பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 24, 2009

சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 - ஓரு தந்தையின் அனுபவம்

சூப்பர் சிங்கர் ஜூனியர் – 2 - சுரேஷுக்கு நேர்ந்த அனுபவம் இங்கே பதிவாக. இதை கோபிநாத் "குற்றம் நடந்தது என்ன?" என்ற நிகழ்ச்சியில் போடுவாரா ?


திரு. எடிட்டர் அவர்களுக்கு,

ஸ்டார் விஜய் டிவியில், சமீபகாலமாக ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் – 2 தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்குபெற என் மகன் சாய் அபிஜித்தும் சி.டி.யில் குரல் வளத்தைப் பதிவு செய்து அனுப்பி, அதன் வாயிலாக சென்னை வர்த்தக வளாகத்தில் 7.7.2009 அன்று நடைபெற்ற ஆடிஷனுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக விஜய் டி.வி.யிலிருந்து கடிதமும் கொரியர் மூலம் பெற்று என் மகனும் கலந்து கொள்ளச் சென்றான்.
காலை 8 மணிக்கே நிகழ்ச்சியில் பங்குபெறுவோர் இருப்பது அவசியம் என்பதால், நேரத்திலேயே அங்கு சென்றடைந்தோம். அங்கோ சுமார் ஆயிரம் சிறுவர் சிறுமியருக்கு மேல் தம் பெற்றோருடன் வெயிலில் 9.00 மணி வரை காத்திருந்து படிவம் பெற்று நிகழ்ச்சியும் 11.30 மணியளவில் தொடங்கியது. இந்நிகழ்ச்சி முழுவதற்கும் மூவர் மட்டுமே நடுவர்களாக அறிமுகமும் செய்து வைக்கப்பட்டு, சுமார் 12 மணி அளவில் குழந்தைகள் குரல் வளத்தை நிரூபிக்கும் ஆடிஷனும் தொடங்கியது. எம்மையும் மற்றும் சிலரையும் 2 மணியளவில் கூப்பிடுவதாக அறிவித்தனர். ஆனால் மாலை 4.30 மணிவரையிலும் 625 சிறுவர் சிறுமியரே ஆடிஷனுக்குட்படுத்தப்பட்டனர்.
என் மகனின் அடையாள எண்ணோ 1364. 12 மணியிலிருந்து 4.30 மணி வரையிலும் 625 பேர்களே ஆடிஷனுக்குட்படுத்தப்பட்டனர். ஆனால் 4.30 மணியிலிருந்து 6.30 மணிக்குள் சுமார் 900 பேர் ஆடிஷன் முடித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
எனில் எந்த அவசர கோலத்தில் இந்நிகழ்வு முடிக்கப்பட்டது என்பதை அனைவரும் உணரலாம். என் மகனை ஆடிஷன் செய்ய நடுவர் பாப் ஷாலினி இருந்தார். இவன் இரண்டு வரிகூட பாடாத நிலையில் அடுத்து வேறு பாடலை பாட பணித்துள்ளார்.
ஷாலினி அவர்கள் இரண்டாவ பாடலிலும் இரண்டு வரிகளைக்கூட கேட்காமல் Rejected என்ற பொத்தானை அழுத்தி என் மகனை அனுப்பி வைத்துவிட்டார்.
என் மகன் பாடுவது இது முதல் முறையல்ல. கடந்த 4 ஆண்டுகளாக இன்னிசை நிகழ்ச்சிகளில் திரைஇசை பாடல்களை பாடி வருபவன்தான். இவர்கள் எந்த அளவுகோலை வைத்து குழந்தைகளை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது புரியாத புதிரே. இந்நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்படாத பல குழந்தைகள் கண்களில் கண்ணீருடன் மன அழுத்தத்தோடு வெளிவருவதை பார்த்தால் பெற்றவர்களும் மற்றவர்களும் மனமுடைந்து போவர். அதிலும் மன வேதனையில் வரும் குழந்தைகளையும் விஜய் டி.வி. கேமரா ஆபரேட்டர்கள் துரத்தித் துரத்திப் படம் பிடிப்பது எதற்கென்றே தெரியவில்லை.
தயவு செய்து எந்த டி.வி. சேனலாகட்டும். சின்னஞ் சிறுவர்களின் எதிர்காலத்தை, கனவுகளை அழித்துவிடாதீர்கள் என்பதே எமது தாழ்மையான வேண்டுகோள். உத்வேகமும் உற்சாகமும் கொடுத்து வளர்க்க வேண்டிய சின்னஞ்சிறார்களை பெற்றோரும், மீடியாக்களும் அதளபாதாளத்தில் தள்ளிவிடாதீர்கள். இன்றைய சின்னஞ் சிறியோரே நாளைய ஒரு SPBஆகவோ அல்லது ஆஸ்கார் புகழ் ரஹ்மானாகவோ தோன்ற வல்லவர்கள். அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வோமாக... வாழ்க இந்தியா... வெல்க நமது இளைஞர் பட்டாளம்.

