பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 17, 2009

யாருக்கு சபாஷ் சொல்லுவது ?

டெல்லி செய்தி:
3 நாள் ரஷிய பயணத்தை முடித்து டெல்லி திரும்பிய பிரதமர் மன்மோகன்சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த 16-ந்தேதியன்று தன்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அத்வானி, தேர்தல் பிரசாரத்தின் போதான தனது பேச்சுகளுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும், தானும் தனது பேச்சுகளுக்காக அவரிடம் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறினார். மேலும் எதிர்கட்சி தலைவரான அத்வானியுடன் நல்லுறவை பேண விரும்புவதாகவும் கூறினார்.


சபாஷ் அத்வானி, மன்மோகன் சிங்!


சென்னை செய்தி:

தமிழக சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி அ.தி.மு.க. உறுப்பினர் எஸ். வி.சேகர் பேசினர்....

...என் அருகில் இருக்கும் உறுப்பினர்கள் என்னை துரோகி என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மை இல்லை. “உறுப்பினர் கலைராஜன், “அடுத்து நீ பேசினால் போட்டு விடுவேன்” என்று கூறுகிறார். சட்டத்தை மதிக்க வேண்டிய சட்டசபையிலேயே இப்படி சொல்கிறார். எனவே எனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனது உயிருக்கோ,உடமைகளுக்கோ ஏதாவது நடந்தால் அதற்கு யார் காரணம் என்பதை இந்த சட்டசபையில் நான் பதிவு செய்கிறேன். நான் வாழ்த்து மட்டும் சொல்ல விரும்பினேன். துணை முதல்-அமைச்சர் பல்லாண்டு வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்”.

கலைராஜன் பேச்சு - இங்கு பேசிய எட்டப்பன் எஸ்.வி.சேகர் நாளை பன்றிக்காய்ச்சலால் “படார்” என்று போய் விட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிட்டு நான் பேச வில்லை.


அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் நாமம் வாழ்க!, தமிழ் வாழ்க!!


அப்டேட்: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான நடிகர் எஸ்.வி.சேகருக்கு எந்திர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டுக்கும் துப்பாக்கி போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். எஸ்.வி.சேகர் வெளியில் செல்லும்போதும் அவரோடு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக செல்வார்கள். கொலை மிரட்டல் வந்ததையொட்டி, எஸ்.வி.சேகருக்கு இந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை நகர போலீசார் தெரிவித்தனர்.

25 Comments:

பா. ரெங்கதுரை said...

கள்ளர் ஜாதி வெறிபிடித்த கலைராஜன், பிராமணரான எஸ்.வி. சேகரைப் பற்றி இப்படிப் பேசுவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. கலைராஜனுக்கு ஓட்டுப் போட்டு எம்.எல்.ஏ.ஆக்கிய தி.நகர் தொகுதி பிராமணர்களைச் சொல்ல வேண்டும்.

Hariharan # 03985177737685368452 said...

தமிழருக்குத்தான்! சந்தேகம் ஏன்?

Anonymous said...

We don't have Manmohans or Advanis in TN. That is the reason our politicians are not able to shine at Centre or to become Prime Ministers:(

Anonymous said...

Idea for S.V Sekar and Mu.Ka.
*****************************
Create a new wing "Bramnar Ani" in DMK and have SV. Sekar as President for the same. DMK will get more votes from that community in the coming elections.

துலாபாரம் said...

ஐ!நான் தான் முதல் ஆள்
அரசியல்ல இது எல்லாம் சகஜம்இருந்தாலும் கைக்கும் தாமரைக்கும் சபாஷ்

R.Gopi said...

//இங்கு பேசிய எட்டப்பன் எஸ்.வி.சேகர் நாளை பன்றிக்காய்ச்சலால் “படார்” என்று போய் விட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிட்டு நான் பேச வில்லை.


அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் நாமம் வாழ்க!, தமிழ் வாழ்க!!//

**********

Idlyvadai

Namakku potta NAAMAM list idha vida perusaachey???

Anonymous said...

தமிழனாய் பிறந்ததற்கு நாக்கை பிடுங்கிக்கொள்ளவேண்டும் போல இருக்கிறது.

தியாகு

snake said...

kalai rajan or let it be anyone, they just ty to attract the sleeping stout lady who "rests" at kOdanAdu..

or who knows s.v.s. may thank him for spitting such words and giving him a reason to act!

nAdu.. kOda nAdu.. adhai nAdAvitAl Edhu veedu?

snake said...

dear rengadhurai,

I think kaLLar jAthi has nothing to do with all these things... this is purely, a try to score

Kameswara Rao said...

இதில் பிராம்மணர், கள்ளர் எங்கிருந்து வந்தார், நம் தமிழகத்தின் அரசியல் நாகரிகத்தை அப்பட்டம்மாக கட்டுகிருஅது இந்த சம்பவம்..

வோட்டை வாங்கி கட்சியிலிருந்து வெளியே வந்தவர், அம்மா விசுவாசிக்கு இடையில் (I mean middle) நடக்கும் கூத்து

இதில் நடுவில் அண்ணாவுக்கு நாமம் ?

வடக்கே பாருங்கள் வோட்டு வாங்கும் முன் அடிதுகொண்டவர்கள் வாங்கியபின் பிசினஸ் mindudan நடந்துகொள்கிறார்கள்.

gonzalez said...

hi tamizha nannum tamizhan thaan ennudaya blog ingey koduthullaen. please add my blog link to you blog please. my blog traffic is low. if you post my link to yur blog i will get some visitors kindly help please.

this my link

http://eradini.blogspot.com/
http://funny-indian-pics.blogspot.com/

IdlyVadai said...

//கள்ளர் ஜாதி வெறிபிடித்த கலைராஜன், பிராமணரான எஸ்.வி. சேகரைப் பற்றி இப்படிப் பேசுவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. //

நாம் என்று திருந்த போகிறோம் ?

IdlyVadai said...

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான நடிகர் எஸ்.வி.சேகருக்கு எந்திர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டுக்கும் துப்பாக்கி போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். எஸ்.வி.சேகர் வெளியில் செல்லும்போதும் அவரோடு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக செல்வார்கள். கொலை மிரட்டல் வந்ததையொட்டி, எஸ்.வி.சேகருக்கு இந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை நகர போலீசார் தெரிவித்தனர்.

லவ்டேல் மேடி said...

// டெல்லி செய்தி: ////


நாராயணா ... கொசுத் தொல்லா தாங்க முடிலடா ....// சென்னை செய்தி: //இது மாதிரி கேவலமான மாநிலம் .. வேற எதுவுமே இருக்காது.. !!!


பல அயிர சொந்தங்கள் நமக்கு மிக அருகிலேயே செத்து மடிகிறார்கள்... அவர்களை காப்பாற்ற துப்பில்லை நமக்கு.....

ஆனால் ஜால்ரா அடிப்பவகளுக்கு மட்டும் படை பந்தபஷ்ட்து ..... கேவலம்...


தமிழா.. இந்த மாநிலத்தில் பிறந்ததற்கு தலை குனிந்து நில்.......

மானஸ்தன் said...

///எஸ்.வி.சேகர் வெளியில் செல்லும்போதும் அவரோடு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக செல்வார்கள்.///

ஒண்ணா? ரெண்டா? மூனா?
(எத்தனை போலீஸ்-னு கேட்டேன்).

வெட்கக்கேடு.

Sunaapaana said...

நாட்டுல வேற நல்ல விஷயமே நடக்கலையா? எஸ்.வீ. சேகர் கதை, வேலைக்காரி கதை, பழைய ஜோக் .....இப்படியா? இதெல்லாம் தெரிஞ்சிட்டு என்ன பண்றது ? இப்படியே போனா பிரைடு இட்லி, வடைகறி தான்...

