பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 10, 2009

அச்சமுண்டு அச்சமுண்டு பதில்கள்

கேள்வி கேளுங்கள், சிடி வெல்லுங்கள்! பதிவில் வந்த கேள்விகளுக்கு பதில்கள்...

மானஸ்தன் - அமெரிக்கால போயி அங்க இருக்கற இந்தியரின் வாழ்க்கையை படம் பிடிச்ச மாதிரி, நம்ம ஊருல இருக்கற வெளிநாட்டவரின்(மாநிலத்தவரின்) வாழ்க்கைய படம் பிடிச்சா கார்டன் ஸ்டேட், ஷாங்காய், ஸ்கிப் சிட்டி டிஜிட்டல் ஜப்பான் போன்ற திரைப்பட விழாக்களில் பாராட்டு பெறுமா? சீர்காழியில் இருந்து வந்து பதிவுலகத்தில் நுழைந்து வெள்ளித்திரையில் கால் படித்துள்ள உங்களுக்கு வாழ்த்துகள்.மக்களுக்கு ஆபாசம் இல்லாத, பொழுது போக்குச் சித்திரங்களை நல்ல முறையில் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.

மானஸ்தன், படத்தை எங்கே பிடிக்கறோங்கறது முக்கியமில்லை. என்ன சொல்ல வர்றோங்கிறது தான் முக்கியமான விஷயம்!
ஆபாசம், பொழுதுபோக்கு, இதெல்லாம் ரொம்ப 'சப்ஜெக்டிவ்'வான விஷயங்கள் இல்லையா மானஸ்தன்? திரையரங்கிற்குக் காசு கொடுத்து வரும் ரசிகனை, எனது திரைப்படங்கள் ஏமாற்றாது - அதற்காக உழைப்பேன் என்று வேண்டுமானால் சொல்லலாம்!


Krish - சினிமால ஏன் பட்டு வருது? தேவை இல்லாத இடைசொருகல் தானே?
பாடல்களை மட்டும் தனியாக ஆல்பமாக வெளியிட்டால் என்ன? திரைபடத்தின் பெயரிலேயே?

கிரிஷ் - இந்த ஐடியா ரொம்ப வாஸ்தவமானது. எல்லோருக்கும் புரியுது! அச்சமுண்டுலே டூயட் சாங்க் கிடையாது, குத்துப் பாட்டு கிடையாது! ஆனா...பாடல்கள் இல்லாத தமிழ்ப்படம் பண்ணும் நாள் கூடிய சீக்கிரம் வந்துடும்னு நெனைக்கிறேன்.
அப்பப்போ இந்த முயற்சி பண்ணப்பட்டாலும், முழுசா தூக்கி எறியற தைரியம் யாருக்கும் இல்லைங்கிறது தான் உண்மை. இந்தப் படத்தைப் பொறுத்தவரைக்கும், ஏற்கனவே பல விஷயங்கள் புதுசா, தைரியமா முயற்சி பண்ணியிருக்கேன் - பார்த்துட்டு சொல்லுங்க!


nchokkan - ரொம்ப நாளா மனசில இருக்கற கேள்வி: இந்தப் படத்துக்கு ஏன் கார்த்திக் ராஜாவை இசையமைப்பாளராத் தேர்ந்தெடுத்தீங்க? (அவர் நிச்சயமாத் திறமைசாலிதான், and has given a pretty good album for you, But looking at the industry trend, it looks like a very unusual choice - wondering what made you choose him :) - என். சொக்கன், பெங்களூர்.

கார்த்திக் ராஜா - என்னோட தயாரிப்பாளர் ஆனந்த் கோவிந்தனோட 'தோஸ்து படா தோஸ்து!'. நண்பனின் நண்பன் எனக்கும்
நண்பனே அப்படிங்கற கான்செப்ட்ல நானும் அவருக்கு நல்ல நண்பரானேன். அவரோட இசைத் திறமை எல்லோரும் அறிஞ்சது தான்!
அச்சமுண்டு அவருக்கு சவாலான களம் - அவரும் பின்னி பெடலெடுத்திருக்கார்!


