பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 22, 2009

கலாம் - காந்தி - நமக்கு என்ன ?

புதிய செய்தி...
இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் அமெரிக்க விமான நிறுவனத்தால் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 24 அன்று அமெரிக்கா செல்லும் கான்டினென்டல் ஏர்லைன்ஸ் விமானத்தில் கலாம் ஏறுவதற்கு முன்பு அவ்விமான பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் சாதாரண பயணியைப் போல சோதனை நடத்தியதாக கலாமுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

கலாம் இவ்விவகாரத்தை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லவில்லை. எனினும் தற்போது இவ்விவகாரம் வெளியே வந்துள்ளதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

'இப்போதுதான் இச்சம்பவம் குறித்து எனக்குத் தெரியவந்தது. இதில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும், சம்மந்தப்பட்டவர்களை மன்னிப்புக் கேட்குமாறும் கூற உள்ளோம்' என்றார் அவர்.

இந்நிலையில், அவ்விமான நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி அபர்ணா கூறுகையில், இது விமான பாதுகாப்பின் வழக்கமான சோதனைதான் என்றும் விஐபி மற்றும் விவிஐபிக்களுக்கு என சிறப்பு விதிகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பழைய செய்தி கீழே...


அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தபோது காந்தி சமாதிக்கு அவர் செல்வதற்கு சற்று முன்பாக அமெரிக்க பாதுகாப்பு படையினர் சமாதியை சுற்றிலும் மோப்ப நாய்களை கொண்டு சோதனை நடத்தினர். இந்திய பாதுகாப்பு ஏற்பாடுகளில் நம்பிக்கை இல்லாமல் அவர்கள் இப்படி கீழ்த்தரமாக சோதனை நடத்தியது நாடு முழுவதும் பேசப்பட்டது. இன்று போல் அன்றும் பாராளுமன்றத்தில் இந்த பிரச்னையை எதிர்கட்சிகள் கிளப்பி தங்கள் மன வேதனையை வெளிப்படுத்தின.


காந்திக்கே இந்த நிலமை என்றால் ?

45 Comments:

Anonymous said...

We don't have the guts to do the same thing to them when they visit us, nor do we have the guts to boycott going to US once for all because we can't afford to have a angry and hurt "Big brother"

யதிராஜ சம்பத் குமார் said...

அமெரிக்க ஜனாதிபதியை விடுங்கள்....முன்பொருமுறை இத்தாலி விஜயம் செய்த சோனியா காந்தி அம்மையார் இந்திய பாதுகாப்பில் நம்பிக்கையில்லை எனக் கூறி இத்தாலிய சிறப்பு பாதுகாப்பை கோரிப் பெற்றார். அதை விடவா அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் செய்தது தேசத்திற்கு அவமானம்??


முன்னாள் ஜனாதிபதியான கலாமை சோதனைக்குள்ளாக்கியிருக்கத் தேவையில்லை. ஆனால் அதை அவர் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாதது அவருடைய மிகுந்த பெருந்தன்மையை வெளிப்படுத்துகிறது. இதே நம் திமுக அமைச்சருக்கோ,எம்.எல்.ஏவுக்கு நிகழ்ந்திருப்பின் விமான ஓடுபாதையில் தலைவைக்கும் போராட்டம் நிகழ்த்தப்பட்டு அது பல நூற்றாண்டுக்கு மேடைப் பேச்சுக்குரிய விஷயமாகியிருக்கும்.

மானஸ்தன் said...

வி ஐ பி treatment குடுப்பதை எல்லா இடங்களிலும் நிறுத்தவேண்டும். afterall இந்த so-called அமைச்சர்கள் எல்லாரும் நம்மைபோல் குடிமகன்களே. என்ன இழவுக்கு இவர்களுக்கு சலுகைகள்/தாங்கிப்பிடிக்கும் வேலை?

