பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, June 21, 2009

எங்கே பா.ஜ.க ?

தேர்தல் தோல்விக்கு பிறகு எப்படி காங்கிரஸ் கட்சியை மேலும் வளர்க்கலாம் என்று பா.ஜ.க தலைவர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு செயல்பட ஆரம்பித்துள்ளார்கள். மிகவும் கட்டுப்பாடான கட்சி என்று எல்லோராலும் பாராட்டப்பட்ட கட்சி இன்று பலவீனமான கட்சியாக எல்லோராலும் பார்க்கப்படுகிறது.

தேர்தலில் மக்களை கவர என்ன செய்யலாம் என்று எல்லோரும் யோசித்துக் கொண்டுருக்க, பா.ஜ.க மூத்த தலைவர்களை எப்படி சமாதானம் செய்யலாம் என்று தன் நேரத்தை வீண் செய்தது. பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு கூட்டத்தை அருண் ஜேட்லி புறக்கணித்தார் உடனே அவரை சமாதானம் செய்ய ராஜ்நாத் சிங், அத்வானி, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் உள்ளிட்டோர் முயற்சி மேற்கொண்டனர். அருண் ஜேட்லியின் கோபம் - சுதன் ஷூ என்பவருக்கு கட்சியில் வட கிழக்கு மாநில கூடுதல் பொறுப்பாளர் என்ற பதவியை அவருக்கு கொடுத்தால்.

அத்வானி பா.ஜ.கவில் இருக்கிறாரா என்ற சந்தேகம் கூட வருகிறது. ஏதோ கட்சி கூட்டத்தில் குத்துவிளக்கு ஏற்றிய பிறகு தன் கடமை முடிந்துவிட்டது என்று எண்ணுகிறார். பா.ஜ.க என்ற முக்கியமான எதிர்கட்சி இன்னும் சில வருடங்களில் இருக்குமா என்று சந்தேகமே கூட வருகிறது.

பாரதிய ஜனதா கட்சியில் கொள்கை குழப்பம் அதிகமாக இருக்கிறது. பாஜக ஆட்சியிலிருந்தபோதிலும் சரி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தபோதிலும் அது ஹிந்துத்வா கொள்கையை ஒழுங்காகக் கடைப்பிடிக்கவில்லை. நாட்டில் எவ்வளவோ வாகனங்கள் விதவிதமாக வந்திருக்க அத்வானி ரதயாத்திரை என்று நேரத்தை வீண் விரயம் செய்கிறார்.

நேற்று தேர்தல் தோல்வியால் ஹிந்துத்வா கொள்கையைக் கைவிடப் போவதில்லை என்கிறார் - ராஜ்நாத் சிங். இந்த அறிவிப்பு என்ன சொல்லுகிறது ? அவர்களுக்கே இப்போழுது சந்தேகம். மேலும் ராமர் கோவிலைக் கட்டும் முடிவிலிருந்து பின்வாங்காது என்று சொல்லுவது போலியான ஹிந்துத்வா கொள்கையாகும். இவர்கள் கோயிலை கட்டவில்லை என்றால் அயோத்தியில் ராமர் பிறக்கவில்லை என்று ஆகிவிடுமா ? நாட்டுக்கு தேவையான எவ்வளவோ விஷயம் இருக்கும் போது, இந்த மாதிரி ஊசிப்போன அறிவிப்புகள் தேவையா என்று பா.ஜ.க யோசிக்க வேண்டும். ராமர் மீது நம்பிக்கை இருந்தால் அந்த இடத்தில் ராமரே கோயில் கட்ட ஏற்பாடு செய்வார். ராமருக்கு ராஜ்நாத் சிங்கும், அத்வானியும் தேவையில்லை. இவர்களுக்கு உண்மையான ஹிந்துத்துவா பற்று இருக்கா ? இல்லவே இல்லை. ஏதோ ஆ.எஸ்.எஸின் மதிப்பை பெற இது மாதிரி ஏதாவது சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியிருக்கு.