ந.லோகநாதன் - புன்னகை அரசி சினேகாவை இப்படத்தில் தேர்ந்தெடுக்க ஏதாவது விசேச காரணம் உண்டா?

நல்ல நடிகை. படத்தின் திரைக்கதையைப் படித்ததுமே, எனக்குத் தொலைபேசியில் 'நான் கண்டிப்பா இந்த படம் பண்ணனும்'னு சொன்னாங்க! இதெல்லாம் போக, இந்தியாவின் கலாச்சாரத்தை விட மனமில்லாத, அமெரிக்காவில் செட்டிலாகியிருக்கும் மாலினி காரெக்டரை எழுதும் போது...மனதில் தோன்றிய நடிகை அவர் தான்!

ChamathuSiva - You also do CPM/PERT methods to make a film from start (conception) to finish (release in theatres)?

This film is going to be released only in Digital theatres with fewer film prints across the globe. We did proper script, story boards and Rehearsals - Thats it! I didn't follow any CPM/PERT methods :P
Btw (what was that ?!@$#$)


லவ்டேல் மேடி - எல்லா டைரெக்டர் , நடிகர்கள் , நடிகைகள் மாதிரி ஏதாவது பீலா.....??

1. இந்த படம் அருமையா வந்திருக்கு.....???
2 . இந்த படத்துல ஒரு பாட்டு இந்த வருட சிறந்த பாடல்.....???
3. ஒரு சீனுல செம ரிஸ்க் எடுத்து பண்ணிருக்கோம் ...?
4 . கண்டிப்பா இந்தப் படம் ஆஸ்கருக்கு போகும்............???
5 . இதுல நடிகை மேக்கப்பே இல்லாம நடுச்சிருக்காங்க.........??
6 . இந்த படத்துல எல்லோருமே வாழ்ந்து காட்டியிருக்காங்க......??
இந்த மாதிரி ஏதாவது சொல்ல வரீங்களா.................
முடியல...... வலிக்குது.........


பார்க்க படு சுமாரா இருக்கும்.
என்னத்தையோ பண்ணி தொலைச்சிருக்கோம்!
மொக்கை சீன் நெறையா இருக்கும்.
என்னவோ நடிச்சுருக்காங்க!

இதை மாதிரி படத்தோடேயே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இயக்குனரால் சொல்ல முடியாதே!

நான் ஒண்ணே ஒண்ணு தான் சொல்லப் போறேன் - தியேட்டர்லே போய் படத்தைப் பாருங்க பாஸ்!


Gokul - நான் ஏன் இந்த படத்தை பார்க்க வேண்டும்?

முதன் முறையாக ஜான் ஷே எனும் எம்மி விருது வாங்கிய அமெரிக்க நடிகர், ஒரு முழு நீளத் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். முதல் ரெட் ஒன் திரைப்படம்! மார்ட்டி ஹம்ப்ரி - சமீபத்தில் வெளியான சாம் ரெய்மியின் படமான 'Drag me to hell'ஐ மிக்ஸ் செய்த கலைஞர், முதன் முறையாக ஒரு இந்தியப் படத்தில் பணிபுரிந்திருக்கிறார். இது
போல நிறைய சொல்லலாம் கோகுல்!


வடகரை வேலன் - ஸ்னேஹா பிரசன்னாவின் அக்கா போல தோற்றமளிக்கிறார். மூத்த(முதிர்ந்த) நடிகை. என்ன தைரியத்தில் அவரைத் தேர்ந்தெடுத்தீர்கள்? குறிப்பு - இது சி டி க்கான கேள்வி அல்ல.

பிரசன்னா - சினேகாவின் உறவு இந்தப் படத்தில் பார்க்கும் போது, உங்களுக்கு இந்தக் கேள்வியே வராது!