இனிமேலாவது வெள்ளைக்கார diplomats வந்தால் அவர்களையும் "சாதாரணமாக" நடத்தி "சமத்துவத்தைக்" காட்டவேண்டும்.

Dr கலாம் அவர்களின் எளிமை தெரிந்ததே. அவர் பெரிய மனிதர் என்பதை பல முறை நிரூபித்துவிட்டார். இந்தப் பன்னாடை அரசியல் வியாதிகள் அவரை பார்த்து திருந்தவேண்டும்- அல்லது - forcefully திருத்தப்படவேண்டும்.

மானஸ்தன் said...

நேற்று MLA-க்களுக்கு இரண்டரை கிரௌண்டு வீட்டுமனை என்று அறிவித்த கருணாநிதி இன்னும் ஐந்து முறை தொடர்ந்து முதல்வராக செயல்பட்டு வர உள்ளஅனைத்து MLA-க்களுக்கும் நிலம் வழங்கிட வேலூர் ஞானசேகரன் சார்பாக வாழ்த்துகிறோம்.

இந்த நாதாரிகளின் ஆட்டம் எப்போதுதான் அடங்கும்? இதைக் கேட்க நாதியே இல்லையா?

Kasu Sobhana said...

ஐயா காண்டினெண்டல் ஏர்லைன்ஸ் மக்களே!
ஒபாமாவிற்கும் இது (சோதனையிடுதல்) உண்டா?
உண்டு என்றால் - கலாமுக்குச் செய்தது ஒ கே ..
இல்லை என்றால் - ஒவ்வொரு இந்தியனுக்கும்
நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.

Anonymous said...

உண்மையில் மோகம் தான் இதற்கு காரணம், எதற்கு எடுத்தாலும் வெள்ளைக்காரானயே எதிர்பார்த்து காத்திருந்தால் இப்படி தான்!!! MNC (Non India) கம்பெனியின் பொருள் வேண்டும், அதே போல அந்த கம்பெனியில் (ஏ சி இல் அமர்ந்து ஓ பி அடிக்கும்) வேலையும் வேண்டும், அவன் கொடுக்கும் விருதுகள் வேண்டும், எல்லா வசதிகளும் வேண்டும் கடைசியில் நமக்கு சுயமரியாதை வேண்டும் என்று வாய் கிழிய பேசுவது நல்ல காமெடி!!! வாழ்க இந்தியா! வாழாற்க காந்திய கொள்கைகள்!!
இவர்கள் செய்ய போவது விசாரணை அல்ல கெஞ்சலாகத்தான் இருக்கும்.....

Anonymous said...

இட்லி வடை உங்கள் நோக்கம் என்ன...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அப்துல் கலாமின் பெருந்தன்மையை பாராட்ட வேண்டும் என்பதா

அல்லது

அமெரிக்காவை குறை குற வேண்டும் என்பதா
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கலாம் - காந்தி - உமக்கு என்ன வேண்டும் ?

வடை சுடனுமா ... ok sudunga sudunga

Anonymous said...

விடுங்கப்பா, காந்தி சமாதியில் ஏற்கனவே பல அரசியல்வாதிகளே வந்தாச்சு, இந்த நாய்கள் வந்தால் என்ன

Rajesh said...

With respect to George Bush's visit. I can understand the issue. We know the standards of our SO CALLED FOOLPROOF security. The US agencies cant take chances. For Mr.Kalam, I sense the treatment is uncalled for.

சந்திரமௌளீஸ்வரன் said...

பாதுகாப்பு சோதனை செய்தால் அது அவமானமா

sreeja said...

இப்படி நடக்கும்போதெல்லாம் பாராளுமன்றத்தில் மன வேதனை தான் பட முடிகிறது. கொஞ்ச நாள் இது பரபரப்பாக இருக்கும். அப்புறம் வேறு பிரச்சனை தலை தூக்கும்பொழுது இது தானாகவே மறைந்து விடும்.

