பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 22, 2009

சுவர் விளம்பரமா - சுவர் இலக்கியமா ?

நோட்டீஸ் ஒட்டாதே, அச்சுப்பதிக்காதே, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' - செய்தி - கட்டுரை - செய்தி

செய்தி
சென்னையில் அண்ணாசாலை மற்றும் காமராஜர் ஆகிய இரு சாலைகளிலும் ஜூன் 10ம் தேதி முதல், சுவர் விளம்பரம் எழுதவும், சுவரொட்டிகள் ஒட்டவும் தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

சென்னை மாநகராட்சி பணியாளர்கள் அண்ணாசாலையில் பெரியார் சிலை எதிரில், அண்ணாசாலை - சேமியர்ஸ் சாலை சந்திப்பில், எல்.ஐ.சி. வளாகம், அண்ணா மேம்பாலம், நந்தனம் சிக்னல், தேனாம்பேட்டை சிக்னல், காமராஜர் சாலையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலகம் அருகில், லைட் அவுஸ் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மற்றும் சுவர் எழுத்துக்களையும் அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அண்ணாசாலை பேருந்து நிறுத்தங்களில் அனுமதி பெறாத விளம்பரங்கள் அகற்றப்படும். நடைபாதைகளில் விளம்பரங்கள் வைத்திருந்தால் அகற்றப்படும். மீறி செயல்படுபவர் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும்.கட்டுரை
சென்னை நகரின் அண்ணா சாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் சுவரொட்டிகள், சுவர் எழுத்துகள் தடை செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மெல்ல மெல்ல நகர் முழுமைக்கும் இந்தத் தடையை விரிவுபடுத்தும் நோக்கம் அரசுக்கு உள்ளது. மக்களுடைய கருத்துச் சுதந்திரத்தில் தலையிடும் இந்த அராஜகச் செயலை சிவில் உரிமை சங்கங்கள் உட்பட எல்லா ஜனநாயக அமைப்புகளும் எதிர்க்க வேண்டும்.

சுவரொட்டி என்பது நீண்ட மரபு உடைய சுவர் இலக்கியம். இன்றைக்கு இதை தடை செய்யும் ஆட்சியை நடத்தும் தி.மு.க கட்சியின் வளர்ச்சிக்குக் கூட சுவரொட்டிகளும் சுவர் எழுத்துகளும் பெரும் பங்கு வகித்திருக்கின்றன. கும்பி எரியுது குடல் கருகுது குளுகுளு ஊட்டியில் சட்டசபைக் கூட்டம் எதற்கு, அரியலூர் அழகேசா, நீ ஆண்டது போதாதா, மக்கள் மாண்டது போதாதா, கூலி உயர்வு கெட்ட அத்தான் குண்டடி பட்டு செத்தான் போன்ற மக்களை உசுப்பிய அரசியல் வாசகங்கள் பலப்பல சுவரொட்டிகள் , சுவர் எழுத்துகள் மூலமாகத்தான் மக்களிடம் ஒரு காலத்தில் பரப்பப்பட்டன.

இன்று சிறு தொழில் செய்பவர்கள், சிறு இலக்கிய, கலாசார, அரசியல் அமைப்புகள், எல்லாருமே விளம்பரத்துக்கும் கருத்துப் பரப்பலுக்கும் சுவரொட்டிகளையும் சுவர் எழுத்துகளையும் நம்பியிருப்பவர்களாவர். சுவரொட்டி தடை என்பது இவர்களை முடக்கும் வேலையாகும்.

அமைப்புகள் மட்டுமல்ல தனி நபர்கள் கூட சுவரொட்டிகளைப் பயன்படுத்த முடியும் என்பதுதான் அந்த சாதனத்தின் சிறப்பு. என் நண்பரின் தாயார் இறந்துவிட்டார் என்றால், அவர் எங்கள் குடியிருப்புப் பகுதியில் பலராலும் நேசிக்கப்பட்ட்வர் என்கிறபோது நண்பர்கள் சேர்ந்து அவருக்கான கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியை ஒட்டுவது அஞ்சலியின் ஒரு பகுதியாகிறது. இதிலெல்லாம் அரசு தலையிடுவது என்பது சுத்தமான அத்துமீறல்.