இவண்,
ஏ.ஆர். சுரேஷ்,
ஆழ்வார்திருநகர் அனெக்ஸ்,
சென்னை – 87.
[ Edited Address and Phone numbers ]


32 Comments:

Anonymous said...

Well Said.

Kasu Sobhana said...

இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு வரும்
குழந்தைகளைவிட, பெற்றோர்களே
அதிக அளவு பாதிக்கப் படுகிறார்கள்.
என்பதே என் கருத்து.

Kasu Sobhana said...

இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு வரும்
குழந்தைகளைவிட, பெற்றோர்களே
அதிக அளவு பாதிக்கப் படுகிறார்கள்.
என்பதே என் கருத்து.

கலைக்கோவன் said...

1500 பேரில் 57 பேரை தேர்ந்தெடுத்தோம் என்று தம்பட்டம் அடிக்கிறது விஜய் டி.வி.,
எல்லாம் மாயை...

ஒரு சேனலுக்கு போன் செய்ய வேண்டும் என்றால் குறைந்த பட்சம்
10 நிமிடம் காத்திருக்கவேண்டியதாய்
உள்ள நிலையில்...,
அப்படி தொடர்பு கொள்ளும் நேயர்களை
ஆதித்யா டி.வி.யில்
ஜோக்கா பேசறேன் பேர்வழி என
வெறுப்பேத்தி கொல்கிறார்கள்...
(ஆதவன்,மகெஷ் என்று ஒரு
கிராக்கு கூட்டமே இருக்கு)
எல்லாம் மாயை...

Ela said...

i don't think Gopinath will talk about this... when they started "ungalil yaar adutha prabhu deva" ... it was terrible- the way they commercialized the emotions of young people... i registered with the Vijay TV website to get into their forum and wrote my feelings about the way they do that program... the next time i was not allowed access to the forum... when i tried to register again their database said already a user exist with such an id but if i try to sign in, i could not!

so i would be only angry with the parents and the public of TN that they allow such an degraded treatment of the youths... so that someone can make money!

Anonymous said...

noone can belittle anyone without their own help.we only degrade ourselves and our children by
dragging them to all these unwanted places.for a quiz competition at IIT noone will go.our craze for showing face in TV CAUSES ALL THE DAMAGE. THE FATHER COULD HAVE WALKED OUT THE MOMENT HE SAW THE CROWD.NO NEED TO HAVE WAITED FOR THE HUMILIATION.

Kalyani said...

I have seen these audition videos on TV and before blaming the TV channel, I would blame the parents. Many kids, to be very honest, do not sing well. THey do not practice and the parents feel their kids' voice is great. It might be, but letting the kids without enough practice to come in such TV shows will put a lot of pressure on them. More over, these kids are so fragile and delicate that they start crying the minute they judges reject them. They, and their parents do not think that there may be something lacking with the kids. As a result, the kids feel the judges have cheated them and get depressed. The parents get even more depressed. The TV channels are also at fault for making this entire issue sensational, but I would blame the parents more than blaming anyone else. I pity those judges who are pressurized to decide who among some 1500 participants will be selected in one day. The TV channel can probably spread this audition event over a period of few days to avoid such prolonged wait times.

Swami said...

No body forced the father / son duo to be part of those program . The fault lies with us as well. You can't foul cry once you know the way they treat you. At least this should be an eye opener for the other participants as well. The way they commercialise the emotions and sensationalise things .. its really horrible. Reality TV is yeeeeeeeccccckkkkkkkk..

வலைஞன் said...

பேராசை புடிச்ச பெற்றோர் இருக்கும் வரை இந்த அவலம் தொடரும்.இவ்வளவு எழுதிய இவர், எதற்காக மகனை போட்டியில் சேர்த்தாராம் ?

vasans valaipookkal said...

பாட்டு பாடி பாராட்டை பெற பாடாய் படு என்று நம்மை யார்
நிர்பதிகிரர்கள்.
நமது ஆசை நம்மோடு அவர்கள் வணிகம் அவர்களோடு

Anonymous said...