ஏன் அந்த விமான நிறுவன சேவையை முற்றிலுமாக இந்தியாவில் தடை செய்ய முடியாது?

காந்தி சமாதிக்கு செல்லும் VIP-க்கள் பாதுகாப்பை பற்றி யோசித்தால் அங்கு செல்லும் திட்டத்தையே கைவிட வேண்டியதுதானே?

நடக்குமா ?

சந்திரமௌளீஸ்வரன் said...

வெளிநாட்டு தலைவர் வருகையில் அவர்களின் நடைமுறைப்படி பாதுகாப்பு வழங்க அவர்கள் சோதிக்கிறாங்க

இதிலென்ன அவமானம்

மானஸ்தன் said...

மன்னிப்பு கேட்டு விட்டார்களாம். பிரச்சினை தீர்ந்தது.

இதற்காகக் குரல் எழுப்பிய அனைத்து MP-க்களுக்கும் டெல்லியில் பிராதன இடத்தில் ஒரு வீடு வழங்க பரிந்துரை செய்யப்படவேண்டும் என்பது மக்களின் விருப்பம்.

Anonymous said...

>>>>>>
இதே நம் திமுக அமைச்சருக்கோ,எம்.எல்.ஏவுக்கு நிகழ்ந்திருப்பின்
>>>>>>>>>

http://thatstamil.oneindia.in/news/2009/07/21/tn-policeman-attacked-by-mla-and-suppoters.html

தஞ்சாவூரில் ஒரு வழிப்பாதையில் செல்ல முயன்ற திமுக எம்.எல்.ஏ.வின் காரை தடுத்து நிறுத்திய போலீஸ்சாருக்கு அடி உதை விழுந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் துரை சந்திரசேகரன்.

இவர் நேற்று திருவையாறில் இருந்து தஞ்சாவூர் நோக்கி குவாலிஸ் காரில், தன் ஆதரவாளர்களுடன் சென்றார்.

தஞ்சை அரண்மனை பகுதியிலிருந்து கீழராஜ வீதி வழியாக, பழைய பஸ்ஸ்டாண்ட் செல்லும் பாதை ஒரு வழிப்பாதை வழியாக எம்எல்ஏவின் கார் செல்ல முயன்றது.

அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் மதி, காரை தடுத்து நிறுத்தினார்.

எம்எல்ஏவின் கார் எண்ணை அவர் குறிப்பெடுக்க முயன்றபோது, துரை சந்திரசேகரனும், அவருடன் வந்தவர்களும், காரை
நிறுத்தி அந்த போலீசாரை தகாத வார்த்தையால் திட்டி அடித்து உதைத்தனர். மேலும் செறுப்பால் அடிக்க முயன்றுள்ளனர்.

இதையடுத்து, காரில் வந்த அடையாளம் தெரிந்த, பெயர்
தெரியாத நால்வர் தன்னை செருப்பால் அடிக்க முயன்றவதாக காவலர் மதி தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தார்.

எம்எல்ஏவின் கார் என்று தெரிந்தம் அந்த காரை நிறுத்தி, ஒரு வழிப்பாதையில் செல்லவிடாமல் தடுத்த போலீஸ்காரர் மதிக்கு, எஸ்பி செந்தில்வேலன் ரொக்கப் பரிசு கொடுத்து கெளரவித்தார்.

Indian Voter said...

Kalam has once again proved that he is a gentleman.

There is nothing wrong as such in frisking everyone as part of security search. But this is a breach of protocol. Presidents, VPs, PMs (both former and incumbent) are exempt from security frisking at the airports. This doesn't apply to Ministers, speakers or other parliamenterians though out of courtesy and lack of will - they are also exempted. However, when they are subjected to frisking, they make a big fuss of it. (Somnath Chatterjee and Pranab Mukherjee made it a big issue.. Somnath even refused to participate in the Speakers Conference at Australia coz of that. George Fernandes didn't seem to mind, but the incident was brought to light by Strobe Talbott in his book).

