பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 25, 2009

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

எல்லோரும் சென்னையை வெயிலில் சுற்றி பார்க்க வசதியாக பள்ளி விடுமுறையின் போது எழுத நினைத்தது. இப்போது தான் நினைவு வந்தது. 'சொந்த சரக்கு' இல்லையா என்று கேட்பவர்களுக்கு இந்த பதிவு சமர்பணம். :-)

சென்னையில் LIC மற்றும் செண்டரல் ஸ்டேஷன் எதற்கு என்று ரொம்ப நாள் யோசித்ததுண்டு. எனக்கு தெரிந்து இவை இல்லை என்றால் தமிழ் சினிமாவில் யாருமே (எடமலைப்பட்டியிலிருந்து எக்மோருக்கு வருபவர்கள்கூட) சென்னைக்கு வந்தார்கள் என்று காண்பிக்க முடியாது. அதே போல் கூவத்துக்கு மேல் வளைவு வளைவான பாலம் காண்பித்தால் நிச்சயம் அங்கே யாரோ தற்கொலை


அல்லது கொலை செய்யப்பட்டு அடுத்த சீனில் பாதிக்கபட்டவர் பிண்டத்தை
வேறு ஏதாவது ஊரில் கரைக்க ஆரம்பிப்பார் என்று நம்பலாம்.

கொஞ்ச நாள் வரை காந்தி சிலை, ஏதாவது கடத்தலுக்கு உபயோகமாக இருந்தது. ஆனால் தற்போது காந்தி சிலை அவ்வளவாக தமிழ் சினிமாவில் காண்பிக்கப்படுவதில்லை. காந்தி தப்பித்துவிட்டார்.

மெரீனா கடற்கரையில் அருகம்புல் ஜூஸ் குடிக்க காலையில் போகலாம். மக்கள்தொகையில் கழிவறை இல்லாதோர் எண்ணிக்கையும் இங்கே தெரியும். காணும் பொங்கல் அன்று குப்பை போட நிறைய பேர் இங்கேதான் வருவார்கள்.

சிலமாதங்களுக்கு முன்பு கபாலீஸ்வரர் கோயில் உண்டியல் திருடு போனதால் கொஞ்சம் பிரபலமாக இருந்தது பிறகு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. வருடத்துக்கு ஒரு முறை மயிலை திருவிழாப் பதிவில் பத்ரி பஞ்சுமிட்டாய் சாப்பிடும்போது நமக்கும் நினைவுக்கு வரும். ஆனால் மைலாப்பூர் போனால் நிச்சயம் கோயில் பக்கத்தில் இருக்கும் கற்பகாம்பாள் மெஸ், கிரி டிரேடர்ஸ். சுக்ரா ஜுவல்லர்ஸை விட்டுவிட்டால் தாய்க்குலம் மன்னிக்காது.

சில சமயம் சினிமாவில் கோயிலைக் காண்பித்தால் எங்கே ஹிந்து படம் என்று சொல்லிவிடுவார்களோ என்று பயந்து சாந்தோம் சர்ச், ஆயிரம் விளக்கு மசூதியைக் காண்பிப்பார்கள். மற்றபடி ஆயிரம் விளக்கு மசூதிக்கு முன்பு எப்போதும் ஏதாவது ஒரு பிறந்த நாள் டிஜிட்டல் பேனர் இருக்கும். கதாநாயகன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கும் போது கோயில், சர்ச், மசூதி என்று காண்பிக்க ரொம்ப நாளாக இது பயன்படுகிறது.

சென்னையில் இருப்பவர்களே எக்மோர் பக்கத்தில் இருக்கும் அருங்காட்சியகம் சென்றிருப்பார்களா என்பது சந்தேகம். சில வருடங்களுக்கு முன் சைக்கிளோ லாரியோ அடித்தவுடன் கண்ணகி ஒரு விசிட் அடித்தாள் என்று தெரியும்.

ஜார்ஜ் கோட்டை என்பது தற்போது சட்டமன்றக் கட்டிடம். அடிக்கடி எதிர்க்கட்சிகள் காப்பி சாப்பிட வெளிநடப்பு செய்வதை தொலைக்காட்சி செய்திகளில் பார்க்கலாம்.

