பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 20, 2009

மந்திரி ராஜாவுக்கு அபராதம் - ஜூவிக்கு 10K தருகிறார்

மத்திய அமைச்சர் ராஜா பற்றி செய்தி வெளியிடுவதற்கு ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு விதிக்கப் பட்டிருந்த இடைக்காலத் தடை நீக்கப்பட்டுள்ளதுடன் அமைச்சருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டிருக்கிறது...

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக அமைச்சர் ராஜாவு பற்றி ஜூனியர் விகடன் பத்திரிகை செய்தி வெளியிட்டது. தனக்கும், தனது குடும்பத்திற்கு எதிராக அப் பத்திரிகை செய்திகள், படங்கள், கட்டுரைகள் ஆகியவற்றை வெளி யிட்டு வருகிறது என்றும், இவை உண்மைக்கு மாறானவை என்றும், எனவே இவற்றை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்

என்று மத்திய அமைச்சர் ராஜா சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு இடைக்கால தடை விதித்து கடந்த 28.4.2009-ல் உத்தரவு பிறப்பித் திருந்தார். இந்த தடையை நீக்கக்கோரி விகடன் பத்திரிகை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மத்திய அமைச்சர் என்ற முறையில், பொது நபர் என்ற அடிப்படை யிலேயே ராஜா பற்றி செய்திகள் வெளியிடப்பட்டன. நாடாளுமன்றத் தில் நடைபெற்ற விவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த செய்திகள் வெளியிடப்பட்டன. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை யைப்பற்றி செய்திகள் வெளியிட வில்லை. எனவே இதில் அவதூறு என்பதற்கு இடமில்லை.

மேலும் அவர் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படத்தை தான் நாங்கள் வெளியிட்டோம். எனவே, தடையை நீக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சந்ரு, இடைக்கால தடை விதிப்பதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என்று தீர்ப்பளித்தார்.

தேர்தலில் போட்டியிடுபவர்கள் பற்றியும், அவர்களுடைய குடும்பத் தினரை பற்றியும், கடந்த கால வாழ்க்கை குறித்தும், அவர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் மக்கள் அறிந்து கொள்ள முழு உரிமை இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருக்கிறது.

மேலும் பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்களின் தனிப்பட்ட வாழக்கையும் வெளிப்படையாகி விடும். தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்தி வெளியிடவில்லை. பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள வர்கள் தங்களுக்கு எதிராக செய்திகள் வெளியிடாமல் தடுக்க முன் தடை பெறுவதற்கு எந்த சட்டமும் இல்லை.

இப்படி தடை விதிக்க முற்படுவது விமர்சன குரல் வளையை நெறிக்கும் முயற்சியாகும். அரசியல் நோக்கத்தோடு விதிக்கப்படும் தணிக்கைக்கு சமமானதாகும் என்றும் அத்தகைய நடவடிக்கை ஆட்சேபனைக்கு உரியது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் தங்கள் மீதான விமர்சனங்களை அலட்சியப்படுத்த வேண்டும். சில நேரங்களில் தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்கப்பட முடியாததாகும். எனவே, ஏற்கனவே விதிக்கப்டடிருந்த இடைக்கால தடை நீக்கப்படுகிறது.

மேலும் மனுதாரருக்கு (மந்திரி ராஜா) ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை ஜூனியர் விகடனுக்கு வழங்க உத்தரவிடுகிறேன்.

மத்திய அமைச்சர் ராஜா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து படித்து உழைத்து பாடுபட்டு படிப்படியாக முன்னேறி இன்று மத்திய அமைச்சரவையில் பணியாற்றி வருகிறார். அவர் அந்தப் பொறுப்பில் இருப்பது ஒரு சிலருக்குத்தான் பிடிக்கவில்லை....." முன்பு கலைஞர் சொன்னது.

( படம்: Description:Communications and IT Minister A. Raja gestures while replying, on being cornered by journalists about irregularities over the allocation of radio spectrum for high-speed mobile services in New Delhi, 07 November 2008 )

31 Comments:

Baskar said...

/***தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து படித்து உழைத்து பாடுபட்டு படிப்படியாக முன்னேறி ***/ இது மறுக்க முடியாத உண்மை, உதாரணம் நிறைய உள்ளது (கண்டிப்பாக இந்த கழிசடை கிடையாது!!) நமக்கு போதாத காலம் இந்த வீணானவைகளை (இது நமது நாட்டின் கேபிணட் மந்திரி ஐயையோ கேவலம்!!) பற்றி எல்லாம் நீங்கள் பதிவு போட வேண்டும், அதற்கு நாங்கள் பின்னூட்டம் போட வேண்டும் என்று!!!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

இந்த மாதிரி ஆளெல்லாம் எதில் பிறந்து இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்(ன்) தான், பிறகு தாய் நாட்டை அடகு வைப்பவர்களை என்ன சொல்ல???