Security agencies or the airlines should get that protocol thing out of the away and subject everyone to the same procedure.
Or if they can't do that, follow that protocol properly.
Not both.

Now that they haven't followed the protocol, some heads will inevitably roll - whether it is right or wrong.

I wonder what will happen if you try doing such a thing on -- forget Bush or Clinton or Obama --- someone like Colin Powell or Condoleeza Rice.

Sethu Raman said...

I hope you all have not forgotten that some years ago a Magistrate issued a warrant in the name of the Abdul Kalam not knowing the address was that of the President!!
What were the protocol officers doing, at the time of departure ? secondly when the booking was made with the Continental Airlines, was it indicated that the traveller is a former President of India? If, after all this, the Airlines frisked him then they have to be taken to task, not otherwise..

நானும் ஒரு இந்தியன்!! said...

Slumdog Millionare என்று ஒரு வெள்ளைக்கார துரை படம் எடுத்தால் பெருமை, ஒருவரை அல்ல ஒரு சமூகததையே கேவலமாக காட்டினார்கள் (அவர்கள் ஊரிலே இல்லாத ஒன்று இங்கு மட்டும் தான் இருப்பது போல!!) , கை தட்டி கொண்டாடினோம், படத்திற்கு வரி விலக்கு செய்தோம்,விருதுகள் வாங்கினோம் கேட்டால் உண்மை தானே அது என்றீர்கள், இப்போது மட்டும் எதற்கு இந்த வலி?????? (முதல் குடிமகனும் கடைகுடிமகனும் ஒன்றுதான்!!!!! அத்தனை மக்களை அசிங்கமாக உலகிற்கு காட்டிய பொழுது படாத கோபம் இப்போது எதற்கு கொந்தளிக்கிறது?, தன்னை சோதனை செய்தது தவறு அல்ல என்று தெரிந்து அதை பொருட்படுத்தாததா கலாமின் பெருந்தன்மை தெரிந்ததுதான் ஆச்சரியம் இல்லை.

Anonymous said...

/**நானும் ஒரு இந்தியன்!! said...
Slumdog Millionare என்று ஒரு வெள்ளைக்கார துரை படம் எடுத்தால் பெருமை, ஒருவரை அல்ல ஒரு
********/

Yes... we are only reason for situations like this... Take koreans they won't not even touch japan products, because they ruled the koreans long back... that is self-prestige not like ours.

Kameswara Rao said...

இ,வ,

தன்னை சோதித்ததை ஒரு பொருட்டாக கருதாமல் அதை பற்றி ஒரு புகார் கூட சொல்லாத திரு அப்துல் கலாம் அவர்களை வணங்குகிறேன்.

இத பத்தி பேசும் பொது தி மு க எம் எல் எ ஒரு வழி பாதையில் சென்று நிறுத்திய கவல்காறரை அடித்து, நிந்தை மொழி பேசினார் எனும் செய்தி should not be mentioned here
for time and again they prove what they are... if they don't do like this then it will be news... or else we all know
what pettai rowdies will do

Kamesh

Kameswara Rao said...

இ,வ,

தன்னை சோதித்ததை ஒரு பொருட்டாக கருதாமல் அதை பற்றி ஒரு புகார் கூட சொல்லாத திரு அப்துல் கலாம் அவர்களை வணங்குகிறேன்.

இத பத்தி பேசும் பொது தி மு க எம் எல் எ ஒரு வழி பாதையில் சென்று நிறுத்திய கவல்காறரை அடித்து, நிந்தை மொழி பேசினார் எனும் செய்தி should not be mentioned here
for time and again they prove what they are... if they don't do like this then it will be news... or else we all know
what pettai rowdies will do

Kamesh

Erode Nagaraj... said...

//இந்தப் பன்னாடை அரசியல் வியாதிகள் அவரை பார்த்து திருந்தவேண்டும்- அல்லது - forcefully திருத்தப்படவேண்டும்.//

bale maanas... well said...