அத்வானி தோல்விக்கு பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்கிறார், பிறகு மற்றவர்கள் கேட்டுக்கொண்டதற்காக வாபஸ் பெறுகிறார். இதே போல் யஷ்வந்த் சின்ஹா அருண் ஜேட்லிக்கு ராஜ்ய சபா எதிர்கட்சி தலைவர் பொறுப்பு தரப்பட்டதால் ராஜினாமா செய்கிறார். இப்படி தினமும் இவர்கள் தமாஷ் தொடர்கிறது. இது போறாது என்று ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா, அருண் ஜேட்லி கட்சியின் பொறுப்பிலிருந்து ராஜினாமா என்ற கூத்தும் தொடர்கிறது. இந்த கூத்து எல்லாம் முதலில் பத்திரிக்கைகளுக்கு லீக் செய்துவிட்டு தான் இவர்கள் செய்கிறார்கள்.

தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராயப் புறப்பட்டுள்ள இவர்கள், அத்வானிக்கு பிறகு யார் என்ற விடை தேட தான் உண்மையாக புறப்பட்டுள்ளார்கள். எங்கே மோடி வந்து குட்டையை குழப்பிவிடுவார்களோ என்று பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள். அத்வானி இவை எல்லாம் நடக்காதது போல் பாசாங்கு செய்கிறார். எவ்வளவு நாளைக்கு ?

பா.ஜ.க மூத்த தலைவர்களின் அறிவு எல்லாவற்றையும் சேர்த்தால் கூட ராகுல் காந்தியின் அறிவில் 1% கூட இருக்காது என்று நிருபித்துவிட்டார்கள்.


பலவீனமான பிரதமர் மன்மோகன் சிங் என்று தேர்தலின் போது சொல்லிய அத்வானி அவரை சிட பலவீனமானவர் என்று தற்போது நிருப்பித்துள்ளார். Bharatiya Janata Party - The Party with a Difference என்று அவர்கள் சைட்டில் சொல்லியுள்ளார்கள். எவ்வளாவு உண்மை !22 Comments:

இனியவன் said...

வாழ்க்கையில முதன் முதலா இட்லி வடை தன் இதயயத்தை கேட்டு எழுதிய கட்டுரை...இனிமேலாவது திருந்தின சரி...

வலைஞன் said...

காங்கிரஸ், தி.மு க , அ இஅ தி மு க, பா ம க போன்ற கட்சிகளின் வளர்ச்சிக்கு காரணம் அங்கு இருக்கும் உட்கட்சி சர்வாதிகாரமே .இதை பா ஜ க உணர வேண்டும் .உட்கட்சி ஜனநாயகம் ஒரு புற்று நோய் அது கட்சியை அழித்துவிடும் நாம்(இந்தியர்கள்) சிறந்த அடிமைகள் ஆனால் மிக மோசமான எஜமானர்கள்

Ib said...

கோயிலை கட்டவில்லை என்றால் அயோத்தியில் ராமர் பிறக்கவில்லை என்று ஆகிவிடுமா ? நாட்டுக்கு தேவையான எவ்வளவோ விஷயம் இருக்கும் போது, இந்த மாதிரி ஊசிப்போன அறிவிப்புகள் தேவையா என்று பா.ஜ.க யோசிக்க வேண்டும். ராமர் மீது நம்பிக்கை இருந்தால் அந்த இடத்தில் ராமரே கோயில் கட்ட ஏற்பாடு செய்வார். ராமருக்கு ராஜ்நாத் சிங்கும், அத்வானியும் தேவையில்லை. இவர்களுக்கு உண்மையான ஹிந்துத்துவா பற்று இருக்கா ? இல்லவே இல்லை. ஏதோ ஆ.எஸ்.எஸின் மதிப்பை பெற இது மாதிரி ஏதாவது சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியிருக்கு.


உண்மைதான்.
எனக்கு என்னவோ இந்திய வாக்காளர்கள்,
BJP கட்சியை ஒரு stepney tyre என்று நினைக்கிறார்கள்
என்றே தோன்றுகிறது.
அது இல்லை என்றால் தூரப் பயணம் செல்ல அஞ்சுவோம்;
இருந்தால் ஒரு தைரியம் இருந்து கொண்டு இருக்கும்.
அவசர நிலை - ஆபத்து, விபத்து வந்தால் Stepney - எந்த நிலைமையில்
இருந்தாலும் பயன் படுத்திக் கொள்வோம்!
இப்கி.

Rajesh said...

