பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 16, 2009

டி.கே.பட்டம்மாள் 1919 - 2009டி.கே.பட்டம்மாள் 1919 - 2009

22 Comments:

Anonymous said...

கர்நாடக இசை மேதை திருமதி. பட்டம்மாள் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறையை இறைஞ்சுகிறேன்.

"சாந்தி நிலவ வேண்டும்" பாடல் யூடியுபில் இருந்து எடுத்து போடுங்கள் இட்லி வடை ஜி! அலலது ஆடியோ லிங்க் கொடுங்க. மறக்கமுடியாத பாடல்.

அவரின் இசை வாரிசான நித்யஸ்ரீ மகாதேவன் மூலமாகவும், நித்யஸ்ரீ அவர்களின் பெண் மூலமாக இசையாக திரு.பட்டம்மாள் அவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.

- இரண்டாம் சுப்புடு

srinivasan said...

Sorry to read this news item.

I prey for the departed soul to rest in peace.

Rajagopalan,Dubai

மானஸ்தன் said...

legendary lady-trio-வில் ஒருவரான சங்கீத கலாநிதி திருமதி பட்டம்மாளின் மறைவு சங்கீத உலகத்துக்கு ஈடுகட்ட முடியாப் பேரிழப்பு.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

Kasu Sobhana said...

DKP's "aaduvome pallup paaduvome"
still ringing in our ears.

தோமா said...

ஆத்மா சாந்தி அடைய இறைவனை இறைஞ்சுகிறேன்

Vedantha Desika Dasan said...

Pl visit http://www.dinamalar.com/Topnewsdetail.asp?News_id=1374

the Legend singing National Anthem

R.Gopi said...

திருமதி பட்டம்மாள் அவர்கள் ஒரு மேபெரும் இசைமேதை....

அன்னாரின் மறைவு, சங்கீத உலகிற்கே ஒரு பேரிழப்பு...

அவரின் ஆன்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்....

ந.லோகநாதன் said...

ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ....

லவ்டேல் மேடி said...

எனது ஆழ்ந்த வருத்தங்களையும் , கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்...!!!

Kameswara Rao said...

May her soul rest in peace.

Kamesh

kggouthaman said...

'கச்சேரி மேடைகளில் தமிழ்ப் பாட்டு பாடுதல்'
என்ற இயக்கம் கல்கி காலத்தில் விஸ்வருபம்
எடுத்த பொழுது - தமிழ்ப் பாடல்களை மேடையில்
பாடிய பலரில் இனிமையாகத் தமிழைப் பாடிய
சிலரில் திருமதி DKP அவர்களும் ஒருவர்.

Prasanna said...

Shaken beyond words...BIG loss to carnatic-music and its fans. Her unique achievements & contributions:
1)First and only lady musician to conquer great heights on her own merit.
2)Only stalwart singer,who willingly taught many students-at the risk of straining her voice.
3)Created a unique school of music-sincere,soulful and yet simple singing.
May her soul rest in peace!

நாகை சிவா said...

ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்!

Erode Nagaraj... said...

