பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 03, 2009

கேள்வி கேளுங்கள், சிடி வெல்லுங்கள்!

சக (பழைய)பதிவர், நண்பர் அருண் வைத்யநாதன், பிரசன்னா, சிநேகா மற்றும் எம்மி விருது வாங்கிய ஜான் ஷே எனும் ஹாலிவுட் நடிகரும் நடிக்கிறார் ஆகியோரின் நடிப்பில் 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்கிற திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். படம் கார்டன் ஸ்டேட், ஷாங்காய், ஸ்கிப் சிட்டி டிஜிட்டல் ஜப்பான் போன்ற திரைப்பட விழாக்களில் பாராட்டு பெற்றுள்ளது. ரெட் ஒன் காமிராவை உபயோகப்படுத்தி எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் இது போன்ற தகவல் எல்லாம் பழைய செய்தியாகிவிட்டது.

ஜூலை 17 ரிலீஸ் செய்கிறார். அவரிடம் கதையை தவிர வேற ஏதாவது கேள்விகள் இருந்தால் அவரிடம் கேட்கலாம். சிறந்த கேள்வி கேட்கும் பத்து பேருக்கு பதிலுடன் படத்தின் ஆடியோ சிடி அனுப்ப திட்டமிட்டுள்ளார்.

கேள்விகளை பின்னூட்டத்தில் கேட்கலாம்...

29 Comments:

Anonymous said...

///சிறந்த கேள்வி கேட்கும் பத்து பேருக்கு பதிலுடன் படத்தின் ஆடியோ சிடி அனுப்ப திட்டமிட்டுள்ளார்.///


மொதல் கேள்வி.
ஆடியோ சி.டி.யில் "பதில்" இருக்குமா, இல்லை பாடல்கள் இருக்குமா?

Anonymous said...

ரெண்டாவது கேள்வி:
அமெரிக்கால போயி அங்க இருக்கற இந்தியரின் வாழ்க்கையை படம் பிடிச்ச மாதிரி, நம்ம ஊருல இருக்கற வெளிநாட்டவரின்(மாநிலத்தவரின்) வாழ்க்கைய படம் பிடிச்சா கார்டன் ஸ்டேட், ஷாங்காய், ஸ்கிப் சிட்டி டிஜிட்டல் ஜப்பான் போன்ற திரைப்பட விழாக்களில் பாராட்டு பெறுமா?

சீர்காழியில் இருந்து வந்து பதிவுலகத்தில் நுழைந்து வெள்ளித்திரையில் கால் படித்துள்ள உங்களுக்கு வாழ்த்துகள்.
மக்களுக்கு ஆபாசம் இல்லாத, பொழுது போக்குச் சித்திரங்களை நல்ல முறையில் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.

Anonymous said...

கடைசிக் கேள்வி! (இந்தப் போஸ்டுக்கு)
இட்லிவடை தங்களை அவரின் நண்பர் என்று "சந்தோஷமாக விளித்துள்ளார்"!
எனக்கு மட்டும் இட்லிவடை "யார்" "எங்கே உள்ளார்" என்று சொல்வீர்களா?

:-D

IdlyVadai said...

//ஆடியோ சி.டி.யில் "பதில்" இருக்குமா, இல்லை பாடல்கள் இருக்குமா?//

பதில் இங்கே இருக்கும். நல்ல கேள்வி என்றால் சிடி உங்க கையில் இருக்கும்.

அப்பறம், உங்க கடிதம் வந்தது. வேற என்ன சொல்ல..

Krish said...

சினிமால ஏன் பட்டு வருது? தேவை இல்லாத இடைசொருகல் தானே?

Krish said...

பாடல்களை மட்டும் தனியாக ஆல்பமாக வெளியிட்டால் என்ன? திரைபடத்தின் பெயரிலேயே?

Anonymous said...

ரொம்ப நாளா மனசில இருக்கற கேள்வி: இந்தப் படத்துக்கு ஏன் கார்த்திக் ராஜாவை இசையமைப்பாளராத் தேர்ந்தெடுத்தீங்க? (அவர் நிச்சயமாத் திறமைசாலிதான், and has given a pretty good album for you, But looking at the industry trend, it looks like a very unusual choice - wondering what made you choose him :)

- என். சொக்கன்,
பெங்களூர்.

ந.லோகநாதன் said...

புன்னகை அரசி சினேகாவை இப்படத்தில் தேர்ந்தெடுக்க ஏதாவது விசேச காரணம் உண்டா?

ChamathuSiva said...

You also do CPM/PERT methods to make a film from start (conception) to finish (release in theatres)?

லவ்டேல் மேடி said...

எல்லா டைரெக்டர் , நடிகர்கள் , நடிகைகள் மாதிரி ஏதாவது பீலா.....??

1. இந்த படம் அருமையா வந்திருக்கு.....???


2 . இந்த படத்துல ஒரு பாட்டு இந்த வருட சிறந்த பாடல்.....???