They refuse to learn. Living in their own Neanderthal era. They have to stand up. BJP was voted out not coz of their stand with "HINDUTVA" or pro-radical approach. Their lack of vision and specific agenda in their campaign was the reason. Bashing Manmohan Singh, ther only GOOD man in the UPA backfired. An age old Advani was not seen as the future of India. BJP is the best choice for coming out with a book holding the topic "HOW TO LOSE & DESTROY YOURSELF"

R.Gopi said...

பி.ஜே.பி. ராமர் கோவில் விஷயங்களை விட்டு விட்டு, நதிநீர் இணைப்பு போன்ற உருப்படியான விஷயங்களில் நேரம் செலவிடலாம்.

கட்சியை பலப்படுத்தும் நிகழ்வுகளுக்கு நேரம் ஒதுக்கலாம்..... பலவீனப்படுத்தும் முயற்சியை முறியடிக்க முயலலாம்........

அத்வானியிடம் யார் போய் சொல்வது? ரஜினி தவிர யார் போய் சொன்னாலும் கேட்பாரா என்று தெரியவில்லை...............

Anonymous said...

An unbiased write-up from இட்லி வடை. நிதர்சனங்களின் தொகுப்பு. நன்றி.

இருந்தாலும் கொஞ்சம் ("ரொம்பவே") "over-enthusiastic"-ஆக "பா.ஜ.க மூத்த தலைவர்களின் அறிவு எல்லாவற்றையும் சேர்த்தால் கூட ராகுல் காந்தியின் அறிவில் 1% கூட இருக்காது என்று நிருபித்துவிட்டார்கள் "என்று எழுதியது வருத்தம் அளிக்கிறது.

R.Gopi said...

//இருந்தாலும் கொஞ்சம் ("ரொம்பவே") "over-enthusiastic"-ஆக "பா.ஜ.க மூத்த தலைவர்களின் அறிவு எல்லாவற்றையும் சேர்த்தால் கூட ராகுல் காந்தியின் அறிவில் 1% கூட இருக்காது என்று நிருபித்துவிட்டார்கள் "என்று எழுதியது வருத்தம் அளிக்கிறது.//

***************

எனக்கும்..............

Anonymous said...

BJP மறுபடியும் Hindutva கையில் எடுத்திருப்பதில் இருந்து, தனக்குத்தானே குழி வெட்டிக்கொண்டு விட்டது என்று முடிவு செய்து கொள்ளலாம். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. cnngress இனிமேல் BJP யை கண்டு பயப்பட தேவையில்லை. ராகுலின் உதவியோடு தன்னுடைய பயணத்தை இனிதே தொடரலாம்.

Anonymous said...

/// பா.ஜ.க மூத்த தலைவர்களின் அறிவு எல்லாவற்றையும் சேர்த்தால் கூட ராகுல் காந்தியின் அறிவில் 1% கூட இருக்காது என்று நிருபித்துவிட்டார்கள்.///

அபத்தம்

sr said...

idlyvadai's kirukkuthanamana oru article. If Rahul was so powerful why the hell congress didnt project him as next pm?

bjp started a very important issue of swiss funds repatriation, congress didnt even want to pursue still. Why IV is not even highlighted this issue in this article?

When a leadership question arise, there will be commotion which at present the party is going thru. It is better to face this issue now rather than during elections. There is no such issue in Congress because for ever congress will be managed only by Nehru family. Be prepared for another crappy statement from IV that all bjp leaders may not match to Priyanka's baby!!

Because of Advani's rath yathra only atleast bjp is in commanding position. The major issue for the party is not having a foothold in other than 7 states which it needs to concentrate further.

Leaving Congress without option is a sure recipe for disaster!!

Anonymous said...

பா.ஜ.கவை பாரதீய ஜகடா கட்சி என்று வர்ணிக்கிறது ஒரு ஒரம் சார்ந்த டி.வி.
தி.மு.க. செயற்குழுபோலச் செயல்படவேண்டும் பா.ஜ.க என்பது இட்லிவடையின் ஆசையா என்ன?
தோல்வியின் விளைவால் பா.ஜ.க. தோலுரித்துக்கொள்ள முயல்கிறது என்று நான் நினைக்கிறேன்.
தி.மு.க.வில் தசரதன் போல அல்லாது பட்டாபிஷேகம் பாதி முடிந்துவிட்டது. அது கரிகாலச்சோழன் ஆட்சி.
பா.ஜ.கவில் எல்லோரும் மன்னர்கள். திணணை காலியானாலும் யார் அமர்வது என்பதை முடிவு செய்வது ஒரு தனிப்பட்ட நபராக இருக்கமுடியாது என்பதைத் தான் தோல்விக்குப் பிறகான் சர்ச்சை காட்டுகிறது.
வழிப்போக்கன்

lalitha said...

