பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 12, 2009

மகேசன் சேவை - மக்கள் சேவைமக்கள் சேவை
பிரபல தொழில் அதிபரான மந்திரி காலி ஜனார்த்தன ரெட்டி, நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.
இரவில் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர் நேற்று காலை, ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.45 கோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை காணிக்கையாக வழங்கினார். திருப்பதி திருமலை தேவஸ்தான சிறப்பு நிர்வாக அதிகாரி எ.வி.தர்மாரெட்டி, அவரிடம் இருந்து வைர கிரீடத்தை பெற்றுக்கொண்டார்.

21/2 அடி உயரம் உள்ள இந்த கிரீடம், ஏறத்தாழ 34 கிலோ எடை கொண்டதாகும். 2 ஆண்டு கால திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஏராளமான பொருட்களை காணிக்கையாக வழங்கி இருக்கிறார்கள்.

இந்த நூற்றாண்டில் செலுத்தப்பட்ட காணிக்கைகளில் இதுவரை ரூ.10 கோடி மதிப்புள்ள காணிக்கைதான் அதிக மதிப்புமிக்கதாக இருந்தது. தற்போது கர்நாடக மந்திரி வழங்கிய ரூ.45 கோடிவைர கிரீடம்தான் இதுவரை வந்த காணிக்கைகளில் மிகவும் விலை உயர்ந்தது என்று கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தங்கத்தில் வைரக்கற்கள் பதித்த இந்த கிரீடம், கைதேர்ந்த தொழில் நுட்ப கலைஞர்களால் கடந்த 9 மாதங்களாக தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளிக்கிழமைகளில் வாராந்திர அபிஷேகம் முடிந்ததும் ஏழுமலையானுக்கு இந்த வைர கிரீடம் அணிவிக்கப்படும்.மகேசன் சேவை
45 கோடியில் என்ன செய்யலாம் ?

90,000 ஏழை குழந்தைகள் ஒரு வருட படிப்புக்கு ஆகும் செலவு.
44,000 ஏழை குழந்தைகளுக்கு உணவு, உடை, மருத்துவம் - ஒரு வருடத்துக்கு ஆகும் செலவு
1,73,077 அனாதை குழந்தைகளை ( மூன்று வயது வரை ) பராமரிக்கலாம்
90,000 மூளை வளர்ச்சி குன்றிய சிறுவர்களை ஒரு வருடம் பராமரிக்கலாம்.
- தகவல் உதவி உதவும் கரங்கள்.

மக்கள் சேவையே மகேசன் சேவை

58 Comments:

Rajesh said...

Swami Vivekananda:

"After so much austerity, I have understood this as the real truth -God is present in every jiva; there is no other God besides that. 'Who serves jiva, serves God indeed.' "

sandoz said...

that is only for election speeches!!

Kameswara Rao said...

இ,வ,

வாதம் சரிதான், நம் நாட்டில் நேர்த்திகடன், வேண்டுதல் போன்றவற்றுடன் இது போன்ற சிந்தனை ஜெயிப்பது கடினம் தான்

இந்த பதிவில் மஞ்சள் பஞ்ச் .....

காமேஷ்

M Arunachalam said...

I hope this will be the Beginning of the End of the Reddy Brothers, who are calling all the shots in Karnataka BJP Govt. Now that Tirupati Venkateswara Swamy has got back his offering from the Reddy brothers, he should now allow them to "reap" the "rewards" of amassing thousands of crores of ill-gotten wealth thru illegal mining business.

வலைஞன் said...

இந்த பணத்தில் என்னென்ன செய்யலாம் என்ற உங்கள் பட்டியல் வருத்தத்தை தருகிறது!

அனால் இந்தப்பணம் எப்படி வந்திருக்கக்கூடும் என்ற எண்ணம் கவலையை தருகிறது!

நம் ஜனநாயகத்தை அந்த ஏழுமலையான் தான் காப்பற்ற வேண்டும்!!

Anonymous said...

GOOD Posting @ Right TIME

இட்லி வடை வாழ்க வளமுடன் :)

கலைக்கோவன் said...

சிந்திக்க வைத்திருக்கின்றீர்கள்..,
சபாஷ் இ.வ

மானஸ்தன் said...

