ராஜ வைத்திய சாலை ஆயுர்வேத டாக்டர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார்.
சன் டிவியில் மிட் நைட் மசாலா வரும் போது, ஜெயா டிவியில் ராஜ வைத்தியர் விளம்பரம் வருவதை பலர் பார்த்திருக்கலாம். இன்று வந்த செய்தியில் இவர் மான்கறி, புலிக்கறி வைத்தியம் என்று இவர் பலரை ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மைலாப்பூர் கற்பகாம்பாள் நகரில் திருவிதாங்கூர் ராஜ வைத்திய சாலை என்ற பிரபல ஆயுர்வேத வைத்திய சாலை உள்ளது. இந்த ஆஸ்பத்திரியை டாக்டர் விஜயகுமார் (வயது 60) என்பவர் நடத்தி வருகிறார். கேரளாவைச் சேர்ந்த இவர், 1400 வருடம் பாரம்பரியமாக வைத்தியம் பார்த்து வருவதாக விளம்பரம் செய்துள்ளார்.
ரத்த வாதம், வாதகாய்ச்சல், எலும்பு தேய்மானம், முதுகுத்தண்டு பிரச்சினை, கழுத்துவலி, ரத்த அழுத்தம், தூக்கமின்மை, சிறுநீரக கல் அடைப்பு, குடல்புண் போன்ற வியாதிகளுக்கு பரம்பரை வைத்தியம் மூலம் சிகிச்சை அளித்து குணமாக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இவருக்கு மதுரையிலும் கிளினிக் உள்ளது. இவரது மகனும் இதே ஆஸ்பத்திரியில் டாக்டராக உள்ளார். டாக்டர் விஜயகுமார் மதுரைக்கும், சென்னைக்கும் விமானத்தில் பறந்து சென்று நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்தார். எம்.பி., பி.எச்டி., எல்.எல்.டி. மற்றும் ஆயுர்வேத படிப்பு படித்துள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.
தங்கபஸ்பம், வெள்ளிபஸ்பம், மான்கறி, புலிக்கறி சிகிச்சை இவரது வைத்தியத்தில் சிறப்பு அம்சம் பெற்றது. வைத்தியரத்னா, ரசசாஸ்திர ஆசான் என்பன போன்ற பட்டப்பெயர்களும் இவருக்கு உண்டு. மர்மக் கலை நிபுணர் என்றும் இவர் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டார்.
இவர் மீது சமீபகாலமாக ஏராளமான நோயாளிகள் குற்றச்சாட்டுகள் கூற ஆரம்பித்தனர். லட்சக்கணக்கில் பணம் பறித்து, நோயை குணமாக்காமல் ஏமாற்றுவதாக புகார்கள் வந்தன.
கடந்த வாரம் ஈரோட்டைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவர் முதல்முறையாக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து, விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் இருந்த தனது மகனை நடக்க வைப்பதாகக் கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்துவிட்டார் என்று புகார் கொடுத்தார். அடுத்தகட்டமாக பெங்களூரைச் சேர்ந்த பாபு என்பவரும் தனக்குள்ள தோல் வியாதியைக் குணப்படுத்துவதாக சொல்லி ரூ.6 லட்சம் வாங்கி ஏமாற்றிவிட்டதாகவும் புகார் மனு ஒன்றை தபால் மூலம் போலீஸ் கமிஷனருக்கு அனுப்பினார்.
ரமேஷ் என்பவர் இ-மெயில் மூலம் அனுப்பிய புகாரில், தனது மனைவிக்கு ஏற்பட்ட நோயைக் குணப்படுத்துவதாக சொல்லி ரூ.22 லட்சம் பிடுங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். நேற்று காலையில் கோவையைச் சேர்ந்த காந்திமதி என்ற பெண் கண்ணீர்மல்க புகார் மனு ஒன்றை போலீஸ் கமிஷனருக்கு அனுப்பியிருந்தார்.
தனது மகன் மணிகண்டன் விபத்தில் சிக்கியதில் முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டதாகவும், அதைக் குணப்படுத்த ரூ.3 லட்சம் வாங்கிக் கொண்டு டாக்டர் விஜயகுமார், நோயை குணப்படுத்தாமல் மோசடி செய்துவிட்டதாகவும் புகார் மனுவில் கூறியிருந்தார். மொத்தம் ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக டாக்டர் விஜயகுமார் மீது புகார்கள் வந்துள்ளன என்று போலீசார் கூறினார்கள்.