எனக்குப் புரியவில்லை. 1400 பேரில் 60 பேரை இரண்டு கட்டமாக தேர்வு செய்திருக்கிறார்கள்.

4 நடுவர்கள் இருந்தார்கள். முதல் கட்டமாக 144 பேர் தேர்வு செய்யப்பட்டு பிறகு 57 பேராக வடிகட்டியிருக்கிறார்கள்.

போட்டி என்று வந்துவிட்டால் வெற்றி தோல்வி சகஜம்தான். அதை சரியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். நடுவர் தீர்ப்பே இறுதியானது என்று ஏற்றுக் கொண்டுதானே பாடச் செல்கிறார்கள்? அப்புறமாக எதற்கு புலம்ப வேண்டும் என்று தெரியவில்லை.

இந்தப் போட்டி இம்முறை பெரிய அளவில் ரீச் ஆகீயிருக்கிறது. ஒரு பெண் கோவை, திருச்சியில நிராகரிக்கப்பட்டு பின் சென்னை வந்து விடாமுயற்சியுடன் தேர்வாகியிருக்கிறார்.

சராசரியாக 350 பேரின் குரலைக் கேட்டு வடிகட்டுவது என்பது சாதாரணச் செயலல்ல. நடுவரின் மனதைக் கவரும் வகையில் பாடும் குழந்தைகளே ஜெயிக்கிறார்கள். இதில் பெற்றோரின் பேராசை என்ன இருக்கிறது என்றும் புரியவில்லை.

மொத்தத்தில் இம்மாதிரி போட்டி நிகழ்ச்சிகளைப் பற்றி எப்பொழுதும் ஒரு தவறான வம்புப் பேச்சுதான் நடக்கிறது.

சிவனேசு said...

நல்ல நேரத்தில் நல்ல தகவலைச் சொன்னீர்கள், பாராட்டுக்கள், இங்கே, ம்லேசியாவிலும் இந்த நிகழ்ச்சி ஒலியேற்றப்படுகிறது, வெற்றி பெற்ற குழந்தைகள் மகிழ்ச்சியோடு சிரிப்பதைக் காட்டுவது நன்றாகவே இருந்தாலும், தோற்றுவிட்ட குழந்தைகள் ஏமாற்றமும் வேதனையுமாய் கண்ணீர் சிந்தி அழுவதை விடாது விரட்டி விரட்டி படமெடுத்து ஏன் காட்டுகிறார்கள், அதை திரும்பவும் பார்க்கும்போது அந்த குழந்தைகளும் அவர்களைச் சேர்ந்தவர்களும் வேதனை அடைய மாட்டார்களா? அதை எடுத்துச் சொல்லி தடுக்க முடிந்தால் மிகவும் நல்லது.

Erode Nagaraj... said...

kalyani, you are right and also well said, sivanesan

வலைஞன் said...

சில விளக்கங்கள் அவசியமாகிறது..

பத்து வயதுக்குக் கீழ் போட்டி என்பதே அறிவீனம் அதில் ஏற்படும் தோல்வி அந்த பிஞ்சு உள்ளங்களை ஆழமாக பாதிக்கும்

முதல் இரண்டு லெவல் களை ஒளிபரப்ப வேண்டிய அவசியமே இல்லை.அது ஒரு வகையான sadism..விஜய் டிவி க்கு serial இல்லாத குறையை இந்நிகழ்ச்சி தீர்க்கிறது.

இது ஒரு குரல் தேர்வு செய்யும் போட்டி.இதற்கு video
முதல் எதிரி.பாடகர்களின் வெளி தோற்றம் நம் மனதில் ஒரு bias ஐ ஏற்படுத்தும்.ஐம்பது ஆண்டுகளுக்கு முன் TV
இருந்திருந்தால் நமக்கு ஒரு TMS,P.சுசீலா கிடைத்திருக்க மாட்டார்கள்

குழந்தைகள் நலன் கருதி பெற்றோர்கள் இம்மாதிரியான போட்டிகளை தவிர்ப்பது நல்லது.

Anonymous said...

Hypocrisy

நீங்க ஏன் சார் இதுக்கு எல்லாம் போறீங்க ?
போன சீசன் ல அழுதுட்டு வந்தவங்கள பாத்து அப்பவே இந்த போஸ்ட் போடலாம் ல
சுயநலம்
உங்க ஏமாற்றம் தா இத போடா தூண்டுதல்
இதுல வாழ்க இந்திய , வளர்க சமுதயம் நு டயலாக் வேற
Hypocrisy

ரிஷபன் said...
This comment has been removed by the author.
Baski said...

I agree that many parents bring their kids to stage without enough home work.