ஒரு கைப்பிடி சோற்றுக்கு வழி இல்லாமல் இத்திருநாட்டில் பலர்.
தன் "வரும்படிக்கு" வழி செய்ய கடவுளுக்கே கையூட்டு தரும் இந்த மாதிரி சிலர்.

கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து (நல்ல வழியோ கெட்ட வழியோ தெரியாது) இப்படி கடவுளுக்கு "கட்டிங்" குடுக்கும் கபோதிகளை "கண்" திறந்து கடவுள் காத்து அருளட்டும்.

வால்பையன் said...

நூறல்ல ஆயிரம் பெரியார் வந்தாலும் இவனுங்க திருந்த மாட்டானுங்க!

வால்பையன் said...

அந்த கிரீடம் வைக்கலைனா கோவிச்சுகிட்டு கைலாயம் போயிருவேன்னு திருப்பதி சொன்னாராக்கும்!

வலைஞன் said...

ஆங் சொல்ல மறந்துட்டேனே!
ஏதோ எங்க நாட்டு மந்திரிதான் பணக்காரர்ன்னு கர்நாடக மக்கள் பீத்திக்க வேண்டாம்
எங்கள் நாட்டு சக்ரவர்த்தி மட்டும் நாத்திகரா இல்லாமே இருந்திருந்தா(அல்லது)எங்கள் சக்ரவர்த்தினி மட்டும் ஆட்சியில் இருந்திருந்தா,இந்த மாதிரி ஒண்ணு என்ன,பத்து கிரீடம் கொடுத்திருப்பாங்க!
என்ன உமா , நான் சொல்றது சரிதானே?

மானஸ்தன் said...

வாலு அண்ணே
எதுக்கு இப்போ பெரியார இங்க இழுக்கறீங்க? அவர் பாவம் இருந்த வரைக்கும் (வெளியே) ஊருல உள்ள கடவுளையும் - கடவுள ஓபன்-ஆக கும்புடரவனையும் திட்டிக்கொண்டு, ஊட்டுக்கு உள்ளே புள்ளையார கும்புட்டு இருந்தாராம்!!

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. simple.

Anonymous said...

நீஙக்ள் சாப்பிடாமல் இருந்தால் ஒரு பிள்ளைக்கு சாப்பாடு போடலாம். நீங்க நடந்தே ஆபீள் போங்கள்.
வீடு வாங்கீதீர்கள், காரில் போகாதீர்கள், எல்லாத்தையும் அனாதை குழந்தைக்கு கொடுங்கள்...
அனாதை ஆசிரமத்திற்கு தொண்டு செய்றேன் சில நாய்கள் நல்லா கொள்ளையடிச்சு திங்கிறார்கள்.

இது கருநாடக மாநிலத்தின் இறையாண்மை சம்பந்தப்பட்ட விசயம். இதை பற்றி பேசக்கூடாது. தேசிய பாதுகாப்பு சட்டம் பாயலாம்.

Anonymous said...

45 கோடிய அந்த மந்திரி நல்ல முறையில் கூட சம்பாதிருத்து இருக்கலாம். அதை அவர் எங்கும் செலவு செய்யலாம். அவருடைய இறையாண்மையில் நீங்கள் தலையிடாதீர்கள்.இப்படி இறையாண்மை என்று சொல்லி தானெ எம்மக்களை கொன்றீர்கள்.தப்பு செய்த துரியோதனுக்கு கடைசியில் தான் அழிவு. அவனுக்கு உடந்தையாக் இருந்த கர்ணனுக்கு தான் முதலில் சாவு. கோத்து கொத்தாக எம் மக்கள் நீங்க கொடுத்த ஆயுதங்களால் செத்தார்களே. அன்கே கொன்று விட்டு இப்போது அனாதை குழந்தைக்கு உதவுங்கள் என்று பாசாங்கா செய்கிறீர்கள். புண்ணியம் செய்யாமல் இருக்கலாம். ஆனால் பாவம் செய்யாமலவது இருங்கள். அங்கே பாவம் செய்துவிட்டு இங்கு புண்ணியம் செய்ய சொல்கிறீர்களே...

Anonymous said...

