09/meendumnaankadavul.html

இது மட்டும் அவர் அக்கா பையனை பற்றியா? அல்லது அவரை பற்றியா? சும்மா கண்ணை மூடி கிட்டு பேச கூடாது...
/***அந்த மனுசன போட்டு சும்மா சேர்ந்து தாக்கி, கூடி கும்மியடிக்க, இதுலாம் ஒரு பொழப்பா??****/
இதெல்லாம் ரொம்ப நல்ல பொழப்பு.....வாழ்க சாருவும் அவரது ஸீட கோடிகளும்!!!!!
http://www.charuonline.com/March09/IllayarajaDiscussion.html

இதுதான் சுய விளம்பரம்,
http://www.charuonline.com/March09/NaanKadavul-oruehirvinai2.html

அவருடைய web page ல் 75% கட்டுரைகள் இது போல தான், அவரை வேறு எப்படி வர்ணனை செய்வது??? எந்த எழுத்தாளனும் அடுத்தவரின் personal செய்திகளை இவரை போல ஆய மாட்டான்!!!!
அவரை போல யோக்கியர் இந்த உலகத்தில் இல்லை, இருந்தால் அது நீங்கலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.....

Rahul said...

Finally i forgot to add one more word ponga sir!!!!

Baski said...

/***எத்த போட்டாலும் சாப்பிடும் ஜந்து போல, சில ஜென்மங்கள் ஊர் பேர் தெரியாத / சொல்ல விரும்பாத மாக்கள், சாருவைப் பத்திக் கேட்பதும்,***/

How about you gentleman?????

வலைஞன் said...

திரு சாரு அவர்களை பற்றி இங்கு எழுதப்பட்டிருக்கும் சில கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை.
அவர் என்ன தவறு செய்து விட்டார்?விஜய் டிவி யாருக்கும் பணம் ஒழுங்காக கொடுப்பதில்லை என்பது அனைவரும் அறிந்த ரகசியம் அதை விமரிசிக்காமல் குற்றம் சுமத்தியவரை விமர்சிகிறீர்களே ? என்ன நியாயம் இது?

clayhorse said...

என்ன அக்கிரமம் இது? டீ.வீல நேரங்கெட்ட நேரத்துல கூப்பிட்டாலும் போயிட்டுக் காசு வாங்காமல் வரணுமா? நிகழ்ச்சி நடத்துபவரும் காசு வாங்காமலா நடத்துகிறார்? சீரியல் ஆரம்பிக்கும் முன் ஆடும் யாரும் காசு வாங்காமலா ஆடுகிறார்கள்? ஏற்கனவே 'அசத்தப் போவது யாரு ' குழுவுக்குக் காசு கொடுக்காமல் ஏமாற்றியதற்காகத்தான் அவர்கள் சேனல் மாறினார்கள். சாரு மீது சொந்த வெறுப்புகள் ஒரு பக்கம் இருக்கட்டும், அவரைத் திட்டிப் பின்னூட்டம் போடுபவர்கள் யாருக்காவது எதற்காகவாவது தொடர்ந்து இலவச சேவை செய்திருக்கிறீர்களா?

Anonymous said...

துட்டுக்காக எங்க வேணும்னாலும் மல்லு கட்டுவார் சாரு..

இதில இலக்கியம், வெங்காய்ம் வேற..

நல்லா வருது வாயில..

Rahul said...

/****அவர் என்ன தவறு செய்து விட்டார்?விஜய் டிவி யாருக்கும் பணம் ஒழுங்காக கொடுப்பதில்லை என்பது அனைவரும் அறிந்த ரகசியம் அதை விமரிசிக்காமல் குற்றம் சுமத்தியவரை விமர்சிகிறீர்களே ? என்ன நியாயம் இது?***/

இது சாரு என்ற தனி மனிதனின் மேல் உள்ள வெறுப்பு அல்ல, அவரின் எழுத்துகளின் (குப்பைகளின்) மேல் உள்ள வெறுப்பு, இதே நிலை ஜெயமோகனுக்கு ஏற்பட்டிருந்தால் இவர் என்னவெல்லாம் எழுதுவார் என்று யோசித்து பார்த்து விட்டு பேசுங்கள், சும்மா இவர் செய்ததை நியாயப்படுத்தாதீர்கள்!!!!!

Anonymous said...