Erode Nagaraj... said...

க்ளின்டன் வந்தால் ரிமோட் ஜாமர் முதல் சகலமும் கூடவே வரும், பரவாயில்லை.... ஆனால், இன்று சோனியாவுடன் சந்திப்பு என்றால், அமெரிக்க காவலர்கள், அங்கும் அவருடைய வீட்டை இண்டு இடுக்கு விடாமல் சோதனை செய்வார்களா?

ஹிலாரி பாராளுமன்றத்தைப் பார்க்க வேண்டும் என்றால், அது ஸ்கேன் செய்யப்படுமா?

அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் போல், திருப்பதி வெங்கடாசலபதியின் சன்னதி உள்ளே சுற்றிக் காண்பிக்க அழைத்துபோய், அங்கும் நாய்கள் முகருமா?

thiravianatarajan said...

சும்மா இந்த வெட்டி பேச்சு எதுக்கு? தேர்தலில் நின்று ஜெயிக்க துப்பில்லாத மன்மோகன் சிங் போன்றவர்கள் இந்த நாட்டின் பிரதமராக இருந்தால், அவரை வைத்துதான் அயல் நாட்டினர் இந்தியாவை எடை போடுவார்கள். இதுதான் உண்மை. கடந்தமுறையும் சரி இப்பொழுதும் சரி முது கெலும்பில்லாத, சோனியாவிற்கு தலையாட்டும் தஞாவூர் பொம்மையாக இருக்கும் மன்மோஹன் சிங், அமெரிக்கா போன்ற நாடுகள் எதை சொன்னலும், அதை ஏற்று ஒப்பந்தத்தில் கைய்ழுத்து போடும் நிலைமை நீடிக்கும் வரை எந்த நாட்டுக்காரனும் இந்தியாவை மதிக்கப்போவதில்லை.

திரு அப்துல் கலாம் போன்ற நேர்மையான, படித்த, நாட்டுப்பற்று உள்ளவர்கள் கிரிமினல்கள் நிறைந்த அரசியலில் பதவிக்கு ( அதுவும் ரம்பர் ஸ்டாம்ப் பதவி) வந்தது மிகப்பெரிய் தவறு.
சூடு சுரணையற்ற நம் அரசியல் வாதிகள் இதில் உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்க மாட்டார்கள். இந்த சம்பவத்தை வைத்து அந்த விமான கம்பெனியிடமிருந்து காசு அடிக்கப்பார்ப்பார்கள் அவ்வளவுதான்.
நமக்கு சொரணை இருக்குமானால், இது அப்துல் கலாம் என்ற தனி மனிதருக்கு ஏற்பட்ட அவமானமில்லை. இந்திய மக்களூக்கு ஏற்பட்ட அவமானம் என்ற என்ற முறையில் விமான கம்பெனியின் மீது வழக்கு தொடருவோம்! நீங்கள் தயாரா? இந்த வலையுலகம் நினைத்தால் முடியும். என்ன சொல்லுகிறீர்கள். பிள்ளையார் சுழி போட நான் தயார். நீங்கள் தயாரா? என் மெயில் ஐ டி thiravianatarajan@gmail.com.

amar said...

கலாம் air india விமானத்தில் செல்லாமல் ஏன் அமெரிக்க விமானத்தில் சென்றார் ?

Anonymous said...

4th annual e-book fair is going on www.worldebookfair.com from July 4 to August 4. About 2 million pdf books are available for free download.

This is a very good opportunity to download as many e-Books as you want. So, make good use of it.

After the completion of this fair, the same collection will be available for an annual membership fees of $8.95. So, grab the opportunity. .... :)

Baski said...

This is an insult for all of us. Me being an Indian really feel bad on this incident. But this is not first time.

Why such dis-respect???