R.Gopi
கார்த்திக் ராஜாவை தேர்ந்தெடுத்த காரணம் என்ன??

பதில் சொல்லியாகி விட்டது!

முத்தி முதிர்ந்து, பழுத்து போன ஸ்னேஹாவை ஏன் பிரசன்னாவின் ஜோடியாக தேர்ந்தெடுத்தீர்கள்?

பதில் சொல்லியாகி விட்டது!

தேசிய விருது பெறுமா??

விடை, சில மாதங்களில்!

படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனை படைக்குமா?

விடை, சில தினங்களில்!

ரெட் ஒன் கேமராவை உபயோகித்து எடுக்க வேண்டும் என்று ஏன் தோன்றியது? விசேஷ காரணம் உண்டா?/ இல்லை வெறுமே நாம்தான் முதலில் உபயோகப்படுத்துகிறோம் என்று சொல்வதற்காகவா?

பட்ஜெட் - புது முயற்சி - தெள்ளத் தெளிவான காட்சிகள் - கதையின் தேவை!

புதுமை விரும்பி ஆஸ்கர் (கனவு) நாயகன் கமலஹாசனுக்கு விசேஷ காட்சி திரையிடல் ஏதாவது உண்டா?

விடை, சில தினங்களில்!

கடைசியாக ஒரு முக்கிய கேள்வி.... எல்லோரும் கவனியுங்கள் (மானஸ்தன் உட்பட), படத்தின் சிடி எனக்கு கிடைக்க வாய்ப்புள்ளதா?

'ஆடியோ' சிடியைத் தானே சொல்கிறீர்கள்?

kggouthaman

அச்சமுண்டு! அச்சமுண்டு !
இதோ என் கேள்வி:
ஏன்? ஏன்?

இன்றைய சூழ்நிலையில், இந்தப் படம் தேவை! தேவை!

Anonymous - only an idiot will think that people will ask questions so that they can get an audio CD when the songs are available for free downloading.those who can afford will buy audio CD.audio CD is too cheap a stuff to merit any question.
let the film be released and then it will make sense to ask questions. then he can give prizes to the 10 well written reviews or viewers who raised intelligent questions.

Idlyvadai - I think this question is for you :) Jokes apart, audio cd is just a token of appreciation from our side! We will have another set of questions and answers session once the film is released - What's the big deal? Anyway, there is no need for you to be worked up like this - Take it easy, my fri@!nd!

Krishnan - From Sirkali to New Jersey - how will you sum up your life so far ?

நான் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவன்!


Inba - 1. படத்தின் ஸ்டில் பார்த்தால் பிரிவோம் சந்திப்போம் போன்று உள்ளது. மீண்டும் அதை போன்று, அமெரிக்காவில் தனியாக வாழும் தமிழ்தம்பதியை பற்றிய சப்ஜெக்டா??

ஹி..ஹி - அதெல்லாம் இல்லீங்ணா!

2. இரண்டு பாடல்களை எழுத கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினியை தேர்வு செய்தது எப்படி மற்றும் "கண்ணில் தாகம்" பாடல உருவான விதம்??

ஆண்டாள் ப்ரியதர்ஷிணியின் கவிதைத் தொகுப்பு எனது தயாரிப்பாள நண்பர் சீனிவாசனின் அலுவலகத்தில் இருந்தது! படித்துப் பார்த்தேன்,
பிடித்திருந்தது! 'கண்ணில் தாகம்' - எனக்காக கார்த்திக் ராஜா போட்ட முதல் டியூன். கேட்ட மாத்திரத்திலேயே மிகவும் பிடித்திருந்தது. நான் திரைக்கதையிலேயே,
சௌம்யாவின் குரல் பின்னணியில் ஒலிக்க என்று தான் எழுதியிருந்தேன்! எனவே, பாடலை அவரை விட்டே பாட வைத்தோம்!


