பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 22, 2009

ஆரம்பப் பாடங்கள்! - கௌதமன்.

ஆரம்பப் பாட சாலையும், ஆசிரிய, ஆசிரியைகளும் எப்பொழுதுமே நம் நினைவில் தங்கி(விடும்; விடுவார்கள்).. மூன்றாம் வகுப்பிலோ அல்லது நான்காம் வகுப்பிலோ - ஒரு பாடம்.

பாட ஆரம்பத்தில் ஒரு சிறுவன் - அரை டிரௌசருடன், கைகளை - அம்பயர் WIDE சொல்வது போல் காட்டியபடி - நின்று கொண்டு, அவனருகே - என்ன காரணமோ - ஒரு சேவல் படமும் இருக்கும்.

பாடத்தின் பெயர் : திசைகள்.

சின்ன வயதில் - இந்த பாடம் என்னைக் குழப்பிய அளவிற்கு வேறு எதுவும் குழப்பியிருக்க முடியாது!

" சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"

இதில் ஏதும் குழப்பம் இல்லை.

நாம் தினமும் காலையில் எழுந்திருந்து, சூரியனைப் பார்த்தபடி நின்றோமானால், நம் முகத்துக்கு முன்னே இருப்பது கிழக்கு.

ஹும் .... சிறிய குழப்பம் ஆரம்பம்.

காலையில் பாயில் சுருண்டு படுத்திருந்தவனை - வனமாலினி (அக்கா) தண்ணீர் முகத்தில் தெளித்து, "இப்பொழுது எழுந்திருக்கவில்லை என்றால் - அடுத்தது ஒரு அண்டா தண்ணி வரும்" என்ற எச்சரிக்கையைக் கேட்டு, மருண்டு, உருண்டு எழுந்த பின், 'சூரியன் எங்கே?' - என்று கேட்க - அதை சரியாகக் கவனிக்காத அக்கா - 'எல்லாம் நீ ராத்திரி எங்கே வச்சியோ அங்கேதான் இருக்கும்' என்று சொல்வாள்.

சரி நாமே தேடிக் கண்டுபிடிப்போம் என்று துணிந்து வெளியே வந்து பார்த்தால் - வீட்டுக்கு முன்னே சட்டயப்பர் கோவில் மதிள் சுவர்தான் தொ¢யும். நம் புத்தகத்தில், "நாம் தினமும் காலையில் எழுந்திருந்து, சூரியனைப் பார்த்தபடி நின்றோமானால், நம் முகத்துக்கு முன்னே இருப்பது கிழக்கு" என்றுதானே போட்டுள்ளது; எழுந்திருந்தவுடன் சூரியனைப் பார்த்தபடி எப்படி நிற்பது?

வாசலுக்கு வரலாமா அல்லது கூடாதா? என்று மிகச் சிறிய சந்தேகங்கள்.

சரி - இந்த அற்ப சந்தேகங்கள் நிவர்த்தியானால் கூட -

சூரியனை நான் மதிள் சுவருக்கு அந்தப் பக்கம் ஸ்பாட் செய்து, அவருக்கு நேரே முகத்தை வைத்துக் கொள்ளும் பொழுது -

மேலும் சில சந்தேகங்கள். அவையாவன:

1) என் முகத்திற்கு நேரே இருப்பது கிழக்கு என்றால், காலுக்கு நேரே இருப்பது? கைகளுக்கு நேரே இருப்பது?

2) அதோ பக்கத்து வீட்டு தண்டு நிற்கிறானே - அவன் முகத்திற்கு முன்னே இருப்பது?

3) ஓரு வேளை - இந்த சட்டயப்பர் கோவில் சுவர்தான் கிழக்கோ?

KGS வந்து தலையில் ஒரு குட்டு வைத்தவுடன் - உழக்கு இரத்தம் வரும் முன்னே கிழக்கு முழுவதும் விளங்கிவிட்டது.

அடுத்த கட்டம்:

"நம் பின் பக்கம் இருப்பது மேற்கு"

ஆஹா - ஆரம்பிச்சுட்டான்யா - ஆரம்பிச்சுட்டான்....