At the same time, In a selection process everyone should be given equal opportunity. (say 2 mins of singing). And spot rejection can be avoided. It will be better to announce at end of the program.

And these channels can stop showing the emotions.. as Valaingan said it is to match a tele-serial.

தோமா said...

காக்கைக்கு தன் குஞ்சும் பொன் குஞ்சு என்பது பெற்றோரின் நிலை
1000 பேரை வடிகட்டி நிகழ்ச்சியை நடத்தி வியாபாரம் பார்க்கணும்னு நிறுவனத்தின் கவலை.

இதில் யாரை குறை சொல்லி என்ன பண்ண போறோம்.

சாய் அபிஜித் BETTER LUCK NEXT TIME......

R.Gopi said...

மாயையே ஆசை
ஆசையே மாயை

மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா....

//Kasu Sobhana said...
இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு வரும்
குழந்தைகளைவிட, பெற்றோர்களே
அதிக அளவு பாதிக்கப் படுகிறார்கள்.
என்பதே என் கருத்து./

இந்த கருத்தில் எனக்கு 100% உடன்பாடு உண்டு......

Krishnan said...

தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாவிட்டால் ஏன் போட்டிக்கு போக வேண்டும் ? விஜய் டிவி ஒன்றும் மக்கள் சேவை செய்யவில்லை. அவர்கள் வியாபாரம் தான் செய்கின்றனர். தோல்வி அடைந்தவர்கள் எல்லோரும் யார் நடுவர்கள் மற்றும் அமைப்பாளர்களாக இருக்கிறார்களோ அவர்களை குறை கூறுவது இயல்பு. குழந்தைகள் மனம் உடையும் என்பதற்காக எல்லாரையும் தேர்வு செய்ய முடியாது. அவர் முந்திக்கொண்டு பெயரை கொடுக்காததினால்தான் குழந்தையின் எண் ஆயிரத்தை தாண்டியது. சும்மா குறை சொல்லிக்கிட்டு. போங்கப்பா.

வலைஞன் said...

//Anonymous said...

Hypocrisy//

Well said...

India's National Anthem:Jana Gana Mana
India's National Animal:Tiger
India's National Bird:Peacock
India's National Number:Zero
India's National WORD:HYPOCRISY

surya said...

sruthiyodu paada theriyatha pillaigalai indha madhiri competiotionkku azhaithu varum parents muzhu muttalgal.Valarum pinjugalai, Sumaraga padupavargalai kooda encourage seyya theriyatha arrogant judge sunitha sarathy pondravargal thurrathappada vendum.

Anonymous said...

sruthiyodu paada theriyatha pillaigalai indha madhiri competiotionkku azhaithu varum parents muzhu muttalgal.Valarum pinjugalai, Sumaraga padupavargalai kooda encourage seyya theriyatha arrogant judge sunitha sarathy pondravargal thurrathappada vendum.

Anonymous said...

sruthiyodu paada theriyatha pillaigalai indha madhiri competiotionkku azhaithu varum parents muzhu muttalgal.Valarum pinjugalai, Sumaraga padupavargalai kooda encourage seyya theriyatha arrogant judge sunitha sarathy pondravargal thurrathappada vendum.

தமிழ் வலைப்பதிவு விருதுகள் said...

2009 ஜீலை மாதத்திற்கான சிறந்த தமிழ் சமூக வலைப்பதிவுக்கான விருது தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். விருதுக்கான இமேஜை http://tamilblogawardsinternational.blogspot.com/2009/07/2009.html என்ற லிங்கிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!

Vedantha Desika Dasan said...

சிறு குழந்தைகளை வைத்து சினிமா பாடல்களை (அதுவும் "நாட்டுக்கட்டை", "ஓடிப்போலாமா" போன்ற வரிகள் உள்ள பாடல்களை) பாட விடுவது நமது கலாசாரத்துக்கு உகந்தது தானா?

முழுக்க முழுக்க கொச்சைப் படுத்தப்பட்ட சினிமா பாடல்களை வைத்து மட்டுமே இந்த மாதிரி நிகழ்ச்சிகள் டி.வி. மூலம் ஒளிபரப்பப் படும்போது குழந்தைகள் நிச்சயம் சிறு வயதிலேயே கெட்டுப் போவார்கள்.

நீயா நானா, நடந்தது என்ன போன்ற நல்ல நிகழ்ச்சிகள் வரும் விஜய் டி.வி.யும் கெட்டுப் போய் விட்டது. எல்லாம் கலி காலம், வேறென்ன சொல்ல?