3. இப்படம் மாயாஜால் போன்ற திரைஅரங்குகளில் பார்பவர்களுக்காகவா அல்லது ஒரு கிராமத்து ரசிகனாலும் புரிந்து கொள்ளும்படி இருக்குமா??

ஷாங்காயிலிருந்து..சீர்காழி வரை பிடிக்கும் என்று நம்புகிறேன் :)


Bart - இந்த படத்தின் post-production முழுக்க அமெரிக்காவிலேயே எடுத்ததில் என்ன பயன்கள்? தரம் கூடியது
என்றால் செலவும் கூடியதா?

கண்டிப்பாக செலவு கூடத் தான் செய்யும்! தரம் கூடியிருக்கிறதா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்!
பயன்கள் என்னவென்று இப்போது சொல்வதை விட, படம் வெளியாகட்டும் - சொல்கிறேன்.


Red One மற்றும் Live sound ஆல் என்ன அதிகப்படியான பலன் உங்கள் படத்துக்கு கிடைத்தது? தமிழ் சினிமா இதை எவ்வாறு இனி பயன்படுத்த வேண்டும்?

ரெட் ஒன் கேமராவினால் செலவு குறைந்தது! ஒளிப்பதிவில் ஒரு புதுப் பரிமாணம் கிடைத்தது. லைவ் சௌண்டின் மூலமாக, நடிப்பு யதார்த்தமாக அமைந்தது.
ரெட் ஒன் கேமரா கிடைத்தது என்பதற்காக காட்சிகளை சுட்டுத் தள்ளாமல், சிறப்பான முறையில் திரைப்படத்தை திட்டமிட வேண்டும். உலகத்தின் முக்கால்வாசி
நாடுகளில் லைவ் சவுண்ட் பயன்படுத்தப்படும் போது, நாம் மட்டும் தான் இன்னும் டப்பிங் முறையைப் பயன்படுத்துகிறோம். இதை ஏன் மாற்ற வேண்டும் என்பது
அச்சமுண்டு வெளியே வரும் போது, ரசிகர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன் - பார்ப்போம்!


How would you compare your work-life in software vs film industry, sofar?

கணிப்பொறியில் வேலை - பல நண்பர்களையும், அனுபவங்களையும், நல்ல வாழ்க்கையையும் அமைத்துக் கொடுத்தது. ஆனால், வேலையில் இருக்கும்
போது கூட திரைப்படங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததால்...தற்போது ஒரு இரண்டு சிட்டிகை சந்தோஷம் அதிகமாகியிருக்கிறது!


அடுத்த செட் கேள்விகள் கேட்கலாம். அதற்கு பிறகு 10 கேள்விகளுக்கு பிரசன்னா, ஸ்நேகா கையெழுத்திட்ட சிடியை அருண் அனுப்பிவைப்பார் :-)

கேள்விகளுக்கும், பதில்களுக்கும் நன்றி.

14 Comments:

மானஸ்தன் said...

///அடுத்த செட் கேள்விகள் கேட்கலாம். அதற்கு பிறகு 10 கேள்விகளுக்கு பிரசன்னா, ஸ்நேகா கையெழுத்திட்ட சிடியை அருண் அனுப்பிவைப்பார் :-)///


நல்லாக் கெளம்பிட்டாங்கையா!

ரிஷபன் said...

//பாடல்கள் இல்லாத தமிழ்ப்படம் பண்ணும் நாள் கூடிய சீக்கிரம் வந்துடும்னு நெனைக்கிறேன்.//

நன்பர்கள் அல்லது குடும்பத்தினருக்காக சில மொக்கைப் படங்களில் மாட்டும் போது கொஞ்சமே கொஞ்சமேனும் தப்பிக்கவைப்பது பாடல்களே ! அதுவும் கூடாதா ??

Krish said...

நேரம் ஒதுக்கி எல்லாருடைய கேள்விகளுக்கும் பதில் சொன்னதற்கு நன்றி. படத்தை பார்த்து விட்டு எங்களுடைய விமர்சனமும் இங்கேயே வரும்.