We Indian's mindset is always to Survive. We least bother about self-respect. May be because of poverty and we were being ruled by foreigners for past 10/20 generations. We really don't care for an insult. We should also blame the current system, which is completely screwed-up.

India's foreign policies are in a way to reciprocate everything, (example: visa fees).
Can this be reciprocated to USA ? Let us do it.
We should have clear guidelines. Let it be USA president or beggar will go through same security.
In that case, this will become a normal action.

People neither respect others, nor feel bad for an insult.

This is a social attitude.
Esp. in govt departments, I see people standing in queue for long hours and looking at the officer coolly sitting in a AC cabin.
Those officers behaves as if they are doing some favor for we people. THIS IS R-I-D-I-C-U-L-O-U-S

People should be treated with due respect. They should be seated. Authorities should feel that those visitors make the purpose of their office.

நாராயணன் said...

அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை இங்கே தெரிகிறது.
He once again has proved that he's a gentleman.
பி.கு: சில நாளிதழ்களில் ஏப்ரல் 21 அன்று அமெரிக்கா புறப்பட்டார் என்று செய்தி வெளி வந்து உள்ளது.
சரி பார்க்கவும்.

Rama Karthikeyan said...

I don't know if the security check for Dr Kalam was uncalled for or not, but the media and now you trying to make this a issue of national pride is definitely uncalled for. That man is beyond all these and we creating this mess now using his name (comparing this scenario to Bush visit, really? ) is something that he would not like.

This is exactly why he kept quite and was being himself.

Anonymous said...

true indian should avoid to use this airlines. do this and show our support

Anonymous said...

ப்ரியங்காவின் கணவர் வடோரா ராபர்ட்டுக்கு பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் சமமான பாதுகாப்புப் ப்ரோட்டோக்காலாம். அப்துல் கலாமை ஷூ வை கழட்டிக் காண்பிக்கச் சொல்லலாம், ஜார்ஜ் ஃபெர்ணாடசை வேட்டியை உருவி சோதனை செய்யலாம் ஆனால் சகல வல்லமை படைத்த ராபர்ட் வடோராவை யாரும் எந்த பாதுகாப்புச் சோதனையும் செய்ய முடியாது, மன்மோகன் தாடியைக் கூடப் பிடுங்கிப் பார்த்தாலும் பார்க்கலாம் ஆனால் வடோராவுக்கு ஸ்பெஷல் க்ரீன் சானல் எந்த நாட்டுக்குப் போனாலும் இந்தியப் பிரதமரை விட அதிக மரியாதை கொடுக்கச் சொல்லி இந்திய அரசாங்கம் உத்தரவு

Kalyani said...

I honestly do not know what is the big deal about this? Every person is subject to all security checks and I feel there is nothing wrong with it. Where does the question of disrespect come in place? I think we are all so used to the unnecessary importance given to politicians in our country that we feel disrespected if in some other country our politicians do not receive the same kind of treatment. This issue is unnecessarily being blown up by media to make it sensational. Such an importance to this might even annoy Kalam.

RGopinathan said...

நடந்தது என்ன என்பது தெரியாமலே இங்கு சிலர் கருத்துக்களைப் பதிவு செய்திருப்பதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.
சந்திரமௌலீச்வரன் எழுப்பி உள்ள
கேள்வி இது
>>பாதுகாப்பு சோதனை செய்தால் அது அவமானமா
கல்யாணி என்பவர் இப்படி எழுதி இருக்கிறார்.
>>I honestly do not know what is the big deal about this? Every person is subject to all security checks and I feel there is nothing wrong with it. Where does the question of disrespect come in place? <<

முதலில் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். முன்னாள்/இந்நாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள் ஆகியோருக்கு இது போன்ற பாதுகாப்பு சோதனைகளில் இருந்து விளக்கு அளிக்க வேண்டும் என்பது இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் உத்தரவு. இந்திய அரசின் உத்தரவை மீறி
காண்டினெண்டல் ஏர்லைன்ஸ் நிறுவனம் திரு கலாமை சோதனை செய்திருப்பது இந்திய அரசின் உத்தரவை அவமதிக்கும் செயல்தான். இதற்க்கு நிச்சயம் நடவடிக்கை தேவை தான்.