R.Gopi said...

//மத்திய அமைச்சர் ராஜா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து படித்து உழைத்து பாடுபட்டு படிப்படியாக முன்னேறி இன்று மத்திய அமைச்சரவையில் பணியாற்றி வருகிறார். அவர் அந்தப் பொறுப்பில் இருப்பது ஒரு சிலருக்குத்தான் பிடிக்கவில்லை....." முன்பு கலைஞர் சொன்னது. //

இப்போது, இதைவிட மாற்றாக வேறு ஏதாவது சொல்லலாமா என்று "தலை" யோசிப்பதாக சமீபத்தில் காக்கையார், குருவியார், பருந்தார், கிளியார் செய்தி வெளியீடு......

பா. ரெங்கதுரை said...

//மத்திய அமைச்சர் ராஜா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து படித்து உழைத்து பாடுபட்டு படிப்படியாக முன்னேறி இன்று மத்திய அமைச்சரவையில் பணியாற்றி வருகிறார். அவர் அந்தப் பொறுப்பில் இருப்பது ஒரு சிலருக்குத்தான் பிடிக்கவில்லை....." முன்பு கலைஞர் சொன்னது. //

நீதிபதி சந்ரு, முற்பட்ட சமூகமான கார்காத்த வேளாளர் ஜாதியைச் சேர்ந்தவர். எனவே, கலைஞர் மேற்படி அறிக்கையை அப்படியே மறுபடியும் வெளியிடுவார் என்று எதிர்பார்ப்போம்.

Baski said...

இது விகடனுக்கு இரண்டாவது வெற்றி.
இதற்கு முன், இதே போல் தமிழக அரசே அபராதம் கட்டியது.. சரியாக நியாபகம் இல்லை.

அமுதப்ரியன் said...

மத்திய அமைச்சர் ராஜா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து படித்து உழைத்து பாடுபட்டு படிப்படியாக முன்னேறி இன்று மத்திய அமைச்சரவையில் பணியாற்றி வருகிறார். அவர் அந்தப் பொறுப்பில் இருப்பது ஒரு சிலருக்குத்தான் பிடிக்கவில்லை....." முன்பு கலைஞர் சொன்னது.
------------------------------------
அமைச்சர் தயாநிதிக்கு ரொம்ப பிடித்துருக்கிறது போலும்.

blogpaandi said...

நெத்தியடி!சபாஷ் சரியான தீர்ப்பு.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.
-நக்கீரர்

blogpaandi said...

நெத்தியடி!சபாஷ் சரியான தீர்ப்பு.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.
-நக்கீரர்

blogpaandi said...

நெத்தியடி!சபாஷ் சரியான தீர்ப்பு.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.
-நக்கீரர்

Erode Nagaraj... said...

நல்ல தீர்ப்பு...

கலைக்கோவன் said...

மஞ்சள் கவிஞரின் வரிக்கே...,
மஞ்சளா...?
once again
இட்லி வடையின்
AGMARK நக்கல்

Anonymous said...

10000 என்பது அவருக்கு ஒரு பொருட்டல்ல. இந்த அவமானத்தை ஒரு விஷயமாக் கருதப்போவதுமல்ல. இவருக்கு தோல் ரொம்ப கெட்டி,...

கலைக்கோவன் said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

10 K Gold - அபராதம் என்று சொன்னால் கூட
கட்டிவிடுவார் வானவில் மன்னர்.
வாழ்க ஜனநாயகம்!

மானஸ்தன் said...

இது ஆரம்பம்தான்.

தாழ்த்தப்பட்டவர் என்று கூறிக்கொண்டே கொள்ளையடிக்க கைக்கூலியாக பயன்படுத்தப்படும் இந்த ஸ்பெக்ட்ரம் புகழ் கைத்தடிக்கு பெரிய லெவல் ஆப்பு சீக்கிரம் உண்டு.

யதிராஜ சம்பத் குமார் said...

முன்பு ராசா மீது பல்லாயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு, பிறகு நீதிபதியை மிரட்டிய விவகாரம் இவையெல்லாவற்றையும் சகித்துக் கொண்டு அவரை மந்திரிசபையில் நீட்டிப்பதற்கு "நேர்மையாளர்" மன்மோகன் சிங்கிற்கு என்ன கட்டாயம்??
மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டிற்கும், நீதிமன்ற அவமதிப்பிற்கும் நியாயம் கிட்டவில்லை. ஏதோ ஆறுதலாக இந்த தீர்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த தீர்ப்பு விவகாரமும் பல்டி அடிக்காமலிருக்க வேண்டும்.