யோக்கியவான் ரமேஷ் ராமசாமி அவர்களுக்கு வணக்கம்,
/****எத்த போட்டாலும் சாப்பிடும் ஜந்து போல, சில ஜென்மங்கள் ஊர் பேர் தெரியாத / சொல்ல விரும்பாத மாக்கள், ****/ தாங்கள் எப்படி? சும்மா ஒரு Blog ல் உங்க பெயரையும் உங்க அப்பா பெயரை அதற்கு பின்னால் போட்டு கொண்டால், நீங்க கட்டபொம்மனின் வாரிசு என்று அர்த்தமோ???நேற்று வரை தாங்களும் அண்ணாணி ஆக தான் பின்னூட்டம் இட்டவர், இன்று உங்கள் பெயரை போட்டவுடன் பெரிய யோக்கியவான் போல பிதற்றுகிறீர், உங்களுக்கு சாரு ரொம்ப பெரிய யோக்கியவனாக தெரியலாம், என்னை பொறுத்த வரை அவர் ஒரு கேவலமான ஜந்து, உங்களிலுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளில் என்ன வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளுங்கள்..........

Anonymous said...

ஒன்று மறந்துவிட்டேன் நீங்கள் சாரு ஸீடர் தானே, அதான் நிரூபித்து விட்டீர்கள்!!!!

Sriram said...

/***இட்லி வடை என்பதற்கு
கண்றாவி வடை என்று பெயரிட்டு இருக்கலாம்!***/

ஆம், சாருவை பற்றிய பதிவுகளை இடுவதாலும், உங்களுடைய பின்னுட்டங்களை (அசிங்கத்தை )இடுவதால் இது கண்டிப்பாக கண்றாவி வடையே தான்!!!! சந்தேகமே இல்லை!!!

Anonymous said...

Charu needs publicity at any cost.

Anonymous said...

/****Anonymous said...
Charu needs publicity at any cost.
****/

100% True...why ரமேஷ் ராமசாமி is not replying??? i beleive he posted the comment with out reading his articles, books and his site. He might have read those now, i guess thats why he is not replying.

ரமேஷ் ராமசாமி said...

எனக்கு அனானியாக பின்னூட்டம் இட வேண்டிய அவசியம் இல்லை.

காரணம் நான் இட்லிவடைக்கோ, சாருவுக்கோ தெரிந்தவனோ/அறிந்தவனோ அல்ல..

இட்லிவடையை விரும்பி படிக்கும் பல்லாயிர இணைய வாசகர்களுள் நானும் ஒருவன். உங்களில் ஒருவன். அவ்வளவே! படிக்கும் போது சாருவின் கட்டுரையை மறுபதிப்பு செய்து, (விகடன் படிக்காத) பலர் முன்னிலையில் எடுத்துரைத்ததுதான் ஒரு மாதிரி இருந்தது.

உங்களில் சில பேர் செய்த சாரு ஆராய்ச்சி மாதிரி எல்லாம் முயலாதவன்.

Look Before you leap! இப்பொழுது நன்கு புரிந்தது... ஒழுங்கா ஆஃபீஸ் வந்தியா, இருக்குற வேலைய பார்த்தியா, ப்ரீயா இருந்தா ஒரு 4 பிளாக் படிச்சியா, 1ம் தேதியான சம்பளம் 1/2 L வாங்கினீயா போனோமானு இருக்கனும்.. அத விட்டுட்டு, இது எல்லாம் உனக்கு தேவையா என்று எனக்கு நானே கேட்கத் தோன்றுகிறது.

Rahul said...

/****இதுதான் ஒரு சிறந்த பிளாக் எழுத்தாளருக்கு அழகா??

You Should think Before doing some Cheap publicity, just for hits and Rankings...

If you want do publish something interesting and about some ones privacy & private life, Why not you write about your family, and family members???

அந்த மனுசன போட்டு சும்மா சேர்ந்து தாக்கி, கூடி கும்மியடிக்க, இதுலாம் ஒரு பொழப்பா??

இதுக்கு பின்னூட்டம் போடவும் வந்திட்டாய்ங்க ஒரு நாலு பேரு... த்த்த்தூ :x****/

Then why did you post a comment like this? you can comment any body because you have right to comment, but "Honest criticism is hard to take, particularly from a relative, a friend, an acquaintance, or a stranger".

Anonymous said...

/***ரமேஷ் ராமசாமி said...
உங்களில் சில பேர் செய்த சாரு ஆராய்ச்சி மாதிரி எல்லாம் முயலாதவன்.***/

Then please keep quite!!!தெரியாம வாய் கிழிய பேச கூடாது!!!!

Anonymous said...