திருப்பதி தேவஸ்தானம் பல நல்ல காரியங்களை செய்யறது.பணமா கொடுத்து இருக்கலாம்..
பணம் இல்லாதவர்கள் முடியை வெட்டிக் கொடுக்கிறார்கள்; பணம் இருக்கிறவர்கள் (வைர) முடியாக கொட்டிக் கொடுக்கிறார்கள்!..ரெட்டி என்ன சுரங்கம் வெச்சிருக்கார்? தங்க சுரங்கமா? -- டில்லி பல்லி

Anonymous said...

a

M Arunachalam said...

//நூறல்ல ஆயிரம் பெரியார் வந்தாலும் இவனுங்க திருந்த மாட்டானுங்க!//

Why should they "reform"?

You are commenting as if all those who call themselves as "a Periyar disciple" have "reformed"!!!

Do you remember Manjal Thundu Minor or Sai Baba Disciple's husband or the Vellore Golden Temple visitor?

Suggest you get treated for "selective amnesia", mate!

M Arunachalam said...

//எங்கள் நாட்டு சக்ரவர்த்தி மட்டும் நாத்திகரா இல்லாமே இருந்திருந்தா//

Are you sure he is NOT one? Then why did he "visit" Golden Temple in Vellore? Ah.. got it, it must have been to see "his" GOLD, right?

//என்ன உமா, நான் சொல்றது சரிதானே?//

Ayyo Pavam, why are you distrubing Uma now. He/She must be wondering how come a not-so-well-known minister from Karnataka is able to openly showcase his wealthy status while our great "leader(?)" who has been listed as one of the TOP 500 Richest Persons in the world by Forbes magazine, can't even openly flaunt it.

Cha! Enna Ulagam Idhu!! Panakkaranungalai Perumai Padutha Theriyatha Ulagam!!!

Anonymous said...

மகேசன் சேவைக்கு...http://www.saaral.co.in/next_orphanage_visit.php
தமிழக அரசியல்வாதிகளுக்காகவாவது உதவுங்கள்...

Anonymous said...

தலைவரே.. துக்ளக் கார்ட்டூனுக்கு எங்கே கருத்து சொல்றதுன்னு தெரியலை. அதனால இங்கே போ்டறேன்.. ;;

இது எப்படி இருக்கன்னு பாருங்கோ.
:
கலைஞர்: ஒரு மந்திரி பதவி கொடுக்கலாம். மின்சார துறை கொடுத்துட்டா போச்சு.. கம்புக்கு களை எடுத்த மாதிரியும் ஆச்சு; தம்பிக்குப் பொண்ணு பாத்த மாதிரியும் ஆச்சு.-

அருண் said...

ஜனார்தன் ரெட்டி (ரெட்டி பிரதர்ஸ்) டுரிசம் அமைச்சர், அவர் அண்ணன் வருவாய்துறை அமைச்சர், இன்னொரு தம்பி சுகாதாரத்துறை அமைச்சர். இவர்களுக்கு பின்னால் 20 MLAs.

வால்பையன் said...

//Why should they "reform"?

You are commenting as if all those who call themselves as "a Periyar disciple" have "reformed"!!!

Do you remember Manjal Thundu Minor or Sai Baba Disciple's husband or the Vellore Golden Temple visitor?

Suggest you get treated for "selective amnesia", mate!//திரு அருணாச்சலம் அவர்களுக்கு,
பெரியாரை பற்றி பேசினாலே அவர்கள் திராவிட குஞ்சுகளாக தான் இருக்கனும் என்று அவசியம் கிடையாது. ஓ பக்கங்ளில் எழுதி வரும் ஞாநி ஒரு பெரியாரிஸ்ட், கூடவே பிறப்பால் ஒரு பார்ப்பனர்,

பெரியார் சொன்னது கடவுளை மற, மனிதனை நினை!

இப்போ ஞாபகம் வந்துருச்சா,(யாருக்கோ அம்னீசியான்னு சொன்ன மாதிரி இருந்துச்சு)

வால்பையன் said...

//இது கருநாடக மாநிலத்தின் இறையாண்மை சம்பந்தப்பட்ட விசயம். இதை பற்றி பேசக்கூடாது. //

திருப்பதி ஆந்திரா!
அதை விடுங்கள் அவசரத்தில் சொல்லியிருக்கலாம்!