பா.ஜ.க மூத்த தலைவர்களின் அறிவு எல்லாவற்றையும் சேர்த்தால் கூட ராகுல் காந்தியின் அறிவில் 1% கூட இருக்காது என்று நிருபித்துவிட்டார்கள்.///

எனக்கும்.............என்னசெய்வது

..எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.

charmlee said...

எனக்கென்னவோ இ. வ. ஒருதலைப் பட்சமாக எழுதியிருக்கிறது என்று படுகிறது

பா.ஜ.கா வில் கருத்து வேற்றுமை உள்ளது என்னவோ வாஸ்தவம்தான். ஆனால் அதனால்தான் தோல்வியை சந்தித்தது என்பது மீடியாக்களின் துஷ்பிராசாரம் தவிற வேறில்லை..

காங்கரஸே இந்தமாதிரி வெற்றியை எதிர்பார்கக்வில்லை.. எந்த கருத்து கணிப்பும் இப்படி காங்க்ரஸ் இந்த மாதிரி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. எலக்ட் ரானிக் வோட்டு முறையில் தவறு ஏற்படலாம் என்ற ஐயமும் உண்டு.

இதிலிருந்து நாம் பா ஜ க ஏன் தோல்வியை சந்தித்தது என்று ஊகிக்கலாம்..

ராமர் கோவில் கட்டாததினால் தான்,ஹிந்துத்வாவை புறக்கணித்தால்தான், தோல்வியை தழுவியது என்பதெல்லாம் வெறும் புரட்டு..மீடியாக்களின் வீண் வேலை.

இப்பொழுது கொஞ்ச நாள் நாம் எல்லோரும் பொறுமை காக்க வேண்டிவரும்,


அதோடு மீடியாக்களையும் புறக்கணிக்க வேண்டியது

Krish said...

காங்கிரஸ்சுக்கு மாற்றாக இருக்கும் ஒரே பெரிய கட்சி பி.ஜெ.பி தான். இது போனால் இந்தியாவில் இனி "காந்தி" குடும்பத்தின் ஆட்சி தான்.
மோடி போல யாராவது வந்தால் தான் உண்டு.

ரிஷபன் said...

இரண்டு கட்சி ஜனநாயகம் நாட்டிற்கு நல்லது. ஆனால் நம்ம நாட்டில் தறுதலைகளாக எதிர்கட்சிகள் இருப்பது வேதனையானது.

காங்கிரஸூக்கு ஒரு மாற்று இப்போதைய அவசரத் தேவை.

இந்த ஜோக்கர்கள் ஒழிந்து ஒரு நல்ல தலைமையில் ( மோடி/நிதீஷ் மாதிரி) வலுவான எதிர்கட்சி தோன்ற
இறைவன் வழிவிடுவாரக.

Anonymous said...

WWW.TEHELKA.COM

Full of bjp Analysis is there.

லவ்டேல் மேடி said...

தீவிரவாதிகளின் சதியா இருக்குமோ......????

Kameswara Rao said...

இ,வ,
தங்களின் ப.ஜ.க. வை பற்றி அலசல் ஒரு தலை பட்சமனதோ என்ற ஒரு சந்தேகம். இந்த தேர்தலில் யாரும் எதிர்பர்கதது காங்கிரஸ் வெற்றியை (இது போன்ற ஒரு வெற்றி)