புகார்கள் அடுக்கடுக்காக குவிய ஆரம்பித்ததால் டாக்டர் விஜயகுமாரை கைது செய்யும்படி நேற்று மாலை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதையடுத்து நேற்றிரவு டாக்டர் விஜயகுமார் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
போலீஸ் விசாரணையில், டாக்டர் விஜயகுமார்"எங்கள் குடும்பம் தலைமுறை தலைமுறையாக ராஜ வைத்தியம் செய்து வருகிறது. பாரம்பரியமாக நாங்கள் இந்த தொழிலை செய்கிறோம். டாக்டர் படிப்பைவிட பரம்பரை தொழிலாக மக்கள் மத்தியில் அமோக வரவேற்போடு நாங்கள் இந்த தொழில் செய்கிறோம். நம்பிக்கைதான் நோய் தீர்க்கும் அரியமருந்து. அதன் அடிப்படையில்தான் எங்கள் சிகிச்சை உள்ளது. என்மீது நம்பிக்கை வைத்து தான் என்னிடம் வைத்தியம் பார்த்தார்கள். நான் யாரையும் ஏமாற்றவில்லை. இப்போது வேண்டுமென்றே என்னை இந்த பிரச்சினையில் மாட்டிவிட்டுள்ளனர்"
ராஜ வைத்தியர் படம் கிடைக்கவில்லை, அதனால் வசூல் ராஜா படம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிடுங்க ப்ளீஸ் :-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, July 17, 2009
திருவிதாங்கூர் ராஜ வைத்தியர் கைது
Posted by IdlyVadai at 7/17/2009 08:16:00 AM
Labels: செய்தி
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










23 Comments:
இவருக்கு மான் கறி, புலிக்கறி சப்ளை செய்வது யார் என்று தனியாக விசாரணை நடத்த வேண்டும். :) விலங்கின பாதுகாப்பு ஆர்வலர்கள் கவனிப்பார்களாக!!
இது மாதிரி டாக்டர்கள் மட்டுமா ? பல சாமியார்கள் உள்ளார்கள்.
சென்னையில் இருந்து சிறிது தொலைவில் அருள்வாக்கு ரொம்ப பிரபல்யம். இன்னும் சில இடங்களில் ஆசிர்வாத கூட்டங்களை பார்த்தால் எம்.ஜி.ஆர் பாட்டு தான் நினைவிற்கு வருது. (இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?)
வாரிசு அரசியல் மாறி இப்போ அவர்களின் பையன், மகள் படம் ஊரெங்கும் ஒட்டப்பட்டு பகுத்தறிவு பல நிலைகளில் உபதேசம் செய்யப்படுகிறது.
இவர்களுக்கு சம்பந்த பட்டவர்களின் மனநிலை (நோய், பொருளாதாரம், வேலை, வியாபாரம்) மிகவும் சாதகமாக இருந்து விடுகிறது. முடிந்த வரையில் பணத்தை கறந்து விடுகிறார்கள்.
இவர்களை போன்ற புல்லுருவிகளை வளரவே விடக்கூடாது. கடுமையான நடவெடிக்கை தேவை. ஆனால் இவர்கள் பெயரில் தெருக்கள், நகர்கள். நல்ல பகுத்தறிவு அரசாங்கம்.
ஒவ்வொரு நோய்க்கும் சிறப்பு மருத்துவர் இருக்க இந்த மாதிரி ராஜ வைத்தியர்கள் தேவையா? ஒருத்தனப் பத்தி முழுசா விசாரிக்காம பணத்தக் கொடுத்திட்டு அப்புறம் எதுக்கு அழணும்?
chk for his picture..
http://thiruvancorerajavaidhyasalai.com/aboutus.html
http://thiruvancorerajavaidhyasalai.com/index.html
போட்டோ இங்கு கிடைக்கும்
Tyagu
தேமுதிக பொதுச் செயலாளர் ராமு வசந்தன் மரணம்
சென்னை: உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தே.மு.தி.க. பொதுச்செயலாளர் ராமு வசந்தன் நேற்றிரவு மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 54. இவர் நடிகர் விஜய்காந்தின் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்தார்.சென்னை சாலி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த ராமு வசந்தினுக்கு கடந்த இரு ஆண்டுகளாக சிறுநீரக கோளாறு இருந்துவந்தது
படத்தைப் பார்த்துவிட்டு விஜயகுமார் ஒருவேளை 'கட்டிப் பிடி' வைத்யம்
செய்து மாட்டிக் கொண்டுவிட்டாரோ என்று நினைத்தேன்
இ வ!