தமிழ்கத்தில் மட்டுமே இந்து கோவில்கள் அரசுக்கு சொந்தம், திருப்பதில் கை வைத்தால் லட்டாலேயே அடிப்பான்!

வால்பையன் said...

//வாலு அண்ணே
எதுக்கு இப்போ பெரியார இங்க இழுக்கறீங்க? அவர் பாவம் இருந்த வரைக்கும் (வெளியே) ஊருல உள்ள கடவுளையும் - கடவுள ஓபன்-ஆக கும்புடரவனையும் திட்டிக்கொண்டு, ஊட்டுக்கு உள்ளே புள்ளையார கும்புட்டு இருந்தாராம்!!//

வதந்திகளையும், எதிராளிகளின் அவதூறு பேச்சுகளையும் மையமாக வைத்து பேச வேண்டாம்.

பெரியார் வீட்டில் சிலை இருந்தது உண்மை, அது அவர் வணங்கினார் என்பது பொய்.

பெரியார் ஒழிக்க நினைத்தது மூட நம்பிக்கைகளை, அதன் பிரப்பிடமாக இருந்த மதத்தை சாடினார். 5000 வருடங்களாக இருக்கும் பழக்கத்தை சில வருடங்களில் மாற்ற முடியாது என்பதற்காவே மதத்தை ஆங்காங்கே தொட்டு கொண்டார்.

சிறப்பு செய்தி: பெரியார் கோவில் தர்மகர்தாவாக இருந்தவர் தெரியுமா!

பா. ரெங்கதுரை said...

இந்து ஆலயம் ஒன்றிற்கு தொழிலதிபர் ஒருவர் 45 கோடி கொடுத்துவிட்டால், அது விரயம் என்கிறீர்கள். வருடாவருடம் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் அன்னியச் செலாவணியை ஹஜ் யாத்திரை மானியம் என்ற பெயரில் இந்திய அரசு சவுதி அரேபியாவுக்குத் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறதே; அந்தப் பணத்தில் என்னென்ன மக்கள் சேவை செய்யலாம் என்பதையும் பட்டியலிடுவீர்களா?

Vikram said...

oru technical doubtu - ippadi "kaanikkai seluthina" - gift tax applicable-a?
illa manishnakki manishan "gift" kudutha thaan - tax-a?

Subramanian said...

WELL SAID' DEAR RENGADHURAI- IF ANYBODY TOUCHES IT BOMBS WOULD BE PLANTE AND THE RESULT WOULD BE SEEN IN TH NEXT ELECTION ALSO- ONLY HINDU MATHAM AND BRAHMINS CAN BE RIDICULED IN ANY MANNER
SUPPAMANI

Anonymous said...

http://www.thehindu.com/2008/04/26/stories/2008042659290400.htm

G. Somashekar Reddy, brother of Janardhan Reddy, BJP MLC, who is contesting from Bellary (city), has declared assets worth Rs. 27.43 crore (his being Rs. 20.36 crore and Rs. 7.07 crore in the name of his wife). He has a liability of Rs. 19.08 crore, being the loan taken in December 2007. B. Sriramulu, BJP leader and former Minister, who is contesting from Bellary constituency, has declared assets worth Rs. 18.75 crore (Rs. 8.25 crore moveable property and Rs. 10.49 crore immoveable property).

Among his immovable assets are agricultural land in Bellary (Rs. 6.12 crore); non-agricultural land in Bellary and Bangalore (Rs. 1.35 crore); buildings in Bangalore (Rs. 1.10 crore) and Bellary (Rs. 23.58 lakh).

M. Diwakar Babu, former Minister and Janata Dal (S) candidate for Bellary (city) has declared assets worth Rs. 3.35 crore in his name and Rs. 1.28 crore in the name of his wife.

G. Karunakara Reddy, Bellary MP, who is contesting from Harpanahalli Assembly constituency in Davangere, has declared bank deposits of Rs. 2,62,77,261 and land (non-agricultural) worth over Rs. 5 crore in Bellary.

He is building a house at a cost of Rs. 10 crore in Bellary, while he is staying in a bungalow worth Rs. 1.5 crore in Bellary.