பொருளாதார வசதி குறைந்தவர்கள் இந்த பெரு நகரத்துக்குள் இருக்கத் தேவையில்லை அவர்கள் வெளியேறட்டும் என்ற அரசின் கண்ணோட்டத்தின் தொடர்ச்சியாகவே சுவரொட்டி தடையும் எனக்குப் படுகிறது. ஆற்றங்கரை குடிசை வாசிகளை ஊருக்கு வெளியே அனுபுவது போல, அடித்தட்டு மக்களின் கருத்துப் பிரச்சார சாதனங்களையும் நகருக்குள் தடை செய்கிறது அரசு.

பாதசாரிகளுக்கு ஒழுங்கான நடைபாதைகளே இல்லாத நகரம் சென்னை. ஆனால் பணக்காரர்கள் தொப்பையைக் குறைப்பதற்கு வாக்கிங் போவதற்கு கடற்கரையிலும் ஒவ்வொரு பூங்காவிலும் நடைபாதைகளை இழைத்து இழைத்துக் கட்டிக் கொண்டே இருக்கிறது.

சுவரொட்டிகளுக்கு தடை விதிப்பது நகரத்தை அழகுபடுத்துவதற்காக என்று ஒரு காரணம் சொல்லப்படுகிறது. நகரத்துக்கு எது அழகு என்பது முதலில் வரையறுக்கப்படவேண்டும். அழகான புராதனக் கட்டடங்களை இடிப்பது, பெட்டி பெட்டியாக இரும்பும் கண்ணாடியுமாக நகரின் வெப்ப தட்ப நிலைக்குப் பொருந்தாத புது கட்டடங்கள் கட்டுவது, சீன, கொரிய, தாய்லாந்து, ஜப்பானிய வாஸ்துக்களின் பெயரால் விசித்திரமான வண்ணங்களை வீட்டுக்குப் பூசுவது என்று எல்லா நடைமுறைகளிலும் அழகின் பெயரால் அரசு தலையிடுமா என்று அறிய விரும்புகிறேன்.

குண்டும் குழியுமான சாலைகளும், குறுக்கும் நெடுக்குமாக கணடபடி கட்டப்பட்டிருக்கும் கேபிள் வயர்களும் ஆங்காங்கே குப்பைமேடுகளும் நிரம்பியிருக்கும் சென்னையின் அழகை எப்படி சுவரொட்டிகள் மட்டும் கெடுத்துவிடும் என்று புரியவில்லை.

விளம்பரம் செய்வதை ஒரேயடியாகத் தடுப்பது அரசின் நோக்கமா என்றால் நிச்சயம் இல்லை. கருணாநிதியின் அரசு விளம்பர வெறி பிடித்த அரசு. வேறு எந்த மாநிலத்திலும், வேறு எந்த நாட்டிலும், இந்த அளவுக்கு ஆட்சியில் இருக்கும் அரசியல் தலைவர் முகத்தை எங்கு திரும்பினாலும் பார்த்தே தீரவேண்டிய நிலைமை மக்களுக்கு இருக்காது.

அறுபதுகள் வரை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எத்தனையோ சாலைகள் போட்டு அணைகள் கட்டி தொழிற்சாலைகள் திறந்து வளர்ச்சி வேலைகள் செய்தபோதும் அவற்றுக்கு பெரும் திறப்புவிழாக்கள் நடத்தியதில்லை. நடத்திய விழாககளிலும் அரசின் இலச்சினை மட்டும்தான் இருக்கும். காமராஜர், பக்தவத்சலம் போன்ற முதல்வர்களின் முகங்கள் மண்டை மண்டையாக அச்சிடப்பட்டதில்லை. இதையெல்லாம் தொடங்கிவைத்தவர் கருணாநிதிதான். இந்த வாரம் ஆயிரம் மாணவர்களுக்கு அரசின் சார்பில் இலவச மடிக்கணினி வழங்கப்படும்போது, அந்தக் கணினி திரைகளிலும் கருணாநிதி முகம் தெரிகிறமாதிரி ஏற்பாடு. .