You honestly don't know what is the big deal about this because you also don't know about protocols. Will Continental Airlines subject a former president or a former secretary of state of the US in the same way as it did with Dr. Abdul Kalam? Do you have the answer? If they have different security procedures for their dignitaries than what they follow for dignitaries of other countries then it definitely deserves condemnation. Moreover, it needs stringent action by the Govt. of India, especially because their action flies in the face of the order by the Ministry of Civial Aviation that exempts former presidents from security checks. Pls don't comment if you don't know what is happening exactly.

Ela said...

I remember reading about the TSA which is responsible for the security arrangements... they seem to be giving trouble even to US citizens and many cases have been filed against them for rude and crude behaviour!

one such story:
http://blog.aclu.org/2009/06/22/tsa-search-case-on-cnn/


so no wonder they behaved also rudely, slapping against our Ministry of Civial Aviation's exemption....

rather than making a big fuss about our pride may be we should think about if it is for a former president then how the common citizens will be treated by these people and try to make them realize their place!

As to strict safety regulations, it is a must in these days.. becoz when i fly i would like to reach home to my loved ones!

Kalyani said...

Mr. Gopinath,

Please see this http://in.news.yahoo.com/48/20090724/814/tnl-airline-followed-rules-india-s-vip-l.html which explains clearly who, under the US security guidelines are exempt from such checks. Thanks.

Baski said...

/***As to strict safety regulations, it is a must in these days.. becoz when i fly i would like to reach home to my loved ones!***/

i have no words to reply, god only can able to try to explain you.....

Karun said...

Kalyani,

U r talking about US security guidelines. Wouldn't you care Indian Govt's guidelines and protocols?. Can we treat an any ex-secretaries of America like this( even in India)?. Anyone can imagine such a person like Kalam can be a security threat?. When George Fernandes was treated shabily at American soil we cooly accepts. Now they are doing it in India. And we do support for such insults. No wonder for the East India Company, to occupy a big nation so simply, as long as there were kalyanis.

Kalyani said...

Karun,

When our people visit other places, they have to abide by the rules of that place. If the Indian Government has a security regulation that subjects ministers and other foreign dignitaries to such a security check, they HAVE to go through those, irrespective of who they are. I am not trying to pull our country down and praise other countries. All I am saying is that every country's rules and regulations will have to be respected. In TamilNadu, smoking in public is illegal. If Obama visits Chennai and he smokes in public, our police will have to fine him even if he is an American president. I am not sure how you arrived at the conclusion that as long as people like me are there, there will be foreign domination in our country. I hope I made my point clear.

Venkat said...

Hello,

I completely agree with Manasthan and Kalyani.

Any one in India has to be checked - whether it is Kalam or Robert Vadera. Only exception being - if they travel in a flight - like US President - Airforce 1 - no issue. If they travel with fellow passengers - it is better to check everything. Today we will say PMs, Ex PMs and Ex Prez. Eventually such things will be expanded and even dogs like Lalu, MK and his 100 family men will go with out any checks (as if they are being checked today).

For god sake do not treat celebrities and common man differently. For all practical purposes, leaders will have to undergo the same procedures that you and I undergo. Only then those folks also will know the pain.

Thanks

Venkata Raghavan

Jawarlal said...

சிறந்த வலைப்பதிவாளர் விருதுக்கு வாழ்த்துக்கள். நான் உங்கள் நெடு நாள் ரசிகன். இந்த விருது இமய மலைக்கு முண்டாசு கட்டின மாதிரி இருக்கிறது.(நன்றி-பாரதிராஜா-சிவாஜிக்கு விருது பற்றி அவர் சொன்னது)

http://kgjawarlal.wordpress.com

Karun said...

