பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 13, 2009

வந்தார்கள் வென்றார்கள் - ஆடியோ புத்தக விமர்சனம்

இரண்டு வாரம் முன்பு மதனின் 'வந்தார்கள் வென்றார்கள்' புத்தகம் படித்தேன், சாரி, கேட்டேன்.

1980களில் ரேடியோவில் மதியம் சிறுகதை வாசிப்பார்கள், அதன் சிடி வடிவம்தான் இந்த ஆடியோ புத்தகம். அதனால் இது புரட்சி புது முயற்சி என்றெல்லாம் நான் சொல்ல போவதில்லை. கரடி கதைகள் கூட முன்பே வந்துவிட்டது.

ஸ்கூலில் பாட புத்தகத்திலிருந்து முதல் பாராவை ஒரு மாணவர் படிக்க அடுத்த பாரா அடுத்த மாணவர் என்று போகும். இதனால் புத்தகத்தில் இருப்பது நமக்கு உடனே புரியும், மனதில் ஆழப் பதியும். ஆடியோ புத்தகமும் அதே வகைதான்.

நம் மக்கள் எவ்வளவு பேர் ஆடியோ புத்தகம் கேட்டிருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் ஆடியோ புத்தகம் கேட்பது சூப்பர் அனுபவம். பஸ், கார் என வாகனப் பயணங்களில் அதிக நேரம் செலவிடுவோருக்கு இது அருமையான வரப்பிரசாதம். தமிழில் இப்படிக் கொண்டுவந்திருக்கும் பத்ரிக்கு ஒரு சபாஷ்.

மற்ற ஆடியோ புத்தகங்கள் பற்றித் தெரியாது, ஆனால் 'வந்தார்கள் வென்றார்கள்' அருமையான ஆடியோ புத்தகம். மதனின் வந்தார்கள் வென்றார்கள் இன்று கூட அதிகமாக விற்பனை ஆகும் ஒரு புத்தகம். எக்கசக்க தகவல்கள், பெயர்கள், பெண்கள் என்று சுவாரசியமாக எழுதியிருப்பார். படிக்கும் போது இருந்த சுவாரசியத்தைக் காட்டிலும் ஆடியோ புத்தகத்தில் அதிகமாக இருக்கிறது என்பது நிஜம். 'படிப்பது பரவசம், கேட்பது அதைவிட' என்று இவர்கள் சொல்லுவது இந்தப் புத்தகத்திற்கு மட்டுமாவது நிச்சயம் நிஜம்.

புத்தக வெற்றிக்கு எப்படி எழுத்து காரணமோ அப்படியே ஆடியோ புத்தகத்தின் வெற்றிக்கு அதன் ஒலிப்பதிவு, மற்றும் அதற்குக் குரல் கொடுப்பவர் முக்கிய காரணம். இந்த ஆடியோ புத்தகத்தில் ஒலிப்பதிவு அருமையாக இருக்கிறது, கே.சார்ல்ஸ் என்பவர் அருமையாகக் குரல் கொடுத்திருக்கிறார்.( குரல் எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறது, சன் டிவி நியூஸ் வாசிப்பவரா ? ) எங்கே புள்ளி, அரைப் புள்ளி இருக்கிறது என்று பார்த்து, ஒழுங்காகப் படிக்க வேண்டும். பின்னனி இசை அமைத்திருக்கும் காந்திதாசனும் தன் பங்கிற்கு மெல்லிய இசையை அருமையாகக் கொடுத்துள்ளார். (ஒவ்வொரு சாப்டர் ஆரம்பத்திலும் வரும் பிரம்மாண்ட இசையும் இரண்டாவது சிடி முன்றாவது சாப்டரில் வரும் இசையும் தவிர). சோகமான சமயத்தில் வரும் இசை பிரமாதமாக இருக்கிறது.

இதுவரை மதன் புத்தகத்தை இரண்டு முறை புத்தக வடிவில் படித்திருக்கிறேன், ஆனால் ஆடியோவில் கேட்கும் போது, "அட இது படித்த மாதிரி இல்லையே" என்று பல இடங்களில் தோன்றுகிறது..

770 நிமிடங்கள்( ~12 மணிநேரம்) ஓடும் இந்த சிடியில் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்த முஸ்லிம் அரசர்கள் பற்றியும் மொகலாய அரசர்கள் பற்றியும் பல தகவல்கள் இருக்கின்றன. இந்த மன்னர்கள் அடித்த கூத்தும், கொலையும், கொள்ளையும், சல்லாபங்களும் வியக்க வைக்கின்றன. அவர்கள் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந்தால், இந்தியா எவ்வளவு பணக்கார நாடாக இருந்திருக்கும் என்றும் எண்ணத் தோன்றுகிறது என்று சொன்னால் அது பொய். நம் அரசியல்வாதிகள் இன்னும் எவ்வளவு பணக்காரர்களாக இருந்திருக்க வேண்டியது என்று வருத்தமாக இருக்கிறது.