/****
அந்த மனுசன போட்டு சும்மா சேர்ந்து தாக்கி, கூடி கும்மியடிக்க, இதுலாம் ஒரு பொழப்பா??


Look Before you leap! இப்பொழுது நன்கு புரிந்தது... ஒழுங்கா ஆஃபீஸ் வந்தியா, இருக்குற வேலைய பார்த்தியா, ப்ரீயா இருந்தா ஒரு 4 பிளாக் படிச்சியா, 1ம் தேதியான சம்பளம் 1/2 L வாங்கினீயா போனோமானு இருக்கனும்.. அத விட்டுட்டு, இது எல்லாம் உனக்கு தேவையா என்று எனக்கு நானே கேட்கத் தோன்றுகிறது.
***/

உங்கள் போஸ்ட்ஐ பார்த்தவுடனே நினைத்தேன், உங்களுக்கு சாருவை பற்றி தெரியாது என்று, உண்மை ஆக்கி விட்டீர்கள், தெரியாம எதுக்கு மூக்கை நுழைக்கிறீர்கள் , கன்றாவி வடை இதெல்லாம் தேவையா?????

வலைஞன் said...

சற்றே உணர்ச்சி வசப்பட்டார் என்பதை தவிர,ரமேஷ் ராமசாமி எழுதியது சரியாகத்தான் படுகிறது.சரி,சாருவை மறந்துவிடுங்கள்.விஜய் டிவி செய்தது சரியா,தவறா?

R.Gopi said...

சாருவை யாரும் இந்த வாங்கு வாங்க வேண்டாம் என்றே தோன்றுகிறது..... ஏன் சார், நிகழ்ச்சிக்காக பணம் கொடுக்காததை அவர் சுட்டி காட்டுகிறார்... இதில் தவறேதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை....

அதுவும் ஒரு முறையல்ல... பலமுறை.... நமக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் இருந்தால், வெறுமே வாய் பொத்தி இருப்போமா என்று தெரியவில்லை.... வேண்டுமானால், ஒரே ஒரு இடத்தில் இருப்போம்..... அரசியல்வாதிகளின் ஆட்டோ, சுமோ வாகனங்கள் வரும் என்று தெரிந்தால்.....

மற்றபடி, சாரு சொல்வதை போல், உழைப்புக்கேற்ற ஊதியம் தரவேண்டும் என்பதே சரியான நிலை.....

விஜய் டி.வி. இந்நிலை தவறி இருந்தால், இது அவர்களின் தவறுதான்.... இதை சாரு சுட்டி காட்டுவதில் ஏதும் தவறு இருப்பதாக தெரியவில்லை....

விஜய் இந்த நிகழ்ச்சியை வைத்து கல்லா காட்டுகிறதா இல்லையா, விளம்பர தாரர்களிடம் இருந்து!!??

UM said...

Kumudam pathririkai oru murai vasargal Feedback meeting onru vaithapodhu Coveril panam vaithu koduthu dhan anupinaargalam..Idhu oru marabu..Vijay TV adhai follow pannadhadhu aacharyame..Raj TV Top Singer nigalcjikku varum pottiyalargalukku bus fair kooda kuduppadhillai..(En nanbar oruvar sonna thagaval)..Charu sonna madhiri TV la moonchi varadhukku idhaiyellam sahithu kollanaum pola...Krish

Kameswara Rao said...

இ.வ,
டி.வி யில் முகம் காண்பிக்க வேண்டும் என்ற அவ இருந்த போது, காசு பற்றி பேசக்கூடாது அப்படி காசு மேல் கூறியிருந்தால் முதலில் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும் அதை விடுத்து ஒப்பாரி வைக்க கூடாது .... என்னமோ போங்க ..

மிஸ்டர் சாறு, வருது நல்ல வாயிலே, சொல்லிடபோறேன் ஏதாவது

காமேஷ்

kggouthaman said...

விஜய் டி வி யின் - சிக்கன நடவடிக்கை - மேலும் ஓர் உதாரணம்.
நான் July 26 - 2007 இல நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாடமியில்
லியோனி பட்டி மன்றம் - பார்வையாளராகச் சென்றிருந்தேன்.
தாமதமாக ஆரம்பித்து - அவசரம் அவசரமாக முடித்தார்கள்
படப்பிடிப்பை.
அப்பொழுது பார்வையாளர் வரிசை அடிக்கடி க்ளோஸ் அப
ஷாட்ஸ் எடுத்து வைத்துக் கொண்டார்கள்.
அதற்குப் பிறகு, பிரிமியரின் பட்டி மன்றம் - வேறு வேறு தலைப்புகளுக்கு
ஆயுத பூஜை, தீபாவளி - என்று பல பட்டி மன்றங்களுக்கு - அதே
ஆடியன்ஸ் - அதே சிரிப்புகள் என்று க்ளோஸ் அப ஷாட்ஸ் காட்டி
உடான்ஸ் பண்ணி விட்டார்கள்.
ஆகவே - ஒரு படப்பிடிப்பு - ஆறு மாதங்களுக்கு
ஆடியன்ஸ் ரெடி!

