பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 15, 2009

நம் நாடு - "நாம்" மாநாடு



பிரதமர் மன்மோகன்சிங், 2 நாள் பயணமாக பாரீஸ் மற்றும் எகிப்து நாட்டுக்கு சென்றுள்ளார். எகிப்து நாட்டில் பாகிஸ்தான் பிரதமர் கிலானியும் மன்மோகன்சிங்கும் நாளை (வியாழக்கிழமை) சந்தித்து பேசுகிறார்கள்.

போன மாசம் என்ன நடந்தது என்று கொஞ்சம் பார்ப்போம்: ரஷ்யாவின் நடந்த ஏதோ உச்சி மாநாட்டில் சிங்கும், சர்தாரியும் சிறப்புப் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். அப்போது சர்தாரியும், சிங்கும் சந்தித்துக் கொண்டனர். மன்மோகன் சிங்கிடம் சர்தாரி கை குலுக்கினார். இதை ஏகப்பட்ட புகைப்படக்காரர்கள் போட்டி போட்டுக் கொண்டு படம் எடுத்தனர். சர்வதேச நாடுகளின் செய்தியாளர்களும் அருகில் இருந்தனர். சர்தாரி புன்னகையுடன் மன்மோகன் சிங்கிடம் கை குலுக்க, மாறாக பிரமதரோ, சற்று இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு, பாகிஸ்தான் மண்ணில் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளின் செயல்பாட்டை தடுத்து நிறுத்துங்கள் என்று பட்டென்று கூற சலசலத்துப் போனார் சர்தாரி. நிருபர்களை வைத்துக் கொண்டு இதை பேச வேண்டாமே என்று கூறி பின்னர் மன்மோகன் சிங்கை அங்கிருந்து அவர் அழைத்துச் சென்று நிலைமையை சமாளித்தார்.

அதற்கு பிறகு இந்த செய்தி கசிந்தது: எகிப்து மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார். அதேபோல சர்தாரியும் கலந்து கொள்வார். ஆனால் மன்மோகன் சிங் பேசிய பிறகு சர்தாரி தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டு விட்டார். தனக்குப் பதிலாக பிரதமர் கிலானியை அவர் அனுப்பவுள்ளார். மன்மோகன் சிங்கை மறுபடியும் சந்திக்கத் தயங்கியே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று.

நம் பிரதமர் தான் ரொம்ப நல்லவர் ஆச்சே போன வாரம் இத்தாலி நாட்டில் ஏதோ ஜீ மாநாட்டை முடித்துக்கொண்டு வரும் வழியில் விமானத்தில் பேட்டி கொடுத்தார் நம் பிரதமர் அதில் "சர்தாரியின் உணர்வுகளை புண்படுத்தும் எண்ணம் தனக்கு இல்லை, அங்கு பத்திரிகையாளர்கள் இருந்ததை தான் மறந்து விட்டேன்" என்று ஜகா வாங்கியுள்ளார்.

மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக ஏற்கெனவே இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் பாகிஸ்தான் மண்ணில் இருந்துதான் தீவிரவாதிகள் தாக்குதல் செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளனர் என்கிற உண்மையையும் இந்தியா உலக அரங்கில் எடுத்துக் கூறியுள்ளது. இதற்கு பல ஆதாரங்களை இந்தியா பாக்கிஸ்தானிடம் தந்துள்ளது. தற்போது எகிப்து சென்றுள்ள பிரதமர் மேலும் சில ஆதாரங்களை தந்துள்ளார். உடனே பாகிஸ்தான் அமெரிக்காவிடம் பெரிய குப்பை தொட்டியை ஆடர் செய்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு "முந்தைய ஆட்சியாளர்கள் சிலர் குறுகிய ஆதாயங்களுக்காகத் தீவிரவாதிகளையும், பயங்கரவாதிகளையும் ஊக்குவித்து, அவர்களுக்குப் பயிற்சியும் வேறு சில உதவிகளையும் அளித்து வந்துள்ளனர். இதுதான் தீவிரவாதம் தலைதூக்க மிகப்பெரிய காரணம்'' என்று சர்தாரி முழங்கினார். உடனே மீடியா ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தது.