ஆங்காங்கே நிகழும் உரையாடல்களை, "யூகத்தின் அடிப்படியில் கற்பனை கலந்து எழுதியுள்ளேன்" என்று மதன் புத்தகத்தில் கூறியுள்ளார். குரல் கொடுத்தவரும் தன் பங்கிற்கு இந்த உரையாடல்களை முடிந்தவரை மிமிகிரி செய்து பேசியுள்ளார். இவர் பீர்பால், ஔரங்கசீப் என்று யாரையும் விட்டுவைக்கவில்லை. நல்ல வேளை ஔரங்கசீப் இறந்துவிட்டார், இல்லை குரல் கொடுத்தவரின் கதியை நினைக்கவே பயமாக இருக்கிறது. (பெண்கள் பேசிய ஆடியோ புத்தகம் கேட்டுப் பார்த்ததில்லை. பாப்பா பாட்டு, சமையல் குறிப்பு போன்றவை தான் பெண்கள் பேச முடியும், வந்தார்கள் வென்றார்கள் சகிக்காது என்றே தோன்றுகிறது. இந்தக் கருத்துக்கு என்னை யாராவது தாளித்தாலும் பரவாயில்லை.)

நீங்களும் இந்தப் புத்தகத்தை வாங்கி, கேட்டுப் பாருங்கள். இட்லிவடையை படித்துவிட்டு வந்தீர்கள் என்று சொன்னால் கிழக்கில் உங்களுக்கு டிஸ்கவுண்டும் இட்லிவடைக்கு கமிஷனும் தந்தாலும் தருவார்கள். யார் கண்டது!

சாம்பிள் கேட்க இங்கே செல்லுங்கள்

வாங்க விருப்பம் உள்ளவர்கள் - இங்கே செல்லுங்கள்

பிகு: ரோட்டில் ஒரு வருடமே ஆன, 60-61கீமீ மைலேஜ் தரும் TVS Star Ciry, எண் TN09 AX 5833 என்ற வண்டி வந்தால் கொஞ்சம் கவனமாக ஓட்டுங்கள். இல்லை பிரேக் போட்டு நின்றுவிடுங்கள். விஷயம் இது தான் - இதை ஓட்டுபவர் ஆடியோ புத்தகம் கேட்டுக்கொண்டே ஓட்டுகிறார். அவருக்கும், பக்கத்தில் இருக்கும் நமக்கும் நல்லதில்லை. கூடிய விரைவில் ஆடியோ புத்தகம், செல்ஃபோன் பேசிக்கொண்டு ஓட்டுவது மாதிரி இதுவும் குற்றமாகலாம்.

இட்லிவடை மூலம் இந்த புத்தகம் வாங்கும் நபர்களுக்கு 10% டிஸ்கவுண்ட் உண்டு - பத்ரி

14 Comments:

R.Gopi said...

//பிகு: ரோட்டில் ஒரு வருடமே ஆன, 60-61கீமீ மைலேஜ் தரும் TVS Star Ciry, எண் TN09 AX 5833 என்ற வண்டி வந்தால் கொஞ்சம் கவனமாக ஓட்டுங்கள். இல்லை பிரேக் போட்டு நின்றுவிடுங்கள். விஷயம் இது தான் - இதை ஓட்டுபவர் ஆடியோ புத்தகம் கேட்டுக்கொண்டே ஓட்டுகிறார். அவருக்கும், பக்கத்தில் இருக்கும் நமக்கும் நல்லதில்லை. கூடிய விரைவில் ஆடியோ புத்தகம், செல்ஃபோன் பேசிக்கொண்டு ஓட்டுவது மாதிரி இதுவும் குற்றமாகலாம். //

***********

நீங்க கார் வச்சுண்டு இருக்கறதாக தானே தமிழ்நாட்டில் பரவலாக பேச்சு??

அது என்ன இப்போ பைக்? அவ்ளோ காருமா ஒண்ணா சர்வீசுக்கு போயிருக்கு?

Erode Nagaraj... said...

படிக்கும் போது, உணர்ச்சியற்றுப் படிப்பதுதான் காரணம். எழுதியவனின் உணர்வை வாசகன் பெறுவதற்கு, சற்று முயற்சி தேவை. இயல்பான வாசிப்பில் குரல்கள் கூட வேறுபடும், பாத்திரங்களுக்குத்தக்கவாறு!

Anonymous said...

Jayatv mentioned Duraimurugan not reporting to Stalin as reason for this development but TOI reports differently.
<<<<<<<<<<<<<<<<<<<<
In a surprise development, senior Tamil Nadu minister Durai Murugan was on Sunday stripped of the public works portfolio, which will now be handled by chief minister M Karunanidhi. Announcing the change, a Raj Bhavan communiqué said Durai Murugan would retain his law portfolio.

The brief communiqué said that on the chief minister's advice, the subjects of public works, irrigation including minor irrigation and programme works, hitherto held by Durai Murugan, had been reallocated to the chief minister.