R.Gopi said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
வலைஞன் said...

ம்ம்ம்ம்... இதற்கெல்லாம் மூல காரணம்,நேக்கு தெரிஞ்சு
போச்சு!...தீர்ப்பு வழங்கியவரின் அடுத்தவீட்டு காரர் தான்!
(அவா தான் இவர் மனசை கெடுத்திருக்கணும்)
;-)

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

ஜாதீயம் பார்க்காதவர் தலைவர் கலைஞர்! அதனால் தான் ராசாவை இன்னொரு (மரு = மற்றும் ஒரு) மகனாக ஆக்கிக் கொண்டுள்ளார்!!!!

Anonymous said...

10K- இதென்ன ஒரு தொகையா? ஜூ வி வாசகர் ஒவ்வொருத்தருக்கும் கூட 10-கே கொடுக்க அவரால் முடியும். அவர் ஒரு வசூல் ‘ராஜா’

Kameswara Rao said...

இ,வ,

"முன்பு ராசா மீது பல்லாயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு, பிறகு நீதிபதியை மிரட்டிய விவகாரம் இவையெல்லாவற்றையும் சகித்துக் கொண்டு அவரை மந்திரிசபையில் நீட்டிப்பதற்கு "நேர்மையாளர்" மன்மோகன் சிங்கிற்கு என்ன கட்டாயம்??"

முடிவு எடுப்பது யார் என்று அறியாமல் பேசுகிறீர்களே ? அவர் வெறும் "சிங் சக்" தான்

மு க இன்னும் ஏதேனும் ஒரு புது காரணத்தை (கதை) கண்டுபிடிப்பார். இவர்கள் வாயில்
"தாழ்த்தப்பட்ட சமுதாயம்", "பார்பான்" படும் அவஸ்தை சொல்லி மாளாது.

"மத்திய அமைச்சர் ராஜா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து படித்து உழைத்து பாடுபட்டு படிப்படியாக முன்னேறி இன்று மத்திய அமைச்சரவையில் பணியாற்றி வருகிறார். அவர் அந்தப் பொறுப்பில் இருப்பது ஒரு சிலருக்குத்தான் பிடிக்கவில்லை....."

எதோ ஞாபகத்தில் "நீ இன்றி நான் இல்லை" கதை "outline" சொல்லி இருக்கிறார்

இதை, இதோடு விடமாட்டார்கள்.

காமேஷ்

//
நீதிபதி சந்ரு, முற்பட்ட சமூகமான கார்காத்த வேளாளர் ஜாதியைச் சேர்ந்தவர். எனவே, கலைஞர் மேற்படி அறிக்கையை அப்படியே மறுபடியும் வெளியிடுவார் என்று எதிர்பார்ப்போம்.
//

அட கடவுளே, இந்த காலத்திலுமா இப்படி ஜாதி பேசுவது?

உங்களை மாறி ஆட்கள் இருக்கும் வரை, மு.க, மருத்துவர், குருமா என பல பேர் கட்சி ஆரம்பித்து நல்ல கொளுத்து வளர்வார்கள்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

"தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்" என்ற சொற்றொடரை,
விரிக்கப் பட்ட குடையாக உபயோகப் படுத்தும் எங்கள் தலைவரின்
சாமர்த்தியம் யாருக்கு வரும்?

Anonymous said...

நம். நாட்டில் நீதி இன்னும் சாக வில்லை.

அதை விட முகனாகவின் கருத்து தான் என்னை மிகவும் புண் படுத்துகிறது.
அவரே ஒரு பத்திரிகையாளர் தான். இந்த விஷயத்திலும் சாதியை சுட்டிக்காட்ட்டியிருப்பது அவர் சின்ன புததியை காட்டுகிறது.

சிலம்பு குறித்த பின்னூட்டத்தை தவிர்த்து இருக்கலாம்

Harish said...

நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து படிப்படியாய் முன்னேறி முதலமைச்சராய் இருக்கிறேன். அதனால்தான் என் ஆட்சியை குறை சொல்லுகிறார்கள்
என்றும் கூட பல முறை முன்பு சொன்னதாய் ஞாபகம்.

Hari (http://harish-sai.blogspot.com)

Anonymous said...

http://www.maalaisudar.com/newsindex.php?id=30637%20&%20section=1

ஜூவிக்கு இடைக்கால தடை

ராசா மற்றும் அவரது மனைவி சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.டி.கோபாலன், பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
இவர்களது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அவதூறு செய்தி வெளியிடுவதற்கு ஜூனியர் விகடனுக்கு இடைக்கால தடை விதித்தும்அவர்கள் உத்தரவிட்டனர். இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.