கருணாநிதியின் ஆட்சியும் சரி, பெரும் தொழிலதிபர்களும் சரி தங்களையும் தங்கள் சரக்குகளையும் விளம்பரப்படுத்திக் கொள்ள பெரும் செலவு செய்து தொலைக்காட்சி போன்ற சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு மேஜிக் ஷோவுக்கு 500 ரூபாய் சன்மானம் வாங்குபவர், ஒரு தண்ணீர் தொட்டியைக் கழுவ 75 ரூபாய் பெறுகிறவர் போன்ற சாதாரண தொழில் முனைவோர் எப்படி விளம்பரம் செய்வார்கள் ? சுவர் எழுத்துகள் மூலம் தான் செய்ய முடியும்.

அரசு செய்ய வேண்டியதெல்லாம் ஒவ்வொரு தெருவிலும் நூறடிக்கு ஒரு விளம்பரப் பலகைச் சுவர் ஒதுக்கி இங்கே மட்டும் சுவரொட்டிகளையும் சுவர் எழுத்துகளையும் பதியுங்கள் என்று கேட்டுக் கொள்வதுதான். இதைச் செய்ய அரசுக்குப் பெரும் செலவு ஆகாது.
( நன்றி: குமுதம் )


செய்தி
ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது அம்சா மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி கதிரவன் ஆகியோர் அண்ணாசாலை தர்கா எதிரில் 2 டிஜிட்டல் பேனர்களை வைத்திருந்தனர். அன்று காலை 11-45 மணியளவில் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் அண்ணாசாலை தர்காவில் நடந்த தொழுகையில் பங்கேற்பதற்காக வந்தனர். தொழுகை நடந்து கொண்டிருந்த போது மாநகராட்சி ஊழியர்கள் சிலர் காரில் வந்தனர். அவர்கள் டிஜிட்டல் பேனர் கட்டப்பட்டிருந்த கயிறுகளை வெட்டி அப்புறப்படுத்த முயன்றனர்.

கயிறு வெட்டப்பட்டதும் பேனர்கள் கீழே விழுந்தன. இதை கவனித்த காங்கிரசார் மாநகராட்சி ஊழியர்களை விரட்டியடித்தனர். ஒரு ஊழியர் கட்சி தொண்டர்களிடம் சிக்கினார். அவருக்கு தர்ம அடி விழுந்தது.

அண்ணாசாலையில் விளம்பரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தியதாக தெரிகிறது. இதற்கிடையில் காங்கிரஸ் தொண்டர்கள் அண்ணாசாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்கு வரத்து ஸ்தம் பித்தது.

அப்போது தர்காவில் தொழுகை நிகழ்ச்சியை முடித்து விட்டு தங்கபாலு வெளியே வந்தார். பேனர் அகற்றப்பட்டதை கேள்விப்பட்டு ஆவேசம் அடைந்தார். அவர் உடனடியாக போலீஸ் அதிகாரிகளை அழைத்து மீண்டும் பேனர்களை கட்டித் தராவிட்டால் மறியல் தொடரும் என்று கண்டிப்புடன் கூறினார்.

