பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 17, 2009

கொக்கிக் காய்ச்சல்(H1,L1) பரவுவது ஏன்? - விஞ்ஞானிகள் ஆய்வு

கொக்கிக் காய்ச்சல் வைரஸ் இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் எவ்வாறு பரவியது என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். பல விஞ்ஞானிகள் சமீபத்தில் உலகளவில் ஏற்பட்ட தொற்று நோய்களான புத்தகப் புழுக் காய்ச்சல், சினிமா மூட்டைக்கடிக் காய்ச்சல், பட்டர் ஃப்ளைக் காய்ச்சல், வலைப்பதிவுக் காய்ச்சல் ஆகியவை குறித்து நீண்ட ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர்.

அந்தக் கட்டுரையில், வைரஸ் காய்ச்சல் பற்றி ஏராளமான தகவல்களைத் தெரிந்து கொண்டாலும், பதில் தெரியாத சில கேள்விகளும் உள்ளன. உதாரணமாக, வைரஸ் ஒரு இனத்தில் இருந்து மற்றொரு இனத்திற்கு இணையத்தில் பரவுதல், மனிதனில் இருந்து மனிதனுக்குப் பரவுதல், முகமூடி அணிந்த மனிதனைக் கூட தவிர்க்காமல் தாக்குதல், கடந்த காலத் தொற்று நோய்கள் மற்றும் தற்போது ஏற்பட்டிருக்கும் புதிய தொற்று நோய் ஆகியவற்றிற்கான காரணிகள் மற்றும் காரணம் என்ன? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தப் புதிய வைரஸ் காய்ச்சலுக்குக் காரணமான கொக்கி வைரஸை (கேள்விக் குறி போன்ற வடிவில் இருக்கும் வைரஸ்) தீவிரமாகக் கண்காணிப்பதன் மூலம், இந்த நோய் ஆபத்தாக மாறுவது மற்றும் மனிதர்களுக்கு இடையே பரவுவது போன்றவற்றிற்கு காரணம் வேலையில்லா திண்டாட்டம் என்றும் கண்டறியலாம். நம் மக்கள் H1, L1 வீசா வாங்கிக்கொண்டு அமெரிக்கா சென்று ரிசஷனில் தன் வாழ்க்கையே கொக்கியாய் இருக்கும் போது, அடுத்தவனுக்கு ஏராளமான கொக்கிகளை மாட்டி ஆற்றிக் கொள்வதால் இதற்கு எச்-1 எல்-1 வைரஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த வைரஸைக் கண்காணிப்பதால், விஞ்ஞான ரீதியாக பல அரிய தகவல்கள் கிடைக்கும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அமைத்த சர்வதேச அளவிலான குழு ஒன்று, கொக்கிக் காய்ச்சல் வைரஸின் தோற்றம் அதன் ஆரம்ப கால வளர்ச்சி ஆகியவை குறித்து அறிய பரிணாம ஆய்வு ஒன்று செய்துள்ளது.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், "இணையத்தில் பல வைரஸ்கள் சேர்ந்து, அதிலிருந்து இந்தக் காய்ச்சல் நோய்க்குக் காரணமான வைரஸ் உருவாகிறது. இந்த வைரஸ் மனிதர்களுக்கு தொற்றுவதற்கு பல மாதங்களுக்கு முன்பே உருவாகி உள்ளது," என்றனர். அதே சமயம் இது பட்டர் ஃப்ளை காய்ச்சல், அல்லது சினிமா மூட்டைக்கடிக் காய்ச்சல், புத்தகப் புழு ரகங்கள் போல் அதிக அபாயம் இல்லை என்றும் கூறப்படுகிறது. என்றாலும் உலகம் முழுவதும் இந்த நோய்த் தொற்று பரவியது எப்படி என்ற கேள்வி பெரிதாகப் பேசப்படும் பரபரப்பான விஷயமாகியுள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் கூறுகையில், "இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தன் அப்பன் பேர் வைத்த கடுப்பு முதல் தன் துணையிடம் என்னவெல்லாம் பிடிக்கவில்லை என்பதுபோன்ற மாற்றுக் கருத்துகளோடும் துணை இல்லாத போது என்னவெல்லாம் செய்யலாம் என்பது போன்ற மாற்றுச் சிந்தனைகளோடும் எதிர்மறை எண்ணங்களின் பாற்பட்டும், அடுத்தவன் வீட்டைப் பார்த்து வெதும்பியும் தனக்குத் தானே மன உளைச்சலுக்கு ஆளாகிக் கொண்டு இருப்பதும், கேரட் தான் போட்ட மோர்க்குழம்பு சாப்பிடுவதும், குரங்கு நீர்வீழ்ச்சிக் குளியல் போடுவதும், மற்றவர்களை இமிடேட் செய்வது, பேஸ் வாய்ஸில் பாடுவது ... என்று பல பல அறிகுறிகள் இந்நோயின் முக்கிய அறிகுறி" என்று தெரிவித்துள்ளார்.