மேலே கண்ட 1,2,3 கேள்விகளில், முகத்திற்கு பதில் முதுகும், சட்டயப்பர் கோவில் சுவருக்கு பதிலாக - கொல்லைப் பக்கத்து சுவரும், தண்டு விற்கு பதிலாக - நாகராஜ ஐயராத்து ஸ்ரீ ராமும் போட்டுக் கொள்ளுங்கள்.

என்னுடைய குழப்பங்கள் - உங்களுக்கும் வரும்.

இப்பொழுது நம் பின் பக்கம் இருக்கும் திசையைப் பார்க்க நம் முகத்தைத் திருப்பினால்,

கிழக்கு அங்கேயே இருக்குமா - அல்லது முகத்துக்கு எதிரே - அதுவும் திரும்பி - மேற்கைப் பார்க்கவிடாமல் செய்துவிடுமா?

அதையும் தவிர, தலை 180 டிகிரி திரும்பாதே!

K G Subramanian வருவதற்குள் விடை காண்பது அறிவு...

அதற்கும் அடுத்த கட்டம்:

நம் இடக்கைப் பக்கம் வடக்கு;

வலக்கைப் பக்கம் தெற்கு.

இந்த வாக்கியங்களை நான் எத்தனை முறைகள் கடம் அடித்தாலும்,

"நம் இடக்கைப் பக்கம் வலக்கு"

"வலக்கைப் பக்கம் இடக்கு"

"இலக்கைப் பக்கம் வலக்கு"

"வடக்கைப் பக்கம் இலக்கு"

என்றெல்லாம் - permutation's and combination's தான் வரும் - சரியாக வராது.

இவற்றுக்கும் மேலே சென்றால் - அது இன்னும் காமெடி!

"வடக்குக்கும் கிழக்குக்கும் நடுவே இருப்பது வடகிழக்கு"

ஏன் கிழ வடக்கு இல்லை?

"தெற்குக்கும் கிழக்குக்கும் நடுவில் இருப்பது தென்கிழக்கு"

ஏன் கிழ தெற்கு இல்லை?

Similarly -----

ஏன் மேல் தெற்கு இல்லை?

ஏன் மேல் வடக்கு இல்லை?

திசைகள் சுற்றிச் சுற்றி இப்படிக் குழப்புவதால்,

நமக்கு கிழக்கு மேற்கு மட்டுமே சுலபமாக விளங்குவதால்,

நான் கீழ்க் கண்ட 8 திசைகளை சிபாரிசு செய்கிறேன்:

1) கிழக்கு

2) மேற்கு

3) மேல் கிழக்கு

4) கிழ மேற்கு

5) மேல் கிழ கிழக்கு

6) கிழ கிழ மேற்கு

7) கிழ மேல் மேற்கு

8) மேல் மேல் கிழக்கு.

அன்புடன்

கௌதமன்.
நான் ஆட்டத்துக்கு வரலை :-)

14 Comments:

வலைஞன் said...

Criminal waste of space!

R.Gopi said...

//கீழ்க் கண்ட 8 திசைகளை சிபாரிசு செய்கிறேன்: //

இத படிச்ச உடனே, எனக்கு 16 பக்கமும் தலை சுற்றுகிறது....... நான் கூட இந்த விளையாட்டுக்கு வரல.............

Anonymous said...

sariyana aruvai post.

IBGY said...

அட!
எனக்கு நேர்ந்த திசை தெரியாக் குழப்பங்கள்
உங்களுக்கும் நேர்ந்திருக்கின்றனவா!
இப்படிக்கு
மேல் மேல் திசையிலிருந்து
இப்கி

sandoz said...

it is easy to identify directions during day with reference to the closest star (sun).. At night?? So if someone said face the pole star, then it is east.. your back ll be facing south.. then you get the existing eight directions!!