உடனே, பேனர்களை மீண்டும் அதே இடத்தில் கட்டிக்கொடுத்தனர். இதை தொடர்ந்து காங்கிரசார் மறியலை கைவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து மேயர் மா.சுப்பிரமணியனிடம் கேட்ட போது அவர் சொன்ன பதில்:

அண்ணாசாலை மற்றும் கடற்கரை சாலைகளில் சென்னை நகரை அழகு படுத்தும் விதமாக சுவர் எழுத்துக்கள் மற்றும் சுவரொட்டிகளுக்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. ஆனால் டிஜிட்டல் பேனர்களை பொறுத்தவரை நிகழ்ச்சிகள் நடப்பதற்கு 3 நாட்கள் முன்பாகவும், நிகழ்ச்சி முடிந்தபின் 2 நாட்களும் வைத்து கொள்ளலாம் என்று ஏற்கனவே முதல்- அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். எனவே அனுமதி பெற்ற பேனர்கள் ஒரு போதும் அகற்றப்பட மாட்டாது. சென்னையை எழில்மிகு சென்னையாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்”டிஜிட்டல் பேனர் வைத்தால் சென்னை நகரம் அழகாக இருக்கிறது என்ற காரணத்தால் கீழே இந்த பேனரை வைக்க சிபாரிசு செய்கிறேன்

( மேலே உள்ள படம் இட்லிவடை ரசிகர் ராஜா, போன வருடம் எனக்கு அனுப்பியது, அவருக்கு என் நன்றி )

16 Comments:

M Arunachalam said...

//குண்டும் குழியுமான சாலைகளும், குறுக்கும் நெடுக்குமாக கணடபடி கட்டப்பட்டிருக்கும் கேபிள் வயர்களும் ஆங்காங்கே குப்பைமேடுகளும் நிரம்பியிருக்கும் சென்னையின் அழகை எப்படி சுவரொட்டிகள் மட்டும் கெடுத்துவிடும் என்று புரியவில்லை.//

Its a typical communist-like argument. Instead of pressuring the Govt. to also pull-up its act on clean maintenance of roads, etc. the author is trying to justify the defacement of city walls thru posters.

Commies, thru the policy of equality, instead of trying to uplift the economically down-trodden, always target the economically well-to-do people & try to make them also poor and thus "achieve(?)" their objective. This author also tries to justify the defacing of city walls on similar grounds.

No one should have any objection in keeping the city clean. We should surely protest when there is partiality shown like in the case of Sonia Cong. goons' digital banners being exempted from this cleanliness drive.

வண்ணத்துபூச்சியார் said...

பேனர் அழகா இருக்கு.

Sitrodai said...

//குண்டும் குழியுமான சாலைகளும், குறுக்கும் நெடுக்குமாக கணடபடி கட்டப்பட்டிருக்கும் கேபிள் வயர்களும் ஆங்காங்கே குப்பைமேடுகளும் நிரம்பியிருக்கும் சென்னையின் அழகை எப்படி சுவரொட்டிகள் மட்டும் கெடுத்துவிடும் என்று புரியவில்லை.//

//Its a typical communist-like argument.//

Completely agreed. If the Corporation tries to remove the cable wires, then they will say 'when there are a lot of postures in the city how cables will spoil the beauty'. They ask to remove the postures first.

SUBBU said...

நானும் சிபாரிசு செய்கிறேன்
நானும் சிபாரிசு செய்கிறேன்
நானும் சிபாரிசு செய்கிறேன்

:))))))))))))))))))

KGG9840937420 said...

A I A T I V R M - All India Athi Theevira Idly Vadai Rasigar Mandra - சார்பில்,
இ வ - பானருக்கு
5 அண்டாக்கள் (வெங்காய) சாம்பார் அபிசேகம் செய்யப பட
உள்ளது.
ரசிகர் மன்றத்தினர் தவறாது கலந்து கொள்ளவும்.
கௌதமன்.

R.Gopi said...