Mr. Reddy said he has shares worth Rs. 20,71,000 and other financial instruments such as NSS, postal savings and LIC policies worth Rs. 1,06,12,587.

Mr. Reddy has a Mahindra jeep, Mercedes-Benz, Skoda and Reva cars and a Toyato Qualis MUV.

Kameswara Rao said...

ஐயா

ரெட்டி பிரதர்ஸ் இந்த வருட அரசியல் பிசினஸ்ல வெங்கி க்கு பங்கு குடுதுஇருக்கிறார்கள் நாம் என்ன சொல்ல.... அவா துட்டுக்கு ரிஷிமூலம் நதிமூலம் பார்க்க கூடாது ஓய்... அது பல பாஷ பெசும்னா பார்த்துக்கோங்கோ

"தமிழ்கத்தில் மட்டுமே இந்து கோவில்கள் அரசுக்கு சொந்தம், திருப்பதில் கை வைத்தால் லட்டாலேயே அடிப்பான்!" --

இன்று வரை அங்கு (அந்த்ராவில் ) வெங்கி யை கண்டால் அங்கு எல்லோருக்கும் பயம் தான் (including myself) .. நாமா ஊறல் முருகர் வேல பத்திரமா புடிச்சுக்கணும் இல்லேன்னா புடுங்கிண்டு வந்துடுவா தெரியுமோன்னோ

"சிறப்பு செய்தி: பெரியார் கோவில் தர்மகர்தாவாக இருந்தவர் தெரியுமா!" -- நாங்களும் பெரியார் படம் பார்த்தோம்ல

ஹஜ் பயணத்தின் மானியத்தை பத்தி என்பா.... மூச் இதுதான் சாக்குன்னு பேரணி ஹர்தால்நு ஆரம்பிச்சிடுவாங்க...

இளிச்சவாயன் .. அய்யர் தான் --- யார் என்ன சொன்னாலும் தான் உண்டு தன வேலை உண்டுன்னு... ( தயிர்சாதம் / மாவடு ஊர்கா..)

காமேஷ்

Kameswara Rao said...

ஐயா

ரெட்டி பிரதர்ஸ் இந்த வருட அரசியல் பிசினஸ்ல வெங்கி க்கு பங்கு குடுதுஇருக்கிறார்கள் நாம் என்ன சொல்ல.... அவா துட்டுக்கு ரிஷிமூலம் நதிமூலம் பார்க்க கூடாது ஓய்... அது பல பாஷ பெசும்னா பார்த்துக்கோங்கோ

"தமிழ்கத்தில் மட்டுமே இந்து கோவில்கள் அரசுக்கு சொந்தம், திருப்பதில் கை வைத்தால் லட்டாலேயே அடிப்பான்!" --

இன்று வரை அங்கு (அந்த்ராவில் ) வெங்கி யை கண்டால் அங்கு எல்லோருக்கும் பயம் தான் (including myself) .. நாமா ஊறல் முருகர் வேல பத்திரமா புடிச்சுக்கணும் இல்லேன்னா புடுங்கிண்டு வந்துடுவா தெரியுமோன்னோ

"சிறப்பு செய்தி: பெரியார் கோவில் தர்மகர்தாவாக இருந்தவர் தெரியுமா!" -- நாங்களும் பெரியார் படம் பார்த்தோம்ல

ஹஜ் பயணத்தின் மானியத்தை பத்தி என்பா.... மூச் இதுதான் சாக்குன்னு பேரணி ஹர்தால்நு ஆரம்பிச்சிடுவாங்க...

இளிச்சவாயன் .. அய்யர் தான் --- யார் என்ன சொன்னாலும் தான் உண்டு தன வேலை உண்டுன்னு... ( தயிர்சாதம் / மாவடு ஊர்கா..)

காமேஷ்

Sethu Raman said...

IV
you have swallowed the decimal point - according to the media the cost of the crown is 4.5 crores and not 45 crores.. will you pls check and amend?

டன்மானடமிழன் said...

///பா. ரெங்கதுரை said...

