பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 30, 2009

பேராசிரியர் மா.ரா.அரசு

அன்புள்ள இ.வ,
பேராசிரியர் மா.ரா.அரசு பற்றி இ.வ வாசகர்களும் அறிந்து கொள்ளும் வகையில், இந்தச் சிறப்பிதழ் பற்றிய பதிவைத் தங்கள் வலைப்பூவில் போடுவீர்களா?
அன்புடன்,
லலிதா ராம் (varalaaru.com)

பதிவு கீழே...


பேராசிரியர் மா.ரா.அரசு, புகழ் பெற்ற வரலாற்று அறிஞரும் தமிழ்ப் புலவருமான டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் மகன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணி புரிந்த இவர், தமிழ் இதழியல் வரலாற்றை முறையாகத் தொகுத்து வெளியிடல், இதழியல் பற்றிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்துதல் இவற்றை நோக்கங்களாகக் கொண்டு 1983-ல் டாக்டர் மா.இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையத்தை நிறுவினார். 1986-87-ல் திங்கள் ஒரு பொழிவென ஒரு வருட காலம் தமிழ் இதழியல் பற்றி ஆய்வுத் தொடரொன்றை இந்த மையம் நடத்தியது. தமிழ்நாட்டில் முதல் முறையாக இதழியல் பற்றி ஓராண்டு தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுத் தொடர் இதுவேயாகும்.


உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இந்திய விடுதலைக்கு முந்தைய தமிழ் இதழ்கள், திராவிட இயக்க இதழ்கள், தமிழ் ஆய்வு இதழ்கள், பொதுவுடைமை இயக்க இதழ்கள், மகளிர் இதழ்கள், தமிழ் இலக்கிய இதழ்கள், தமிழ் இதழியல் என்னும் தலைப்புகளில் பதினொரு கருத்தரங்குகள் செம்மையாக நடத்தியதிலும், அக் கருத்தரங்கத் தொகுதிகளை எழிலுற அச்சிட்டதிலும் பெரும் பங்கு மா.ரா.அரசுவையே சேரும். 'இதழாளர் இராஜாஜி' எனும் ஆய்வு நூலையும் 'இளமையின் குரல்'. 'கொறிப்பு' எனும் மாணவர்க்கான இதழ்களையும் இவர் நிறுவிய மையம் மூலம் வெளியிட்டுள்ளார். வ.உ.சி-யைப் பற்றிய ஓரு தரமான ஆய்வின் மூலம் முனைவர் பட்டத்தைப் பெற்ற இவர், பேராசிரியர் பணி மூலம் உருவாக்கியுள்ள தமிழறிஞர்கள் ஏராளம்.

சிறந்த எழுத்தாளர், ஆசிரியர் மட்டுமின்றி நயம்பட பேசுவதிலும் வல்லவர். ஆசிரியர் பணியிலிருந்து ஒய்வு பெரும் வேளை, அவர் சாதனைகாளைத் திரும்பிப் பார்க்கத் தோதான ஒன்று. அதனால் http://www.varalaaru.com சார்பில் இவருக்காக சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளோம். இவருடைய நேர்காணலை இங்கு காணலாம்:

8 Comments:

மானஸ்தன் said...

முனைவர் மா.ரா. பற்றி இப்போதுதான் அறிந்தேன்.

"நல்லாசிரியருக்கு" என்றுமே ஓய்வில்லை!!!தொடரட்டும் அவர் பணி!!

Ram said...

பதிவிற்கு நன்றிகள் பல.

லலிதா ராம்.

பா. ரெங்கதுரை said...

பேராசிரியர் மா.ரா.அரசு அவர்கள் முதலமைச்சர் கருணாநிதியின் ஜாதியைச் சேர்ந்தவர். அப்படி இருந்தும் பேராசிரியர் நாகநாதனைப் போலவோ, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. ராஜேந்திரனைப் போலவோ தம் ஜாதியை வைத்துப் பயனேதும் அடைய அவர் முற்பட்டதில்லை எனத் தெரிகிறது. முயன்றிருந்தால் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு தமிழகப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆகியிருக்கலாம். இதற்காகவே அவரைப் பாராட்டலாம்.

ந.லோகநாதன் said...

தமிழ் மொழிக்கு புகழ் சேர்க்கும் இணைய வழி சிறப்பிதழ்கள் வளர வாழ்த்துக்கள்!!!

R.Gopi said...

//முயன்றிருந்தால் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு தமிழகப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆகியிருக்கலாம். இதற்காகவே அவரைப் பாராட்டலாம்.//

*************

ரெங்கதுரை

நல்ல வேளை.... கலைஞரின் உடன்பிறப்பாக இருந்தும், அவரின் கெட்ட குணங்கள் எதுவ்தும் இல்லாமல் இருப்பதற்காகவே இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

Erode Nagaraj... said...

hats off to M.R.A.

Kameswara Rao said...

இ,வ,

தங்களின் இந்த பதிவால், நல்லதோர் வலை பதிவை (எனக்கு) தந்தற்கு நன்றி. இதழியல் பற்றி திரு மா.ரா. அவர்களின் ஆய்வு வியக்கவைக்கிறது.

காமேஷ்

Ela said...

Good to know about a 'working' proffessor!

@Mr.Rengadurai.... why is it always become so important to analyze first about the caste of a person.. eventhough the thing that was discussed is his literary credentials... i have seen it many times... the tamizh people are so occupied with identifying the caste orintentation of a person! (which is disgusting IMHO!)