Kalyani,

This is happened in Delhi!. Just because he visits America, do you say he has to abide the US security rules at our own place?. No need for law of land? No respect needs to be given for Indian dignitaries?. Do you really believe ex-presidents should not exempt for this rules?

Karun said...

I believe Venkata Raghavan will like to have eception for jaya and sankarachiars!

Anonymous said...

Karun said..

//I believe Venkata Raghavan will
like to have eception for jaya and sankarachiars!//

Dont know how you come to this conclusion.

Get the dravidian toxins out of your brain and think rationally.

-Ram

Kalyani said...

Karun,

Sorry, I read the news wrong. I had been under the impression that this incident happened at an US airport and thus replied accordingly. However, I do agree that this is a mistake on the airline part since this incident happened in India.

Regarding my opinion on whether ex-presidents should be subject to security checks, yes, I think everyone should be subject to security checks and people at higher positions (like PM or President of the country) should be a role model in abiding by the rules of the country. This is again, just my personal opinion. Thanks.

Karun said...

Thanks Kalyani. We do differ on this opinion. Kalam need not be trated as politician. Will US president/Ex will under go such a security checks?

Anonymous said...

People's President is treated badly in India too
Tags: Continental Airlines, Prime Minister Sheikh Hasina, A P J, Abdul Kalam, Rashtrapati

 

A source close to former President A P J Abdul Kalam [ Images ] tell rediff.com's A Ganesh Nadar what happened on April 24 when the former head of State was frisked by Continental Airlines staff is not unusual.

"Yes it happened!"

"President Kalam did not object, did not discuss it or comment. He normally isn't bothered about such niceties and you don't expect him to go around telling people that he is a former President," the source said, speaking on condition that he would not be identified by name for this report.

No Delhi [ Images ] or central government protocol officer had accompanied the former President when the Continental Airlines staff insisted on frisking Kalam. "And when there is no protocol officer with him when he is in the national capital, it is foolish expecting anything in other countries."

Soon after his term as President ended the Indian embassy in Washington, DC assigned a protocol officer to Kalam when he visited the United States and also provided him security. That courtesy was reserved only for two visits, the staffer disclosed. Now when the former Rashtrapati visits the US, the source added, there is neither security nor protocol.

Indian missions in other countries too do not bother about providing Kalam with security or protocol.

However, when he visited Bangladesh recently, Prime Minister Sheikh Hasina's [ Images ] government accorded Kalam a State welcome, as did Ireland.

"It doesn't matter to Kalam as an individual, but it should matter to the office of President," the source pointed out. "The government may not respect him, but people do."

When Kalam takes a domestic flight, his car is permitted to travel up to the aircraft. He is accompanied by a policeman and his secretary. No protocol officer at any domestic airport receives him or bids him farewell.

The former President travels abroad extensively, and his sole aim is to promote India, the source noted. "He does that because he loves the country and if he doesn't get any security or protocol, he is least concerned about it."

"Whether he was upset when it (the Continental Airlines incident ) happened and now that it has become a national issue is not the issue. He has refused to comment on the matter. But we as citizens should be bothered about how a former President is treated. It is about the institution of the Presidency and not about any individual," the source added.

"The case about an American airline has come to light, but it is the same all over the world. There are people who respect him, love him and give him his due because of their personal regard for him. Few states grant him special status. He is a former President and the winner of the nation's highest honour, the Bharat Ratna. This should not be forgotten when people see him, interact with him."

"There is no person responsible for the former President's security. You should see the way the policemen and driver assigned to him behave," the source disclosed. "They play cards, they quarrel loudly amongst themselves. They treat it like a punishment posting and not a privilege to serve a former President."

But A P J Abdul Kalam -- whose humility is well-known -- prefers to ignore the slights to his status and continues to be the People's President, traveling far and wide (he will be 78 in October), spreading his gospel for a powerful India, powered and united by its people's potential.