திமுக கவியரங்கம், கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தத் வேண்டும் என்றால் அதற்கு வள்ளுவர் கோட்டம்தான் சிறந்த இடம். உள்ளே கவியரங்கம் என்றால் வெளியே சில்லறை உண்ணாவிரதம் போன்ற நிகழ்ச்சிகளுக்குப் பேர்போன இடம்.

விளையாட்டைத் தவிர மற்ற எல்லா ஆட்டமும் நடக்கும் இடம் நேரு ஸ்டேடியம். இதை நேரு உள்விளையாட்டு அரங்கம் என்றும் சொல்லுவார்கள். ரஜினி விழா( அதாவது ரஜினி கலந்து கொள்ளும் விழா என்று படிக்கவும், ரஜினி ஏற்பாடு செய்த விழா என்றால் அதற்கு வாய்ப்பில்லை. தான் சம்பந்தப்பட்ட விழாக்களை நேரு ஸ்டேடியத்தில் வைத்துக்கொள்ள ரஜினி விரும்புவதில்லை. காரணத்தை அவரிடமே நீங்கள் கேட்கலாம்). கமல் பற்றி தெரியவில்லை ( கமல் ராம்கி மாதிரி யாராவது இருக்கீங்களா ? )

), அந்நியன், திரைப்பட பாடல் ரிலீஸ், மானாட மயிலாட ஃபைனல்ஸ் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த மிகவும் சௌகரியமான இடம். கடைசியாக என்ன விளையாட்டு நடந்தது அல்லது அப்படி எதுவும் நடந்ததா என்றே நினைவில்லை.

அண்ணா, எம்.ஜி.யார் சமாதி அல்லது நினைவிடம். வருடத்துக்கு இரண்டு முறை திராவிட கட்சிகளுக்கு நினைவு வரும் அப்போது க்ருப்பாக வந்து மலர்தூவி வணங்குவார்கள். அல்லது வயிறு சரியில்லை என்றால் 2 மணி நேர உண்ணாவிரதத்துக்கு இங்கே பந்தல் போட்டு உட்காருவார்கள். நல்ல காற்றோட்டமான இடம்.

கதாநாயகன் வில்லனைத் துரத்த வேண்டும் என்றால் முன்பெல்லாம் கலர்ப்பொடிகளைக் கவிழ்ப்பது, காய்கறிகளை கண்டமேனிக்கு இறைப்பது, சட்டிபானைகளை உடைப்பது, சோடா பாட்டில்களை சுக்குநூறாக்குவது, என்று பொரி கடலை மார்கெட் அல்லோலப்படும் இப்பொழுதெல்லாம் ஸ்பென்சர் பிளாசாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். கேட்டால் பெரிய பட்ஜட் படமாம். நிச்சயம் இந்த மாதிரி துரத்தும் சீனில், வில்லன் ஏதாவது கடைக்குள் புகுந்து வெளியே வந்து எஸ்கலேட்டரில் ஓடி கீழே வந்து ஹீரோவிடம் அடி வாங்குவார். கடலை போடவும், விண்டோ ஷாப்பிங்கிற்கும் ஏற்ற நல்ல இடம். இன்னும் சண்டகளுக்கு பாப்புலர் ஆகாத இடம் சிடி செண்டர். இன்னும் கொஞ்ச நாளில் வில்லன் இங்கே அடிவாங்குவார்.

ஹீரோ பெரிய கம்பெனியில் வேலை செய்யபவராக காண்பிக்க டைடல் பார்க் நிச்சயம் இருக்கும். இல்லை ஏழை ஹீரோ மொட்டை மாடியில் அழகான குடிசையில் இருக்க பேக்ரவுண்டில் டைடல் பார்க் இருக்கும்.

சினிமாவில் ஒருவர் வக்கீல் உடையை அணிந்துவிட்டாரென்றால் அவசியம் ஒருமுறையாவது அவர் ராஜாஜி ஹால் படிகளை ஏறி இறங்கியே ஆகவேண்டும். எப்போதும் கோர்ட் சீனுக்கு ராஜாஜி ஹால் படிகள்தான். கோர்ட் சீனுக்குப் பின் வில்லனும் ஹீரோவும் ஆளுக்கு பாதிப்படி இறங்கி அல்லது ஏறித்தான் வீர சபதம் செய்வார்கள்.