Anonymous said...

S.Vee.Shekar is trying to pay back amma by irritating her at every opportunity. He is an opportunist and was upset that amma did not attend his daughter's wedding, his 5000th staging of his dramas etc. He wouldn't miss an opportunity to be on mu.ka's side.

Let him resign from AIADMK and vacate his seat.

Krish said...

மத்தியில் நல்லாத்தான் இருக்காங்க! தமிழ் நாட்டுலதான் இந்தக் கொடுமை!
அது சரி...இன்னுமும் ஏன் ஜெயலலிதா சேகர கட்சியில இருந்து நீக்காம இருக்காங்க?

Kameswara Rao said...

//அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான நடிகர் எஸ்.வி.சேகருக்கு எந்திர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.//

மஞ்சள் துண்டின் மகிமை தெரிகிறது, நாம் செலுத்தும் வரிப்பணம் எப்படிஎல்லாம் வீனடிக்க படுகிருஅது அடக் கடவுளே

இ,வ, வேறு சீரியஸ் மேட்டர் அலசலாமே

காமேஷ்

Kameswara Rao said...

இவ,

மக்கள் Avai உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி 250 கோடி உபயோகபடுத்தாமல் இருக்கிறதாமே,

தொகுதிக்கும் நல்லது செய்யாமல் அவர்களும் அதை சுருட்டாமல் யாரப்பா அந்த ரொம்ப நல்லவங்க லிஸ்ட் ....

காமேஷ்

KGG9840937420 said...

நம் தமிழ் மக்கள் - கட்சிகளுக்கு அப்பால் அரசியல் நாகரிகம் என்று
ஒன்று இருப்பதை மறந்து விட்டார்களா? அல்லது தெரியாமல் நடந்து கொள்கிறார்களா?
எதிர்க் கட்சி என்பதை எதிரிக் கட்சி என்று நினையாமல்
நாணயத்தின் மறுபக்கத்தைக் காட்டுபவர்கள் என்று உணரவேண்டும்.
படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் இது சாத்தியமாகலாம்.
க கோ கௌதமன்.
பெங்களுரு

மானஸ்தன் said...

உங்களுக்கும் இந்த செய்திகளுக்கும் எதாவது சம்பந்தம் உண்டா?

http://www.dinamalar.com/splpart.asp?ncat=Pakkavathiyam

Anonymous said...

எஸ் வி சேகரை கட்சி விட்டு நீக்கினால் அவர் எம் எல் ஏ பதவி போகாது. அவரே போனா, போகும்:ஆனால் அப்போ இடை தேர்தல் வருமே!...கலை ராஜன் பெயரை கொலை ராஜன் என்று மாற்றிக் கொள்வது சரியாக இருக்கும்.. அவருக்கு பாதுகாப்பு கொடுத்தற்கு முதல்வரைப் பாராட்டுகிறேன்..-- டில்லி பல்லி

Anonymous said...

ITHIL JADHI ENGU IRUNDU VANDADHU.TAMILNATTILTHAN ENDHA COMMENTAIYUM JADHI KONDU PARKIRARGAL ADMK MLAKKALIN KOBAM NIYAMANADHE.IRAIVANAIYUM DHARMATHIYUM NUMBUM S.V.SEKAR MUDHALIL ADMK VALIYAGA VANDHA MLA PADHAVIYAI RAJINAMA SEYYA VENDUM.ADMK THANTHA PADDHAVIEL IRUNDHU KONDU ADHAN KOLGAIGALKKU MURANAI SEYALPADUVATHU ADHARMAME

Prabhu Swaminathan said...

I don't understand why my Tax money is wasted like this. All the hard earned money that i pay as tax is being spent on giving color TVs, special security, etc.

I will be happy if my money is spent on educating children from poor family (i know if such scheme is introduced these politicians will do corruption in that too)