Krish said...

விஜய் டிவி பண்றது சரிஇல்லை. இந்த நிகழ்ச்சியின் இடையில் வரும் ஒவ்வொரு விளம்பரத்துக்கும் சில லட்சங்களை வாங்குவார்கள். அதில் ஒரு பத்தாயிரம் கொடுப்பதில் என்ன ஆகிவிடப் போகிறது?

இப்படி கேவலமாக நடத்துகிறார்கள் என்று தெரிந்தும் சாரு ஏன் அங்கு மறுபடி, மறுபடி செல்கிறார் என்று தெரியவில்லை?

Rahul said...

/*** வலைஞன் said...
சற்றே உணர்ச்சி வசப்பட்டார் என்பதை தவிர,ரமேஷ் ராமசாமி எழுதியது சரியாகத்தான் படுகிறது.சரி,சாருவை மறந்துவிடுங்கள்.விஜய் டிவி செய்தது சரியா,தவறா?***/

Vijay TV's mistkae is better than charu's .......

Baski said...

இந்த YUK பதிவிற்கு இவ்வுளவு பின்னூட்டங்களா ?

IV, You are great!

Anonymous said...

Why this post(shit)??????

RaavanaPrabu said...

கோடி கோடியாக பிசினஸ் பண்ணும் ஒரு மீடியா நிறுவனம் ஒரு எழுத்தாளருக்கு காசு கொடுக்காதது தமிழ் மாக்களுக்கு தவறாக தெரியவில்லை. ஏன்னா ஓசி, இலவசம் இது தான் முக்கால் வாசி தமிழர்களின் தாரக மந்திரம்.
உழைத்தவன் காசு கேட்டால் வரிந்து கட்டி கொண்டு அவனை கொலை வெறியோடு தாக்குங்கள்.
ஒரு தமிழ் எழுத்தாளரையே இப்படி தாக்கும் எனதருமை தமிழ் சமூகம் வேறு மனிதர்களை என்ன பாடு படுத்தும்?
சும்மா இல்ல தமிழன் எல்லா ஊர்லயும் அடி வாங்குறது!.
சத்தியமா சொல்றேன் நம்ம ஆளுங்க வெளிநாட்டுல உதை வாங்குறத
தினசரிகளிலும், தொலைக்காட்சிகளிலும் பார்கும்போது சத்தியமாக சந்தோசமா இருக்கும்.
இந்த மாதிரி ஈவு இரக்கம் இல்லாம பின்னூட்டம் போடுற மேதாவி எழுத்து மன்னர்கள் மாண்புமிகு. ராஜபக்சே கையால் சாக வேண்டியவர்கள் என்று கருடபுராணம் குறிப்பிடுவதாக நினைக்கிறேன்.
வாழ்க தமிழ் சமூகம்.
த்த்தூ ............

Anonymous said...

// ஏன்னா ஓசி, இலவசம் இது தான் முக்கால் வாசி தமிழர்களின் தாரக மந்திரம்.
உழைத்தவன் காசு கேட்டால் வரிந்து கட்டி கொண்டு அவனை கொலை வெறியோடு தாக்குங்கள்.//
அடேங்கப்பா !!
டி.வி. இல மூஞ்சி காட்டி, கருத்து என்ற பெயரில்
கன்னா பின்னான்னு உளறினால் -- அது
உழைப்பா? - அதற்கு காசு வேறு வேண்டுமா?
அந்த காசு தாங்க ஓசி & இலவசம்!
:: உழைப்பாளி ::

Rahul said...