//A I A T I V R M - All India Athi Theevira Idly Vadai Rasigar Mandra - சார்பில்,
இ வ - பானருக்கு
5 அண்டாக்கள் (வெங்காய) சாம்பார் அபிசேகம் செய்யப பட
உள்ளது.
ரசிகர் மன்றத்தினர் தவறாது கலந்து கொள்ளவும்.
கௌதமன்.//

***********

கூடவே தொட்டு கொள்ள புதினா சட்னி, தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, இட்லி மிளகாய் பொடி மற்றும் கார சட்னி, போன்றவற்றை (இருந்தா அள்ளிக்கொடு) கொடுக்க ஆசை இருந்தாலும், குறிப்பிட்டு இருக்கும் அனைத்து பொருட்களின் விலையேற்றம் காரணமாக ஒரு, ஒரே ஒரு கிலோ அஸ்கா சர்க்கரை மட்டும் நான் ஸ்பான்சர் செய்கிறேன் என்பதை எங்கள் சங்கத்தின் சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்......

பா. ரெங்கதுரை said...

குமுதம் கட்டுரை ஞாநியின் வழக்கமான் உளறல். சென்னை நகரில் மட்டும் இந்து இயக்கங்கள் சுவர் விளம்பரங்கள் செய்வதில் தீவிரமாகச் செயல்பட்டால், இவர் உடனே அலறி அடித்துக்கொண்டு ”சுவர் விளம்பரங்கள் ஜனநாயகத்துக்கு எதிரானவை, இவர்களுக்கு தைரியமிருந்தால் டி.வி. சேனல் ஆரம்பித்துப் பிரசாரம் செய்துகொள்ள வேண்டியதுதானே” என்று சற்றும் கூச்சமின்றி எழுதுவார்.

Anonymous said...

எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்கள் முற்றிலும் நம்பகத்தன்மை வாய்ந்தது என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால் சாமி கூறியிருக்கிறார்.

சென்னையில் நடந்த விழா ஒன்றில் பேசிய அவர், மற்ற நாடுகளில் உபயோகப்படுத்தும் ஓட்டு இயந்திரங்களைப்போலில்லாமல், இந்தியாவில் உபயோகப்படுத்தப்படும் ஓட்டு இயந்திரங்கள் ஒருவழிப்பாதை தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பதோடு, அதில் உள்ள மென்பொருள் சிப், எந்தவித மாறுதல்களையும் செய்ய இயலாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நடந்து முடிந்த தேர்தலில் 0.5 சதவீத ஓட்டு இயந்திரங்கள் மட்டுமே, தேர்தலின் போது கோளாறுகள் ஏற்பட்டதாக அவர் கூறினார்.

Anonymous said...

kakkan pirantha nala kondada oru (?)um varala, inga poster otta sanda poda mattum varuvannga, letter pad CONgRESS....

மாப்பீ said...

Alternatives for Posters are available, give your ads in Dinakaran, Kungumam, Murasoli, Sun TV, Kalaignar TV and many others.

ஆக மேயரு இப்ப என்ன செய்யறாறு?

Anonymous said...

ஆரம்புச்சுட்டார்யா ரெங்கதுரை ஆரமபுச்சுட்டார்யா

லவ்டேல் மேடி said...

அல்லகைங்க சல்ல தாங்க முடியல சாமி ....!!!! இவுனுங்களுக்கு யாருப்பா... தமிழ் நாட்டுல ரீ-என்ட்ரி குடுத்தது....!!!


நாராயணா............ தாங்க முடியலடா.....!!!!!!----------------------------------------------------------------


படத்துல இட்லி , வடிய சாப்பிடறது.. தயாநிதிமாறன் மாதிரி தெரியுது.....!!!!!

Baski said...

//படத்துல இட்லி , வடிய சாப்பிடறது.. தயாநிதிமாறன் மாதிரி தெரியுது.....!!!!!//

நான் ரொம்ப நாளா நம்ம அஞ்சா நெஞ்சன் என்று நினைச்சிகிட்டு இருந்தேன்.

NO POSTERS PLEASE - RESERVE PLACES AND COLLECT MONEY FOR THEM.

SSI / NIIT used to spoil public walls.