3. ஒரு சீனுல செம ரிஸ்க் எடுத்து பண்ணிருக்கோம் ...?


4 . கண்டிப்பா இந்தப் படம் ஆஸ்கருக்கு போகும்............???


5 . இதுல நடிகை மேக்கப்பே இல்லாம நடுச்சிருக்காங்க.........??


6 . இந்த படத்துல எல்லோருமே வாழ்ந்து காட்டியிருக்காங்க......??


இந்த மாதிரி ஏதாவது சொல்ல வரீங்களா.................


முடியல...... வலிக்குது.........

Gokul said...

நான் ஏன் இந்த படத்தை பார்க்க வேண்டும்?

Anonymous said...

இட்லிவடை அவர்களே!
நன்றி. "இருமுறை".

காரணம்(கள்) உங்களுக்கே தெரியும்.

:-)

Anonymous said...

ஸ்னேஹா பிரசன்னாவின் அக்கா போல தோற்றமளிக்கிறார். மூத்த(முதிர்ந்த) நடிகை. என்ன தைரியத்தில் அவரைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

குறிப்பு - இது சி டி க்கான கேள்வி அல்ல.

Anonymous said...

i hope this film will give a life to karthik raja!!!!! songs are good!some times tamil makkal may encourage good films.

R.Gopi said...

கார்த்திக் ராஜாவை தேர்ந்தெடுத்த காரணம் என்ன??

முத்தி முதிர்ந்து, பழுத்து போன ஸ்னேஹாவை ஏன் பிரசன்னாவின் ஜோடியாக தேர்ந்தெடுத்தீர்கள்?

தேசிய விருது பெறுமா??

படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனை படைக்குமா?

ரெட் ஒன் கேமராவை உபயோகித்து எடுக்க வேண்டும் என்று ஏன் தோன்றியது? விசேஷ காரணம் உண்டா?/ இல்லை வெறுமே நாம்தான் முதலில் உபயோகப்படுத்துகிறோம் என்று சொல்வதற்காகவா?

புதுமை விரும்பி ஆஸ்கர் (கனவு) நாயகன் கமலஹாசனுக்கு விசேஷ காட்சி திரையிடல் ஏதாவது உண்டா?

கடைசியாக ஒரு முக்கிய கேள்வி.... எல்லோரும் கவனியுங்கள் (மானஸ்தன் உட்பட), படத்தின் சிடி எனக்கு கிடைக்க வாய்ப்புள்ளதா?

kggouthaman said...

அச்சமுண்டு! அச்சமுண்டு !
இதோ என் கேள்வி:
ஏன்? ஏன்?

Anonymous said...

only an idiot will think that people will ask questions so that they can get an audio CD when the songs are available for free downloading.those who can afford will buy audio CD.audio CD is too cheap a stuff to merit any question.
let the film be released and then it will make sense to ask questions. then he can give prizes to the 10 well written reviews or viewers who raised intelligent questions.

தண்டோரா said...

என் இருப்பை உறுதி செய்து கொள்கிறேன்..போட்டியில் கலந்து கொள்வதாக இல்லை..(இன்னும் அந்தப் பரிசு வரவில்லை..நீங்கள் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டபோது அவர் முதலில் எடுக்கவில்லை..பின் பாண்டியில் இருப்பதாகவும்,சென்னை வந்தவுடன் அழைப்பதாகவும் கூறினார்..எனக்கே நான் ரொம்ப அலைவதாக பட்டதால் மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை..நீங்கள் கலர் டிவி பரிசு என்றால் கூட முயற்சித்திருக்க மாட்டேன்..புத்தகம் என்பதால்தான்..நன்றி..)

R.Gopi said...

//தண்டோரா said...
என் இருப்பை உறுதி செய்து கொள்கிறேன்..போட்டியில் கலந்து கொள்வதாக இல்லை..(இன்னும் அந்தப் பரிசு வரவில்லை..நீங்கள் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டபோது அவர் முதலில் எடுக்கவில்லை..பின் பாண்டியில் இருப்பதாகவும்,சென்னை வந்தவுடன் அழைப்பதாகவும் கூறினார்..எனக்கே நான் ரொம்ப அலைவதாக பட்டதால் மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை..நீங்கள் கலர் டிவி பரிசு என்றால் கூட முயற்சித்திருக்க மாட்டேன்..புத்தகம் என்பதால்தான்..நன்றி..)//

*******

"தல"

aen ivlo ukkiram??

kopappadel...........

Kedaikkanumnu irukkaradhu kedaikkaama irukkadhu
Kedaikkaadhunnu irukkaradhu kedaikkave kedaikkadhu

Idhula நீங்க first linea? second linea? என்று Idlyvadaiyai ketkavum.....

Eswari said...

@ R.Gopi
// irukkaradhu kedaikkaama irukkadhu
Kedaikkaadhunnu irukkaradhu kedaikkave kedaikkadhu//
தண்டோராக்கு என்ன சொல்ல வரீங்க? தைரியமா இல்லை ஆறுதலா???