சங்கீத கலாநிதி திருமதி D.K.பட்டம்மாள்
```````````````

நான் சென்னை வந்த புதிதில், வானொலியில் இசைப் பயிற்சி நிகழ்ச்சியில் முதலில் கேட்டது பட்டம்மாவின் கல்யாணி தான். "கணபதே மஹாமதே" -வை அவர் சொல்லிக்கொடுத்த விதம் கேட்டு மயங்கவில்லை, மாறாய் தெளிந்தேன். அது பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்லியது.

'பாரதியிலிருந்து தீக்ஷிதர்' வரை, 'தாமரை மலர் ஒன்று கண்டேன்' முதல் 'பல்லவியின் மிஸ்ர கதியைக் கூட, மூன்றரையாக இல்லாமல் ஒரு விரலின் அசைவில் நிலைப்படுத்தும் லயம்' வரை எல்லாம் முடிந்ததுஅவரால்.

அவர்கள் ஒரு முறை கலாக்ஷேத்ராவில் கௌரவிக்கப்பட்டபோது, அந்நிகழ்ச்சியை அடுத்து, உமையாள்புரம் சிவராமன் சார் கச்சேரி இருந்தது. பட்டம்மா மாமி, சிவராமன் சாரை அழைத்தார்கள்...

DKP: சிவராமா... நமஸ்காரம்...
UKS: என்ன இது... நீங்க எனக்கு நமஸ்காரம் சொல்லலாமா.. நாந்தான் உங்களுக்கு சொல்லணும்.. நீங்க எனக்கு ஆசீர்வாதம் பண்ணனும்...
DKP: உனக்கு ஆசீர்வாதம்... உன் வித்தைக்கு நமஸ்காரம்..

சங்கீதம் தவிர ஒன்றறியா உபாசனை செய்து வந்த மற்றுமோர் விளக்கு. விளக்குகள் உடையலாம், ஜ்வாலையின் தீஞ்சுடரும் வெப்பமும் எங்கு செல்லும்? ஒளிக்கேது பின்னம்? அவைஅணைவதேயில்லை.

அவை அணைக்கும்;ஆரத் தழுவும்; ஆற்றுப்படுத்தும்.
அழுத்தமான சங்கீதத்தால் வருடிக்கொடுக்கும்.
அளந்து வைத்த சங்கதிகளால் அகண்டமாகும்.

சந்தோஷ் = Santhosh said...

கூகுள் ரீடரில் இப்பொழுதெல்லாம் உங்க தளம் முழுமையாக தெரிவதில்லை? ஏதேணும் மாற்றம் செய்து இருக்கீங்களா? இல்ல நீங்களும் பெரிய எழுத்தாளர்கள் மாதிரி படிக்கிறவன் தளத்துக்கு வந்து படிக்கட்டுமுன்னு நினைக்கிறீங்களா?

IdlyVadai said...

//கூகுள் ரீடரில் இப்பொழுதெல்லாம் உங்க தளம் முழுமையாக தெரிவதில்லை? ஏதேணும் மாற்றம் செய்து இருக்கீங்களா? இல்ல நீங்களும் பெரிய எழுத்தாளர்கள் மாதிரி படிக்கிறவன் தளத்துக்கு வந்து படிக்கட்டுமுன்னு நினைக்கிறீங்களா?//

சில நாட்களுக்கு முன் கூகிள் ரீடரில் பதிவுகள் வருவதில்லை என்று சொன்னார்கள். என்ன பிரச்சனை என்று தெரியவில்லை, சரி என்று பாதி போஸ்ட் வருமாறு செய்தேன். பிரச்சனை சரியாகிவிட்டது. அடுத்த வாரம் திரும்பவும் முழு போஸ்ட் வரும்படி செய்றேன். பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் அப்படியா செய்கிறார்களா ? தகவலுக்கு நன்றி :-)

ராஜசுப்ரமணியம் said...

இசை மேதை ஸ்ரீமதி DK பட்டம்மாள் இன்று நம்மிடம் இல்லை; முத்துஸ்வாமி தீக்ஷிதரும், சுப்ரமணிய பாரதியும் அவரை தங்களிடம் அழைத்துக்கொண்டு விட்டார்கள் - அங்கு அவரது இசையைக் கேட்க.

”சாந்தி நிலவ வேண்டும்”, “பாரத ஸமுதாயம் வாழ்கவே” என்பன் போன்ற பல இனிய, உள்ளமுருக்கும் பாடல்களை பாடி கோடிக்கணக்கான ரசிகர்களை ஆட்கொண்ட இசை மேதைக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

ராஜ சுப்ரமணியம்

Erode Nagaraj... said...

ஜெயா டிவியில் பட்டம்மாள் என்று கூகிள் செய்து கிடைத்த முதல் ஐந்து படங்களைக் காட்டினார்கள். அதிலொன்று விஜய் சிவா மாமியிடம் கற்றுக்கொள்ளும் படம்.

இன்னொன்று, சிறு வயது பட்டம்மா என்று நினைத்து... பவதாரிணி.காமில் (DKP-யின் சிஷ்யை) இருந்த பவதாரிணியின் படம்!

ஈ ரா said...

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைஞ்சுகிறேன்...

K. கிருஷ்ணமூர்த்தி said...

May her soul rest in peace.

cho visiri said...

No words would be sufficient to express our grief.

Saanthi nilavavendum.
Endrum saanti nilavavendum.
Engum saanti....Endrum saanti.

Anonymous said...

See the difference between the way Karnataka treats its famous singer vs TN treated DKP's death.

http://www.hindu.com/2009/07/22/stories/2009072258180100.htm

The doyenne of Hindustani classical music and one of the foremost exponents of the Kirana Gharana, Gangubai Hangal, died at a private hospital here on Tuesday morning following cardiac arrest. She was 96.

A recipient of more than 50 awards, including the Padma Vibhushan, the Padma Bhushan and the Central Sangeet Natak Akademi Award, four honorary doctoral degrees and 24 titles, Ms. Hangal had the rare honour of being felicitated by nine Prime Ministers and five Presidents.

http://timesofindia.indiatimes.com/NEWS/City/Hubli/Citizens-pay-respects-to-Gangubai/articleshow/4804383.cms

People from all walks of life made a beeline to Indira Glass House in Hubli, where the body of famed Hindustani vocalist is kept for
public view and paid tributes to the departed singer on Tuesday.


Chief minister B S Yeddyurappa, who rushed to Hubli by special plane, along with Speaker Jagadeesh Shettar, council chairman Veeranna Mattikatti, ministers Basavaraj Bommai, Murugesh Nirani, opposition leaders Siddramaiah, V S Ugrappa, chief secretary Sudhakar Rao, former minister Basavaraj Horatti, Mohan Limbikai and others, placed a wreath on Gangubai's body and paid homage.

Speaking on the occasion, Yeddyurappa said, "The nation has lost a veteran artist and a great humanitarian in Gangubai. The government has set up Gangubai Hanagal gurukul in Hubli to impart music training to the youngsters in gurukul style." He said steps would be taken to install a statue of Gangubai in Hubli-Dharwad. Hailing the achievements and contributions of Gangubai in the field of music, the CM said, the state would recommend her name for Bharata Ratna posthumous award.