ப ஜ க.... காங்கிரஸ் போன்று (dynasty பொலிடிக்ஸ்) அல்ல உட்கட்சி ஜனநாயகம் உள்ள ஒரு இயக்கம் இப்போது நடைபெறுவது சுய பரிசோதனை இது இப்போது நடந்தால் தான் உண்டு... உக்காந்து அலசி கருது வேற்றுமைகளை களைந்து ... காங்கிரஸ் ராஜஸ்தானத்தில் வெற்றி பெற்றது ப ஜ க வினால், மோடி இடம் இவர்களது ஜம்பம் சாயவில்லையே ஏன். இப்போது இந்த கருது வேறுபாடு மீடியா வில் வந்ததால் தான் இந்தா அமர்கலமே, காங்கிரஸின் உட்கட்சி பூசல் நாடறிந்தது ... அது நேரு குடும்பத்தின் சொத்து

தங்களின் ஒரு வாதம் சரி, ராமர் கோயில் கட்டுவதற்கு முனைவது போன்றவற்றை ஓரம் கட்டி வைத்து விட்டு, அடுத்த வரும் காலத்தில் ஒரு நல்ல எதிர்கட்சியாக செயல்படுவது. தென் மாநிலங்களில் பரவுவது (கேரளம், அந்தரா, தமிழ்நாடு)

ப ஜ க தலைவர்கள் அல்லாருக்கும், ரகுளில் 1% ---- too much.

காமேஷ்

Anonymous said...

An introspection is of course necessary, analysing the defeat at the polls, without being guided by a matriarch or patriarch; and a brain-storming for future course of action. Such discussions are to be in camera. Unfortunately, it has been in public. The mix of old, not-so-old and young is skewed towards old and there will be resistance to any suggeston to deviate from the path treaded in the past.
People like Dr Sivaraj Chauhan should steer the party towards development issues. Media management has to buck up.
Of course, media is crazy of secularism' or "pseudo-seclarism" and Hindutva-baiting comes natural to them.To grow the party by the RSS-"tainted" BJP folk would be very difficult.

கால்கரி சிவா said...

ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். காங்கிரஸ் கூட்டணி கூட ஒரு மைனாரிட்டிதான். 1984 இல் 2 எம்பிக்கள் வைத்திருந்த பாஜக பிறகு ஆட்சியை பிடித்தது. எதிர்காலத்தில் பாஜகவும் காங்கிரஸ் என்ற கான்ஸரும் மாறி மாறி ஆட்சி செய்யும். இது காலத்தின் கட்டாயம்

Nata said...

அந்தக் காலத்தில் மிஸ்ஸியம்மா என்ற திரைப்படத்தில் பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச் செல்வமன்றோ என்ற பாட்டு ரொம்பவும் பிரபலம். எல்லோரும் அதை ஹம செய்து கொண்டிருப்பார்கள். காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் தங்கள் ஆண்டு விழாவில் அந்தப் பாட்டை, 1956 என்று நினைக்கிறேன், இப்படி மாற்றிப் பாடினார்கள். அப்போது நான் அங்கே பள்ளி மாணவன். - இட்லியும் தோசையும் யாவருக்கும் பொதுச் செல்வமன்றோ, ஏனோ பூரி இந்தப் பொறாமை, யார்தான் சாம்பாரின் சுவையால் மகிழாதவரோ ... iமற்ற வரிகள் மறந்து விட்டன. உங்கள் இட்லிக்கு அந்தக் காலத்திலேயே கிடைத்த பெருமை இது என்று எடுத்துக்கொள்ளலாம். இந்த வலைத்தளம் பற்றி ஒரு வாரம் முன்புதான் எனக்குத் தெரிந்தது - என் தினமலர் கட்டுரையை மறுபிரசுரம் செய்திருப்பதாகச் சொன்னார்கள். படித்தேன், எல்லாப் பகுதிகளையும். வாழ்க, வளர்க.
R. நடராஜன்

IdlyVadai said...

//உங்கள் இட்லிக்கு அந்தக் காலத்திலேயே கிடைத்த பெருமை இது என்று எடுத்துக்கொள்ளலாம். இந்த வலைத்தளம் பற்றி ஒரு வாரம் முன்புதான் எனக்குத் தெரிந்தது - என் தினமலர் கட்டுரையை மறுபிரசுரம் செய்திருப்பதாகச் சொன்னார்கள். படித்தேன், எல்லாப் பகுதிகளையும். வாழ்க, வளர்க.
R. நடராஜன்//

வருகைக்கு நன்றி. அந்த பாட்டு சூப்பர், நான் முதல் தடவை கேள்விப்படுகிறேன்.