இந்து ஆலயம் ஒன்றிற்கு தொழிலதிபர் ஒருவர் 45 கோடி கொடுத்துவிட்டால், அது விரயம் என்கிறீர்கள். வருடாவருடம் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் அன்னியச் செலாவணியை ஹஜ் யாத்திரை மானியம் என்ற பெயரில் இந்திய அரசு சவுதி அரேபியாவுக்குத் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறதே; அந்தப் பணத்தில் என்னென்ன மக்கள் சேவை செய்யலாம் என்பதையும் பட்டியலிடுவீர்களா?///

இதுதான்
சூப்பர் பஞ்ச்

பகுத்தறிவு பெரியார்களா
கொஞ்சம் பதில்சொல்லுங்கப்பா....

>>>>>>>>
பா.ரெங்கதுரையில்லை
பஞ்ச் ரெங்கதுரை

Anonymous said...

entirely wrong and bad posting..

investing money in building of lot of mosques, chruchs are going on everywhere...

wrong comparison too

Rajesh said...

Dear Subramaniam,
The only religion which allows to question itself is our Sanatana Dharma. yes, including the media, everything is against hinduism. but that doesnt mean, we should shun away from what our religion is......

Anonymous said...

All those [edited] who call IV and people like him(us) as hindutva brigade will you ever respect truth at anypoint in your life(the gist of the post says it all)...

and you whoever commented starting "இந்து ஆலயம்" you are no less [edited] than the jeehadhi [edited]. You all are the same.

The post is not on hindu god or on allah or damn jesus but was on humanity...

Periyar gosti, jehadhi gosti and dravida gosti dhyavu seithu thirundungal. I know you will not ungalukku ethuvume uraikathu..But still i wanted to shout..
[ comment edited ]

Krish said...

Demolish all the temples.

temples are here for money making. மக்கள் பணத்தை கொள்ளை அடிச்சி இப்படி கோயில கொண்டு போய் கொட்டரங்க!

தோமா said...

45 கோடி 450 கொடியாக மாற அந்த எழுமலயன் அருள்புரிவாராக......

Sethu Raman said...

IV
my sincere apologies. it is 45 crores only

அஞ்சா நஞ்சன் said...

//The post is not on hindu god or on allah or damn jesus but was on humanity...//

இதைப் புரிந்து கொள்ளாமல் ஆளாளுக்கு என் மதம் உன் மதம் என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். வேறு ஒருவரோ அத்தியாவசத்திற்க்கும் ஆடம்பரத்திற்கும் வித்யாசம் தெரியாமல் office-ற்கு நடந்து போ என்று கூறுகிறார்.

R.Gopi said...

No Commentsssssssssss

வால்பையன் said...

//டன்மானடமிழன்//

மதத்தின் பெயராலோ, கடவுளின் பெயராலோ பத்து பைசா அரசு செலவு செய்ய வேண்டியதில்லை!

ஓட்டு பொறுக்கி நாய்களுக்கு எலும்பு எங்க கிடைக்குதோ அதானே!

டன்மானடமிழன் said...

///வால்பையன் said...

மதத்தின் பெயராலோ, கடவுளின் பெயராலோ பத்து பைசா அரசு செலவு செய்ய வேண்டியதில்லை!

ஓட்டு பொறுக்கி நாய்களுக்கு எலும்பு எங்க கிடைக்குதோ அதானே!///

தி.க காரங்க மாதிரி
ஒண்ணும் புரியலை

மானிட்டர் அடித்துவிட்டு
மானிட்டர் பார்த்தாலும்
மானிட்டர் பார்த்துகிட்டு
மானிட்டர் அடித்தாலும்
எதுவும் தெளிவாகாது

தெளிந்த பின்பு
தெளியவைக்கவும்

அஹோரி said...

அந்த ஏழுமலையான் தான் மக்களை காப்பத்தனும்.

cho visiri said...

// பா. ரெங்கதுரை said...
இந்து ஆலயம் ஒன்றிற்கு தொழிலதிபர் ஒருவர் 45 கோடி கொடுத்துவிட்டால், அது விரயம் என்கிறீர்கள். வருடாவருடம் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் அன்னியச் செலாவணியை ஹஜ் யாத்திரை மானியம் என்ற பெயரில் இந்திய அரசு சவுதி அரேபியாவுக்குத் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறதே; அந்தப் பணத்தில் என்னென்ன மக்கள் சேவை செய்யலாம் என்பதையும் பட்டியலிடுவீர்களா//

Any reply from those who criticised the Donation?

