பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 24, 2009

ராசியான நடிகர் யார் ? - ஜெயம் ரவியா ? ரஜினியா ?

சூப்பர் ஸ்டார் ரஜினி சார்தான் என்னை காப்பாற்றி அதிர்ஷ்டசாலி நடிகையாக்கினார். எந்த கஷ்டம் வந்தாலும் என்னை கைவிட மாட்டார் என நம்புகிறேன் - சொன்னர்வர் நடிகை ஸ்ரேயா.

என்ன சொல்லுகிறார் ஸ்ரேயா ?

நான் அறிமுகமானது எனக்கு 20 உனக்கு 18 படத்தில்தான். ஆனால் அந்தப் படம் ஓடவில்லை. அடுத்து ஜெயம் ரவியுடன் 'மழை' படத்தில் நடித்தேன். பொதுவாக தமிழில் ஜெயம் ரவிக்கு ஒரு ராசி உண்டு. அவருடன் நடிக்கும் புதுமுக நடிகைகள் எல்லோரும் பிரபலமாகி விடுவார்கள். சதா, திரிஷா , அசின், ஜெனிலியா என அப்பட்டியல் நீள்கிறது. நானும் இந்தப் பட்டியலில் வந்துவிடுவேன் என்றுதான் நினைத்தேன். ( அதான் வந்துட்டீங்களே )

ஆனால் எனக்கு அது நேர் விரோதமாக அமைந்துவிட்டது. அவருடன் நான் நடித்த 'மழை' படம் சரியாகப் போகவில்லை. என் முதல்படமும் சுமாராகத்தான் அமைந்தது. உடனே எனக்கு ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி விட்டார்கள். ( அப்படியா ? )

இனி தமிழ் படங்கள் அவ்வளவுதான் என்று நினைத்து தெலுங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அப்போதுதான் சூப்பர்ஸ்டார் ரஜினி சாருடன் 'சிவாஜி' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. சிவாஜி வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

அதிர்ஷ்டமில்லாமலிருந்த நான் ரஜினியால் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியானேன். ராசி இல்லாத நடிகை என்ற 'இமேஜ்' விலகியது. இன்று என் நடிப்பு வாழ்க்கை ஹாலிவுட் வரை நீண்டதற்குக் காரணம் சிவாஜி என்ற படமும், ரஜினிசாரும்தான்.

நம்பர் ஒன் நடிகை போட்டியில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லா நடிகைகளுமே ஒவ்வொரு கால கட்டத்தில் நம்பர் ஒன் ஆக இருப்பார்கள். யாருக்கும் அது நிரந்தரமானது அல்ல... நான் சாய்பாபா பக்தை. எந்த கஷ்டம் வந்தாலும் அவர் கைவிடமாட்டார்", என்றார் ஸ்ரேயா. ( அப்ப ரஜினி ? )

யார் ராசியான நடிகர் ? ஜெயம் ரவியா ? ரஜினியா ?

14 Comments:

Erode Nagaraj... said...

ஆஹா.. நல்ல செய்தி.

அடுத்த படத்தில், ஜெயம் ரவி இட்லி வடையைப் படிப்பது போல ஒரு சீன வைக்கச் சொல்லுங்கள். உங்க ரேஞ்சே எங்கேயோ போய்விடும். ஜெயம் ரவியை விடுங்கள், அப்புறம் அவருக்கு என்ன ஆனால் என்ன... :P

லவ்டேல் மேடி said...

ஸ்ரேயாவின் அடுத்த படம் ,

" கிக்கு பாய் "


கதா நாயகன் : வால் பையன் .

தயாரிப்பு : கூடூவாஞ்சேரி குலுக்கல் குப்பம்மா.....


அப்போ...... வால் பையன் ராசியானவரா ...? இல்ல குப்பம்மா ராசியானவரா...??

Anonymous said...

உடனே எனக்கு ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி விட்டார்கள்..

அதனால் என்ன மேடம் - நீங்கள்தான் முன் திரை மட்டும் போட்டுக் கொண்டு காட்சி அளிக்கிறீர்களே!
முழுவதும் பிரயோஜனம் இல்லை என்று கூறியிருந்தார்கள் என்றால் நீங்கள்
எப்படிக் காட்சியளித்திருப்பீர்களோ என்ற நினைப்பே குலை நடுங்குகிறது.

நாராயணா நாராயணா

Anonymous said...

சுவரொட்டிகள், சுவர் எழுத்துகள் தடை.
சரியா என்று 148 பேர் கேட்டுள்ளனர் (டிக் அடித்துள்ளனர்)
தவறா என்று 39 கேட்டுள்ளனர் (டிக் அடித்துள்ளனர்)

சுவரொட்டிகள், சுவர் எழுத்துகள் தடை என்ற விஷயத்திற்கு இட்லி வடை போட்ட "சரியா" வில் டிக் அடித்ததால், அவர்கள் அதை ஒப்புக் கொள்ளாமல் இந்த முடிவு "சரியா" என்று கேள்வி எழுப்பி உள்ளனர் என்பதே "சரி". அதே போலத்தான் "தவறா"வும்.