"இந்த காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் அந்தரங்கத்தில் அடங்கியிருந்த பல உப வைரஸ்கள் விழிப்புற்றிருப்பதால் குடும்பத்தினரையும் குடும்ப அமைதியையும்கூட பாதிக்கக் கூடிய சூழ்நிலை இருப்பதால் ஒருவர் தாக்கப்பட்டாலும் சமுதாயத்தில் பலரையும் பாதிக்கும் அபாயம் நிலவுகிறது' என்று சமூகவியலார் கவலையான கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த காய்ச்சலில் '32' வயதே ஆன ஒரு இளம் பீடா எழுத்தாளர் பாதிக்கப்பட்டு, கிலோ கணக்கில் காதல் கதை எழுத தொடங்கிவிட்டார், அதே போல இதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பல்லை எடுத்துவிட்டார்கள். இப்படி 'சொக்கத் தங்கமாக' இருந்த பலர் இன்று 'உருப்படாத' 'சோம்பேறி'கள் ஆகி இந்தக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த காய்ச்சல் வந்தவர்கள் வீட்டைவிட்டு வெளியே வராமால் காலாவதியான இணையர்களையும் இது இழுத்துவைத்துத் தாக்குவதோடு முகமூடி அணிந்தவர்களும் இதிலிருந்து தப்பமுடியவில்லை என்பது குறித்து சுகாதரத் துறை மேலும் கவலை தெரிவித்துள்ளது.

கொக்கிக் காய்ச்சல் நோயால் பாதிக்கபட்டவர்கள் பெரும்பாலோர் தமிழ் பேச எழுதத் தெரிந்தவர்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. "வளர்ச்சியடைந்த மொழிகள் மற்றும் நமது மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது, 221 பேர் இந்தக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது ஒன்றுமேயில்லை" என்று பெருமையாக சொல்லுகிறார் தமிழக அரசு அதிகாரி. ஆனால் நாளுக்கு 40 பேர் என்ற அளவில் பரவிக்கொண்டிருக்கும் இந்த வைரஸ் தாக்குவோரின் எண்ணிக்கை 4ன் மடங்கில் வளர்ந்துகொண்டே வருகிறது.


கொக்கி காய்ச்சலை பரவாமல் தடுப்போம், சுற்றுப்புற சூழலை காப்போம்!


17 Comments:

Anonymous said...

////இப்படி 'சொக்கத் தங்கமாக' இருந்த பலர் இன்று 'உருப்படாத' 'சோம்பேறி'கள் ஆகி இந்தக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.////

are you alright now, Mr Idly?

Erode Nagaraj... said...

கொக்கிக் காய்ச்சலைத் தவிர்க்க, த்ரிஷாவை வாழ்த்தும் போஸ்டர், வீட்டோடு வேலைக்காரி கடிகள் ஆகியவற்றைத் தவிர்க்குமாறு விஞ்ஞானி வீண் வலையர்தெரிவித்தார்.

R.Gopi said...

//கேரட் தான் போட்ட மோர்க்குழம்பு சாப்பிடுவதும், குரங்கு நீர்வீழ்ச்சிக் குளியல் போடுவதும் //

**********

Idlyvadai,

Idhu namma DONDU Mama ezhudhi irundhadhu...... hmm hmm nadakkattum ....... ippo avaraa??


//இப்படி 'சொக்கத் தங்கமாக' இருந்த பலர் இன்று 'உருப்படாத' 'சோம்பேறி'கள் ஆகி இந்தக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர் //

*********

Yappaaaaaa ..........

R.Gopi said...

//Erode Nagaraj... said...
கொக்கிக் காய்ச்சலைத் தவிர்க்க, த்ரிஷாவை வாழ்த்தும் போஸ்டர், வீட்டோடு வேலைக்காரி கடிகள் ஆகியவற்றைத் தவிர்க்குமாறு விஞ்ஞானி வீண் வலையர்தெரிவித்தார்.//

********

VALAI SINGAM ANNAN ERODE NAGARAJ VAAZHGA ...........

Erode Nagaraj... said...

aahaa... greatly pulled don't-do to do something...

வெண்பூ said...

இது சூப்பரு... அக்மார்க் இட்லிவடை நக்கல்..

Anonymous said...

இதுல சம்பந்தபட்டவங்க அவங்க ப்ளாக் எழுதும்போது தெரியும்... யாரெல்லாம் affected partynnu...

Butterfly effect ...

ennaaaa ulkuthuuuu....ennaaa villathanam...

Erode Nagaraj... said...

anony, it is very clear even in your post...

லவ்டேல் மேடி said...

அய்யய்யோ.....!!!!! என்னது......??? இட்லி வடைக்கு பன்றி காய்சலா...????

Cinema Virumbi said...