600 ஆவது .ருசிகர் யார் என்று பார்த்திருந்து எங்களுக்குச சொல்லுங்கள்!
நன்றி.
ஐயா அனானி, ராமு வசந்தன் மறைவிற்கும் டாக்டர் விஜயகுமார் கைதிக்கும் என்ன சம்பந்தம்?
Erode Nagaraj,
There is no relation but IV being Vijaykanth fan - there is no other way to ask IV to post about Ramu Vasanthan - who was an important cog in Vijaykanth's wheels. He was like Duraimurugan for MK.
same anony
இ,வ,
நோயாளிகளின் சுழ்நிலையயை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் இதுபோன்றோரை விட்டால் கஷ்டம்தான் .... இனி என்ன நடக்கும் அது தான்
முக்கியம்.... எல்லோரையும் சரிகட்டி வெளியே வந்துவிடுவார ? அல்லது
தண்டனை உண்டா.? Million Dollar Question ?
காமேஷ்
சேலத்துக்காரர் எப்போ மாட்டுவாரோ!
பாவம்.
யார்(யார்) என்று நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
டியர் வால்,
வொய்ட் அண்டு வொய்ட் நல்லப்பன் நீல்-கண்ட் சிவா கிட்ட கேட்டுப்பாருங்களேன்! அவர் பிரமிடு பத்ரனக் கேப்பார்... பிரமிடு, பூஷன்ஜீக்கு ஃபோன் பண்ணுவார்.... அது ராங் நம்பர்ல, பழனி டாக்டருக்குப் போயிடும்... :D
இட்லி வடை,
இந்த விசயகுமார் ஓரு நாலு மாசத்திற்கு முன்பு படம் எடுத்தார்.மதுர, சென்னைக்கும் அடிக்கடி பறந்து கொண்டேயிருப்பார். பல தடவை விமானத்தில் பார்த்திருக்கிறேன்.அய்யா, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ரெகுலர் பக்தர், அங்கே ராஜ மரியாதை தான்.
டிவியில பார்த்தா, ரொம்ப நல்லவர் மாதிரி , தன்னுடைய பரம்பரைய பத்தி பெருமையா பேசுவார்.சாமி படம் நிறைய மாட்டியிருப்பார்.
அப்பவே டவுட் தட்டுச்சு, மாட்டிகிட்டாரா.
//Blogger வால்பையன் said...
சேலத்துக்காரர் எப்போ மாட்டுவாரோ!//
ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு.
அட பாவமே !!
(பொது மக்கள் தான்)
சிட்டு குருவி லேகியம், தங்க பஸ்பம், கெளப்பு மாத்திரை (அதாங்க .. தஞ்சாவூர் குதிரை மாத்திரை) என்று சொல்லி மாட்டு சாணி விக்கிற...சேலம் குரூப்பு ..கவிராஜ், சிவிராஜ்...௧௬ தலைமுறை வைத்திய சிகாமணிகள் என்று மாட்டுவார்களோ??
//நல்ல பகுத்தறிவு அரசாங்கம்.//
sir hinduism oppose panrathu mattumthan பகுத்தறிவு
LK said..
//sir hinduism oppose panrathu mattumthan பகுத்தறிவு//
Well said. People like DGS get streets renamed in their 'honour' while these guys get into trouble.
Difference is their religion.
-Rudramurthy
//ராஜ வைத்தியர் படம் கிடைக்கவில்லை, அதனால் வசூல் ராஜா படம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிடுங்க ப்ளீஸ் :-) //
அதனால என்ன.... ரெண்டுமே ஒண்ணுதானே???
இன்று காலையில் கூட ஜெயா டிவியில் அன்னாருடைய விளம்பரம் வந்துகொண்டிருந்தது... அதே நேரம், மக்கள் தொலைக்காட்சியில் அன்னாரை தோலுரித்துக் கொண்டிருந்தார்கள்!
"Vasool Raja" -- message is clearly conveyed.. It failed here that "Picture conveys 1000 words". I mean, just two words are sufficient.. no need of picture(foto)
Anonymous..
Post a Comment