/****கோடி கோடியாக பிசினஸ் பண்ணும் ஒரு மீடியா நிறுவனம் ஒரு எழுத்தாளருக்கு காசு கொடுக்காதது தமிழ் மாக்களுக்கு தவறாக தெரியவில்லை. ஏன்னா ஓசி, இலவசம் இது தான் முக்கால் வாசி தமிழர்களின் தாரக மந்திரம்.****/

ஐயா புத்திசாலி பிரபு ,
அவர் முதல் தடவையே தரவில்லை என்று கூறி இதை சொல்லி இருந்தால் பாராட்டலாம், அவருக்கு நீங்கள் குரல் கொடுப்பதில் தவரிலை, வெட்கமே இல்லாமல் ஒரு எழுத்தாளன் இப்படி சொல்லிவிட்டு புலம்புவத்தை என்ன சொல்ல?????


/***** 'எங்கே என் பணம்' என்று நான் கேட்பதும், 'நாளை அனுப்பிவைக்கிறேன் சார்' என்று அந்த நபர் சொல்வதும், அந்த 'நாளை' என்பது வராமலே போவதும் ஒரு சடங்காகவே நடந்துகொண்டு இருந்தது. சரி, போகாமல் இருந்துவிடலாம் என்று பார்த்தாலோ டி.வி-யில் மூஞ்சியைக் காண்பிக்கும் ஆசை அந்த எண்ணத் தைத் தடுக்கிறது. இதற்கிடையில் 'நீயா நானா' நிகழ்ச்சியின் மூளை யாகச் செயல்படும் ஆண்டனியும் எனக்கு நண்பராகிவிட்டார். அவர்தான் அந்த நிகழ்ச்சியின் பொறுப்பாளர்.****/

இவருக்கு நீங்கள் என்ன அடிப்படையில் சப்பை கட்டுகிறீர்கள்????? இது தான் ஒரு எழுத்தாளனுக்கு அழகா???


/****ஒரு தமிழ் எழுத்தாளரையே இப்படி தாக்கும் எனதருமை தமிழ் சமூகம் வேறு மனிதர்களை என்ன பாடு படுத்தும்?
சும்மா இல்ல தமிழன் எல்லா ஊர்லயும் அடி வாங்குறது!.
சத்தியமா சொல்றேன் நம்ம ஆளுங்க வெளிநாட்டுல உதை வாங்குறத
தினசரிகளிலும், தொலைக்காட்சிகளிலும் பார்கும்போது சத்தியமாக சந்தோசமா இருக்கும்.***/

என்னமோ நீங்கள் தமிழனுக்கு காஸ்மிரில் இருமல் வந்தால் கன்னியாகுமரியில் இருந்து மருந்து கொண்டு போய் கொடுப்பதை வழக்கமாக வைத்திருப்பவர் போல அலட்டிக் கொள்ள வேண்டாம்....கொஞ்சம் யோசனை செய்து பேசுங்கள்.....

raavanaprabu said...

அன்புள்ள ( இல்லாத) தமிழர்களே தமிழன் எங்கு அடி பட்டாலும் அதை பற்றி சந்தோஷ படுபவன் நான். ஏன் என்றால் நீங்கள் அதற்கு தகுதி உடையவர்கள். வேறு என்ன நான் சொல்ல ?

Rahul said...

/****அன்புள்ள ( இல்லாத) தமிழர்களே தமிழன் எங்கு அடி பட்டாலும் அதை பற்றி சந்தோஷ படுபவன் நான். ஏன் என்றால் நீங்கள் அதற்கு தகுதி உடையவர்கள். வேறு என்ன நான் சொல்ல ?****/

ஏதோ வித்தியாசமாக சொல்கிறோம் என்ற உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன், ஆனால் அதற்காக இது மாதிரி பிதற்றாறீர்கள்....


இந்த பதிவில் சாருவுக்கு குரல் கொடுப்பவர்கள் எல்லாம் தமிழர் மீது அன்பு உள்ளவர்கள், உங்கள் கணிப்பு இது தானா ? ஆம் என்றால் மிகவும் நன்றாக உள்ளது உங்கள் கணிப்பு.... வாழ்த்துகள் அதனால் நான் அன்பு இல்லாதாவனாகவே இருக்க ஆசைப்படுகிறேன்....

raavanaprabu said...

மலச்சிக்கல் பிடித்த தமிழ் சமூகத்திற்கு
நீங்கள் என்ன சொன்னாலும் சரி. உங்களை போன்ற தமிழர்கள் துடிக்க துடிக்க சாகும் போது ஏன் மனம் சந்தோஷமடையும் என்பதை சொல்லி கொள்கிறேன். நன்றி
தயவு செய்து உங்கள் மாதிரி ஆள்களுக்கு சீக்கிரம் சாவு வர பிரார்த்திக்கிறேன்.
ஹலோ எனக்கும் அசிங்கம் தெரியும்
ஏன்னா நான் தமிழன்.

