பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 30, 2009

zoozooவின் பெற்றோர்கள்

ஐ.பி.எல்லில் fakeiplplayerக்கு அடுத்து பலரை கவர்ந்தது சூ சூ(ZooZoo) வோடோ ஃபோன் விம்பரம். சூசூக்கள் அனிமேஷன் இல்லை என்று சொன்னால் அடிக்க வருவீங்க

இந்த சூசூவின் பெற்றோர்கள் ஸ்னேகா வர்மா, பிரகாஷ் வர்மா - பெங்களூர்காரர்கள்

"பல தயாரிப்பாளர்களை தற்போது புதுமையாக(out-of-the-box) யோசிக்க வைத்துள்ளது இந்த விளம்பரம்" என்கிறார் நிர்வாணா ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ஸ்னேகா வர்மா

"சிம்பிளாகவும், புதுமையாகவும் ஏதாவது செய்ய நினைத்தோம். அனிமேஷன் செய்து நிஜத்தை போல காண்பிப்பதற்கு பதிலாக நிஜத்தை கொண்டு அனிமேஷன் போல காண்பித்தோம். இதனால் எங்களுக்கு பணம், நேரம் மிச்சம். படபிடிப்புக்கு 15 நாட்கள் முன்பு தான் சூசூ ஸ்கெட்சை இறுதி செய்தோம்" என்கிறார் டைரக்டர் பிரகாஷ் வர்மா.

முதலில் இவர்கள் குழந்தைகளை சூசூக்களாக நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார்கள், ஆனால் குழந்தைகளை சூசூக்களின் முகமூடிகளை போட்டுக்கொண்டு நடிக்கும் போது மூச்சு திணரல் போன்ற பிரச்சனைகளால் அது சாத்தியப்படவில்லை. பிறகு பெரியவர்களை கொண்டு செய்துள்ளார்கள். பின்னாடி பேக்ரவுண்ட் பெரிதாக காண்பிக்கப்பட்டதால் சிறுவர்கள் போல் இவர்கள் காட்சி தருகிறார்கள்.

முகமூடி போட்டுக்கொண்டு நடிப்பதால் இவர்களுக்கு ஒன்றும் தெரியாது அதனால் முன்பே ஒத்திகை பார்த்துவிட்டு இயக்குனர் சொல்லுவதை கேட்டு சூசூக்கள் நடிக்க வேண்டும். முகமூடி போட்டுக்கொண்டால் எவ்வளவு பிரச்சனை பாருங்க.

நம்ம ஊர் மக்கள் உடனே என்ன செய்வார்கள் ?

சூசூக்களுக்கு தற்போது ஃபேஸ் புக்கில் 3,10,755 விசிரிகள் இருக்கிறார்கள்(முகமூடிகளுக்கு நிறைய ஃபாலோவர்ஸ் இருப்பாங்க), இந்த விளம்பரங்களை வோடோ ஃபோன் சிடியாக வியாபாரம் செய்கிறது, சூசூ சாக்லேட் எல்லாம் வர தொடங்கிவிட்டது. ஒருவர் தனக்கு சூசூ குழந்தைகள் பிறந்த மாதிரி கனவு கூட கண்டுவிட்டார்.

தற்போது லேட்டஸ்ட் சூசூ கல்யாண பத்திரிகை
சூசூக்கள் சுட்டி டிவியில் தினமும் வரும் பூம்பா மாதிரி இருக்கிறது. நீங்க என்ன நினைக்கீறீங்க ?


பிகு: சூசூவின் படங்கள் பல உங்களுக்கு ஈமெயிலில் வந்திருக்கும், அதனால் இங்கே அவைகளை இங்கே போடவில்லை.

11 Comments:

மானஸ்தன் said...

இது "முகமூடிகளின்" காலம்னு சொல்றீங்க...

நடக்கட்டும்...நடக்கட்டும்... :-D

mazhai said...

எதயும் வித்தியாசமாக செய்தால் பெயர் வாங்கலாம் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

பூம்பா-வ காப்பி பண்ணினாலும் நல்லாதான் இருக்கு.

Anonymous said...

சுவாரஸ்யமான பதிவிற்கு நன்றி ’இட்லிவடை’!

ஒரே ஒரு விண்ணப்பம் - அந்தக் கல்யாணப் பத்திரிகையில் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை mask செய்துவிட்டு வெளியிடலாமே, சம்பந்தப்பட்ட நபரின் privacyல் நாம் ஏன் குறுக்கிடவேண்டும்? :)

- என். சொக்கன்,
பெங்களூர்.

kggouthaman said...

என் பேரன்கள் இருவரும் பும்பா வை மிகவும்
இரசித்துப் பார்ப்பார்கள் - இது தெரிந்துதானோ
என்னவோ - சுட்டி டி வி பும்பாவை நிறுத்திவிட்டார்கள்!

IdlyVadai said...

//ஒரே ஒரு விண்ணப்பம் - அந்தக் கல்யாணப் பத்திரிகையில் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை mask செய்துவிட்டு வெளியிடலாமே, சம்பந்தப்பட்ட நபரின் privacyல் நாம் ஏன் குறுக்கிடவேண்டும்? :)//

ஆமாம். ஆனால் அந்த பத்திரிகை எனக்கு வந்தது இல்லை ஏற்கனவே இணையத்தில் இருக்கிறது. இருந்தாலும் நீங்க சொன்னதை செய்கிறேன். நன்றி

IdlyVadai said...

//என் பேரன்கள் இருவரும் பும்பா வை மிகவும்
இரசித்துப் பார்ப்பார்கள் - இது தெரிந்துதானோ
என்னவோ - சுட்டி டி வி பும்பாவை நிறுத்திவிட்டார்கள்!//

நேற்று கூட பார்த்தேன். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை பத்து மணிக்கு வருகிறது.

மானஸ்தன் said...

திங்கள் முதல் வெள்ளி வரை காலை பத்து மணிக்கு டி.வி. பாக்கறீரா????????!!! அடப் பாவி மனுஷா! அப்போ எப்போ ஆபீஸ்???
இல்லேனா, நீங்களும் என்ன மாதிரி "வெட்டி ஆபீசெர்"தானா? :-D :/D

இருந்தாலும் இந்த மாதிரி ஒரு ப்ரோக்ராம் விடாம ரொம்ப டி.வி. பாக்கக் கூடாது அண்ணாச்சி!!! கொஞ்சம் கொறைச்சுகங்க!!!

Sunaapaana said...

//நேற்று கூட பார்த்தேன். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை பத்து மணிக்கு வருகிறது.//

அடடா... சுட்டி டிவி கூட விட்டு வைக்கிறது இல்லையா ?

venkatramanan said...

வோடாஃபோன் ZooZoo - 16+ வெள்ளான்கள் ஒரே இடத்தில்>

R.Gopi said...

//மானஸ்தன் said...
திங்கள் முதல் வெள்ளி வரை காலை பத்து மணிக்கு டி.வி. பாக்கறீரா????????!!! அடப் பாவி மனுஷா! அப்போ எப்போ ஆபீஸ்???
இல்லேனா, நீங்களும் என்ன மாதிரி "வெட்டி ஆபீசெர்"தானா? :-D :/D//

********

ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Erode Nagaraj... said...

"சூ சூ மாறி", ஒரு பொம்மையை பரிசாக அனுப்புங்களேன்...