ஆனால் ஹபீஸ் முகமது சயீத் போன வாரம் விடுதலை செய்யப்பட்டார். நேற்று சயீத் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசாங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுவை பஞ்சாப் அரசு திரும்பப்பெற்று கொண்டது. அவர்கள் மேலும் பல தாக்குதல் செய்ய வேண்டாமா ? ( மும்பை தாக்குதல் நடந்த உடன் அதற்கு காரணமான லஸ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் முகமது சயீத் தலைவராக இருக்கும் ஜமாத் உத்தவா அமைப்பு தடை செய்யப்படவேண்டும் என்று ஐ.நா.பாதுகாப்பு சபை வலியுறுத்தியது. இதை தொடர்ந்து அந்த அமைப்பின் அலுவலகங்கள் மூடப்பட்டன. ஹபீஸ் உள்பட பல முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். )

மீண்டும் சர்தாரி பேச்சை படித்து பாருங்கள் சிரிப்பு வரும்.

பாகிஸ்தானில் உள்ள எல்லா ஆட்சியாளர்களுமே திவிரவாதிகள் தான். இவர்கள் மண்ணில் தான் எல்லா மோசமான தீவிரவாதிகளும் பிறந்து வளர்கிறார்கள். மதவாதம், தீவிரவாதம் என்ற நோய்களால் அவதிப்படும் ஒரு தேசத்திடம் பேச்சு வார்த்தை என்று பேசுவது மடத்தனம். பாக்கிஸ்தானில் கக்கூஸை தவிர மற்ற இடங்கள் எல்லாமே தீவிரவாதிகளின் கூடாரம் தான். உடனே இந்தியா காஷ்மீர் தீவிரவாதி முகாம்களை போட்டு நசுக்க வேண்டும். நம் பிரதமர் அதை செய்ய மாட்டார். அப்படி செய்தால் அவருக்கு ராத்திரி தூக்கம் வராது.

அடுத்த தேர்தல் போது நாம் இதை எல்லாம் மறந்துவிடுவோம். இந்த நியூஸையே யாரும் அவ்வளவாக கண்டுகொள்ள மாட்டார்கள். மும்பை தாக்குதல் அது நடந்து 8 மாசம் ஆகிவிட்டது. மும்பை போல் இன்னும் எத்தனை நிகழ்வுகள் நடந்தாலும் நாம் அதற்கு கவலை படாமல், ஓபாமா மாதிரி விளையாடிக் கொண்டிருப்போம். அடுத்து முழு சூரிய கிரகணத்தால் சுனாமி வருகிறது என்று பயப்பட தொடங்கிவிட்டோம்.


நம் நாடு என்ற உணர்வு இருந்தால் இந்த "நாம்" மாநாடு எல்லாம் தேவையில்லை. இவ்வளவு நல்ல பிரதமர் நம் நாட்டுக்கு கிடைத்தது நாம் செய்த அதிர்ஷடம். "எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா,இவன் ரொம்ப நல்லவண்டா" என்று நாம் டிவியில் வந்தால் ரசிக்கிறோம். தினமும் அதே நியூஸிலும் வருகிறது. ரசிப்போம். அடுத்த ஃப்ளாஷ் நியூஸுக்கு காத்திருப்போம்.


11 Comments:

kggouthaman said...

//இவ்வளவு நல்ல பிரதமர் நம் நாட்டுக்கு கிடைத்தது நாம் செய்த அதிர்ஷடம். "எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா,இவன் ரொம்ப நல்லவண்டா" என்று நாம் டிவியில் வந்தால் ரசிக்கிறோம். தினமும் அதே நியூஸிலும் வருகிறது. ரசிப்போம். //

மஞ்ச கமெண்ட் மாமணியே!
கொன்னுட்டீரையா!

யதிராஜன் said...

கடைசி இரண்டு பாராக்களில் நியாயமான ஆதங்கம் தொனிக்கிறது. நேற்றைய தினம் பிரான்ஸ் நாட்டுப் பிரதமர் சர்க்கோஸியிடம் நடத்திய சம்பிரதாயப் பேச்சுவார்த்தை இன்றைய ஹிந்துவில் " India, France to firm up fight against terrorism" என்று தலைப்புச் செய்தியாக வெளியாகியுள்ளது.