RaavanaPrabu said...

சாருவுக்கு குரல் கொடுப்பது ஒன்றும் கேவலமான விஷயம் கிடையாது.
ஆனால் கடந்த அரை நூற்டாண்டுகளாக தமிழகத்தில் தேவடியா கிட்ட போயிட்டு காசு கொடுக்காம வந்த பண்பாளர்கள் உச்சத்தில் வளர்ந்து ஆட்சி செய்யும் உன்னதமான பண்பாட்டில் வாழ்பவர்கள் தான் நீயும் நானும்.
தூ ........

Rahul said...

/****மலச்சிக்கல் பிடித்த தமிழ் சமூகத்திற்கு
நீங்கள் என்ன சொன்னாலும் சரி. உங்களை போன்ற தமிழர்கள் துடிக்க துடிக்க சாகும் போது ஏன் மனம் சந்தோஷமடையும் என்பதை சொல்லி கொள்கிறேன். நன்றி
தயவு செய்து உங்கள் மாதிரி ஆள்களுக்கு சீக்கிரம் சாவு வர பிரார்த்திக்கிறேன்.
ஹலோ எனக்கும் அசிங்கம் தெரியும்
ஏன்னா நான் தமிழன்.***/

ஹா....ஹா.....ஹா....ஹி ...ஹி...ஹி...

Rahul said...

/**** RaavanaPrabu said...
சாருவுக்கு குரல் கொடுப்பது ஒன்றும் கேவலமான விஷயம் கிடையாது.
ஆனால் கடந்த அரை நூற்டாண்டுகளாக தமிழகத்தில் தேவடியா கிட்ட போயிட்டு காசு கொடுக்காம வந்த பண்பாளர்கள் உச்சத்தில் வளர்ந்து ஆட்சி செய்யும் உன்னதமான பண்பாட்டில் வாழ்பவர்கள் தான் நீயும் நானும்.
தூ ........****/


சாருவும் அவரது ஸீட கேடிகளும் கீழ்த்தரமானவர்கள்!!!!!Once again it is proven.

Anonymous said...

/*** RaavanaPrabu said...
சாருவுக்கு குரல் கொடுப்பது ஒன்றும் கேவலமான விஷயம் கிடையாது.***/

Hi you did a mistake,
சாருவுக்கு குரல் கொடுப்பது அல்ல, அது சா(ரு)வுக்கு குரல் கொடுப்பது........

Erode Nagaraj... said...

இதை எழுதிய சாரு எப்படிப்பட்டவர் என்பதை விடுத்து, ஒரு புகழ் பெற்ற நிறுவனம் எப்படி நடந்து கொள்கிறது அல்லது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எவ்விதம் சக மனிதர்களை மதிக்கிறார் என்று விவாதம் செய்தால் நன்றாக இருக்கும்.

பெரிய சேனல்கள் அனைத்திற்குமே இந்த ஒரு இயல்பு நீண்ட நாட்களாக உள்ளது. சமூகத்தில் அறியப்பட்டவருக்குக் கூட தாங்கள் தான் முகவரி கொடுப்பதாக ஒரு இறுமாப்பு.

உங்களை ஒரு ஊடகத்தில் பேட்டி எடுத்தால் அது உங்களைப் பற்றிய நிகழ்ச்சி. அதற்கு யாரை பேட்டி காண்கிறார்களோ அவர் வீட்டிற்கே சென்றோ அல்லது நிலையத்திற்கு வரவழைத்தோபேட்டி எடுக்கட்டும். ஆனால், இன்னொரு நிகழ்ச்சியில் கருத்துரைப்பதற்காக சமூகப் பிரக்ஞை கொண்டவர்கள், அறிவு சார்ந்தவர்கள், நடுநிலையாளர்கள் என்று தாம் கருதும் சிறப்பு அழைப்பாளர்களை மரியாதையான முறையில் நடத்துவதும் அவர்களுக்கு உண்டான wages, fee அல்ல... remuneration-ஐ வழங்கி முறையாக நடந்து கொள்வதும் ஊடகங்களின் கடமை.

ஏதோ ஒரு விதத்தில் பங்களிப்பு செய்பவர்களைக் கூட, "ஓம்மூஞ்சி யெல்லாம் டிவீல வருதுல்ல... சந்தோஷப்பட்டுட்டு போய்கிட்டே இரு" என்பது சக மனிதனை மதித்தல்அல்ல.