Swami said...

எனக்கு ஒரு சந்தேகம் , இட்லிவடை தான் மாநஸ்ஸ்தநா ? அது எப்படி முதல் கமெண்ட் அவர் போடறார் எப்பவும் , அதுவும் இட்லிவடை மாதிரி நக்கலோட ?

வால்பையன் said...

படத்தின் போஸ்டரில் ஸ்நேகாவின் முகம் பயத்தில் வெளியிருக்கிறது, அதனால் இதை ஒரு சஸ்பென்ஸ் படம் என தெரிகிறது, ஆனால் பிரசன்னாவின் முகத்தில் அது இல்லை! அப்போ பிரசன்னா தானே வில்லன்!?
(கதையை பிடிச்சிட்டேனா)

Ganesh said...

Dear IV,Arun

It would be nice if you can do a podcast of the Q&A session.
Either here or at Arun's blog.

Erode Nagaraj... said...

ஆஹா.. சிநேஹாவின் கையெழுத்துக்கெல்லாம் என்ன ஒரு மார்க்கெட்டுயா... புல்லு, புல்லே தான்.... புல்லரிக்குது...

god said...

when does a director or their crew know that they are doing something special (i.e. it has a potential to win awards)? during the script writing stage itself or when it is being filmed or when people appreciate their work after seeing the first print?

Sundari said...

கேள்வி : சினிமா எடுக்க கண்டிப்பாக ஒரு டைரக்டரிடம் பணியாற்றிய பயிற்சி தேவையா ? அல்லது "கண்ண மூடினா கனவில நீதானே " Range ku சினிமா மேல் காதல் (Interest + Involvement) இருந்தா போதுமா...?

ILA said...

இந்தப் படத்தில் பிரதானமா எதை நினைக்கிறீங்க? (எல்லாம்னு சொல்றது இயக்குனர், ஆனாலும் மனசாட்சி படி சொல்லுங்க)

கதை/சமூக நோக்கம்/மசாலா/ஏதோ ஒரு கருத்து/என்னமோ ஒன்னு/ இசை/ படமாக்கம்/ தொழில்நுட்பம்

R.Gopi said...

//அடுத்த செட் கேள்விகள் கேட்கலாம். அதற்கு பிறகு 10 கேள்விகளுக்கு பிரசன்னா, ஸ்நேகா கையெழுத்திட்ட சிடியை அருண் அனுப்பிவைப்பார் :-)//

அடுத்த செட் கேள்விகளா?? மறுபடியும் மொதல்ல இருந்தா??

ஆ....ஹா.... கெளம்பிட்டாங்கையா..... படு ஜோரா, சூப்பர் ஸ்பீடா.....

ChamathuSiva said...

முதல் சுற்றிலிருந்து வடிகட்டி அதன் பின் இரண்டாவது சுற்றிலிருந்து சிறந்த கேள்விகளைத தேர்ந்தேடுப்பிர்களா அல்லது முதல் சுற்றில் கேள்வி கேட்டவர்களை கிடப்பில் போட்டு விடுவிர்களா? (இது நியாயமான கேள்வி என்று நம்புகிறேன்!!). கண்டிப்பாக சி.டி. கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அடுத்த கேள்வி, சாப்ட் காப்பி இ-மெய்ல் செய்விர்களா அல்லது உலகில் எந்த இடுக்கில் இருந்தாலும், இலவசமாக தபாலில் அனுப்பி வைப்பிர்களா?

Anonymous said...

parisu varuma? varadha?
sollungappa.

prize kuduthaa vaal-payanukkudhan.

Erode Nagaraj... said...

கவலை வேண்டாம் அனானி... பரிசு கிடைக்கும்... தைரியமுண்டு தைரியமுண்டு...

பை த பை... பகல்ல யாராவது பாத்துடுவாங்கலோன்னு, பயந்து பயந்து மலையாளப்படம் பார்த்தா அதான அச்ச-முண்டு? :D