Highly placed sources in the government said the removal of Durai Murugan might have something to do with the handling of files on an issue, for which Karunanidhi had given specific instructions. The development set off many theories about what exactly led to Durai Murugan being stripped of the high-profile portfolio, involving major irrigation and water resources projects, besides construction of public buildings throughout the state. While none was willing to discuss the details, there were indications that the move was linked to two big projects in Cuddalore district.

The move came as a surprise as Durai Murugan had become synonymous with public works, having held the portfolio in successive DMK governments since 1989. Incidentally, Karunanidhi held the portfolio in the first DMK government of 1969. The development indicates that Durai Murugan may have fallen out of favour with Karunanidhi for the first time in his four-decade-long association with the DMK.

As the development came in the midst of the assembly session, it assumed an air of importance and urgency in political circles. Ministerial or portfolio changes do not normally take place during legislative sessions.

The move sent shock waves among DMK functionaries as Durai Murugan was considered a part of the leadership's inner circle and was close to the chief minister. He is considered an authority on schemes and problems concerning irrigation, including the Cauvery and Mullaperiyar disputes with neighbouring states. Fifth in the DMK hierarchy, Durai Murugan is deputy general secretary.

Karunanidhi had only recently lessened his work burden by appointing Stalin deputy chief minister and allocating subjects, including industries, to the latter, and it remains to be seen if he will remain in charge of a heavy portfolio like public works and irrigation for a long time. While he may have misgivings about Durai Murugan holding on to it, the chief minister might like to allocate it to someone else. However, if Karunanidhi had meant Sunday's announcement to be shock treatment for the senior minister, Durai Murugan may hope to get back the portfolio after some time.

Swami said...

தாளிக்கிற சத்தம் தான் ரொம்ப நாளா காணோமே , அவங்கள வேற ஏன் வம்புக்கு ....?

Swami said...

http://www.btis.in/rto . If Idlyvadai is in bangalore we can find his actual name ( if incase the vechicle belongs to him , but i doubt ) through above link. Does anybody aware of similar link for chennai ?

மானஸ்தன் said...

நன்றி இட்லிவடை!
ஆடியோ கேட்டேன்.

மேற்கிலிருந்து கிழக்கே வரும் போது, கிழக்குக்கு சென்று உங்க பேரச்சொல்லி கண்டிப்பாக சி.டி.யை வாங்குகிறேன்!!

உதையோ, தள்ளு-முள்ளோ இல்லாமல் "தள்ளுபடி" மட்டும் கிடைத்தால் சந்தோஷம்!!!

kggouthaman said...

//Karunanidhi held the portfolio in the first DMK government of 1969....//
It is not 1969 - but 1967.

R.Gopi said...

// Swami said...
http://www.btis.in/rto . If Idlyvadai is in bangalore we can find his actual name ( if incase the vechicle belongs to him , but i doubt ) through above link. Does anybody aware of similar link for chennai ?//

Idlyvadai ..... jaakradhai.....

Swami ippo CID SWAMY.......

R.Gopi said...

//மானஸ்தன் said...
நன்றி இட்லிவடை!
ஆடியோ கேட்டேன்.

மேற்கிலிருந்து கிழக்கே வரும் போது, கிழக்குக்கு சென்று உங்க பேரச்சொல்லி கண்டிப்பாக சி.டி.யை வாங்குகிறேன்!!

உதையோ, தள்ளு-முள்ளோ இல்லாமல் "தள்ளுபடி" மட்டும் கிடைத்தால் சந்தோஷம்!!!//

Vaango.... Vaango.... Vaangaradhukku Vaango.... Ungalukkaaga JUMBO MEAL ready....

kggouthaman said...

What is the price of this audio book?

padukali said...

நல்ல பதிவு.

பெற்ற‌ இன்ப‌த்தை ப‌க‌ர்ந்த‌ இட்லி வ‌டைக்கு ஒரு ஷொட்டு.

நான் கேட்டு விட்டேன்.
இந்த இரு சிடி கேட்டால் இந்திய சரித்திரம் பற்றிய தேவையான தகவல்கள் நமக்கு கிடைத்து விடுகிறது.

ஆனால் ஒரு வ‌ருத்த‌ம், தென் இந்திய‌ வ‌ர‌லாறு ச‌ர்சைக்கு உள்ளாகி நின்ற‌து.

IdlyVadai said...

இட்லிவடை மூலம் இந்த புத்தகம் வாங்கும் நபர்களுக்கு 10% டிஸ்கவுண்ட் உண்டு - பத்ரி

kggouthaman said...

/ /IdlyVadai said...
இட்லிவடை மூலம் இந்த புத்தகம் வாங்கும் நபர்களுக்கு 10% டிஸ்கவுண்ட் உண்டு - பத்ரி//

Again, what price 90%?

IdlyVadai said...

//What is the price of this audio book?//

Rs 200 என்று நினைக்கிறேன். பதிவிலேயெ லிங்க் இருக்கிறது கடைசியில் அங்கே போய் பாருங்க. நன்றி.