நம்ம ஊரு "white house" ரிப்பன் பில்டிங். இந்தியன் தாத்தா படம் வந்த போது பார்த்தது. அதற்கு பிறகு எந்த படத்திலேயும் இதை யூஸ் செய்யவில்லை.

உடல்நலமில்லை என்றாலும் சினிமாவில் மட்டும் எல்லோரும் சூர்யா ஆஸ்பத்திரியில்தான் சேர்க்கிறார்கள். எனக்கு தாங்க முடியாத சந்தேகம், சூர்யா ஆஸ்பத்திரி நிஜ மருத்துவர்கள் எப்படி சரியாக உண்மையான நோயாளி அறைகளை மட்டும் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கிறார்கள் என்பது. அல்லது அப்படி ஒன்றே நடப்பதில்லையா என்று நினைக்கும் அளவுக்கு சினிமாவின் நிரந்தர மருத்துவ செட் சூர்யா ஹாஸ்பிடல்.

அண்ணா மேம்பாலம். இதில் அண்ணா எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினம். மேம்பாலம் கீழே தெருப்பிள்ளையார் சைஸில் சின்னத்தம்பியாக இருக்கிறார் அண்ணா. சினிமாவில் டிராஃபிக் ஜாம் காண்பிக்க வேண்டும் என்றால் பட இயக்குனர்கள் இங்கே ஆஜராகிவிடுவார்கள். இல்லை ஏதாவது கார் கீழே விழ வேண்டும் என்றால் தூரத்திலிருந்து அட்டை கார் கீழே விழும். இப்பொழுதெல்லாம் டிஆர் பாலுவின் கூலிங்கிளாஸ் மேற்பார்வையில் கட்டப்பட்ட கத்திபாரா மேம்பாலம் அந்த இடத்தைப் பிடித்துவருகிறது.

சினிமாவில் எந்த சில்லுண்டி தண்டனையிலிருந்து தலையைச் சீவிய குற்றம்வரை ஹீரோ அல்லது வில்லன், சென்னை மத்திய சிறைச்சாலை வாசலில் இருக்கும் இக்குணூண்டு கதவைத் திறந்துகொண்டு வெளியே வர சோப்ளாங்கியாய் இரண்டு காவர்கள் சல்யூட் அடித்து அனுப்பிவைப்பார்கள். வானத்தையே பார்க்காதது போல் அண்ணாந்து பார்ப்பவரை மாலைபோட்டு ஒரு அம்பாசடர் கார் அள்ளிகொண்டு போகும். இட்லிவடையில் பாடிகார்ட் முனி கடிதங்கள் வந்ததன் பயனால் இனி அந்தச் சிறை பழைய படங்களில் மட்டுமே பார்க்கமுடியும்; புழல் அதனிடத்தைப் பிடித்துக்கொள்கிறது.

அமெரிக்கன் எம்பஸி அருகிலிருக்கும் உட்லண்ட்ஸ் ஹோட்டலை சீல்வைத்திருக்கிறார்கள். வலைப்பதிவர்கள் போண்டா அராஜகத்தை ஒடுக்க அரசே கையகப்படுத்திவிட்டதாக வெளியே தலயணை விற்பவர் சொன்னார். நடேசன் பூங்காவையும் தாண்டி அராஜகம் இப்பொழுதெல்லாம் கிழக்கு மொட்டைமாடியில் தொடர்வதாக காராசேவுத் தகவல். கிழக்குக்கும் இங்கே கூடுபவர்களுக்கும் ஒரு சம்பந்தமுமில்லாவிட்டாலும்கூட 4 பேர் சந்திக்க நினைத்தால், 'மொட்டை மாடிக்கு வந்துவிடு' என்று தகவல் கொடுத்துக்கொள்வதாகக் கேள்வி.

விரைவில் மற்ற ஊர்களை பற்றியும் எழுதலாம் என்று இருக்கிறேன் :-)

31 Comments:

பா. ரெங்கதுரை said...

இலக்கிய சந்திப்பு என்ற பெயரில் சிலர் சென்னையின் கிணற்றடிகளை நாறடிக்கத் தொடங்கியிருக்கிறார்களே. அதைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்.

charmlee said...

வில்லனின் கையாள் முண்டா பனியனுடன் கையில் தாயத்து அணிந்துகொண்டிருப்பதை தவிர பாக்கி எல்லாவற்றயும் எழுதியாயிற்று.