இட்லிவடை மிகவும் "சரியாக" ஒரு "தவறைப்" பண்ணியதால் இந்த சரியா தவறா போஸ்ட் கூட சரி இல்லாமல் தவறாக உள்ளது.

எல்லாம் சரி. என்னைத் தவறாக எண்ணவேண்டாம்.

இது புரிந்தவர்கள் இட்லி வடையை திட்டுங்கள். புரியாதவர்கள் புரியும் வரை மீண்டும் படியுங்கள்.

Baski said...

Dear Mr.Idly.

விஷயம் தெரியுமா? பர்தாவுக்கு பிரான்ஸ் தடை.

இதை நம்ம ஊரில் முஸ்லிம் தலைவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள்.

திராவிட பகுத்தறிவு குஞ்சுகள் எப்படி எடுத்துக்கொள்வார்கள்..

We can take this issue with two minds.

1. இது வரவேற்க தக்கது. இது இஸ்லாமியர்களின் பெண் சமுதாயத்தை முன்னேற்ற முதல் படி கல்.

2. இது இஸ்லாமியரை அவமான படுத்தும் செயல். மன்னிப்பு கேள். செருப்பு மாலை. உருவ பொம்மை எரித்தல்... போன்றவை.

டகிள் பாட்சா said...

என்ன ஓய் மானஸ்தன்! நீங்க 'விசு'வோட தம்பியா! இந்த குழப்பு குழப்புறீரே!

Anonymous said...

ரொம்ப முக்கியமான செய்தி.

Anonymous said...

ரொம்ப முக்கியமான செய்தி. தமிழ் நட்டு மக்கள் ரொம்ப பாவம் பண்ணியவர்கள். இதையெல்லாம் படிக்கணும்னு. .

Anonymous said...

Tamil Nadu Govt is looking at the possibility of creating a government quota for admission of students in Deemed Universities.
Private engineering colleges in the state earmark 65% seats (50% in the case of minority colleges) towards the government quota.---Times Of India dt 26th June

Anonymous said...

The government has decided to create a dedicated unitary technical university, comprising the four premier colleges of Anna University (Chennai).The technical university, which will begin functioning from this academic year, will consist of Guindy College of Engineering, Madras Institute of Technology, A C College of Technology, and School of Architecture and Planning.

R.Gopi said...

//அப்போ...... வால் பையன் ராசியானவரா ...? இல்ல குப்பம்மா ராசியானவரா...??//

லவ்டேல் மேடி..... ரெம்ப கஷ்டமா இருக்கு..... நெக்ஸ்ட் .......

//எல்லாம் சரி. என்னைத் தவறாக எண்ணவேண்டாம்.

இது புரிந்தவர்கள் இட்லி வடையை திட்டுங்கள். புரியாதவர்கள் புரியும் வரை மீண்டும் படியுங்கள்.//

மானஸ்தன்.... நீங்க என்ன சொல்ல வரீங்க...... எனக்கு ..... புரிஞ்சுடுசுன்னு சொல்லணும்னா புரிஞ்சுருக்கணும்...... புரியலேன்னு சொல்லணும்னா புரிஞ்சு இருக்க கூடாது....... ஆனா, எனக்கு இப்போ, புரிஞ்ச மாதிரி, புரியாம இருக்கு.......

இப்போ சொல்லுங்க... எனக்கு புரிஞ்சுடுச்சா, இல்லையா??? எனக்கே தெரியலேப்பா....... (இது நாயகன் ஸ்டைல் டயலாக் அல்ல.....)

Anonymous said...

இ.வ இப்படியே போனால் சீக்கிரம் கடையை மூட வேண்டியதுதான். சொந்த சரக்கு எதுவும் கையில் இல்லையா?.

Anonymous said...

ரஜினி சேவை தமிழ்நாட்டுக்கு தேவை

அவரைப் போல தன்னடக்கம்,நேர்மை,வாய்மை நம் தலைவரில் யாருக்கு உண்டு ?

நினைத்திருந்தால் எப்போத(1996) முதல்வர் ஆகி இருக்க முடியும் (மூப்பநாரின் முழு ஆதரவு இருந்தது)

அவர் அரசியல் வர பயப்படுவது இப்போது இருக்கும் சில குள்ள நரிகள் தன் பெயரைக் கெடுத்துவிடும் என்பதற்ககா !!!

தமிழ்நாட்டை பிடித்த பீடை ஒழிய, தர்மம் மீண்டும் தலைக்க இறைவா நீ அருள்வாய்

I am not Rajini fan or any ones fan, but well wisher of TamilNadu.

(Make very Important Note in your Dairy Today: After cunning fellows death, Rajini will enter politics and make New History)

Kameswara Rao said...

Hi IV

It has been 1975 when Rajini First came into Scene after so long years Rajini Raasiya ....

Enno kodumai Saravanan Ithu ...

Kamesh