இட்லிவடை அவர்களே,

இந்தக் கொக்கிக் காய்ச்சல் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. "பன்றிக் காய்ச்சலும் காட்டாமணக்கு இலையும்!" என்ற பெயரில் சமீபத்தில் நான் இட்ட பதிவு கீழே:

(பன்றிக் காய்ச்சலும் துளசி இலையும் என்ற நேர்மையான பதிவிட்டவர் மன்னிக்கவும்!)

பன்றிக் காய்ச்சலைத் தவிர்க்கக் காட்டாமணக்கு இலை மிகச் சிறந்தது என்று எங்கோ படித்தேன்! நாலு காட்டாமணக்கு இலையை நெய்யில் நல்ல பொன்னிறமாக வதக்கி தினம் மூன்று வேளை சாப்பாட்டுக்கு முன்பு கொடுத்து வந்தால் ஜன்மத்துக்குக் காய்ச்சலே வராதாம்................................ பன்றிக்கு!


சினிமா விரும்பி

R.Gopi said...

//Erode Nagaraj... said...
anony, it is very clear even in your post...//

*******

Kareettaa sonnabaaa.....

கலைக்கோவன் said...

யாருக்கு இந்த கொக்கி..?
ஏன் இப்படி கொக்கி போடறீங்க..,
வெவரம் புரியலயே..,

Anonymous said...

அது சரி.. ப்ளாக் காய்ச்சல், லொள்ளுக் காய்ச்சல்,ஜோல்னா பை காய்ச்சல்,இலக்கியப் பிறாண்டல் காய்ச்சல், அறிவு ஜீவி காய்ச்சல் (இதற்கு கமல் வைரஸ் ஒரு காரணம் என்கிறார்கள்!)ஆகியவை மெதுவாக பரவுவது பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லையே!--ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

"நம்முடைய தோழர்களிடத்திலே ஆங்காங்கு ஏற்பட்ட சிறுசிறு பிரச்னை களும் கூட நாம் எதிர்பார்த்த இடங்களில் வெற்றி பெறாமல் போனதற்கு காரணம். ஒரு சில இடங்களில் நம்முடைய தோழர்கள் பொறுப்பிலே உள்ளவர்கள் இந்த தேர்தலில் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை நான் தெரிந்து கொண்டேன். அவர்களுக்கெல்லாம் தக்க நேரத்தில் என்ன தண்டனை அளிப்பது என்று எனக்கு தெரியும்.
ஏதோ கருணாநிதி பேசிவிட்டு போய் விடுவார், என்னத்தை கிழிக்கப் போகிறார் என்று எண்ணி இருப்பவர்களுக்கு சொல்கிறேன். இந்த தேர்தலில் தவறு செய்தவர்கள் யார் யார்? சூது செய்தவர்கள் யார் யார்? அலட்சியமாக இருந்தவர்கள் யார் யார்? இவர்கள் எல்லாம் அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் தொடர்வார்களேயானால் சட்டமன்றத் தேர்தலில் நாம் வெற்றியை காண முடியாது. ஆகவேதான் வெற்றிக்கான பிரகாசமான விளக்குகளை இப்போதே எரியவிட நான் தயாராக இருக்கிறேன்.
உடனடியாக அந்த விளக்குகளை எரிய விடமாட்டேன். ஏனென்றால் அவரா அப்படி செய்தார்? என்ற செய்திகள் என் நெஞ்சை எரிய விட்டுக் கொண்டிருக்கிறது. என்ன செய்தாலும் சரி கட்சிக்கு துரோகம் செய்தால் அவன் கட்சிக்காரனே அல்ல. அவர்கள் யார் என்பதை புரிய வைத்து இந்த தேர்தல் முடிந்துவிட்டது. அடுத்த தேர்தலுக்கு முன்பு கழகத்திலே களையெடுக்கப்பட்டுதான் அடுத்த சட்டமன்ற தேர்தலை சந்திப்போம்."

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

R.Gopi said...

//வெற்றிக்கான பிரகாசமான விளக்குகளை இப்போதே எரியவிட நான் தயாராக இருக்கிறேன்.
உடனடியாக அந்த விளக்குகளை எரிய விடமாட்டேன். ஏனென்றால் அவரா அப்படி செய்தார்? என்ற செய்திகள் என் நெஞ்சை எரிய விட்டுக் கொண்டிருக்கிறது.//

***********

Idhu meyyaalumey 'THALA' ezhudhinadhaa??? Avar TOUCH irukku.... irundhaalum.... indha PANDRI KAAICHAL .......!!!???

வம்பு விஜய் said...

அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

நாகு (Nagu) said...

ஐயா இ.வ். உங்க பதிவுப் பக்கத்துல வலது பக்கம் அனுமார் வால் போல நெடுக்க போயிக்கிட்டே இருக்கு...

ஊசிப்போனவற்றை அனைத்திற்கும் மேலே கொண்டுவந்தால் படிக்க வசதியாக இருக்கும்.