இன்னும் வேறு ஊர்களைப் பற்றியா? நடக்கட்டும், நடக்கட்டும்

Kameswara Rao said...

Hi IV,

Even Binny Mills is for fighting sequences now a days......

Kamesh

R.Gopi said...

//அமெரிக்கன் எம்பஸி அருகிலிருக்கும் உட்லண்ட்ஸ் ஹோட்டலை சீல்வைத்திருக்கிறார்கள். வலைப்பதிவர்கள் போண்டா அராஜகத்தை ஒடுக்க அரசே கையகப்படுத்திவிட்டதாக வெளியே தலயணை விற்பவர் சொன்னார். நடேசன் பூங்காவையும் தாண்டி அராஜகம் இப்பொழுதெல்லாம் கிழக்கு மொட்டைமாடியில் தொடர்வதாக காராசேவுத் தகவல். கிழக்குக்கும் இங்கே கூடுபவர்களுக்கும் ஒரு சம்பந்தமுமில்லாவிட்டாலும்கூட 4 பேர் சந்திக்க நினைத்தால், 'மொட்டை மாடிக்கு வந்துவிடு' என்று தகவல் கொடுத்துக்கொள்வதாகக் கேள்வி.//

*********

Idlyvadai....... This is ULTIMATE

//Kameswara Rao said...
Hi IV,

Even Binny Mills is for fighting sequences now a days......

Kamesh//

Yes...... Adhiradikaran from the movie "Sivaji The Boss" is shot here.......

Erode Nagaraj... said...

"சூர்யா ஆஸ்பத்திரியில்" என்று எழுதாதீர்.... கன்னிகள் மனசு காயப்படும்!

எனக்குத் தெரிந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து, பின்னர் அறுவை சிகிச்சையில் கோளாறுகள் செய்து அவளை மூன்று வருடங்கள் படுக்க வைத்து, வழக்கு நடந்து, பல லட்சங்கள் செலவழித்து தீர்ப்பு மருத்துவமனைக்குச் சாதகமாக வாங்கப்பட்டது.

மருத்துவமனைகள் !

Erode Nagaraj... said...

ஏ.வி.எம். ஸ்டூடியோவில் ஒரு நிரந்தர சென்றல் ஜெயில் உண்டு. அதன் உள்ளே, பல விதமான நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகள் நடைபெறும். TTD TV- க்காக அந்த கதவைத் திறந்து உள்ளே போய், தேவலோக செட்டிங்கில் ஒரு கச்சேரி வாசித்தேன்! அன்று, வந்த கலைஞர்கள்களுக்கு எல்லாம், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், "உள்ள வந்தீங்கன்னா, 4th floor-ல central jail இருக்கும், அதுக்குள்ள வாங்க... நாங்க கவிநிச்சுக்கறோம்!" என்று சொல்லியபடி இருந்தார்.

உள்ளே இருட்டு. "பார்த்து வாங்க.. ஒயர் எல்லாம் இருக்கு, தடுக்கி விழுந்தா நான் ஜாமீன் கிடையாது" என்று இருட்டுக்குள்ளிருந்து ஒரு அசரீரி கூட கேட்டது.

:) :) :)

Rafiq Raja said...

சென்னையின் அனைத்து லேன்ட்மார்க்குகளையும் அலசி ஆராய்ந்து விட்டீர்கள்... சென்னையில் பார்த்து பழகி போன விஷயங்களான, இந்த ஒவ்வொன்றை பற்றியும் விரிவாக யாராவது கட்டுரை எழுதினால் சரியாக இருக்கும்.

மற்ற நகரங்களை பற்றியும் எழுதி எங்களை அவற்றிற்கும் அறிமுகம் படுத்துங்கள் இட்லிவடை.... போகும் போது அவைகளை மறக்காமல் பார்த்து விட்ட வற ஏதுவாக இருக்கும்.

ரஃபிக் ராஜா
காமிக்கியல்

கலைக்கோவன் said...

//எல்லோரும் சென்னையை வெயிலில் சுற்றி பார்க்க வசதியாக//

நல்லாவே “சுற்றி”யிருக்கீங்க

R.Gopi said...