பேப்பரளவில் தீவிரவாதத்தை எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். கடந்த ஆறாண்டு காலமாக ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று செங்கோட்டையில் தீவிரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கப் போவதாக மன்மோஹன் சிங் கொக்கரிக்கிறார், அடுத்த நான்கு வருடமும் (கொக்கரி)ப்பார். ஆனால் எல்லாம் பேச்சோடு சரி. தீவிரவாதியின் தாய் கண்ணீர் வடித்தால் நமது பிரதமருக்கு சாப்பாடு தூக்கமிராது. அந்த அளவுக்கு ஜீவகாருண்யம் படைத்த நேர்மையாளர்.

கடைசி இந்தியப் பிரஜை தீவிரவாதத் தாக்குதலுக்குட்பட்டு மாளும் வரை இவ்வாறு புலம்புவதுதான் நமக்கு கதி. வாழ்க செக்யூலரிஸம்., வளர்க காங்கிரஸ்!!

Eswari said...

//எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா,இவன் ரொம்ப நல்லவண்டா" என்று நாம் டிவியில் வந்தால் ரசிக்கிறோம். தினமும் அதே நியூஸிலும் வருகிறது. ரசிப்போம். அடுத்த ஃப்ளாஷ் நியூஸுக்கு காத்திருப்போம்.//
Correct-a சொனீங்க

Eswari said...

//"எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா,இவன் ரொம்ப நல்லவண்டா" என்று நாம் டிவியில் வந்தால் ரசிக்கிறோம். தினமும் அதே நியூஸிலும் வருகிறது. ரசிப்போம். அடுத்த ஃப்ளாஷ் நியூஸுக்கு காத்திருப்போம்.//
correct-a சொன்னீங்க

அக்னி பார்வை said...

அடுத்த டார்கெட் சென்னை தானம் பாத்து உம்ம வீட்ல வெடி குண்டு வெச்சிட போறாங்க...

Kameswara Rao said...

இ,வ,

மஞ்சள் கமெண்ட் சூபர். வாய்ப்பேச்சு தான் .. செயலில் ஒன்னும் இல்லை..

நெஞ்சு பொறுக்குதில்லையே...

காமேஷ்

Anonymous said...

You just can't attack Pakistan as you wish. As a responsible country, you have to react in a intelligent way. The fact remains that India is unable to convince US about the nefarious activities of Pak and stop providing monetary support to them. If and only if we turn US against Pak can we hope to make it dummy. Till such time, we can't hope to control Pak singlehandedly.

Erode Nagaraj... said...

நாம் என்றாலே நாமம் தானே!

மேலும்,இம்மாநாடுகள் எல்லாம் நாம் கே வாஸ்தே தான்!

மானஸ்தன் said...

இந்த அமைச்சரவை ஒண்ணும் செய்யாது. இன்னும் ஐந்து வருடம் இப்டிதான் ஓடும்.

அடுத்த முறையும் இவர்களையே உட்காரவைத்து சந்தோஷமாக அழகு பார்ப்போம்!

Anonymous said...

I think as a soverign state we have our own responsibilities. I see the article as well as some of the comments are hinting to attack pakistan immediately. We have to understand the consequence before taking such stupid decision. It is not the question of whether or not we will win that. It is the question of at what cost we will achieve that. Agreed that with a defunct org like UN, nothing much is going to happen if we get only into 'DISCUSSIONS'. We have to safeguard our territory, be vigilant in our security, and see within ourselves first. Anything beyond that is just inviting trouble.

R.Gopi said...

//அக்னி பார்வை said...
அடுத்த டார்கெட் சென்னை தானம் பாத்து உம்ம வீட்ல வெடி குண்டு வெச்சிட போறாங்க...//

அக்னி....... ஏன் இந்த கொலைவெறி...... சர்தாரியே பரவாயில்லை போல இருக்கே....

// மானஸ்தன் said...
இந்த அமைச்சரவை ஒண்ணும் செய்யாது. இன்னும் ஐந்து வருடம் இப்டிதான் ஓடும்.

அடுத்த முறையும் இவர்களையே உட்காரவைத்து சந்தோஷமாக அழகு பார்ப்போம்!//

ஏன் அடுத்த முறையும் உட்கார வைத்து அழகு பார்க்க வேண்டும்?? தூக்கி போடுங்கள் சார்.....