எவனோ ஒருவன் said...

சின்ன வயது முதலே எனது தந்தை என்னைடம் அடிக்கடி கூறும் வார்த்தைகள்...
‘போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமல்ல, கலந்துகொள்வதுதான் முக்கியம்’

இப்படி சொல்லி சொல்லியே, பள்ளி வழி நடக்கும் பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி என அனைத்திலும் என்னை பங்குபெறச் செய்வார். வெற்றி பெறுவது கொஞ்சமே, பல நேரங்களில் மண்ணைக் கவ்வி வெளியே வருவேன். மேலே சொன்ன அனைத்தும் நமக்கு சரியாக வராது, ஆனால் ஓவியப் போட்டியில் ஏதாவது தேறிவிடும். வருடத்திற்கு 10 போட்டியில் கலந்துகொண்டால் 9 தோல்விதான். மேலே கூறியது போல ‘நான் நல்லாதான் பண்ணேன், ஜட்ஜ் சரியில்ல, நடத்துனவங்க ஸ்கூல்ல உள்ள பையனுக்கு குடுத்துட்டாங்க’ எனுமாறு பல முறை நடந்துள்ளது.

இருந்தாலும் மீண்டும் மீண்டும் அடுத்த போட்டிகளில் சேர எனக்கு ஊக்கம் தந்ததாலோ என்னவோ எனக்கு தோல்வி பயம் கொஞ்சம் இல்லாமல் போனது. பல தடைகளை தாண்டி வர பழகிக்கொண்டேன். இப்படி பெற்றோர்கள், தோல்வியின் போது மனம்தளரும் பிள்ளைகளுக்கு ஊக்கம் தரவேண்டுமே தவிற, அவர்களே இப்படி மனமுடைந்து போகக்கூடாது. போட்டி என்றால் வெற்றி தோல்வி இரண்டும் இருக்கும். அது எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

பிள்ளைகள் உறுதியான மனமுடையவர்களாய் உருவாவது பெற்றோர்களின் கையில்தான் உள்ளது. அவர்களே இப்படி மனமொடிந்துபோவது வருத்தமாய் இருக்கிறது.

Kameswara Rao said...

இ,வ,

போட்டி என்றால் வேற்றில் / தோல்வி உண்டு. அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தேவை. விஜய் டிவி என்ன சமூக சேவையா செய்கிறது அது அவர்களுக்கு வ்யாபாரம்.
அதே சமயம் தோல்வி அடைந்தவர்களின் உணர்ச்சிகள் (emotions) should not be shown for fun

I have seen a SUN TV program where they were showing how many people got rejected ... in fact it was pain to watch also .. though many people laugh around about that..

Kamesh

VK said...

really there is no awareness among the parents who drag their kids into these junk shows. Parents should first think how the kids will be able to take the failures and then proceed to the shows. someone in the forum said that these crowds never happen always in some IQ or other tests which are not shown in television. I dont know why everybody is crazy about showing their face in television. absolute nonsense. Since the televsion is gaining money by conducting these shows, they should give some day allowances to all those participants atleast. Parents!! do not drag your kid to these shows and really a good talented kid may get rejected in the shows and it may demoralize the kid...think of this...

டகிள் பாட்சா said...

இப்போதய craze பாட்டு போட்டிகள்தான். ARR Hollywood போன பிறகு சான்ஸ் இல்லாமல் கிடப்பவர்களும், புதியவர்களின் வருகையால் ரொம்ப நாளைக்கு முன்பே ரிட்டயர் ஆகி ஊதிப் பெருத்துப் போய் வீட்டில் உட்கார்ந்திருந்த பாடகிகளுக்கும் அடிச்சது சான்ஸ். யாருடைய உணர்ச்சிகளும் இந்த கொழுத்தவர்களுக்கோ, TV Channels களுக்கோ சுத்தமாக இல்லை. எல்லாமே commercial. anyhow as all things should have an end, இந்த பாடல் போட்டி மோகம் எல்லாம் கொஞ்ச நாள்தான். இந்த TV காரர்களே overdose ஆக இதை கொடுத்து சலிக்க வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

நற்செய்தி said...

ithu thaan thamizhagathin miga piramanda chellakural thedal

tpathi108 said...

IF the same Suresh could have taken his son to a temple and asked his kid to sing a song praising the Lord there could have benfits for everybody. rather going to the underrated filthy shows by this demoniac channels is his mistake. Parents should realise this. i dont know when these ignorant parents will realise and change. Till they change these foolish and rascaldom channels will keep on doing this. TV channels have destablished the whole society.