ரிஷபன் said...

எப்படி சம்பாதித்த பணமாக இருந்தாலும் அறநிலயத்துறை/ அறங்காவலர்கள் கையில் கொடுப்பதும் ஆற்றில் போடுவதும் ஒன்றே!

வரியவர்களுக்கு கொடுத்தால் அது நேரடியாக இறவனுக்கே அர்பனித்ததாகும் என்பதை பல்வேறு இந்து மத நூல்கள் சொல்லி வருவதே!

இதில் ஆயிரம் பெரியாரின் தேவை என்ன ? புரியலை.

வால்பையன், நீங்கள் வலையுலக சீமான் போலிருக்கிறதே !

பஞ்ச் ரெங்கதுரை, நீங்க பட்டய கிளப்பறீங்க!. வெட்டொன்று துண்டு ரெண்டு என்று ( அதாவது பிசிறு தட்டாமல்) எழுதுகிறீர்கள்.

Gnanaputhran said...

This is purely a individual related personal matter. He has done this publicly so he has no fear of showing the source of this income.People go throgh several stages in life and owe some thing to god for saving them from fellow human beings/ situations(including the bloggers). Even manjal thundu periavar and family have been offering so many things to Hindu gods.
The statistics you show on helping others is useless as these are the issues that has to be taken care by the government we elect. Sensational writing but serves no purpose

வால்பையன் said...

//தி.க காரங்க மாதிரி
ஒண்ணும் புரியலை//

மத சார்பின்மை என்ற பெயரில் ஓட்டு பொறுக்க செய்யும் சொல்லறை வேலைகளை தான் சுட்டிகாட்டினேன்!
அரசு எந்த செலவும் செய்ய வேண்டியதில்லை என!

ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு சலுகை காட்டினால், அந்த மதம் தான் சிறந்தது மற்றதெல்லாம் குப்பை என்பது போல் அர்த்தம் ஆகாதா!

மதம் என்பதை ஒரு மனிதன் விருப்பட்டு ஏற்று கொள்ளும் பட்சத்தில் செலவும் அவன் தான் செய்ய வேண்டும்!

வால்பையன் said...

//வரியவர்களுக்கு கொடுத்தால் அது நேரடியாக இறவனுக்கே அர்பனித்ததாகும் என்பதை பல்வேறு இந்து மத நூல்கள் சொல்லி வருவதே!
இதில் ஆயிரம் பெரியாரின் தேவை என்ன ? புரியலை.
வால்பையன், நீங்கள் வலையுலக சீமான் போலிருக்கிறதே !//

அப்படியும் போட்டுருக்கு, அதே நேரம் ஒரு பிராமணனுக்கு உதவி செய்வது கடவுளுக்கே நேரிடியாக தொண்டு செய்வது போலன்னும் போட்டிருக்கு!

அதை பெரியார் தானே முதலில் சுட்டிகாட்டியது! வேதத்தை நம்புபவர்களுக்கு பெரியார் சொற்கள் சாத்தான் ஓதியது தானே!

நான் இணைய சீமான் கிடையாது, சீமான் வேண்டுமானால் திரையுல வால்பையனாக இருக்கலாம்!

R.Gopi said...

//நான் இணைய சீமான் கிடையாது, சீமான் வேண்டுமானால் திரையுல வால்பையனாக இருக்கலாம்!//

********

Vaalu

Sollitten ... idhu REMBA OVERU.....

நாரத முனி said...

அட பாவி அதே திருமலா தேவஸ்தானம் ஒரு நாளைக்கி எவ்வளவு அன்னதானம் செய்றாங்க, வேற என்ன என்ன நல்ல காரியம் செய்யறாங்கனு புள்ளி விபரம் தர மாட்டேளோ?

Anonymous said...

// ஆயிரம் கோடி ரூபாய்கள் அன்னியச் செலாவணியை ஹஜ் யாத்திரை மானியம் என்ற பெயரில் இந்திய அரசு சவுதி அரேபியாவுக்குத் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறதே; அந்தப் பணத்தில் என்னென்ன மக்கள் சேவை செய்யலாம் என்பதையும் பட்டியலிடுவீர்களா?//

இதுக்கு பேரு தான் சவுக்கடி

வால்பையன் said...

தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் கோபி!
கம்பேர் செய்வது எனக்கு பிடிக்காததால் அந்த பதில்!

சீமான் ஒரு உணர்ச்சி மூட்டை என்பதும் நன்கு அறிந்தவன் தான்!

R.Gopi said...

//நாரத முனி said...
அட பாவி அதே திருமலா தேவஸ்தானம் ஒரு நாளைக்கி எவ்வளவு அன்னதானம் செய்றாங்க, வேற என்ன என்ன நல்ல காரியம் செய்யறாங்கனு புள்ளி விபரம் தர மாட்டேளோ?//

********

Good question...........

Idlyvadai.... ippadi aedhavadhu detail irukku .........

Dont say NALLA KEKKARAANYAA DETAILU ..........

Anonymous said...

மக்கள் சேவையே மகேசன் சேவை

If A->B,B->C

Then A->C

A - தொழிலதிபர்
B - திருப்பதி திருமலை தேவஸ்தானம்
C - ஏழை மக்கள்

Simple Logic think a wile and enjoy it.

Truly,
RAMesh

R.Gopi said...

// Anonymous said...
மக்கள் சேவையே மகேசன் சேவை

If A->B,B->C

Then A->C

A - தொழிலதிபர்
B - திருப்பதி திருமலை தேவஸ்தானம்
C - ஏழை மக்கள்

Simple Logic think a wile and enjoy it.

Truly,
RAMesh//

************

Super LOGIC "Thala"

Innaaamaa KANAKKU podaraaruppaa??

Paathunga "GOPALAPURAM' la irundhu aalu vandhu kooppittu poida poraanga......

BE CAREFUL RAMESH

ரிஷபன் said...

//நான் இணைய சீமான் கிடையாது, சீமான் வேண்டுமானால் திரையுல வால்பையனாக இருக்கலாம்!//

வால்பையன்! என்னைப் பொறுத்தவரை ரெண்டும் ஒன்னு தான்.

நீங்க ரெண்டு பேருமே சீரியஸ்ஸா சீன் ஒடும் போது தயக்கமே இல்லாமல் காமெடி செய்வீர்கள்.

நல்ல பொழுது போக்கா இருக்கும் தொடருட்டும் உமது பணி.

ரிஷபன் said...

//அப்படியும் போட்டுருக்கு, அதே நேரம் ஒரு பிராமணனுக்கு உதவி செய்வது கடவுளுக்கே நேரிடியாக தொண்டு செய்வது போலன்னும் போட்டிருக்கு!//


அடுத்து தமிழ் துரோகி பட்டம் தான் பாக்கி!!


லூஸ்ல விடுங்க .....வால்!!

Anonymous said...

//கோத்து கொத்தாக எம் மக்கள் நீங்க கொடுத்த ஆயுதங்களால் செத்தார்களே. அன்கே கொன்று விட்டு இப்போது அனாதை குழந்தைக்கு உதவுங்கள் என்று பாசாங்கா செய்கிறீர்கள். புண்ணியம் செய்யாமல் இருக்கலாம். ஆனால் பாவம் செய்யாமலவது இருங்கள். அங்கே பாவம் செய்துவிட்டு இங்கு புண்ணியம் செய்ய சொல்கிறீர்களே...
//

எங்க ஆயுதம் இல்லேன்னா சீனாகாரன் பாகிஸ்தான் அமெரிக்கா அங்கேன்னு அடிச்சிருப்பான். நீங்க அவிங்கள அடிக்காத அடியா இல்லே நீங்களே உங்களுக்குள்ளேயே அடிச்சிக்காத அடியா? இல்லே நிங்க இங்கன வந்து எங்க தலைவர போடாத போடா. உங்கள 1991 லேயே இந்த மாதிரி தூக்கிறீங்கணும்டா அப்ப தெரிஞ்சிரிக்கும். பேசமா வந்தமா அகதியா இருந்தமான்னு போகணும் மேலே பேசுனா இப்படிதான் ஆப்பு கிடைக்கும்