One more info.. For tamil nadu identifying pole star might be a bit difficult.. cos it will be up in the north direction at an elevation angle of 8 degrees at kanniyakumari and 13 degrees at chennai.. both these angles appear close to horizon (latitude of the place)

மானஸ்தன் said...

(1) அந்த புஸ்தகத்துல பையனுக்கு பக்கத்துல சேவல் போட்டதுக்கு காரணம் தேடறார் திரு கௌதமன். அவர் கிட்ட சொல்லுங்க, அந்தப் பையன் பேரு "முருகன்" அப்டின்னு,

(2) அந்தப் பையன் WIDE மாதிரி கைகளை வெச்சுண்டு இருப்பது, sympolic-ஆக சொல்ல. We Identify Directions on Earth. இதையும் அவர் கிட்ட மறக்காம சொல்லிடுங்க.

///(3)நமக்கு கிழக்கு மேற்கு மட்டுமே சுலபமாக விளங்குவதால்,////
நமக்கு இல்லை. "அவருக்கு" என்று திருத்தி எழுதச் சொல்லுங்கள்.

(4) இன்னும் திசைகள் புரியவில்லை என்றால், "முதியோர் கல்வி" இருக்கவே இருக்கு. மனசத் தளரவிடாம சேந்து படிக்கச் சொல்லுங்க.


பின் குறிப்பு:
(1) மொக்கையை மொக்கயால்தான் "தடுக்க" வேண்டும்.

(2) இட்லிவடை அண்ணே!
வீட்டு அட்ரஸ் குடுங்க. ஆட்டோ அனுப்பனும்.

PALANIAPPAN said...

Don't waste your and our valuable time please!

KGG9840937420 said...

இட்லிவடை அண்ணே!
வீட்டு அட்ரஸ் குடுங்க. ஆட்டோ அனுப்பனும்.

No 10, TEN dulkar street
Kilpauk
Chennai 10.

There is an auto-stand at street corner already. No need for fresh autos!

Balamurugan,S said...

//நான் கீழ்க் கண்ட 8 திசைகளை சிபாரிசு செய்கிறேன்://

எனக்கு தெரிஞ்ச திசையும் இப்போ மறந்து போச்சு.... :(

லவ்டேல் மேடி said...

வர.. வர... நீ மொக்க போடுறதுக்கு அளவே இல்லாம போச்சு....!!!

Erode Nagaraj... said...

திசைகளில் என்ன எப்பப் பாரு வடகிழக்கு? கிழ வடக்கு என்று சொன்னால் என்ன?

Erode Nagaraj... said...

சரி, சந்தடி சாக்கில் மேட்டர கவனியும்.

1. பயணச் சீட்டுக்கு, "Ticket "-னு
ஏன் பேரு வந்தது?

"திக்கெட்டும்" போக முடிவதால்.

2. Courier Service-னு ஏன் பெயர்?

3. .......

4. ......

இது போன்று வேறு சில கேள்விகளும் ஏன் வலைப் பக்கத்தில் கொடுத்துள்ளேன். சரியான பதில்களுக்கு மானஸ்தன் பரிசளிப்பார்.(அப்பாடா, அவரைப் போட்டியிலிருந்து நீக்கியாச்சு!)

மானஸ்தன் said...

////இது போன்று வேறு சில கேள்விகளும் ஏன் வலைப் பக்கத்தில் கொடுத்துள்ளேன். சரியான பதில்களுக்கு

"மானஸ்தன் பரிசளிப்பார்".

(அப்பாடா, அவரைப் போட்டியிலிருந்து நீக்கியாச்சு!)////சரிங்க Erode அண்ணாச்சி. நான் ஆட்டத்துக்கு வரலை.

ஆனா இப்போ எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும். நான் cold பிடிச்ச குதிரைய எங்க/எப்படிப் பாக்றது?

:-D

Erode Nagaraj... said...

2. Courier Service-னு ஏன் பெயர்?

இவர் இதற்குரியர் என்று, அதை அதற்குரியரிடம் சேர்ப்பதால் குரியர்! மற்ற விடைகளைப் 'பக்கத்தில்' போட்டாச்சு...