// Erode Nagaraj... said...
ஏ.வி.எம். ஸ்டூடியோவில் ஒரு நிரந்தர சென்றல் ஜெயில் உண்டு. அதன் உள்ளே, பல விதமான நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகள் நடைபெறும். TTD TV- க்காக அந்த கதவைத் திறந்து உள்ளே போய், தேவலோக செட்டிங்கில் ஒரு கச்சேரி வாசித்தேன்! அன்று, வந்த கலைஞர்கள்களுக்கு எல்லாம், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், "உள்ள வந்தீங்கன்னா, 4th floor-ல central jail இருக்கும், அதுக்குள்ள வாங்க... நாங்க கவிநிச்சுக்கறோம்!" என்று சொல்லியபடி இருந்தார்.

உள்ளே இருட்டு. "பார்த்து வாங்க.. ஒயர் எல்லாம் இருக்கு, தடுக்கி விழுந்தா நான் ஜாமீன் கிடையாது" என்று இருட்டுக்குள்ளிருந்து ஒரு அசரீரி கூட கேட்டது.

:) :) :)//

**********

ஈரோட் நாகராஜ்

இத வச்சு, ஒரு திகில் சீரியலே எடுத்துடலாமே. அவ்ளோ மேட்டர் கீது தல.....

Erode Nagaraj... said...

மாணாம், இருட்டுல "மேட்டர்"நா நம்ம ஆளுங்க டென்ஷன் ஆயிடுவாங்க... சரி, என் கேள்வி(களுக்கு) என்ன பதில்?

சுரேஷ் கண்ணன் said...

அதிரடி நகைச்சுவை.

முககவி-ல் இருந்து தெகோகமு வரை அடையாள உண்ணாவிரதம் (இதற்கு என்ன அர்த்தம்?) சேப்பாக்கத்தை (அரசு விருந்தினர் மாளிகை) விட்டுவிட்டீர்கள். மெமோரியல் hall விடுபட்டுவிட்டது. சினிமா படப்பிடிப்பு காட்சி என்றால் தவறாமல் காட்டப்படும் ஏஎவிஎம் உருண்டையை குறிப்பிடாமல் உருட்டித் தள்ளி விட்டீர்கள். :-)

Mohan Kumar said...

Hilarious post; Chennaites will enjoy it; People abroad will also enjoy, since it gives them some nostalgia. Keep posting similar articles.

Anonymous said...

ஒரு முக்கியமான கிசுகிசுவைச் சொல்ல மறந்துவிட்டீர்களே! சீல் வைக்கப்பட்டிருக்கும் வுட்லாண்ட்ஸ் ட்ரைவ் இன் தோட்டம் ஒரு முக்கியப் ப்ரமுகரின் புதைகுழிக்காகக் காத்திருக்கிறது என்கிறார்களே.
காதுவராயர்

Cinema Virumbi said...

இட்லிவடை அவர்களே,

அந்தக் காலத்துத் தெலுங்கு டப்பிங் படங்களில் (கப்பல் தீவு காதல் ராணிகள்?) மர்மக் கோட்டையாகவும் மற்ற பல படங்களில் கல்லூரி , போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் கோர்ட் வளாகமாகவும் (ரத்தத் திலகம், நூற்றுக்கு நூறு, ஒரு கைதியின் டைரி , நாயகன் ) கிண்டி பொறியியல் கல்லூரி தவறாமல் வரும் . ஒரு முறை 5 star ஸ்விம்மிங் பூல் கட்டுப்படியாகாத ஒரு ஹிந்திப் படத் தயாரிப்பாளர் கிண்டியில் உள்ள ஸ்விம்மிங் பூலிலேயே ராஜேஷ் கன்னா, பிந்தியா கோஸ்வாமி, அஸ்ரானி மற்றும் தோழிகளைப் பாட்டுப் பாடிக் குளிக்க விட்டார்! படம் பெயர் 'பந்திஷ் ' என்று ஞாபகம்.

அசோக் பில்லர், பெசன்ட் நகரில் உள்ள ஒரு சிற்ப வேலைப்பாடு கொண்ட வாட்டர் டேங்க் மற்றும் அதே பீச்சில் உள்ள இந்தியா கேட் இரண்டும் படங்களில் அடிக்கடி தலை காட்டும். தியேட்டர்களில் கமலாவும் உதயம் காமப்ளேக்ஸும் ரொம்பப் பிரபலம். அண்ணா நகர் டவரும் கூடத்தான் !