Anonymous said...

இளைஞர்களின் விடிவெள்ளி, மக்களின் பேசிக் கான்செப்ட் - மைண்ட்செட்டை மாற்ற வந்த மகான், ஐந்து ஆண்டுகளில் ஐநூறு கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்த நினைத்தவர், நானூறு நாட்களை ஏழைக்குழந்தைகளுக்காக செலவிட்ட வள்ளல், ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்களை தொழிலதிபர் ஆக்கியவர், இதுவரை தேர்தலில் போட்டியிட்டவர்களிலேயே இளைஞர் - படித்தவர், ஏழ்மையிலிருந்து அரசியலுக்கு வந்த ஒரே ஒருவர், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விழிப்புணர்வும், ஊக்கமும், ஆதரவும் தந்தவர், விளம்பரம் மீது ஆர்வமில்லா வெள்ளந்தி மனிதர், ஒரிஜினல் யூத் ஐகான், யூத் பூத் அமைத்து இளைஞர்களை முன்னேற்ற வந்தவர், தென்சென்னையை இந்தியாவின் சிறந்த தொகுதியாக்க களமிறங்கிய லட்சிய நாயகனை மே 16-ஆம் தேதியிலிருந்து காணவில்லை. 2011 சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி அல்லது சோழிங்கநல்லூர் தொகுதியில் அவரை நிறுத்தி கும்மியடிக்க அவசரமாக தேவைப்படுகிறார். கண்டுபிடித்து தருபவர்களுக்கு நான்கு இட்லியும், கெட்டி சட்னியும் பார்சல் செய்து தரப்படும்.

KGG9840937420 said...

Anonymous said...
இளைஞர்களின் விடிவெள்ளி, மக்களின் பேசிக் கான்செப்ட் - மைண்ட்செட்டை மாற்ற வந்த மகான், ஐந்து ஆண்டுகளில் ஐநூறு கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்த நினைத்தவர், நானூறு நாட்களை ஏழைக்குழந்தைகளுக்காக செலவிட்ட வள்ளல், ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்களை தொழிலதிபர் ஆக்கியவர், இதுவரை தேர்தலில் போட்டியிட்டவர்களிலேயே இளைஞர் - படித்தவர், ஏழ்மையிலிருந்து அரசியலுக்கு வந்த ஒரே ஒருவர், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விழிப்புணர்வும், ஊக்கமும், ஆதரவும் தந்தவர், விளம்பரம் மீது ஆர்வமில்லா வெள்ளந்தி மனிதர், ஒரிஜினல் யூத் ஐகான், யூத் பூத் அமைத்து இளைஞர்களை முன்னேற்ற வந்தவர், தென்சென்னையை இந்தியாவின் சிறந்த தொகுதியாக்க களமிறங்கிய லட்சிய நாயகனை மே 16-ஆம் தேதியிலிருந்து காணவில்லை. 2011 சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி அல்லது சோழிங்கநல்லூர் தொகுதியில் அவரை நிறுத்தி கும்மியடிக்க அவசரமாக தேவைப்படுகிறார். ......
I think that was an attempt to split the votes in the South Chennai constituency. Any data available on the votes he got?
Just like BJP's internet image, an image was built for that man amongst the netizens. To be an MP or MLA - such paruppus can not even dream!

Erode Nagaraj... said...

விரவிக் கிடந்த, பேனர்களை அகற்றியதில், நகரம் சற்று காற்றோட்டமானது உண்மை. சுவர் விளம்பரங்களை தேர்தல் முடிந்தபின் தடை செய்வது காமடி தான். மேஜிக் ஷோ - தொடர்பு கொள்ளவும் அன்ற கரிக்கோட்டிலக்கியங்கள் மாம்பலம் டைம்ஸ், கோடம்பாக்கம் டைம்ஸ் போன்ற சிறு பத்திரிக்கைகளில் பிழைத்துக்கொள்ளும்.