Krishnan said...

From Sirkali to New Jersey - how will you sum up your life so far ?

Inba said...

1. படத்தின் ஸ்டில் பார்த்தால் பிரிவோம் சந்திப்போம் போன்று உள்ளது. மீண்டும் அதை போன்று, அமெரிக்காவில் தனியாக வாழும் தமிழ்தம்பதியை பற்றிய சப்ஜெக்டா??

2. இரண்டு பாடல்களை எழுத கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினியை தேர்வு செய்தது எப்படி மற்றும் "கண்ணில் தாகம்" பாடல உருவான விதம்??

3. இப்படம் மாயாஜால் போன்ற திரைஅரங்குகளில் பார்பவர்களுக்காகவா அல்லது ஒரு கிராமத்து ரசிகனாலும் புரிந்து கொள்ளும்படி இருக்குமா??

தண்டோரா said...

I think you have more operational problems.pls consult a surgen

Bart said...

இந்த படத்தின் post-production முழுக்க அமெரிக்காவிலேயே எடுத்ததில் என்ன பயன்கள்? தரம் கூடியது
என்றால் செலவும் கூடியதா?

Red One மற்றும் Live sound ஆல் என்ன அதிகப்படியான பலன் உங்கள் படத்துக்கு கிடைத்தது? தமிழ் சினிமா இதை எவ்வாறு இனி பயன்படுத்த வேண்டும்?

How would you compare your work-life in software vs film industry, sofar?

All the very best!!!

R.Gopi said...

//Eswari said...
@ R.Gopi
// irukkaradhu kedaikkaama irukkadhu
Kedaikkaadhunnu irukkaradhu kedaikkave kedaikkadhu//
தண்டோராக்கு என்ன சொல்ல வரீங்க? தைரியமா இல்லை ஆறுதலா???//

**********

ஈஸ்வரி மேடம்...

உங்களுக்கு மட்டும் சொல்றேன், யார்கிட்டயும் சொல்லோதீங்கோ...

தண்டோராக்கு ஆறுதல் சொல்லி, அப்படியே நானும் தேறுதல் (தேர்தல் அல்ல) அடைகிறேன்...... எனக்கு கூட பரிசு கிடைக்கல.........

ஆனா, அத நான் இங்க சொல்லல.... நீங்க யாரும் கேக்கல..... ஆனாலும் இட்லிவடை பரிசு குடுக்கல. ...

Anonymous said...

producer சார், கடன எப்ப திருப்பி கொடுக்கணும்?

ILA said...

1.உங்கள் பேட்டியின் படி ஒரு குடும்பத்துள் நடக்கும் கதை- அதற்கு எதற்காக ரெட் ஒன்?
2. அமெரிக்க இந்தியர்களின் கலாச்சாரத்தை எந்த விதத்தில வித்தியாசம் காட்ட நினைக்கிறீர்கள்.(மற்ற படங்களுடன் ஒப்பிடுகையில்) அது இந்தியாவில் இருக்கும் இந்தியர்களின் அமெரிக்க கனவை தகர்ப்பது போல இருக்குமா? அதாவது கட்டுடைத்தல் ரகமா?
3. Live Recording செயவதில் ஏற்படும் கஷ்டங்கள் என்ன? இது Indoorல் வெகு சாத்தியம். Outdoorல் ரொம்ப சிரம்மாய் இருந்திருக்குமே. அப்புறம் ஏன்?
4. செளம்யாவை பாட வைத்த காரணம்? நீங்களா ? கார்த்திக்ராஜாவா?
5. அடுத்தப் படம் எடுக்கும் எண்ணம் உண்டா?

M S Sathish said...

முதலில் என்னோட வாழ்த்துக்கள் ...
நல்ல திரைப்படத்துக்கு எப்போதுமே தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் ..
சமீபத்தில் வந்த வெனிலா கபடி குழு , சுப்ரமணியபுரம் , நாடோடிகள் , குறைந்த பட்ஜெட் படங்கள் நல்ல வசூல் பார்த்து உள்ளன ...
பிரசன்னா நடித்து உள்ளார் என்றாலே தெரியும் அதன் கதை எப்படி இருக்கும் என்று ...( நல்ல கதைகளை செலக்ட் செய்வர்னு சொல்ல வந்தேன் )
சினிமா பற்றி நேற்று கூட தினமலரில் படித்தேன். படித்தவர்கள் சினிமா போகதிர்கள் .. ரொம்ப மோசம் என்று சொல்கின்றனர் .. அதை பற்றி உங்கள் கருத்து ........ ?
நன்கு படித்தவர்கள் சினிமா எடுத்தல் தமிழ் சினிமா இன்னும் நன்கு முன்னேறும் என்று நினைபவர்களில் நானும் ஒருவன் ...

வண்ணத்துபூச்சியார் said...

இட்லி வடை அவர்களே..

தண்டோராவின் கேள்விக்கு பதிலே சொல்லவில்லை..