நன்றி!

சினிமா விரும்பி

kggouthaman said...

நல்லா கீது வாத்யாரே!
நீ நம்ம கொலைகாரன் பேட்ட பக்கம் வந்தா முன்னாடியே நம்ம கையில சொல்லிடு; நம்ம சிஷ்யப் பசங்க மார்ல இருக்கற மாஞ்சாக் கூழ் பாத்ததே இல்லியாம்;

Kameswara Rao said...

Hi IV

Besant Nagar Sunda Kanji matter ellam
adutha eposide ....?

Kamesh

I have not seen madras since 2002..
made a brief visit of 15 days in 2008

லவ்டேல் மேடி said...

அடங்கொன்னியா....!! அட ஈரோட்டு பதிவர்களே.... யோவ் வாலு மண்டையா... ஈரோட்ட பத்தி யாரவது பத்தி போடுங்கப்பா....!! நாகராஜ் அண்ணே .... நீங்களாவது போடுங்க......!!!

வெண்பூ said...

கலக்கல் இட்லி வடை....

Krish said...

ரொம்ப அருமை!

மணிகண்டன் said...

kalakkal IV

Venkatraman said...

Thoroughly enjoyed the post

Sunaapaana said...

வெளி ஊரில் இருக்கும் எங்கள மாதிரி chennaites ku இந்த பதிவு refreshing and கொஞ்சம் feelings ஆகவும் இருந்தது. கொஞ்சம் பிட் நியூஸ் எல்லாம் குறைச்சிட்டு நல்ல இடங்கள் பத்தி நல்லதா நாலு பதிவு போடுங்க இன்னும்!!

அஞ்சா நஞ்சன் said...

சபாஷ் இ.வ.!

Erode Nagaraj... said...

1.தமிழ்நாடு அரசு ஃ பிலிம் சொசைடியின் நிரந்தர செட்கள் என்ன நிலைமையில் இருக்கிறது...

2. நல்லவனுக்கு நல்லவன் போன்ற படங்களில், "முத்தாடுதே முத்தாடுதே வானம்" என்ற வி.ஜி.பி. கப்பல் அப்படியே தான் இருக்கிறதா அல்லது சுனாமி ஓட்டைகள் ஏதேனும் உண்டா?

3. அப்படி போடு புகழ் லைட் ஹவுஸ் ஃபோட்டோ எங்கே?

4. இராயப்பேட்டை மணிக்கூண்டு?

5. தமிழ்ப் படங்களின் விமோசனமே இல்லாத, பல கற்பழிப்புகள் கண்ட, சவுக்குத் தோப்பு?

6. அமீர் மஹால்?

Erode Nagaraj... said...

ஹாய் மேடி, அவசரடபேல்! சென்னை மாநரகத்துக்கு ஒரு column வந்தா, ஈரோட்டுக்கும் ஒண்ணு வரும்... :)

லவ்டேல் மேடி said...

// Erode Nagaraj... said...

ஹாய் மேடி, அவசரடபேல்! சென்னை மாநரகத்துக்கு ஒரு column வந்தா, ஈரோட்டுக்கும் ஒண்ணு வரும்... :) //ஆகட்டுமுங்ண்ணா ....!!!

IdlyVadai said...

சின்ன திருத்தம் செய்துள்ளேன். ரஜினி விழா நேரு ஸ்டேடியத்தில் நடக்காது என்ற தகவலை சேர்த்துள்ளேன்.

AbuDhabi Siva said...

Trichy, Madurai, Kovai, Nellai can also be given a kalakkal round-up.
I believe this article is the most widely read article by overseas Tamilians but less appreciated with their feedback / comments (I am one of the many exceptional 'browsers' who have given their appreciation in this column!!)

Inba said...

விடுமுறையில்
சென்னை வந்திருக்கும் எனக்கு
good tips for chennai roundup..

Anonymous said...

Safire, Blue Diamond and Emerald theater complex is another remarkable place, which is closed for many years after JJ bought this.
When JJ is going to change this to ADMK office?

Anna University & IIT - Dream of HSC students (or their parents).

Chennai's Autowalas. Their help to TN's image is very remarkable.

sarav said...

Annatha TNagar saravana store miss pannittingale